தாமிரபரணி நம்பியாறு இணைப்பு திட்டம்

தாமிர பரணியினையும் நம்பியாற்றையும் 100 கோடி செலவழித்து இணைக்க போகின்றார்களாம்

எங்கே? எப்படி இணைக்க போகின்றார்கள் என தெரியாது

தாமிரபரணி வற்றா நதி, மழை இல்லை என்றால் மேலப்பாளையம் சாக்கடையாவது ஓடிகொண்டிருக்கும். நல்ல நதிதான் சந்தேகமில்லை

ஆனால் அது திருவைகுண்டத்தை தாண்டாது, மழைகாலம் மட்டுமே தாண்டும்

மற்றபடி அம்பை முதல் திருவைகுண்டம் வரை அதன் பாசன பரப்பு ஏராளம், நஞ்சையும், வாழையும் அதனால் அப்படி விளைகின்றன‌

இதில் இவர்கள் தாமிரபரணியினை நம்பியாரோடு இணைப்பார்களாம், தாமிரபரணி விவசாயிகள் எல்லாம் விடுவார்களா?

நாங்கள் திருவைகுண்டம் தாண்டி இணைப்போம் என்றால் அங்கு நீரே வராது

பத்தமடை பக்கம் திருப்புவோம் என்றால் திருவைகுண்டம் விவசாயிகள் விடமாட்டார்கள்

மழைகாலத்தில் விடுவோம் என்றால், மழைகாலத்தில் நம்பியாறே பொங்கி கடலில் வழியும்பொழுது தாமிரபரணி எதற்கு?

இதனிடையில் மணிமுத்தாறு கால்வாயும் வரும்

இதெல்லாம் சரிவரா திட்டங்கள் நம்பியாற்றின் குறுக்கே மிகபெரும் அணை கட்டினால் நல்லது, அதனை செய்யவில்லை

மேற்கே பாயும் நதிகளை திருப்பி நம்பியாற்றில் கலக்க செய்தால் பெரும் சிக்கல் தீர்ந்தது, அதனை செய்யலாம் அல்லவா? செய்யமாட்டார்கள்

ஏற்கனவே தாமரபரணியிலிருந்து ஒரு கால்வாய் தெற்கு நோக்கி வெட்டபட்டது, ஏன் என்றதற்கு எல்லாம் வளமாக்குவோம் என்றார்கள், விஷயம் என்னவென்றால் கூடன்குளம் அணுவுலைக்கும் ஊழியர் குடியிருப்புக்கும் பேச்சிபாறை நீரை கொண்டு செல்வதாக இருந்தது, குமரி பொங்கியதில் பின் வாங்கினார்கள்

அதன் பின் தாமிரபரணி நீரை கொண்டுபோவதாக செய்தி வந்ததும் எதிர்ப்பு வந்தது

இப்பொழுது கூடன்குளத்தில் 3ம், 4ம் அணுவுலை கட்டபடுவதால் தாமிரபரணியினை திசைமாற்ற வாய்பிருக்கலாம், டெல்லி சொன்னால் தட்டுவது யார்?

இந்த விவகாரம் இனி பரபரப்பாகலாம், தாமிரபரணி நம்பியாற்றில் பாய்வதெல்லாம் சாத்தியமில்லை, அதன் பாசன பரப்பு மிக அதிகம்

மேற்கே பாயும் நதிகளை கிழக்கே திருப்பாமல் ராதாபுரம் பகுதி செழிக்க வழி இல்லை

யாரை எதிர்த்து அணியபட்ட கருப்பு சட்டை?

Image may contain: 10 people, people smiling, people standing and outdoor

அன்று பெரியார் பின்னால் கருப்பு சட்டை அணிந்தவர்களின் வாரிசுகள்தான் இவர்கள்

இன்று ஏதோ எதிர்ப்பை காட்ட மறுபடியும் கருப்பு சட்டை அணிந்துவிட்டார்களாம்.

இந்த சமூகம் திராவிடரை இழிவுபடுத்துகின்றது, அந்த இழிவு நீங்குமட்டும் எதிர்ப்பை தெரிவிக்க கருப்புசட்டை அணிவோம் என்றுதான் அணிந்தார்கள்

பின் திமுக தொடங்கும்பொழுது அரசியலுக்காக வெள்ளையாடைக்கு மாறினார்கள், வைகோ கருப்புதுண்டு அப்படி வந்ததுதான்

ஒருகாலத்தில் இவர்களின் அடையாளமாக இருந்த கருப்பு சட்டை , பிராமணரை எதிர்ப்போம் , ஆரியரை எதிர்ப்போம் என்ற அடையாளமாக கருதபட்ட கருப்பு சட்டை இன்று சொந்த சகோதர கட்சியினை எதிர்க்கும் அடையாளமாக வந்துவிட்டது திராவிட சோகம்

கலைஞர் இருந்தால் இதிலெல்லாம் மிக கவனமாக இருப்பார்

கருப்புசட்டையின் வரலாறு அதிமுகவினருக்கு தெரியாவிட்டால் ஆச்சரியமில்லை, இவர்களுக்கு தெரியாமல் போனதுதான் மகா ஆச்சரியம்

யாரை எதிர்த்து அணியபட்ட கருப்பு சட்டை, திராவிட கட்சி ஆட்சியிலே அணியபடுகின்றது என்றால் விவரம் அறிந்தவர்கள் சிரிக்கமாட்டார்களா?

அரசியல் ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்க ஆயிரம் வழி இருக்க, திராவிட வரலாற்றின் அடையாளமான கருப்பு சட்டையினை இவர்கள் அணிந்துவந்தது அதனை கேவலபடுத்தியது போன்றதாகும்

நிச்சயம் ஒரு திராவிட இனமான உணர்வுள்ளவன் இருந்தால் (வீரமணியினை சொல்லவில்லை) இதனை கண்டித்திருப்பான். அப்படி யாருமே இல்லாததுதான் சோகம்

 

தமிழக பட்ஜெட்

தமிழக பட்ஜெட்டில் ஒரு அறிவிப்பு வித்தியாசமாக இருக்கின்றது, அதாவது தனியார் நிலங்களை கையகபடுத்தி ஏழைகளுக்கு கொடுப்பார்களாம்

எனக்கு கொடநாட்டில் 10 சென்ட் வேண்டும் என மாபெரும் ஏழையாகிய நான் இப்ப்பொழுதே சொல்லி வைத்தாயிற்று

யார் யாருக்கு எங்கு வேண்டுமோ இப்பொழுதே சொல்லி வைத்துவிடுங்கள்.

சொந்த ஊரில் ஒரு கிணற்றை வைத்துகொண்டு ஆயிரம் பஞ்சாயத்து செய்து இறுதியில் பெரும் தொகை வாங்கிகொண்டு கொடுத்தவர் நிதியமைச்சர், அவர்தான் சிரிக்காமல் இதனை வாசித்தார்.

அவர் அறிவிக்கின்றார் தனியார் சொத்துக்களை கையகபடுத்தி ஏழைகளுக்கு கொடுப்பார்களாம்


இந்த பட்ஜெட்டின் சில வரிகள் மகா குழப்பமாகின்றன‌

அதாவது மத்திய அரசு நிதியினை குறைத்துவிட்டதாம், ஜிஎஸ்டியால் இன்னும் வரி குறைந்ததாம், உதய் மின் திட்டத்தில் இணைந்ததால் மின்சாரம் குறைந்ததாம்

500 மதுகடைகளை மூடியதில் பெரும் இழப்பாம்

போனமாதம்தான் மத்திய அரசுக்கு நாங்கள் அடிமை அல்ல, இணக்கமாக இருந்தால்தான் பல திட்டங்களை செயல்படுத்தமுடியும் என்றார்கள்

இப்பொழுது மத்திய அரசு தமிழக நிதியினை கொடுக்கவில்லை என்கின்றார்கள்

ஜிஎஸ்டி மசோதாவில் முழங்காலில் நின்று கையெழுத்து போட்டவர்கள் இவர்கள், உதய் மின் திட்டம் பெரும் மோசடி என தெரிந்தும் எதிர்ப்பை மீறி ஒப்புகொண்டவர்கள் இவர்கள்

ஆக ஆட்சி நீடிக்க எல்லா அநியாய திட்டத்திலும் மாநில நலனை காக்காமல் கைஎழுத்து இட்டுவிட்டு இன்று ஓஓஓ என அழுகின்றார்கள்

அம்மா, தமிழிசை அம்மா. மோடி மீது பழனிச்சாமி பட்ஜெட்டிலே குற்றம் சாட்டுகின்றார்? விடலாமா?

ம்ம்ம் ஸ்டார்ட் மியூசிக்.


 

சீனாவில் கால் டேக்ஸி ஓட்டி கம்யூனிஸ்டா வாழபோறேன்

Image may contain: one or more people, people standing and outdoor

“தினகரன் கட்சி பெயரை சொல்லிட்டார், இனி நேரா நம்மகிட்டதான் வருவானுக‌

நான் இந்த வழியா சீனா போகபோறேன், அங்கதான் கட்சி இல்ல தேர்தல் இல்ல ஒரு இம்சையுமில்ல, யார்கிட்டேயும் சொல்லாத.

அங்க போய் நான் கால் டேக்ஸி ஓட்டி கம்யூனிஸ்டா வாழபோறேன்”

 

இதனை விட “நல்ல அம்மா” எங்கே கிடைப்பார்?

29257816_10211333387665555_5363219971407085568_n.jpg
சங்கமும் “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்றொரு கட்சியினை தொடங்கலாம் என்றிருந்தது

பெயரை பதிவு செய்யாமல் விட்டது எவ்வளவு பெரும் தவறு என புரிகின்றது, அதற்குள் முந்தி கொண்டார்கள்

எனினும் இந்த அம்மாவினை கட்சியில் சேர்த்துவிட்டு தினகரன் கட்சி தொடங்கி இருந்தால் நாளைக்கே முதல்வர் ஆகியிருக்கலாம் 

இதனை விட “நல்ல அம்மா” எங்கே கிடைப்பார்?

விரைவில் “நல்ல அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” சங்கத்தால் தொடங்க படும்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என கட்சிக்கு பெயர் வைத்தார் தினகரன்

Image may contain: 2 people, people smiling

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என கட்சிக்கு பெயர் வைத்தார் தினகரன்

எல்லா படத்திலும் திரையில் “அம்மா..” என்றும், திரைக்கு பின் “அம்மு..” என்றும் அலறிய ராமசந்திரன் கட்சியில் இப்படி பின்னாளில் பெயர் வரவில்லை என்றால்தான் ஆச்சரியம்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்

இதுவரை அம்மாவால் முன்னேறிய மக்கள் யாரென்றால் சாட்சாத் மன்னார்குடி குடும்பம், பன்னீர் மற்றும் பழனிச்சாமி

ஆனால் அப்படி அல்ல அம்மாவால் வளர்ந்த மக்கள் நாங்கள்தான் என தினகரன் மிக உரிமையாக “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” தொடங்கிவிட்டாராம்

இன்னும் முன்னேற என்ன இருக்கின்றது, ஆர்.கே நகரில் காட்டாத முன்னேற்றமா? இனி கழகம் தொடங்கியும் முன்னேற வேண்டுமா?

ஒரு விஷயம் தினகரன் மறக்கின்றார்

ஆனானபட்ட ராமசந்திரனுக்கே திராவிடம் பேசாவிட்டால் உருப்படமாட்டோம் என்ற பயம் இருந்தது, அண்ணா திமுக என அவர் பெயர் சூட்டியது அதனால்தான்

அண்ணா மக்கள் முன்னேற்ற கழகம் என்றிருந்தால் நாசமாய் போயிருப்பார்

ஆட்சியினை பிடிக்கவேண்டுமென்றால் திராவிடம் பேச வேண்டும், தினகரன் கட்சி என்பது பன்னீரை பழிவாங்கவும் சொத்துக்களை காக்கவும் என்றான பின் அது அம்மா மக்கள் முன்னேற்றம் என இருந்தால் என்ன? அடிமைபெண் முன்னேற்ற கழகமாக இருந்தால் என்ன?

(சொர்கத்தில் இப்பொழுது என்ன நடக்கும் என்றால் இந்த படத்தில் காணும் காட்சிதான், ராமசந்திரன் இப்படித்தான் பரிதாபமாக முழிப்பார், அருகே அம்மு சிரித்து கொண்டிருக்கும்)

 

தீவிரவாதி ஆயுள் தண்டனை கைதி அபுதாஹீரை சந்தித்து ஆறுதல் கூறினார் சீமான்

கோவை குண்டு வெடிப்பில் 58 தமிழர்களை போட்டு தள்ளிய தீவிரவாதி ஆயுள் தண்டனை கைதி அபுதாஹீரை சந்தித்து ஆறுதல் கூறினார் சீமான் : செய்தி

பொது இடத்தில் குண்டு வைத்து பலரை கொன்றவன், 100 போலிசை கொன்று சந்தண மரத்தை கடத்தியவன், சொந்த நாட்டு ராணுவம் 1500 பேரையும் பிரதமரையும் கொன்ற அந்நியநாட்டு தீவிரவாத கும்பல் இவர்களை எல்லாம் ஒரு அரசியல் கட்சி தலைவன் தமிழகத்தில் விழுந்து விழுந்து ஆதரிக்கின்றான்

இப்படி ஒரு ஒரு நபர் இருக்கவும், அவருக்கு கட்சி இருக்கவும் இந்நாடு அனுமதிக்கின்றது, பின் எங்கிருந்து தேசம் உருப்படும்?