உணவு சரியில்லை – கார்த்தி சிதம்பரம் புகார்…

நேற்று இரவும், இன்று காலையும் சிபிஐ அளித்த உணவு சரியில்லை – கார்த்தி சிதம்பரம் புகார்.

மனிதர் அவர் வீட்டு சமையல்காரரை உள்ளே இழுக்க நினைக்கின்றார், செட்டியார் வீட்டு சமையல்காரர் தலைமறைவாகி விடுவது நல்லது

சிரியாவில் என்ன நடக்கின்றது என்பதன் சுருக்கம் இதுதான்

சிரியாவில் என்ன நடக்கின்றது என்பதன் சுருக்கம் இதுதான்

சிரியாவில் ஆட்சியினை மாற்றலாம் என கருதி போராளிகளை உருவாக்கியது அமெரிக்கா. ஆனால் சிரியா மக்கள் அரசை எதிர்க்கவில்லை, அதிருப்தி உணரவில்லை இதனால் போராளிகளுக்கு வரவேற்பில்லை

போராளி குழுக்களில் ஒன்றான அல் நுஸ்ரா என்னவென்று நினைக்கின்றீர்கள்? அல் கைதாவின் ஒரு பிரிவு.

பின் எப்படி ஆதரவு கிடைக்கும்?

இந்நிலையில் ஐஎஸ் இயக்கத்தின் அட்டகாசம் பெருகி சிரியாவில் குழப்பம் வெடித்தது. அமெரிக்கா ராக்கா நகரில் வீசிய குண்டில் செத்த குழந்தைகள் கணக்கில்லாதவை, அதெல்லாம் பற்றி பேசமாட்டார்கள்

காரணம் அது தீவிரவாததிற்கு எதிரான போர்

இப்பொழுது சிரிய அரசு படை முன்னேறுகின்றது, கிழக்கு பகுதியினை தீவிரவாதிகளிடமிருந்து மீட்கின்றது. ஆனால் அவர்கள் புலிகள் முள்ளிவாய்க்காலில் மனித கேடயம் வைத்திருந்தது போல் வைத்திருக்கின்றார்கள் அந்த கொடூர தீவிரவாதிகள்

அறிந்து சொன்னாரோ அறியாமல் சொன்னாரோ சீமான், அதே நிலைதான் இங்கேயும்

தீவிரவாதிகளை ஒழித்து கட்ட சிரிய அரசு எடுக்கும் நடவடிக்கையில் பலர் சாகின்றனர், அந்த தீவிரவாதிகளும் மக்களை விடுவதாக இல்லை

இந்த பகுதி அமெரிக்க சவுதி ஆசிபெற்றவர்கள் கட்டுபாட்டு பகுதி என்பதால் எல்லா படங்களும் உலகிற்கு கிடைக்கின்றன‌

முன்பு அமெரிக்க படுகொலைகளை வெளியிட்ட அல் ஜசீராவும் அதற்கு அடைக்கலம் கொடுத்த கத்தாரும் எதிர்கொண்ட சிக்கல் கொஞ்சமல்ல, கத்தார் சிக்கல் வர முதல் காரணமே இதுதான்

அமெரிக்கா செய்தால் தீவிரவாதத்திற்கு எதிரான போர், ஆனால் சிரியா செய்தால் மானிட கொடூரம்

சிரியாவிற்காக அழுபவர்கள் எவனாவது அமெரிக்க படையால் கொல்லபட்ட சிரிய மக்களுக்ககாகவும், இஸ்ரேலால் கொல்லபடும் பாலஸ்தீன சிறுவர்களுக்காகவும் அழமாட்டான்

ஏமனில் சவுதியால் கொல்லபடும் சிறுவர்களுக்காக அழமாட்டான்

மாறாக அமெரிக்க பிடி சிரியாவில் சரியும்பொழுது மட்டும் அழுவான் அல்லது அழவைகபடுவான்

ஏனெனில் சிரியா செய்தால் “மானிட படுகொலை” மற்றபடி அமெரிக்கா, துருக்கி, சவுதி எல்லாம் செய்தால் அது “போர்”

 
 
LikeShow More Reactions

Comment

Comments
 
 
 
 

அராபத் பற்றி ஒரு வார்த்தை சொல்வாரா , அங்கிள் ?

எங்கள் நிலை இன்னொரு இனத்திற்கு வேண்டாம்; சிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான்

இப்பொழுது இந்திய தமிழனை யார் கொத்தாக அழித்தார்கள்?

அப்பொழுதே சொன்னோம் உலகெல்லாம் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் விசுவாசிகள் அந்தந்த நாட்டில் கொடிபிடிப்பார்கள் என்று.

பல நாட்டில் ஆரம்பித்தாயிற்று, இனி தமிழகத்திலும் தொடங்கும்

இதோ அங்கிள் வந்துவிட்டார் அல்லவா? பொறுத்து பாருங்கள் திருமுருகன் காந்தி, உதயகுமார் என வரிசையாக வருவார்கள்

வந்து ரஷ்யா தாக்குதலை நிறுத்தவேண்டும், அது காட்டுமிராண்டி நாடு என்றெல்லாம் வசனம் பேசுவார்கள்

பலரின் உண்மை முகம் தெரியும் , பல அந்நியநாட்டு கைகூலிகளை அடையாளம் காணும் நேரமிது, விட்டுவிடாதீர்கள்

(சிரியாவினை விட கொடுமையான நிலையில் இருப்பது பாலஸ்தீனம், அங்கிள் பாலஸ்தீனம் பற்றி பேசியிருப்பாரா? அங்கிள் என்றாவது பேசியிருப்பாரா?

அராபத் பற்றி ஒரு வார்த்தை சொல்வாரா?

ஆனால் சிரியா என்றவுடன் குதித்து வருகின்றாரே ஏன்?…)

காலா டீஸர்….

Image may contain: one or more people and text

அந்த டீசர் இன்று வந்தால் என்ன? நாளை வந்தால் என்ன? இருக்க போவது என்னவென்றால் ரஜினிக்கு ஒரு மாதிரி பெயிண்ட் அடித்து , ஒரு மாதிரி ஆடை உடுத்தி போராளி போல உலாவ விட்டிருப்பார் ரஞ்சித், ரஜினி ஸ்டைலாக நடப்பார், ஸ்டைலாக சிரிப்பார், பன்ஞ் டயலாக் பேசுவார் அவ்வளவுதான்

தெருவில் நடப்பார், அங்கே சுருண்டு கிடக்கும் நாயினை மிதித்து “போ போய் போராடு” என்பார், மாடு கட்டபட்டிருந்தால் “மாட்டின் குணமே போராடுவது அதை கட்டிவைக்காதே” என வசனம் பேசி அவிழ்த்துவிடுவார்,

எவனாவது மும்பை கேட் பக்கம் புறாவுக்கு இரை போட்டால் “புறாவோட குணமே தேடி இரைபொறுக்குறது அத கெடுக்காதே” என சொல்லி அந்த திணையினை கடலுக்குள் வீசுவார்

கூடவே 4 பேர் நம்பர் சிஸ்டத்தில் அடிவாங்குவார்கள், ஆங்காங்கே அம்பேத்கர் படம் தென்படும், சே படம் இருக்கும் , ரஜினி சம்பந்தமே இல்லாமல் “யாருக்கு பொறந்தா என்னடா? சுகபிரசவமாதான் பொறந்தோம்” என வடிவேலுவிடம் சொல்லும் பைத்தியம் போல ஏதாவது சொல்லிகொண்டிருப்பார்

இந்த கருப்பு உடையினை ஏற்கனவே ” கொடி பறக்குது” படத்திலே பார்த்தாயிற்று, அன்றே சகிக்கவில்லை

கபாலியில் பல இமாலய தவறுகளை செய்திருந்தார் ரஞ்சித், அதாவது தோட்ட துண்டாடல் என்பது 1960ல் நடந்தது அது 1999ல் நடந்தது போல காட்டியிருந்தார்

இன்னொன்று அக்கால மலேய தமிழர்கள் வெள்ளை ஆடை அணிவார்கள் இல்லை கோட் சூட் அணிவார்கள், ரஜினி அணிந்தது போல ஒரு மாதிரி எல்லாம் அணியமாட்டார்கள்

இன்னும் ஏராள சொதப்பல்கள் உண்டு, அந்நேரம் ரஞ்சித் கையில் கிடைத்தால் மலேசியரில் பலர் அடித்திருக்கலாம் அன்னார் சிக்கவில்லை

இப்பொழுது பழைய பம்பாயின் கலாச்சாரத்தை சொல்கின்றேன் என சொதப்பி இருப்பார். பம்பாய்க்காரர்கள் போட்டு சாத்தபோகின்றார்கள்

டீசர் எவ்வளவு தாமதமாக வருகின்றதோ அவ்வளவுக்கு ரஞ்சித்துக்கும், ரஜினிக்கும் நல்லது

(இந்த வயதான ரஜினிக்கு இன்னும் இளமையாக இருக்கும் குஷ்புவினை ஜோடியாக நடிக்க வைத்திருந்தாலவது டீசருக்கு தமிழகத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருந்திருக்கும் அதனையும் செய்யவில்லை, இது என்று வந்தால் என்ன? வராமலே போனால்தான் என்ன?..)

 

எம்.கே. தியாகராஜ பாகவதர்

Image may contain: 1 person, standing

1940களுக்கும் 1955களுக்கும் இடைபட்ட காலங்களை ஆட்டிவைத்தவர் அவர், அன்றே அரசியலில் சினிமா கலந்திருக்குமானால் ராஜாஜி,காமராஜர் என்ற தலைவர்கள் எல்லாம் காணாமலே போயிருப்பார்கள்.

சுமார் 20 ஆண்டு காலம் தமிழகத்தை கட்டிவைத்தவர் எம்.கே. தியாகராஜ பாகவதர், தமிழ் சினிமாவின் கதல் வசூல் மன்னன். நாடக மேடையில் அவர் பாடிக் கொண்டே தோன்றும்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவார வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை.

பாமரர்களும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர்.

பிண்ணணி பாடலே படத்திற்கு பிரதானம் என்ற தொடக்க காலங்களில் தன் காந்தர்வ குரலால் திரையுலகினை கட்டியாண்ட சக்கரவர்த்தி

ஒரே சமயத்தில் நாடகம், சினிமா, இசை என்று மூன்று குதிரைகளில் ராஜ பவனி வந்த பெருமை பாகவதருக்கு

எம்.கே தியாகராஜ பாகவதர் பற்றி அவரது ரசிகர்களிடம் கேட்டால் அப்படி உருகி சொல்வார்கள்

அப்படி பெரும் கூட்டம் அவருக்கு இருந்திருக்கின்றது

அக்கால முடிதிருத்துவோருக்கும் இளைஞர்களுக்கும் வரும் தகராறே இப்படித்தான் இருக்குமாம்

“எனக்கு பாகவதர் மாதிரி முடிவெட்டணும்”

“அது அவர் முடிக்கு தான் வரும்,உங்க முடிக்கெல்லாம் வராது..சொன்னா கேளு இல்லண்ணா மொட்டை அடிச்சி விட்டுருவேன்”

இன்னும் சில வாலிபர்கள் கொஞ்சம யோசித்து அடிக்கடி முன் தலையை சுவரில் உரசிகொண்டே இருப்பார்களாம்.
காரணம் பாகவதருக்கு முன்நெற்றி வழுக்கை.

அக்கால கொண்டயிடும் (குடுமி) ஆண்களில், இவரைப்போல் கிராப் வெட்டி கிட்டதட்ட விகார‌ அலங்கோலமாகி பின் மொட்டையிட்டவர்களும் உண்டு

அக்கால எம்.ஜி.ஆர், கமலஹாசன்,இம்ரான்கான் போல இவருக்கும் எண்ணெற்ற பெண்கள் கடிதம் எழுதுவார்களாம், அவருக்காக காத்திருந்த பெண்கள் ஏராளம்.

ஒரு கலெக்டர் மகள் இவரிடம் பாடல் கற்றுகொள்ள ஏற்பாடு, முதல் நாள் பாடல் வகுப்பு முடியும் போது கலெக்டர் தலையில் இடிவிழுந்தது,
“எனக்கு பாகவதரை திருமணம் செய்து வைக்காவிட்டால் சாவுதான்” என்றாள் மகள்

உண்மையில், பாகவதரின் அந்த இமை அசைவில் இதயம் தொலைத்து, பித்துப் பிடித்து அலைந்த பெண்கள்தான் அதிகம்.

“பிராணநாதா! உம்மை நேரிலே ஒரே ஒருமுறை தரிசித்துவிட்டால் போதும். மறுநொடியே தற்கொலை செய்து கொள்ளக் கூடத் தயார்” என்கிற ரீதியில் பெண்களின் கடிதங்கள் பாகவதரை மொய்த்த நாள்கள் உண்டு

அந்த அளவிற்க்கு பார்ப்போரை வசீகரிக்கும் தோற்றமும், தெய்வீககுரலும் ஒருங்கே அமையப்பெற்ற தேவலோக மனிதனாகவே மக்களுக்கு தோன்றினார் பாகவதர்
அவருடைய ரசிகர்கள் பாகவதர் நடந்து வந்த பாதையில் உள்ள மண்ணை எடுத்துவைத்துக் கொள்வார்களாம்.

இன்னும் சில ரசிகர்கள் அவர் தொட்ட பொருட்களை முத்தமிட்டு மகிழ்வார்களாம். .

ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் ஆங்காங்கே பாகவதர் தரிசனம் கிடைத்தால் மட்டுமே ரசிகர்கள் ரயிலை செல்ல அனுமதிபபர்.அந்த அளவிற்க்கு பாகவதர் என்றால் அப்படி ஒரு மயக்கம்.ஒருசமயம் காரில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை சென்று கொண்டிருந்தபோது, ரயில்வே கிராசிங் அருகே கார் நிற்க்க நேரிட்டது.பாகவதர் காரிலிருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் அலைமோதியது.

ரயிலையே நிறுத்தி மன்மதலீலை பாடலை பாடினால் மட்டுமே ரயிலை போக அனுமதிப்போம் என்று தங்கள் ஆசையை பூர்த்தி செய்து கொண்டனர்.

வெள்ளைக்குதிரை, அதன் மேல் ஒய்யாரமாக பாகவதர். மந்தகாசப் புன்னகையோடு பவனி வர, பெண்கள் எல்லாம் வெட்கப்பட்டு ஓடுவர். அங்குள்ள ஒரு பெண்ணைப் பார்த்து பாகவதர் மன்மதனாகக் கண்ணடிக்க, அந்தப் பெண் மிரண்டு ஓடுவாள்.

இது ஹரிதாஸ் படத்தில் இடம்பெற்ற காட்சி.பார்த்து கொண்டிருக்கும் பெண்கள் சொல்லுவார்களாம் “பாகவதர பாத்து ஓடுதாபாரு நானா இருந்தா ஓடிப்போய் குதிரைமேல ஏறிருப்பேன்”

இன்னொரு படத்தில் “வதனமே சந்திரபிம்பமோ” பாடிகொண்டே 20 அடி தள்ளி நிற்கும் காதலிக்கு பறக்கும் முத்தம் கொடுப்பாராம், தியேட்டரில் ஆரவாரம் கூரை பிளக்குமாம்.. (அட பாவமே ஒரு பறக்கும் முத்தத்திற்கா…இது சன்னி லியோன் எல்லாம் தமிழில் நடிக்கும் காலமல்லவா நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் 🙂 )

பாகவதர் தங்க தட்டுலதான் சாப்டுவாராம், பன்னீர்ல வாய் கொப்பளிப்பாராம், அரேபியா செண்ட் போடுவாராம், காஷ்மீர் குங்கும பூவுல தான் தூங்குவாரம் இன்னும் பல செய்திகள் வந்துகொண்டே இருந்தது.

திரையுலகம்,நாடக உலகம்,இசை உலகம் என மூன்று உலகங்களையும் ஆண்ட, தமிழக நெஞ்சங்களை எல்லாம் கொள்ளையடித்த அவரின் வாழ்வு ஒரு கொலைவழக்கில் தலைகீழானது. (இப்பொழுதெல்லாம் கொலை செய்து தப்புவது எவ்வளவு எளிது)

நீதிமன்றமும், பிரபல வக்கீல் எத்திராஜும் (எத்திராஜ் கல்லூரி நிறுவணர்) அவர் சொத்துக்களை எல்லாம் கரைக்க, மிக பெரும் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி போல வாழ்ந்த பாகவதர், மிக பரிதாபமாக குடிக்கு அடிமையாகி திருச்சி காவேரி ஆற்று கரையோரம் 50 வயதுக்குள்ளாக அனாதையாக செத்துகிடந்தாராம்.

சினிமா கலைஞர்கள் கோடியில் புரளமுடியும் என முதலில் நிரூபித்து காட்டிய , பெரும் ரசிகர் பட்டாளமும், கிட்டதட்ட அரசனுக்கு உண்டான வாழ்வும் வாழ்ந்த பாகவதர் கல்லறை திருச்சி சங்கிலியாண்டவர்புரத்தில் அனாதையாய் இருக்கின்றது

ஒரு நொடியில் மாறுவதுதான் வாழ்க்கை

நிலாவில் இனி யாரும் கால் பதிக்கலாம், ஆனால் ஆம்ஸ்ட்ராங்கின் இடத்தை யாரும் மறைக்கமுடியாது, அப்படி ஆயிரம் ஸ்டார்கள் வந்தாலும் பாகவதருக்கு இருந்த மவுசே தனி.

காலம் பொல்லாதது, கொடுமையானது, இரக்கமில்லாதது மிககொடூரமாக எதையும் செய்யும் என்பதற்கு பாகவதர் வாழ்வு பெரும் உதாரணம், நொடிப்பொழுதில் யாரையும் கோபுரத்திலும் வைக்கும், கொண்டாட வைக்கும், ஒரே நொடியில் குப்பைமேட்டிலும் வீசும்.

அப்படி கோபுரத்தில் வாழ்ந்து,குப்பை மேட்டில் வீசபட்ட உன்னத கலைஞர்களில் ஆண்களில் பாகவதரும் பெண்களில் சாவித்திரியும் மறக்கமுடியாதவர்கள்.

அந்த பாகவதரின் இறந்த நாள் இன்று அனுசரிக்கபடுகின்றது

தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் அவர்தான். பெரும் வாழ்க்கை தத்துவத்தை அனுபவித்து சொல்லி 49 வயதிலே விடைபெற்றவரும் அவர்தான்.

இவ்வளவு மக்கள் அபிமானமிக்க நடிகர்கள் அரசியலில் இருந்து தள்ளி இருந்திருக்கின்றார்கள். அதனால் அக்கால அரசியல் நன்றாய் இருந்திருக்கின்றது,’

 

குஷ்புவிற்க்கு பிறகு நிக்கியா?

Image may contain: text

எந்த நடிகையினை பார்த்தாலும் இவர் குஷ்புவிற்கு அடுத்தவர் என எல்லோரிடமும் சொல்லி திரிவது அது. காரணம் அப்பொழுதுதான் நாயகி யாரென்று திரும்பி பார்ப்பார்களாம், என்ன படம் என நோக்குவார்களாம்

அப்படி சக்தி சிதம்பரம் என்ற காணாமல் போன இயக்குநர் ஒருவர் திரும்ப படம் எடுக்க வந்து, குஷ்புவிற்கு பின் ஸ்பெஷல் குவாலிட்டி உள்ள நடிகை நிக்கி கல்ராணி என்றாராம்

இதில் மனம் குளிர்ந்த நிக்கி சம்பளத்தை குறைத்தாரா என்பது தெரியவில்லை

இந்த சக்தி சிதம்பரம் என்பவரை சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது, ஸ்பெஷல் குவாலிட்டி, ஸ்பெஷல் அழகு உள்ள ஒரே நடிகை குஷ்பு மட்டுமே

இன்றவளவும் அவர் அப்படியே இருப்பார், இன்னும் இருப்பார்

ஏதோ குஷ்புவிடம் எல்லாம் போயிற்று என்பது போலவும் அது நிக்கியிடம் வந்துவிட்டது போலவும் பேசிகொண்டிருக்கும் சக்தி சிதம்பரத்திற்கு வன்மையான கண்டனங்கள்

குஷ்பு ஒரு நதி, நிக்கியினை பார்த்து தொலைய வேண்டியது விதி. குஷ்பு ஒரு அன்னம் நிக்கி ஒரு பக்கி என அண்ணா, டி.ஆர் ஸ்டைலில் மிக தீவிரமாக கண்டிக்கின்றோம்

கம்பனும் சொல்லமுடியாத அழகில் ஜொலிக்கும் எங்கள் தங்க தலைவியின் புகழை காரச்சேவுக்கு கைகால் முளைத்து உருகி வழிந்த மெழுகு போல் இருக்கும் நிக்கி எனும் பக்கி நடிகையா தொடர்ச்சி?

இதனை ஏற்றுகொள்ள முடியாது. சக்தி சிதம்பரம் இன்னும் 24 மணி நேரத்தில் தன் வார்த்தைகளை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்காவிட்டால் சங்கத்தின் இன்னொரு முகத்தை அவர் காண நேரிடும்

கோடான கோடி குஷ்பு ரசிகர்கள் இன்னும் 24 மணிநேரம் மட்டுமே அமைதி காப்பார்கள்

அதன் பின் நடக்கும் விஷயங்களுக்கும், இவரின் அடுத்த படம் 0 பைசா வசூல் சாதனை படைக்க போகும் விஷயத்திற்கும் “சகதி” சிதம்பரமாக மாறி இருக்கும் இவரே பொறுப்பு

சக்தி சிதம்பரத்தின் படத்தின் தயாரிப்பாளர், பைனான்சியர் யாரென தெரியவில்லை ஆனால் தயாரிப்பாளர் நல்ல வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுத்தால் இப்பொழுதே சகலத்திற்கும் தயாராக இருப்பது மிக்க நல்லது

ஸ்ரீதேவி எப்படி துபாயில் செத்து , மும்பையில் எரிக்கபடலாம்?

Image may contain: 1 person

“தமிழன் தமிழகத்தில்தான் சாக வேண்டும், தமிழச்சியான ஸ்ரீதேவி எப்படி துபாயில் செத்து , மும்பையில் எரிக்கபடலாம்?

அவள் மானமுள்ள தமிழச்சி அல்ல

மானமுள்ள தமிழன் , தமிழச்சி தமிழகத்தில்தான் சாக வேண்டும் , நல்ல தமிழன், இனத்தை விட்டு ஓடிய ஓட்டக்காரி ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த கூடாது”

—————- : நாம் தமிழர் தும்பிகள்

நமக்கு கைதட்டும் போதே யோசிக்கனும் இவனுக ஒரு மாதிரின்னு, இப்படி எல்லாம் பேசி தொலைச்சா இவனுகள வச்சி என்ன செய்ய?

டேய் இப்படி எல்லாம் பேச கூடாதுடா கொன்னுருவாங்க, சொன்னா கேளுங்கடா.. முடியலடா

 
%d bloggers like this: