நமக்கு தெரிந்த பூரண சந்திர கிரகணம் இதுதான்…

ஜீயர் சோடாபாட்டில் விவகாரம் என்னாயிற்று

அந்த ஜீயர் சோடாபாட்டில் விவகாரம் என்னாயிற்று என தெரியவில்லை, அவர் வருத்தம் தெரிவித்தார் என்றார்கள் ஆனால் யாரிடம் தெரிவித்தார் என சொல்லவில்லை சோடா பாட்டிலிடம் தெரிவித்திருக்கலாம்

ஆனால் திமுகவினர் அட்டகாசமாக ஸ்கோர் செய்யும் இடம் இது, பரிதாபமாக‌ விட்டுவிட்டார்கள்.

கலைஞர் நலமாக இருந்தால் எப்படி சொல்லியிருப்பார். “வன்முறை அவர்களுக்கு புதிதா? ஒரு காலத்தில் உடன்கட்டை என இளம்பெண்களை துடிக்க கொன்றவர்கள்தானே அவர்கள்?

அதனைபோல் எத்தனை பெரும் கொடுமைகளை எல்லாம் செய்தார்கள்? ,

அவ்வளவு ஏன்? பெரியார் மீது அவர்கள் எறியாதா கல்லா இல்லை செருப்பா?

அவர்கள் பாரம்பரியமும் கலாச்சாரமும் அப்படி, அதில் சோடா பாட்டில் எல்லாம் ஆச்சரியமல்ல”

அன்புசெழியன் என்ன அஹிம்சைக்கான காந்தி விருது பெற்றவரா?

அன்புச்செழியன் தேடப்படும் குற்றவாளி கிடையாது, என் குடும்ப விழாவில் பங்கேற்றதில் தவறு இல்லை: செல்லூர் ராஜூ

பின் அன்புசெழியன் என்ன அஹிம்சைக்கான காந்தி விருது பெற்றவரா? அவர் மேல் தவறில்லை என்றால் ஏன் ஓடி ஒளிகின்றார்

அவர் தேடபடும் குற்றவாளி இல்லை என்றால் இவர் அவரை பேனர் வைத்து வரவேற்றால் என்ன?

அசோக்குமாரின் தற்கொலை தமிழகத்தை உலுக்கிய விவகாரம், அதில் தேடபடும் அன்புசெழியன் இன்னும் சரணடையவில்லை வாக்குமூலம் வழங்கவுமில்லை, நீதிமன்றம் அவரை விடுவிக்கவும் இல்லை

இந்நிலையில் அவரை பிடித்து கொடுக்கவேண்டிய அரசு பிரதிநிதி விழாவிலே அவர் பங்கெடுத்திருக்கின்றார், இந்த அமைச்சரோ அதில் என்ன தவறு என கேட்கின்றார்

இப்பொழுது எழும் கேள்வி என்னவென்றால், இந்த அரசு மனநோயாளிகளால் நிரம்பியதா? இல்லை இந்த அரசு மக்களை அப்படி நினைக்கின்றதா? என்பதுதான்

கலைஞரை சந்தித்த கதை….

கலைஞரை சந்திக்க முயன்றபொழுது முதலில் உறுதிகொடுத்தவர் எல்லோரும் நழுவிவிட்டார்கள், காரணம் பொங்கல் நாளில் தொண்டர்களை சந்தித்ததில் கலைஞர் உடல் சற்று தளர்ந்திருந்தது என்றார்கள். அவரை சந்திக்கும் வாய்ப்பு குறைவானது போல் தோன்றிற்று

Somas Kandhan அவர்களை அழைத்து வந்திருப்பதை சொன்னபின் அவர் பெரும் முயற்சி செய்தார், 18ம் தேதி மாலை சந்திக்கலாம் என உறுதியாக சொன்னார்.

சென்னை நெரிசலுக்கு தப்பி ஒரு வழியாக மாலை 7 மணிக்கு கோபாலபுரத்தை அடைய முடிந்தது. கலைஞரின் வீட்டினை அடையாளம் கண்டு சென்றாயிற்று

அந்த வீடு மிக எளிமையாக இருந்தது, சேலத்தில் இருந்து சினிமா கம்பெனிகள் சென்னைக்கு குடிபெயர்ந்தபொழுது கலைஞரும் வந்துவிட்டார், அன்றே அவர் வாங்கிய வீடு அது

அரசியலுக்கு வரும் முன்னே அவர் வாங்கிய வீடு அது.

நிச்சயம் ஒரு முதுபெரும் அரசியல் தலைவர் வசிக்கும் வீடு என அதனை சொல்லமுடியாது. சாதரண வீடு அதுவும் வரிசை வீடுகளின் கடைசி வீடு. அந்த பகுதியில் எல்லா வீடுகளுமே பங்களாக்களாக மாறி இருக்கின்றன. ஆனால் எந்நிலையிலும் மாறாமல் கலைஞரின் தமிழ் போலவே மாறாமல் இருக்கின்றது அந்த வீடு

வாசலில் சில காவலர்கள் கடமைக்கு நின்றார்கள், ஆனால் சாலை சோதனையோ, சாலை தடுப்போ எதுவுமே இல்லை. மொத்தத்தில் இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர் வாழும் பகுதி என ஒரு பரபரப்பும் இல்லை, அவர் வீட்டு முன் ஹாரன் அடிக்கலாம், சத்தம் போட்டபடி பைக்கில் செல்லலாம், ஒரு சிக்கலுமில்லை

இது வேறு எந்த அரசியல் தலைவர் வாழும் பகுதிக்கு சாத்தியமா என்றால் நிச்சயம் இல்லை, கலைஞர் அப்படி வாழ்ந்திருக்கின்றார்

அவர் வீட்டின் அருகிலே வேணுகோபாலசாமி கோவிலும் இருக்கின்றது. பகுத்தறிவின் சுடர் அந்த ஆலய பூஜை, புனஸ்கார சத்தத்திலும், சாம்பிராணி மணத்திலும், ஆலயமணி ஓசையிலும் கலந்துதான் பகுத்தறிவு பேசியிருக்கின்றது

ஒரு நாளும் அவர் இந்துமதத்திற்கு எதிரி அல்ல மாறாக அதன் மூட நம்பிக்கைக்கே எதிரி என்பதற்கு அவர் வீட்டையடுத்த ஆலயமே சாட்சி

8 மணிக்கு வீட்டின் முன்வராண்டாவில் அமரவைத்தார்கள், அவ்வீட்டில் கால் வைக்கும்பொழுதே உடல் சிலிர்த்தது. தமிழக அரசியலை கிட்டதட்ட 65 ஆண்டுகள் நிர்ணயித்த வீடு அது

எத்தனை பெரும் தலைவர்கள் தேடி கால் வைத்த இடம் அது, காந்தி காலம் முதல் மோடி காலம் வரை எல்லோரும் ஓடிவந்த இடம், மோடியே வந்த இடம்

நடிகர்களில் என்.எஸ் கிருஷ்ணன் முதல் இப்போதைய நடிகர்கள் வரை வந்து நின்ற வீடு.

சுருக்கமாக சொன்னால் 5 தலைமுறை அரசியல்வாதி, சினிமாக்காரர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள் என எல்லோரும் வந்து நின்ற வீடு அது. நிச்சயம் வரலாற்று பெருமை மிக்க இடம்.

அந்த இடத்தில் கால்வைத்தபொழுது பெரும் வரலாற்று சின்னதை தரிசித்த சிலிர்ப்பு ஏற்பட்டது. அங்கே அமர்ந்திருக்கும்பொழுது நினைவுகள் எங்கெல்லாமோ சுற்றின, இங்கிருந்துதான் அந்த மனிதர் பெரும் முடிவுகளை எடுத்தாரா?

தமிழகத்தையும் சில நேரங்களில் இந்தியாவினையும் வழிநடத்தும் பெரும் பொறுப்பினை இந்த இல்லமே சுமந்து நின்றது. ஒன்றா இரண்டா நினைவுகள்? கடலில் அலை மோதுவது போல் நினைவுகள் மோதின, அப்பொழுது என்னிடம் பேசிய ஒரு காவலரிடம் ஏதோ சொல்லிகொண்டேனே தவிர நினைவுகள் எல்லாம் பின்னோக்கியே நீந்தின‌.

நன்றாக நினைவிருக்கின்றது, அதில் ஒரு காவலர் நம் பதிவுகள் பற்றி கேட்டார், ஆக நம்மை பலர் கவனிக்கின்றார்கள் அதுவும் கலைஞர் வீட்டு வாசலில் நிற்பவர் வரை கவனிகின்றார்கள் என்றபொழுது ஒரு கணம் மனம் திடுக்கிட்டது,

ஆனால் அந்த வீட்டின் நினைவுகளில் மூழ்கி இருந்ததால் அவரிடம் சரியாக பேசமுடியவில்லை

8.30 வாக்கில் அழைத்தார்கள், மேல்மாடியில் அவர் இருந்தார், வரவேற்பரை ஒடுக்கமாக இருந்தது. அங்கு கலைஞரின் பழம் புகைபடங்கள் இருந்தன முரசொலிமாறன் படம் மாலைபோட்டு வைக்கபட்டிருந்தது. மேலே செல்லும் வாசல் மிக ஒடுக்கமானது, நீண்ட நாள் கலைஞர் அந்த ஏணியினைத்தான் பயன்படுத்தினாராம், பின் உடல் தளர்ந்தபொழுது பின்னால் லிப்ட் வசதி செய்யபட்டதாம்

மிக ஒடுக்கமான அந்த ஏணியில் ஏறியபொழுது மனம் நெகிழ்ந்தது, கலைஞர் நடந்த பாதை அது.

அந்த அறையினை திறந்தார்கள், அதுவரை மனதின் அடி ஆழத்தில் இருந்த உணர்வுகள் எல்லாம் பிராவகமாக வெடித்தன, ஆம் அவர் அங்கே அமர்ந்திருந்தார்

80 ஆண்டுகளாக பொங்கி ஓடிய காட்டாற்று வெள்ளம் அங்கே அமைதியாக ஒடுங்கி இருந்தது, பல இடங்களில் தென்றலாகவும் சில இடங்களில் புயலாகவும் வீசிய அந்த கலைகாற்று சலனமற்று அமர்ந்திருந்தது

அரசியல், கலை, இலக்கியம், பத்திரிகை என எல்லா இடங்களிலும் தன் அலையினை அடித்துகொண்டே இருந்த கடல் அங்கு அமைதியாக அமர்ந்திருந்தது

உலகின் மாபெரும் மங்கோலிய சாம்ராஜ்யத்தை அமைத்த செங்கிஸ்கான் தன் முதிய வயதில் ஒடுங்கி நலிவுற்று இருந்தது போல இருந்தார் கலைஞர், உலகையே அலற வைத்து தனிதீவில் இருந்த நெப்போலியன் போல் அமர்ந்திருந்தார் அவர்

அந்த சிறிய அறையில்தான் அவர் மிக முக்கிய முடிவுகளை எடுத்திருக்கின்றார், அவரின் அழுகை, கண்ணீர், துக்கம் , வருத்தம், ஆற்றாமை, மகிழ்சி, வெற்றி என எல்லாவற்றையும் அந்த அறை பார்த்திருக்கின்றது

கனிமொழி அருகே அமர்ந்திருந்தார், மிக தெளிவான முகம் அவருடையது, என்ன கேள்வியும் கேளுங்கள் என்னிடம் பதில் உண்டு என்பது போன்ற முகத்துடன் வாருங்கள் என்றார், “அப்பா உங்களை பார்க்க வந்திருக்காங்க” என அவர் சத்தமாக சொன்னவுடன் கலைஞரிடம் சில மாறுதல்கள் வந்தன‌

அவர் அருகிருந்து படம் எடுத்துகொண்டேன், ஒருவிதமான உணர்ச்சியால் கண்களில் நீர் வந்தது. அடக்கிகொண்டே படம் எடுக்க முடிந்தது

கலைஞரின் முன் அறையில் அண்ணாவும் பெரியாரும் படமாக இருந்தார்கள், அவர்களுக்கு அடுத்து கலைஞரின் பாசத்திற்குரிய சகோதரிகள் படமும் இருந்தது, அவர் அன்னையின் சிலை அவர் அருகிலே இருந்தது, ஏகபட்ட புத்தகங்கள் கொண்ட அறையில் இவர்களின் நினைவுகளோடே கலைஞர் பயணித்தார் என்பது புரிந்தது

கலைஞரை உற்று பார்த்தேன், எப்படிபட்ட மனிதர் அவர்? அவருக்கு குலபெருமை இல்லை, குலப்பணம் இல்லை, சகோதர பலமோ பெரும் கல்வியோ இல்லை

ஆனால் பேனா மட்டும் இருந்தது, அந்த பேனா முனையில் பிரபஞ்சத்தையே கிழித்தெறிந்து கோடிகணக்கான மக்களை வசீகரித்து, பெரும் வரலாற்று தலைவனாக உயர்ந்துவிட்டவர் அவர்

நிச்சயம் அவர் தென்றலை தீண்டியதில்லை தீயினை தாண்டினார், அவர் சுயநலத்தில் பொதுநலமும் கலந்தே இருந்தது

அந்த பெரும் தீ எழுத்துக்களை கொடுத்த அந்த கரங்கள் ஒடுங்கி இருந்தன, கைகளை பொத்தி வைத்திருந்தார். ஒரு மோதிரம் மட்டும் அணிந்திருந்தார், அது அண்ணா கொடுத்த கணையாழி.

அந்த கரங்களை தொட்டுபார்க்க ஆசை இருந்தது. சாதாரண கரங்களா அவை? எத்தனை பேரை உயர்த்திவிட்ட கரம் அது, கலைஞர் பாணியில் சொல்வதனால் கைக்கே (காங்கிரசுக்கே) கை கொடுத்த கை அது

அந்த கையினால் உயர்ந்தவர்கள் எல்லாம் அவரை மனம் வெறுக்க செய்தபொழுது அவரின் கண்ணீரை அக்கரங்களே தனிமையில் துடைத்தும் கொண்டன‌

தமிழக அரசியல் 65 ஆண்டுகளாக எப்படி நடந்தது? ஒன்று கலைஞர் எதிர்ப்பு அல்லது ஆதரவு. இது அல்லாது ஒன்றுமே இல்லை இன்றைய இபிஎஸ் வரை அப்படி வந்தவர்கள்தான்

அந்த மிகபெரும் வரலாற்று ஆளுமையின் கரங்களை தொட ஆசைதான், அதனை கனிமொழியிடம் கேட்டுவிட வாய்துடித்தது. நான் எதனையோ சொல்ல வருவதை அவரும் புரிந்துகொண்டு குறிப்பால் சொல்லுங்கள் என்பது போல பார்த்தார்.

வயது முதிர்ந்த ஒருவரின் கரங்களை தொட்டு அதில் கண்ணீர் விழுந்தால் (நிச்சயம் விழும்) அவருக்கு அசவுரியங்கள் ஏற்படும் என்ற எச்சரிக்கை வந்ததால் கேட்கவில்லை

விடைபெற்று கீழே இறங்கும்பொழுது மனம் எதனையே சாதித்த பெரும் அமைதியில் இருந்தது, ஒரு பெரும் தலைவனுக்கு தமிழன் செய்யும் கடமையினை செய்த திருப்தி மனதில் குடிகொண்டது

மனம் முழுக்க திருப்தியுடன் கிளம்பினேன், அப்படியே சென்று சென்னை மெரீனாவின் ஓரத்தில் அமர்ந்துவிட்டேன் நண்பர் Senthil Kumar Krishnan அருகில் இருந்தார்

நாம் வெகுநேரம் பேசவே இல்லை, அவரோ கலைஞரை சந்தித்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்

எகிப்தின் நைல் நதி, ஈராக்கின் யூப்ரடீஸ் நதி போன்ற பெரும் வரலாற்று இடங்களுக்கு சென்று பார்த்துவிட்ட திருப்தியுடன் எழுந்தேன்

நிச்சயம் அம்மனிதர் ஒரு பெரும் வரலாறு, வருங்காலத்தில் இப்படி ஒரு அசாத்திய மனிதன் இருந்தான் என எதிர்கால சந்ததி ரசித்து படித்து ஆச்சரியபட போகும் வரலாறு, அவரின் காலத்தில் வாழ்ந்து அவர் தமிழில் கரைந்து வளர்ந்த நாம் அவரை சந்தித்ததில் காலத்திற்கும் கடவுளுக்கும் மிக்க நன்றி

தமிழகம் இருக்கும் வரை அவர் பெயர் நிலைத்திருக்கும்.

ஏற்பாடுகளை செய்த Somas Kandhan அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு கிளம்பும்பொழுதும் அதே மனநிலையில் இருந்தேன், பேச்சு வரவில்லை

வங்க கடலின் அலைகள் கலைஞர் பெயரை சொல்லி மோதுவது போல் இருந்தது.

நண்பர் Senthil Kumar Krishnan சொன்னார், “என்னாச்சிண்ணே தலைவிய பார்க்க முடியலண்ணு வருத்தமா? ஏண்ணே கண்ணீரு?..

விடுங்கண்ணே தலைவி எப்படியும் ஒரு காலத்தில் வயசாகி நாற்காலியில உக்காரும்ணே அப்போ கண்டிப்பா பார்த்துலராம்ணே……”

முருக பக்தர்கள் இன்று தை பூசத்தை கொண்டாடுகின்றார்கள்

Image may contain: 1 person, text

உலகெல்லாம் வாழும் முருக பக்தர்கள் இன்று தை பூசத்தை கொண்டாடுகின்றார்கள்

நட்சத்திர மண்டலத்தின் 8ம் நட்சத்திரமான பூசம், தைமாதத்தில் பவுர்ணமி திதியோடு கூடிவரும் நாளில் தைபூசம் கொண்டாடபடும்

முருகனுக்கு உகந்த நட்சத்திரங்களில் பூசமும் ஒன்று. இந்நாளில்தான் அன்னை பார்வதி அசுரரை அழிக்க முருகனுக்கு வேல் கொடுத்தார் என்கின்றது புராணம்

இந்நாளுக்காக மார்கழி மாதமே முருக பக்தர்கள் விரதம் ஆரம்பிப்பார்கள், அது துளசி விரதம் என அழைக்கபடும். நாளெல்லாம் கந்த சஷ்டி கவசம் எல்லாம் பாடி அவரை தொழுவார்கள், இந்த தைபூசத்தன்று அது பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற கொண்டாட்டங்களோடு அது கொண்டாடபட்டு நிறைவுபெறும்

இக்காலகட்டம் பலருக்கு விரதம் நிறைவுபெறும் நேரம்

இந்த மார்கழி நோன்பு என்பது மார்கழி மாதம் முழுவதும் நோற்பது என்பது இக்கால நடைமுறை. ஆனால் ஆண்டாள் பாடல் என்ன சொல்கின்றதென்றால் மார்கழி திங்கள் மதிநிறை நன்னாளாம் என்றுதான் விரதத்தை பற்றி சொல்கின்றது

அதாவது மார்கழி பவுர்ணமியில் தொடங்கும் விரதம், பின் தைமாத பவுர்ணமியில் நிறைவுபெறும். அக்காலம் இப்படித்தான் இருந்தது என்கின்றார்கள்

இதற்கு மேல் ஆண்டாள் விரதம் பற்றி தெரியவேண்டுமென்றால் வைரமுத்துவிடம் கேட்டுகொள்ளலாம்

ஆக எல்லா தரப்பும் விரதம் இருந்து முடிக்கும் புனிதமான நாள் இந்த தைபூசம். முருக பெருமான் பக்தர்களுக்கு மிக மிக உச்ச கொண்டாட்டமான நாள்

அப்படி தமிழகத்து அறுபடை வீடுகள் முதல் மலேசிய பத்துமலை போன்ற அயல்நாடுகளிலும் வெகு விமரிசையாக தைபூசம் கொண்டபட்டுகொண்டிருக்கின்றது

அந்த பக்தர்களுக்கு வாழ்த்துக்கள், தமிழரின் தனிபெரும் கடவுளான முருகபெருமான் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும்

 
 

இந்திய பயணம் இனிதாகவே முடிந்தது…

அவிழ்த்து விடபட்ட கன்று ஒன்று தொழுவத்தில் கட்டபட்டாயிற்று, செக்கு மாட்டின் கழுத்தில் நுகத்தை பொருத்தியாயிற்று

அதாவது சங்கம் இந்திய பயணத்தை முடித்துவிட்டு திரும்பிவிட்டது.

எத்தனையோ பயணங்களை செய்தாலும் இப்பயணம் வாழ்வில் மறக்க முடியாது, அந்த அளவு நண்பர்கள் நெகிழ செய்திருக்கின்றார்கள், சிறிய கொடியில் பெரும் பூசனி காய்ப்பது போல இந்த முகநூல் எனும் சிறிய முயற்சி ஏராளமானவர்களை பெற்று கொடுத்திருப்பது அங்கு சென்றபின்புதான் தெரிந்தது

நண்பர் Kennedi M G விமான நிலையத்திற்கே வந்திருந்தார், அவர் இல்லத்திற்கு அழைத்து அற்புதமான விருந்தளித்தார். அதுவும் மீன் குழம்புடன். அவரின் அன்னை முகமும் அந்த சமையலும் மறக்க முடியாதது.

சென்னையில் என்னை 3 நாட்கள் நிழலாக இருந்து கவனித்துகொண்டவர் Senthil Kumar Krishnan என்பவர். உண்மையில் அவர் செய்த உதவிகளுக்கு பல இடங்களில் கண்ணீரே வந்தது. அப்படிபட்ட உதவிகள்

அவன் உடன்பிறவா சகோதரன் ஆகிவிட்டான், அதற்காக‌ பாட்டன் சொத்தில் எல்லாம் பங்கு கொடுக்க முடியாது.

நண்பர் Durai Dhurai Sathish அரக்கோணத்திலிருந்து ஓடிவந்தார், நெடுநாள் பார்க்க விரும்பிய சென்னை கோட்டையினை அவரோடுதான் சுற்றிபார்த்தேன். அற்புதமான விருந்தும் அளித்தார், மறக்க முடியாத நண்பர் அவர்.

சென்னை நிச்சயம் வளர்கின்றது, சர்வதேச தர கட்டங்கள் வந்திருக்கின்றன, ஆனால் இந்தியாவிற்கே உரிய வசதி குறைபாடுகள் குறிப்பாக சாலைகள் அப்படியே இருக்கின்றன‌

சென்னை வாசிகளுக்கு ஸ்பெஷல் வாகனங்கள் தயாரிக்கின்றார்கள் போல, அவர்களுக்கு சிக்னல் இண்டிகேட்டர் எல்லாம் தேவையே இல்லை. எல்லா விஷயத்திற்கும் சவுண்ட் ஹாரன் தான்

நிச்சயம் ஒழுங்காக விதிகளை மதித்தால் இந்த ஹாரன் அடிக்கும் அவசியமே இல்லை. இண்டிகேட்டர்கள் கண்ணாடி போன்றவற்றை சரியாக பின்பற்றினால் ஹாரன் அடிக்கும் அவசியமே இல்லை

நமக்கு சென்னை சாலைகளில் குறிப்பாக சிக்னலை கடந்து செல்லும்பொழுது முள்ளிவாய்க்காலில் சிக்கியது போலவே இருந்தது, நிச்சயம் சாவுதான் என பல நேரங்களில் எண்ணம் வந்தது

அது என்ன மர்மமோ தெரியவில்லை அந்திபொழுது பறவை கூட்ட கீச்சு குரலாக ஏகபட்ட ஹாரன்கள் ஒலித்தாலும் யாருக்கு யார் ஹாரன் எழுப்புகின்றார்கள் என்பது சம்பந்தபட்டவர்களுக்கு மட்டும் அட்டகாசமாக புரிகின்றது. சென்னையின் பெரும் விந்தை இதுதான்

புத்தக கண்காட்சியினை ஒட்டி Rajathi Salma வினை சந்திக்க முடிந்தது, தனது வழக்கமான சிரிப்புடன் மிக எளிமையாக இருந்தார், புத்தக கண்காட்சியில் அவரின் அர்த்த ஜாமத்து கதைகள் புத்தகம் அப்பொழுதுதான் வாங்கி இருந்தேன்

இரவில் அப்புத்தகத்தை வாசித்தால் அது சாதாரண நாவல் அல்ல, பெரும் அதிர்வுகளை மனதில் கொடுக்கும் வலி நிறைந்த நாவல், கொஞ்சம் பொறுமையுடன் நுண்ணிய ரசனையுடன் வாசிக்க வேண்டிய நாவல் அது. சந்தேகமில்லை அவர் தமிழகத்து “தஸ்லிமா நஸ்ரின்”.

மிக நீண்ட நாள்களாக சந்திக்க இருந்த இருவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. கலைஞரின் சந்திப்பு தனியாக எழுத வேண்டிய விஷயம். Pa Raghavan மிக பிசியான மனிதர். நீண்ட நேர காத்திருப்புக்கு பின் அவரை சந்திக்க முடிந்தது

அவர் பெரும் சுரங்கம், அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் ஏராளம் இருக்கின்றன. நேரமின்மையால் அதிகம் பேச முடியவில்லை. மின்னல் வேக சந்திப்புகள் எல்லாம் இப்படித்தான்

ஆனாலும் துரோணரை கண்ட ஏகவலைவன் போல அப்படி ஒரு மகிழ்ச்சி, கொஞ்ச நேரம் பேசினாலும் நிலமெல்லாம் ரத்தம் புத்தகத்திற்காக அவர் ரத்தம் சிந்தி உழைத்த கதை தெரிந்தது, கொண்டாடபட வேண்டிய உழைப்பு அது.

பைபிள் என்ன சொல்லும்? கிறிஸ்து விண்ணகம் சென்றதோடு முடிந்துவிடும். அதன் பின் 2000 ஆண்டுகளாக யூத இனம் என்ன பாடுபட்டது என்பது எந்த நூலிலும் சொல்லபடாத விஷயம், நமக்கு அதன் பின் தெரிந்ததெல்லாம் ஹிட்லர் கால அட்டகாசம் அதன் பின் பாலஸ்தீன பிளப்பு

ஆனால் 2000 வருட யூத வரலாற்றை அதையொட்டி கிறிஸ்தவ, இஸ்லாமிய உலக வரலாற்றை தேடி கொடுத்த அந்த மனிதன் நிச்சயம் இந்த மும்மத மனிதர்களாலும் கொண்டாடபட வேண்டியவர். கிறிஸ்தவ குருமார்கள் எல்லாம் அவரை கவுரவிக்க வேண்டும், ஆனால் அந்த சனியன்கள் வீரமணி மேடையிலும், மோடி ஒழிக என கோஷமிட்டு அர்த்தமில்லா விஷயங்களை செய்துகொண்டிருக்கின்றது

Savithri Ramakrishnan அவர்களை பார்க்க முடிந்தது, கொஞ்ச நேரம் பேச முடிந்தது. உலகில் கடவுளின் பாஷை தவிர எல்லா மொழியும் அறிந்திருக்கின்றார் அதுவும் இலக்கண சுத்தமாக‌ அவரின் இல்லம் கோவில் போலவே இருந்தது, இம்மாதிரி பெரியவர்கள் இக்காலத்திலும் இருப்பது மிக மகிழ்ச்சியான விஷயம்.

சில விஷயங்கள் மனதில் பாரமும் கவலையும் ஏற்றுகின்றன, நாம் மிகபெரும் மனிதர் என்பது போல பலர் ஓடி ஓடி வந்து சந்தித்தார்கள், திருச்சியில் ரெயில் 2 நிமிடம் நின்றபொழுது நள்ளிரவில் காத்திருந்த நண்பர் Periya Samy மனதை உருகவைத்தார், அதன் பின் தூங்க நெடுநேரம் ஆனது

இதுதான் நம்பர் என சொன்னவுடன் ஆளாளுக்கு அழைத்தார்கள், தமிழகத்தின் எல்லா நகரங்களிலிருந்தும் அழைப்பு வந்தது, முடிந்த வரை பதிலளித்தேன்

அழைத்தவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, மிக பெரும் அந்தஸ்தில் இருப்பவர்கள், அவர்கள் நம்மை அழைத்தபொழுது தகுதி மீறுகின்றோமோ எனும் அச்சம் ஆட்கொண்டது

சில சீமானியர்கள் அழைப்பும் வந்தது, “ஏய்ய்..” என அவர்கள் கத்த தொடங்கியதும் ஹலோ என சொல்லிவிட்டு போனை பாக்கெட்டில் வைத்துவிட்டேன், பின் மறக்காமல் கொஞ்ச நேரம் கழித்து அடுத்த ஹலோ, இப்படி வெறுப்பேற்றியதில் அதன் பின் அவர்கள் அழைக்கவே இல்லை

புத்தக கண்காட்சி முதல் எமது பக்கத்து டவுண் வரை பலர் ஓடிவந்து கை கொடுத்தார்கள், இத்தனை பேரின் கவனத்தையா பெற்றுவிட்டோம் என்ற அதிர்ச்சி இன்னும் விலகவில்லை

ஆலய சிறப்பு வழிபாட்டில் இருக்கும்பொழுதும் பலர் தேடி வந்தனர். அவர்களில் Alankara BenedictRaja Paul Ignatius இருவரும் முக்கியமானவர்கள்.

அதுவும் Raja Paul Ignatius சவுதியில் இந்தியர்களுக்கு ஆற்றிய பணியால் மிகபெரும் மதிப்பினை பெற்றவர். அம்மனிதர் நம்மை தேடி ஆலயம் வந்தது சாதாரண விஷயமாக தோன்றவில்லை

அதே வளாகத்திற்கு அடுத்தநாள் தூத்துகுடி நண்பர் Sundar G Santhosh ஒரு அழகிய பால் சங்கும், ஒரு முத்தும் கொண்டுவந்து கொடுத்து வாழ்த்தினார், கிட்டதட்ட 90 கிமீ தூரம் கடந்துவந்து அவர் சந்தித்ததில் அசந்து விட்டோம்

சென்னையில் இருக்கும்பொழுது ஒரு பைசா செலவில்லை, எது எமது தேவை என அறிந்து சிம் கார்டு முதல் போக்குவரத்து வரை நண்பர்களே பார்த்துகொண்டார்கள், இதெல்லாம் கொஞ்சமும் எதிர்பாரா அதிர்ச்சிகள்.

ஒரு சில அரசியல் தலைவர்களுடன் பேசும் வாய்ப்பும் கிடைத்தது.

எத்தனை சந்திப்புகள் , எத்தனை அன்பளிப்புகள், எத்தனை விருந்துகள், இவர்களுக்கெல்லாம் நாம் என்ன செய்தோம் என்றால் ஒன்றுமே இல்லை

அதனிலும் ஆச்சரியம் இவர்களை இதற்கு முன் சந்தித்ததே இல்லை, ஆனால் பல்லாண்டு பழகியவர்களை போல பழகினார்கள்

இவர்களுக்கு எல்லாம் என்னால் செய்ய முடிந்த‌ கைமாறு ஒன்றே ஒன்றுதான், எல்லோருக்காகவும் புனித அந்தோணியாரிடம் மனமுருக வேண்டிகொண்டேன், நிச்சயம் அவர்களை அந்தோணியார் ஆசீர்வதிப்பார்

எல்லோரையும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி, ஒரு சிலரை பெரு முயற்சி எடுத்தும் சந்திக்க முடியாததில் பெரும் வருத்தம். காரணம் சென்னையில் நினைத்தபடி பயணங்களை முடிக்க முடிவதில்லை என அங்கு சுற்றியபின்புதான் தெரிந்தது

அவ்வகையில் Somas Kandhan, கு.மா.பா இளங்கோவன் , Senthil Vasan MJyothi MahalingamS PremaJebamani MohanrajVino JasanArivarasu Coonghya போன்றோரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கின்றேன், அந்த பெரியவர்கள் என்னை மன்னிப்பார்கள் என மனமார நம்புகின்றேன்

Babu Rao என்பவர் வருவதாக சொல்லி ஏமாற்றிவிட்டார், அவர் வாழ்வில் நயந்தாராவினை சந்திக்காமலே போகட்டும் என சாபமிட்டாயிற்று

புத்தக கண்காட்சியும், கலைஞர் சந்திப்பும் தனியாக எழுத வேண்டிய பதிவுகள். ஒவ்வொன்றாக எழுதலாம்

எம்மை சந்தித்தோருக்கும், அழைத்து பேசியவர்களுக்கும் மிக்க நன்றிகள்

தங்க தலைவி குஷ்புவினை சந்திக்கா பெரும் குறையினை தவிர சங்கத்து பயணம் இனிதே நிறைவேறிற்று. அதற்கான காலம் இன்னும் வரவில்லை என சங்கம் மனதை ஆற்றிகொள்வதை தவிர வேறு வழியில்லை

தலைவி வாழும் சென்னையினை சுற்றிவந்ததே சங்கத்திற்கு பெரும் மகிழ்ச்சி..

இத்தனை பேர் தேடி ஓடி வந்ததிலும், பெரும் வரவேற்பையும் அன்பையும் அன்பளிப்புகளையும் கொட்டி கொடுத்ததில் உணர்ந்தது ஒன்றுதான்

இனி எழுதுவதை நிறுத்த முடியாது, அது அவர்களுக்கு செய்யும் துரோகம் ஆகிவிடும் , நன்றி கொன்ற பாவமாகிவிடும்

இன்னும் ஏராளம் எழுதவேண்டும் என்ற பொறுப்புணர்வு மனதில் வந்து அமர்கின்றது. அந்த பொறுப்பினைத்தான் எல்லோரும் வந்து கொடுத்துவிட்டு சென்றிருக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் பாத்திரமான மனதினை இறைவன் எமக்கு அருளட்டும்

ஓரளவு அர்த்தமுள்ள எதிர்ப்பு அது…

திராவிடர் திருநாளை முன்னிட்டு ஜனவரி 15, 16ல் பறையாட்டம் ஒயிலாட்டம் நடக்கும் : திராவிட கழகம் அறிவிப்பு

தமிழரின் தனிபட்ட இசைகருவி யாழ், பண்டைய தமிழ் இலக்கியம் அதனைத்தான் சொல்கின்றது, அதனை போன்ற பல உண்டு, வீணை கூட தமிழர் மரபில் ஒன்றுதான்

அவற்றை எல்லாம் இசைக்க மாட்டார்கள், ஏனென்றால் யாழும் தெரியாது, அதனை இசைக்கவும் தெரியாது, வரலாறும் தெரியாது

சும்மா எதனையாவது போட்டு அடித்து இதுதான் தமிழர் இசை, நடனம் என சொல்லி ஏதாவது செய்ய வேண்டியது

முதலில் கருப்பு சட்டையே தமிழர் பண்பாடு கிடையாடு, கருப்பு சட்டை என்பது எதிர்ப்பு உணர்வு என சொல்லிகொள்பவர்கள் இவர்கள்தான்

பின் பொங்கலுக்கு கருப்பு சட்டையோடு வந்தால் என்ன அர்த்தம்? பொங்கலை எதிர்க்கின்றார்கள் என அர்த்தம்

இல்லாவிட்டால் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி அணிந்தல்லவா வரவேண்டும்? வரமாட்டார்கள், கருப்பு சட்டையில்தான் வருவார்கள்

இப்படியாக இவர்கள் காமெடி எல்லாம் ஒருவிதத்தில் அங்கிள் சைமன் போன்ற ரகம்.

இதனை பற்றி எல்லாம் நாம் கேட்டால் ஆர்.எஸ்.எஸ் ஏஜெண்ட் என்பார்கள்

(அர்த்தமுள்ள விஷயம் செய்யவேண்டுமென்றால் அதே கருப்பு சட்டையுடன் 17ம் தேதி ராமசந்திரன் கல்லறை முன்னால் நின்று கத்துங்கள்

ஓரளவு அர்த்தமுள்ள எதிர்ப்பு அது…)

 
 

கலைஞருடன் நான்…

லுத்தரை தலைவனாக கொண்டு போராட பழகுங்கள்

images.jpg

இந்திய தலித் போராளி, மொழி போராளி, இன்னும் ஏகபட்ட போராளிகள் எல்லாம் நினைவில் கொள்ளவேண்டியது இந்த மார்ட்டின் லுத்தர் என்பவரைத்தான்

இங்கு சாதிக்கொரு நாடு, உட்சாதிக்கொரு நாடு, மதத்திற்கொரு நாடு, மொத்த தமிழக பிராமணரையும் கடலில் போட்டுவிட்டு திராவிட நாடு, மொத்த தெலுங்கரையும் விரட்டிவிட்டு சுத்த தமிழ்நாடு எல்லாம் சாத்தியமில்லை

உரிமைகளை கோரலாம், போராடலாம் பொறுமை மகா முக்கியம்

அப்படி இருந்தால் லுத்தரின் போராட்டத்திற்கு பின்னொரு நாளில் ஒபாமா வந்தது போல், தலித் பிரதமராகலாம், தமிழன் பிரதமராகலாம்

ஒற்றுமையே பலம்

அமெரிக்க கருப்பர்கள் லுத்தர் தனிநாடு கோரவில்லை மாறாக ஒன்றாக உழைத்து தேசத்தை வலுபடுத்தினார்கள், நாடு வலுவாக இன்னும் இருக்கின்றது

இந்தியாவினையும் அப்படி உருவாக்க பாருங்கள், மாறாக சுயலாபத்துக்காக பிரிவினைபேசினால் இத்தேசமும் பலமிழக்கும், நீங்களும் ஒழிந்து போவீர்கள் எல்லாம் நாசமாகும்

இனியாவது லுத்தரை தலைவனாக கொண்டு போராட பழகுங்கள், அப்படி வழி தெரியாவிட்டால் அமைதியாக இருங்கள்

உங்கள் அழிச்சாட்டிய போராட்டத்தை விட உங்கள் அமைதி இந்திய சமூகத்திற்கு நல்லது

அங்கிள் சைமன், இதோ லுத்தரும் கையினை முறுக்கி கொண்டு பேசுகின்றார், ஆனால் பாருங்கள் எவ்வளவு நல்ல தலைவர்

இவரிடமிருந்து நீர் ஏன் பாடம் படிக்க கூடாது? கொஞ்சமேனும் அறிவிருந்தால் …

 

அமெரிக்க காந்தி மார்ட்டின் லுத்தர் பிறந்த நாள் இன்று

Image may contain: 2 people, people smiling

வெள்ளையன் அமெரிக்காவினை அடைந்த காலத்தில் இருந்தே அது வெள்ளையருக்கு மட்டும் சொந்தமான நாடு என்ற எண்ணம் அவர்களிடை வந்தது

செவ்விந்தியர் மூர்க்கமாக அழிக்கபட்டனர், ஆப்ரிக்காவில் இருந்து கருப்பர்கள் அடிமைகளாக கொண்டுசெல்லபட்டு சொல்லணா துயருற்றனர், அமெரிக்க விடுதலைக்கு பின்னும் அது 100 ஆண்டு தொடர்ந்தது

மாமனிதன் ஆபிரஹாம் லிங்கன் அவர்கள் அடிமை இல்லை என அறிவித்தார், அதனால் கொல்லவும் பட்டார்

அன்றே உள்நாட்டு போரால் அமெரிக்க உடைந்திருக்க வேண்டியநிலையில் இருந்தது, அதனை எல்லாம் காத்து இன்று ஒரே அமெரிக்காவாக இருக்க காரணம் லிங்கனே , ஆனாலும் இனவெறி அவரை கொன்றது

அதன் பின்னும் அவர்களுக்கு உரிமைகள் இல்லை, வாக்குரிமை கூட இல்லை

வெள்ளையன் அதிகார வர்க்கம் , ஆயுத போராட்டம் வெற்றிபெறா நிலையில் தவித்து நின்றனர் கருப்பர்கள்

அவர்களுக்கு கிடைத்த மாமணிதான் மார்ட்டின் லுத்தர் கிங். அவர் ஒரு பாதிரி ஆனால் சிந்திக்க தெரிந்த பாதிரி

நாமெல்லாம் கிறிஸ்தவர்கள் என்கின்றீர்கள், ஆனால் எங்களை ஒதுக்கியே வைத்திருக்கின்றீர்கள். சக மனிதனை மனிதனாக கூட மதிக்காத நீங்கள் எப்படி உன்னத கிறிஸ்தவராக முடியும் என பகிரங்க கேள்விகளை எழுப்பினார்

அப்பொழுது அவர் பெயர் மைக்கேல் கிங், ஐரோப்பாவில் போப்பினை எதிர்த்து புரட்சி செய்த மார்ட்டின் லுத்தர் பெயரை இவர் தனக்கு சூட்டிகொண்டு போராடினார்

ஆனாலும் பலனில்லை, இந்த உலகில் யாரின் வழி அமைதியான ஆனால் வலுவான போராட்ட வழி என அவர் தேடியபொழுது ஒன்றும் கிட்டவில்லை

அமைதி வழி என் வழி என போராடினார், அப்பொழுது அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது

அக்கால அமெரிக்க பேருந்தில் வெள்ளையர்களே அமர வேண்டும், கருப்பர் அமர்ந்தால் வெள்ளையர் வந்ததும் எழுந்துவிட வேண்டும், இது தொடர்பாக ஒரு கருப்பு பெண்ணை வெள்ளையர் அறைந்துவிட மோதல் வெடித்தது

அடிபடுவது ஒன்றும் கருப்பருக்கு புதிதல்ல, ஆனால் மார்ட்டின் லுத்தர் காந்தி வழியில் எதிர்ப்பு தெரிவித்தார். போக்குவரத்து கழக கருப்பர்கள் இச்சிக்கல் தீரும்வரை பணிக்கு வரமாட்டார்கள்

அமெரிக்க அரசு என்ன பழனிச்சாமி அரசா? கண்டவனையும் போட்டு பேருந்தை இயக்க? போராட்டம் பரவ அமெரிக்கா ஸ்தம்பித்தது

விஷயம் விவகாரமாகி வேறுவழியின்றி கருப்பர் கோரிக்கை ஏற்கபட்டு கருப்பர்கள் பேருந்தில் அமரலாம் என முடிவாயிற்று, கருப்பர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி இதுதான்

இந்த உற்சாகத்தில் போராட ஆரம்பித்தார் மார்ட்டின் லூத்தர், எனக்கொரு கனவு உண்டு, இதே அமெரிக்காவில் கருப்பர்கள் சம உரிமை பெற்று வாழவேண்டும், நாமும் மனிதர்களே என அவர் உருகி கேட்டது உலக மக்கள் இதயத்தை எல்லாம் உசுப்பியது

உலகின் கவனத்தை பெற்றார் மார்ட்டின் லுத்தர், சர்வதேச ஆதரவு பெருகியது. அமெரிக்க வெள்ளையரோ அவரை மிரட்டினர்

“இந்த போராட்டத்தில் இறங்கும்பொழுதே எனக்கு சாவு நிச்சயம் என தெரியும், ஆபிரகாம் லிங்கனையே இனவெறிக்கு கொன்ற தேசம் என்னை எப்படி விடும்?”என அமைதியாக சொன்னார் மார்ட்டின் லுத்தர்

1959ல் இந்தியா வந்தார், பல இடங்களை சுற்றி பார்த்தபின் சொன்னார், இனி என் வழி காந்திவழி

காந்திய வழியில் அவரின் போராட்டம் பெருகியது, அமெரிக்க அரசு இறங்கி வந்தது, கருப்பருக்கு சில சலுகைகள் கிடைத்தன‌

1964ல் நோபல் பரிசும் அவருக்கு கிடைத்தது, காந்திய கொள்கை பெற்றுகொடுத்த நோபல் அது.

தொடர்ந்து போராடினார், மக்களை நாடெங்கும் திரட்டி கொண்டே இருந்தார், கருப்பர்கள் அவரை தேவ தூதனாகவே கண்டார்கள்

பொறுக்காத இனவெறி வெள்ளையன் 1968ல் அவரை சுட்டு கொன்றான். லிங்கன், காந்தி வரிசையில் மானிடத்திற்காய் மக்களை நேசித்த பாவத்திற்காய் அவன் செத்தபொழுது வயது வெறும் 39

உலகம் அவனுக்காய் அழுதது, உலகெங்கும் உரிமை குரல்கள் எழும்பின குறிப்பாக தென்னாப்ரிக்கா போன்ற நாடுகள் அமைதி வழியில் உரிமை பெறுவது முடியும் என நம்பின, மண்டேலா போன்றோர் உருவானார்கள்

அமெரிக்காவிலும் கருப்பர்களுக்கு உரிமைகள் கிடைக்க தொடங்கின, முகமது அலி மைக்கேல் ஜாக்சன் போன்றோர் வெளி தெரிந்தது அங்கீகாரம் பெற்றது லுத்தரின் சாவுக்கு பின்னாலேதான்

அந்த லுத்தர் கொடுத்த சக்தியில்தான் அமெரிக்க வரலாற்றில் முதல் கருப்பு அதிபராக ஒபாமா பின்னாளில் வந்தார்

நிச்சயம் 1950கூட அடுத்த 50 ஆண்டுகளில் கருப்பர் அமெரிக்காவினை ஆள்வார் என யாரும் நம்பி இருக்க முடியாது அவ்வளவு கொடுமையான காலங்கள்

ஆனால் அஹிம்சையான போராட்டம் மாபெரும் திருப்பத்தை கொடுத்தது

மிக சிறிய வயதிலே போராட வந்து, 39 வயதிற்குள் சாதித்துவிட்டு அம்மக்களுக்காக செத்த அந்த மார்ட்டின் லுத்தர் இந்த உலகில் விட்டு சென்ற அடையாளம் வலுவானது, கருப்பர்களை அடையாளபடுத்தி உரிமை கொடுத்த அவதாரமாகவே அவர் பார்க்கபடுகின்றார்

அவருக்கு வழிகாட்டியது காந்தி என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமைபடலாம்

காந்தியின் கொள்கைகள் அவ்வளவு உயர்வானவை, உன்னதமானவை என உலகம் காந்திக்கு பின் கண்டது அவரில்தான்

அந்த மாமனிதனுக்கு இன்று நினைவுநாள், ஒடுக்கபட்ட மக்களுக்காக போராடுகின்றோம் என சொல்லிகொள்பவர் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய மகான் அந்த லுத்தர் கிங்

ஒடுக்கபட்டோருக்கான தலைவன் எப்படி இருக்க வேண்டும், எப்படி தொலைநோக்கோடு சிந்திக்க வேண்டும் என சொன்னவர் அவர், அப்படி நல்ல தலைவன் பின் சென்றால் அமைதியான வளமான நாட்டை உருவாக்க பங்களிப்பினை செய்ய முடியும் என செய்துகாட்டியவர்கள் அமெரிக்க கருப்பர்கள்

இன்று அந்நாடு உச்சத்தில் இருக்கின்றது,

உரிமைக்காக துப்பாக்கி தூக்கிய தேசங்கள் அழிந்து கிடக்கின்றது அதுவும் பக்கத்து தீவே சாட்சி

நிச்சயம் லுத்தர் பிரிவினை பேசவில்லை, எங்களை தனியாக விடு என கத்தவில்லை மாறாக எங்களுக்கும் உரிமை கொடுங்கள் நாங்களும் இந்நாட்டிற்கு பாடுபடுகின்றோம் என்றுதான் முழங்கினான் உயிர்விட்டான்

அப்படிபட்ட தலைவர்களே இன்று உலகெங்கிலும் உள்ள ஒடுக்கபட்டோருக்கு தேவை, குறிப்பாக இந்தியாவில் நான் தலித் தலைவன், போராளி, இனமான போராளி என சொல்லிகொள்பவர்கள் நல்லவர்களாக இருந்தால் அவர்கள் நோக்கம் உன்னதமாக இருந்தால் மார்ட்டின் லுத்தரை பின்பற்ற தயங்கமாட்டார்கள்

ஆனால் எங்காவது நீங்கள் இந்த கும்பல்களிடம் லுத்தர் படம் பார்க்கமுடியுமா?

கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், சே என பல வெளிநாட்டு தலைவர்கள் இருக்கும் படத்தில் நிச்சயம் லுத்தர் படமும் இருக்க வேண்டும் ஆனால் வைக்கமாட்டார்கள்

ஏனென்றால் அவன் உரிமை கோரியவன் ஆனால் அமெரிக்க அபிமானி, இவர்களோ இந்திய எதிர்ப்பு எனும் ஒற்றை புள்ளியில் சுழல்பவர்கள் அதனால் லுத்தர் இவர்களுக்கு தேவையில்லை

“எனக்கொரு கனவுண்டு..” என அவன் முழங்கியதில் பாதி நடந்திருக்கின்றது, முழுவும் நனவாக இன்னொரு முறை அவன் பிறந்து வரவேண்டும்

வரலாற்றில் மிகபெரும் தடம் பதித்த அந்த அமெரிக்க காந்திக்கு இன்று பிறந்த நாள், ஆழ்ந்த அஞ்சலிகள்..