பெண் உரிமை பற்றி கமல்ஹாசன் கூட்டம் போடுகின்றார்

மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தில் சென்னையில் கூட்டம் நடத்துகின்றார் கமலஹாசன்

பெண் உரிமை பற்றி கமல்ஹாசன் கூட்டம் போடுகின்றார் என்பது இந்த நூற்றாண்டின் பெரும் காமெடியாக இருக்கலாம்

கூட்டத்தின் முதல் வரிசையில் வாணி கணபதி, சரிகா, கவுதமி போன்றோரை அமரவைத்தால் அர்த்தமுள்ள கொள்கை விளக்க‌ கூட்டமாக இருக்கும்


கார்த்தி சிதம்பரம் மீதான ஊழல் குற்றசாட்டை காங்கிரஸின் மீதான ஊழலாகவே பார்க்க வேண்டும் : தமிழிசை

தமிழிசை என்பவர் ஒருமாதிரி என்பதால் மொத்த பாஜகவும் அப்படித்தான் என இனி மக்கள் பார்க்க வேண்டும் என அக்கா சொல்கின்றார்


 

  கபாலி படத்தால் பாதிக்கபட்ட விநியோகிஸ்தர் நஷ்ட ஈடு கோரி மனு

கபாலி படத்தால் பாதிக்கபட்ட விநியோகிஸ்தர் நஷ்ட ஈடு கோரி மனு

கபாலி வெற்றிபடம் என சொல்லிகொண்டிருந்தவன் எல்லாம் இப்பொழுது சத்தமே காட்டமாட்டான்.

கபாலியால் பாதிக்கபட்ட பலர் இருப்பார்கள் போலிருக்கின்றது, இனி இந்த காலா பட வெளியீடு நெருங்க நெருங்க படை திரண்டு வருவார்கள் போலிருக்கின்றது

காலா படம் வருவதற்குள் ரஜினியினை கால் தனியாக கை தனியாக பிய்க்கும் முடிவில் பலர் தீவிரமாக இருப்பது தெரிகின்றது

லதாவிற்கு மட்டுமல்ல, ரஜினிக்கும் சோதனையான காலம்.

தஞ்சை பெரிய கோவிலின் சிலைகளை காணவில்லையாம்

தஞ்சை பெரிய கோவிலின் சிலைகளை காணவில்லையாம்

தமிழகத்தில் நிகழும் கொடுமைகளில் மாபெரும் கொடுமை இதுதான். தஞ்சை ஆலயம் தமிழரின் கட்டடகலையினை, கல்லிலே தமிழன் கண்ட கலையழகை உலகெல்லாம் சொல்லிகொண்டிருக்கும் மிக பெரும் அடையாளம்

உலகமே ஒப்புகொண்டிருக்கும் விஷயம்.

அந்த புராதனமிக்க ஆலயத்தின் சிலைகள் கடத்தபட்டிருக்கின்றது என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் அது

ராஜராஜன் அதனை மாபெரும் கலைபொக்கிஷமாக படைத்தான், அவன் வாழ்வும் அதில்தான் கழிந்தது

அக்கால தமிழ் மன்னர்கள் கோவிலிலே வசித்தவர்கள், இதனால்தான் தனியாக அவர்களுக்கு அரண்மனை கிடையாது. தஞ்சை ஆலயம் கூட அகழி எல்லாம் கொண்டு பாதுகாப்பு மிக்கதாகவே அமைக்கபட்டது

என்ன சாபமோ தெரியவில்லை அக்காலத்தில் இருந்தே அது ஒதுக்கியே வைக்கபட்டது. பழனி, திருச்செந்தூர் என கொண்டாடபடும் ஆலயங்கள் வரிசையில் அது இல்லை

அதனை கட்டியவன் பெயரே மறையும் அளவிற்கு அது ஒதுக்கிவைக்கபட்டது, பின்னாளைய நாயக்க, மராட்டிய மன்னர்களும் அதில் ஆர்வம் செலுத்தவில்லை

பின்பு ஜெர்மானியன் ஒருவன் தமிழ்படித்தே அதனை கட்டியது ராஜராஜன் என சொன்னான், அதன் பின்னே அதன் புகழ் பரவ தொடங்கியது

ஆனால் தமிழனின் மாபெரும் அடையாளம் அது என்பதை மறுக்க முடியாது, இடைபட்ட காலங்களில் அதன் வரலாறு தெரியாமல் போனது அவ்வளவே

மற்ற இனங்கள் குறிப்பாக ஐரோப்பிய இனம் காட்டுமிராண்டியாக இருந்த காலத்திலே கல்லில் கலைவடித்த பெருமைகுரிய தமிழனின் அடையாளம் அச்சிலை.

அம்மாதிரி சிலைகளை இப்பொழுது செய்யமுடியுமா என்றால் செய்யலாம், ஆனால் அந்த பழங்காலம் கிடைக்குமா? அச்சிலையின் பழமை கிடைக்குமா என்றால் ஆண்டவனாலும் முடியாது

அதனால்தான் அச்சிலை மேற்குலகால் அப்படி கொண்டாடபடுகின்றது

அமெரிக்கனின் வரலாறு 500 ஆண்டுகள் கூட இல்லாதது என்பதால் இம்மாதிரி சிலைகளின் அருமை அவர்களுக்கு தெரிகின்றது, நமக்கு தெரியவில்லை

மனதை கனக்க செய்யும் பெரும் அதிர்ச்சி செய்தி இதுதான்,

அன்று ஐரோப்பியர் காட்டுமிராண்டியாக அறிவற்று இருந்தபொழுது கலையின் உச்சத்தில் இருந்த தமிழகம், இன்று அவர்கள் அறிவாளிகளாக இருக்கும்பொழுது காட்டுமிராண்டி இனமாக மாறிற்று என சொல்வதை தவிர ஒன்றும் சொல்ல முடியாது

இனி இருக்கும் சிலைகளையாவது காக்க நடவடிக்கை எடுக்கபட வேண்டும், இல்லாவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து அக்கோபுரத்தையும் கடத்திவிடுவார்கள்

சொல்லமுடியாது, கல்குவாரிக்கு விற்றாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

மிக மதிப்பான ஒரு பொருள், அதன் அருமை தெரியாதவன் கையில் கிடைத்தால் பன்றிக்கு முன்பு முத்து இருப்பதை போலத்தான் ஆகும்

எத்தனையோ படையெடுப்புகள் , மாலிக்காபூர் போன்ற அட்டகாச கொள்ளையர்கள் என பல மிரட்டல்களை எல்லாம் அசால்டாக கடந்த தஞ்சை கோவில் சிலைகள், தமிழனை தமிழனே ஆளும்பொழுது கடத்தபட்டிருப்பதுதான் மகா சோகம்

 
 
LikeShow More Reactions

Comment

Comments
Soman Raja
Soman Raja அனைத்து சிலைகளும் குஜராத்தில் தனியார் அருங்காட்சியகத்தில் உள்ளதாம்

Manage

 
LikeShow More Reactions

 · Rep

இதுதான் புலனாகா ஏவுகனை தத்துவம்

Image may contain: 1 person

1985 வரை உலகில் அமெரிக்க ரஷ்ய பனிப்போர் இருந்தது. இருவருமே மகா அபயகரமான ஆயுதங்களை தயாரித்திருந்தார்கள், அவை பேரழிவு மிக்கவை

பின் சோவியத் உடைந்து ரஷ்யாவுடன் அமெரிக்கா ஆயுத ஒப்பந்தம் எல்லாம் போட்டாலும், இன்றுவரை இருவரிடம் உள்ள ஆயுத கணக்கு விவரம் முழுமையாக தெரியவில்லை

கொஞ்சகாலம் அமைதியாயிருந்த இருவரும் மறுபடி நவீன ஆயுத போட்டிக்கு வந்துவிட்டார்கள்

அதாகபட்டது மேற்கே ரஷ்ய எல்லையில் உள்ள நாடுகளை அமெரிக்கா வளைத்து ஏவுகனை உபகரணங்களை நிறுத்த முனையும் வேளையில் , கிழக்கே வடகொரியாவினை வைத்து ரஷ்யா ஆடும் ஆட்டம் எல்லோருக்கும் தெரிந்தது

இப்பொழுது புட்டீனின் அறிவிப்பு வந்து உலகை கலக்குகின்றது

ரஷ்யா பார்வைக்கோ, ரேடாருக்கோ புலப்படாத ஏவுகனைகளை தயாரித்துவிட்டது என அவர் சொல்லியிருப்பது மகா கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது

பார்வைக்கு புலனாகாது என்றால் அதிவேகம் அல்ல, மாறாக பார்க்கவே முடியாது

ஒளி ஒரு பொருளின் மீது பட்டு அது எதிரொளித்து நம் கண்ணுக்கு வந்தால் மட்டுமே அதை நாம் பார்க்க முடியும். இரவில் நாம் தடுமாறுவது இப்படித்தான்

அனுப்பும் ரேடார் அலைகள் பட்டு திரும்பிவந்தால்தான் விமானமோ, ஏவுகனையோ வருவதையோ ரேடாரால் உணரமுடியும்

தன்மீது படும் எல்லா கதிர்களையும் ஏவுகனை கிரகித்துகொண்டு திரும்பி அனுப்பாவிட்டால் யார் பார்க்கமுடியும்? எந்த ரேடார் கண்டுபிடிக்க முடியும்?

இதுதான் புலனாகா ஏவுகனை தத்துவம்

இதனை எங்கிருந்து பெற்றார்கள் என்றால் விண்வெளியில் நட்சத்திரங்கள் செத்து இறுகி கருந்துளை ஆகி தன் மீது விழும் எல்லாவற்றையும் விழுங்கி ஒளிபட்டால் கூட அதன் கதிர்களை விழுங்கி பார்க்கமுடியாமல் இருக்குமே அந்த தத்துவம்

ரஷ்யாவின் இந்த அறிவிப்பு உலகை கலக்க, ஏவுகனை தெரியாது சரி ஆனால் அதன் புகை வெளிவருமே அதை மறைப்பீர்களா என உலகம் கேட்க, எவ்வளவோ செய்யும் ரஷ்யர்கள் அதனை யோசிக்கமாட்டார்களா? என்கின்றது ரஷ்யா

அமெரிக்கா இதனை கேட்டு இது ஒப்பந்தத்திற்கு எதிரானது என்கின்றது

இப்பொழுது ஏன் ரஷ்யா திடீரென இதனை அறிவிக்க வேண்டும்?

சிரியாவில் சில நவீன ஏவுகனைகளை அமெரிக்கா சோதித்தது என்கின்றார்கள், ரேடாரில் சிக்கா ரகம் அது

சிரியாவில் நிற்கும் ரஷ்யாவிற்கு இது புலபட்டிருக்கலாம், பாம்பின் கால் பாம்பரியும்

சில நாட்களாக உலகெல்லாம் ரஷ்யா சிரியாவில் கொல்கின்றது என்ற பிரச்சாரமும் ரஷ்யாவிற்கு கோபத்தை வரவழைக்க , புட்டீன் தங்கள் பலத்தினை சொல்லிகொள்ளும் நிலைக்கு வந்திருக்கின்றது

அமெரிக்காவிடமும் அப்படி ஏவுகனைகள் இருக்கலாம் என்பது தியரி

எப்படியோ புட்டீன் அறிவித்ததும் இஸ்ரேலும் அப்படி தயாரிக்கலாம் என யோசிக்க ஆரம்பித்தாயிற்று, சீனா எப்படி காப்பியடிக்கலாம் என திட்டம் தீட்ட ஆரம்பித்தாயிற்று

நிச்சயம் இம்மாதிரி ஏவுகனைகள் பேராபத்து, அதாவது தாக்கும் பகுதியினை உணர்ந்து சம்பந்தபட்ட மக்களை காப்பாற்றகூட முடியாது

ஆளில்லா விமானம் போய் இனி பார்க்கமுடியா விமானங்களும் இதே பாணியில் வரலாம்

உலகம் இப்படிபட்ட செய்திகளை கேட்டு கலங்கிபோய் இருக்கின்றது, ஆனால் இப்படியான பார்வைக்கு தெரியா ஏவுகனை என்ன? விமானமே இந்தியாவிடம் உண்டு

ஆம், இந்திய அரசு பல ரபேல் விமானங்களை வாங்கியதாக சொல்கின்றது ஆனால் எவ்வளவு தேடிபார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது, அதோ பறக்கின்றது என சொன்னாலும் நாம் பார்க்கமுடியாது

உருப்படியாக வாங்கி வந்து நிறுத்தி பின் பறக்கவிட்டால் தானே நாமெல்லாம் பார்க்க முடியும்? இல்லாவிட்டால் எப்படி?

இனி நாங்கள் பார்வைக்கு தெரியா விமானங்களை வைத்திருக்கின்றோம், உங்கள் கண்ணுக்கு தெரியாது என இந்திய அரசு சொல்லலாம், அதனையும் பக்தர்கள் நம்பிகொள்வார்கள்.

 

இவர்கள் சாதி ஒழிப்பு போராளிகளாம்….

ரஜினியினை எல்லா சாதி இயக்குனர்களும் இயக்கி இருக்கின்றார்கள், ஆனால் அவர்கள் சாதி என்ன என்பது யாருக்கும் தெரியாது.

யாரும் இவர் எங்கள் சாதி என கொண்டாடவுமில்லை, படு மொக்கையான படங்களை ரஜினி கொடுக்கும்பொழுது குறிப்பாக பாபா கொடுதபொழுது, அவரை வறுத்தெடுத்தபொழுது எங்கள் சாதி என்பதற்காக சுரேஷ் கிருஷ்ணாவினை பழிக்கின்றார்கள் என கிளம்பவில்லை

குசேலன் வந்தபொழுது வாசுவினையும், விங்கா வந்தபொழுது கே.எஸ் ரவிகுமாரையும் கலாய்த்தால் யாரும் வந்து எங்கள் சாதி இயக்குநர் என்பதால் உனக்கு பிடிக்கவில்லை என வரிந்து கட்டவில்லை

ஆனால் பா.ரஞ்சித் என்பவருக்கு வருகின்றார்கள் அவர் சாதி எல்லோருக்கும் தெரிகின்றது

இன்றுவரை கே.எஸ் ரவிகுமார், வாசு, சுரேஷ் கிருஷ்ணா எல்லாம் என்ன சாதி என்பது யாருக்கும் தெரியாது.

ஆக நாங்கள் தலித், நாங்கள் தாழ்த்தபட்டவர் என சாதி அடையாளத்தை இழக்க விரும்பாத சமூகம் எது என்று தெரிகின்றது

கலையுலகம் சாதிக்கு அப்பாற்பட்டது, நன்றாக இருந்தால் ரசிக்க போகின்றார்கள், இல்லை என்றால் கலாய்ப்பார்கள், இதில் சாதியினை இழுப்பது என்பது பலவீனமாவர்கள் செய்யும் வேலை

தங்கள் பலவீனத்தை சாதி அடையாளத்திற்குள் ஒளிந்து மறைக்க நினைக்கின்றார்கள்.

நிச்சயம் இன்னொருவர் சொல்லி இவர்கள் சாதி தெரியபோவதில்லை அவர்களே அவர்கள் சாதியினை சொல்லி அது ஒழிந்துவிடாமல் பார்ப்பதிலும் வலுகவனமாக இருக்கின்றார்கள்.

அம்பேத்கர் படத்தை பிடித்தால் மட்டும் சாதி ஒழியுமா? இப்படி நாங்கள் தலித் தலித் என அவர்கள் சுயசாதி வளர்க்க ஆரம்பித்த பின் எப்படி சாதி ஒழியும்?

கேட்டால் இவர்கள் சாதி ஒழிப்பு போராளிகளாம்

இனிய ஹோலி நல் வாழ்த்துக்கள் !

Image may contain: flower

ஹோலிபண்டிகை பற்றி ஏராளமான காரணங்கள் உண்டு. அது ஹோலி என்றால் ஒரு வித பயிர். அது அன்றுதான் விளையும் அதனால் அக்கால விவசாயிகள் கொண்டாடிய அறுவடை விழா ஹோலியாயிற்று என்பது ஒரு கூட்டம் சொல்வது

மதவாதிகள் இரு காரணங்களை சொல்கின்றார்கள், முதலாவது கண்ணன் பூதகியினை கொன்ற நாள், இரண்டாவது இரண்யன் கதை

அதாவது கண்ணன் குழந்தையாக இருந்தபொழுது அவனை அப்பொழுதே கொன்றுவிட பூதகி என்றொரு அரக்கி வந்தாளாம். அவள் விஷப்பாலை ஊட்டி குழந்தை கண்ணணை கொல்ல முயன்றபொழுது அவள் உடலின் ரத்தத்தையும் சேர்த்து உறிந்து பிஞ்சு கண்ணன் கொன்றாராம்.

அவள் உடலில் அவ்வளவு விஷம் இருந்திருக்கின்றது,சில அரசியல்வாதிகளை போல‌

இரண்ய கசிபு கதை நமக்கெல்லாம் தெரியும். விஷேஷ வரம் பெற்று மூவுலகினை ஆண்டு நானே கடவுள் என மமதை கொண்ட அரக்கன் அவன். காலை மாலை, பஞ்ச பூதம், ஆயுதம், மனிதன், மிருகம் என எதனாலும் கொல்லமுடியாத வரத்தை பெற்றான்.

அந்த இரண்யனுக்கு ஒரு மகன் இருந்தான், அவன் பிரகலாதன் அவனை கடைசியில் காக்கவே பரந்தாமன் நரசிம்ம அவதாரமாக வந்தார்.

ஆம், அவன் இரண்யனுக்கு பிடிக்காத நாராயணனை பூஜித்து கொண்டே இருந்தான். இது பொறுக்கா இரண்யன் பல வகைகளில் அவனை பயமுறுத்தி கொல்லவும் பார்த்தான் முடியவில்லை.

இந்த பிடல் காஸ்ட்ரோ என்பவரை அமெரிக்கா எப்படி எல்லாம் கொல்லமுயன்றதோ அப்படி ஏராள முயற்சிகள்.

உலகெல்லாம் தன்னை அழிக்க ஆளில்லை என சொல்லிகொண்டிருந்த இரணியனுக்கு , அவனை அழிக்க அவன் மகனே அவன் காலடியில் உருவாகிகொண்டிருந்தான், இறைவனின் விளையாட்டு அப்படி இருந்தது.

சசிகலா கோஷ்டி பன்னீரை தொலைக்க பார்பது போல் பல முயற்சிகள், அப்பொழுதெல்லாம் பன்னீர் “நமோ” என்றவுடன் காப்பாற்றடுகின்றார் அல்லவா?

அப்படி இரண்யன் முயற்சிக்கு பொழுதெல்லாம் “நமோ நாராயணா” என்றவுடன் காப்பாற்றபட்டிருக்கின்றார்.

இரண்யனின் இன்னொரு தந்திரம் தன் 
சகோதரி ஹோலியா மூலம் பயமுறுத்துவது

இரண்யனுக்கு இருந்த அந்த சகோதரிக்கு நெருப்பால் எரிக்க முடியா சக்தி இருந்தது. அக்னி பகவான் அவளை நெருங்க மாட்டார், நெருப்பு அவளை அண்டாது

அதனால் நைசாக பிரகலாதனை மடியில் அமர வைத்த ஹோலியா பின் மிரட்டினாள் “ஒழுங்காக நாராயணனை மறந்து இரணியன் போற்றி சொல், நமோ இரணியன் என சொல் இல்லை என்றால் தீவைத்துவிடுவேன்” என அச்சுறுத்தினாள்

பிரகலாதன் அஞ்சாமம் ” ஹரி ஓம்” என்றான். தன் தொடையில் தீபற்ற வைத்தாள் தன் வரம் தன்னை காக்கும் என்றிருந்தாள்

ஆனால் அன்று என்னாயிற்றோ தெரியவில்லை, சட்டென கோபம் கொண்ட அக்னிபகவான் அவளை எரித்துவிட்டார் அந்த கரி, சாம்பல் புகையிலிருந்து வெளிவந்தான் பிரகலாதன்

(கடவுளே வரம் கொடுத்ததால் அவரால் அவனை அடக்கவும் முடியவில்லை, பின் அந்த வரத்தில் இல்லாதபடி காலையும் மாலையும் இல்லா அந்தி நேரத்தி, மனிதனும் மிருகமும் இல்லா நரசிம்ம அவதாரத்தில், ஆயுதமில்லா கை நகத்தில் அவனை கொன்றார் பரந்தாமன்)

அந்த பிரகலாதன் சாம்பலோடு வெளிவந்ததாலே இப்பண்டிகை கொண்டாடபடுகின்றது என்பதே பெரும் காரணம்

இன்னொரு காரணமும் உண்டு. அதாகபட்டது இந்த சிவபெருமானை நோக்கி மன்மதன் அம்பு வீசினானாம். அம்பு வீசியதும் சிக்க அவர் என்ன நித்தி சாமியாரா? சிவன் அல்லவா?

நெற்றிகண்ணை திறந்து அவனை எரித்துவிட்டார். மன்மதன் இல்லாவிட்டால் மானிட உலகம் எப்படி இயங்கும்? எல்லா ஆண்களும் பெண்ணாசை துறந்து சாமியாராக மாற, மானிட பிறப்பு நின்று போயிற்று

அப்படியே விட்டிருந்தால் இவ்வுலகில் யாரும் வந்திருக்க மாட்டார்கள், இவ்வுலகம் இவ்வளவு போர்களை சந்தித்திருக்காது, நாமெல்லாம் பிறந்திருக்க மாட்டோம் , இவ்வளவு சிக்கல்களை சந்திருக்கமாட்டோம்

ஆனால் கடவுள்கள் விடுவார்களா? மனிதனுக்கு சிக்கல் இருந்துகொண்டே இருக்கவேண்டும், அந்த சிக்கலில் இருந்து விடுபட தன்னை அவன் அழுது வணங்கிகொண்டே இருக்க வேண்டும், அந்த கதறலில் நாம் சிரித்துகொண்டே இருக்க வேண்டும் என்ற கொடூர எண்ணம் கொண்ட தெய்வங்கள் விடுமா? நாராயணனிடம் அழுதன‌

அவரும் சாம்பலில் இருந்து மன்மதனை உயிரோடு கொண்டுவந்தாராம். அவனும் உடனே கரும்பு வில்லில் இருந்து அம்பு விட, மறுபடி மானிடர்கள் எல்லாம் “இளமை எனும் பூங்காற்று” என பாட கிளம்பி, உலகம் மானிடரால் நிரம்ப ஆரம்பித்தாயிற்றாம், அந்த மன்மதன் உயிர்பெற்ற நாள்தான் ஹோலி பண்டிகையாம்

இப்படி பல காரணம் இருப்பினும், இரண்ய கசிபின் சகோதரி கதையே பெரும் காரணமாய் சொல்லபடுகின்றது

ஹோலி கொண்டாடும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

வழக்கமாக எந்த பண்டிகை கொண்டாடினாலும் “ஏய் ஆரிய பதர்களே, திராவிடனை/ தமிழனை ஒழித்ததை பண்டிகையாய் கொண்டாட விடுவோமா? முப்பாட்டன் வாழ்க” என கிளம்பும் அந்த கோஷ்டிகளை காணவில்லை

எந்த பண்டிகையும் மக்கள் சந்தோஷமாக‌ கொண்டாட கூடாது என்பதில் அவர்களுக்கு அவ்வளவு கவனம்.

தூங்கிவிட்டார்கள் போல, ஏற்கனவே கண்ணனை மாயோன் என சொல்லிவிட்டதால், பூதகி தமிழச்சி ஆகிவிட்டதால் அது தமிழ்பிள்ளைகளின் சண்டை ஆனதால் சிக்கல் இல்லை

(முப்பாட்டி பூதகியினை அவள் பேரன் முப்பாட்டன் மாயோன் கொன்றான் என்பதால் கொண்டாடவில்லை என விட்டுவிடலாம்..)

ஆனால் முப்பாட்டன் இரண்யன் எனும் வீரதமிழனின் சகோதரி முப்பாட்டி கோலியா எனும் வீரதமிழச்சி செத்ததை கொண்டாடுவதை எப்படி இவர்கள் அனுமதிக்கின்றார்கள்?

மானமுள்ள தமிழர்கள் எல்லோரும் என்ன ஆனார்கள்? மார்வாடி பெண்கள் ஹோலி விளையாடுவதை ரசிக்க சென்றுவிட்டார்களா?

எளிய தமிழ்பிள்ளைகள் விரைவில் முப்பாட்டி கோலியாவுக்கு அஞ்சலி செலுத்தி, மானங்கெட்ட தமிழனுக்கு எச்சரிக்கை விடுப்பார்கள் என எதிர்பார்ப்போம்

அப்படியே இனமான திராவிடர்கள், ஆரியன் கொன்ற திராவிட வீராங்கனை கோலியாவிற்கு வீரவணக்க நாள் அனுசரிப்பார்கள் எனவும் எதிர்பார்ப்போம்.

 

தலைவி குஷ்பு தமிழக மக்களை பற்றியே சிந்தித்துகொண்டிருப்பவர்

Image may contain: 1 person, smiling, close-up

நடிகர்களுக்கு சமூக பொறுப்பு வேண்டும் என்றால் எம்.ஆர் ராதா. அவருக்கு பின் யாருக்கும் இருந்ததாக தெரியவில்லை. அவர் மகள் ராதிகாவே மக்கள் விரோத விளம்பரங்களில் நடிக்கின்றது

ஆனால் தலைவி குஷ்பு தமிழக மக்களை பற்றியே சிந்தித்துகொண்டிருப்பவர்

ஆம், இன்று தொடங்கும் +2 தேர்வுக்கு வாழ்த்து தெரிவித்து மாணவ மணிகளை உற்சாகபடுத்தியிருக்கும் ஒரே கலையுலக பிரமுகர் அவர்தான்.

இனி எல்லோரும் தேர்ச்சி பெறுவார்கள், மாணவ உலகம் அவ்வளவு மகிழ்ச்சியாக தேர்வு எழுத செல்கின்றது

இப்படி தமிழக மக்களுக்கு வாழ்த்து சொன்ன தலைவி அகில இந்திய மக்களுக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்து சொல்லவும் தவறவில்லை

இப்படி ஒரு பொன்மகளை பெற தமிழகம் என்ன தவம் செய்துவிட்டதோ தெரியவிலை?

சங்கத்து சார்பாக எல்லோருக்கும் ஹோலி வாழ்த்துக்கள் அப்படியே தேர்வு எழுதும் மாணவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

தேர்வு வெற்றி தோல்வி அல்ல வாழ்க்கை.

வெற்றி பெற்றோருக்கு கலாமும் , தேர்வில் தோல்வியுற்றோருக்கு கலைஞரும் மாபெரும் வழிகாட்டிகள் என்பதை மட்டும் மனதில் வையுங்கள் என சங்கம் சொல்லிகொள்கின்றது.


ஸ்ரீதேவியும் நானும் அண்ணன்-தங்கை போல் : கமல்

கவுதமியும் இவரும் “ஒன்றுவிட்ட” பங்காளிகள் என அடுத்து சொல்வார்.


 

கார்த்தி சிதம்பரம் கைது

கார்த்தி சிதம்பரம் கைது செய்யபட்டிருக்கின்றார். எப்பொழுதுமே காங்கிரஸ் தன் மீது சாட்டபடும் ஊழல் வழக்குகளை கண்டு ஓடி ஓளியாது, நேர்மையாக விசாரிக்க ஒத்துழைப்பு கொடுக்கும்

போபர்ஸ் ஊழல் என வந்தபொழுது ராஜிவ் பதவி இழந்து, அடுத்து தான் குற்றமற்றவர் என நிரூபிக்க போராடியபொழுதுதான் கொல்லபட்டார்

தன் கூட்டணி கட்சிகள் ஊழல் செய்தன என்ற குற்றசாட்டு வந்தபொழுது கனிமொழியினை, ராசாவினை கூட அது விட்டுவைக்கவில்லை

அப்படிபட்ட காங்கிரசில் இப்பொழுது கார்த்தி சிறைக்கே சென்றிருக்கின்றார். நிச்சயம் நிரபராதியாக வெளிவருவார்

மல்லையா, நீரவ் போல அவர் ஒன்றும் ஓடிவிடவில்லை

இதில் ஒரு விஷயம் கவனிக்கதக்கது. அகில இந்திய அளவில் பல காங்கிரஸ்காரர்கள் இது உள்நோக்கம் கொண்டது என கத்திகொண்டிருக்க தமிழகத்தில் காங்கிரசார் மகா அமைதி

ஏனென்றால் கோஷ்டி தகராறு அப்படி, சிதம்பரம் கோஷ்டியினை பல கோஷ்டிகளுக்கு பிடிக்காததால் பலர் அமைதி சிலர் சிரிப்பு

குஷ்பு மட்டும் டிவிட்டரில் கண்டித்திருந்தார். அவரின் தலமைபண்பு அப்படி

மற்ற எந்த காங்கிரசாரும் ஒருவார்த்தையும் பேசியதாக தெரியவில்லை. எப்படிபட்ட மகா ஒற்றுமை?

விரைவில் சத்திய மூர்த்திபவன் கூட செங்கல் செங்கலாக பிரியலாம்.

திருப்பதி வந்து வணங்கிணார் ராஜபக்சே

Image may contain: 1 person, smiling, standing

வேட்டி சட்டை சகிதம் திருப்பதி வந்து வணங்கிவிட்டு சென்றிருக்கின்றார் ராஜபக்சே

திருப்பதி வந்து அவர் கோவிந்தா என்று சொல்லியிருந்தால் சிக்கல் இல்லை, ஆனால் அவர் ஒருமாதிரி அரசியல் பேசிவிட்டு சென்றிருக்கின்றார்

இலங்கையில் சீன ஆதிக்கம் ஒன்றும் ரகசியமல்ல, அதனை தன் பேட்டியில் பகிரங்கமாகவே இந்தியாவினை சீண்டுகின்றார் ராஜபக்சே

ஆம், ஹம்பாந்தோட்டை மேம்பாடு, சாலை மேம்பாடு என எல்லாவற்றிற்கும் இந்திய உதவியினை நாடினோம் , அவர்கள் கண்டுகொள்ளவில்லை, ஆர்வமில்லை

வேறுவழியின்றி சீனாவிடம் சென்றோம் அவர்கள் வந்தார்கள், ஹம்பாந்தோட்டாவினை 99 வருட குத்தகைக்கு சீனாவிற்கு கொடுத்துவிட்டோம்

நாங்கள் எப்போதும் இந்திய நண்பர்கள், ஆனால் இந்தியா எங்களை சந்தேகமாக பார்க்கின்றது. இன்னும் நிறைய விஷயங்கள் பேசவேண்டும் இருநாடுகளும்” என திருப்பதி வாசலில் உலக அரசியல் பேசிவிட்டார்

அவரின் பேட்டி சாதாரணம் அல்ல, அவர் இருந்த காலகட்டத்தில் இங்கு காங்கிரஸ் அரசு இருந்தது. போரினால் அழிந்த இலங்கையினை சீர்படுத்த முயன்றார் ராஜபக்சே

இந்தியா வடக்கு பகுதி மேம்பாட்டில் கவனம் செலுத்தியது, தென் இலங்கையில் போர் இல்லாததால் அழிவில்லை. ஆனால் ராஜபக்சே சாதுர்யமாக தென்னிலங்கையில் சீனாவினை நிறுத்தினார்

பின் வந்த மோடி அரசும் அதனை விரட்டமுடியாமல் திணறிற்று.

அவருக்கென்ன சொல்லிவிட்டு சென்றாயிற்று, இனி இலங்கையில் சீனாவினை நுழையவிட்டது காங்கிரசா? பாஜகவா? என்ற அடுத்த அரசியல் ஆட்டம் இங்கு ஆரம்பிக்கலாம்.

சீனாவிற்கு இடம் கொடுத்தோம் ஆமாம், எங்களை யார் என்ன செய்யமுடியும் என பகிரங்கமாக சொல்லிவிட்டு சென்றிருகின்றார் ராஜபக்சே

இதற்கு இந்திபதிலடி எப்படி இருக்குமோ தெரியாது

புலிகளை இந்தியா முழுக்க அழிக்க ஒருகாலமும் விரும்பவில்லை, காரணம் அப்படி ஒரு சக்தி இருந்தால்தான் இலங்கையினை கட்டுக்குள் வைக்க முடியும்.

இது இந்தியா, இலங்கை, பிரபாகரன் என எல்லோருக்கும் தெரியும். புலிகள் ராஜிவினை கொல்லும் அளவு சென்றது இதனால்தான். ராஜிவினை கொன்றபின்பும் இந்தியா அமைதி காத்தது இதனால்தான்

இந்த ஆட்டம் நெடுங்காலம் நடந்தது, இந்தியாவின் இந்த பலகீனத்தை பயன்படுத்தி அதனை தன் கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர் புலிகள்

நிலமையினை கவனித்த அமெரிக்காவும் சீனாவும் புலிகளை மொத்தமாய் அழிக்க உதவின‌

புலிகள் அழிந்த நிலையில் இந்தியபிடி அற்றுபோய் சீனாவினை கொண்டு நிறுத்தி இந்தியாவினை மிரட்டுகின்றது இலங்கை

ஒரு காலத்தில் போராளிகளை வளர்த்து எங்களை எப்படி எல்லாம் ஆட்டினீர்கள்? இனி சீனாவினை வைத்து நாங்கள் ஆடுவோம் என சொல்லாமல் சொல்லி செல்கின்றார் ராஜபக்சே

இனி இந்தியாவின் அடுத்த ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை காலமே சொல்லும்.

 

காலா டீசர் வந்தாயிற்று

 

காலா டீசர் வந்தாயிற்று அதில் கருப்பு என்பது உழைப்பின் வண்ணம் என சொல்லவந்துவிட்டார்கள். மிக சுறுசுறுப்பான உழைப்பாளிகளான ஜப்பானியர், சீனர் இன்னும் பல இனங்கள் கருப்பு அல்ல என்பதை மறந்துவிட்டார் டைரக்டர்

படத்தில் நிறைய கருப்பு பாத்திரங்கள் வருகின்றன, வசனங்களும் கருப்பு என்பது போலவே வருகின்றது, அவ்வளவும் கருப்பு.

முழு படத்தையும் கருப்பு பணத்தில் எடுத்திருப்பார்கள் போலிருகின்றது.

படத்து டீசர் பத்தவை.. என வார்த்தையோடு முடிகின்றது, மயிலு செத்திருக்கும் நேரம் பார்த்து “பத்தவை பத்தவை” என்பது “பத்த வச்சிட்டியே பரட்ட” எனும் காட்சியினை நினைவுபடுத்துவது இன்னொரு விஷயம்

மயிலு செத்திருக்கும் நேரமா இப்படி பத்த வைப்பார்கள்?

Image may contain: one or more people and people standingசில இந்திவார்த்தைகளும் வருகின்றன. ரஜினியினை எதிர்த்து ஊர்வலம் போக அவரின் தலைமுடி வண்ணம் சிக்காதா என எதிர்ப்பார்த்து கொண்டிருப்பவர்கள், இனி ஹிந்தி வளர்க்கும் ரஜினி ஒழிக என கிளம்பலாம், வாய்ப்பு வந்தாயிற்று

ரஜினிக்கு முதலில் தமிழே ஒழுங்காக வராது, இதில் நெல்லை தமிழ் வேறாம், பொதிகை தமிழ் மணக்கும் நெல்லை தமிழுக்கு இப்படி ஒரு சத்திய சோதனை.

“வெங்கமவன் ஒத்தையில நிக்கேன்” என்றவுடன் நமக்கு தூக்கிபோடுகின்றது, அய்யய்யோ ரஜினி வெங்கமகனா என அலறுகின்றது மனம்,

பல இயக்குநருக்கு தங்கமகனாக இருந்த ரஜினி இப்பொழுது வெங்கமகனாக மாறிவிட்டாரா?

வெங்கய்யன் மகன் என வசனகர்த்தா எழுதியிருக்கலாம்

ஆனால் ரஜினி தன் ஸ்டைலில் வெங்கமக‌ன் என சொல்லிவிட்டு செல்கின்றார், பரிதாபம்.

வெங்க என்பதற்கு நெல்லை தமிழில் அர்த்தம் என்ன என்பதைவிட தென்னக ஸ்டைலில் என்ன அர்த்தம் என்பதை சுப்பிரமணியபுரம் சசிகுமார் “அவன் ஒரு வெங்க பயடா” என அழகாக சொல்லியிருப்பார்

இருந்தாலும் நெல்லை தமிழ் புரியாத ரஜினியினை இப்படி இழுத்துவிட்டிருக்க கூடாது

இன்னும் என்னென்ன காமெடிகள் எல்லாம் இருக்குமோ தெரியவில்லை

ஒன்றுமட்டும் புரிகின்றது

ரஜினி பேசபோகும் நெல்லை தமிழும், வெங்கமவன் போன்ற ரஜினியின் பிரத்யோக நெல்லை பேச்சும் படம் முழுக்க பெரும் சிரிப்பினை கொடுக்கலாம்