வெற்றி.. வெற்றி.. மாபெரும்.. வெற்றி

Image may contain: 1 person, smiling, close-up

வெற்றி.. வெற்றி.. மாபெரும்.. வெற்றி

பெரியார் சிலை உடைப்பேன் என கருத்து பதிவு செய்த எச்.ராசா என்பவர் , எழுந்த பெரும் எதிர்ப்புக்கு அஞ்சி தன் கருத்தை நீக்கி பின்வாங்கிவிட்டார்

பொங்கிய தமிழகத்தை கண்டு, அவருக்கும் கட்சி கருத்துக்கும் சம்பந்தமில்லை என தமிழிசை உட்பட பலர் கரிபூசிய பின் ராசா இப்படி பயந்து ஓடியிருக்கின்றார்

இனி அவர் தமிழகத்தை விட்டு ஓடிவிடுவது அவருக்கு நல்லது, இல்லாவிட்டால் பெரியார் சிலையில் பிடித்து கட்டி வைத்துவிடுவார்கள்

இந்த வெற்றிக்கு பெரும் காரணம், இல்லை ஒரே காரணம் எங்கள் தங்க தலைவி

ஆம், அவர்தான் முதன் முதலில் சிலையினை தொட்டுபார் என சவால்விட்டார், அவரின் சவாலை ஏற்க முடியாத ராசா தோற்றோடிவிட்டார்

மாபெரும் வெற்றி பெற்ற தலைவியினை சங்கம் மகிழ்வோடு கொண்டாடுகின்றது

தலைவி படத்திற்கு ஆரத்தி எடுத்து கொண்டாடுதல், ஊரெல்லாம் இனிப்பு இல்லை லட்டு கொடுத்து கொண்டாடுதல் என சங்கம் பட்டையினை கிளப்புகின்றது

இது தங்க தலைவி மாபெரும் தமிழக அடையாளமாக உருவாகிகொண்டிருக்கின்றார் என்பதற்கு பெரும் எடுத்துகாட்டு

மிக பெரும் பிரச்சினையினை, பெரும் கலவரத்தினை தன் மிரட்டலான ஒரே எச்சரிக்கையால் தவிர்த்திருக்கின்றார் தங்க தலைவி, இது மாபெரும் விஷயம்

இதனை விட உற்சாக தருணம் எது இருக்கின்றது?

போட்ரா வெடிய ….வெட்டுடா கிடாவ‌

ஜெய் குஷ்பூ…

வெற்றி நாயகி குஷ்பு வாழ்க..வாழ்க‌

 

தலைவி பின்னுகின்றார், சங்கம் களி உவகை கொள்ளும் நேரமிது

Image may contain: 1 person

தலைவி பின்னுகின்றார், சங்கம் களி உவகை கொள்ளும் நேரமிது.

அமித்ஷாவும், மோடியும் இதற்கு பதில் சொல்லபோகின்றார்களா இல்லையா?

தலைவியின் கேள்விக்கு இன்னும் பதில் சொல்லா அந்த இரட்டையர்களை கடுமையாக கண்டிக்கின்றோம்.

இதற்கு தகுந்த விளக்கமளித்து ராசாவினை மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும் அல்லது தமிழக‌ பாஜக கட்சியினை கலைக்க வேண்டும் (அது இருந்தும் இல்லாவிட்டாலும் ஒன்றுதான்) என சங்கம் மிக கடுமையான கோரிக்கை வைக்கின்றது.

இதி நிறைவேற்றபடாவிட்டால் மிகபெரும் நெருக்கடியினை பாஜக சந்திக்க நேரும்

வாழ்க தலைவி, தொடர்க அவரின் துணிச்சல்


பாஜக பினாமி ரஜினி உளறி வாங்கி கட்டும் தருணத்தில், ராசா மூலம் சர்ச்சையினை கிளப்பி , ரஜினியின் அசட்டு கேணை பேச்சை மறக்க வைத்து ஒரே நாளில் , தமிழகத்தை திசை திருப்பி அவரை காப்பாற்றி விடுகின்றார்கள் அல்லவா?

இதுதான் காவி கணக்கு. புரிந்து கொள்ள சிரமமான கணக்கு


 

எங்களைத் தாண்டி பெரியார் சிலையின் நிழலைக் கூட தொட முடியாது : குஷ்பு ஆவேசம்

Image may contain: 2 people, people smiling, text
 

அப்படி சொல்லுங்கள் ராசாத்தி

இந்த முதல்வர், எதிர்கட்சி தலைவர் இன்னும் புதிதாக வந்த ரஜினி , கமல், அழிச்சாட்டிய திருமா கோஷ்டி என யாரும் தில்லாக பதில் சொல்லா நிலையில் மிக துணிச்சலாக சவால் விடுகின்றார் தலைவி

தங்க தலைவி என ஏன் அவரை கொண்டாடுகின்றோம் என்றால் இதற்காகத்தான், இந்த மாபெரும் துணிச்சலுக்குத்தான்

எங்களின் உயிரும் தமிழகத்தின் விடிவெள்ளியுமான தலைவியே

அவர்கள் உங்களை மீறி சிலையினை தொடுவது இருக்கட்டும், முதலில் எங்களை தாண்டி அல்லவா உங்களிடம் வரவேண்டும்

விடுவோமா? சங்கமும் அதன் மாபெரும் படையும் எதற்கு இருக்கின்றது?

மாபெரும் பாதுகாப்பு வளையம் அமைத்து உங்களை காப்போம், நீங்கள் பெரியார் சிலையினை காத்து நில்லுங்கள்

ஆணையிடுங்கள் தாயே, நொடிக்குள் இந்த இம்சைகளை அடித்து உத்திரபிரதேசத்திற்கே அனுப்பிவிடுகின்றோம்

திராவிட பெண்போராளியாக அட்டகாச துணிச்சலொடு வந்து நிற்கும் தலைவிக்கு சங்கம் தலைவணங்கி வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானசெருக்கும் இருப்பதால்” அவரே இன்றைய பாரதி கண்ட கனவு பெண் என்பதில் சங்கம் பெருமை கொள்கின்றது

அவருக்கு முழு ஆதரவும் பாதுகாப்பும் வழங்க சங்கம் போர்கோலம் பூண்டுவிட்டது.

யோவ் எச்.ராசா, தலைவி சவாலை ஏற்று ஒழுங்காக சிலை உடைக்க வரும் தேதியினை சொல்லும், நீர் நல்ல இந்துவாக இருந்தால் சொல்லிபாரும்

இல்லாவிட்டால் தமிழகத்தை நீர் காலி செய்யவேண்டிய கடைசி தேதியினை சங்கம் சொல்லும்.

இந்த இரண்டை தவிர உமக்கு வேறு வாய்ப்பே இல்லை

தமிழகத்தை கலவரகாடாக மாற்ற ராசா தரப்பு முயல்வதாலும், தலைவிக்கு ஏற்கனவே அச்சுறுத்தல் இருப்பதாலும் அவருக்கு அரசு பாதுகாப்பு வழங்கவேண்டும் என சங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றது.

அப்படி அரசு வழங்கா பட்சத்தில் சங்கம் முழுபாதுகாப்பையும் கொடுக்கும் எனவும் முடிவு செய்யபட்டிருக்கின்றது

தலைவி மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்

ரஜினிபற்றி எழுதிவிட்டதால் அவரின் ரசிகர்கள் எல்லாம் வெளிநடப்பு செய்கின்றார்கள், சிலர் சொல்லிகொண்டும் பலர் சொல்லாமலும் ஓடுகின்றார்கள்

இவர்கள் எப்பொழுது வந்தார்கள் என்றால் சைமன் ரஜினியினை கண்டித்து பேசிகொண்டிருந்தபொழுது நாம் ரஜினி நம்மில் ஒருவர் என சொன்னபொழுது ஓடிவந்தார்கள்

இப்பொழுது ரஜினி ராமசந்திரனை பற்றி புளுகுமூட்டை அவிழ்த்ததை சொன்னதும் ஓடிவிட்டார்கள்

ஓடட்டும், ஒரு பய இல்லாமல் ஓடிவிடவேண்டும் ஆமாம்.

மனதிற்கு சரி என பட்டதை பதிவோம், யாருக்காகவும் எதற்காகவும் கண்டிக்க வேண்டிய விஷயங்களை விட முடியாது, உண்மையினை உரக்க சொல்லிகொண்டே இருப்போம்

தலைவி குஷ்பு தவிர எல்லோரும் விமர்சிக்கபடுவார்கள் என்பது இங்கு பிரதான கொள்கை. யாரை எப்பொழுது கலாய்ப்போம் என எமக்கே தெரியாது.

தலைவி மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்

எங்களுக்காக மட்டும் நீ எழுதவேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் கிளம்பலாம். அதெல்லாம் இங்கு நடக்காது.

அப்படி நடக்க வேண்டிய அவசியமுமில்லை

ராமசந்திரன் சமாதி நோக்கி தலைவரின் தலைவர் வாழ்க என சொல்லி ஓடும் அந்த ரசிக ஜீவன்களுக்கு பரிதாப வழியனுப்பல் செய்தாயிற்று

அப்படியே உங்கள் தலைவனின் தலைவன் அருகே தலைவியும் தூங்கி கொண்டிருக்கின்றது

“ரஜினிக்கு நல்வாழ்வு அளித்தது ராமசந்திரனாக இருக்கலாம், ஆனால் நல்வாய்ப்பு அளித்தது நீதான் தாயே, அதனை அவர் மறக்கலாம் நாங்கள் மறக்கவில்லை..” என சொல்லிவிட்டு செல்லுங்கள்

ஓடுங்கடா டேய்..

இலங்கை கண்டி மாவட்டத்தில் கலவரம்

Image may contain: fire, outdoor and food

இலங்கை கண்டி மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்டாயிற்று, அடிதடி சாவு, ஊரடங்கு உத்தரவு என்ற நிலை வந்தாயிற்று. வழக்கமாக இலங்கையில் யாரும் தும்மினாலே இங்கு “டண்டனக்கா “ஆடுபவர்கள் யாரும் இப்பொழுது சத்தம் இல்லை ஏன்?

இந்த சண்டை தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கும் சிங்களர்களுக்குமானது

இவர்கள் இருவரையும் ஈழதமிழர்களுக்கு பிடிக்காது அதனால் இங்கு பூரண அமைதி

இனி தமிழக‌ இஸ்லாமிய இயக்கங்கள் அவர்களுக்காக கொடிபிடிக்கலாம், பெரும் ஆர்பாட்டம் நடத்தலாம்

அதற்கு இலங்கை தமிழரிடமிருந்து சுத்தமாக ஒரு வரவேற்பும் இருக்காது

இவ்வளவிற்கும் இலங்கை முஸ்லீம்கள் தமிழ்பேசுபவர்கள், ஆனால் தமிழராக மாட்டார்கள்

ஏன் என்றால் அங்கு அப்படித்தான். ஈழதமிழனை அடித்தால் மட்டுமே அது தமிழின ஒழிப்பு

இஸ்லாமிய தமிழனையோ, மலையக தமிழனையோ சிங்களன் அடித்தால் தமிழ்நாட்டில் ஒரு குரலும் வராது, ஈழதமிழனும் அதை கண்டுகொள்ளமாட்டான்

ஆம் அங்கு பொறுத்தவரை வடக்கத்திய ஈழதமிழன் மட்டுமே தமிழன, அவனை அடித்தால் மட்டுமே அது தமிழன் மீதான சிங்கள இனவெறி கொடுமை

இதோ தமிழ்பேசும் இஸ்லாமியரை போட்டு அடிக்கின்றார்கள், கடும் கலவர சூழலில் அவசரநிலை எல்லாம் அறிவித்தாயிற்று

நிலமை படுமோசமாக இருக்கின்றது

இங்கு ஒரு குரல் கேட்குமா? கேட்காது

சைமன், திருமா, திருமுருகன், வைகோ என எவனாவது பேசுவார்களா? இல்லை

ஏன் என்றால் இவர்கள் பேச படியளக்க வேண்டும். அதுவும் வசதியான ஐரோப்பா ஈழதமிழரிடம் இருந்து வரவேண்டும் இவர்கள் பேசுவார்கள்

கிழக்குவாழ் இஸ்லாமிய தமிழ்பேசும் தமிழனிடம் இருந்து இவர்களுக்கு என்று தட்சனை வந்தது?

அதனால் இவர்களிடமிருந்து இதற்கெல்லாம் கண்டனம், ஆர்ப்பாட்டம் என எதுவுமே வராது,

தமிழ்பேசினால் அவன் தமிழனா என்ன? அரைகாசு கொடுக்காத அவர்கள் தமிழனாய் இருந்தென்ன லாபம்? செத்து தொலையட்டும் என அவர்கள் போக்கில் இருப்பார்கள்.

 

லெனின் மீது காவிகள் இவ்வளவு பாய்வது ஏன்?

Image may contain: 1 person

லெனின் மீது காவிகள் இவ்வளவு பாய்வது ஏன்? , விஷயம் இருக்கின்றது

லெனின் சமதர்ம பூமி படைத்தவன். கிறிஸ்தவ மத அடக்குமுறைகளை அதன் அதிகாரத்தை ஒழித்து கட்டி புது சரித்திரம் படைத்தவன்

ஆனாலும் மதமே இல்லை என்பதில் அவனுக்கு முழு உடன்பாடில்லை. மதம் வேண்டும் ஆனால் ஏற்றதாழ்வில்லா மதமாக இருக்கவேண்டும் என எண்ணிகொண்டிருந்தான்

இஸ்லாம் அவருக்கு அபிமான மதமாக இருந்தது, ஆனால் பல காரணங்களுக்காக அவர் அதனை வெளியில் அறிவிக்கவில்லை உயர் மட்ட பீரோவில் விவாதித்தார் என்பார்கள், இஸ்லாம் மீது அவர் கொண்ட மரியாதையில்தான் உஸ்பெக், கச்சகஸ்தான், கிரிகிஸ்ததான் என ஏகபட்ட தான்கள் சோவியத்தில் இணைந்தன‌

மதமில்லா நாடு எனவும், மதங்களுக்கு கம்யூனிஸ்ட் எதிரிகள் என நினைத்திருந்தாலும் இந்த இணைவு நடந்திருக்காது

வரலாறு அதனை சொல்கின்றது, லெனினும் ஸ்டாலினும் அவர் வழிவந்தவர்களும் கிறிஸ்தவ பீடத்தையும் அதன் ஏற்றதாழ்வான அதிகாரத்தையும் எதிர்த்தார்கள்,

சமத்துவமிக்க இஸ்லாம் அவர்கள் அபிமானத்திற்குரியதாகவே இருந்தது

இது பல இடங்களில் வரலாற்றில் காணகிடக்கின்றது, இந்த ஏகபட்ட ஸ்தான் நாடுகள் இஸ்லாமிய நாடக சோவியத் யூனியனில் இருந்தபொழுதும் அவர்கள் மதத்திற்கு ஆபத்தில்லை

இன்றும் அவை இஸ்லாமிய நாடுகளாக அறியபடுகின்றன‌

லெனினை ஏன் காவிகள் வரிந்து கட்டி அடிக்கின்றார்கள் எனும் உட்பொருள் இதுதான் இது ஒன்றேதான்

 

கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு : எச்.ராசா

கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு : எச்.ராசா

1917 ரஷ்ய புரட்சியே வெள்ளையனை அலற செய்தது. அதுவரை உலகில் மன்னராட்சி தவிர எதுவும் சாத்தியமில்லை. அந்த மமதையிலே பிரான்ஸ் அரசனும், பிரிட்டிஷ் அரச குடும்பமும் உலகின் சரிபாதியினை ஆண்டன‌

முன்பாக மன்னராட்சியில் இருந்து மக்களாட்சிக்கு திரும்பிய பிரான்ஸை மறுபடியும் மன்னராட்சிக்கு திருப்பினான் நெப்போலியன், அதிலிருந்து மக்களாட்சி குழப்பம்நிறைந்தது என்ற கருத்து இருந்தது.

அமெரிக்கா அன்று மக்களாட்சி என சொல்லிகொண்டாலும் உலக அரங்கில் அதிகாரமில்லா நாடு

ஜார் மன்னனை ரஷ்ய கம்யூனிஸ்டுகள் தூக்கி எறிந்ததில் உலக மன்னர்கள் விழித்தனர். போதிய உரிமை கொடுக்காத மக்கள் அரசை தூக்கி எறிவர் என்ற அச்சத்தில் உரிமை கொடுக்க தொடங்கின‌

உலக அரசுகளும், சுரங்க தொழில், ஆலை தொழில் முதலாளிகளும் தொழிலாளர் நலம் பேணியது அதன் பின்புதான்

இதன் பின்புதான் சைமன் குழு, மாண்டெகு சேம்ஸ்போர்டு குழு எல்லாம் இந்தியா வந்தது, மக்களுக்கு உரிமை கிடைத்து உள்ளாட்சிதேர்தல் எல்லாம் நடந்தது அதன் பின்புதான்

உலகிற்கு ஒளி கம்யூனிசமே கொடுத்தது, ஹிட்லர் அதனை வெறுத்தான். ஆரிய தலைவனே உலகாள தகுதிகொண்டவன் என சீறினான்

அன்று அவனை எதிர்க்கும் சக்தி ஐரோப்பாவில் எவனுக்குமில்லை, பிரிட்டனை பிடிக்கும் சக்தி அவனுக்கு இருந்தது, அப்படி பிடித்திருந்தால் இந்தியா ஹிட்லரின் அடிமை ஆகியிருக்கும், காந்திக்கெல்லாம் யூத வதைமுகாமில் முடிவும் இருந்திருக்கும்

ஆம், ஹிட்லர் லண்டனை பிடித்தால் அதுதான் நடந்திருக்கும் அவனோ சோவியத்தை ஒழிக்க சென்றான்

தன் விஷவாய்வு முகாமினை அவன் யூதர்களுக்காக மட்டும் கட்டவில்லை, கம்யூனிஸ்டுகளையும் அதில் கொல்லும் திட்டம் அவனுக்கு இருந்தது

அந்த படுபாதகன் ஐரோப்பா முழுக்க பிடித்து கொக்கரித்தான், அவனை எதிர்த்து போராடியது கம்யூனிசம் ஆம் அதுதான் இந்தியாவினை ஹிட்லரிடம் இருந்து காத்தது

ஹிட்லரின் ஆரிய கொடியினை வீழ்த்தி, ஹிட்லரை சாய்த்து உலகை காத்தது செங்கொடி

அதன் பின் உலகில் சரிபாதி நாட்டில் செங்கொடி பறந்தது

இந்தியா மீது கம்யூனிச ரஷ்யாவிற்கு எப்போதும் அனுதாபம் இருந்தது, பல போர்களில் அது ஆதரவளித்தது

கென்னடியுடன் அது முறுக்கிய காலத்தில்தான் மாவோ இந்தியா மீது படையெடுத்தான், கென்னடி சர்ச்சையில் சோவியத் சிக்க்கிய காலத்திலே அக்கொடுமை நடந்தது இல்லாவிட்டால் அந்த போர் நடந்திருக்காது

1972 வங்க போரில் அமெரிக்க படை களமிறங்க, சோவியத் மிரட்டலிலே அது பின் வாங்கிற்று இல்லாவிட்டால் பாகிஸ்தான் உடைந்திருக்காது

1980களில் ஆப்கனில் சோவியத் படைகள் இருந்தவரை நமக்கு பெரும் பாதுகாப்பு, காஷ்மீரில் இவ்வளவு கலவரம் நடந்ததா? நிச்சயம் இல்லை

காரணம் அந்த செங்கொடி

இந்தியாவிற்கு ராணுவம், மருத்துவம் என பல விஷயங்களை கொடுத்த சோவியத் யூனியனே நம்மை விண்வெளிக்கும் அழைத்து சென்றது, ராகேஷ் சர்மா அப்படித்தான் பறந்தார்

அதன்பின் இன்னொரு இந்தியன் இன்னும் பறக்கவில்லை (கல்பனா அமெரிக்க குடியுரிமைபெற்றவர்)

கம்யூனிசம் இந்த உலகிற்கு வழங்கிய கொடை ஏராளம்

தொழிலாளர் நலம், ஓய்வூதியம், 8 மணி நேர வேலை, இன்ன்னும் ஏராளமான விஷயங்கள் அவர்களாலே உலகில் சாத்தியமாயின‌

கம்யூனிசத்திற்கும் உலகிற்கும் ஏக தொடர்பு உண்டு. இந்த உலகை புரட்டி போட்டது கம்யூனிசம்

ஒவ்வொரு இந்தியனும் கம்யூனிசத்தால் நேரடியாக அல்லது மறைமுகமாக பலனடைந்திருக்கின்றான் மறுக்க முடியாது

லெனின் ரஷ்யாவிற்கு மட்டுமல்ல , உலகிற்கே பொதுவானவர் இவ்வுலகம் அவரால் பெற்றுகொண்ட நன்மைகள் ஏராளம்

இதெல்லாம் யோசித்தால் புரியும்

யோசிக்க மூளை வேண்டும், கொஞ்சமேனும் மூளையே இல்லாத எச்.ராசா என்பவருக்கு இதெல்லாம் எப்படி புரியும்?

இந்து நண்பர்கள் மீது எப்பொழுதும் நல்ல அபிமானம் உண்டு, ஆனால் இது போன்ற அலப்பறைகளால் அவர்களுக்கும் அவமானம்

அதனால் இந்துக்களே, இவரை கமல், ரஜினி அல்லது டி.ராஜேந்தர் கட்சிக்கு அனுப்பிவிடுங்கள். இவரின் அறிவுக்கும் திறமைக்கும் இருக்கவேண்டிய இடம் அதுதான்

 
 

இன்று நான் மகிழ்வாக இருக்க எம்.ஜி.ஆரே காரணம் : ரஜினி

Image may contain: 2 people, people smiling, people standing

இன்று நான் மகிழ்வாக இருக்க எம்.ஜி.ஆரே காரணம் : ரஜினி

ஒருவேளை “அந்த” கல்யாணம் நடந்திருந்தால் நாசமாய் போயிருப்பேன் என்கின்றாரா?

“அந்த” பெண்ணை திருமணம் செய்ய ராமசந்திரன் தடுத்த நன்றிகடன் இப்பொழுதுதான் தெரிகின்றதா?

அப்படி என்ன கசப்பான விஷயத்தை சமீபத்தில் கண்டுவிட்டார்? . அவருக்கே வெளிச்சம்

தமிழகத்தில் பெரியார் சிலை உடையும்: எச்.ராஜா

Image may contain: people standing, sky, cloud and outdoor

திரிபுராவில் லெனின் சிலை உடைந்தது போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடையும்: எச்.ராஜா

அதானே, மசூதி இடிப்பது, சிலைகளை உடைப்பது, தாஜ்மஹாலுக்கு மிரட்டல் விடுவது இது போன்றவை தவிர இவர்களுக்கு ஆக்கமான செயல் என்ன தெரியும்?

ஒன்றும் தெரியாது

என்ன சொன்னீர் எச்.ராஜா , பெரியார் சாதி வெறியனா? சிரிக்காமல் சொல்ல உம்மால் முடிந்ததா?

மனுதர்மம் கொடுத்த சாதியினை நானும் சுமக்க மாட்டேன், என் இயக்கமும் சுமக்காது என வாழ்ந்தவர் அவர்

நீங்கள்தான் நாங்கள் பார்ப்பணர், எமக்கு அடையாளம் உண்டு என மல்லுகட்டினீர்கள் அவர் உங்களை உங்கள் விருப்படி அழைத்தார்

யாருக்கு இருந்தது சாதிவெறி? அவருக்கா உங்களுக்கா?

பெரியார் சிலைக்கே இப்படி அஞ்சும் கோஷ்டி, அவர் இருக்கும்பொழுது எப்படி எல்லாம் அஞ்சியிருக்கும்?

அய்யா ராசா, தமிழகத்தில் மத கலவரத்தை தூண்ட முயற்சித்தீர்கள் முடியவில்லை, பிரியாணி அண்டா தூக்கி ஓடினாலும் கலவரம் வரவில்லை

ஆண்டாளை கொண்டு ரத்த ஆறு ஓடவைக்கலாம் என பார்த்த்தீர்கள், ஜீயர் என்றொருவர் உண்டு என்பது மட்டும் தெரிந்தது

ஆக என்ன முடிவிற்கு வந்திருக்கின்றீர்கள்?

தமிழக மதங்கள் விவகாரத்தால் உருவாக்க முடியாத கலவரத்தை பெரியார் சிலையில் கை வைத்தால் உருவாக்கிவிடலாம் என வந்துவிட்டீர்கள்

பெரியார் தமிழக மூல கடவுள் , அதில் கைவைத்தால் தமிழகம் பற்றி எரியும் என்ற முடிவு செய்துவிட்டீர்கள்

பெரியார் தமிழக கடவுள் என ஒப்புகொண்டதற்காக கோடான கோடி நன்றி மிஸ்டர் ராசா

ஆனால் ஒருவிஷயம் மறக்கின்றீர்கள் அய்யா

பெரியாருக்கு உங்களை போல மசூதி இடிக்க, கலவரம் செய்ய, சிலை உடைக்க தெரியாது

அவர் சிந்திக்க சொன்னார், சிந்தித்து அறிவுக்கு எட்டியதை செய்ய சொன்னார். ஒரு இடத்திலாவது பிராமணனை அவர் கும்பலாக சேர்ந்து அடித்தார் என்றோ, கோவிலுக்குள் சென்று சிலைகளை உடைத்தார் என்றோ சொல்ல முடியுமா?

பொய்சாட்சியாவது காட்ட முடியுமா?

நிச்சயம் அன்று வன்முறை செய்தது உங்கள் கோஷ்டிதான்

அவர் மீது செருப்பும் , கல்லும் இன்னபிற பொருட்களை எல்லாம் எறிந்து வன்முறை செய்தது உங்கள் கோஷ்டியே

அப்பொழுதும் “என் மீது ஒரு செருப்பை எறிந்தவனே இன்னொரு செருப்பை எறி இல்லாவிட்டால் இருவருக்குமே பயனில்லை” என்றும்

“என் மீது எரியும் கற்களால் வீடு கட்டலாமே தவிர என்னை கட்டமுடியாது” என்றும் சொல்லி அமைதியாக நடந்தவர் பெரியார்

அவர் சிலையினை நீங்கள் இடிக்கவருவதில் என்ன ஆச்சரியம்?

உங்களுக்கு இங்கு ஆட்சி அதிகாரம் இருப்பதாக இருந்தால் இடியுங்கள், யாரும் தடுக்க முடியாது.

ஆனால் ஒன்றை நினைவில் வையுங்கள்

காங்கிரஸின் இன்றைய வீழ்ச்சியினை அன்றே தொடங்கி வைத்தவர் பெரியார். இனி உங்கள் வீழ்ச்சியும் அவர் சிலையினை இடித்தே தொடங்கும் என்றால் செய்யுங்கள்

ஆனால் தமிழகத்திலிருந்து அவர் சிலையினை துடைத்தொழிப்பதாக எண்ணினால் இந்தியா முழுக்க பெரியார் சிலையாக எழுவார்

காரணம் பெரியார் இந்திய சமூக விஞ்ஞானி, இந்த சமூகத்தை நோய்பிடிக்கும் பொழுதெல்லாம் அவர் தேவைபடுவார்

இப்பொழுது ஒரு புதுவித நோய் உங்களை போன்ற வைரஸ்களால் பரவுகின்றது, இதன் தாக்கம் அதிகமாகும்பொழுது நிச்சயம் பெரியார் எழுவார்

நாங்கள் வன்முறையினை விரும்பாதவர்கள், உங்களை போல கரசேவை, கொலைச்சேவை, கடப்பாரை சேவை எல்லாம் எங்களுக்கு தெரியாது

எங்களுக்கு தெரிந்ததெல்லாம் சிந்தனை, பெரியார் சொல்லிகொடுத்த அறிவு சிந்தனை

அவர் சிலையினை ஒழித்துவிடலாம், அவர் கொடுத்த‌ சிந்தனையினை உங்களால் பறிக்க முடியுமா?

உங்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கின்றது ராசா, கொள்ளிகட்டையினை எடுத்து தலையில் கிரீடம் சூட ஆசைபடுகின்றீர்கள்

அது மொத்தமாய் எரித்துவிடும் அய்யா

பெரியார் சிலையாக அல்ல, அறிவாய் எம் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். அவர் கொடுத்த அறிவு தீ அப்படியே தமிழர் மனதில் எரிந்துகொண்டிருக்கின்றது

உங்களை போன்ற குப்பைகளை எரிக்க அந்த தீக்கு நெடுநேரம் ஆகாது, ஆனால் அந்த தீ தீண்டும் அளவுக்கு உங்களுக்கு தகுதி இல்லை என்பதால் விட்டுவைத்திருக்கின்றது

மததத்தால் உருவாக்க முடியா கலவரத்தை, பெரியார் சிலையால் உருவாக்கிவிடலாம் என்றா கனவு காண்கின்றீர்கள், நடக்குமா?

ஒரு அடிமை முதல்வர் கிடைத்துவிட்ட அற்ப சந்தோஷத்தில் இப்படி நீர் கிளம்பலாம், இந்த பதர்களின் காலம் முடியும், தமிழகத்திற்கு விரைவில் விடியும்

அப்பொழுது இதே பெரியார் சிலையினை நீர் கண்ணீரால் கழுவும் காலமும் வரும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளும்

சிலையினை உடைத்தால் ஒழிந்து போக பெரியார் ஒன்றும் சின்னம் முடக்கினால் அழியும் கட்சி அல்ல , அரசியல்வாதியும் அல்ல‌

அவர் மனிதகுல மருத்துவர், அவர் கொடுத்த சிகிச்சைமுறை எக்காலமும் வாழும். அதுவும் உம்போன்ற சமூக வைரஸ்கள் இருக்கும்பொழுது அவர் அடிக்கடி தேவைபடுவார்

மதத்தின் பெயரால் சமூக ஏற்ற தாழ்வும், சாதி பெயரால் இழிவும் உள்ள காலமட்டும் அவர் நிலைத்திருப்பார்.

அவருக்கு அழிவே இல்லை மிஸ்டர் ராசா.

குரைக்கு நாயினை அடித்து ஒன்றும் ஆகபோவதில்லை, அடித்தால் அது குலைக்கும், எங்கோ இருக்கும் நாய்களும் அதை கேட்டு இன்னும் குலைக்கும்நா

நாயின் முதலாளியினை பார்த்து, அதை அவிழ்த்துவிட்டவனை பார்த்து செய்யவேண்டியதை செய்தால் நாய் அடங்கிகிடக்க போகின்றது

இதற்காக எல்லாம் கலவரம் வருமா என்ன?

பெரியார் கொடுத்த பகுத்தறிவு இதனை கூட யோசிக்காதா?

 

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார் சன்னி லியோன்

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார் சன்னி லியோன்

சொந்த பண்ணையில் பலபேர் 24 மணி நேரமும் உழுது வேளான்மை செய்தும், நெல்லுக்கு அடுத்தவளிடம் கையேந்தியது போல் இருக்கின்றது சன்னி லியோன் நிலமை

விதி எல்லாவித நடிகைகளுக்கும் ஒவ்வொரு வித துயரம் இருக்கும் என்பது சரியாகின்றது.

%d bloggers like this: