சிம்புவின் ‘பீப்’ பாடலை அவரின் அட்மின் வெளியிட்டார் : டி.ராஜேந்தர் விளக்கம்

Image may contain: 1 person

சிம்புவின் ‘பீப்’ பாடலை அவரின் அட்மின் வெளியிட்டார் , டி.ராஜேந்தர் விளக்கம்

முன்பு சிம்புவின் பீப் பாடல் வந்து அவர் பட்ட பாடு கொஞ்சமல்ல‌

இப்பொழுது எல்லா பழியும் அட்மின் சுமக்க வேண்டியது இருப்பதால் (முன்பெல்லாம் ஐடி கம்பெனிகளில்தான் அட்மின் மேல் பழிபோடுவார்கள், இப்பொழுது எல்லோரின் தவறையும் அட்மின் சுமக்கிறார்கள்) சிம்புவின் பீப் பாடலையும் அட்மின் மேல் போட்டாகிவிட்டது

சிம்புவின் பீப் சாங் இருக்கட்டும், நமக்கு வரும் சந்தேகம் என்ன தெரியுமா?

37 வருடங்களுக்கு முன்பே இந்த “ஒரு தலை ராகம்” எனும் படம் டி.ஆரின் அட்மின் எடுத்திருக்கலாம், அதனை தன் பெயரில் டி.ஆர் வெளியிட்டிருக்கலாம்

டி.ஆரின் பின்னாளைய இம்சைகளை கண்டால் நிச்சயம் அது நடந்திருக்கலாம். அந்த அட்மினை கண்டுபிடித்து மறுபடியும் அதுபோல‌ அற்புத படங்களை அவரை எடுக்க சொல்ல வேண்டும்.

 

ரஷ்ய , சீன வடகொரிய கூட்டணி கைகள் ஓங்குகிறது

Image may contain: aeroplane

சிரியாவில் அமெரிக்கா சில ஏவுகனைகளை வீசிவிட்டு ஒரு மாதிரி பார்த்த பெருமித புன்னகை , உளவாளிகள் தொடர்பாக பிரிட்டன் ரஷ்ய கரையோரம் நிறுத்தி இருக்கும் படைகுவிப்பு இன்னபிற விஷயங்கள் எல்லாம் புட்டீனை மிகவும் ஆத்திரமூட்டிவிட்டது

ரஷ்யாவில் வர இருக்கும் தேர்தலும் புட்டினுக்கு முக்கியம்

இதனால் தன் பரகாசுர கனையினை சோதிக்க உத்தரவிட்டுவிட்டார். உலகின் மிக வேகமான ஏவுகனை சோதனையினை ரஷ்யா நிகழ்த்தியிருகின்றது

ஹைப்பர்சோனிக் ஏவுகனைகளில் இன்று உலகின் மிக வலுவான ஒரே நாடு எனும் இடத்தினை ரஷ்யா இன்று அடைந்தாயிற்று

அந்த ஏவுகனை கிட்டதட்ட 7 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில பாயும் இந்த கனையினை ரேடார்கள் கணிக்கலாம் ஆனால் எங்கு பாயும் என சொல்லமுடியாது, மின்னல் வேகம்

அதே நேரம் இதனை வீழ்த்த ஏவபடும் ஏவுகனைகளும் இதே வேகத்தில் செல்ல வேண்டும், அப்படி ஒரு அதிவேக ஏவுகனை இதுவரை எந்த நாட்டிடமும் இல்லை, அமெரிக்காவிடமும் இல்லை

இதனால் அமெரிக்காவின் 3 அடுக்கு ஏவுகனை பாதுகாப்பு அரணை இந்த ஏவுகனை அட்டகாசமாக தகர்க்கும் என்பது உண்மை

ரஷ்யாவின் மேற்கு பகுதியில் அமெரிக்கா அமைக்க நினைக்கும் ஏவுகனை தடுப்பு சாதனம் எல்லாம் இதன் முன் அர்த்தமின்றி போயிவிட்டது

உலகம் இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகனையின் வெற்றியினை நினைத்து அஞ்சி நிற்கின்றது, மின்னல் வேகத்தில் உலகின் எந்த மூலையினையும் எங்களால் தகர்க்க முடியும் என சொல்லிவிட்டது ரஷ்யா

உலக நாடுகள் எல்லாம் அஞ்சி நிற்கின்றது, குறிப்பாக அமெரிக்காவிற்கு மகா அவமானம்

இது எங்களின் உச்ச ஆயுதம் அல்ல, இது ரேடாரில் பார்க்கமுடியும் ஆனால் அதனை கணிக்கவோ தடுக்கவோ முடியாது, இதை விட மகா ஆபத்தான கண்ணுக்கு தெரியாத ஏவுகனை பற்றி இப்போதைக்கு பேசமாட்டோம் என ரஷ்யா மர்ம புன்னனை பூக்கின்றது

இனி ஐரோப்பிய நாடுகளின் வான்வெளி பாதுகாப்பில்லை என்ற பேச்சுக்கள் வர ஆரம்பித்தாயிற்று

இம்மாதிரி ஆயுதங்கள் இந்தியாவிற்கும் வருங்காலத்தில் வேண்டும், லெனின் சிலையினை உடைத்துவிட்டு அதற்கு வியாக்கனமும் பேசினால் எங்கிருந்து ரஷ்யா கொடுக்கும்?

ரஷ்யா நிலை இப்படி முன்னணியில் இருக்க, சீனாவின் அதிபர் ஜின்பெங் நிரந்தர அதிபராகின்றார். மாவோ, டென் ஜியோ பிங் ஆகியோருக்கு பின் அந்த மாபெரும் கவுரவம் இப்பொழுது ஜின்பெங்கிற்கு கிடைத்தாயிற்று

சில பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்திருக்கின்றது, இதனால் சீனா பாதிக்கபடும். ஆனால் சீனாவோ அட்டகாசமாக நாங்கள் பாதிக்கபட்ட்டால் எங்களிடம் இருக்கும் அன்னிய செலவாணி பத்திரங்களை வைத்து அமெரிக்காவினை ஒருவழி செய்துவிடுவோம் என்கின்றது

அதில் உன்மையும் இல்லாமல் இல்லை.

டிரப்ம் வந்து என்னை பார்ப்பாரா இல்லையா? கை பரபரக்கின்றது அவர் வராவிட்டால் அணுகுண்டு சோதனை செய்யலாம் என்ற ரீதியில் வடகொரிய அதிபர் ஆழ்ந்த யோசனையில் இருக்கின்றார்

ரஷ்ய , சீன வடகொரிய கூட்டணி கைகள் ஓங்குவதை உலகம் உன்னிப்பாக கவனிக்கின்றது

 

பெரியாரின் சொத்துகணக்கு

Image may contain: one or more people, people standing, mountain, outdoor and nature

வெங்கய்ய மவன் ஒத்தையில நிக்கான், தில் இருக்க சந்நியாசி எல்லாம் போங்கல..


இதோ பாருங்கள் பெரியாரின் சொத்துகணக்கு என புதிதாக ஒரு கும்பல் கிளம்பியுள்ளது

சரி எங்கே காட்டுங்கள் என்றால் 1 முழத்திற்கு வாசிக்கின்றார்கள்

அது எல்லாம் என்ன சொத்து என்றால் முழுக்க கல்வி நிலையம், ஆதரவற்ற இல்லம், வழிகாட்டும் மையம், மருத்துவ இல்லம்

இது எல்லாம் பெரியார் தமிழகத்தை ஏமாற்றி சம்பாதித்தாம் , அட பதர்களா, கொஞ்சமேனும் மூளை இல்லையா இல்லை தமிழரை எல்லாம் ராசா கோஷ்டி போல நினைத்துவிட்டீர்களா?

பெரியாரின் தந்தை பெரும் வணிகர், இது போக அன்று வங்கிகள் இல்லா நிலையில் பொதுமக்களுக்கு எல்லாம் அவர்தான் வங்கிபோல் இருந்தார், பணம் குவிந்தது

இது போக பெரியாரும் தன் 35 வயதுவரை சம்பாதித்திருந்தார்

பொதுவாழ்விற்கு வந்தபின் பெரியாருக்கு நன்கொடைகள் குவிந்தன, புத்தகம் விற்றார், பத்திரிகை நடத்தினார் இந்த வகையிலும் பணம் வந்தது

பெரியார் மிக சிக்கனமானவர், எந்த அளவு என்றால் ஜி.டி நாயுடு முதல் வகுப்பு டிக்கெட் எடுத்து இலவசமாக கொடுத்தாலும் அதை மூன்றாம் வகுப்பு டிக்கெட்டாக மாற்றி பயணித்தவர்

இலவசம்தானே அய்யா, பயணித்தால் என்ன என கேட்டால் இந்த பெட்டியும் மெட்ராஸ்தான் போகும், முதல் பெட்டியும் மெட்ராஸ்தான் போகும் , வேற எதுக்கு என கேட்டவர்

சிக்கனம் என்றால் மகா சிக்கனம், சவர செலவு கூட இல்லை. பத்திரிகையில் அச்சடிக்கும் செலவு குறையவேண்டும் என்பதற்காக தமிழ் எழுத்துக்களையே மாற்றினார்

பெரியாரின் கருத்தில் சர்ச்சை இருக்கலாம், ஆனால் பொதுமக்கள் அவரிடம் நம்பி கொடுத்த நன்கொடைகளை அப்படியே சமூகத்திற்கு கொடுத்தார்

தன் சொத்து, இதர வருமானம், நன்கொடை என அனைத்தும் கலந்து அவர் தொடங்கியதுதான் கல்வி நிலையங்கள்

அவை ஒவ்வொன்றாய் பெருகி இன்று வளர்ந்து நிற்கின்றன‌

பெரியார் ஸ்டார் ஹோட்டல் நடத்தினாரா? இல்லை கிரிக்கெட் கிளப் வைத்திருந்தாரா? 20 கப்பல் 500 லாரிகள் என போக்குவரத்து தொழில் செய்தாரா?

தியேட்டர் கட்டினாரா? படம் எடுத்தாரா?

இல்லை, மாறாக கல்வி நிலையங்களை கட்டி கல்வி கொடுத்தார், அனாதை இல்லம் கட்டினார், மகளிர் கல்விக்கு முன்னுரிமை கொடுத்தார்

ஒரு மனிதன் முழுக்க கல்வி பணிக்கு தன் சொத்தை எல்லாம் கொடுத்தால் தவறா?

அதுவும் இன்று டிரஸ்ட் என்ற பெயரில் மக்கள் சொத்தாக இருக்கின்றதே தவிர, பெரியார் குடும்ப சொத்தாகவோ அல்லது மணியம்மை வகையரா சொத்தாகவோ ஒரு பைசா இல்லை

மக்கள் பணத்தை மக்களுக்கே விட்டுசென்ற மாமனிதர் பெரியார்

இது புரியாமல் பெரியார் திராவிடம் பேசி சம்பாதித்தார் என பல பதர்கள் புலம்புகின்றன‌