காலத்திற்கேற்ப மாறவேண்டும் இந்த இந்திய கம்யூனிஸ்டுகள்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் தான் நலமுடன் இருப்பதாக செய்தி

மாறி மாறி கேரளாவினை காம்ரேடுகள் ஆண்டாலும் மருத்துவமனை என்றவுடன் தமிழகத்திற்குத்தான் ஓடிவர வேண்டி இருக்கின்றது

அந்த அளவு கம்யூனிஸ்ட் ஆட்சியில் மாபெரும் முன்னேற்றம் கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இருக்க்கின்றது

பின் எப்படி திரிபுராவில் வெல்லும்?, இதில் தோற்றுவிட்டோம் என ஒப்பாரி வேறு

கம்யூனிசம் என்பது எதனையும் உருப்படவிடமாட்டோம், 
எந்த திட்டத்தையும் வரவிடமாட்டோம் கொடிபிடிப்போம், வயிற்றுக்கு சோறுபோட்டு மூளையினை மழுங்கடிப்போம் என்றிருந்தால் சோவியத் முடிவுதான் வரும்

இங்கே கம்யூனிஸ்ட் அப்படித்தான் தோற்றுகொண்டிருக்கின்றது

அதில் சில மாற்றங்களை செய்த சீனா மாபெரும் சக்தியாக வளர்ந்துகொண்டிருக்கின்றது

திமுக கூட கம்யூனிச கோட்பாடு கொண்ட கட்சிதான், ஆனால் காலத்திற்கேற்ற ஆட்சி செய்ததால் இன்று தமிழகம் கேரளாவினை விட பல வழிகளில் முன்னுக்கு நிற்கின்றது

காலத்திற்கேற்ப மாறவேண்டும் என இனியாவது கம்யூனிஸ்டுகள் புரிந்துகொள்ளட்டும்

தேவி சோமசுந்தரம் அவர்களை   முகநூல் உலகம் வரவேற்கின்றது

இந்த Devisomasundaram என்பவர் திரும்ப வந்துவிட்டார், எப்படி காணாமல் போனாரோ அப்படியே வந்துவிட்டார்

அவரை முகநூல் உலகம் வரவேற்கின்றது. வாம்மா மின்னல்

இனி திராவிட சித்தாந்தம், மகளிர் உரிமை இன்னபிற விஷயங்கள் எல்லாம் கண்ணில் பட்டுகொண்டே இருக்கும்,

பல புதிய விஷயங்கள் கிடைக்கும்.அதில் தஞ்சை பகுதி பழங்கதைகள் முதல் ஏராளம் உண்டு.

தேவி தொலைந்தார் என இருந்தவர்களுக்கு எல்லாம் இப்படித்தான் சொல்ல வேண்டும்.

“சோமசுந்தரம் மகா ஒத்தையில நிக்கா, தில் இருந்தா மோதி பாருங்கல‌..”

(அப்பாடா எங்கே அந்த சீனனை பழிவாங்காமல் போய்விடுவேனோ என்ற அச்சம் இருந்தது, ம‌வனே உன் விதி ரொம்ப மோசம்டா)

ஹலோ.. யாரு ஜக்கி சாமியா?

Image may contain: 1 person, sitting and glasses

“ஹலோ.. யாரு ஜக்கி சாமியா?

உன் ஆசிரமம் திறக்க வந்தேன், இப்போ தமிழ்நாடு குழுவினை காவிரி விவகாரத்திற்கு சந்திக்கவில்லைன்னும் சிலர் சொல்லிட்டு இருக்காங்களாம்

உன்ன பிடிச்சி கூட்டிட்டி வந்தா, நான் கண்டிப்பா சந்திப்பேன்னு உறுதியா நம்பி உன்ன பார்க்க வாராங்களாம். நீ என்ன செய்ற? மவுன விரதம் 40 நாள் தியானம்னு இந்த கர்நாடாக தேர்தல் முடியிரவரைக்கும் இழுத்துரு சரியா?.”

 

தும்பிகள் சிலருக்கு ஏன் கனடா மீது பாசம் பொங்குகின்றது

இந்த தும்பிகள் இன்னும் சிலருக்கு ஏன் கனடா மீது பாசம் பொங்குகின்றது என்றால் விஷயம் ஒன்றுமல்ல‌

வெளிநாட்டில் சென்று செட்டில் ஆகும் அளவு இவர்களுக்கு கல்வி கிடையாது, பெரும் படிப்பு படிக்கும் அளவிற்கு அறிவும் கிடையாது. ஆனால் ஆசை மிக அதிகம்

மிஞ்சி போனால் வளைகுடா நாடுகளுக்கு இவர்கள் செல்லலாமே அன்றி கனடா போன்ற நாடுகள் சாத்தியமில்லை

மருத்துவம், பொறியியல், ஆராய்ச்சி என படித்து பலர் அமைதியான நாடுகளில் இருப்பது இவர்கள் கண்களை உறுத்திற்று, தாங்களும் எப்படி செல்லலாம் என யோசித்தனர்

கனடா எங்கெல்லாம் பெயர் அடிபடுகின்றது? என தூக்கினார்கள்.

சீக்கியர்களுக்கு, ஈழ தமிழருக்கு, இப்பொழுது சிரியர்களுக்கு என அடைக்கலம் கொடுப்பதில் கனடா பெயர் வரும்

இது போதாதா தும்பிகள் பிடித்துகொண்டன‌

இனி நாமும் இந்தியாவில் ரத்த களறி ஆக்கினால் அல்லது அப்படி ரத்தகளறி நடப்பது போல காட்டிகொண்டால் கப்பலில் வந்து, விமானத்தில் வந்து கனடா அள்ளிகொண்டு சென்று வாழ்வாங்கு வாழவைக்கும் என விபரீத திட்டம் ஓடுகின்றது.

இங்கு தமிழனை கொல்கின்றார்கள், தமிழனுக்கு பெரும் ஆபத்து , அவனை அணுவுலையால் கொல்கின்றார்கள், அவனுக்கு நீர் கொடுக்காமல் தாகத்தால் கொல்கின்றார்கள்,தமிழை படிக்காதே என மொழி தெரியாமல் ஆக்கி கொல்கின்றார்கள் என பெரும் கோஷம் எல்லாம் எழும்

படிப்பு இல்லை, நேர்முக தேர்வு இல்லை, விசா இம்சை இல்லை, செலவே இல்லை

ஆனால் கனடா விமானம் வந்து அள்ளி செல்லும், எவ்வளவு அழகான வாய்ப்பு விடுவார்களா?

ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா என உலகமெங்கும் ஈழதமிழர் குடியேறியது அந்த ஈழப்போரை காட்டித்தான். அங்கு அமைதி இருந்திருந்தால் இத்தனை ஈழதமிழர்கள் மேல்நாடு சென்றிருக்க முடியாது

சிரியர்கள் ஒரு செலவின்றி, படிப்புமின்றி ஜெர்மன், பிரான்ஸ், கனடா என செட்டில் கொண்டிருக்கின்றார்கள்.

இது இவர்களின் கண்களை உறுத்துகின்றதே அன்றி வேறல்ல விஷயம்

விரைவில் ஆடு அல்லது கோழி ரத்தத்தை பூசிகொண்டு, புகை வரும் அடுப்பு முன்னால் நின்று கொண்டு “#சேவ் டமில்நாட் டமில்ஸ்..ஸ்டாப் இந்தியா” என போஸ் கொடுப்பார்கள் பாருங்கள்.

நிச்சயம் செய்வார்கள்.

இந்த ஹேர் ஸ்டைல் கொண்டுவர முடியுமா?

Image may contain: 1 person, smiling, close-up

ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருது டார்க்கஸ்ட் ஹார் என்பவருக்கு வழங்கபட்டது

அந்த டார்கஸ்ட் என்பவருக்கு இந்த ஹேர் ஸ்டைல் கொண்டுவர முடியுமா? அவர் தலைகீழாக முயன்றாலும் நடக்குமா?

அப்படியானால் அந்த விருது யாருக்கு வழங்கபட்டிருக்க வேண்டும்?

இம்மாதிரி பெரும் அநீதிகள் நடப்பதாலே ஆஸ்கர் விருதுகளை நாம் புறக்கணிக்கின்றோம்


 

அடுத்த வாரிசு ….

Image may contain: 9 people, including Senathipathy M, people smiling, people standing

திமுகவின் கழுத்தை அறுத்து கொல்ல ஒருவருக்கு வாள் கொடுத்திருக்கின்றார்கள்.

அவ்வளவுதான் விஷயம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அமைக்காவிட்டால்?

தொடர்ந்து வற்புறுத்துவோம்

அப்படியும் வாரியம் அமைக்கபடாவிட்டால்

விடமாட்டோம், வற்புறுத்திகொண்டே இருப்போம்.

ஆட்சி எல்லாம் ராஜினாமா செய்யமாட்டீர்களா?

ஆட்சியில் இல்லாவிட்டால் எப்படி வற்புறுத்துவது? வாரியம் அமைக்க வற்புறுத்த ஆட்சியில் இருந்தே தீரவேண்டும். ஆட்சியில் இருப்பது வாரியம் அமைக்க வற்புறுத்த மட்டுமே என்பதை எல்லோரும் நம்பிகொள்ள வேண்டும்.


ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன், நாளை முதல் ரஜினிகாந்த் 4 நாட்கள் ஆலோசனை

5ம் நாள் அடுத்தபட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூடன் ஆலோசனை.


அங்கிள் சைமன் தும்பிகள் பூரிப்பு

“கலக்க போவது யாரு” நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றார் அங்கிள் சைமன் , தும்பிகள் பூரிப்பு

பின்னே? இவரை டிரம்பும், புட்டீனுமா அழைத்து சிரிய விவகாரம் பற்றியா பேசுவார்கள்?

சர்வதேச அணுசக்தி கமிஷன் இவரை அழைத்தா வடகொரிய அணுவுலை பற்றி பேசும்?

அங்கிள் வேறு எங்கு செல்வார்? இங்குதான் செல்வார்

ஒரு காமெடியன் காமெடி நிகழ்ச்சிக்குத்தான் செல்வார். மிக சரியாக அழைத்திருக்கின்றார்கள். இதிலென்ன ஆச்சரியம்