தாயின் மணிக்கொடி பாரீர்

Image may contain: 1 person

ஸ்ரீதேவி என்பவர் திறமையான நடிகை, எல்லோராலும் அறியபட்டவர் பலரால் விரும்பட்டவர், சந்தேகமில்லை நல்ல நடிகை அதற்காக அவர் உடலில் தேசியகொடி போர்த்தி அரசு மரியாதை செய்வது என்ன நியாயமோ தெரியவில்லை

நாட்டிற்கு அவர் செய்ததென்ன? மக்களுக்கு பணி செய்தாரா? எல்லையில் துப்பாக்கி பிடித்தாரா? இல்லை மக்களுக்காக போராட்டம்தான் செய்தாரா?

நடிப்பு அவர் தொழில், அதனை செய்தார் அவ்வளவுதான், அதில் சம்பாதித்தார். வருமானத்தில் அரசுக்கு சரியாக வரிகட்டினாரா என்பது கூட தெரியாது

ஏதோ அவர் லால்பகதூர் சாஸ்திரி போல ரஷ்யாவிற்கு சமரசம் பேச சென்றது போலவும், அங்கு இறந்தது போலவும் அவருக்கு ஏன் தேசியகொடி போர்த்தவேண்டும்?

சொந்த பணத்தில் உல்லாசமாக துபாய் சென்றார், ஆடம்பர ஹோட்டலில் தங்கினார் உயிர்துறந்தார்

இதில் இந்நாட்டிற்கு என்ன இழப்பு? ஸ்ரீதேவி இந்நாட்டின் அடையாளம் என எதில் நிரூபித்தார்?

ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கினாரா? நோபல் வாங்கினாரா? இல்லை உலக அங்கீகாரம் எதனையாவது இந்தியாவிற்கு வாங்கி தந்தாரா?

ஒரு ஆஸ்கர்? ஒரு கிராமி? இந்த தேசத்திற்கு என்ன வகையில் பெருமை சேர்த்தார் அவர்?

அவர் கலெக்டராக இருந்தாரா? அரசுபணியில் இருந்தாரா? இல்லை நீதிமன்ற குமாஸ்தாவாக கூட இருந்தார? என்றால் இல்லை, ஒரு அரசுபணிக்கும் வராத ஒருவருக்கு ஏன் இந்த மரியாதை? இது தேசிய அவமானம் இல்லையா?

இதெல்லாம் மாபெரும் தவறான முன்னுதாரணங்கள், தேசியகொடிக்கு பெரும் அவமானம் கொடுக்கும் விஷயங்கள்

தேசியகொடி மகா கவுரவமானது. மாபெரும் தியாகிகளுக்கும், மூத்த அரசியல்வாதிகளுக்கும் கலாம் போன்ற விஞ்ஞானிகளுக்கும், நாட்டிற்கு உயிர்நீத்த ராணுவத்தினருக்கும் போர்த்தபட வேண்டியதை, ஒரு நடிகைக்கு அதுவும் குடித்து செத்த நடிகைக்கு போர்த்துவது என்ன வகை?

இத்தேசத்தினை நேசிப்பவர் என்ற முறையிலும், இந்நாட்டு கொடியினை உயிருக்கு நிகராக மதிப்பவர் என்ற முறையிலும் இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்,

ரத்தம் கொதிக்கும் விஷயமிது

போனிகபூர் என்பவன் யார்? அவனின் இரண்டாம் மனைவி இந்நாட்டிற்கு ஆற்றிய சேவை என்ன?

நல்ல வேளையாக சில்க் ஸ்மிதா, திவ்யாபாரதி போன்றவருக்கு ஏன் தேசியகொடி போர்த்தவில்லை என சிலர் கேட்காமல் இருக்கின்றானே அதுவரை நல்லது

நாளை இன்னொரு நடிகை செத்தால் போர்த்துவார்களா? உதாரணத்திற்கு ஷகிலா அடுத்த நாட்டில் செத்தாலும் இதனை செய்வார்களா? நாடு தாங்குமா?

தமிழகத்தைத்தான் சினிமா கெடுத்தது என்றால் அது இந்திய தேசியகொடியின் மரியாதையினை கெடுக்கும் அளவிற்கு சென்றதை நல்ல இந்தியன் கண்டிக்காமல் இருக்க மாட்டான்

இதனை செய்தவர்களை தேசிய கொடி அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் நாளை ஸ்ரீதேவி வீட்டு நாய் செத்தாலும் போர்த்த கிளம்புவார்கள்

உடனே நடவடிக்கை எடுத்தால் இந்த அரசுக்கு கொஞ்சமேனும் உணர்சி இருக்கின்றது என அர்த்தம் , கண்டுகொள்ளாமல் விட்டால் இந்த அரசு இந்நாட்டை ஆள அருகதை இல்லா அரசு

உறுதியாக சொல்கின்றோம் பால் தாக்கரே போன்றோர் இருந்திருந்தால் நிச்சயம் இதனை நேரில் சென்று கண்டித்திருப்பார்

அவர் என்ன நாட்டுபற்றுள்ளவன் எவனாக இருந்தாலும் கண்டிப்பான், நிச்சயம் பலர் மனதிற்குள் முணுமுணுப்பர் , பலருக்கு இதயம் எரிந்துகொண்டிருக்கின்றது

இனி எவனாவது தேசிய கீதம் பாடும்பொழுது அவன் எழவில்லை, இவன் எழவில்லை என சொல்லட்டும் அவர்களுக்கு அன்று இருக்கின்றது

ஒரு நடிகைக்கு தேசிய கொடி போர்த்தும் அளவிற்கு இந்நாடு சென்றுவிட்டதை எண்ணி நாணத்தால் தலைகுனிகின்றோம்

பத்ம‌ஸ்ரீ விருது வாங்கியவர்களுக்கு அந்த மரியாதை கொடுக்கலாம் என பலர் கிளம்புகின்றார்கள், இதுவரை அப்படி பத்ம‌ஸ்ரீ விருது பெற்ற எத்தனை பேருக்கு கொடி போர்த்தினார்கள், ஒருவருக்குமில்லை

தமிழகத்தில் சிவாஜிக்கு என்ன போர்த்தினார்கள்? அப்படியானால் அந்த மாபெரும் நடிகனை வஞ்சித்தார்களா? சிவாஜியினை விடவா ஸ்ரீதேவி கிழித்துவிட்டார்?

இவை எல்லாம் சப்பைகட்டுக்கு சொல்லும் விஷயங்கள்

“தாயின் மணிக்கொடி பாரீர்”எனும் பாரதியின் வீரமிக்க நாட்டுபக்திமிக்க வார்த்தைகளை கம்பீரமாக சொல்லி உயர பறக்கும் தேசிய கொடியினை ஒரு … மீது பார்க்குமளவு நமக்கு கொடிய காலம் இருந்திருக்கின்றது

இதற்கு கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த அரசு ஆளதகுதியற்றது என்பதே அர்த்தம்

ஏ மும்பையர்களே, அந்த சன்னிலியோன் என்பவர் குளிக்கும் தொட்டியிலோ இல்லை வரகூடாத நோய் வந்து செத்தாலோ இப்படி போர்த்தி தொலைத்துவிடாதீர்கள் என கெஞ்சி கேட்டுகொள்கின்றோம்


ஶ்ரீதேவிக்கு வரிந்துகட்டி வந்து ஆம் அவருக்கு தேசியகொடி போர்த்தியது சரி என்பவன் எல்லாம் 1980களில் அவருக்கு அதிதீவிர ரசிகர்களாக இருந்தவர்களாக இருக்கலாம்

அவர்கள் வலியினை புரிந்துகொள்ள Babu Rao போன்றவர்கள் இன்னும் 40 அல்லது 50 வருடங்கள் காத்திருக்க வேண்டும், அப்பொழுதுதான் புரியும்

இன்று ஸ்ரீதேவிக்கு கொடி போர்த்தியதை பார்த்துகொண்டிருப்பவன் எல்லாம் அன்று தேசியகொடி போதாது, ஐநா கொடி வேண்டும், 21 குண்டு முழங்க வேண்டும் என அடம்பிடிக்க இப்பொழுதே மனதில் வைராக்கியம் எடுத்துகொண்டிருக்கும் நேரமிது


 

சங்கரமடத்திற்கு வீரமணி அஞ்சலி செலுத்துவது சால பொருந்தும் விஷயம்

No automatic alt text available.

கருப்பு பணங்கள் புழங்குகின்றன, பெரும் புள்ளிகள் பணம் பதுக்குமிடமே சங்கரமடமும், வீரமணியின் அறக்கட்டளையும் என்ற சர்ச்சை பெருங்காலம் உண்டு

பக்தி கும்பல் சங்கராச்சாரியரிடமும், பகுத்தறிவு கும்பல் வீரமணியிடமும் பல விஷயங்களுக்கு பாதுகாப்பும் ஆலோசனையும் கேட்பது ஒன்றும் ரகசியமல்ல‌

இரண்டும் பல காரியங்களில் மர்ம மடங்களே, அந்த ஒற்றுமை உண்டு

அவ்வகையில் சங்கரமடத்திற்கு வீரமணி அஞ்சலி செலுத்துவது சால பொருந்தும் விஷயம்

 

ரத்னவேல் பாண்டியனின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்…

Image may contain: 1 person, smiling, suit and glasses

“சனி பிணம் தனி போகாது” என்பார்கள், மயிலு விஷயத்தில் சரியாக இருக்கின்றது

என்ன யழவோ தெரியவில்லை தொடர்ந்து மரண செய்திகளாக வருகின்றன , சாக வேண்டியவர் ஏராளமானோர் இருக்க, இருக்க வேண்டிய பலர் இருக்கின்றனர்

இப்பொழுது காஞ்சி சங்கராச்சாரியினை தொடர்ந்து, நீதிபதி ரத்னவேல் பாண்டியனும் இறந்துவிட்டாராம்

ஒரு பிற்படுத்தபட்ட வகுப்பில் பிறந்து கல்வி ஒன்றினால் மேல் வந்து வழக்கறிஞராகி பின் நீதிபதியாகி , உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் வரை நீதிபதியாக உயர்ந்தவர் அவர்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த மிக சில தமிழர்களில் அவரும் ஒருவர்.

பிராமணர்களும் இன்னும் பல உயர் சாதியினரும் மட்டும் அமரும் பெரும் பதவியில் பிற்படுத்தபட்ட வம்சத்தில் இருந்து வந்து அவர் அமர்ந்தது அன்று பெரும் ஆச்சரியமாக பார்க்கபட்டது.

நெல்லை பகுதியில் என்றுமே அவருக்கு பெரும் மரியாதை உண்டு, அங்கு சட்டபடிப்பு படிப்பவர்கள் எல்லோருக்கும் அவர்தான் ரோல் மாடல்

அவர் டிகிரி படித்த பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் அவர் மாணவர்களுக்கு மாபெரும் எடுத்துகாட்டு, அவரும் பேட்டிகளில் எல்லாம் அக்கல்லூரி பற்றி சொல்ல தவறியதில்லை.

இவரை ரோல்மாடலாக கருதி சட்டம் படித்தவர்தான் கோப்பால் சாமி. அதே போல் வழக்கறிஞருமானார் அதன் பின் அரசியல்வாதியாகி, போரளியாகி வைகோ என திசைமாறி சென்றுவிட்டார், இப்பொழுது எங்கிருக்கின்றார் என அவருக்கே தெரியாது.

ஆலடி அருணா போன்ற பலபேருக்கு வழிகாட்டியாக குருவாக இருந்தவர் ரத்னவேல் பாண்டியன்.

நெல்லை பகுதியின் மாபெரும் அடையாளமான ரத்னவேல் பாண்டியனின் மறைவு வேதனைக்குரியது

கல்வியால் உயர்ந்த அந்த மாமனிதருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

 

இங்கே ஆளாளுக்கு கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் வாழ்க என சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

No automatic alt text available.

இங்கே ஆளாளுக்கு கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் வாழ்க என சொல்லிகொண்டிருக்கின்றார்கள், டிரம்ப் கூட ஜெருசலேமிற்கு அமெரிக்க தூதரகத்தை மாற்றுவேன் என சொல்லிகொண்டிருக்கின்றார்

ஆனால் அங்கே நிலை என்ன?

கிறிஸ்துவை யூதர்களுக்கு கொஞ்சமும் இன்றுவரை பிடிக்காது, அவர் தங்கள் பெருமையினை கெடுக்க வந்த கோடாரி காம்பாகவே கருதுகின்றார்கள். தாங்கள் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் இயேசு எனும் குட்டிசாத்தானே முழு காரணம் என்பது அவர்களின் மனமார்ந்த நம்பிக்கை

அதனால் ஜெருசலேமில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயங்களை எல்லாம் கண்டுகொள்வதில்லை, சிலவற்றை பல்லை கடித்துகொண்டு பொறுத்துகொள்கின்றார்கள்

ஆனாலும் அவ்வப்போது பழிவாங்க தவறவில்லை, இப்பொழுது இயேசு கல்லறை அமைந்த ஆலயத்தில் வில்லங்கத்திற்கு வந்தாயிற்று

அந்த ஆலயம் இன்று ஒரு இஸ்லாமிய குடும்பத்தால் நிர்வகிக்கபடுகின்றது, அவர்கள்தான் அந்த பாரம்பரிய புனிதமான இடத்தின் தற்போதைய அதிகாரம் கொண்டிருப்பவர்கள்,சாவி அவர்களிடம் தான் உண்டு

அவர்களால் இன்றுவரை ஒரு சிக்கலும் இல்லை

இஸ்ரேல் அரசு அந்த புனிதமான ஆலயத்தை ஆலயம் என்ற வரிசையில் கொண்டுவராமல், வியாபார நிலையம் என்ற வரிசையில் கொண்டு வந்து பெரும் வரிகளை சுமத்திற்று

இது ஆலயம், கர்த்தராகிய தேவன் உயிர்த்தெழுந்த ஆலயம் , இதுவா வியாபார நிலையம் என கிறிஸ்தவர்கள் கேட்டும் இஸ்ரேல் இறங்கவில்லை அவர்கள் கிறிஸ்தவ வெறுப்பு அப்படி

இதனால் கோவில் பூட்டபட்டது, சுற்றுபயணிகள் பாதிக்கபட்டனர், விஷயம் கொஞ்சம் வெளியில் வந்தது 3 நாட்களில் விஸ்வரூபமெடுத்தது

மேற்கு நாடுகள் எங்களிடமே உங்கள் வேலையினை காட்டுவீர்களா என முறைக்க இப்பொழுது வரிவிலக்கு அளித்துள்ளது இஸ்ரேல் இதனால் ஆலயம் திறக்கபட்டுள்ளது

இயேசு வாழ்ந்த காலத்தில் யூத ஆலயம் வியாபார தலமானதை எதிர்த்து எல்லோரையும் அடித்து விரட்டினார். அதற்கு 2030 வருடம் கழித்து அவர் கல்லறையினை வியாபார தலம் என அறிவித்து பழிவாங்குகின்றார் இஸ்ரேலியர்

இங்கு இது தெரியாமல் பல கிறிஸ்தவர் “இஸ்ரேல் வாழ்க, தேவன் இஸ்ரேலை பாதுகாத்தார் அல்லேலூயா..” என அழிச்சாட்டியம் செய்கின்றார்கள்

பரிதாபத்திற்குரிய கூட்டம் இது

 

கலாச்சாரத்தை தேடி தமிழகம் வந்து வாழ்ந்த தங்கத் தலைவி…

Image may contain: 1 person, close-up

ஸ்ரீதேவி எப்படி மரித்தார் என துபாய் சொல்லிவிட்டது, மும்பை திரையுலகம் தாவுத் கட்டுபாட்டில் இருக்கின்றது என சு.சாமி சொல்கின்றார். இன்னும் மும்பை திரையுலகின் இன்னொரு முகம் பற்றி , கலாச்சாரம் பற்றி ஆளாளுக்கு சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்

கவனித்தால் ஒன்று புரிகின்றது

அந்த கலாச்சாரம் பிடிக்காமல்தான் தலைவி குஷ்பு கலாச்சாரம் நிறைந்த தமிழகத்திற்கு ஓடிவந்து, தமிழ்பெண்ணாக மாறி, தமிழச்சியாகவே நிலைத்துவிட்டார்.

தமிழச்சியான ஸ்ரீதேவி மும்பை சென்று மாறி மரித்தும் விட்டார்.

இதிலிருந்து தலைவி மிக நல்ல கலாச்சாரத்தை தேடி தமிழகம் வந்து தங்கிவிட்டார் என்ற உண்மை உலகிற்கே தெரிவதில் சங்கம் பெருமை அடைகின்றது

  
 

1980களில் டி.ராஜேந்தர் அதிரடியாக பேசிகொண்டிருந்தார்

Image may contain: 1 person, smiling, beard and close-up

1980களில் டி.ராஜேந்தர் அதிரடியாக பேசிகொண்டிருந்தார். ராமசந்திரன் என்பவரின் மறுபக்கம் மிக இறுக்கமானது என்ற பேச்சுக்கள் வந்த நேரம் அது

கங்கை அமரனை மிரட்டியது , ரஜினியினை சீண்டியது என திரையுலகத்தை மிரட்டி ஒடுக்கி வைத்து தமிழகத்தை மகா இறுக்கமாக வைத்திருந்தார் ராமசந்திரன்

அப்பொழுது டி.ஆர் மிக துடிப்பாக பேசினார். உண்மையில் மகா தைரியமான பேச்சுகளாக அப்பொழுது கருதபட்டது. அதிரடி கேள்விகளை எழுப்பினார். திமுகவின் தொண்டராக குதித்துகொண்டிருந்தார் டி.ஆர்

அவரை பற்றி அதிமுகவின் முக்கிய கூட்டமுடிவில் அவர்களிடம் கேட்டார்கள், ராஜேந்திரன் இப்படி எல்லாம் கேட்கின்றாரே? உங்கள் பதில் என்ன?

காளிமுத்து சொன்னார், சீமானின் மாமனரான அதே காளிமுத்து ” கருணாநிதி இப்பொழுது ஆளில்லாமல் ஒரு கரடியினை கூட்டி திரிகின்றார் அதற்கெல்லாம் பதில்சொல்லமுடியாது”

அருகிருந்த ராமசந்திரனுக்கு சிரிப்பு தாளவில்லை

அந்த ராமசந்திரன் படத்தை வைத்து கட்சி வளர்க்க போகின்றாராம் டி.ஆர்

கட்சியின் பெயர் “அய்யம்” என இருந்தால் இன்னும் நல்லது

 

கார்த்தி சிதம்பரம் கைது …

என்னதான் படித்திருந்தாலும் , அரசியல் அனுபவமிருந்தாலும் நடப்பு யதார்த்தம் என்பது சிதம்பரம் குடும்பத்திற்கு தெரியவில்லை போலிருக்கின்றது

குறி வைத்த உடனே லண்டனுக்கோ, பாரிஸ்க்கோ, சிங்கப்பூருக்கோ சென்றிருக்க வேண்டாமா?

மல்லையாவும், லலித்மோடியும், நீரவ்மோடியும் வந்தபின் சீனியாரிட்டிபடி நான் கடைசியாக வருகின்றேன், என் உயிருக்கு ஆபத்து என ஒரு அறிக்கை விட்டிருந்தால் இவ்வளவு சிக்கல் வந்திருக்குமா?

தப்பு கணக்கு போட்டிருக்கின்றார் கார்த்தி சிதம்பரம். யாரை பிடித்தால் எங்கு வலிக்கும் என்பது அறியா கூட்டமா? மத்தியில் இருக்கின்றது

கனிமொழி போன்ற அரசியல் வாரிசுகள் நீதிமன்றத்தில் இருந்து விடுதலையானது போல கார்த்தி சிதம்பரமும் வரட்டும்

ஆனால் போலி என்கவுண்டர், நீதிபதி லோயா வழக்க்கின் குற்றவாளிகள் எல்லாம் கைது செய்யபடுவார்களா? என்பது பற்றி எல்லாம் யாரும் கேட்க கூடாது.