பிரான்ஸ் பிரதமர் மேக்ரோன் வந்த அன்றே கவனத்தை பெற்றிருக்கின்றார்

Image may contain: 2 people, people smiling

கனடா பிரதமர் வந்து யாரும் கண்டுகொள்ளாமல் சுற்றியதை போல் அல்லாமல் பிரான்ஸ் பிரதமர் மேக்ரோன் வந்த அன்றே கவனத்தை பெற்றிருக்கின்றார்

கனடா போல் அல்ல பிரான்ஸ், ரபேல் விமானம் முதல் அணுசக்தி நிலையம் வரை அமைத்துதரும் அளவு சக்திவாய்ந்த நாடு என்பதால் வந்த அன்றே கவனிப்பு தொடங்கியாயிற்று

அவரோடு பல தொழிலதிபர்களும் வந்திருப்பதால் மோடி கூடுதல் சந்தோஷத்தில் இருக்கின்றார்

மெட்ரோ ரயில் உட்பட பல நுட்பங்களை பிரான்ஸ் தர சம்மதம் தெரிவித்திருக்கின்றது, ஆனால் பிரான்ஸுக்கு என்னென்ன லாபம் என்பது உடனே தெரியாது

பிரான்ஸின் கார்கள் முதல் பல விஷயங்கள் இங்கு வந்தபின்புதான். குறிப்பாக அதன் பராகாசுர சூப்பர் மார்கெட்டுகள் வந்தபின்பே புரியும்

எது வந்தாலும் சரி , வராவிட்டாலும் சரி பிரென்ஞ் ஒயினை மட்டும் இந்தியாவில் அனுமதித்தால் மோடியினை வாழ்த்தலாம், அப்படி ஒரு சுவை

பிரான்ஸ் அதிபர் ஐரோப்பாவில் குறிப்பிடதக்கவர், அதுவும் இந்த மேக்ரோன் இளவயதுக்காரர். மக்களிடம் பெரும் அபிமானம் பெற்றிருப்பவர் என்பதால் அவரின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக உலகம் கவனிக்கின்றது

மேக்ரோன் தன் மனைவியுடன் வந்திருக்கின்றார். பொதுவாக எல்லா ஐரோப்பிய அரசியல்வாதிகளும் எங்கு சென்றாலும் மனைவியோடே செல்வார்கள், மனைவி தன்னில் பாதி என்பதை உலகிற்கு சொல்கின்றார்களாம். அவகள் கலாச்சாரம் அப்படி

இந்த மேக்ரோனின் மனைவி பிரிக்டி மேக்ரோன், அவரின் வயது என்ன தெரியுமா? 64 வயது

மேக்ரோனின் வயது வெறும் 39

தன்னை விட 24 வயது மூத்த பெண்ணை காதலித்து திருமணமும் செய்தார் மேக்ரொன் . பிரான்ஸ் தேர்தலில் இது ஒரு விஷயமாக பேசபடவே இல்லை

“தன் பாட்டி வயது உள்ள பெண்ணை திருமணம் செய்யும் இவன் மனிதனா? பிரான்ஸ் மக்களே இந்த கிறுக்கு வெறியனா?” உங்கள் பிரதமர் என யாரும் அங்கு பொங்கவில்லை

மாறாக, அவர்கள் இருவருக்கும் பிடித்திருக்கின்றது கட்டி கொண்டார்கள், வாழட்டும் என வாழ்த்திவிட்டு வாக்கும் அளித்துவிட்டார்கள்

உண்மையான காதலுக்கு கண், காது மட்டுமல்ல வயது கூட இல்லை என்பதை நிரூபித்தவர் மேரோன் பிரிக்டி

அந்த பிரிக்க்டியும் வந்திருகின்றார். பொதுவாக பிரான்ஸ் மக்கள் ரசனை மிக்கவர்கள், அதுவும் காதல் ரசனை மிக அதிகம்

இருவரும் தாஜ்மஹாலை சுற்றிபார்க்க போகின்றார்களாம், நிச்சயம் சொக்கிபோவார்கள். மனம் முழுக்க காதலோடு தாஜ்மஹாலை கண்டால் அது கூடுதல் அழகோடு தெரியுமாம்

அப்பொழுது அவர்கள் காதில் இது சிவன் ஆலயமாம், இதனை இடிக்க ஒரு கூட்டம் சொல்லிகொண்டிருக்கின்றது என சொன்னால் இருவரும் அப்படியே சொல்லாமல் கொள்ளாமல் பிரான்ஸுக்கு ஓடமாட்டார்களா?

ஐரோப்பாவின் மூன்றாம் பலமிக்க நாட்டு அதிபராக வந்திருக்கும் மேரோனின் பயணத்தை உலகம் மிக உன்னிப்பாக கவனிக்கின்றது

நாமோ 40 வயது ஆணுக்கும் 65 வயது பெண்ணுக்கும் என்ன திருமணம்? எப்படி பொருந்தியது என ஆச்சரியமாக பார்த்துகொண்டிருக்கின்றோம்

நிச்சயம் பிரான்ஸ் மக்களின் மனமும் வாழ்வும் மகா பெருந்தன்மையும், சுதந்திரமும் கொண்டதுதான். அவரவர்க்கு பிடித்தமான வழியில் அற்புதமாக வாழ்வினை கொண்டாடுகின்றார்கள்

அவர்களை யாரும் ஆசிட் ஊற்றுதல், கொல்லுதல், குத்துதல், ஆணவ கொலை என செய்யவுமில்லை, அவர்களை புறக்கணிகவுமில்லை

இந்தியா வந்திருக்கும் மேக்ரோனையும் திருமதி மேக்ரோனையும் சந்தோஷமாக வரவேற்று கொண்டிருக்கின்றது இந்தியா.

 

இந்தியாவின் பணக்கார கட்சியானது அதிமுக

இந்தியாவின் பணக்கார கட்சியானது அதிமுக: ஐந்தே ஆண்டுகளில் சொத்து மதிப்பு 155% உயர்வு

ராமசந்திரன் பொருளாளராக இருந்த‌ திமுகவில் கணக்கு கேட்டுவிட்டு, அவர்கள கணக்கை காட்டிய பின்னும், இது மோசடி, தான் மிக தூய்மையான அரசியலை முன்னெடுப்பதாக சொல்லிவிட்டு தொடங்கிய கட்சி இது

இன்று இந்தியாவில் பணக்கார கட்சியாம், இப்போதும் கேளுங்கள் கலைஞர் ஊழல் பணத்தில் உலக பணக்காரர் ஆனார் என ஒரு கும்பல் சொல்லிகொண்டே இருக்கும்

அவர்களை திருத்தவே முடியாது

 

இனி எந்த நடிகனும் கிழிக்க முடியாது

Image may contain: 4 people

ரஜினி , நானும் என்.டி.ஆர் ஆட்சி கொடுப்பேன்னுதான் பேசி பார்த்தேன் ஆந்திராவில ஒரு பயலும் கண்டுக்கல‌

காங்கிரஸில கலந்து அப்படியே பொழைச்சிகிட்டேன். சொன்னா கேளுங்க. ஏதாவது தேசிய கட்சியில கலந்து பொழைச்சிக்கோங்க‌

எனக்கே இந்தபாடுண்ணா , நீங்க என்னபாடு படபோறிங்களோ, இத்தோட திருந்திடுங்க..

அந்த காலம் எல்லாம் மாறிப்போச்சி ரஜினி, இனி எந்த நடிகனும் கிழிக்க முடியாது

 
 

மாணவி அஸ்வினி கொலை தொடர்பாக பல்வேறு தகவல்கள்

மிக மிக சோகமான சம்பவம் என்றாலும், மாணவி அஸ்வினி தொடர்பாக பல்வேறு தகவல்கள் வருகின்றன‌

அஸ்விணிக்கும் அந்த அழகேசனுக்கும் பதிவு திருமணம் நடந்தது என்கின்றார்கள், பின் அஸ்வினி பிரிந்து சென்றுவிட்டார் அதனால் அழகேசன் கொன்றுவிட்டார் என்றும் சில தகவல்கள் வருகின்றன‌

மாணவியினை காதல் தகறாறில் குத்தி கொன்றான் அழகேசன் என்றும், மனைவியினை குத்தினான் கணவன் என்றும் குழப்பமான செய்திகள் வருகின்றன‌

இந்த ஊடகங்கள் ஆளுக்கொரு செய்தியாக சொல்லி குழப்புவது இப்படித்தான்

ஆனால் அஸ்வினிக்கும் அந்த அழகேசனுக்கும் காதல் இருந்து, அதன் பின் அவள் பிரிந்ததை மட்டும் சில ஊடகங்கள் சொன்னது

ஒரு ஆண் மனதில் ஆசையினை வளர்த்துவிட்டு அதை சட்டென பிடுங்கி எறிய சொன்னாதால் வந்த விளைவு இது

பொதுவாக பதின்மயதில் இருப்பவர்களுக்கு வரும் சிக்கல் ஏராளம், மேல்நாட்டில் அவற்றை எல்லாம் மிக எளிதாக கடந்து செல்ல பல ஆலோசனை மையம் முதல் ஏராளமான வசதிகள் இருப்பதால் இம்மாதிரி விஷயங்கள் நடப்பதில்லை

இந்த உலகில் அவனோ அவளோ ஒரே ஒருவர்தானா? வேறு யாரும் இல்லையா? என்பது போல் கடந்துவிடுவார்கள்

இங்கு அதெல்லாம் சாத்தியமில்லை. வித்தியாசமான மனநிலை கொண்ட சமூகம் இது. வருங்காலமாவது மாறட்டும்

காதலிப்பது தவறில்லை. ஆனால் இம்மாதிரி கொலையில் முடியும்பொழுதுதான் அது பெரும் சோகமாகின்றது

விருப்பமில்லை என்ற பெண்ணை விட்டுவிலகுவதுதான் சரியான வழு, அவளை கொல்லும் அளவிற்கு சென்றதெல்லாம் ஆணாதிக்கம். பெண் ஒரு சொத்து தனக்கான சொத்து என்பதுதான் அதற்கான ஒரே எண்ணம்

வருங்கால தலைமுறையாவது மாறட்டும்

இருவரும் பதின்ம வயதினர், இன்னும் கொஞ்ச காலம் சென்று இந்த காதலை நினைத்துபார்த்தால் அவர்களுக்கே சிரிப்பு வந்திருக்கும், வாழ்க்கை அவர்களுக்கு பல விஷயங்களை கற்று கொடுத்திருக்கும். இப்பொழுது எல்லாம் முடிந்துவிட்டது

இவ்விஷயத்தை ஆளாளுக்கு கண்டிக்கின்றார்கள், இதில் பன்னீர் செல்வமும் கண்டித்திருக்கின்றார், எப்படி?

இதற்கு கடும் தண்டனை வழங்கபட வேண்டும், குற்றவாளி தண்டிக்கபட வேண்டும் என முழங்கியிருக்கின்றார்

இவர் யாரென்றால் இவர்தான் துணை முதலமைச்சர், குற்றவாளிகளை விடமாட்டோம் என்றுதான் சொல்லியிருக்க வேண்டுமே தவிர, விட கூடாது என ஒரு துணைமுதலமைச்சர் சொல்ல கூடாது. அவர்கள்தானே தண்டிக்க வேண்டும்.

ஒருவேளை பன்னீருக்கு தான் துணைமுதலமைச்சர் என்பது மறந்தே விட்டதோ?

பிற்படுத்தபட்டவருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்திருக்கின்றது

மருத்துவ மேற்படிப்பில் 27% என்றிருந்த பிற்படுத்தபட்டவருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்திருக்கின்றது

எப்பொழுது என்றால், எச்.ராசா பெரியார் சிலையினை இடிப்போம் என சர்ச்சை கிளப்பிய நேரத்தில்

அட்டகாசமான திட்டமிது

தமிழ்நாட்டு கவனத்தை வேறுபக்கம் திருப்பிவிட்டு மிக நுணுக்கமாக இந்த அறிவிப்பினை செய்திருக்கின்றார்கள்

பெரியார் சிலையினை காக்க கிளம்பிய தமிழகம் பெரியாரின் கொள்கையினை தகர்ப்பதை கவனிக்காமல் விட்டுவிட்டது

விஷயம் கொஞ்சம் வீரியமாகின்றது

முதல் போராட்டத்தை பாமாக நடத்துகின்றது. என்ன இருந்தாலும் இம்மாதிரி விஷயங்களில் ராமதாஸை பாராட்டாமல் இருக்க முடியாது

மற்ற கட்சிகள் இன்னும் வாய்திறக்கவில்லை. பழனிச்சாமி திறக்கவே மாட்டார். ஸ்டாலின் மெதுவாக திறக்கலாம். மய்யமும் சிஸ்டமும் இந்த பக்கமே வராது

ராமதாஸ் மட்டும் எதிர்ப்பு குரலை பலமாக கொடுக்கின்றார், நிச்சயம் நடந்திருப்பது மாபெரும் அநீதி 27% இடஒதுக்கீட்டை ஒரே நாளில் ரத்து செய்வது என்பது அக்கிரமத்தின் உச்சம்

ராமதாஸின் குரல் தமிழகமெங்கும் பரவட்டும், பெரும் எதிர்ப்பு எழும்பட்டும்

இப்படி சில காரியங்களில் ராமதாஸ் அசத்துவார், ஆனால் காடுவெட்டி குருவினை அருகில் வைத்து காட்சியளிக்கும்பொழுது எல்லாவற்றையும் கெடுத்துகொள்வார்

இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுதான்

தமிழக பாஜகவினர் யாரும் கோமாளிகள் அல்ல, வெறுப்பாளர்களும் அல்ல. தமிழகத்தில் சில சலசலப்புகளை ஏற்படுத்த டெல்லி சக்திகளால் மிக சரியாக பயன்படுத்தபடும் ஆயுதங்கள்

காரணமில்லாமல் ராசா, தமிழிசை எல்லாம் வாய்திறப்பதில்லை. இவர்கள் சலசலப்பினை ஏற்படுத்தும் ஒவ்வொரு நேரத்திலும் ஏதோ வில்லங்கத்தை டெல்லி ரகசியமாக செய்துகொண்டே இருக்கின்றது

கமலஹாசனுக்கு எதிராக நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வழக்கு

கமலஹாசனுக்கு எதிராக நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வழக்கு தொடுக்க போவதாக செய்திகள் வருகின்றன‌

அதாகபட்டது கமலயாசனின் மக்கள் நீதி மய்யம் என்பது, லோக் அதலத் நீதி மன்றம் என்பதின் தமிழாக்கமாக வருகின்றது அதானால் அவரின் கட்சி பெயரை தேர்தல் கமிஷன் அங்கீகரிக்க கூடாது என சொல்கின்றார்களாம்

உண்மையில் நீதி மன்றம் எனும் பெயர் நீதி மையம் எனும் பொருளில் வரும். இந்த குற்றச்சாட்டிலும் நியாயம் இல்லாமல் இல்லை

வழக்குதொடுக்க போகின்றவர் யாரென பார்த்தால் வலம்புரி மோசே என்பவராம். இவர் வலம்புரி ஜாண் குடும்பத்துகாரர். மோ.சேவியர் எனும் பெயரை மோசே என சுருக்கி இருப்பவர்

முன்பு நமது நண்பராக இருந்தார், ஏதோ ஒரு அரசியல் பதிவில் முறுக்கிகொண்டு சென்றவரை காணவில்லை

வள்ளியூரில் தேடியபொழுது அவர் தினகரன் அணிக்கு சென்றதாக சொன்னார்கள்.

சசிகலாவிற்கும் வலம்புரி ஜாணுக்கும் இடையே நடந்த பனிப்போர் பிரசித்திபெற்றது. வலம்புரிஜாண் சசிகலாவினை தாக்கிய அளவு இன்னொருவர் தாக்கி எழுதியிருக்க முடியாது

ஆனால் வலம்புரி மோசேக்கு தினகரன் பெரிய அபிமான தலைவராக ஆகிவிட்டார், வலம்புரி ஜாண் ஆன்மா என்ன செய்யுமோ தெரியாது, என்னமும் செய்யட்டும்

அரசியல் என்பது இதுதான்

முன்பு கமலஹாசனுக்கு எதிராக வள்ளியூரில் வழக்கு தொடரபட்டது, இப்பொழுதும் வழக்கு பாய போகின்றது. வள்ளியூர்காரர்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்போ?

பொதுவாக கமலஹாசன் படங்களின் பெயருக்குத்தான் வழக்கும் வம்பும் வரும், பின் அவர் படத்து கதைகளுக்கு வந்தது

இப்பொழுது கட்சிபெயருக்கும் வழக்கு வந்துவிட்டது.

 
 

இன்று மணியம்மை நினைவு நாள், அவருக்கு அஞ்சலி செலுத்தியாயிற்று

Image may contain: 2 people, beard

இன்று மணியம்மை நினைவு நாள், அவருக்கு அஞ்சலி செலுத்தியாயிற்று

மணியம்மை எப்படி இருந்தார் என நமக்கு தெரியாது, ஆனால் அவரை,அவரின் வாழ்வினை திரையில் காட்டி நின்றவர் தலைவி குஷ்பு

மிக மிக அட்டகாசமாக நடித்து சிவாஜி கட்டபொம்மனை காட்டியது போல, குஷ்பு மணியம்மையினை நிறுத்தி இருந்தார்

சத்யராஜூக்கு பெரியாரின மோதிரத்தை கொடுத்தவர்கள் , குஷ்புவிற்கு எந்த விருதும் கொடுத்ததாக தெரியவில்லை

அதனால் என்ன?

கட்டபொம்மனுக்கு சிலை வைத்த சிவாஜிகனேசன் போல, மணியம்மைக்கு சிலை வைத்து தலைவி திறக்க வைக்க திராவிடர் கழகம் தயாராக வேண்டும் என சங்கம் கோரிக்கை வைக்கின்றது

திக செய்யவில்லை என்றால் சங்கம் செய்துவிட்டு செல்லும்

இன்று தலைவி நடித்த பெரியார் படத்தினை பார்த்துவிட வேண்டும், அதில் தலைவி நடித்த மணியம்மை பாத்திரத்தை கண்டு நன்றிகடன் செலுத்தவேண்டும் என சங்கம் முடிவு செய்திருக்கின்றது

 
 

மணியம்மை நினைவு நாள்

Image may contain: 1 person, close-up

என்னதான் திமுக பெண் விடுதலை, பெண் உரிமை என பேசினாலும் ஒரு பெண்ணின் மாபெரும் தியாகத்தை அவ்வளவாக சொல்லமாட்டார்கள், ஒரு மாதிரி நழுவுவார்கள்

அப்பெண்ணே திமுக தோன்றுவதற்கு வாய்ப்பாகவும் பின் அது ஆட்சி அளவிற்கு வந்து நிற்க காரணமாகவும் இருந்திருக்கின்றார், அவர் இல்லாவிட்டால் திமுக என்றொரு கட்சி உதயமாகியிருக்க வாய்ப்பு இல்லாமே போயிருக்கும்

அவர் மணியம்மை, திகவின் பிரதான தொண்டராக இருந்த வேலூர் கனகசபை என்பவரின் மகள், கனகசபை நீதிகட்சி, சுயமரியாதை தொண்டர் ஆதலால் அன்றே பள்ளி படிப்பும் , அதை தாண்டி தமிழ்புலவர் பட்டமும் தன் மகளை பெறவைத்திருந்தார்

காந்திமதி பெரும் தமிழறிஞர், பேச்சாளர், எழுத்தாளர். ஆம் 1940களில் முற்போக்கு பெண்களின் அடையாளமாக அவர் காணபட்டார்,சிறு வயதில் இருந்தே பெரியாரின் பேச்சு, சிந்தனையில் வளர்ந்தவர் அவர்.

அரசியலை அப்பொழுதே பேசிய பெண்மணி அவர், இதனால்தான் அவரின் காந்திமதி என்றபெயர் மாறி, “அரசியல் மணி” ஆயிற்று

பெரியாருக்கு 1940களில் நாக்கில் பிரச்சினை வந்தது, புற்று நோய் என்றார்கள். கடவுளை பழித்ததால் ராமசாமி சாகபோகின்றான் என்றார்கள். அவர் கொஞ்சம் உடல் நலம் குன்றிய காலங்கள் அவை

ஒருவன் உடல்நலம் குன்றும்பொழுதுதான் அவரின் உண்மையான அபிமானிகள் தெரியவருவார்கள், அதுவும் பணக்காரன் என்றால் சொத்துசண்டை, வாரிசு சண்டை அப்பொழுதுதான் முளைக்கும்

அப்பொழுதுதான் பெரியார் உணர்ந்தார், அவர் பாணியிலே சொன்னார், “ஒரு பயலும் எனக்கு விசுவாசமாய் இல்லை, பூரா பயலும் என் சொத்துமேலே குறியா இருக்கான், என் மோதிரத்தை கூட விடமாட்டானுக போல”

எல்லோரும் தூர இருந்து 70 வயதை நெருங்கிய பெரியாரை உடலை பார்த்துகொள்ளுங்கள் என்றார்களே தவிர யாரும் அருகிருந்து பார்க்க முன்வரவில்லை , இந்நிலையில்தான் கனகசபை மகளோடு அவரை நலம் விசாரிக்க வந்தார்

சிறு வயதிலிருந்தே பெரியாரை பார்த்துவளர்ந்த அரசியல் மணிக்கு பெரியாரை சந்திக்க வந்தபொழுது , இனி பெரியாரை நான் அருகிருந்து கவனிக்கின்றேன் என பொறுப்பை ஏற்றார் அரசியல் மணி

பெரியாரை அருகிலிருந்து அவர் கவனிக்க தொடங்கியபொழுது வயது 24, பெரியாருக்கு 60

எல்லோரும் தன் சொத்துக்களை குறிவைத்து நிற்க, தன்னை உள்ளார்ந்த அர்பணிப்போடு வாழவேண்டிய வயதில் ஒரு இளம்பெண் வந்து நிற்பது பெரியாருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

தலையில் பூவும், சூடி தளைய பட்டுசேலை உடுத்தி திருமணம் குழந்தை என மகிழவேண்டிய வயதில். கருப்பு சேலை கட்டி சமூக இழிவை துடைக்க ஒரு துறவி வேடத்தில் ஒரு அசாத்தியபெண் தன் முன்னால் வந்து அமர்ந்திருப்பது அவருக்கு பெரும் ஆச்சரியமானது

தன்னால் வளர்க்கபட்ட எத்தனையோ பேர் தன் முதுகில் குத்த தயாராகிவிட்டபொழுது எங்கிருந்தோ வந்த மணியம்மை தன்னை முழு பாசத்தோடு கவனித்துகொள்வது அவர் மனதை உருக்கியது

நிச்சயம் பெரியாரின் அழகுக்கோ, பணத்திற்கோ ஆசைபட்டு மணியம்மை வரவில்லை. பெரியார் மிக பெரும் போராளி என்பதும் , வராமல் வந்த மாமணி என்பதும், இச்சமுகத்தை புரட்டிபோட வந்த புரட்சிக்காரன் என்பதுமே மணியம்மை பெரியார் முன் மண்டியிட்ட காரணம்

பெரியாரை கவனித்துகொண்ட அரசியல்மணி, மரியாதையாக மணியம்மை என அழைக்கபட்டார்

பெரியாருக்கு அருகிருந்து அவரை மணியம்மை பார்த்துகொண்ட விதத்தில் பெரியாருக்கு நோய் பறந்தது, மனிதர் உற்சாகம் ஆனார்

மணியம்மை பெரியார் கூட்டங்களுக்கு கூடவே செல்வார், பெரியார் கூட்டம் நடக்கும் இடத்தில் பெரியாரின் புத்தகங்களை எல்லாம் அவர்தான் விற்பனை செய்வார்.

பெரியாருக்கு பூர்வீக சொத்து நிறைய இருந்தது, வாரிசாக ஈவிகே சம்பத் வருவார் என கருதிய பெரும் கூட்டம் அவரை சுற்றி இருந்தது, சம்பத் பெரும் அடையாளமாக இருந்தார்

ஆனால் சம்பத்தின் திருமணம் பெரியாரின் விருப்பத்தில் நடைபெறாததிலும் , பெரியார் தங்களை அரசியலுக்கு விடவில்லை என்பதிலும் ஒரு கூட்டம் குறியாக இருந்தது

பெரியாருக்கு மன உளைச்சல் அதிகரித்தடு, தன் கொள்கைகளை விலைபேசி, தன் சொத்துக்களுக்காக தன் அருகே இருக்கும் கூட்டத்தை நம்பி தன் சொத்டுக்கள், மக்கள் கொடுத்த நன்கொடைகளை விட்டுவிட அவர் விரும்பவில்லை

இந்நிலையில்தான் சுதந்திரம் வந்தது, அதிலிருந்தே அண்ணாவிற்கும் பெரியாருக்கும் முட்டிகொண்டது

பெரியார் முடிவிற்கு வந்தார், அக்கால சட்டபடி ஒரே சாதியில் தத்தெடுக்க முடியாது, பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது. இவை எல்லாம் 1956க்கு பின் வந்த சட்டங்கள்

இதனால் வேறுவழியின்றி மணியம்மையினை திருமணம் செய்யும் முடிவிற்கு வந்தார். இதுதான் சாக்கு என பொங்கிய அண்ணா கும்பல் இதை காரணம் காட்டி தனிகட்சி கண்டன‌

சம்பத் கூட ஓடிவிட்டார்

பெரியாருடன் மணியம்மையும் வீரமணியும் மட்டுமே இருந்தனர். பெரியார் கொஞ்சமும் அசரவில்லை

உண்மையில் பெரியாரின் தீவிரம் அப்படியே மணியம்மைக்கும் வந்தது, பெரும் போராட்டங்களை நடத்தினார்

குடந்தை போராட்டத்தில் சிறை சென்றது, 1949ல் இந்தி எதிர்ப்பு போரில் கலந்து சிறை சென்றது என பெரும் தீவிரமாய் களத்தில் நின்றார்

அவரின் பேச்சும், எழுத்தும் பெரும் சீறலாய் இருந்தன, பெரியாரின் பேச்சையும், சிந்தனையினையும் அருகிருந்தே எழுதி பெரும் புத்தகங்களாய் கொண்டுவந்தார்

இன்று நாம் காணும் பல பெரியாரின் புத்தகங்கள் அவரால் வந்தது

1958ல் போருக்கு புறப்படு தமிழா என அவர் கட்டுரை எழுதியபொழுது கலவரத்தை தூண்டுகின்றார் என சிறையில் அடைக்கபட்டார்

1974ல் இந்திராகாந்தி டெல்லி ராம்லீலா விழாவில் கலந்துகொண்ட பொழுது, ஒரு மதசார்பற்ற நாட்டின் பிரதமர் மத விழாக்களில் கலந்துகொள்ள கூடாது என்ற ஒரே குரலாக மணியம்மை குரல் ஒலித்தது

அதையும் மீறி இந்திரா கலந்து கொண்டபொழுது சென்னையில் ராமன், சீதை படங்களை எரித்து சிறை சென்றவர் மணியம்மை, அவரின் தைரியம் அப்படி இருந்திருக்கின்றது

1976ல் மணியம்மை நெருக்கடி நிலையில் கைது செய்யபட இதுவே முதல் காரணம். நெருக்கடி நிலை அறிவிக்கபட்டகாலத்தில் கைது செய்யபட்ட சில பெண்களில் அவரும் ஒருவர்

1977ல் இந்திரா தமிழகம் வந்தபொழுது சர்வாதிகாரியே திரும்ப போ என தைரியமாக கருப்புகொடி காட்டினார் மணியம்மை

பெரியாரின் மறைவிற்கு பின் திராவிட கழக தலைவராகவும் நியமிக்கபட்டார், அவரின் செயல்பாடு மிக நன்றாகவே இருந்தது

சிறுவயதில் இருந்தே பெரியாரை தவிர ஏதும் அறியாத அந்த ஒரே பெரியாரிஸ்ட் பெரியார் இறந்த இரு வருடங்களில் மரித்தார், அவருக்கு வயது அப்பொழுது 58

இதே மார்ச் 10ம் நாள்

அப்பெண் ஆச்சரியமானவர், அக்காலத்திலே ஒரு பெண்ணாக பெரியாரை குருவாக ஏற்க பெரியாரை முழுக்க புரிந்துகொள்ளும் அவருக்கு பக்குவம் இருந்திருக்கின்றது

24 வயதில் எனக்கு திருமணமே வேண்டாம், பெரியாரை கவனித்துகொள்வதே என்பணி என அர்பணித்து நிற்க அவருக்கு அர்பணிப்பு உணர்வு இருந்திருகின்றது

திராவிட நாடே இவள் பெரியாரை மயக்கிவிட்டாள் என வாரி தூற்றும்பொழுது அதை 28 வயது பெண்ணாக கடந்து செல்லும் பக்குவம் இருந்திருக்கின்றது

பெரியாரின் மனைவியாக வாழவும் அவர் தயாராகியிருகின்றார், பெரியாருக்காக எந்த சவாலையும் ஏற்கும் அளவு அவரின் அர்பணிப்பு இருந்திருக்கின்றது

நிச்சயம் பெரியாரின் சொத்துக்களுக்கு அவர்தான் வாரிசு

ஆனால் அந்த சொத்துக்களை சுருட்டினாரா? இல்லை கனகசபை குடும்பத்தை மன்னார்குடி குடும்பமோல் வளர்த்தாரா?

இல்லை தன்குடும்ப ஆட்களை எல்லாம் திராவிடர் கழகத்தில் பொறுப்புக்கு கொண்டுவந்தாரா?

இல்லை, பெரியார் எந்த நோக்கத்திற்காக அதனை கொடுத்தாரோ அதனை இறுதிவரை காத்து நின்றவர் மணியம்மை

இதனால்தான் முதல்வர் ஆனபின் பெரியாரை சந்திக்க வந்த அண்ணாவிற்கு மணியம்மையினை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை

இந்த பதவிக்காகதானே என் மீது இல்ல பழிசுமத்தினீர்கள் என அவர் பார்வையில் இருந்த வீரியத்தை அண்ணாவால் தாங்கமுடியவில்லை

முகத்தை திருப்பியபடியே அண்ணா சொன்னார், “இத்தனை காலம் பெரியாரை காத்து, அவர் கனவு நனவாக காரணம் நீங்கள் தான், நீங்கள் ஒருவர்தான்”

புன்னகையுடன் அதனை கடந்தார் மணியம்மை, அண்ணாவின் வார்த்தைகளை கவனித்தால் அதிலே மணியம்மையின் பெருமை அடங்கும்

பெரியார் வாழ்வின் இரண்டாம் கட்டத்தை அவர்தான் தாங்கி நின்றார்

கலைஞரை சந்திக்க சென்றபொழுது அங்கு நித்தி என்ற இளைஞர் அவரை உடனிருந்தே கவனிப்பதாக சொன்னார்கள்

அன்றைய கலைஞர் நிலையினையும் அவரையும் பார்த்தபொழுது , அங்கிருந்த பெரியார் படத்தினையும் பார்த்தபொழுது மணியம்மையும் பெரியாரை இப்படித்தான் கவனித்தார் என்ற நினைவு வந்து போயிற்று

பெரியாரை பற்றி பேசும்பொழுதெல்லாம் மணியம்மை பற்றி பேசியே தீரவேண்டும், பெரியாரின் கடைசி 30 வருடங்களின் ஒவ்வொரு நொடியிலும் அருகில் இருந்து கவனித்து, பெரும் சிந்தனை புத்தகம் எல்லாம் வர அவரே காரணம்

பல காரணங்களுக்காக மணியம்மை பெருமை மறைக்கபட்டது, நிச்சயம் “அம்மா” என தமிழகத்தில் அழைக்கபட்டிருக்க வேண்டியது அவர்தான், பெரியார் கொள்கையாளராக, திராவிட பெண் ஒளியாக அவர் வாழ்வு அப்படி

ஆனால் யாரோ ஒரு பிராமணத்தியினை “அம்மா” என பெரியார் வழி வந்த அதிமுகவினர் சொன்னது காலத்தின் கோலம்

போகட்டும்

பெரியாரின் போராட்டத்தில் உருவான மிகபெரும் பிம்பம் மணியம்மை, பெண்களின் விடுதலைக்கும் உரிமைக்கும் பகுத்தறிவிக்க்கும் அவர் பாடுபட்டது கொஞ்சமல்ல, பெரியாரோடு இணைந்து அவர் அந்த அளவு பாடுபட்டிருக்கின்றார்

திராவிட இயக்கம் கொடுத்த உந்துதலில் போராட வந்த பெண்கள் பலருண்டு எனினும் இறுதிவரை பெண் போராளியாக நின்ற மணியம்மை மறக்க முடியாதவர்

அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி