சாப்பாடு சரியில்லை என புலம்புகின்றார் கார்த்தி சிதம்பரம்

ஏதோ தான் சுற்றுலா சென்றிருப்பது போலவும் , அங்கு விருந்து சரியில்லை என புலம்புவது போலவும் சாப்பாடு சரியில்லை என புலம்புகின்றார் கார்த்தி சிதம்பரம்

செட்டிநாட்டு சமையல் எல்லா இடத்திலுமா கிடைக்கும்?

மனிதர் மீது குற்றம் சாட்டபட்டிருக்கின்றது, அதனை சட்டபடி சந்தித்து வெளிவரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார் அவர்

இது அவருக்கு மகா சிரமாமான காலம், இப்பொழுது தன் மீதான குற்றசாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே தவிர, செட்டிநாட்டு சாப்பாடு கிடைக்கவில்லை என புலம்புவது சிறுபிள்ளைதனமும் வேடிக்கையுமானது

ஒரு பக்கம் ராகுல், இங்கே உதயநிதி ஸ்டாலின் என வாரிசுகள் எல்லாம் பயங்கரமாக தள்ளாடும்பொழுது ப.சிதம்பரத்தின் வாரிசும் தள்ளாடுகிறது

ப.சிதம்பரத்தை ப.சி என சுருக்கமாக அழைப்ப்பார்கள், அதற்காக அவர் மகன் பசி பசி என சொல்லிகொண்டே இருப்பது சரியல்ல‌

நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி அல்ல : ரஜினி

நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி அல்ல, கட்சியே இன்னும் தொடங்கவில்லை அதனால் எல்லா விஷயங்களிலும் கருத்து சொல்ல முடியாது : ரஜினி

அதானே பொண்ணு பார்த்த பின்புதானே பெண்ணின் உயரம், அழகு பற்றி எல்லாம் பேசவேண்டும்

இன்னும் பெண்ணே பிறக்கவில்லையே, இனிதான் பெண் பிறந்து வளர்ந்து, பருவமடைந்து அதன் பின் இவர் பார்த்து அழைப்பிதழ் அடிக்க எவ்வளவு காலமாகும், இது தெரியாமல் கருத்து கேட்கின்றார்களாம்.

கட்சி தொடங்க போகிறேன் என்றார், அரசியலுக்கு வந்துவிட்டேன் என்றார், ராமசந்திரன் ஆட்சியினை நானே கொடுப்பேன் திருச்செந்தூர் வைரவேலை ஒளித்து வையுங்கள் என்ற அளவு பேசினார்

இப்பொழுது மகா பல்டி, இதனை சென்னையிலே சொன்னால் என்ன?

ஏன் இமயமலையில் சென்று சொல்ல வேண்டும்?

இந்த பல்டி அடிக்கவா இமயமலை உச்சிக்கு சென்றார் ரஜினி?

குரங்கணி விவகாரம் : சென்னை டிரெக்கிங் கிளப்பின் பீட்டர்

Image may contain: one or more people and outdoor

இந்த குரங்கணி விவகாரம் தொடர்பாக சி.டி.சி அமைப்பின் முக்கியமான நபர் பீட்டர் எனும் பெல்ஜியம் மீது ஆளாளுக்கு ஆட்காட்டி விரலை நீட்டியாயிற்று

இந்த பீட்டர் சில ஆண்டுகளுக்கு முன்பே கவனிக்கபட்டார் . வழக்கமாக வெள்ளையர் வந்து மாமல்லபுரத்தில் போட்டோ எடுத்து கேரள போட் ஹவுசில் மல்லாக்க கிடப்பது போல் அல்ல பீட்டர், இங்கு ஏதோ சில நல்ல காரியங்களை செய்ய நினைத்தவர், அவர் இந்தியா வந்து 15 ஆண்டுகள் இருக்கலாம்

ஆரம்பத்தில் மலையேற்றத்தை செய்தவர்தான், சி.டி.சி எனும் சென்னை டிரெக்கிங் கிளப்பினை அவர்தான் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக அது வளர்ந்தது

சென்னையினை அவருக்கு ஏனோ பிடித்துவிட்டது

கிட்டதட்ட 40 ஆயிரம் உறுப்பினர்களை கொண்டிருக்கும் அமைப்பு அது, டிரக்கிங் மட்டும் செய்தவர் அல்ல பீட்டர்

Image may contain: 2 people, including Moses Asli, people standingசென்னையினை சுத்தபடுத்த முயன்றதில் அவர் பங்கு உண்டு, சாக்கடையில் இறங்கி இருக்கின்றார், குப்பை அள்ளியிருகின்றார், கிட்டதட்ட சில ஆண்டுகளாக இதனை செய்திருக்கின்றார்.

அவர் குழுவும் இக்காரியங்களை செய்திருக்கின்றது, நாமெல்லாம் கடந்து செல்லவே தயங்கும் இடங்களில் அவர் வெறுங்காலோடு பணியாற்றி இருக்கின்றார். அவரோடு மொத்த மக்களும் களம் இறங்கி இருந்தால் சென்னை மாறியிருக்கலாம்

ஆனால் தன்னால் முடிந்ததை சிலரோடு செய்தார், அந்த அடையாளம் இன்றும் இருக்கின்றது, அந்த குழுவினரோடு இயற்கை சார்ந்த பயணம் நிறைய செய்திருக்கின்றார்

அதெல்லாம் இனி யார் நினைக்க போகின்றார்கள்? அந்த பீட்டர்தான் இப்பொழுது கொலைகாரர் என்ற அளவிற்கு இறங்கிவிட்டார்கள்

சி.டி.சிதான் மலையேறும் விஷயங்களின் முன்னோடி சந்தேகமில்லை, ஆனால் சென்னையின் கொழுத்த கம்பெனிகள் எல்லாம் பணியாளர்களை டீம் பில்டிங், ரிலாக்சேஷன் இன்னபிற பெயரில் அனுப்ப ஆர்ம்பித்தபின் பல நிறுவணங்கள் வந்தன நிறைய போலி

அவை எல்லாம் சி.டி.சியுடன் தொடர்பில் இருந்தன, ஆலோசனை பெற்றன என செய்திகள் சொல்கின்றன‌

Image may contain: one or more people, people standing and outdoorஇந்த குரங்கணி சம்பவத்தில் கூட சி.டி.சியினை அணுகியிருக்கின்றாகள், இதுவரை சிக்கலை சந்திகா பீட்டர் இன்னொருவரை கைகாட்டியிருக்கலாம் என்கின்றார்கள்

அப்படி பலர் வந்து போகும் இடத்தில் சி.டி,சி கைகாட்டிய நிறுவணமும் மலை ஏற பலரை அழைத்து வந்திருக்கின்றது, அவர்கள் மாட்டிகொண்டு இறந்துவிட்டார்கள்

இப்பொழுது மொத்த சிக்கலுக்கும் சி.டி.சிதான் காரணம் என ஆளாளுக்க்கு கிளம்புகின்றார்கள்

இந்த தேசத்தை சரியாக புரிந்துகொள்ளாத பீட்டர் மகா சிக்கலில் மாட்டியிருக்கின்றார்

ஒரு விஷயம் உண்மை

நிச்சயம் பணமோ , புகழோ பீட்டரின் நோக்கம் அல்ல. அப்படி இருந்திருந்தால் அவர் நிறைய சம்பாதித்திருக்கலாம்

அவர் வேறுமாதிரி தொண்டு வாழ்க்கையில் இருந்தார், திருமணமும் செய்யவில்லை, இயற்கை பயணம் மலையேற்றம் நேரமிருந்தால் கொஞ்ச பேரை சேர்த்துகொண்டு நாற்றமெடுக்கும் ஏரியாவினை சீர்படுத்துவது என்றே அவரின் வாழ்வு சென்றுகொண்டிருந்தது

மதம் பரப்பலோ, அல்லேலூயாவா இன்னபிற குற்றசாட்டுகளும் அவர் மேல் இல்லை.

பரகாசுர கம்பெனிகள் தங்கள் ஊழியர்களின் சோர்வை போக்குகின்றோம் என பணத்தை அள்ளி வீச, அதில் பல கம்பெனிகள் டிரைனிங், மெடிடேசன் , கடலில் சர்பிங், மலைஏற்றம் என கிளம்பும் காலத்தில் மலை ஏற்றத்தில் ஈடுபாடு கொண்ட பீட்டர் அவர்களிடம் சிக்கிவிட்டார்

பண நோக்கம் கொண்ட அவர்கள் தகுந்த பாதுகாப்பின்றி செய்த மலைஏற்றத்தில் பலர் சிக்கி மாண்டாயிற்று

நிச்சயம் இதில் பீட்டரின் முழு தவறு இருக்கமுடியாது. பண நோக்கத்திற்காக அவர் செய்தார் என்றும் நிச்சயம் சொல்ல முடியாது

ஆனால் விதி அவரை மிக சரியாக கொண்டு நிறுத்தியிருக்கின்றது.

பீட்டர் தலைமறைவா? என்ற செய்திகள் வரும் நிலையில், “நாடெல்லாம் மலைஏற்றம் செய்த நாங்கள் இதனை அனுமதி பெற்றே செய்தோம் ” என சி.டி.சி வாய் திறக்க தொடங்கிவிட்டது

இனி பீட்டர் தலைவிதி என்னாகும் என்பது இனிதான் தெரியும்

 
 

அந்த சங்கருக்கு ஆழ்ந்த அஞ்சலி

Image may contain: 2 people, people standing
Image may contain: 1 person, standing
 

வீரமும் காதலும் நிரம்பியது தமிழன் வாழ்வு. சங்க இலக்கியம் எல்லாம் அதனைத்தான் சொல்கின்றன‌

இந்திய கலாச்சாரம் காதலுக்கு எதிரானதா? நிச்சயம் இல்லை பண்டைய இந்தியா காதலை வாழ்வின் ஒரு அங்கமாகவே வைத்திருந்தது

அதனால்தான் அதன் அழியா காவியங்களில் எல்லாம் காதலுகொரு இடமிருந்தது, அது ராமாயணம் ஆனாலும் சரி, சாகுந்தலை போன்ற காவியமானாலும் சரி. காதல் அதில் கலந்திருந்தது

மீராவின் காதலும், ஆண்டாளின் காதலும் , பக்தி மிஞ்சிய விஷயங்கள் என‌ கருதபட்டது. சந்தேகமிருப்பின் வைரமுத்துவிடமோ ஜீயரிடமோ கேட்கலாம்

அந்த மரபில் வந்ததால்தான் இன்றுவரை இந்தியாவின் எல்லா மொழி திரைபடங்களிலும் காதல் ஒரு தவிர்க்கமுடியா விஷயமாகின்றது

பண்டைய இலக்கியங்களை விடுங்கள். இந்திய கலாச்சாரத்தின் ஆணிவேர் இந்துமதம்

அதன் தெய்வங்களை கவனியுங்கள். அவை காதல் செய்யும் கசிந்துருகும், உருகி தவிக்கும், போரிட்டு மாலை சூடும்

மணவாழ்வினை வெறுக்கும் பிள்ளையார், ஆஞ்சநேயர் போன்ற சாமிகள் கூட காதலை சேர்த்து வைக்கும்.

இந்துமதம் வாழ்வின் எல்லா உணர்வுகளையும் கடவுளில் காணும் மதம், மற்ற எந்த மதத்திற்கும் இல்லா சிறப்பு அது

காதல் மனைவி இல்லா வாழ்வு முழுமையடையாது என்பதால்தான் முக்கிய தெய்வமெல்லாம் மனையாளோடு வீற்றிருக்கின்றது

ராமனின் ஒரே காதலை போற்றிய இந்துமதம், கண்ணனின் பல திருமணங்களையும் ஏற்றது.

இப்படியாக காதல் எனும் மானிட வாழ்வின் அங்கம் இந்தியர்களின் மதத்திலும் கலாச்சாரத்திலும் பெரும் இடம் பிடித்திருந்தது. இசை, பக்தி, சிற்பம், ஓவியம் என கலைகளில் எல்லாம் அதனை கொண்டாடினார்கள்

வீடுவிட்டு காடு சென்ற முனிவர்களுக்குமே காதல் வந்தது, அவர்களும் துறவில் காதலை ஒரு அங்கமாக்கினார்கள். புராணம் சொல்கின்றது

அற்புதமான காதல்களை சொன்ன இந்துமதம், தவறான காதலின் விளைவுகளையும் சொல்ல தவரவில்லை

இந்திரன் அகலிகை , சந்திரன் தாரா , வாலி , ராவணன் கதை எல்லாம் அதன் விளைவுகளை சொல்லி எச்சரித்தன‌

இந்திய கலாச்சாரம் என்பது இதுதான் ,

இந்த மரபில்தான் அழியா காவியமான தாஜ்மஹால் நிலைபெற்றது. ஷாஜகான் ஆப்கானிய வாரிசாக இருக்கலாம் ஆனால் அவன் சுவாசித்தது இந்திய காற்று. அக்காற்றில் கலந்திருந்த காதல் அவன் ரத்ததிலும் கலந்தது.

தமிழகம் இன்னும் சாலசிறந்திருதது அகம், புறம் என வாழ்வினை பிரித்தபொழுது அகம் முழுக்க காதலையே சொல்லிற்று

வள்ளுவன் ஒருபடி மேலே சென்று இன்பத்து பால் என்றொரு பிரிவினையே பாடினான்

இன்னும் நளவெண்பா முதல் எத்தனையோ அற்புதமான காதல் காவியங்கள் எல்லாம் தமிழில் கொண்டாடபட்டன, கம்பராமாயணம் இன்றளவும் கொண்டாட காரணம் காதலுக்கு கம்பன் சொன்ன வரிகளாலேதான்

காதலை இன்றும் உயர்வாக பார்க்கும் தமிழ் சமூகமிது,

அந்த சமூகத்தில்தான் சாதி பெயரால் கொலைகள் நடந்து காதல் ஜோடிகள் கதறவிடபட்டன‌

இவனோடு இவளோடுதான் வாழ்வேன் என மனதார விரும்பிய ஜோடிகளை பிரிக்க யாருக்கும் உரிமை இல்லை, அது அவர்கள் வாழ்வு

மேல்நாட்டில் பாருங்கள் 10 வயதை கடந்துவிட்டால் பிள்ளைகள் கொஞ்சம் கொஞ்சமாக பெற்றோரை விட்டு விலகுகின்றன, கடலுக்குள் படகினை கவனமாக இறக்குவது போல் இறக்கி 21 வயதில் இனி உன் வாழ்வு என விலகிவிடுகின்றார்கள்

நமக்குள்ள வாழ்வை நாம் வாழ்ந்துவிட்டோம், இனி அவர்களுக்கான உலகில் அவை நீந்தட்டும் என விட்டுவிடுகின்றார்கள்

அந்த பறவை தனியே பறக்கின்றது, வாழ்விற்கான விஷயங்களை தேடுகின்றது. அப்படியே தனக்கான மிக சிறந்த துணையினை தேடிகொண்டு வாழ்வினை தொடங்குகின்றது

பெற்றோரை எதற்கும் எதிர்பாரா ஜோடிகள் அவர்களுக்கு சுமையில்லை, விரும்பிய வாழ்வினை பிள்ளைகள் வாழ்வதில் பெற்றோருக்கும் சிக்கல் இல்லை

இதனால்தான் மேல்நாடுகளில் எதற்கெல்லாமோ நடக்கும் கொலைகள் காதலில் நடப்பதில்லை

இதில் முதலில் தெளிவாக எதில் இருக்கின்றார்கள் என்றால் பெண் என்பவள் சொத்து அல்ல, குலப்பெருமை அல்ல‌

அவளும் ஒரு உயிர் அவளுக்கும் ஆன்மா உண்டு, அவளுக்கும் ஆசை உண்டு என்பதை மதிக்கின்றனர். இந்த அடிப்படை புரிதல்தான் அங்கு பல சிக்கல்களை சந்திக்காமல் தடுக்கின்றது

இங்கு அப்படி அல்ல பெண் என்பவள் சொத்து. கிட்டதட்ட மாடு போல. அவளின் உரிமையினை தந்தையிடம் இருந்து கணவன் என்பவளிடம் மாற்றிகொடுப்பார்கள். அதனை வண்டி சுமக்க கழுத்தை ஓடிவந்து நீட்டும் மாட்டினை போல் அப்பெண் ஏற்றுகொள்ள வேண்டும்

மீறி தனக்கு பிடிக்கவில்லை என்றோ, தன் வாழ்விற்கான ஆசைகளை அவள் சொல்லிவிட்டாள் என்றோ நிலமை வந்துவிட்டால் வெடிக்கும் விஷயம்

ஏன்?

அப்படி பெண்ணுக்கான உரிமையினை கொடுத்துவிட்டால் அவர்களை மதிக்கமாட்டார்களாம், குடும்பத்தார் உறவு எல்லாம் ஒதுக்கி வைக்குமாம். இது வேறு சாதி என்றால் கொலையும் விழும்

தன் மகள் தனக்கான வாழ்வினை தேடிகொள்வதில் இவர்கள் மதிப்பு எங்கணம் குறையும் என்பதுதான் தெரியவில்லை, மதிப்பு என்பது பெண்ணை வளர்ப்பதிலா?

அவள் என்ன வீட்டு மாடா?

தோட்டவேலைக்கு மாட்டை வளர்ப்பது போலவா பெண்ணையும் வளர்க்க வேண்டும்? இதில் என்ன பெருமை?

அக்காலத்தில் கூட்டுகுடும்பம் உண்டு, முழுக்க விவசாயம். அதாவது குடும்பத்தார் எல்லோரும் மொத்தமாக உழைப்பர். குடுமபத்தை மீறி சென்று ஒருவன் வாழ்வது முடியாத விஷயம்

இன்று அப்படியா? ஆயிரம் வேலைகள், ஆயிரம் வாய்ப்புகள் இதில் பங்காளி என்ன? சாதி என்ன? ஒன்றும் யார் வாழ்வினையும் தடுக்க முடியாது, இன்றுள்ள சூழல் அப்படி

ஆனால் இக்காலத்திலும் யாருக்கோ பயந்து சொந்தங்களை பகைத்து வாழமுடியாது என்பதெல்லாம் அபத்தம், அதற்காக கொலை வரை செல்வதெல்லாம் முட்டாள்தனம்

காதல் எல்லோருக்கும் வரும், வராவிட்டால் அவன் மன நோயாளி

அக்காதல் சங்கருக்கும் வந்தது, இளவரசனுக்கும் வந்தது. திவ்யாவிற்கும் வந்தது, கவுசல்யாவிற்கும் வந்தது

ஆனால் சாதி வந்து தடுத்தது. தமிழகத்தின் சாதி வெறிக்கு அக்குடும்பங்கள் காவு வாங்கபட்டன‌

இளவரசனும், திவ்யாவின் தந்தையும் அந்த வெறிக்கு பலியாகினர்

சங்கர் கொல்லபட்டான், கவுசல்யாவின் தந்தை தூக்கு மேடையில் நிற்கின்றார்.

இதே காதல் கேரளாவிலும் அகிலா எனும் பெண்ணுக்கு வந்தது, அவள் ஹதியா என மாறியதால் மதம் அவளை காத்தது

ஆம் மதம்மாறினாள் என்பதற்காக அவள் காதல் காக்கபட்டதே அன்றி அவளுக்காய் அவள் காதலுக்காய் அல்ல‌

மதம் காதலுக்கு குறுக்கே வந்தால் மாறலாம். ஆனால் ஒரே மதமாயினும் சாதி குறுக்கே வந்தால் எங்கிருந்து மாறுவது?
ஒருகாலமும் முடியாது

யூத மதம் பிறப்பால் வருவது, இன்னொருவன் தான் யூதனாக மாறிவிட்டதாக சொல்லமுடியாது அவ்வளவு இறுக்கம் வாய்ந்த சமூகம் அது

ஆனால் அவர்கள் பெண்கள் காதலில் விழுந்தால் கூட இவ்வளவு கொடூர வெறிக்கு செல்லமாட்டார்கள், காரணம் அறிவு இருக்கும் இனம் அது

எந்த விஷயத்திலும் எது எல்லை என ஒன்றிருக்கின்றது, ஆனால் இந்த சாதிவெறியில் அது கொலைதான் எல்லை என்றிருப்பதுதான் கொடுமை.

வாழவேண்டிய 4 குடும்பங்கள் அழிந்தது இதனால்தான்

சாதி பெருமை, ஊர் பேச்சு, சொந்த பந்த அபிமானம், கவுரவம் எல்லாம் சேர்ந்து சாதித்தது என்னவென்றால் இப்படி குடும்பங்கள் அழிந்தது

இவை எதையும் உருவாக்காது மாறாக அடித்து கொல்லும் என்பதே இது உணர்த்தும் உண்மௌ

சாதி கொடுமை காதலில் புகுந்தால் என்னாகும் என்பதற்கு இளவரசன், சங்கரின் கல்லறை சாட்சியாய் நிற்கின்றது.

விஞ்ஞான யுகத்திலும் மாடுபோல பெண்களை சொத்தாகவே நினைக்கின்றனர் என்பதற்கு நினைவாய் கவுசல்யா நிற்கின்றார்

கவுசல்யா இனி காலம் உள்ள அளவும் சாதி கொடுமை அடையாளம்

முதுகுளத்தூர் கலவரம் , கீழவெண்மணி கொடூரம் போல கவுசல்யா தனி ஒரு அடையாளம், மாபெரும் கொடுமையின் வடு. அது தீராது

இன்னொரு சங்கர் சாக கூடாது, கவுசல்யா உருவாக கூடாது என்பதை தமிழகம் தோறும் எப்படி அடுத்த தலைமுறைக்கு போதிக்கின்றார்கள் தெரியுமா?

சாதி ஒழியுங்கள் என்றல்ல, மாறாக சாதிமாறி காதலித்தால் இப்படித்தான் ஒழிவீர்கள் என மிரட்டி போதிக்கபடுகின்றார்கள்

நடந்த கொடூரத்தைவிட மிக கொடுமையான விஷயம் இதுதான், இந்த மிரட்டல்தான்

இக்கொடுமையிலிருந்து வருங்கால தலைமுறையினை காக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கின்றது

எந்த போராட்டத்திற்கும் ஒரு அடையாளம் வேண்டும், ஆவணகொலைக்கு எதிரான அடையாளமாக கவுசல்யா ஆகிவிட்டார்

இன்னொரு சங்கர் இறக்காதவாறு இச்சமூகம் திருந்தட்டும், ஆனால் அதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பது உண்மை

செத்துபோன சங்கரையும், துடிக்கும் கவுசல்யாவினையும் நமக்கு தெரியும்

ஆனால் மனதார செத்த ஏராளமான சங்கரும், அனுதினமும் துடிக்கும் வெளிதெரியா கவுசல்யாக்களும் இங்கு ஏராளம் உண்டு

அவர்களை போன்றவர்களின் பாதிப்புகளே இனி வருங்காலத்தை மாற்றும்

ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்தால் நிச்சயம் ஒரு நாளில் இச்சமூகம் மீளும்

அதற்கு முதல் அடி எடுத்து கொடுத்த சங்கரின் நினைவு நாள் இன்று.

காதலுக்காக , சாதிமாறி காதலித்த ஒரே பாவத்திற்காக உயிரைவிட்ட அந்த சங்கருக்கு ஆழ்ந்த அஞ்சலி

திருச்சி சம்பவத்தில் அந்த பைக்கில் சென்ற நபர் மீதும் தவறு உண்டு

திருச்சி சம்பவத்தில் அந்த பைக்கில் சென்ற நபர் மீதும் தவறு உண்டு என சொன்னால் ஆளாளுக்கு பொங்கினார்கள்

அப்பெண் கர்பிணி இல்லை என்ற தகவல் வந்திருக்கின்றது. கர்ப்பமாக என மனைவி தன்னிடம் சொன்னதாக அந்த நபர் சொல்லியிருக்கின்றார், இனி அப்பெண் வந்து சொல்லமுடியாது

3 மாத கர்பத்தை எங்கு உறுதிபடுத்தினார்கள்? எந்த மருத்துவமனை என கேட்டால் பதில் இல்லை. இந்த மருத்துவ அறிக்கையிலும் பதில் இல்லை

காவலர் மிதித்து தள்ளியது ஏற்க முடியாத செயல்

எனினும் ஹெல்மெட் போடாமல் சென்றது, காவலர் நிற்க சொல்லி நிற்காமல் சென்றது, மனைவி இறந்தபின் கர்ப்பம் என சொன்னது என இவரின் மீதும் சில குற்றங்கள் இருக்கவே செய்கின்றன‌

இலங்கையில் முகநூலுக்கு தடை

இலங்கையில் கண்டி கலவரம் பரவ தொடங்கியதும் அது முகநூலால் உலகம் முழுக்க நொடியில் பரவியது. இலங்கைக்கு நெருக்கடி அதிகரித்தன‌

குறிப்பாக வளைகுடா நாடுகள் கொந்தளித்தன. பாலஸ்தீன இஸ்லாமியர் மீதும்,சிரிய இஸ்லாமியர் மீதும் வராத இஸ்லாமிய பாசம் இலங்கையர் மேல் வந்தது

கொஞ்சம் உண்மையும் நிறைய வதந்தியுமாய் கலவர செய்திகள் முகநூலில் வந்தன‌

இலங்கை அரசு அட்டகாசமாக முகநூலை தடை செய்தபின் கலவர செய்திகள் பரவுவது நின்றது

நாங்கள் முகநூலில் இன உணர்வு புரட்சி செய்வதால் இலங்கை முகநூலை மூடிற்று என தும்பிகளும் சொல்ல தவறவில்லை

அவர்களுகென்ன காவல் சாமி வீரப்பன் இருந்தவரை காட்டில் ஒரு மரம் எரிந்ததா? என ஏற்கனவே கிளம்பியாயிற்று.

ஒரு குட்டிநாடு முகநூலை தடை செய்தது உலக அரங்கில் பெரும் ஆச்சரியமாக பார்க்கபடுகின்றது. எமது நாட்டிற்கு குழப்பம் விளைவிக்கும் எதனையும் அனுமதிக்க முடியாது என சொல்லிவிட்டது இலங்கை

இப்பொழுது முகநூல் குழுமமும் இலங்கை அரசும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன‌

இப்படி முகநூல் தடை இந்தியாவில் வருமா என்றால், தமிழிசை நிச்சயம் ஆதரிப்பார். எச்.ராசா உடனே வேண்டுமென்பார். இருவரும் முகநூலில் படும்பாடு கொஞ்சமல்ல‌

ஆனால் பாஜக தடை செய்யமுன்வருமா என்றால் இல்லை, காரணம் முகநூல் வதந்திகளிலே அக்கட்சி வாழ்கின்றது என்பது அதற்கு தெரியாதது அல்ல.

உதய சூரியனை அஸ்தமனமாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கின்றது

Image may contain: 7 people, including Senathipathy M, people smiling, sunglasses

உதய சூரியனை அஸ்தமனமாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கின்றது

எல்லாம் இருக்கட்டும் , இரண்டாம் கலைஞர் யார்? அவர் என்ன கிழித்தார் என சொல்லிவிட்டு மூன்றாம் கலைஞருக்கு போஸ்டர் அடியுங்கள்


தினகரன் புதிய கட்சியால் எங்களுக்கு கவலை இல்லை : ஜெயக்குமார்

அதானே, தமிழகத்தை பற்றியே கொஞ்சம் கூட கவலைபடாதவர்கள் தினகரனின் புதிய கட்சியால் மட்டும் கவலைபடுவார்களா என்ன?