சாகர்மாலா (கடல் மாலை) நிச்சயம் வரவேற்கதக்க திட்டம்

Image may contain: sky, ocean and outdoor

இந்திய அரசு சாகர்மாலா என்றொரு திட்டத்தை அறிவித்து செயல்படுத்த இறங்கியிருக்கின்றது

அதாவது இந்திய துறைமுகங்களை எல்லாம் ஒருங்கிணைப்பது, புதிய துறைமுகங்களை உருவாக்குவது. பழைய மீன்பிடி துறைமுகம் வணிக துறைமுகங்களை இணப்பது என மாபெரும் திட்டத்தில் இறங்கியுள்ளது இந்தியா

தரையில் தங்க நாற்கர சாலை என்றொரு மாபெரும் திட்டம் வந்தபின் பயணம் எளிதாயிருக்கின்றதல்லவா?, அது வந்தபின் சரக்குகளை இன்னும் வேகமாக கொண்டு செல்லமுடிகின்றது, அப்படியே இன்னும் துறைமுக தொடர்பை வலுபடுத்தி துறைமுகங்களிலிருந்து சரக்குகளை வேகமாக கையாள இந்த திட்டம் செயல்படுத்தபடுகின்றது

இந்தியாவில் 12 துறைமுகங்களையும், 1208 தீவுகளையும் மேம்படுத்தும் மாபெரும் திட்டமிது

இதன் அடிப்படையில்தான் கன்னியாகுமரி பக்கம் அமைய உள்ள துறைமுகம் எல்லாம் வருகின்றது, சேது சமுத்திர பக்கம் இன்னும் ஆய்வுகள் நடக்கின்றன, சேது கால்வாய் திட்டத்தை இன்னும் அரசு கைவிடவில்லை

இந்த திட்டம் இந்தியாவின் வளர்ச்சிக்கும் தமிழக வளர்ச்சிக்கும் உகந்தது, இம்மாதிரி நல்ல திட்டங்கள் யாருக்கு பிடிக்காது என்றால் இந்நாடு வாழகூடாது, தமிழகம் செழிக்கவே கூடாது என்ற கொள்கை கொண்ட சிலருக்கு பிடிக்காது

அதில் சீமானுக்கும், திருமுருகனுக்கும் முதல் இடம் உண்டு

இருவரும் ஆரம்பித்தாயிற்று , இது தமிழரை அழிக்கும் திட்டம், இது தமிழக மீணவர்களை ஒழிக்கும் திட்டம் என ஏக அழிச்சாட்டியம்

கடல் என்பது வளம், கடலில்லா நாடுகள் படும் சிரமம் சொல்லி மாளாது, மங்கோலியா, நேபாளம், ஆப்கன் , துர்க்மேனிஸ்தான் போன்ற நாடுகள் 4 பக்கமும் நிழலால் சூழபட்டு உப்புக்கு கூட அடுத்த நாட்டை எதிர்பார்க்கும் துர்பாகிய நிலையில் இருக்கின்றது

இந்தியா அவ்வகையில் கொடுத்து வைத்த நாடு, திறந்த கடல் மூலம் உலகெல்லாம் நம்மால் தொடர்பு கொள்ளமுடிகின்றது, வியாபாரம் செழிக்கின்றது

இத்துறைமுக திட்டம் மூலம் இந்தியாவும் வளரும், தமிழகமும் வளரும். ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும்

வளர்ச்சி திட்டங்களை மக்கள் உரிமை பறிபோகின்றது என புறக்கணிப்பது பைத்தியகாரதனம். அப்படி வெறும் மீன்பிடி நிலையமாகவே இருந்திருந்தால் சென்னையும், மும்பையும் இப்படி வளர்ந்திருக்காது

அவை வளர்ந்ததால் மீணவர்கள் பாதிக்கபட்டுவிட்டனர் என சொல்லவும் முடியாது, அந்த பெரிய துறைமுகம் இருப்பதால் மீணவர்கள் சரக்கு ஏற்றுமதி செய்யபடுகின்றது, அந்நிய செலாவணி குவிகின்றது

சீமானும், திருமுருகனும் ஒன்றை ஆதரித்தால்தான் ஆபத்து உதாரணம் புலிகள், அவர்கள் எதிர்த்தால் சந்தேகமே இல்லை அது நல்ல திட்டமாகவே இருக்கும்

அதிலும் சீமான் அள்ளிவிடும் பொய்கள் காரி துப்பும் ரகம், இப்பொழுது அவர் சொல்லும் பொய் இலங்கை திர்கோணமலையினை சீனா 900 வருட குத்தகைக்கு எடுத்ததாம்

சீனா ஹம்பந்தோட்டாவில் இருக்கின்றதே தவிர திரிகோணமலை பக்கம் வரவில்லை, அதன் பெரும் பகுதி இந்திய கட்டுபாட்டிலே இருக்கின்றது, சைமன் இதனை எல்லாம் சொல்லமாட்டார்

இந்த பொய்யர்களை விடுங்கள், இவ்வுலகினை எடுத்துகொள்ளுங்கள் அமெரிக்கா முதல் ஜப்பான் வரை எல்லா நாடும் துறைமுகங்களாலே செழித்தன, பொருளாதார வல்லரசாயின‌

நியூயார்க் முதல் சிங்கப்பூர், ஹாங்காங், என ஏராளமான விஷயங்களை காட்ட முடியும், இங்கெல்லாம் மீன்மட்டும் பிடிப்போம் என்றிருந்தால் அவை வளர்ந்திருக்காது.

சாகர்மாலா (கடல் மாலை) நிச்சயம் வரவேற்கதக்க திட்டம், மாற்றுகருத்தில்லை, வாஜ்பாயின் தங்க நாற்கரம் போலவே, மோடியின் சாகர்மாலாவும் அருமையான திட்டம்.

இவ்வளவு பேசும் திருமுருகனும், சைமனும் எவ்வளவு பொய்யர்கள் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்லலாம்

சென்னை மெரீனா 1980 வரை மீணவர் ஆதிக்கம் நிறைந்த பகுதி, ராமசந்திரன் முதல்வரான காலத்தில் சென்னை கடற்கரையினை அழகுபடுத்த போகின்றேன் என அந்த மீணவர்களை விரட்டி அடித்தார், துப்பாக்கி சூடு எல்லாம் நடந்து பலர் மாண்டனர்

படகோட்டி, மீணவ நண்பன் போன்ற படங்களின் நாயகன் மீணவருக்கு செய்த நன்மை இதுதான்

இதுபற்றி எல்லாம் சைமன், திருமுருகன் எல்லாம் பேசுவார்களா என்றால் இல்லை, காரணம் அவர்களுக்கு கொடுக்கபட்டிருக்கும் அசைன்மென்டில் அதெல்லாம் இல்லை

இந்த பொய்யர்களை, தேசவிரோதிகளை கவனத்தில் கொண்டு விரட்டவேண்டியது தமிழக எதிர்காலத்திற்கு நல்லது

 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s