மகராஷ்டிர விவசாயிகள் பேரணி நாட்டை உலுக்குகின்றது

download

மகராஷ்டிர விவசாயிகள் ஆயிரகணக்கான விவசாயிகளின் பேரணி நாட்டை உலுக்குகின்றது, சிகப்பு கொடிகளுடன் அவர்கள் கிளம்புவது நாட்டை அதிர்வுள்ளாக்குகின்றது

தமிழ்நாட்டிலும் இப்படி விவசாயிகள் உண்டு. ஆனால் மொத்தமாய் திரள்வார்களா என்றால் இல்லை

பாலாற்று கரை விவசாயிக்கு காவேரிகரை விவசாயி வரமாட்டான், காவேரிகரை விவசாயி பிரச்சினைக்கு மற்ற விவசாயிகள் வரமாட்டார்கள்

மலைபகுதி விவசாயி பிரச்சினைக்கு கோவைக்காரர்கள் வரமாட்டார்கள். கோவை விவசாயி பிரச்சினை கன்னியாகுமரி விவசாயிக்கு புரியாது

தேனி விவசாயி சிக்கல் மதுரை விவசாயிக்கு தெரியாது

ராதாபுரம் விவசாயி ஒரு சொட்டு தண்ணீருக்கு கதறுவது யாருக்கும் புரியாது

இதில் யாராவது உருப்படியாக இருக்கின்றார்களா சம்பாதிக்கின்றார்களா என்றால் இல்லை, ஆனால் ஒற்றுமையாக வரமாட்டார்கள் அதுதான் சிக்கல்

ஆனால் இவர்கள் எல்லாம் போராடுவார்கள், தனி தனியாக போராடிவிட்டு அவர்கள் போக்கில் செல்வார்கள் ஒருவருக்கும் நியாயம் கிடைக்காது

மொத்த அமைப்பாக தமிழக விவசாயிகள் எழாதவரை இங்கு எதுவும் மாறாது, மீணவர் நிலையும் அதுவே

ஆனால் மகராஷ்டிரா விவசாயிகள் மொத்தமாக பொங்குகின்றார்கள். விவசாய கடனுக்கு மராட்டிய அரசு முடிவு சொல்லியே ஆகவேண்டும் என்று போராடுகின்றார்கள்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் எது தெரியுமா?

தமிழக விவசாயிகள் விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என போராடிய அந்த அய்யாகண்ணுவினை கவனிக்கலாம்

இதோ மராட்டிய விவசாயிகள் தங்கள் மாநில அரசை உலுக்க திரளுகின்றார்கள், வேறு வழியினிற் மராட்டிய அரசும் அவர்களுடன் பேச்சு நடத்த இறங்கி வருகின்றது

இதே நெருக்கடியினைத்தான் அய்யாகண்ணு இங்கே கொடுத்திருக்க வேண்டும். மாநில அரசை பேச்சுவார்த்தைக்கு இழுத்திருக்க வேண்டும்

ஆனால் இதனை செய்யாமல் தமிழக அரசை கண்டுகொள்ளமால் அல்லது காப்பாற்றுவது போல் செய்துவிட்டு டெல்லியில் சென்று ஆளவந்தான் கமலஹாசன் போல போஸ் கொடுப்பெதெல்லாம் என்ன வகை?

மாநில அரசினை விட்டுவிட்டு மத்திய அரசையே பிடிப்பேன் எனும் அரசியல்

அதுவும் 100 பேரை மட்டும் கொண்டுபோய் அவர்களை தங்க வைத்து சாப்பாடு கொடுத்து போராட்டம் என்றால் அது கோமாளித்தனம் ஆகாதா?

இதனால்தான் மோடியோ இதர அமைப்போ இவர்களை டெல்லியில் கண்டுகொள்ளாமல், அம்மணமாய் திரிந்தவுடன் அடிக்கவேண்டிய இடத்தில் அடித்து விரட்டினார்கள்

மராட்டிய விவசாயிகள் மராட்டிய அரசுக்கு கொடுக்கும் நெருக்கடியினையும், அய்யாகண்ணு தந்திரமாக மோடி மீது மட்டும் சாடியதையும் கவனியுங்கள்.

இவர் யாரின் கையாள் என்பதையும், யாரை காப்பாற்ற டெல்லிக்கு ஓடினார் என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்

பின் இந்த நபரை பிராடு என சொல்லாமல் புனிதர் என சொல்வார்களா?

அந்த தென்னக வீரதமிழச்சியின் செயலை கைதட்டி வரவேற்கின்றோம்

மராட்டிய விவசாயிகள் கொடுக்கும் அதிரடியில் அய்யாகண்ணுவின் கோவணம் தானாக கிழிகின்றது

ராகுல் ராஜிவ் கொலையாளிகளை மன்னித்தும் இந்த அரசு விட மறுக்கின்றது

என்ன தான் ராஜிவ் கொலையாளிகளை மன்னித்துவிடடோம் என ராகுல் சொன்னாலும் அக்கொலையாளிகள் வெளிவருவது எளிதில் சாத்தியமில்லை

அவர்களை வெளியேவிட்டால் நிச்சயம் வட இந்தியாவில் பெரும் எதிர்ப்பு வரும், நிச்சயம் வரும். அதனை பாஜக விரும்பாது

பாஜக விரும்பாது என்பதன் பொருள் தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்களை வெளிவிட முடியாது என்ற ஒற்றை அறிவிப்பில் தெரிகின்றது

ஆக காங்கிரசோ, பாஜகவோ ராஜிவ் கொலையாளிகளை வெளிவிடாது என்பது புரிகின்றது. ராஜிவ் கொலை இந்திய ஆன்மாவில் விழுந்த அடி என மன்மோகன் சிங் சொல்லியிருந்தது மிக பொருத்தமானது

இப்பொழுது சிலரை காணவில்லை

யாரெல்லாம் என்றால் சைமன், வைகோ, திருமுருகன் , வேல்முருகன் கோஷ்டி

இவர்கள்தான் காங்கிரஸ் அரசு 7 தமிழர்களை வெளியிடவில்லை, திமுக அரசும் கண்டுகொள்ளவில்லை என ஒப்பாரி வைத்தார்கள்

இதோ ராகுல்காந்தி மன்னித்தும் கூட பாஜக அரசும், தமிழக அதிமுகவும் அவர்களை விட மறுக்கின்றது, இப்பொழுது இவர்கள் ஏன் அமைதி என்றால் விஷயம் ஒன்றுமில்லை

இவர்கள் காங்கிரஸ், திமுக என்றால் மட்டும் பொங்குவார்கள், பாஜக அதிமுக‌ என்றால் வாய்மூடுவார்கள் என்றால், இவர்கள் எஜமான் யார் என முடிவுசெய்வது சிரமம் அல்ல‌

ஆக 7 தமிழர் விடுதலையில் மகா அக்கறையுள்ளவர்கள் என்ன சொல்ல வேண்டும்?

ராகுல் ராஜிவ் கொலையாளிகளை மன்னித்தும் இந்த அரசு விட மறுக்கின்றது, எனவே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து அவர்களை விடுவிக்க தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என சொல்ல வேண்டுமா இல்லையா?

ஆனால் சொல்லமாட்டார்கள். ஏனென்றால் இவர்கள் தமிழ் உணர்வு வித்தியாசமானது

 
 

இமயமலை தியான மண்டபத்தில் ரஜினியினை சந்திந்தார் பாஜக பிரமுகர்

இமயமலை தியான மண்டபத்தில் ரஜினியினை சந்திந்தார் பாஜக பிரமுகர் பிரேம் குமார் சந்தித்தார் : செய்தி

ஆன்மீக பயணத்தில் அரசியல் பேசமாட்டேன் என சொல்லிவிட்டு சென்றவர் ரஜினி, அங்கு சென்று யாரை சந்தித்து பேசியிருக்கின்றார், அந்த பாஜக பிரமுகர் என்ன பாபா பிரதிநிதியா?

இல்லை மோடியின் பிரதிநிதி

ஆக ரஜினி இனி அங்கு தங்கி இருக்கும் 15 நாட்களும் நடக்க போவது நிச்சயம் அரசியல் ஆலோசனை என்பதில் சந்தேகமே இல்லை . ஆன்மீகம் எனும் பெயரில் நடக்கும் அரசியல் கூட்டம் அது

ரஜினி தமிழகத்திற்கு ஏதாவது செய்வதாக நினைத்தால் அந்த இமயமலையிலே தங்கட்டும்

குரங்கணி காட்டுத்தீ விபத்து

இந்தியா ஒருவிஷயத்தில் சபிக்கபட்ட நாடு, தமிழ்நாடு அதில் இன்னும் மோசம்

ஆம், ஒவ்வொரு ஆபத்தின் விளைவுகளையும் சில உயிர்களை பலிகொடுத்தபின்பே அதன் தீவிரத்தை உணருமே தவிர ஒரு நாளும் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்காது

அது முன்பு ஓலை திரைகொட்டகை எரிந்து ஏராளமானோர் எரிந்தது, கும்பபோண வடுவான அந்த சம்பவம் வரிசையில் இந்த தேனி மலைக்காடும் சேர்ந்துகொண்டது

மலைக்காடு என்பது எப்பொழுதும் பச்சையாய் இருப்பது அல்ல, அங்கும் வறட்சி உண்டு அந்த வறட்சியில் யாரேனும் அல்லது மூங்கிலோ இடியோ தீயினை ஏற்படுத்திவிடுவதும் உண்டு

அது அடங்கா தீ, ஆவேசமாக எரியும். வன விலங்குகள் நுண்ணறிவு மிக்கவை பெரும்பாலும் தப்பிவிடும். இப்பொழுது சிக்கி இருப்பது மனிதர்கள்

எப்படி சென்றார்கள்?

இப்பொழுதெல்லாம் மனிதனின் உழைப்பு காங்கரீட் சுவற்றுக்குள் நடக்கும் கொத்தடிமை முறை என்பதால் அவர்களை வருடம் ஒருமுறை எங்கேனும் அழைத்து சென்று நாமெல்லாம் ஒரே குடும்பம் என விளையாட விடுவது அவர்களுக்கு பொழுதுபோக்கு, அப்படியே செலவு கனக்கும் எழுதி வரியிலிருந்து தப்பலாம்

இதில் கடற்கரை, உல்லாச தளம் போல இந்த மலையேற்றமும் ஒன்று. இதில் பல வகை உண்டு

மிக பாதுகாப்பான மலையில் சில அடிகள் ஏறுவது ஒரு வகை, காட்டுக்குள் சென்று இது இயற்கை வாழ்க்கை என ஒரு நாள் தங்கி இருந்து வருவது இன்னொரு வகை. இதெல்லாம் இப்பொழுது பணம் கொட்டும் தொழில், நடு மலையில் அரசின் அனுமதி பெற்றோ பெறாமலோ நடக்கும் தொழில்

இவர்கள் மலை ஏற்றமா ? இல்லை காட்டில் இயற்கை வாழ்வு வாழ சென்றவர்களா என்பது பற்றியெல்லாம் தகவல் இல்லை

இங்கு வனவிலங்குகள் தொந்தரவு அதிகம் இருக்காது. என்றுமே வன விலங்குகள் மனித நடமாட்டம் தொடங்கியவுடன் வேறு இடம் நகரும். முடியாத பட்சமே தாக்குமே தவிர மற்றபடி அவை வேறு இடம் சென்றுவிடும்

இம்மாதிரி தனியார் ரிசார்ட்டுகள், மலையேற்ற விளையாட்டுகள் செலவு அதிகம் என்பதால் இவர்களின் குறி ஐடி கம்பெனி போன்ற அதிகம் பணம்புழங்கும் கம்பெனிகளாக்வே இருக்கும்

அப்படி சென்னையில் இருந்து சில பணியாளர்களை ஒரு நிறுவணம் அழைத்திருக்கின்றது, அவர்கள் மலையேறும் விளையாட்டு விளையாடிய பொழுதுதான் தீப்பிடித்திருக்கின்றது

அதுவும் தீ தொலைவில் பிடித்த உடனே இவர்களை அந்த நிறுவணம் உடனே வெளியேற்றியிருக்க வேண்டும், மாறாக ஏன் தாமதபடுத்தினார்கள் என்பது தெரியவில்லை

தீ வேகமிக்கது, ஆனால் இது கிட்டதட்ட 6 நாட்கள் எரிந்தபின்புதான் இப்பக்கம் வந்திருக்கின்றது என்பதால் அந்த டுரிஸ்ட் நிறுவணமும் அவர்களுக்கு பொறுப்பாக இருந்தவர்களே இந்த மாபெரும் கொடுமைக்கு காரணம்

ஆக இந்த தீயில் வெந்து பலர் இறந்தபின்புதான் அது அங்கீகாரம் பெற்ற நிறுவணமா? அந்த இடம் அரசு இடமா? தனியார் இடமா? இவை எல்லாம் மக்கள் அனுமதிக்கபட்ட பகுதியா என்ற கவலையே அரசுக்கு வந்திருக்கின்றது

அதுவரை அப்படி ஒரு பகுதி தமிழகத்தில் இருப்பதாக அரசுக்கு தெரியவே இல்லை. இவ்வளவிற்கும் துணை முதலமைச்சர் அந்த பக்கத்துக்காரர்

ஆனால் இவ்விஷயத்தில் அரசினை உடனே சாடுவது சரியல்ல , காரணம் காட்டு தீ என்பது ஆனானபட்ட அமெரிக்கா , ஆஸ்திரேலியாவினையே ஆட்டிவைக்கும் விஷயம்

அவ்வகையில் மத்திய அரசு விஷயம் கேள்விபட்டவுடன் விமான சகிதம் மீட்பு விமானங்களை அனுப்பியயது நல்ல விஷயம். அதன் கடமையினை செய்தது

மாநில அரசு இந்த நிறுவணங்களை அனுமதித்ததா இல்லையா என்பது இப்போது விவாதிக்கும் விஷயம் அல்ல, மாறாக அந்த நேரத்தில் தாங்களின் பொறுப்பில் இருந்த அந்த பணியாளர்களை வெளியேற்றாமல் இருந்தது, ஆபத்து நேரத்தில் வெளியேறும் வழியினை யோசிக்காமல் இருந்தது

காலையில் இருந்து செய்திகள் வருகின்றன, எத்தனை பேர் செத்தனர் என்றே தகவல் வருகின்றதே தவிர. அந்த மலையேற்ற நிறுவணம் யாருடையது என்பதோ, இவர்களை அழைத்து சென்று தீயில் இருந்து மீட்காமல் விட்டது யார்? என்ற தகவல் இன்னும் வரவில்லை

வரவும் வராது

கும்பகோணம் தீவிபத்தில் செத்த குழந்தைகளுக்கும் இங்கு தீயில் செத்தவர்களுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை இரண்டுமே அந்த நிறுவணங்களை நடத்தியவர்கள் தவறு

இங்கு இன்னொரு விஷயம்தான் பகீர் என்கின்றது

பொதுவாக இம்மாதிரி காடுகளில் போட்டோ எடுக்கின்றேன் பேர்வழி என உள்நாடு , வெளிநாட்டுகாரர் எல்லாம் தங்குவார்கள். சும்மா அல்ல மாதகணக்கில் தங்குபவரும் உண்டு. வைல்டு போட்டோ கிராபி என்பது அதுதான்

அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ளவும் மாட்டார்கள், எங்கு இருக்கின்றார்கள் என யாருக்கும் தெரியாது, ஆனால் காடுகளில் சுற்றுவார்கள்

அப்படி சுற்றியவர்கள் யாரும் இல்லாமல் இருந்தால் நல்லது

நகரிலிருந்து சென்றவர்களை உறவினர்கள் சகிதம் தேடுகின்றார்கள், நாமும் தேடுகின்றோம்

ஆனால் காட்டுவாசிகள் இருந்திருந்தால் மொத்தமாக கருகி இருப்பார்களே, அவர்களை யார் தேட போகின்றார்கள்?. எனினும் இயற்கையோடு இணைந்து வாழ்பவர்கள் இம்மாதிரி நேரங்களில் தப்பிவிடுவார்கள். பல இடங்களில் அவர்கள் அப்படி தப்பி பிழைத்து வாழ்கின்றார்கள்

இங்கு மலைவாசிகள் இருந்தால் அப்படி தப்பி இருப்பார்கள் என நம்புவோம்

அரசு இந்தமாதிரி மலைவாழ் ரிசார்ட்டுகள் மீது தனி கவனத்தை இனியாவது செலுத்தட்டும்

மலைகள் யாரும் செல்லா பகுதி என்பதால் ஆளாளுக்கு வளைத்துபோட்டு செய்யும் அட்டகாசம் கொஞ்சமல்ல. பெரும் பணக்காரன் எல்லாம் தனி காடே வைத்திருக்கின்றார்கள்

இவற்றை எல்லாம் இனியாவது அரசு கண்டுகொள்ளட்டும்

கடந்த வருடம் கூவத்தூருக்கு பதிலாக இப்படி மலை ரிசார்ட்டில் இந்த எம்.எல்.ஏக்களை எல்லாம் வைத்து, அப்பொழுது தீ பிடித்திருக்கலாம்

சசிகலாவிற்கும் எங்கு வைப்பது என தெரியவில்லை, தீயும் ஏன் கூவத்தூரை விட்டது என தெரியவில்லை. தமிழகத்திற்கு எதிரான இயற்கை சதி என்பது இதுதான்

காங்ரீட் காடுகளில் வாழ்ந்துகொண்டு, இயற்கை காட்டை காண சென்று உயிரையும் விட்டுவிட்ட அந்த அப்பாவிகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

அந்த மலையேறும் நிறுவணத்தையும், இவர்களை அழைத்து சென்ற பொறுப்பாளர்களும் யார் என காட்டவேண்டியது அரசின் கடமை