அய்யாகண்ணு திருச்செந்தூர் ஆலய வளாகத்தில் புரட்சி…

அய்யாகண்ணு பெரும் போராளியாக இருக்கலாம், ஆனால் திருச்செந்தூர் ஆலய வளாகத்தில் புரட்சிசெய்ய அவரை அனுமதித்தது யார் என தெரியவில்லை

அதிலும் அப்பெண் அவரை பிராடு என்பதும், பதிலுக்கு இவர் வைரமுத்துவின் சர்ச்சை பெயரோடு பாய்வதும் பார்க்க சகிக்கவில்லை

அதனை இந்து அபிமானிகள் ஏன் கண்டுகொள்ளவில்லை என்பதும் தெரியவில்லை, இதெல்லாம் ஆலய வளாகத்தில் நடைபெறவேண்டிய சண்டை அல்ல‌

ஆனால் மாநில அரசை கண்டிக்காமல் டெல்லியில் ஆடையின்றி உருண்டவரை , அதன் பின் பழனிச்சாமி பக்கமே செல்லாதவரை பிராடு என்றுதான் சொல்வார்கள்

இன்னும் விவசாய கடன் அப்படியே இருக்கின்றது, ஆனால் இலவச ஸ்கூட்டி வழங்கபடுகின்றது. அய்யா கண்ணு அந்த மேடை முன் ஆடை அவிழ்த்தாரா?

பின் இவரை பிராடு என சொல்லாமல் பெரும் போராளி என்பார்களா?

அய்யாகண்ணு என்பவருக்கு மகளிர் தினத்தில், அது கொண்டாடபடுவதன் நோக்கம் அவர் கன்னத்திலே புரிந்திருக்கின்றது.

தென்னக பெண்கள் யார் என அய்யாகண்ணு தெரிந்திருக்கும் நேரமிது , அவர் கண்ணை தோண்டாமல் விட்டார்கள் அதுவரைக்கும் அய்யாகண்ணுவிற்கு நல்ல நேரம்

டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு

டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு

குக்கர் வியாபார ஏஜெண்டுகள் எல்லாம் இனி ஐபில் ஏலத்தில் கலந்துகொள்ளும் அளவு சம்பாதிக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கின்றது

இனி “சார் எங்களது கேஸ் அடுப்பு வியாபாரம் ஆக வேண்டும், டிவி விற்க வேண்டும், கார் விற்க வேண்டும் தயவு செய்து அடுத்த தேர்தலில் நாங்கள்சொல்லும் சின்னம் கேளுங்கள் சார்..” என முதலாளிகள் கூட்டம் தினகரன் வீட்டு வாசலில் வரிசையில் நின்றாலும் ஆச்சரியமில்லை

மிக சிறந்த மார்கெட்டிங் ஐகானாக தினகரன் மாறிகொண்டிருக்கின்றார் , அவர் சின்னமாக தேர்ந்தெடுக்கும் பொருள் படு வேகமாக விற்று தீரும் என வியாபார உலகம் நம்புகின்றது

எம்ஜிஆர் ஆட்சி இப்படி சீரும் சிறப்புமாக தொடர்ந்து கொண்டிருக்க அந்த ஆன்மீக சாமியாருக்கு இங்கு என்ன வேலை?

முதலில் அணையினை திறந்துவிட்டு அதன் பின் பெரியார் பற்றி பேசுங்கள்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு கண்டிப்பாக அமைக்காது- சீமான்

எங்கே? அப்படி ஒரு வாரியம் அமைந்து தொலைத்துவிடுமோ என்ற பதைபதைப்பே அங்கிளிடம் உள்ளது

ஆம், சிக்கல் தீர்ந்துவிட்டால் இவர் எப்படி பிரிவினை அரசியல் செய்வது?


கயவர்களுடன் கூட்டணி கிடையாது: மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்Image may contain: 3 people, people smiling

ஏம்பா கமலஹாசா.. நானும் இப்படித்தான் தொடக்கத்துல சொல்லிட்டுஇருந்தேன்

எல்லாம் ஸ்டார்ட்டிங் டிரபிள், போக போக சரியாயிரும்


தீரா வியாதியில் இருப்பவர்களை கருணை கொலை செய்ய அனுமதிக்கலாம் : உச்சநீதிமன்றம்

எச்.ராசா விவகாரம் எப்பொழுது உச்சநீதி மன்றம் வரை சென்றது? ஒரு பயலும் செய்தி இதுபற்றி சொல்லவில்லையே?

இனி என்ன? உச்சநீதிமன்றமே சொல்லியாயிற்று.


‘பெரியாரைப் பார்த்து பா.ஜ.க-வுக்கு ஏன் பயம் வருகிறது’ என கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி

பெரியார் மேல் பாஜக கொண்டிருக்கும் அச்சம் போலவே, காவேரி விவகாரத்தில் நீர் தரமாட்டீர்கள் எனும் அச்சம் எங்ளுக்கு உள்ளது

முதலில் அணையினை திறந்துவிட்டு அதன் பின் பெரியார் பற்றி பேசுங்கள்


Image may contain: 1 person, crowdகமலஹாசன் மகளிர் கூட்டம் நடத்தி அதற்கு மகளிர் கூட்டம் வராமல் போனது ஆச்சரியமில்லை

இந்த ஒரு சிலரும் வந்ததுதான் மகா அதிர்ச்சி

ஆக இன்னும் தமிழக மகளிருக்கு முழு விழிப்பு வரவில்லை


ராமாயண அணி : ரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம்

Image may contain: 2 people, people smiling, people standing

கடந்த தேர்தலில் பஞ்சபாண்டவர் அணி

அடுத்த தேர்தலில் “இவரோடு ஐவரானோம்” என ராமாயண அணி அமைத்துவிட வேண்டியதுதான்


ரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம் – ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார் : செய்தி

பிரச்சினைகளுக்கு குறைவில்லா மாநிலம் இது, இப்பொழுது காவேரி மேலாண்மை குழு அமைக்க வேண்டிய நிலையில் அதனை மறைக்க பெரும் குழப்பங்கள் எல்லாம் ஏற்படுத்தபடுகின்றன‌

நிலமை இப்படி இருக்க இவர் இமயமலைக்கு பாபா ஆசிரமத்திற்கு செல்கின்றாராம்

ஆன்மீக அரசியல் என்பதன் அர்த்தம் இதுதான் போலிருக்கின்றது.

அதாவது மாநிலம் பற்றி எரிந்தாலும் இவர் இமயமலை, கைலாசம் என சுற்றிகொண்டே இருப்பார்

ஆன்மீக அரசியலுக்கு ஏன் தனி கட்சியும், முதல்வர் பதவி , ஆட்சி ஆசையும்?

அறநிலைய துறை அமைச்சர் ஆனால் போதாதா?


 

உலகம் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாயிற்று

உலகம் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாயிற்று

ஒருவழியாக டிரம்ப் தன் அறிவிப்பை வெளியிட்டாயிற்று அதாவது வடகொரியாவுடன் அணுஆயுதம் தொடர்பாக பேச சம்மதம் என சொல்லிவிட்டார்

உண்மையில் இது வடகொரியாவிற்கான வெற்றி. அமெரிக்காவினை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்தாயிற்று

அணுகுண்டை கைவிட்டால்தான் பேசமுடியும் என்ற நிபந்தனை விதிக்காபட்சத்தில் நான் பேச தயார் என வடகொரிய அதிபர் சொல்லியிருந்தார், அவருக்கே வெற்றி

அமெரிக்காவின் கணக்கு வேறு, பொருளாதார ரீதியாக தனக்கு பலன் இல்லா எந்த போரிலும் அது இறங்காது. சிரியாவில், ஈராக்கில் மல்லு கட்டினால் துட்டு

ஆப்கனில் மல்லு கட்டினால் அங்கிருந்து வடக்கே இருக்கும் துர்கிஸ்தான், தர்க்கிஸ்தான் நாடுகளின் எண்ணெயினை சுருட்ட வழி உண்டு

வடகொரியாவில் இறங்கி என்னாக போகின்றது? அதனால் கொஞ்சம் இறங்கி போக ஆரம்பித்தாயிற்று நாட்டாமை சமூகம்

ரஷ்யா தன் அதிரடிகளை ஆரம்பித்தாயிற்று…

அதிரடி அறிவிப்புகளை தென்கொரியா வெளியிடும்

இன்னும் சிலமணி நேரத்தில் அதிரடி அறிவிப்புகளை தென்கொரியா வெளியிடும் என டிரம்ப் அறிவித்துள்ளார்

விஷயம் என்னவென்றால் வடகொரிய அதிபரை தென்கொரிய குழு சந்தித்தபின்பு மகா அவசரமாக அமெரிக்கா சென்றிருக்கின்றார் தென்கொரிய பிரதிநிதி

குளிர்கால ஒலிம்பிக்கில் ஒன்றாக இணைந்த கொரிய வீரர்கள், குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டியில் தனிதனியாக அணிவகுக்கின்றார்கள்

டிரம்ப் வேறு மிரட்டிகொண்டிருகின்றார்

அமெரிக்காவில் என்ன பேசுவார்கள்?

“வடகொரியாவுடன் நீங்கள் நெருங்கினால் தென்கொரியாவிற்கான அமெரிக்க உதவிகள் நிறுத்தபடலாம், நெஞ்சை தொட்டு சொல் உன் சொந்த பலத்திலா சாம்சங் , ஹூண்டாய் என உலகின் முன்னணி நாடாய் இருக்கின்றாய்?

நாங்கள் யாரையும் உருவாக்குவோம், யாரையும் அழிப்போம். வடகொரியாவுடன் நெருங்கினால் சும்மா இருக்கமாட்டோம்” என அன்பாக எடுத்து சொல்லலாம்

உண்மையின் தென்கொரிய நிலை சிக்கலே, இப்பக்கம் பங்காளி வடகொரியாவின் மிரட்டல், அப்பக்கம் தன்னை ஆளாக்கிய அமெரிக்க்காவிற்கு விசுவாசமாக இருக்க வேண்டிய கட்டாயம்

மொத்தத்தில் சில அதிமுகவினர் தினகரனா? மோடியின் மிரட்டலா என தலையினை பிய்த்துகொண்டு சுவரில் முட்டிகொண்டிருக்கின்றார்கள் அல்லவா? அந்த நிலையில் இருக்கின்றது தென் கொரியா

உலகம் அந்த அறிவிப்பிற்காக காத்துகொண்டிருக்கின்றது, நாமும் காத்திருப்போம்

 

இந்த அட்மின்களுக்கு என்ன ஆகுமோ தெரியாது

Image may contain: 1 person, smiling, selfie and close-up

எச்.ராசாவின் அட்மினுக்கு என்ன ஆகுமோ தெரியாது

ஆனால் தலைவி குஷ்புவின் அட்மின் விரைவில் சங்கத்தாரின் கடும் கண்டனங்களுக்கும் அதற்கு மேலும் ஆகபோவது உறுதி

சங்கத்தின் கொள்கை, கோட்பாடு இன்னபிற விஷயங்களை எல்லாம் அந்த அட்மின் தலைவியின் பார்வைக்கு கொண்டு செல்லாமல் புறக்கணித்து தலைவி ஆயிரம் யானை பலம் பெறுவதை தடுத்து சதி செய்துகொண்டிருக்கின்றார் என தகவல்கள் தெரிவிக்கின்றன‌

அட்மின்களுக்கு மிக சோதனையான இந்த‌ காலத்தில் தலைவியின் அட்மினும் திருந்திவிட்டால் சிக்கல் இல்லை

எல்லோரும் எச்.ராசாவின் அட்மினை கண்டித்துகொண்டிருக்க, சங்கம் தலைவி குஷ்புவின் அட்மினை வன்மையாக கண்டிக்கின்றது

ஏ அட்மினே, சங்கத்தார் பொங்கி எழுந்தால் தமிழகம் தாங்காது. சுனாமியாய் அவர்கள் சீறுமுன் திருந்திவிடு

 

234 தொகுதிக்கும் வேட்பாளர் கிடைப்பார்களா?

Image may contain: 1 person, sitting and text

முதலில் 234 தொகுதிக்கும் வேட்பாளர் கிடைப்பார்களா?, தேர்தலில் டெப்பாசிட் கிடைக்குமா என ஆண்டவர் பார்க்கட்டும்

ஆன்மீக ஆபத்தை பின்னால் பார்க்கலாம்.

ஏதோ இவர் தேர்தலில் வென்று முதல்வராகும் நேரத்தில் இருப்பது போலவும், தசாவதாரம் ஸ்டைலில் சிலையினை தூக்கி கடலில் போட போவது போலவும், தமிழகம் அய்யா வேண்டாம் என அலறுவது போலவும் பேசிகொண்டிருக்கின்றார்.

பெரியார் சிலைக்கு தமிழகம் பொங்கினால் சாமி சிலைகளை இடிக்க தயாராயிற்று என்றா பொருள் ஆணடவரே?

இதெல்லாம் அரசியல் கணக்கா? உருப்படுமா?

 

பாலேஸ்வரம் முதியோர் இல்லத்தை பற்றிய கனத்த சர்ச்சை

Image may contain: text

இந்த பாலேஸ்வரம் முதியோர் இல்லத்தை பற்றி கனத்த சர்ச்சை வந்தது, பாவாடை சாமிகள் எலும்பு கடத்துகின்றார்கள் என்றது கோவண கோஷ்டிகள், இதனால் அரசு விராசணைக்கும் உத்தரவிடபட்டது

கசாப்பு கடை நடத்துகின்றார்கள் என பாலிமர் டிவி தொடங்கி வைத்த ஒப்பாரியினை அக்கும்பல் பிடித்தது, விசாரிக்கலாம் தவறு இருந்தால் தண்டிப்போம், தவறு இல்லா பட்சத்தில் தொடர்ந்து இயங்கலாம் என நாமும் சொல்லியிருந்தோம்

இப்பொழுது விசாரணையில் அங்கு எந்த மர்மமும், சட்டவிரோத காரியமும் இல்லை என நீதிமன்றத்தில் சொல்லிவிட்டார்கள்

அவர்கள் சொல்லியிருக்கும் விஷயங்களும் , இல்லத்தின் தரப்பில் கொடுக்கபட்ட விளக்கமும் ஏற்றுகொள்ள தக்கவையே

மருத்துவ உலகமும் அதனையே சொல்கின்றது. எலும்பை ஏற்றுமதி செய்வது மிக சிக்கலான விஷயம். ஆடு மாடு எலும்பினைபோல் எளிதாக கப்பலில் அனுப்ப முடியாது . எலும்பு மஜ்ஜை மாற்று என்பது சாதாரணம் அல்ல‌

அதெல்லாம் இதயமாற்று போல மிக மிக குறுகிய நொடியில் செய்யவேண்டிய சிகிச்சைகள் அதுவும் இன்னொரு பெரும் சிக்கல் இருக்கின்றது

எல்லா உறுப்புக்கும் ஆயுள் உண்டு, அதுவும் முதிர்ந்த வயதுடையவர்களின் உறுப்புகள் செயலாற்றி ஓய்ந்தவை. அது இதயமோ கல்லீரலோ எதுவோ. அதை எல்லாம் இன்னொருவருக்கு மாற்றவே முடியாது

அப்படி அது சாத்தியம் என்றால் இவ்வுலகில் பலர் இன்னும் சாகாமலே இருப்பார்கள். சாகாவரம் அவர்களுக்கு உண்டு

மருத்துவ உலக கூற்றுபடி முதிர்ந்தவர்கள் உடலுறுப்புக்காக கடத்தபடுகின்றார்கள் என்பது ஏற்றுகொள்ள முடியா விஷயம்

இக்கும்பல் குற்றம் சாட்டிற்றே தவிர ஒரு ஆதாரம் கூட கொடுக்க முடியவில்லை, எலும்பை விற்றது யார்? வாங்கியது யார் என்ற தகவல் எங்கே இருந்து கொடுக்க முடியும்?

ஆக என்ன புரிகின்றது?

இந்த கோவண , காவி கோஷ்டிகள் முன்பு அன்னை தெரசா இல்லத்தில் செய்த அட்டகாசத்தை இங்கும் தொடர வந்திருக்கின்றன‌

அன்று நேருவிடம் இப்படித்தான் மல்லுக்கு நின்றார்கள், அந்த தெரசா மதமாற்றம் செய்கின்றார் அவரை நாட்டை விட்டு வெளியேற்று என குட்டிகரணம் அடித்தார்கள்

நேரு அமைதியாக சொன்னார், “வாருங்கள் செல்வோம் அப்படி அவர் மதமாற்றம் செய்தால் இன்றே அனுப்பிவிடுவோம்” என சொல்லிவிட்டு கல்கத்தா விரைந்தார்

காவி கோஷ்டிக்கு மகிழ்ச்சி தாளவில்லை, செல்வோம் அங்கே அந்தம்மா ஞானஸ்நானம் கொடுத்துகொண்டிருக்கும், இன்றே தூக்கிவிடலாம் என மகிழ்வோடு சென்றார்கள்

நேருவும் அவர்கள் உள்ளே நுழைய அக்கும்பலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அங்கே தொழுநோயாளிகள் புண்களுக்கு சிலர் மருந்து இட்டுகொண்டிருந்தனர், சிலர் முதியவர்களுக்கு உணவு ஊட்டினர், சிலர் அவர்களை குளிப்பாட்டி கொண்டிருந்தனர்

சீழ்பிடித்த அந்த நோயாளிகளை, மற்றவர்கள் அருகே செல்லும் அந்த வியாதிக்காரர்களை எந்த கூச்சமுமின்றி அவர்கள் பராமரித்துகொண்டிருந்தார்கள்.

ஜெபமாலையும், கர்தராகிய இயேசு வாழ்க, அல்லேலூயா என்ற சத்தம் கேட்கும் என சென்றவர்களுக்கு கடும் அதிர்ச்சி

நேரு கேட்டார் “இந்த நோயாளிகள் எந்த நாட்டுக்காரர்கள்”

காவிகள் சொன்னது “நம் நாட்டுக்காரர்கள்”

“அந்த பெண் யார்?”

“அயல்நாட்டுக்காரி”

நேரு சற்று கோபத்துடன் சொன்னார், “இந்நாட்டு நோயாளிகளை அந்நிய நாட்டு பெண் வந்து பராமரிக்கின்றார். உங்கள் வீட்டு பெண்கள் இந்த சேவைக்கு வர தயார் என்றால் இப்பொழுதே தெரசாவினை அனுப்பிவிடுகின்றேன்”

அதன் பின் காவி அட்டகாசம் தெரசா சபைக்கு இல்லை

இந்த முதியோர் இல்லத்திலும் இதுதான் நடக்கின்றது.அவர்கள் தெருவில் கிடந்த முதியவர்களை பராமரிப்பில்லா முதியவர்களை அழைத்து பராமரித்து இறுதிவரை பார்த்திருக்கின்றார்கள்

இச்சமூகத்தின் அவமான பக்கங்களை அவர்கள் துடைத்திருக்கின்றார்கள்

இறந்தவர்களை நல்ல முறையில் தகணமும் அடக்கமும் செய்யவேண்டியது மானிட குலத்தின் கடமை என்றே எல்லா மதமும், உபதேசமும் சொல்கின்றன‌

ஆவி பிரிந்தபின் அக்கூட்டினை மரியாதையுடன் தகணம் செய்வது புண்ணியமான காரியங்களில் ஒன்று என்கின்றது சாஸ்திரம்

அந்த முதியவர்கள் நம்மில் ஒருவர்கள், பிள்ளைகளாலும் உறவினர்களாலும் கையில் ஒன்றுமில்லை என்பதால் விரட்டபட்டவர்கள்

சொத்து உள்ள முதியவரை யார் விரட்டுவார்?

அப்படியே இவர்கள் கிட்னி 10 லட்சம், கல்லீரல் 50 லட்சம், எலும்பு சில நூறு டாலர்கள் என்றால் ஏன் அவர்களை இவர்கள் தெருவில் விடுவார்கள்?

வீட்டில் வைத்தே கூறு போட்டு விற்றுவிட மாட்டார்களா? ஏன் துரத்துகின்றார்கள்?

முதியவர்களை கொன்று உடல் உறுப்புகளை கடத்துவது சாத்தியம் என்றால் கங்கையில் எத்தனை பிணங்கள் மிதக்கின்றன, அவை எல்லாம் வைர மூட்டைகள் அல்லவா?

பின் ஏன் மீனுக்கு உணவாக போட்டுவிடுகின்றார்கள்?

நாம் முன்பே சொன்னோம் எல்லா கிறிஸ்தவ தொண்டு நிறுவணங்களும் உண்மையானவை அல்ல‌

சர்ச்சை வந்தால் நீதிமன்றம் செல்லலாம், இதோ சென்றார்கள் இப்பொழுது அந்த இல்லம் மீது சந்தேகம் இல்லை என நீதிமன்றம் சொல்லியாயிற்று

இதனை யாராவது பேசுவார்களா? இல்லை

பாலிமர் டிவி பேசுமா? இதர ஊடகம் பேசுமா என்றால் நிச்சயமாக இல்லை, இனி பேசமாட்டார்கள்

எல்லா கிறிஸ்துவ தொண்டு நிறுவணங்களும் உண்மையானவை அல்ல, வெளிநாட்டு பணத்திற்காகவும், வெளிநாட்டு உளவு நிறுவணங்கள் நடத்தும் சில காரியங்கள் உண்டு

அதை எல்லாம் பாவாடைகள் என இந்த கோவண கோஷ்டி இறங்காது

ஏன் தெரியுமா?

அவை கொழுத்த பணத்தில் இயங்குபவை. இவர்கள் முணுமுணுத்தவுடன் அள்ளி கொடுத்து இவர்கள் வாயினை அடக்கும் சக்தி அவைகளுக்கு உண்டு

இதனால்தான் ஆபத்தான பல தொண்டு நிறுவணங்கள் சத்தமின்றி இயங்குகின்றன, யார் சைமன் போன்ற பிரிவினை வாதிகளை பேச அழைத்து மாணவ சமுதாயம் மீது இந்தியா பற்றி வெறுப்பினை விதைக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் அந்த வகை

பசுவேடம் போட்டு கொண்டு உள்ளே கொம்பு சீவும் நரிகள் அவை, ஆனால் காசினை அள்ளி வீசுவதால் சிக்கல் இல்லை

மாறாக இம்மாதிரி தொண்டு நிறுவணங்கள் உண்மையானவை, இவற்றின் வருமானமும் குறைவு வந்தாலும் கூடுதல் நோயாளிகளை இயலாதவரை கவனிப்பார்கள்

இவை யாருக்கும் பணம் கொடுக்கும் அவசியமுமில்லை. நீதிமன்ற படியேற கலங்குவதுமில்லை

இதனால் இம்மாதிரி இல்லங்கள் மகா சிக்கலுக்கு உள்ளாகின்றன, கமிஷன் கிடைக்கா காவிகள் இந்த அப்பாவி இல்லங்களை மிரட்டி குதித்துவிட்டு “ஏய் நாங்கள் பாரத நாட்டின் மாண்பினை காத்துவிட்டோம்,மாபெரும் அயோக்கிய கூட்டத்தை கண்டுபிடித்துவிட்டோம்” என தங்களுக்கு தாங்களே வாழ்த்து சொல்லி மகிழ்கின்றன‌

இவர்களின் நோக்கம் உண்மையானால் போலி கிறிஸ்தவ நிலையங்கள் மீது ஒருவார்த்தை குற்றம் சுமத்தட்டும் பார்க்கலாம் , செய்யமாட்டார்கள்

உண்மையான சேவை செய்பவர்கள் யாருக்கு அஞ்ச வேண்டும்? கிறிஸ்து அதனைத்தான் செய்ய சொன்னார் அவர்கள் செய்கின்றார்கள் அஞ்சாமல் செய்கின்றார்கள்

கிறிஸ்து செய்ய சொல்லாதது கண்ணில் பட்ட இடத்தை எல்லாம் வளைத்து போட்டு கல்வி நிலையம் கட்டி கொள்ளையடிக்கும் விஷயம்

இதில் ஒரு கல்வி நிலையம் பிடிபட்டிருக்குமா? அந்த ஈஷா மையத்தை அடுத்து மலைவரை ஆக்கிரமித்திருக்கும் போதகர் நிலத்திலிருந்து ஒரு சென்ட் மீட்டார்களா?

இல்லை ஏன்? அவர் அன்றே மோடிக்கு சால்வையிட்டு அவரின் வெற்றிகாக ஜெபித்துவிட்டு வந்தாராம். இயேசு அவரின் பிரார்த்தனையினை கேட்டு மோடிக்கு வெற்றிமேல் வெற்றி கொடுக்கின்றாராம், ஆம் அவர் ஜெயம் கொடுக்கும் தேவன்

பால்தினகரன் கோஷ்டி சால்வை மட்டுமா கொடுத்தது?

ஜெகத் கஸ்பர் எனும் போலிச்சாமி பில்பைன்ஸில் அமெரிக்க உளவுதுறையால் நடத்தபடும் வானொலியில் பணிபுரிந்தவர், புலிகளின் பெரும் அனுதாபி. இத்தேசத்திற்கு எதிராக 2009களில் அவர் கட்டிவிட்ட கதைகள் கொஞ்சமல்ல‌

அந்த திருட்டு கஸ்பரை என்ன செய்தார்கள்? ஒன்றுமில்லை காரணம் அவரிடம் நிரம்ப இருக்கின்றது.

கிறிஸ்தவ பெயரால் ஏமாற்றும் பால் தினகரன், கிறிஸ்தவ பெயரால் பாசிச புலிகளை ஆதரித்து இந்நாட்டில் பிரிவினைவாதம் கொணர முயன்ற ஜெகத் கஸ்பர் போன்ற போலிகளை , அவர் சபைகளை விட்டுவிடுபவர்கள் உண்மையான தொண்டு செய்பவர்களிடம் தங்கள் வீரத்தை காட்டுவார்களாம்?

ஒரு உண்மையான இந்து இதனை செய்வானா? ஒருகாலும் செய்ய மாட்டான்

அப்படியாக யாரெல்லாம் இவர்களுக்கு அள்ளி கொடுக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் நல்ல கிறிஸ்தவர்கள், நாட்டுபற்றுள்ள கிறிஸ்தவர்கள்

யாரெல்லாம் கொடுக்கவில்லையோ அவர்கள் எல்லாம் மதமாற்றம் செய்பவர்கள், உறுப்பு கடத்துபவர்கள், ஏன் உயிரையே கிளிக்குள் வைத்து வெளிநாட்டுக்குக்கு கடத்தும் அயோக்கியர்கள் என்பதுதான் சில காவிகளின் இப்போதைய அரசியல் தத்துவம்

ஏதோ ஒரு படத்தில் கவுண்டமணி கடலில் வீசிய வலையில் செந்தில் சிக்குவார், அது திமிங்கலம் என எண்ணிய கூட்டம் அதன் எலும்பு அத்தனை கோடி, தோல் இத்தனை கோடி, பல் இத்தனை கோடி என சொல்லிகொண்டிருக்கும்

பின் அது செந்தில் என கண்ட கவுண்டமணி கூட்டத்தை பார்த்து சொல்வார், “ஒரு மண்ணும் தெரியாது ஆளாளுக்கு அது இத்தனை கோடி, இது இத்தனை கோடி, பல் சில கோடி , எலும்பு பல கோடி என அள்ளி விட வேண்டியது. போங்கடா.”

அந்த கூட்டத்து நிலையில் இருக்கின்றது காவி கோஷ்டி ..