காவேரி வரவேண்டுமானால் காங்கிரஸை ஆதரியுங்கள் என்று சொல்ல ஆளில்லை…

காமராஜர் ஆட்சி இருக்கும் வரை காவேரியில் கைவைக்க ஒரு கன்னடனுக்கும் துணிச்சல் இல்லை

காவேரி வரவேண்டுமானால் காங்கிரஸை ஆதரியுங்கள் என அதிரடியாக அரசியல் செய்ய இங்கு ஒருவர் கூட இல்லை

தலைவி குஷ்பு அகில இந்திய செய்திதொடர்பாளர் என்பதால் இதில் தலையிடவில்லை என சங்கம் தமிழகத்திற்கு விளக்கமளிக்கின்றது

நிச்சயம் காவேரி பிரச்சினையில் ஏதேனும் ஆறுதல் சொல்ல, அல்லது நாங்கள் தமிழகத்தில் ஆண்ட காலத்தில் சிக்கல் இல்லை என சொல்லும் ஒரே தகுதிகொண்ட கட்சி காங்கிரஸ் மட்டும்தான்

காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் காவேரி தானாக வரும் என அட்டகாச அரசியல் அவர்கள் செய்யலாம்

ஆனால் அப்படி சொல்லத்தான் ஆளில்லை

ஒருவரும் இல்லை, இப்போது எங்கே இருக்கின்றார்கள் என்றே தெரியாது

ஆனால் தேர்தல் அறிவிக்கட்டும், ஏதும் கூட்டணி கட்சி 40 தொகுதி தருவதாக சொல்லட்டும், அப்பொழுது புற்றீசலாக பறந்து வருவார்கள்

தங்கபாலு, வசந்தகுமார், பீட்டர் அல்போன்ஸ், செல்லகுமார் என பல டஜன் கோஷ்டிகள் இருப்பது அப்பொழுதுதான் தெரியும்

இப்பொழுதெல்லாம் வரவே மாட்டார்கள்

பேசாமல் சத்தியமூர்த்தி பவன் என்பதை “மழைக்கால புற்றீசல் பவனம்” என மாற்றிவிடலாம், சத்தியமூர்த்தி பெயராவது காப்பாற்றபடும்

ராஜினாமா செய்யவா வீடு வீடாக சென்று வோட்டு வாங்கினோம் : ராஜேந்திர பாலாஜி

Image may contain: 1 person, text

ராஜினாமா செய்யவா வீடு வீடாக சென்று வோட்டு வாங்கினோம் : ராஜேந்திர பாலாஜி

அதானே, ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வாங்கி வாக்களித்துவிட்டு இப்பொழுது ராஜினாமா செய் என்றால் எப்படி செய்வார்கள்?

வாங்கிய பணத்தை வட்டியோடு முகத்தில் எறிந்துவிட்டு ராஜினாமா செய் என்றால் மகிழ்வோடு செய்வார்கள்

அதனை விட்டு சும்மா ராஜினாமா செய் என்றால் அவருக்கு கோபம் வராதா?

மிஸ்டர் ராஜேந்திர பாலாஜி, நாங்கள் வோட்டுக்கு செலவழித்த பணத்தை தந்தால் ராஜினாமா செய்ய தயார் என சொல்லுங்கள், எந்த பயல் பதில் சொல்லிவிடுகின்றான் என பார்த்துவிடுவோம்


காவேரி விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுக்க போராட்டம் தொடங்கிவிட்டது

இன்னொரு பக்கன் ஸ்டெர்லைட் போன்ற போராட்டம் முடிவின்றி தொடர்கின்றது

ஆக தமிழகம் நாசமாகிவிட்டது, பெரும் சிக்கலில் மாட்டி இருப்பதும் தெரிகின்றது

தமிழகத்தை தமிழன் ஆண்டால் எல்லாம் சரியாகும், தமிழகத்தை தமிழனே ஆளவேண்டும் என முன்பு சத்தமிட்ட ஒரு பயலையும் இப்போது காணவில்லை


 

மார்ச் 31ல் 28 வருடங்களுக்கு முன்பு இந்திய அமைதிபடை திரும்பியது

Image may contain: one or more people, flower and outdoor 

இதே மார்ச் 31ல் 28 வருடங்களுக்கு முன்பு இந்திய அமைதிபடை திரும்பியது

ஏதோ அமைதிபடை என்பது புதிதாக சென்றது அல்ல, முன்பே சென்றது, இது தெரியாமல் பலர் புலம்புவர்

அமைதிபடைக்கு முன்பே ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம். அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றால் நாடு இலங்கையில் தலையிடுவதை இந்தியா அனுமதிப்பதில்லை.

வடமராட்சியில் புலிகள் வளைக்கபட்ட பின் , அன்றே கொள்ளிவைக்க ஜெயவர்த்தனே கிளம்பிய நிலையில்தான் ஐநா அனுமதியுமின்றி ராஜிவ்காந்தி உணவு வீசி, புலிகளால் தமிழரை காக்கமுடியாது என்ற நிலை வந்தபின்பே அமைதிபடை அனுப்பபட்டது

ஈழ தமிழ்மாநில அரசின் பாதுகாவலாக அது நிற்கும் என்றே அனுப்பபட்டது

ஈழ போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் இந்தியாவினை ஒதுக்கிதான் வைத்தார், போராளிகளுக்கு பயிற்சிகள் தொடங்கிய காலத்திலும் வேண்டா வெறுப்பாக இறுதியில் வந்து சம்பிரதாயத்திற்குதான் கலந்து கொண்டனர் புலிகள். அவ்வப்போது இந்தியாவுடன் மோதும் சூழ்நிலை வரலாம் என்று எதிர்பார்த்தேதான் இருந்தார்.

அமைதிபடை சென்று இறங்கியதும் எல்லா குழுக்களும் ஆயுதம் ஒப்படைக்க, புலிகளும் சிலவற்றினை ஒப்படைத்து சுதுமலை மேடையில் “இந்தியாவினை நம்பி ஆயுதங்களை ஒப்படைக்கின்றோம்” என்றவுடன் கூட்டம் மகிழ்ச்சியில் ஆர்பரித்தது, ஆனால் பிரபாகரனின் முகம் சிலநொடி சட்டென இருண்டது,

அமைதிபடை காலம் அமைதியாகத்தான் தொடங்கியது, 17 புலிகளை சிங்களன் கைது செய்யும்போது அவர்களிடம் சயனைடு இல்லை, ஆனால் புலிகள் சென்று பார்த்துவிட்டு வந்தபின் சயனைடு வந்தது, கொஞ்சநேரத்தில் அவர்கள் சாக பிரச்சினை வெடித்தது, பழி இந்தியா மேல்.

அதன்பின் புலிகளின் வரிவசூல் ஒப்பந்தத்தால் பாதிப்படைய, தீலிபனின் உண்ணாவிரதம் தொடங்கியது, அவனை காப்பாற்ற புலிகள் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை, அவன் செத்ததும் அவன் உடலோடு மக்கள் முன் சென்று ஒரு உணர்ச்சி எழுச்சி உண்டாக்கினர்.

அதன்பின் அது போராக வெடித்தது, இந்தியபடை சுற்றுலா செல்வது போல் சென்றிருந்தது, அந்த இடங்களின் வரைபடம் கூட அவர்களிடம் இல்லை, புலிகள் தங்களுடன் மோதுவார்கள் என கனவிலும் நினைக்கவில்லை, புரியாத புது இடத்தில் அது திணறியது. புலிகளின் தாக்குதல் அகோரமாக இருந்தது, இந்திய படைக்கு புலி எது? மக்கள் எது என தெரியவில்லை. தடுமாறியது.

உதாரணம் பனை உச்சியிலிருந்து ராணுவத்தை சுடுவார்கள், ஒரு வீட்டின் உள்ளிருந்து சுட்டுவிட்டு ஓடுவார்கள், ராணுவம் உள் செல்லும், விளக்கிற்காக சுவிட்சை போட்டால் குண்டு வெடிக்கும் இப்படி ஒரு வித்தியாசமான களம் அது.

மக்கள் யார், புலிகள் யார் என இந்தியபடைக்கு தெரியாது, மருத்துவமனையில் மக்களோடு நோயாளியாக படுத்திருக்கும் புலி, தெருவில் செல்லும் ராணுவம் மீது சுட்டுவிட்டு படுத்துகொள்ளும், ராணுவம் என்ன செய்யும்? ஒரே ஒரு முறை திருப்பி தாக்கியதில் மருத்துவமனை அழிந்தது, அதனை பெரும் செய்தியாக்கினர் புலிகள்.

மாலை மக்களை ஒன்றாக அமரவைத்து சில பாதுகாப்பு விஷயங்களை சொல்வார்கள் இந்திய ராணுவத்தார், நடு கூட்டத்திலிருந்து ஒரு புலி சுடும், திரும்ப மொத்த மக்களை கொல்லவா முடியும்? ராணுவம் திணறும்.

திண்ணையில் வெற்றிலை இடிக்கும் பாட்டி ராணுவம் வீட்டை கடந்ததும், முந்தானையில் இருக்கும் ரிமோட்டை அமுக்குவார், வாகனம் சிதறும். பள்ளி மாணவிகள் உள்ளாடைகளில் தோட்டா முதலான ஆயுதம் கடத்தபடும், எப்படி சோதிக்க? சில மாணவிகள் செக்போஸ்டை கடக்கும்போது அசால்டாக புத்தக பையினை எறிவார்கள் அது வெடிக்கும், சோதனை மற்ற மாணவிகள் மீது நடக்கும், அதற்கும் இந்திய ராணுவம் கற்பழிக்கின்றது என செய்தி பரவும்.

ஒரு கட்டத்தில் தவறான தகவலை பரப்பவிட்டு 300 ராணுவத்தினரை மொத்தமாக கொன்று, அவர்கள் உடலை அம்மணமாக ஒப்படைத்தனர் புலிகள், சர்வதேச சட்டபடி அது ஒரு தேச அவமானம், இந்திய ராணுவ உச்சம் அவமானத்தால் தலைகுனிந்த நேரம் அது. அப்படி செய்திருக்க கூடாது.

எந்த நாடும் தன் நாட்டில் அந்நிய ராணுவம் இருக்க அனுமதிக்க்காது, உண்மையில் மோதி இருக்கவேண்டியது சிங்கள படை, ஆனால் தமிழ் மக்களும், இந்திய ராணுவமும் பாதுகாப்பில்லாமல் இருக்க மிக மகிழ்ச்சியாக இருந்தது சிங்கள இனம் மட்டுமே, புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து மகிழ்ந்தார் பிரேமதாச.

இதுதான் உலகின் 4ம் பெரும் ராணுவமான இந்திய ராணுவத்தை புலிகள் விரட்டிய வரலாறு, நேருக்கு நேர் எல்லாம் மோதவில்லை, இன்னொன்று இந்திய ராணுவம் அழிவுகளை குறித்து கவனமாக போராடிற்று, அப்படியும் பிரபாகரனை முடக்கிய சமயத்தில்தான் விபி சிங் படை மீட்டார்.

இதே தந்திரத்தை, அதாவது மக்களோடு மறைந்து தாக்கும் வித்தையினை 2009ல் சிங்களனிடம் காட்டிய புலிகள் மொத்தமாக வாங்கி கட்டி அழிந்தனர், யாரைபற்றியும் கவலைபடாத சிங்களம் மொத்தமாக அழித்தது.

பிரபாகரனின் உடல் கோவணத்துடன் கிடந்தது, அன்று 300 இந்திய ராணுவ வீரர் உடல்களை அம்மணமாக்கி கொடுத்த வினை, பின் அவருக்கே திரும்பியது. யுத்த களத்தில் ஒரு உச்சகட்ட அவமானம் அது. அதனால்தான் சிங்களன் அந்த படத்தினை திரும்ப திரும்ப காட்டினான்.

அந்த அமைதிபடையினை மட்டும் விரட்டியிருக்காவிட்டால், இன்று வடக்கு கிழக்கு இணைந்த ஈழ மாகாண முதல்வராக ஒரு தமிழன் இருப்பார், பின்புலத்தில் இந்தியா இருக்கும், இந்திய தளமும் அந்நாட்டில் தொடர்ந்து இருந்திருக்கும், ஈழ மக்கள் இவ்வளவு துன்பம் அடைந்திருக்கமாட்டார்கள், 25 வருட அழிவும், முள்ளிவாய்க்கால் கொடுமையும் நடந்திருக்காது.

இந்திய ராணுவம் அன்று பின் வாங்க ஒரே காரணம் புலிகளின் பிரச்சார ஊடகங்களும், சிங்கள அரசு புலிகளுக்கு கொடுத்த மகா ஒத்துழைப்புமே, இன்று வரை அது அப்படியே நிலைத்துவிட்டது, அமைதிபடை அழித்தது, கற்பழித்தது. புலிகளின் ஊடகபலம் அப்படி.

இதோ ராஜிவ் கொலை குற்றவாளி 5 புலிகள், 2 தமிழகத்தார் என்பதை 7 தமிழர்கள் என லாவகமாக மறைத்தார்கள் அல்லவா? அப்படியே தான்.

அமைதிபடை காலத்தில் 1500 இந்திய வீரர்கள் செத்தனர், பெரும்பாலும் சீக்கிய சகோதரர்கள், அவர்களுக்கு இலங்கையில் இன்றும் நினைவு மண்டபம் உண்டு, அவர்கள் பெயர் எல்லாம் பொறிக்கபட்டுள்ளன.

மக்களை முன்னிறுத்தி செய்யபடும் இடத்தில் எமது பெருமை மிக ராணுவம் தன் உயிரை இழக்குமே ஒழிய, அப்பாவிகளை கொல்லாது என்பதற்கு பெரும் அடையாளமாக அது உள்ளது, இலங்கை செல்லும் எல்லா இந்திய ராஜதந்திரிகளும் அதனை வணங்க தவறுவதே இல்லை.

நிச்சயம் கண்ணீரால் வணங்கவேண்டிய இடம் அது, இந்த புலிகளால் ஒரு நாளில் லட்சகணக்கான அப்பாவி மக்கள் சாவார்கள் என முன்னறிவித்த இடம் அது, அந்த , முள்ளிவாய்க்கால் காலத்தையும் அமைதிபடை காலத்தையும் ஒப்பிட்டு அமைதிபடை காலத்தில் இருந்த ஈழத்தவரிடம் கேட்டால் சொல்வார்கள்

“சிங்கள ராணுவம் என்பது எவ்வளவு இரக்கமில்லாத அமைப்பு என்பது எங்களுக்கு பின்னாளில்தான் விளங்கிற்று,

அப்படி பார்க்கும்பொழுது இந்திய ராணுவம் ஓரளவு பொறுமையுடந்தான் போராடிற்று, முடிந்த அளவு பொறுமை காத்தது, அழிவுகளையும் அவமானங்களையும் பொறுத்துகொண்டது.

மக்கள் அழிவுகளை பற்றி கவலை இன்றி அடித்து நொறுக்கி இருக்குமானால் புலிகளை வீழ்த்த அதற்கு 1 நாள் கூட ஆகியிருக்காத.

ஆயிரம் அர்த்தம் நிறைந்த வார்த்தை அது,

உதவ வந்த அந்த படையினை விரட்டிவிட்டு, மொத்த வன்னிமக்களையும் முள்ளிவாய்க்காலில் சிங்களனிடம் ஒப்படைத்துவிட்டு, இனபடுகொலை, வெள்ளைகொடி படுகொலை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் சொல்வதை 1500 வீரர்களையும் ஒரு தலைவனையும் இழந்து, பெரும் பழி சுமத்தபட்ட‌ இந்த பெரும் தேசம் எப்படி எடுத்துகொள்ளும்?

ஈழத்தில் என்ன பிரச்சினை என்பதற்கு முன்பு ராஜிவ்காந்தி அருமையான பதில் சொன்னார்,

“ஒரு நபர் தன் ஆயுதத்தை கீழே வைத்தால் மறுநொடி கொல்லபடுவோம் என அஞ்சுகின்றார், ஆயுதம் இல்லாமல் அவரால் வாழமுடியாது. தன் ஆளுகைகுட்பட்ட நாட்டில், காலம் வரை ஆயுத துணையோடு வாழும் முடிவில் அவர் இருக்கின்றார், அதுதான் பெரும் பிரச்சினை” ,

பின்னாளைய வரலாறு அதனை உண்மை என காட்டிற்று.

அமைதிபடை செல்லும்பொழுதே அமைதிபடை அங்கு அமைதியினை கொண்டுவராது வேறு வகையில் தீர்வு காணுங்கள் என சொன்னவர் கலைஞர், புலிகளுக்கு அவர் ஆதரவு அப்படி

புலிகளுக்காகவே அவர் அப்படி சொன்னார்.

ஈழ நாடு அடைந்தால் இங்கு திமுக சும்மா இருக்குமா? என சந்தேகபட்டது டெல்லி

ஈழநாடு அமைந்தால் திமுக 10 வருடம் தமிழக அரசியலிலே இருக்காது , காங்கிரசே ஆட்சியில் அமரட்டும் என உருக்கமாக சொன்னார் கலைஞர்

அந்த எளிய மனிதனின் சொல்லை யார் கேட்டார்கள்?

அவர் கண்டிப்பை மீறி அமைதிபடை சென்றபொழுது ராஜிவ்காந்தியுடன் கை கொடுத்து நின்றது ராமசந்திரன் அருகில் ஜெயலலிதா

பின்னால் இருந்து சிரித்தது மா.நடராசன்

அமைதிபடையின் சர்ச்சை காலத்தில் அமைதிபடை திரும்ப வரவேண்டும் என குரல் வர, அதே ராஜிவுடன் நடராஜன் ஜெயலலிதா எல்லோரும் சிரித்து கூட்டணி பேசினார்களே தவிர அமைதிபடை திரும்ப வருவது பற்றி பேசவே இல்லை, காரணம் ராஜிவ் மகிழ்ச்சி முக்கியம்

விபிசிங் ஆட்சியில் கலைஞரே அமைதிபடையினை மீண்டு வர செய்தார், அன்று பிரபாகரனை 3 நாளில் கொல்லும் அளவு அது மணலாற்றில் வளைத்திருந்தது

அமைதிபடை திரும்பியபொழுது வரவேற்கமாட்டேன் என முதலமைச்சராக இருந்த கலைஞர் சொன்னார், அது நிச்சயம் தவறு

புலிகளுக்காக இம்மாநில முதலமைச்சர் இந்திய ராணுவத்தை அப்படி அவமதிக்க கூடாது, ஆனால் கலைஞர் அந்த சவாலை எடுத்தார்

ஆனால் என்னாயிற்று

கால் நக முடிக்கு கூட கலைஞரை மதிக்கா பிரபாகரன் சென்னையில் பத்மநாபாவினை கொல்ல கலைஞர் அரசு கவிழ்ந்தது

அடுத்த 6 மாதத்தில் புலிகள் ராஜிவினை கொல்ல திமுக தடை செய்யும் அளவிற்கு சிக்கலானது நிலை

தான் செய்த தவறுகளுக்காக கண்ணீர் விட்ட கலைஞர் அத்தோடு புலிகளை கைகழுவினார்

1990 இதே தேதியில் 1500 வீரர்ர்களை இழந்து அதன் பின் ஒரு தலைவனையும் இழந்த இந்தியா 2009ல் அமைதி காத்து பழிவாங்கிற்று

அந்த அமைதிபடை திருப்பி அனுப்பட்டபொழுது அதுசாகசம் என ஆர்ர்பரித்த புலிகள், 2009ல் அது மாபெரும் தவறு என உணர்ந்தபொழுது எல்லாம் முடிந்திருந்தது

கொழும்பில் இன்றும் அமைதிபடையாக சென்று உயிர்நீத்த 1500 வீரர்களுக்கு நினைவிடம் உண்டு, அங்கு செல்லும் இந்திய அதிகாரிகள் எல்லாம் அஞ்சலி செலுத்துவார்கள்

ஆனால் அவர்கள் பிணம் வந்த சென்னைக்கும், அவர்கள் கரையேறிய சென்னை கடற்கரையிலும் ஒரு நினைவு சின்னமும் இல்லை

எம்மை பொறுத்தவரை இந்த ஜெயா, ராமசந்திரன் சமாதிகளை விட மகா முக்கியமான விஷயம்
அந்த வீரர்களுக்கு அதே மெரினாவில் ஒரு நினைவிடம் அமைக்க வேண்டும்

முடிந்தால் அந்த கல்லறைகளை அகற்றிவிட்டே அமைக்கலாம் , ஒன்றும் சிக்கல் இல்லை

நாட்டிற்காக உயிர்விட்ட வீரர்களுக்கு நாட்டு சொத்தை அபகரித்த குற்றவாளியின் கல்லறையினை இடித்துவிட்டு நினைவாலயம் அமைப்பது மிக சரியான செயலே தவிர, தவறு ஆகவே ஆகாது.

அதுவே வருங்கால சந்ததிகளுக்கு இந்தியா ஈழத்தில் எடுத்த முயற்சிகளுக்கும், அதில் உயிர்விட்ட இந்தியருக்கும் மாபெரும் சான்றாக அமையும்

தமிழகத்தில் கொலைகாரன் படத்தை பிடித்து திரியும் பதர்களின் முகத்தை கிழித்து வருங்காலத்தில் அவர்களின் வஞ்சக பொய்கள் அழிந்து போகவும் வழி செய்யும்

நிச்சயம் அந்த நினைவாலயம் அமைக்கபட்டு வருடா வருடம் இதே நாளில் வணங்கபட வேண்டும்

வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்

 

ஆடையின்றி யோகா செய்தார் ஷில்பா ஷெட்டி

Image may contain: 1 person

இரு நடிகைகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர், ஒருவர் ஆந்திர நடிகை ஸ்ரீரெட்டி என்பவர்.

அம்மணி என்ன வகை நடிகை என்பது தெரியவில்லை, ஆனால் நிறைய கசப்பான அனுபவங்களை பெற்றுவிட்டவர் என்பது மட்டும் தெரிகின்றது, என்னை பாடாய் படுத்திய தெலுங்கு திரையுலகத்தை சும்மா விடமாட்டேன் என கையில் போனுடன் கிளம்பிவிட்டார்

அதாவது சுச்சி லீக்ஸ் போல ஸ்ரீ லீக்ஸ் ஒன்று தொடங்கிவிட்டார், சில டிரையல்களுக்கே ஆடி போய் இருக்கின்றது தெலுங்கு திரையுலகம்

இன்னும் என்னவெல்லாம் அம்மணி லீக்செய்ய போகின்றாரோ என ஸ்ரீ லீக்ஸ் ஜுரத்தில் இருக்கின்றது ஆந்திரா

இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தி இருப்பவர் ஷில்பா ஷெட்டி

அம்மணி ராம்தேவின் பக்தை என்பதும், யோகா எல்லாம் செய்பவ என்பதும் உலகறிந்தது. சில மேடைகளில் அமித்ஷாவினை பார்த்த ராசியோ என்னமோ உளறிவிட்டார்

யோகா செய்வதற்கு எதற்கு ஆடை? நான் ஆடையின்றிதான் யோகா செய்வேன் என அவர் சொல்ல விஷயம் பற்றிகொண்டது

ஆடையின்றி யோகா செய்தார் ஷில்பா ஷெட்டி என விஷயம் திரிந்து பரவுகின்றது,

உலகம் சட்டென பதறிவிட்டு தொலைந்து போன வைர மோதிரத்தை தேடும் அவசரத்தில் அந்த காணொளி கிடைக்குமா என தேடிகொண்டே இருக்கின்றது..

 

அதி தீவிர ஆயுத சண்டை அமெரிக்காவிற்கு ரஷ்யாவிற்கும் தொடங்கியது

Image may contain: sky, outdoor and text

இங்கே நடக்கும் பாஜக தமிழக கட்சிகள் சண்டையினை விடுங்கள், அதி தீவிர ஆயுத சண்டை அமெரிக்காவிற்கு ரஷ்யாவிற்கும் தொடங்கியாயிற்று

மிக வேக ஏவுகனைகளை தாங்கள் தயாரித்ததாக ரஷ்யா சொல்ல, ஏவுகனையோ விமானமோ எவ்வளவு வேகம் என்றாலும் லேசர் கதிர்களால் தாக்கி அழிக்கும் நுட்பம் எங்களிடம் உண்டு என காட்டியது அமெரிக்காவின் பெண்டகன்

இப்படி பெண்டகன் அறிவித்த இரு நாட்களில் தன் மாபெரும் ஆயுதமான சாத்தானை அறிமுகபடுத்திவிட்டது ரஷ்யா

ஆம் சர்மாட் ரக ஏவுகனைகளை மேம்படுத்தி சாத்தான் வெர்சன் 2 என அட்டகாசமாக மிரட்டுகின்றது ரஷ்யா

சாத்தான் என்ன செய்யும்?

200 டன் எடையுள்ள ஆயுதங்களை சுமந்து கொண்டு உலகின் எந்த மூலையினையும் வேகமாக சென்று தாக்கும் திறன் கொண்டது

உண்மையில் இது மிகபெரிய எடை, மற்ற நாட்டு ஏவுகனைகள் கொண்டுசெல்லும் எடையினை விட இது மகா மகா அதிகம்

இதனை புட்டீன் அறிவித்த மறுநொடி உலகம் அரண்டு கிடக்கின்றது

ஒரு முடிவோடுதான் இருக்கின்றார் புட்டீன், தொட்டுபார் என அவர் மிக தைரியமாக சண்டைக்கு தயாராக நிற்பதை கண்டு அஞ்சுகின்றது உலகம்

ரஷ்யா தன் ஆயுதத்தை மேம்படுத்தியும், அதிநவீன போர் உத்திகளையும் நடத்தியதால் என்னாயிற்று என கேட்டால் விஷயம் உண்டு

சிரியாவில் இருந்து அமெரிக்கா நடையினை கட்டும் என அறிவித்துவிட்டார் டிரம்ப். ஆம் இனி அமெரிக்க ராணுவம் வெளியேறுமாம்

நிச்சயம் வியட்நாம் யுத்தத்திற்கு பின் அமெரிக்காவிற்கு இது மாபெரும் தோல்வி, சிரியாவில் ஆட்சி கவிழ்ப்பு செய்யவந்த‌ அமெரிக்கா பயங்கர தோல்வியுடன் வெளியேறுகின்றது

ஈராக்,ஆப்கன் என வெற்றிபெற்ற அமெரிக்காவிற்கு ஏன் சிரியாவில் வெற்றிபெற முடியவில்லை

ரஷ்யா அவ்வளவு தீவிரமாக களத்தில் நின்றது, இப்பொழுது புட்டீன் அதி நவீன ஆயுதங்களை சோதிக்க தோல்வியுடன் வெளியேறுகின்றது அமெரிக்கா

சுருக்கமாக சொன்னால் ரஷ்யாவிற்கு அஞ்சி பின்வாங்கிற்று

இதற்குத்தான் உலகில் எல்லா சக்திக்கும் எதிர்சக்தி வேண்டும் என்பது அப்பொழுதுதான் சமநிலை கிடைக்கும்

ஒரு சக்திக்கு எதிர் சக்தி இல்லா நிலை இருந்தால் என்னாகும்? சந்தேகமே இல்லை தமிழக அரசியல் போலாகும்

இங்கு ஆளும் கட்சியும் குப்பை எதிர்கட்சி அதைவிட மகா மோசம், இதனால் மகா மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது தமிழ்நாடு.

 

துபாய் இளவரசி தப்பி திரிந்தது உண்மை

துபாய் அரசர் என்னதான் தன்னை முற்போக்களாராக காட்டி கொண்டாலும் இன்னும் கட்டுபெட்டிதனத்திலே இருக்கின்றார் என சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தாயிற்று

ஆம் அந்நாட்டு இளவரசிக்கு பல கட்டுபாடுகளை விதித்திருகின்றார், இளவரசியோ சிட்டுகுருவி மனநிலையில் உள்ளவர்

இது ஒரு கட்டத்தில் வீட்டு காவலாகியிருக்கின்றது

அதாவது சின்ன தம்பி குஷ்பு போல இளவரசி சிறைபட்டிருக்கின்றார், அதிலிருந்து தப்பி இளவரசி செய்ததுதான் அதிரடி

படகில் தன் நண்பர்களோடு தப்பி இந்தியா வந்திருக்கின்றார், கோவா அருகே அது பாகிஸ்தான் தீவிரவாத படகு என பிடித்த இந்தியபடை அப்பெண் சொன்னதை கேட்டு முதலில் நம்பவில்லை

சில அடையாளங்களை கண்டபின் ஐக்கிய அமீரக தூதரகத்திற்கு கொண்டு சென்றபின் உண்மை விளங்கியிருக்கின்றது

சத்தமில்லாமல் பிடிபட்ட கிளி கூண்டில் அடைபட்டாயிற்று

இது நண்பர்கள் கடத்தல், மிரட்டல் இல்லை தப்பி செல்லுதல் என பல வகைகளில் செய்தியாகின்றது

அதாவது துபாய் இளவரசி தப்பி திரிந்தது உண்மை, ஆனால் சிலர் கடத்தி சென்றனர் என்ற செய்திகளும் வருகின்றது

துபாய் அரசு மிக சிரமபட்டு செய்தியினை அடக்க மல்லுகட்டிகொண்டிருக்கின்றது

நடராஜனுக்கு பட திறப்பு விழா

நடராஜனுக்கு பட திறப்பு விழா செய்து படத்தை திறந்து அவரிம் மாபெரும் தியாகங்களை எல்லாம் பேசியிருக்கின்றார்கள்

வைரமுத்து, பாரதிராஜா முதல் நல்லகண்ணு வரை வந்து புலம்பிய எல்லோருக்கும் இருந்த ஒரே ஒற்றுமை தேவர் சாதி என்பதுதான், அங்கிள் சைமன் பாதி தேவர் என்பதால் கலந்துகொண்டிருக்கின்றார்

இந்த தேவர் சாதி வெறிக்கு பெயர் தமிழுணர்வு என நம்பிகொள்ளுங்கள்

நடராஜன் என்பவர் யார் யாரெக்கெல்லாம் படி அளந்திருக்கின்றார், எம்மாதிரி மாய அம்புகளை யார் மூலம் எல்லாம் ஏவி அரசியல் நடத்தினார் என்பது அட்டகாசமாக தெரியும் நேரமிது

இந்த துக்க விழாவிலும் தினகரனின் காமெடி குறையவில்லை, பெரும் தொழிலதிபர்கள், டாக்டர்கள், பொறியாளர்கள் எல்லாம் சசிகலாவினை கட்ட வரிசையில் நின்றார்களாம் ஆனால் நடராஜன் நல்லவர் என்பதற்காக சசிகலாவினை இவர்கள் கட்டி வைத்தார்களாம்

ஆனாலும் அந்த கல்யாணத்தை நடத்தி வைத்த மகா நல்லவர் கலைஞர் பற்றி தினகரன் ஒருவார்த்தையும் சொல்லவில்லை

ஐடி ரெய்டோ, துக்க வீடோ தினகரனின் காமெடி மட்டும் குறையவே இல்லை, மகா தமாஷான மனிதர் போலிருக்கின்றது

 

மனிதனின் விண்கலம் பூமியினை மிரட்டுவது ஒன்றும் புதிதல்ல

Image may contain: cloud and sky

உலக வல்லரசு ஆக வேண்டுமென்றால் தரையில் மட்டும் ஆக்கிரமிப்புகளை செய்தால் போதாது, விண்வெளியிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும்

இதனை முதலில் தொடங்கி வைத்தது சோவியத் ரஷ்யா, அவர்கள் விண்வெளி அறிவு பெற்றால் நிச்சயம் அமெரிக்காவினை நொறுக்குவர் என உணர்ந்த கென்னடி அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட முழு ஒத்துழைப்பு வழங்கினார்

அன்று ரஷ்யாவின் வளர்ச்சி அமெரிக்காவினை நொறுக்கும் அளவில் இருந்தது, அன்றே ஸ்டார் வார் எனப்படும் விண்வெளி யுத்ததிற்கு ரஷ்யா தயாராக இருந்தது

கென்னடி கொஞ்சமும் சளைக்காமல் சவால் விட்டு அமெரிக்க விண்வெளி துறையினை ஊக்கபடுத்தினார்.

ஆனால் அவர் இறந்தபின்பே அமெரிக்கர் நிலவுக்கு சென்றனர் எனினும் கென்னெடியின் கனவு பெரிது

இன்றுவரை விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியது இந்த இரு நாடுகளுமே

இப்படி இவர்கள் இருவரும் ஆளும் விண்வெளிக்கு நாங்களும் பட்டா போட வருவோம் என கிளம்பிய சீனா டியாங்டெங் எனும் செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பியது

அது செயற்கைகோள் என்றாலும் சோதனை முயற்சி, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியின் முதல்படி

அப்படி 2011ல் அனுப்பபட்ட அந்த கலம் ஒழுங்காக வேலை செய்தால் இந்நேரம் மனிதனை அனுப்பி இருக்கும் சீனா

ஆனால் அவர்களுக்கு எல்லாம் காப்பி அடிக்க தெரியுமே தவிர உருப்படியாக செய்ய தெரியாது என்பதால் இந்த கலம் போக்கு காட்டியது

மத்திய அரசு பழனிச்சாமியினை வைத்திருப்பது போல முதலில் ஒழுங்காக சமத்தாக இருந்த கலம் பின்பு வைகோ , நாஞ்சில் சம்பத் அளவிற்கு சென்றுவிட்டது

அதன்பின் அதனை கட்டுபடுத்த தெரியா சீனர்கள் இனி இது பூமியில் விழும் என சொல்லிவிட்டு அமைதி காத்தார்கள்

மனிதனின் விண்கலம் பூமியினை மிரட்டுவது ஒன்றும் புதிதல்ல, முன்பு அமெரிக்காவின் ஸ்கை லேப் என்பது இப்படி நாஞ்சில் சம்பத் நிலமைக்கு சென்று, பின் உலகை பயமுறுத்தி இறுதியில் கடலில் விழுந்தது

அதே காரியத்தை இந்த டியாங்டெங்கும் செய்கின்றது

ஞாயிறு காலை அது பூமியில் விழுமாம், நிச்சயம் தீபிடித்து எரியும் ஆனாலும் 9 டன் எடையுள்ள கலம் என்பதால் முழுக்க எரியாமல் சில பாகங்கள் பூமியில் விழுமாம்

அது விழும் இடத்தை கணித்தால் லண்டன் , மும்பாய், பாரிஸ் , ரோம், பாங்காங்க், என சீனாவின் பீஜிங்கும் வருகின்றது

இன்னொரு வாய்பினை கணித்தால் தென் அமெரிக்கா, தெற்கு ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என வருகின்றன‌

இதனால் இந்த ஏரியாக்கள் கொஞ்சம் பதற்றத்தில் இருக்கின்றன‌

தமிழகத்திற்கு இந்த ஆபத்து இல்லை, காரணம் இது முனிவர்களும், ரிஷிகளும் வாழ்ந்த புண்ணிய பூமி

குஷ்பு வாழும் அதிர்ஷ்ட பூமி, அதனால் இங்கு ஒரு ஆபத்தும் வராது

 

மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் திரண்டு போராட வேண்டும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 2-ல் அ.தி.மு.க. உண்ணாவிரதம் : பன்னீர் செல்வம்

இவரும் பழனிச்சாமியும் முன்பு மாதம் இருமுறை டெல்லிக்கு ஓடுவார்களாம், இப்பொழுது மட்டும் உண்ணாவிரதமாம்

ஏப்ரல் 1ல் உண்ணாவிரதம் இருந்தால் என்ன? மிக பொருத்தமாக இருக்கும்


மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் திரண்டு போராட வேண்டும் – வைகோ

இவர் எப்பொழுதும் போர், போராட்டம் என சொல்லிகொண்டே இருப்பதால் முக்கியமான பிரச்சினைக்கு இவர் அழைத்தும் தமிழகம் திரும்பிபார்க்கவில்லை


தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி- மு.க.ஸ்டாலின்

ஆமாம், அவர் கட்சி 30 எம்பிக்களும், 100 எம்.எல்.ஏக்களுடன் தமிழகத்தில் அசுரபலத்தில் இருக்கின்றது, இதில் கருப்புகொடி காட்டியவுடன் அவர் அஞ்சிவிடுவார்

அவரே தமிழகத்திற்கு கருப்புகொடிதான் காண்டிகொண்டிருகின்றார், இதில் இவர் வேறு கருப்புகொடியாம்

பழனிச்சாமி அரசுக்கு எந்த நெருக்கடியும் கொடுத்துவிட கூடாது என்பதில் ஏன் இவ்வளவு கவனமாக இருக்கின்றீர்கள் மிஸ்டர் ஸ்டாலின்?


 

 

உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்திற்கே சாதகமானது, ஆனால்….

Image may contain: one or more people, outdoor and nature

நிச்சயம் காவேரியில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்திற்கே சாதகமானது, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மிக உகந்த நேரம் இது.

ஆனால் இதற்காக போராட நல்ல தலமை இங்கு இருக்கின்றதா என்றால் இல்லை. ஆளாளுக்கு அவிழ்த்துவிட்ட மந்தை போல ஒவ்வொரு பக்கம் செல்கின்றார்களே தவிர ஒன்றும் உருப்படியில்லை

ஆளும் கட்சி பாஜகவின் அடிமை என்பதால் பழனிச்சாமி அரசு ஏதோ சொல்கின்றது, கட்டி வைக்கபட்டிருப்பவன் உறுமி என்ன பயன்? ஒன்றும் ஆகபோவதில்லை

டெல்லியில் அதிமுக எம்பிக்கள் போராட்டத்தை தலமை எற்று நடத்த யாருமில்லை, அவர்கள் செத்துவிடுவோம் என மிரட்டினாலும் யார் சொல்லி சாவீர்கள்? என பதிலுக்கு கலாய்க்கின்றார்கள்

நல்ல தமிழ் தலமை டெல்லியில் இல்லை என்பது புரிகின்றது

ராஜாஜி, அண்ணா,முத்துராமலிங்க தேவர், வைகோ, ஜெயலலிதா, முரசொலிமாறன் எல்லாம் ஒவ்வொரு காலகட்டத்தில் தமிழக முகங்களாக டெல்லியில் அறியபட்டவர்கள் இன்று சத்தமில்லை

ஆந்திர வழியில் அதாவது ஜெகமோகன் ரெட்டியும் சந்திரப்பாவும் இணைந்து ஆந்திர நலனுக்கு குரல் கொடுப்பது போல இங்கு தமிழக எம்பிக்கள் சேரவில்லை

இங்கு கனிமொழி அங்கு தம்பிதுரை இரண்டு பிரிவு. திமுகவிடம் எம்பிக்கள் இல்லை , அதிமுகவிடம் தைரியமில்லை தலமையுமில்லை

ஒரு விஷயம் உறுத்துகின்றது

இவ்விஷயத்தில் மனதறிந்து தமிழகத்திற்கு துரோகம் செய்யும் கட்சி காங்கிரஸ்

ஆம் தமிழகத்தில் சிதம்பரம் முதல் டெல்லியில் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரசார் உண்டு ஆனால் கன்னடத்தில் நடக்கும் தேர்தலுக்காக தமிழக நலனை பலிகொடுக்கின்றார்கள்.

நிச்சயமாக சொல்லலாம் இந்த சிக்கலில் ஓரளவு உதவகூடியவர்கள் காங்கிரஸில் இருக்கின்றார்கள், அவர்களால் முடியவும் செய்யும்

ஆனால் கன்னட வோட்டு வங்கி அவர்களை தடுக்கின்றது, இங்கே காங்கிரசுக்கு வோட்டு விழாதபொழுது கன்னட காங்கிரஸ் வோட்டும் பாதிக்கபட வேண்டுமா? என்பது போல் யோசிக்கின்றார்கள்

இவ்விவகாரத்தில் படுகாட்டமாக கண்டிக்க வேண்டிய கட்சி சாட்சாத் காங்கிரஸ் அடுத்து பாஜக‌

தேசிய ஆளும் கட்சி அது, நியாயத்தை அதுதான் செய்ய வேண்டும், நியாயமா?

அவர்களா செய்வார்கள்? காங்கிரஸின் கள்ள அரசியல் கணக்கு அப்படியே பிஜேபிக்கும் இருக்கின்றது.

இதில் திமுக திணறுகின்றது. தமிழக பிரதான கட்சி அது. தமிழக நலனை ஓரளவு காக்கும் கட்சி என அதனைத்தான் சொல்லமுடியும்

ஆனால் இப்பொழுதெல்லாம் அதன் நகர்வு பழனிச்சாமி அரசை காப்பது போலவே தெரிகின்றது. பழனிச்சாமி அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் திட்டம் எதுவும் ஸ்டாலினிடம் இருப்பதாக தெரியவில்லை

டெல்லியில் சொல்லபட வேண்டிய தீர்வுக்கு அகில இந்திய அளவில் ஆதரவு திரட்டமாட்டோம் சென்னைகுள்ளே முடங்கி கொண்டு கத்துவோம் என்பதெல்லாம் ஒரு முடிவினையும் ஒரு காலமும் தராது.

இந்நிலையில் திமுக என்ன செய்யலாம்?

அன்றே வழிகாட்டினார் கலைஞர், ஆம் தமிழகம் பாதிக்கபடும் பொழுது மத்தியில் இருக்கும் ஆட்சிக்கு எதிரானவர்களை திரட்டி தமிழக நியாய இந்தியா முழுக்க ஆதரவு திரட்ட வேண்டும் எனும் வழி அது

அக்கால டெசோ அதனைத்தான் செய்தது,

திமுக ஈழவிவகாரத்தில் தனித்து குரல்கொடுத்தால் எடுபடாது என்றுதான் வாஜ்பாய், ராமராவ், பரூக் அப்துல்லா, பாதல் என அன்றைய காங்கிரசுக்கு எதிரானவர்களை கொண்டு டெசோ அமைத்து ஈழதமிழருக்கு இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என இந்திய குரலை உருவாக்கினார்

ராமசந்திரன், பிரபாகரன் போன்றோரால் அது முறியடிக்கபட்டது, பிரபாகரனின் ஏகாதிபத்திய படுகொலைகளால் டெசோ இயங்கவில்லை

( இதனால்தான் பின்னாளில் முள்ளிவாய்காலில் கொடுமை நிகழ்ந்தபொழுது அகில இந்திய அளவில் ஒரு குரலும் ஆதரவில்லை , இங்கே சீமானும், நெடுமாறனும் முட்டு சந்தில் நின்று கத்தியதை கழுதை கூட கேட்கவில்லை )

இப்பொழுதும் பாஜகவிற்கு எதிரான இந்திய மாநில தலமைகளை திரட்டி “தமிழருக்கு துரோகம் செய்கின்றது பாஜக” எனும் பெரும் எதிர்ப்பினை உருவாக்கி அகில இந்திய அளவில் ஆதரவினை திரட்டலாம்

சந்திரபாபு நாயுடு, மம்தா, விஜயன் என பலரை திரட்டி அட்டகாசமாக தேசிய அளவில் பாஜக முகதிரையினை கிழிக்கலாம், நியாயகுரலை உயர்த்தலாம் அது இன்று இல்லையேல் நிச்சயம் பின்னாளில் பலனளிக்கும்

அதில் வருங்கால பாராளுமன்ற தேர்தல் கூட்டணி கணக்கும் கலந்திருக்கும், நிச்சயம் காங்கிரஸ் வராது சிக்கல் அது அல்ல‌

இங்கிருக்கும் கூடங்குளம், நெய்வேலி நிலையங்களில் எல்லாம் தயாரிக்கபடும் மின்சாரம் இந்தியா எங்கும் செல்லும்பொழுது, இங்கிருக்கும் துறைமுகம் முதல் எல்லா வருமானமும் இந்தியா முழுக்க பகிரபடும்பொழுது காவேரி மட்டும் கன்னட சொத்தா? என அகில இந்திய அளவில் கேட்டால் நிச்சயம் தமிழகத்தின் நியாயம் எல்லா இந்தியருக்கும் புரியும்

இதனை திமுகவும் செய்யபோவதில்லை, செய்யும் திட்டமுமில்லை, அங்கு இப்பொழுது கேட்பதெல்லாம் தளபதி வாழ்க, மூன்றாம் கலைஞர் வாழ்க, அண்ணியாரேஏஏஏ

ஆக அது உருப்படாது

ராமதாஸ் ஒருவர்தான் இப்போதைக்கு ஓரளவு நல்ல கருத்துக்களை வழிகளை சொல்லும் அரசியல்வாதி ஆனால் மனிதர் பாதி வழியில் கவிழ்த்துவிடுவார்

இப்படியாக பெரும் சாதகம் உச்சநீதிமன்ற தீர்ப்பில் இருந்தும் மிக நல்லதொரு வாய்ப்பு தமிழக அரசியல்வாதிகளால் வீணடிக்கபட்டு நாசமாகிகொண்டிருக்கின்றது

காவேரியின் காய்வு தொடர்கின்றது.

Image may contain: sky, bridge, outdoor and nature