ரதத்தோடு வந்துவிட்டார்கள், இதற்கெல்லாமா சண்டைகள்?

உபியில் வென்றால் இந்தியா முழுக்க லட்டு கொடுப்பதும், உபியில் தோற்றால் இந்தியா முழுக்க ரதம் இழுப்பதும் இவர்கள் வழக்கம்

இது ஒருவகையில் ஒப்பாரி

இது தெரியாமல் ஆளாளுக்கு எதிர்க்கின்றார்களாம். அவர்களே மகா துயரத்தில் ரதமேறி ஆறுதல் தேடிகொண்டிருக்கின்றார்கள் அவர்களை போயா வம்புக்கு இழுப்பது?

காசி முதல் ராமேஸ்வரம் வரை எந்நாளும் இந்துக்கள் சாதா காலமும் நடந்த பூமி இது, பன்னெடுங்கால வரலாறு அதை சொல்கின்றது

தென்னவர்கள் காசிக்கும், வடக்கத்தியர்கள் ராமேஸ்வரத்திற்க்கும் வந்து செல்வது தொன்று தொட்டு வருவது

அப்படி வந்திருக்கின்றார்கள், என்ன ரதத்தோடு வந்துவிட்டார்கள், இதற்கெல்லாமா சண்டைகள்?

இதில் முன்னணியில் இருப்பது வைகோ, எந்த வைகோ?

வாஜ்பாயுடனும் , ரதமேறிய முன்னோடி அத்வானியுடனும் கூட்டு வைத்த அதே வைகோவும் அந்த திமுகவும் அத்வாணி ரதமேறிவந்தால் சத்தமில்லையாம், பின்பு அவர் ஆட்சியிலும் பங்கெடுப்பார்களாம்

இப்பொழுது ரதம் வந்தால் பொங்குவார்களாம்.

பாஜகவோடு முதலில் கூட்டு வைத்து இங்கு அறிமுகபடுத்தியதே இவர்கள்தான்.

வாஜ்பாய் அத்வாணியோடு முரசொலிமாறன் அதாவது கலைஞரின் மனசாட்சி நின்ற காட்சிகள்தான் முதலில் தமிழகத்தில் பாஜக காலூன்றிய காட்சி

இருந்து பாருங்கள், மோடி பெரும்பான்மை இழக்கும் பட்சத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் இவர்கள்தான் அவர்கள் ஆட்சியின் கூட்டணியாக இருப்பார்கள்

அப்பொழுது பேச வசதியாக இதனை குறித்துகொள்ளுங்கள்

 

திமுகவின் மதுவிலக்கு என்னாயிற்று?

சட்டசபையில் ஒரு விசித்திர சண்டை நடந்திருக்கின்றது, மதுகடை பார்களை ஏன் ஏலம் விடவில்லை என சீறியிருகின்றார் திமுக எம்.எல்.ஏ ரகுபதி

அமைச்சர் தங்கமணியோ மிக பொறுப்பாக “ஏலம் எடுக்க யாரும் வரவில்லை அதனால் ஏலம் விடவில்லை” என்றிருக்கின்றார்

“எவன் சொன்னான்?, நீங்கள் ஏலம் விடுவீர் என நாங்கள் காத்திருந்தோம் ஏமாற்றிவிட்டீர்கள் , ஏலம் விடுங்கள் எங்கள் கட்சிக்காரன் எடுத்து நடத்துவான்” என தன் பெரும் எதிர்பார்ப்பை சொல்லிவிட்டார் ரகுபதி

“அப்படியானால் திமுகவின் மதுவிலக்கு என்னாயிற்று? “என அதிமுக கேட்க, “அது ஆட்சிக்கு வந்தபின் செய்வோம் இப்பொழுது மதுகடை கிடைத்தால் நடத்துவோம்” என சொல்லிவிட்டார் ரகுபதி

இதை கேட்டு ஸ்டாலின் கதறி அழுது தலையில் அடித்திருப்பார் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

எப்படிபட்ட ஆட்கள் எல்லாம் திமுகவில் இருக்கின்றார்கள் பார்த்தீர்களா? கலைஞர் மகா அமைதியானதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை

நாடு முழுக்க சுற்றிவரும் ராம ரதம் தமிழகத்திற்கும் வந்தாயிற்று

நாடு முழுக்க சுற்றிவரும் ராம ரதம் தமிழகத்திற்கும் வந்தாயிற்று : செய்தி

உ.பியில் பாஜக தோல்வி தெரிந்தபின் அடுத்து அவர்களின் செல்வாக்கை உயர்த்த நிச்சயம் ராமர் கோவில் பக்கம் வருவார்கள் என்பது எதிர்பார்த்த விஷயம்.


இங்கு சாதி சங்க ஊர்வலம் நடத்தலாம், இயேசு அழைகின்றார் மாநாடு நடத்தலாம்

ஷிர்க் ஒழிப்பு என இஸ்லாமியர்கள் பெரும் மாநாடு எல்லாம் நடத்தலாம் , விநாயக சதுர்திக்கு ஊர்வலம் செல்லலாம்.

திருமா சீறலாம், ராமதாஸ் பொங்கலாம் பேரணி நடத்தலாம்

மாதம் ஒரு மாநாட்டையும் பேரணியினையும் கட்சிகள் நடத்தலாம்

ஆனால் ரத யாத்திரை மட்டும் நடக்க கூடாதாம், எதிர்ப்பார்களாம்

என்ன நியாயமோ தெரியவில்லை.


தமிழகத்தில் மட்டும் பிராமணர்களுக்கு மரியாதை இல்லை : எஸ்.வீ சேகர் வேதனை

இங்கு மதிப்பு பெற்ற எத்தனையோ பிராமணர்கள் உண்டு, ஜெயலலிதா முதல் சுஜாதா வரை ஏராளமான பெயரை அடுக்கலாம்.

மதிக்கபடாத பிராமணர்கள் யாரென்றால் எஸ்.வி சேகர், எச்.ராசா போன்ற வகையாறாகள், காரணம் என்ன என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

ஆக எஸ்.வி சேகர் என்ன சொல்லவேண்டும்?

என்னையும் எச்.ராசாவினையும் தவிர எல்லா பிராமணர்களும் மதிக்கபடுகின்றார்கள் என சொல்லியிருக்க வேண்டாமா?


சில பரதேசி சாமியார்கள், ஆண்டி பண்டாரங்களின் ஊர்வலம் கண்டுகொள்ளபடாமல் விட்டிருந்தால் அது போக்கில் சென்றிருக்கும்

உண்மையில் அப்படி ஒரு ரதம் கிளம்பியிருப்பதே யாருக்கும் தெரியாது

அதை மறிக்க்கின்றேன் பேர்வழி என கிளம்பி விஷயத்தை பெரிதாக்கி ரதத்திற்கு சிறந்த வரவேற்பை கொடுத்தாயிற்று

சில விவகாரங்களில் விவேகம் முக்கியம்,

கண்டுகொள்ளாமல் விட்டால் கவனமே பெறாத விஷயத்திற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்


 

ராம ரதத்தை எதிர்த்து முக ஸ்டாலின் மறியல், கனிமொழி சீற்றம்

ஆக பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் கட்டிகாத்த திராவிட கொள்கையினை ஒரு ரதம் அசைத்து பார்கின்றதா?

ஒரு ரதத்திற்கு திராவிட பூமி அஞ்சலாமா? இது நம்மை என்ன செய்துவிடும் என்ற பகுத்தறிவு வேண்டாமா?

ராம ரதத்தை தடுத்துவிட்டு இங்கிருந்து இந்துக்கள் காசிக்கு புனிதபயணம் செய்வதை தடுக்கமுடியுமா?

திருவாரூர் தேரினை ஓடவைத்தவர் கலைஞர் என சமரசம் செய்து கொள்பவர்கள்தான் ராமர் தேர் ஓடகூடாது என மறிக்கின்றார்களாம்

யானை சிறுநரிக்கு அஞ்சலாமா? பகுத்தறிவாளர்கள் ஒரு தேருக்கு மிரளலாமா ?


மிக அரிதான பூங்குருவி இது

Image may contain: 1 person, close-up

குருவிகளில் பல வகை உண்டு. தேன் சிட்டு, கரி குருவி, இரட்டை வால் குருவி, சிட்டு குருவி என ஏகபட்ட வகை உண்டு

ஆனால் இந்த குருவி மிக அரிதானது, உலகில் ஒரே ஒரு முறை மட்டும் வரும் மிக அரிதான பூங்குருவி 
இது.

அவ்வகையில் தமிழர் அனைவரும் மகா பாக்கியசாலிகள்.

 

இன்று உலக சிட்டுகுருவிகள் தினம்

No automatic alt text available.

இன்று உலக சிட்டுகுருவிகள் தினம்

தமிழர்கள் சிட்டுகுருவியை மிக மிக ரசித்தவர்கள், பல பழந்தமிழ் பாடல்களில் குருவியை புள்ளான் என குறிப்பிட்டுள்ளனர் அவர்களை விடுங்கள் செங்கால் நாரையை கூடத்தான் அழகாக கவிதையில் புனைந்திருப்பார்கள்.

சிட்டுகுருவிக்கு தனி இடம் கொடுத்தவர் நெல்லைக்காரர் மகாகவி பாரதி, கடனுக்கு மனைவி வாங்கிவந்த அரிசியை, கொல்லையில் குருவியை கண்டவுடன், தன் குடும்பத்து பசிமறந்து, “காக்கை குருவி எங்கள் ஜாதி” என ஆனந்தமாய் பாடி குருவிக்கு அரிசி வீசியவர்.

லௌகீக வாழ்வில் மிகவும் சலிப்புற்று பாரதி சோர்வுறும்பொழுது அவருக்கு பாட வழிகாட்டியது சிட்டுகுருவி,

“விட்டு விலகி நிற்பாய் அந்த சிட்டு குருவியை போலே…” ,

பாடலை கவனியுங்கள், ஆயிரம் அர்த்தம் விளங்க்கும் அவர் மகாகவி அல்லவா?,

தமிழ் திரை பாடல்களில் கூட “டவுண்பஸ்”பட நாயகி கணவனை காணவில்லை என காவல்நிலையம் செல்லாமல் சிட்டுகுருவியிடம் தான் கவலைபடுவாள், புதியபறவை சரோஜாதேவி சிட்டுகுருவி முத்தம் கொடுத்ததை கண்டபின் தான்(அப்பொழுது கமலஹாசன் மிகசிறுவன்) காதல் கொள்வார், அவ்வளவு ஏன் ரஜனிகாந்த் கூட சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு என்றுதான் ஒரு படத்தில் மகளுக்காக பாடுவார் பின்னாளில் புறாவுக்கு மாறி ஒரு பெண்புறா… என பாடிவிட்டார்.

அவர்களை விடுங்கள், நடிகர் திலகமே “முதல் மரியாதையில்” ஆழ்ந்த கவலையில் அதனை மறக்க “ஏ குருவி..சிட்டு குருவி..”, என தனது வீட்டு உத்திரத்தில் கூடுகட்ட அழைப்பார்.

அளவில் சிறியதால் அதனை சிட்டில் அல்லது சிட்டுகுருவி என அழைத்தாலும் தமிழ்மக்கள் அதற்கு வைத்திருக்கும் பெயர் “அடைக்கலாங் குருவி”

பறவையினங்களில் மனிதரிடம் ஒட்டுவது அல்லது மனிதர் வாழும் பகுதியில் வாழும் பகுதியில் கூடுகட்டிவாழும் பறவைகள் மிக குறைவு, அவ்வகையில் மனிதனின் வீட்டிற்குள் அடைக்கலமாய்(அல்லது தைரியமாய்) வந்து கூடுகட்டிவாழுவதால் அது அடைக்கலபறவை.

மனிதாபிமானத்திலும் இரக்கத்திலும் சிறந்த மனமுடைய நமது மக்கள், அக்குருவி ஆயிரம் தொல்லை கொடுத்தாலும், குஞ்சுகளோடு அது பறக்கும்வரை அந்த கூட்டை கலைக்கமாட்டார்கள், அது 3 தலைமுறைக்கு பாவம் சேர்க்கும் என்பார்கள்.

முறத்தில் அரிசி படைக்கும் பெண்கள் முன்னால்,சோறு சிதறும் இடன்ங்கள் கோழிக்கு தானியமிடும் இடங்கள் என தானியங்கள் சிதறுமிடங்களில் எல்லாம் அக்குருவி கூட்டத்தினை காணலாம்.

கிராமங்களில் வளர்ந்தவர்கள் நிச்சயமாக சிட்டுகுருவிகளோடுதான் வளர்ந்திருப்பார்கள், அவர்கள் வீட்டில் ஒருவர்போல சிட்டுகுருவியோடு பழகியிருப்பார்கள்,

அது மனிதன் உலகில் தானும் ஒரு ஜீவன் என்ற எண்ணத்தோடு, உலக உயிர்களோடு உறவாடி வாழ்ந்த பொற்காலம்.

பலநூறுஆண்டுகளாக ஒரே வாழ்க்கைமுறையிலிருந்த நம் பகுதி கடந்த 30 ஆண்டிற்குள் சடுதியாக மாறிவிட்டது, அறிவிக்கபடாத புது வாழ்க்கை முறையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

ஆடு,மாடு,கோழி,குருவி என சகல ஜீவராசிகளோடு வாழ்ந்த நாம் இன்று சுற்றிலும் மிண்ணணு கருவிகள்,எந்திரங்கள் என ஒரு எந்திரமாகவே காங்கரீட் காட்டில் தனியாக வாழ்கின்றோம் (வாடுகின்றோம்).

ஆறறிவு படைத்த மனிதனே இன்றைய வாழ்வில் அகதிகளாய் தடுமாறும்பொழுது, பாவம் சிட்டுகுருவிகள் என்ன செய்யும், விஷ மருந்து தெளிக்கபட்ட தானியங்களை தின்ன கூடாது என்றோ, செல்போன் கோபுரத்திற்கும் ஆலய மாடத்திற்கும் வித்தியாசங்களோ அவற்றிற்கு தெரிவதில்லை.

நவீன அடுக்குமாடி குடியிருப்பில் புல்கூட செயற்கைதான் எனும்பொழுது இயற்கை குருவியை அனுமதிப்பது யார்?, இதுதான் சுத்தமான வீடு என மேற்குலகம் அறிவித்து விட்டால் நாமும் அதனை தலைமேல் கொண்டாடும் காலம்.

வீடு சுத்தமாக இருக்கவேண்டும், மரங்களையும் வெட்டவேண்டும்,காலி இடமெல்லாம் கட்டடம் கட்டவேண்டும், புறம்போக்கு நிலமென்றாலும் லஞ்சம் கொடுத்து வளைக்கவேண்டும்…மரங்கள் கூடவே கூடாது, பறவைகள் கூடு கட்ட லாயக்கில்லாத முள்மரங்களை அப்புறபடுத்தும் திட்டமும் இல்லை அவை இந்தியாவில் லஞ்சத்தைவிட வேகமாக ஆக்கிரமித்தாகிவிட்டது,

வேறு எங்கிருந்து சிட்டுக்குருவிகள் வாழும்??

பலபோராட்டங்களை கடந்துதான் அவை வாழ்கின்றன, சிட்டுகுருவி லேகிய பரபரப்பில் அவை பெரும் ஆபத்தில் சிக்கின, தவறான வதந்திகளில் “தேவாங்க்கு ராக்கெட் லேகியம்” (உபயம் எம்.ஆர் ராதா) போல, சிட்டுகுருவிகளை பெருமளவு உலகமிழந்தது.

இன்று அதே லேகியங்களை பல மருத்துவர்கள் வேறுபெயரில் தொலைகாட்சியில் விற்றுகொண்டிருப்பதால், சிட்டுகுருவிகளுக்கு கொஞ்சம் ஆறுதல்.

இந்த பரபரப்பான உலகில் அவற்றை பற்றி கவலைபட யாருமில்லை, அவற்றை என்றல்ல தன்னலம் த‌விர வேறு எதையும் மனிதன் யோசிப்பதில்லை,

சில குடும்பங்களில் பூர்வீக‌ சொத்தெல்லாம் தனக்குமட்டும் வேண்டும் என பகிரங்கமாக சண்டையிடும் மகனை போல, இந்த பூமி தனக்கு மட்டும் உரியது என்று மனிதன் நினைத்து கொள்கிறான், பிற உயிரினங்களுக்கும் இந்த பூமியில் உரிமை உண்டு என்பதை மறந்து விடுகிறான்.

சிட்டுகுருவி என்றல்ல, மிளகு காய்த்து பழுக்கும் காலங்களில் பறந்து வரும் கிளிகூட்டம், நாற்றுநட்ட வயல்களில் வரும் கொக்குகூட்டம், கொழுந்து விட்ட செடிகளை கடிக்க வரும் முயல்கள், நில‌கடலையை பதம்பார்க்க வரும் வெள்ளெலி கூட்டம், பனை மரங்களை கொத்தும் மரங்கொத்தி, மேய்ந்துகொண்டிருக்கும் ஆடுகள்,மாடுகள் மேல் அமர்ந்து சில பூச்சிகளை தின்னும் சில பறவைகள் என காணாமல் போனவைகள் நிறைய உண்டு.

முன்பு தமிழக சிறுகாடுகளில், ஏன் வயல்களில் கூட‌ நிறைய நரிகளும்,மரநாய்களும் இருந்ததாம், நம்பித்தான் ஆகவேண்டும் 40 ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்ததாக பெரியவர்கள் சொல்கின்றார்கள்,

அதனை போல இங்கெல்லாம் நிறைய சிட்டுகுருவிகள் இருந்தது என வருங்காலத்தில் குழந்தைகளிடம் சொல்லகூடிய நிலையை நினைத்தால் மிக நடுக்கமாகத்தான் இருக்கிறது அப்படி ஒரு நிலை வரவேகூடாது,

உறுதியாக‌ சொல்லலாம், இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, எல்லா உயிர்களும் வாழவே இறைவனால் படைக்கபட்டிருக்கிறது, அவைகளை வாழ விடுவது மனிதனின் கடமையே.

 

சாமார்த்திய சாணக்கிய ம.நடராசன் இறந்துவிட்டார்

Image may contain: 1 person, glasses

கலைஞர், சோ ராமசாமி வரிசையில் இருந்த மிகபெரும் சாமார்த்திய சாணக்கிய ம.நடராசன் இறந்துவிட்டார்

மிக திறமையான வேலைக்காரன் தன் எஜமானின் நாற்காலியில் அமர்வான் என்பது அனுபவ மொழி. பைபிளின் தாவீது முதல் ஜூலியஸ் சீசர், நெப்போலியன், ஹைதர் அலி, ராபர்ட் கிளைவ் எல்லாம் அதற்கு உதாரணம்

ஜனநாயக காலத்தில் கலைஞர் போலவே மிகசிறந்த உதாரணம் ம.நடராசன். கொக்கு போல் காத்திருந்து வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் புலிபாய்ச்சலில் பாய்ந்து தன்னை நிரூபிப்பான் சாமார்த்தியசாலி, நடராசன் அதனைத்தான் செய்தார்.

நிச்சயம் அவர் ஒரு திராவிடவாதி. மொழிப்போரில் எல்லாம் பங்குபெற்றவர். கலைஞருக்கு முதலில் நெருக்கம் அவ்வகையில்தான் அவர் திருமணமே கலைஞர் தலமையில் நடைபெற்றது

ராமசந்திரன் காலத்தில் சாதாரண அரசு ஊழியர், ஆனால் அரசியல், கட்சி அபிமானம் என முழுக்க ஊறிவிட்ட அவர் சமயம் பார்த்து சில அதிகாரிகள் மூலமாக ஜெயலலிதாவிற்கு துணையாக சசிகலாவினை அமர்த்தினார்

அப்பொழுது ராமசந்திரனின் இரும்பு காலங்களில் ஜெயாவிற்கு ராமசந்திரனுக்கும் இனிப்பும் கசப்பும் மாறிவந்த காலங்களில் மிக அழகாக தன் இருப்பை தக்க வைத்து கொண்டவர் நடராசன்.

ஜெயலலிதாவிற்கு கூடிய கூட்டத்தை கண்டு முதன் முதலாக ஜெயா முதல்வராக முடியும் என்ற கணிப்பினை அவர்தான் செய்தார், ஜெயா எனும் யானையின் பலம் அதற்கே தெரியாமல்தான் இருந்தது

ராமசந்திரன் இறந்தபின் ஜெயலலிதாவிற்கு வெல்ல வேண்டும் என்ற கோபம் இருந்ததே தவிர வழி தெரியவில்லை. அவருக்கு வழிகாட்டியது நிச்சயம் ம.நடராசனே

பல நேரங்களில் அரசியலை விட்டு ஓடுவேன் என மனம் கலங்கிய ஜெயலலிதாவிற்கு நம்பிக்கை கொடுத்தவர் அவரே

ஆர்.எம் வீரப்பன், பண்ருட்டி ராமசந்திரன் என பெரும் ஜாம்பவான்கள் இருந்த அதிமுக அணி ஒருபுறம்

எப்படியாவது அதிமுகவினை பலவீனபடுத்தி அதன் முதுகில் ஆட்சியில் ஏறவேண்டும் என்ற திட்டத்தோடு ராஜிவ்காந்தியின் காங்கிரஸ் ஒருபுறம்

சினம்கொண்ட சிம்மமாக சுற்றிவந்த கலைஞர் ஒருபுறம் என பல சிக்கல்கள் இருந்த காலத்தில் அரசியல் அனுபவமற்ற ஜெயாவினை காத்தது அவர்தான்

அதிமுக எதிரிகளை ஒழித்து கட்டியது, ஜாணகியினை வீட்டுக்கு அனுப்பியது, ஆர்.எம் வீரப்பனை மூலையில் வைத்தது, ராஜிவ் காந்திக்கும் அன்று களமிறங்கிய சிவாஜி கணேசனுக்கும் பெப்பே காட்டியது என மிக அட்டகாசனமான நகர்வுகளை கொடுத்தார்

கலைஞரின் ஒரே எதிரி ஜெயலலிதா என நிறுத்தி காட்டியதும் நடராசனே

அவர் மீது சர்ச்சைகளும் உண்டு, ராஜிவ் கொல்லபடும் முன்பு அவர் செய்த ரகசிய வெளிநாட்டுபயணம் பற்றி இன்றுவரை விசாரணை இல்லை . ராஜிவினை கொன்றது புலிகள், புலிகளுக்கு உதவியது திமுக என்ற அளவிலே விசாரணை சென்றது

ராஜிவ் கொலையால் ஜெயா ஆட்சிக்கு வந்ததும் நடராஜனின் போக்கு மாறிற்று, தமிழக அரசியலை நடத்துவது நானே என சொல்லிகொண்டார்

டெல்லியிலும் அப்படி வலம்வர, ஜெயாவிற்கு எச்சரிக்கை மணி அடித்தது, தன்னை முதல்வராக்கியது நடராஜன் என்பதால் தன்னை வீழ்த்தவும் அவரால் முடியும் என அஞ்சினார், விளைவு பல வழக்குகள் பாய்ந்தன செரீனா வழக்கு உட்பட‌

Image may contain: 2 peopleபோயஸ் கார்டனில் இருந்து வெளியேறும்பொழுது என் மனைவி சசிகலா முதல்வராகும்பொழுதே இனி இங்கு கால்வைப்பேன் என சவால்விட்டு வந்தார் நடராசன்

ஆனாலும் சசிகலா ஜெயாவோடே இருந்தார். மிகுந்த தொலைநோக்கான திட்டம் இது. கொஞ்சமும் பிசறில்லா திட்டம்

அதன் பின் நடராசன் ஆட்டம் கட்ட்டுபாடு ஆனது, விளைவு ஊழல் வழக்குகள் ஜெயா மீது பாய்ந்தன, வாஜ்பாய் அரசுக்கு ஆதரவு போன்ற விஷயங்களில் சறுக்கினார் ஜெயலலிதா. டெல்லி அரசியல் அவருக்கு வரவில்லை

திராவிட அரசியல்வாதி என தமிழகத்தில் சொல்லிகொண்ட ஜெயலலிதாவிற்கு சோ போன்றோரின் தேசிய வழிகாட்டல் தலைசுற்றலை ஏற்படுத்திற்று

மறுபடி நடராசன் களத்தில் வந்தார், மறுபடி ஆட்சிக்கும் வந்தார் ஜெயா. நடராஜன் மறைமுகமாக தன் அம்புகளை ஏவிகொண்டே இருந்தார்

சிறை , வழக்கு என சர்ச்சைகுள்ளான ஜெயலலிதாவின் மறுபக்கத்தை 2006ம் ஆண்டிலிருந்து தமிழ் தேசிய அமைப்புகளோடு ரகசியமாக கைகோர்த்து கலைஞர் மீது சாடவைத்தார் நடராசன்

எல்லா தமிழ் உணர்வாளர்களும் கலைஞரை வசைபாடுவதில் அவர் பின்னால் இருந்தார்

2009ல் அது உச்சத்தில் இருந்தது

அதன் பின் ஜெயா முதல்வரானார், ஆயினும் பழைய வழக்குகளில் இருந்து ஜெயா தப்ப முடியவில்லை, டெல்லியோ சசிகலா கும்பலின் பிடியிலிருந்து ஜெயாவினை மீட்டெடுக்க செய்த முயற்சிகளை தொடுத்துகொண்டே இருந்தது, ஆனால் நடராஜனின் பிடியிலிருந்து ஜெயாவால் வெளிவரமுடியவில்லை, அப்படியே மரித்தும் போனார் ஜெயா

இதன் பின்பு தன் 1990களில் போட்ட சவாலை நிறைவேற்றும் கட்டத்திற்கு வந்தார் நடராசன், சசிகலா முதல்வராகும் நேரம் நெருங்கிற்று

ஆனால் ஜெயாவினை தன் கைப்பாவையாக மாற்ற ராஜிவ் போட்ட திட்டமெல்லாம் அவர் மரணத்தால் நொறுங்கிய நிலையில் அசுரத்தனமாக வளர்ந்தார் ஜெயா, அதில் கலங்கிய டெல்லி இம்முறை இன்னொருவர் வளரகூடாது என்பதில் கவனமாக இருந்தது

சசிகலா மீது தண்டனை விதிக்கபட்டது அவர் சிறை சென்றார், முதன் முதலாக நொறுங்கினார் நடராசன்

டெல்லி விடாபிடியாக அடித்து ஆடியது கட்சி சிதறியது, பன்னீர் பழனிச்சாமி எல்லாம் சுய உருவம் காட்டினர்

தன் 35 ஆண்டுகால மாபெரும் ராஜதந்திரமிக்க நகர்வு தன் கண்முன்னே நொறுங்குவதை கண்ட நடராசன் தீரா வியாதியில் விழுந்தார், சிகிச்சைகள் கொஞ்சநாள் மரணத்தை தள்ளிபோட்டதே தவிர பூரண சுகம் கொடுக்கவில்லை

இன்று இறந்தும் விட்டார்

நடராசன் மீது பெரும் சர்ச்சை இருக்கலாம், ஆனால் ஒரு விஷயம் நோக்க வேண்டியது உண்டு.

ஜெயா என்பவர் யானை, தன் பலம் தனக்கே தெரியா யானை. அந்த யானையின் பாகனாக சத்திய சங்கிலி மூலம் கட்டிபோட்டவர் நடராசன்

ஜெயா எனும் பிராமணர் மூலம் தமிழகத்தில் பிராமண ஆதிக்கம் வர இருந்த நிலையில் அதனை திராவிட பாணியிலே தொடர வைத்தவர் நடராசன்

டெல்லி ஆதிக்கமோ இன்னபிற அழிச்சாட்டியமோ தமிழகத்தில் ஜெயா இருந்தவரை தலையெடுக்க அவர் விடவில்லை, அவ்வகையில் சுத்தமான திராவிடவாதி நடராசன் ஆனால் சில இடங்களில் அது தேவர்சாதி ஆதிக்கமாக மாறியது கொடுமை

இந்த ஜெயலலிதா, நடராசனை எல்லாம் ஏன் 1989களிலே கலைஞர் ஒழித்துகட்டவில்லை, அவரால் முடியாதா?

நிச்சயம் முடியும்

ஆனால் திராவிட திமுகவின் எதிர்கட்சி இன்னொரு மாநில கட்சியாகவே இருக்கவேண்டும் அதனை ஒழிக்கும் பட்சத்தில் இன்னொரு தேசிய கட்சி தலையெடுக்கும் அது பெரும் சிக்கலுக்கு வழிவகுக்கும் என்ற ஒரு கணிப்பு இருந்தது

இருவருக்கும் புரிதலும் இருந்தது. ஆனால் அதே நேரம் எதிர்கட்சி தன்னை மீறி சென்றுவிட கூடாது எனும் எச்சரிக்கையும் இருந்தது, வழக்குகள் அப்படி பாய்ச்சபட்டவையே

1987ல் காங்கிரஸ் தன் முழு பாய்ச்சலோடு அதிமுகவினை அமுக்க வந்தபொழுது அதனை விரட்டி அதிமுகவினை காத்து ஜெயாகாலம் வரை அது இயங்க முழுகாரணம் நடராசன்

என்ன நேரமோ தெரியவில்லை அனுபவம் வாய்ந்தவர்கள் எல்லாம் மொத்தமாக விடைபெறுவது நடக்கின்றது

எல்லா தூண்களும் மொத்தமாக சாய்ந்தால் கட்டம் என்னாகும்? , எல்லா முக்கிய வேர்களும் மொத்தமாக உயிரற்று போனால் மரம் என்னாகும்?

தமிழக நிலை அப்படித்தான் ஆகிவிட்டது.

தீரா சர்ச்சைகள் இருந்தாலும் சில இடங்களில் நடராசனின் அரசியல் ஆட்டம் அட்டகாசனானது, தைரியமும் ஆச்சரியமும் மிக்கது

தான் காத்து நின்ற துரியோதனனின் கவுரவ வீழ்ச்சியினை வீழ்ச்சியினை காணசகிக்காத பீஷ்மர் கண்ணை மூடியது போல‌ ல நடராசனும் கண்களை மூடிவிட்டார்

வெற்றியினை நுனியில் தவறவிட்ட சசிகலாவின் மனம் கண்களை கட்டி கொண்டு கணவனுக்காக வாழ்ந்த காந்தாரி போல துடிக்கலாம்.

மாவீரன் அஸ்வத்தாமன் போல தினகரன் மனம் விம்மி துடித்து பழிவாங்க அலையலாம்

மகாபாரதம் ஒருகாலமும் முடியாது, மானிட இனம் எங்கெல்லாம் அதிகாரத்திற்கு போராடுமோ அங்கெல்லாம் நடந்துகொண்டே இருக்கும்

அதிமுகவின் சகுனியாக, மன்னார்குடி குடும்ப பீஷ்மராக, ஜெயலலிதாவின் கிருஷ்ணனாக பல வடிவங்களில் வலம் வந்து, தமிழக அரசியலை 35 ஆண்டுகாலம் நடத்தி அதே நேரம் டெல்லியின் பெரும் கரங்கள் தாக்காமல் காத்து சென்ற அந்த திராவிட‌ நடராசனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்


ஜெயா முதலமைச்சராக நடராஜனே காரணம் : கலெக்டர் சந்திரலேகா

இதன் மூலம் அம்மையார் சொல்ல வருவது தன் முகத்தில் ஆசிட் வீச்சு நடக்கவும் நடராஜனே காரணம்