சிரியா மீது குண்டு வீசி 35 பேரை கொன்றிருக்கின்றது துருக்கி

இன்று சிரியா மீது குண்டு வீசி 35 பேரை கொன்றிருக்கின்றது துருக்கி

அதாவது நாங்களும் காட்சியில் உண்டு, நாங்களும் கொல்வோம் என வந்து நிற்கின்றது, ஆனால் சிரியா காக்க கிளம்பியவர்கள் ரஷ்யாவினைத்தான் சாடிகொண்டிருக்கின்றனர்

அவர்கள் அப்படித்தான், விடுங்கள்

இப்பொழுது டிவி பார்த்தால் , கலைஞர் டிவியில் வைரமுத்து சிரியாவிற்கு அழுது அழுது கவிதை வடிக்கின்றார்

ஆபாசம் என்பது நிச்சயம் அதுதான். மகா அருவெறுப்பு.

கவிதை வடிக்க இது நேரமல்ல‌. அழவேண்டிய நேரத்தில் கவிபடிப்பவன் மனசாட்சி உள்ள கவிஞானாக இருக்க முடியாது

காவேரி பிரச்சினையில் தமிழக குழுவினை சந்திக்க பிரதமர் மறுப்பு

காவேரி பிரச்சினையில் தமிழக குழுவினை சந்திக்க பிரதமர் மறுப்பு என செய்திகள் வருகின்றன‌

மறுக்கபட்ட குழுவின் தலைவர் பழனிச்சாமி என்று கூட செய்திகள் வருகின்றன, இவர்கள் அதிமுக பிரச்சினையினை பேசவருகின்றார்களோ என பயந்த மோடி கதவினை திறக்கவே இல்லையாம்

இவர்களும் வித்தியாசமானவர்கள், மோடி இலவச ஸ்கூட்டி வழங்க வந்தபொழுது பல்லை காட்டிகொண்டே இருந்தார்களாம், இப்பொழுது அவர் டெல்லியில் கதவினை பூட்டியபின் தட்டிகொண்டிருக்கின்றார்கள்

ஆக இவர்களால் பிரதமரை பார்க்க முடியவில்லை

என்ன செய்யலாம்?

இந்திய பிரதமரை காணவில்லை, காவேரி சிக்கலை தீர்க்காமல் தலைமறைவு என உச்சநீதிமன்றத்தில் இனி ஆட்கொணர்வு மனு போடாமல் மோடியினை பார்க்க முடியாது போல‌

அப்படி ஒரு மனுகொடுத்து மோடியினை மன்றத்தில் நிறுத்தினால் அப்படியே உச்சநீதிமன்ற தீர்ப்புபற்றி சொல்லவும் வசதியாக இருக்கும்

தமிழக அரசு கதவை தட்டுவதற்கு பதிலாக, மோடியினை காணவில்லை என கோர்ட்டுக்கு செல்லலாம்

கிரஹாம் பெல் பிறந்த தினம்

Image may contain: 1 person, beard

இன்று எல்லோர் கையிலும் போன் இருக்கின்றது, பல வேலைக்காரர்கள் செய்ய வேண்டிய வேலையினை போனில் நம்மால் செய்ய முடிகின்றது

அதுவும் கணிணி யுகத்தில் பில் கட்டுவது முதல் கார் வரவழைப்பது வரை எத்தனையோ காரியங்களை செய்ய முடிகின்றது

ஆம் இன்றைய போனின் ஒவ்வொரு அப்ளிகேஷன்களும் ஒரு பூதம், அலாவுதின் விளக்கினை தேய்ப்பது போல தேய்த்துவிட்டால் வந்து ஆலம்பனா என நிற்கின்றது, சொல்லும் கட்டளைகளை திறம்பட நிறைவேற்றுகின்றது

இன்று அந்த அலாவுதீன் விளக்காக போனை நாம் கையிலே தூக்கி வைத்திருக்கின்றோம், இனி போன் இல்லா வாழ்வு நினைத்துபார்க்க முடியாத விஷயம்

இதற்கெல்லாம் அடித்தளமிட்டவர் அலெக்ஸாண்டர் கிராகம் பெல்

சுவிஸில் பிறந்து கனடாவில் வளர்ந்தார். பெரும் படிப்பில்லை ஆனால் ஆராய்ச்சி மூளை இருந்தது

அக்காலத்தில் கம்பி தந்தி முறை இருந்தது, அதில்தான் சிக்னல் மூலம் தகவல் அனுப்பினார்கள். கிரகாம் பெல்லின் ஆராய்ச்சி அதில்தான் இருந்தது

சிறந்த பியாணொ வித்வானான பெல், பியாணாவின் இசைகளை அந்த தந்தி கம்பி மூலம் செலுத்தி நீண்ட தூரம் அனுப்பினார், அப்பொழுதுதான் பேச்சுகளை அனுப்பும் யோசனை அவருக்கு வந்தது

அது அவருக்கு சுலபமாக அமையவில்லை, பெரும் தொல்விகள் எல்லாம் வந்தன. ஆனால் அதிர்ஷ்டம் மனைவி வடிவில் வந்தது

ஆம் அவரின் மனைவி காது கேளாதவர், அதற்கான சிறப்பு வகுப்புகள், கருவிகள் என அவர் தேடும்பொழுது சில அட்டகாசமான கருவிகளின் நுட்பம் கிடைத்தது

இவை எல்லாம் கலந்துதான் அவர் தொலைபேசியினை அமைத்தார் ஆனால் முதலில் தெளிவான சத்தமில்லை, கடும் உழைப்பிற்கு பின் அது சரிவந்தது

இவ்வளவு சிரமபட்டு அவர் கண்டுபிடித்த தொலைபேசிக்கு வரவேற்பில்லை, ஆம் அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கின்றது. மனிதர் சோர்ந்துவிட்டார். தன் உழைப்பெல்லாம் வீணாயிற்று என கருதி மனமொடிந்திருக்கின்றார்

பின் பிலடெல்பியாவில் ஒரு கண்காட்சியில் அவர் போனை கன்ட பிரேசில் பிரமுகர் ஒருவர்தான் அதன் பெருமையினை உலகெல்லாம் கொண்டு சென்றார், பின் உலகம் அங்கீகரித்தது

பிரான்ஸ் பெரும் தொகை கொடுத்து ஆராய்ச்சி மையம் எல்லாம் அமைத்து கொடுத்தது, பெரும் விஞ்ஞானியானார் பெல்

இன்னும் சில கருவிகளை கண்டுபிடித்தார், விமானம் உருவாக்கும் முயற்சியிலும் இறங்கினார். ஆனால் அது வெற்றி தரவில்லை

எடிசனை போலவே பெரும் ஆய்வக தொழிற்சாலையினை விட்டு செனறிருக்கின்றார் பெல். இன்றும் தகவல் தொழில்நுட்பத்தில் அதாவது ஒலியினை பரப்பிய கருவினை கண்டுபிடித்த‌ அந்த பெல்லின் உழைப்பு கணிணி காலத்திலும் தொடர்ந்து வருகின்றது

இன்று மிக பிரபலமான AT & T என்பது அவர் தொடங்கி வைத்த நிறுவணமே

அந்த மாபெரும் மனிதனான கிராகம் பெல்லுக்கு இன்று பிறந்தநாள். கைபேசியின் தாயான தொலைபேசியினை படைத்த கர்த்தா அவர்தான், அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி

மனிதர் தொலைபேசியினை கண்டுபிடித்தாலும் தன் மனைவியோடு போனில் பேசியதில்லை காரணம் அவர் மனைவிக்கு காது கேட்காது

அந்த வகையில் அவர் பாக்கியசாலி

அந்த உற்சாகத்தில்தான் இந்த ஆராய்ச்சியில் இறங்கி அவர் சாதித்திருக்கலாம். ஒருவேளை மனைவிக்கு காது கேட்கும் திறன் இருந்திருந்தால் அவர் இப்படி இறங்கியிருப்பாரா என்பது உலகில் உள்ள கணவன்மார்களுக்கெல்லாம் எழும் பெரும் கேள்வி

இன்னொன்று அவருக்கு மேனேஜர் என்பவரும் இல்லாமல் இருந்திருக்கலாம்

 
 

இயேசுபிரான் போன்ற வரிசையில் உதித்த மகான் அய்யா வைகுண்டர்

Image may contain: people standing and night

அதர்மம் தலை தூக்கும்பொழுதெல்லாம் அங்கு நான் அவதரிப்பேன் எனும் பகவானின் வாக்கு ,அது மகா அக்கிரமம் நடைபெற்ற காலங்களான திருவிதாங்கூர் பகுதிகளில் அய்யா வைகுண்டரின் அவதரிப்பால் நிறைவேறிற்று.

அவர் அவதாரம் மட்டுமல்ல, சமூக ஏற்றதாழ்வுகளை நீக்க பாடுபட்ட ஒரு போராளி, ஒரு புரட்சியாளன். ஒடுக்ககட்டமக்களின் உரிமைக்காக அஹிம்சை வழியில் பாடுபட்ட இயேசுபிரான் போன்ற வரிசையில் உதித்த மகான்.

சந்தேகமே இன்றி சொல்லலாம் உலகில் அவதரித்த அவதாரங்களில் மிக குறிப்பிட்டு சொல்லகூடிய அவதாரம் அவர். ஆனாலும் இந்து மதத்தில் அவருக்குரிய இடம் இன்னும் கிடைக்காதற்கு மிக முக்கிய காரணம், அவர் பிறந்த பகுதியும், அந்த சாதி அடையாளமும்.

இவ்வுலகில் மிக கொடுமையான விஷயங்கள் ஒன்று உண்டென்றால், எல்லாம் வல்ல உருவமற்ற மறைபொருளை வணங்க சொன்னவர்கள், அன்பே கடவுள் என்றவர்களை எல்லாம் பின் வந்தவர்கள் ஒரு மதவட்டத்திற்குள் சிக்கவைத்தார்கள்.

அப்படி இயேசுபிரான்,நபி பெருமான், புத்தர் போன்ற வரிசையில் சிக்கிகொண்டவர் தான் இந்த வைகுண்டர்.

நிச்சயம் அவர் ஒரு சாதிக்கு மட்டும் சொந்தமல்ல, தாழகிடக்கும் எல்லா ஒடுக்கபட்ட மக்களுக்கும் பொதுவானவர்.

இயேசுபிரானின் வாழ்க்கைக்கும், போதனைக்கும், அவர் கட்டிஎழுப்பிய சீடர்குழுவிற்கும் கொஞ்சமும் குறையாதது வைகுண்டரின் வாழ்க்கை.

இருவருமே உருவமற்ற கடவுளை, சமத்துவ வாழ்க்கையினை போதித்தவர்கள்.
இப்படி ஒரு அவதார மனிதன் நமது பகுதியில் வாழ்ந்ததற்காக நாமெல்லாம் நிச்சயம் பெருமைபடவேண்டும். அவரின் போதனைகள் அப்படி, சித்தாந்தம் அப்படி.

இன்றும் அவரை நம்பிய பக்தர்களுக்கு அவர் பகவான் நாராயணின் அவதாரமாய் நின்று அருள்பாலித்துகொண்டுதான் இருக்கின்றார்.

எல்லாம் வல்ல இறைவனின் தூயபோதனையினை மக்களுக்கு போதித்தவர். கலி என இந்து மக்களாலும், அந்தி கிறிஸ்து என கிறிஸ்தவர்களாலும், தஜ்வால் எனும் ஒற்றைகண்ணன் என இஸ்லாமிய மதத்திலும் சொல்லபடும் அந்த மானிட இனத்தின் வரும் கொடிய காலங்களை கலிகாலம் என முன்னறிவித்து சென்ற அந்த ஒரு எச்சரிக்கைக்காகவே அவரை ஏற்றுகொள்ளலாம்.

அவரின் அற்புதங்களை கண்டால் அவதாரம், அவரின் போராட்டங்களை கண்டால் புரட்சியாளன், அவரின் போதனைகளை கண்டால் ஞானி, அவரின் சமத்துவத்தை கண்டால் அவர் மனிதநேயர் என அவரின் பெருமைகள் சொல்லி மாளாது.

தாழகிடப்பவரை தாங்க வந்து தர்மத்தை நிலைநாட்டியவர்களில் புத்தன், இயேசுவிற்கு பின் வந்து அப்படி தாங்கியும் பிடித்து நிற்பவர் அவர்.
இன்று அய்யா வைகுண்டரின் அவதார திருவிழாவினை அவரின் பக்தர்கள் கொண்டாடுகின்றார்கள்.

“அய்யா உண்டு” எனும் சொல்லில் சகல மதத்தின் கருத்துக்களும் புதைந்து கிடக்க்கின்றன. அவரின் போதனையில் இம்மானுடம் வாழ்வாங்கு வாழ ஆயிரம் வழிகளும் இருக்கின்றன.

தென்னாட்டு மக்களுக்கு அவர் அன்புவழி முப்பாட்டன் என்பதில் என்ற சந்தேகமும் இல்லை.

ஒருவகையில் அவருக்கு இழைக்கபடும் அநீதி மிக பெரிது

அதாகபட்டது அவர் வாழ்ந்த காலத்தில், கிறிஸ்தவ மிஷினரிகள் தீவிரமாக செயல்பட்டுகொண்டிருந்தன, அவர்களுக்கு அய்யா வைகுண்டர் மிக பெரும் சவால், அவர்கள் மேலிடத்திற்கு எழுதிய கடித வரிகள் இதோ

“இந்த முத்துகுட்டி எனும் வைகுண்டர் மட்டும் வரவில்லை என்றால் இந்நேரம் தமிழகத்திலும் கேரளத்திலும் பெரும்பான்மையானவர்களை கிறிஸ்தவர்களாக்கி இருக்கலாம்

ஆனால் அவர் மகான், பெரும் அற்புதங்களை செய்கின்றார், ஆதரவற்று இருந்த இந்துமத்தினர் அவரால் எழும்பி நிற்கின்றனர், அவரை கடவுளாகவே கொண்டாடுகின்றனர், அவர் நமக்கு பெரும் சவால், என்ன செய்வதென்று புரியவில்லை”

இன்று இந்துமதத்தை மீட்போம், மிஷினரிகளை விரட்டுவோம், இந்தியா இந்துக்களின் நாடு என கூப்பாடு போடும் கும்பல் ஏதாவது அய்யா வைகுண்டர் பற்றி பேசி பார்த்திருக்கின்றீர்களா?

அமித்ஷா முதல் வடக்கத்திய மதகும்பல்கள் யாராவது சாமித்தோப்பிற்கு வந்ததாக தகவல் உண்டா?

கன்னியாகுமரியில் எங்கோ பிறந்த‌ விவேகானந்தருக்கு நினைவு மண்டபமும் கேந்திரமும் இருக்குமளவிற்கு அய்யா வைகுண்டருக்கு ஏதும் நினைவு சின்னம் உண்டா?

போலிசாமியாரின் ஆசிரமங்களிலும், காஞ்சி சாமியாரின் மடங்களில் தலைகீழாக கிடக்கும் டெல்லி அதிபதிகள் யாராவது அய்யா வைகுண்டர் தலத்திற்கு வருவார்களா?

பாபா, சாய்பாபா என இந்தியா முழுக்க முழங்குபவர்கள் கூட அய்யா வைகுண்டர் என்றால் ஒருமாதிரி தட்டி கழிப்பார்கள்,

அவரை முழுமையாக அம்மதத்தார் இந்திய அடையாளமாக ஏற்றுகொள்ளவில்லை

ஏன்? இந்துமதத்திற்கு அய்யா வைகுண்டர் என்ன செய்யவில்லை?

ஆதிசங்கரர் முதல், ராமானுஜர் வரை எல்லா அவதாரங்களும் இந்துமதத்திற்கு செய்த சேவையில் சற்றும் குறையாதது அய்யா வைகுண்டரின் சேவை

பின் ஏன் ஒதுக்குகின்றார்கள்?

அதுதான் இந்துத்வ சாதி அடையாளம், அந்த குலத்தில் பிறக்காத யாரையும் அவர்கள் கொண்டாட மாட்டார்கள், ஏன் கடவுளே தாழ்த்தபட்ட சூத்திர குலத்தில் அவதரித்தாலும் கண்டுகொள்ளமாட்டார்கள்

இந்தியாவில் இதுதான் நடந்துகொண்டிருக்கின்றது, அந்த கொடுமைக்கு அய்யா வைகுண்டரும் சிக்கிகொண்டார்

நிச்சயம் இந்தியா முழுக்க ராமன் போல, கண்ணன் போல கொண்டாடபட்டிருக்கவேண்டிய பெரும் அவதாரம் அவர், ஆனால் இந்திய சமூக அமைப்பு அதற்கு இடமளிக்கவில்லை

இதனை சொன்னால், ஏய் இந்துவிரோதி என பொங்குவார்கள். ஆனால் சிந்தித்தால் அந்த வடக்கத்திய மதகும்பலின் உண்மை முகம் விளங்கும்

இதெல்லாம் பொன்னாரும், தமிழிசையும் கேட்கவேண்டிய கேள்விகள், நாம் கேட்டு என்னாகபோகின்றது? அவர்களே காவி கொடி பிடித்து அலையும்பொழுது நமக்கென்ன?

போகட்டும்

உண்மையான இந்து அவதாரம் அவர்தான், மக்களை காத்தவரும் அவர்தான்

அதுவும் பாஞ்சாலிக்கு கண்ணன் சேலை அளித்து மானம் காத்தது போல அன்றைய திருவாங்கூர் அடிமை பெண்களின் மானம் காத்து தோள்சீலை மீட்டுகொடுத்த அவதாரம் அவர்

அவரின் போதனைகளும், கொள்கைகளும் இந்துமதத்தின் பெரும் அடையாளங்கள்

அவர் காட்டிய அன்பு வழியினை, சமத்துவ வழியினை இந்த தேசத்தில் இந்து என சொல்லிகொள்ளும் ஒவ்வொருவரும் கடைபிடிப்பார்களானால் இத்தேசம் எவ்வளவு அமைதியாக இருக்கும்

இன்று அக்காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளை ஓட விரட்டிய அந்த வைகுண்டரின் அவதார நாள். கிறிஸ்தவர்களை விரட்டுவோம், மதமாற்றத்தை தவிர்ப்போம் என்றெல்லாம் கோஷமிடும் யாராவது இந்த நன்னாளில் வாழ்த்தோ, கருத்தோ சொன்னார்களா?

செய்யமாட்டார்கள், காரணம் அவர்கள் அறிந்த இந்துமதத்தில் பகவான் நாராயணன் சூத்திரனாக பிறந்துவிட்டால் கூட அவன் ஏற்று கொள்ளமுடியாதவன்

யூதரை தவிர யாரும் கடவுளின் நபியாக வரமுடியாது என முகமது நபியினை ஏற்க மறுத்த யூதர்களுக்கும், இவர்களுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை

கவனித்துபாருங்கள், அப்படித்தான் ஒருமாதிரியாக அவரை ஒதுக்குவார்கள், அவர் புகழ் வெளிவராமல் கவனமாக பார்த்துகொள்வார்கள்

என்றாவது ஒருநாள் அவர்கள் திருந்த கூடும், அன்று அகில இந்திய அளவில் அய்யா பெரும் அடையாளம் பெறுவார்

அன்று மிக அமைதியான , சாத்வீகமான இந்துமதம் உச்சம் பெறும்

அதுவரை தென்னக மக்கள் அவரை வணங்கி அவர் வழி நடக்கட்டும், அமைதியும் தர்மமும் செழிக்கட்டும்

அவர் வழி நடக்கும் பக்தர்களுக்கு அவதார தினவிழா வாழ்த்துக்கள்.

 

வட கிழக்கு மாநிலங்கள் தேர்தல் முடிவுகள்

வடகிழக்கு மாநிலங்களுக்கு எப்பொழுதுமே இந்திய அரசு தங்களை அந்நியபடுத்துகின்றது எனும் வருத்தமும் கோபமும் உண்டு

இந்தியாவின் வலதுகை விரல் போல தொங்கிகொண்டிருக்கும் மாநிலங்கள் அவை. இதுகாலம் ஆண்ட அரசுகளால் தங்களுக்கு முன்னேற்றமில்லை என சொல்லிகொண்டிருப்பவை

அதில் உண்மையும் இல்லாமல் இல்லை

பாஜகவினை திரிபுரா இம்முறை பாஜக பக்கம் சரிந்திருகின்றது, உலகிலிருந்தே கம்யூனிசம் விடைபெறும் வேளையில் , திரிபுராவிலிருந்தும் அது விடைபெறுவது பெரிய விஷயம் அல்ல‌

எம்மை பொறுத்தவரை இத்தேர்தல் முடிவு சொல்வது ஒன்றுதான்

தேசிய கட்சிகளிடமிருந்து இன்னொரு தேசிய கட்சி ஆட்சியினை பறிந்த்திருக்கின்றது, அம்மாநில மக்கள் இந்தியர்களாகவே மனதார வாழ்கின்றார்கள் என்பது புரிகின்றது

அந்நிய சக்திகள் பல்வேறு வகையில் புகுந்து அவர்கள் மனதை மாற்ற முயன்றாலும் அவை படுதோல்வி அடைந்திருக்கின்றன என்பது மகிழ்வான விஷயம்

இது நிச்சயம் மாற்றத்தை வேண்டி அம்மக்கள் கொடுத்திருக்கும் தீர்ப்பே தவிர வேறு ஒன்றும் அல்ல‌

இதில் வாக்கு மெஷினில் தில்லு முல்லு, மோடி தில்லுமுல்லு என்பதெல்லாம் சிரியாவில் தமிழன் விமானம் பறந்து மக்களை மீட்ட கதைதான்

பாஜக வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால எந்த காரணத்திற்காக முன்பு இருந்த அரசுகளை அம்மக்கள் தூக்கி எறிந்தார்களோ அதனை கண்டறிந்து அக்குறைகளை உடனே நிவிர்த்தி செய்ய வேண்டியது பாஜகவின் கடமை

ராமன் ஆண்டால் என்ன, பரதன் ஆண்டால் என்ன? அயோத்தி நன்றாய் இருக்க வேண்டும் என்றொரு பழமொழி உண்டு

அப்படி எந்த தேசிய கட்சி ஆண்டால் என்ன? அம்மக்கள் 70 வருடமாக கேட்கும் நியாமான உரிமைகளை பெற்று நலமாய் வாழட்டும்

 
 

காவேரி விவகாரத்தில் இன்னும் நீதிகிடைத்தபாடில்லை

காவேரி விவகாரத்தில் இன்னும் நீதிகிடைத்தபாடில்லை

ஆனால் யாராவது ஒருவர், ஒரு குரல் முதல்வர் பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்றும், டெல்லி அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செயா வேண்டும் என கேட்கின்றதா?

கேட்காது

ஆனால் எங்கோ அந்நிய நாட்டில் நடந்த உள்நாட்டு சண்டைக்கும், 10 பேர் உள்ள தமிழக கிராமத்தில் குடிநீர் குழாய் உடைந்ததற்கும் கலைஞர் ராஜினாமா செய்ய வேண்டும் என முன்பு கிளம்புவார்கள்

இப்பொழுது அந்த சத்தமே இல்லை, ஆனால் நிச்சயம் வந்திருக்க வேண்டும்

ஏன் வரவில்லை?

அதிமுக முதல்வரும், எம்பிக்களும் இருந்தாலும் ஒன்றுதான் ராஜினாமா செய்தாலும் ஒன்றுதான் என நினைத்துவிட்டார்கள் போல..

சிரியா அதிபர் விமானத்தை ஓட்ட ஒரு தமிழனை நியமித்தார்

Image may contain: aeroplane and outdoorஇந்த தும்பிகளும், மங்கிகளும் கொஞ்சமும் அறிவில்லாதவை என தெரியும், இல்லாவிட்டால் அவை சைமன் பின்னால் எல்லாம் அலையாது

ஆனால் அடிப்படை அறிவு கூட இல்லாதவை என்பதும், யார் எது சொன்னாலும் கொஞ்சமும் யோசிக்காமல் அப்படியே நம்பி, அதையே ஊரெல்லாம் சொல்லி திரியும் கூட்டம் என்பதும், கொஞ்சமும் அவமானத்திற்கு வெட்கபடாத கூட்டம் என்பதும் இப்பொழுதுதான் தெரிந்தது

 

புலிகளை பற்றி அவர்கள் “ஆஆஆ ஊஊஊ” என சொல்லும்பொழுதே தெரிந்தது, இவர்களுக்கு ஒரு உண்மையும் தெரியாது என்பது. ஈழபோரை கலைஞர் நிறுத்தவில்லை என சிலர் சொன்னவுடன் இவர்கள் கலைஞரை வறுத்தெடுக்கும்பொழுதே இந்த ஆட்டுமந்தை பற்றி புரிந்தது

ஆனால் இப்படி அவமானபடும் என கொஞ்சமும் நினைக்கவில்லை

அதாவது யாரோ ஒருவர் இந்த இம்சைகளை கலாய்த்திருக்கின்றார், சிரியா கொஞ்சம் சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கமுடிவு செய்தவுடன் கனடா பிரதமர் சிரியரை காக்க வந்த கடவுள் என பொங்க, அந்த யாரோ ஒரு விவரம் தெரிந்தவர்

ஆம், சிரியா அதிபர் விமானத்தை ஓட்ட ஒரு தமிழனை நியமித்தார் அவர் சிரியாவின் கிராமத்தில் விமானத்தை இறக்கி ஆயிரம் பேரை அள்ளினார், இன்னும் 25 ஆயிரம் பேரை மீட்க ‘ஏர் டைட்டானிகா” விமானத்தோடு வருகின்றார் என பதிவிட்டார், அதில் கப்பலும் விமானமும் கலந்த கற்பனை படத்தையும் பதிவிட்டிருந்தார்

உடனே தும்பிகள் பொங்கின, “ஏஏஏ தமிழன் சிரியாவினை மீட்டுவிட்டான்” என சொல்லிவிட்டு அதனை ஷேர் எல்லாம் செய்து என்னவெல்லாமோ அட்டகாசம் செய்தன‌

சிலர் இதனை ஆங்கிலத்திலும் சீரியசாக மொழிபெயர்க்க உலகமெல்லாம் வாய்விட்டு சிரித்தது

நடந்தது என்ன?

Image may contain: sky and outdoorசிரியாவிற்கு படையினை அனுப்பிய நாடு கனடா, அவர்கள் ராணுவமும் களத்தில் உண்டு. சிரிய மக்களும் சவுதி, ஈரான் எல்லாம் அகதிகளாக செல்லமாட்டார்கல். ஐரோப்பா தான் செல்வொம் என அடம்பிடிப்பார்கள். ஐரோப்பிய நாடுகள் எல்லையினை அடைத்தாயிற்று

இதனால் கனடா கொஞ்சம் மக்களை ஏற்பதாக அறிவித்தது, ஏன் என்றால் அதுதான் அரசியல். ஒரு நாட்டின் மக்கள் தங்கள் நாட்டில் அகதிகளாக இருந்தால் அதை வைத்து சம்பந்தபட்ட நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடலாம், ஆட்டலாம்

முன்பு வங்கதேசம், ஈழம் போன்ற நாடுகளில் எல்லாம் இதனையே செய்தது இந்தியா. எல்லா பொதுநலத்திலும் சுயநலமும் உண்டு

இப்பொழுது கனடா 25 ஆயிரம் சிரிய மக்களை ஏற்றுகொள்ள முடிவு செய்தது, 180 பேர் கன்டா ராணுவ விமானம் மூலம் கனடா சென்றனர், இன்னும் 24, 800 பேர் படிபடியாக செல்வார்கள்

இதுதான் விஷயம், இதனை ஒருவர் கலாய்த்து எழுதியதை தும்பிகள் தமிழனின் திறமை பாரீர் என சீரியசாக உலகெல்லாம் சொல்லி திரிந்ததுதான் காமெடி

முதலில் “ஏர் டைட்டானிக்கா” என்றொரு விமானமே கிடையாது, சும்மா சொன்னவுடன் இவர்கள் நம்பியது காமெடி ரகம்

அதைவிட கொடுமை அவ்விமானத்தில் 25 ஆயிரம் பேரை கொண்டு செல்ல போகின்றார்கள் என்பது, இவ்வகை விமானங்கலில் ரஷ்யாவிடம் இருக்கும் அனடாவ் ரக விமானம் பெரிது, அதுவே ஆயிரம் பேருக்கு மேல் கொண்டு செல்ல முடியாது

உலக நிலவரம் இப்படி இருக்க, சிரியாவில் சிறிய ரக ராணுவ‌ விமானங்களை தவிர ஏதும் பறக்கமுடியா நிலையில் இருக்க , ஒரு தமிழன் ஏர் டைட்டானிக்கா ஒட்டி வந்தானாம், நடு ரோட்டில் இறக்கி கனடா, கனடா என டவுன்பஸ் கண்டெக்டர் போல கத்தினானாம், உடனே சிரியர்கள் ஏறினார்களாம் அவன் சட்டென்று கிளம்பி கனடா சென்றானாம்

கனடா பிரதமர் பாராட்டினாராம்

இப்படி காமெடி கதைகளையே சீரியசாக பரப்பும் கும்பல், ஈழ விவகாரங்களை எப்படி எல்லாம் நம்பிகொண்டிருக்கும்.

விஷயம் உலகெல்லாம் சந்தி சிரிக்க ஆரம்பித்துவிட்டதால் அங்கிள் சைமன் அமைதி, இல்லாவிட்டால் “என் அண்ணன் பிரபாகரன் அந்த விமானத்தில்தான் இருந்தான், இப்படி 50 ஆயிரம்பேரோடு கொழும்பில் வந்து இறங்குவான், அன்று நாமும் படையோடு கச்சதீவு கடந்து போவோம்..” என பேச ஆரம்பித்திருப்பார்.

உவரி புனித அந்தோணியார் ஆலயம் எதிரே கப்பல்மேல் விமானம் நிற்பது போல் ஒரு கட்டடம் உண்டு. அதை படமெடுத்து இதுதான் சிரிய மக்களை காக்க தமிழர்கள் அனுப்பும் கப்பலும் விமானமும் என சொன்னால் அதனையும் “தமிழனின் பெருமை பாரீர்” என சொல்ல ஒரு கூட்டம் இருக்கும் போல..

இவர்கள் இருக்கும்வரை சைமனுக்கு எப்படி அரசியல் ஆசை விடும்? விடவே விடாது.

போர் என்றால் என்ன? மக்கள் அழிவு என்றால் என்ன? அகதிகள் என்றால் என்ன? போர் விமானம் என்றால் என்ன? மீட்பு விமானம் என்றால் என்ன? அதன அளவு என்ன என கொஞ்சம் கூட தெரியா இக்கூட்டம்தான் ஈழப்போர் பற்றியும் காங்கிரசும் கலைஞரும் ஈழதமிழரை அழித்தனர் எனவும் சொல்லிகொண்டிருந்தது

அப்படியானால் உண்மை என்ன என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம்