ஆம்புலன்ஸில் செங்கோட்டை சென்றார் சீமான்

ஆம்புலன்ஸில் செங்கோட்டை சென்றார் சீமான் , தந்திரமிக்க நடவடிக்கை என தும்பிகள் சிலிர்ப்பு

இப்படித்தான் இலங்கையில் மருத்துவமனையில் படுத்து புலிகள் அமைதிபடையினை சுட்டார்கள், பள்ளியில் இருந்து சுட்டார்கள்

எங்கெல்லாம் ராணுவம் கை வைக்க தயங்குமோ, சந்தேகம் வராதோ அங்கெல்லாம் பதுங்கி சுட்டார்கள்

இதெல்லாம் அப்பாவிகள் சேவை பெறும் இடமாயிற்றே, திருப்பி தாக்கபட்டால் என்னாகும் என்ற அறிவு கொஞ்சமும் இல்லை

அப்படி யாழ்பாண மருத்துவமனையில் இருந்து வழக்கம் போல் புலிகள் சுட, பொறுமை இழந்த ராணுவம் டேங்க் மூலம் அதனை தகர்த்தது. ஏராளமான மருத்துவர் உட்பட அந்த மருத்துமனை அழிந்தது

அப்படி இருந்த புலிகளை கொண்டாடும் இந்த கூட்டம் எப்படி இருக்கும்?

அப்படித்தான் ஆம்புலன்ஸில் பறந்தார் சைமன் அவரின் ஆற்றல் அப்படி என சொல்லி திரிகின்றார்கள்

இதனால் இனி வருங்காலத்தில் எத்தனை ஆயிரம் ஆம்புலன்சுகள் மறிக்கபட்டு எவ்வளவு நோயாளிகள் பாதிக்கபடுவார்கள் என்பது இவர்களுக்கு புரியுமா?

சுத்தமாக புரியாது, காரணம் இதற்கு பொதுநலமும் கொஞ்சம் அறிவும் வேண்டும். இவர்களிடம் அது ஏது?

முதலில் ஆம்புலன்ஸில் இப்படி சென்ற சைமனை பிடித்து போட்டு சாத்த வேண்டும், இது பெரும் சட்ட மீறல் ஆகும்

இனி உண்மையிலே அடிபட்டு சைமன் ஆம்புலன்ஸில் சென்றால் கூட சந்தேகம் வருமா வராதா?

நடுரோட்டில் இழுத்து போட்டுவிடுவார்கள்

மாவீரன் பகத் சிங்கிற்கு வீர வணக்கம்…

Image may contain: 1 person, smiling, hat

மிக இளம்வயதிலே சுதந்திர இந்தியா பற்றி சிந்தித்து, போராடி வெறும் 23 வயதிலே தனது வாழ்க்கையை முடித்த அந்த‌ தியாகி, நிச்சயம் நினைவுகூற தக்கவர்.

1919ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த பின்னால் 12 வயது சிறுவனாக, இரத்தம் சிந்தியமண்ணை எடுத்து தனது ஆடையில் முடிந்துகொண்டு போராட புறப்பட்ட ஒரு இளைஞன்,

அமைதியான முறையில் போராடிகொண்டிருந்த பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராயின் படுகொலை அவனை போராளியாக்கி கொலைகுற்றவாளி ஆக்கிற்று.

சாண்டர்ஸின் கொலையில் தேடபடும்பொழுதே ஆட்சியாளர் மன்றத்தில் ஒரு சட்டத்தை கண்டித்து குண்டுவீசி, அதன் நியாத்தை அமைதியாக வெளிகாட்டிய போராளி.

அக்குண்டுவீச்சில் யாரும் கொல்லபடவில்லை எனினும், இவரால் ஏற்பட்ட எழுச்சியினை கண்டு பயந்த அரசாங்கம் அவரை கொல்ல இது பெரும் வாய்ப்பாக கருதிற்ற, தூக்கு தண்டனை விதித்தது.

ஆசிரமம்,சத்தியாகிரகம்,ஆண்மீக சோதனை இன்னும் என்னவெல்லாமோ செய்துகொண்டிருந்த காந்தி, பகத்சிங்கினை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை, வன்முறைக்கு நான் எதிரி என சொல்லிவிட்டு “ரகுபதிராகவ ராஜாராம்” என பாட சென்றுவிட்டார் காந்தி,

அப்படியானால் லாலா லஜபதிராய் தானே தலையில் அடித்து செத்துவிட்டாரா என கேட்டால் அமைதியாக ஆட்டுப்பால் குடித்துகொண்டிருந்தார்.

வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என சொன்னார் காந்தி, பகத்சிங்கினை அவர் ஆதரிக்கவில்லை.

அதே நேரம் பகத்சிங்கிற்கும் நாட்டுக்காக சாவதில் தயக்கமேதுமில்லை.

24 வயதில் சர்ச்சைக்குள்ளான முறையில் தூக்கிலபட்டதாக அறிவிக்கபட்ட பகத்சிங்கின் மரணம் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது, அதில் மறைக்கபட்ட பல விஷயங்கள் உண்டு.

குறுகிய காலம் வாழ்ந்தாலும் மாபெரும் எழுச்சியினை அவரின் மரணம் தோற்றுவித்து அடுத்த 15 ஆண்டுகளில் விடுதலை கொடுக்கும் அளவிற்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மாற்றம் கொண்டுவந்தது.

பகதிசிங்கும் அவன் கூட்டாளிகளும் மிக சிறுவயதிலே தங்களை தியாகம் செய்து எழுப்பிய எழுச்சி இந்தியாவின் விடிவாகவே அமைந்தது

மாபெரும் உணர்ச்சியினை இந்நாட்டில் ஏற்றி வைத்தவன் பகத்சிங், தன் உயிரை கொடுத்து ஏற்றிவைத்தான்

ஆனால் ஒரு வகையில் பகத்சிங் அதிர்ஷ்டசாலி, அவன் விரும்பிய சுதந்திரத்தினை காணாவிட்டாலும், அவனால் தாங்கமுடியாத இந்திய பிரிவினையும்,அதுவும் சொந்த பஞ்சாப் 3 துண்டாக உடைக்கபட்ட கொடுமையும் காண அவன் இல்லை.

அன்று

சாண்டர்ஸ் கொல்லபட்டபொழுது மொத்த இந்தியாவும் ஆர்ப்பரித்தது, பகத்சிங் தீர்ப்பு அறிவிக்கபட்டபொழுது ெல்லி,மும்பை,கல்கத்தா,சென்னை, லாகூர், கராச்சி என மொத்த‌ இந்தியாவும் கதறியது.

அவன் தூக்கிலிட்ட பொழுது வெள்ளையனை விரட்டாமல் ஓயமாட்டோம் என சிந்து முதல் கன்னியாகுமரி வரை பரந்த இந்தியா சபதம் எடுத்தது

இந்தியாவின் எல்லா தாயாரும் அவனுக்காக அழுது சபதமேற்றார்கள்.

இன்று

அவன் போராடிய லாகூரில் இருந்து பல ஏவுகனைகள் அணுகுண்டோடு இன்று டெல்லியையும்,மும்பையும் குறிபார்த்து நிற்கிறது.

அவனுக்காக , வ.வு.சிதம்பரத்தோடும் இன்னும் பலரும் அழுத தமிழகத்தின் கடற்கரையில் இந்திய கப்பல்களால் லாகூரும்,கராச்சியும் 24 மணிநேரமும் குறிவைக்கபடுகிறது.

காலம்தான் என்ன விசித்திர விளையாட்டுக்களை எல்லாம்ஆடுகிறது.

இன்று அந்த மாவீரனின் நினைவுநாள், அவன் பிறந்த லாகூர் இந்தியாவில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவன் நினைவுகளை இத்தேசம் ஒருநாளும் மறக்காது.

பாகிஸ்தானும் அவனுக்கான மரியாதையினை கொடுத்துகொண்டுதான் இருக்கின்றது

காரணம் மதங்களை தாண்டி அவன் தேசத்தை நேசித்ததால் இருநாட்டிலும் கொண்டாடபடுகின்றான்.

இந்த மண்ணோடும் , காற்றோடும் கலந்தவன் அவன்

அவனுக்கு வீர வணக்கம்…

 

எங்கள் தலைவி ஒரு எழுத்தில்லா இலக்கியம்

Image may contain: 1 person, selfie and close-up

திமுகவினருக்கு மூளை அதிகமாக? இல்லையா? என்பது அவர்கள் பிரச்சினை.

ஆனால் ரசனை அதிகம் உள்ளவன் மட்டுமே குஷ்பு சங்கத்தில் இருக்க முடியும்

நெற்றிணை, கார் கூந்தல் நாற்பது, கண்களாற்றுபடை, குறுநகை, அழகு நானூறு, இனியவை நாற்பது , கனியவை நாற்பது , குறுநகை, பேரழகு பத்து, துறுதுறுநூறு எல்லாம் இந்த முகத்திலே அடக்கம்,

ஆக எங்கள் தலைவி ஒரு எழுத்தில்லா இலக்கியம்

உலகின் மிக அழகிய கவிதை இந்த முகம்.

ஆக உலகிலே ரசனை அதிகம் கொண்டவர்கள் குஷ்பு சங்கத்துகாரர்கள் என்பதில் சங்கம் மிக்க பெருமை அடைகின்றது.

பைத்தியம் கடிச்சா எவன் கேஸ் போட முடியும்?

Image may contain: 5 people, people smiling, people sitting

இந்த சீமான் பய எல்லாம் என்னவெல்லாமோ பேசுறான், அவன விட்டுட்டு நம்மள பைத்தியம்னு சொல்ற அளவுக்கு வந்துட்டானுக‌

சில திமுககாரனவிட, அதிமுக காரன விட, சைமனின் தும்பிகள விட நாம ஒண்ணும் மோசமில்ல. ஆனா நம்மளத்தான் சொல்றானுக‌

பைத்தியம் என்ன செய்யும்னு காட்டிற வேண்டியதான், இனி அந்த வீரமணி மாதிரி ஆட்கள் காதை பிடிச்சி கடிச்சி வச்சிருவோம்

பைத்தியம் கடிச்சா எவன் கேஸ் போட முடியும்?

 

திமுகவின் வாரிசாக 3ம் கலைஞர் உதயநிதி வந்துவிட்டார்

Image may contain: 1 person, smiling, close-up

ஈழத்தில் பிரபாகரன் என்றொருவர் போராளியாக இருந்தார், தொடக்கத்தில் நன்றாகத்தான் இருந்தார்

ஆனால் பல போராளிகுழுக்கள் வர வர அவருக்கு என்னமோ ஆனது, எல்லோரையும் விரட்டினார் கொன்றார்

தான் ஒருவன் மட்டும் சிங்களனை வெல்லலாம் என நம்பினார், பெரும் தவறுகளை செய்தார்

கடைசி நேரத்தில் தன் தவறுக்கெல்லாம் காரணம் தான் எல்லோரையும் ஒதுக்கிவிட்டு தான் மட்டும் வந்தது என்பதை உணர்ந்தார், அத்தோடு செத்தார்.

Image may contain: 1 person, smiling, glasses, selfie and close-upநல்ல வாரிசை உருவாக்காமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதையும் அதனால் ஈழ போராட்டமே ஓய்ந்தது என அழுத பிரபாகரன் சொர்க்கத்தில் இருந்து பார்த்தபொழுது அங்கிள் சைமன் நான் பிரபாகரனின் வாரிசு , நானே அடுத்த போராளி என பொங்கிகொண்டிருக்கின்றார்

இப்பக்கம் கலைஞரும் அப்படியே கலங்கிகொண்டிருக்கின்றார்

ஆம் திமுகவின் வாரிசாக 3ம் கலைஞர் உதயநிதி வந்துவிட்டார்.

Image may contain: 1 person, smiling, sunglassesநல்ல வாரிசுகளை உருவாக்கா எந்த இயக்கமும் நிலைக்காது

அண்ணா அப்படி உருவாக்கிவிட்டதாலே திமுக இன்றளவும் நிற்கின்றது. தன் மனைவியோ அல்லது வளர்ப்பு மகனையோ அண்ணா நிறுத்தி இருந்தால் 1970லே திமுக அழிந்திருக்கும்

அத்வாணி அப்படி செய்திருந்தால் மோடி உருவாகி பாஜக அசுரபலமாய் வளர்ந்திருக்காது

உரிய நேரத்தில் நல்ல தலமை கிடைத்திருந்தால் ராகுல் எனும் அனுபவமில்லா கையில் காங்கிரஸ் சிக்கி நாடு நாசமாக வழி இருந்திருக்காது

நல்ல தலைவர்களை உருவாக்கிவிட வேண்டியது பெரும் தலைவர்கள் கடமை

அண்ணாவும் அத்வாணியும் அதனை செய்தனர்

பிரபாகரனும், ராமசந்திரனும், கலைஞரும் அதனை சுத்தமாய் செய்யவில்லை

விளைவு

சீமானும், தினகரனும், மூன்றாம் கலைஞரும் வந்திருக்கின்றனர், இந்த கொடுமையினை காண நமக்கு விதிக்கபட்டிருக்கின்றது

ஆளாளுக்கு தளபதி, உதயநிதி என முட்டு கொடுங்கள்

ஒன்று நினைவில் கொள்ளுங்கள்

இன்று அதிமுக சந்திக்கும் சிக்கலை நாளை ஆட்சிக்கு வரும்பொழுது திமுகவும் சந்திக்கும். ஆளாளுக்கு தனிகொடி பிடிப்பார்கள்

அதனை எல்லாம் கடந்து கட்சியினை கொண்டு செல்ல அனுபவமும் அறிவும் திறனும் கொண்ட தலைவர்கள் வேண்டும்

சும்மா இப்பொழுது 3ம் நான்காம் கலைஞர் என யாரையும் சொல்லலாம், ஆனால் சுழன்றடிக்கும் எதிர்ப்பு அலை வந்தால் இவர்கள் எல்லாம் காணாமல் போவார்கள்

புலிகள் போல , அதிமுக போல, காங்கிரஸ் போல‌ திமுகவும் பெரும் வீழ்ச்சியினை சந்திக்கும் முன்னால் 3ம் கலைஞரை முட்டு சந்திதோடு நிறுத்துவது கட்சிக்கு நல்லது

இல்லாவிட்டால் டெல்லி சதி, தமிழன் சோற்றால் அடித்த பிண்டம், தமிழனுக்கு மானமில்லை என பழைய டயலாக்குகளை தலையில் துண்டை போட்டு பின்னாளில் சொல்லி கொண்டிருப்பார்கள்


திமுகவினர் பெரிதான மூளை கொண்டவர்கள் என்பது தயாநிதி மாறனுக்கு இந்தி தெரிந்திருப்பதால் மத்திய அமைச்சராகின்றார் என அமர்த்தபட்ட பொழுது

அழகிரிக்கு மதுரையில் கலக்கல் போஸ்டர் அடித்தபொழுது, தா.கிருட்டினன் விவகாரம் இன்னபிற விவகாரங்களின் பொழுது

உச்சமாக அழகிரி மத்திய அமைச்சராக இருந்தபொழுது என பல இடங்களில் தெரிந்தது

இன்னும் தெரியும்.


 

யானை வரும் முன்னே, மணி ஓசை வரும் பின்னே என ஸ்டாலின் சொன்னதில் என்ன சிக்கல்?

அவர் என்ன தமிழ் அறியாதவரா? திராவிட ரத்தம் ஓடாதவரா? அல்ல எல்லாம் நன்கு புரிந்தவர் , பல மேடை கண்டவர், பின் ஏன் ஸ்டாலின் அப்படி சொன்னார்?

அர்த்தமில்லாமல் இல்லை

கலைஞர் என்பவர் யானை, இவர் வெறும் மணி என்பதை சொல்லிவிட்டார், இது யாருக்கு தெரியாது

இதற்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்


 

நம்மையும் மீம்ஸ் போட்டு கலாய்க்க ஆரம்பித்தாயிற்று

பெரியார் சாதியினை எதிர்த்து போராடினார் என்பதே சரி

பெரியார் இந்துமதத்தை எதிர்த்து போராடினார் என்பதை விட சாதியினை எதிர்த்து போராடினார் என்பதே சரி

பெரியார் காலத்தில் உலகமெல்லாம் நாத்திகவாதம் இருந்தது, அது ஐரோப்பாவில் பாதியினை ஆண்டது, சீனாவில் எழும்பியது, வியட்நாமில், கொரியாவில், கியூபாவில் எல்லாம் பரவியது

அப்படி உலகளாவிய பாதுகாப்பு இருந்தது, இந்தியாவின் பிரிட்டன் அரசும் இங்கு சில அரசிலுக்காக அதை அனுமதித்தது

பின்னாளில் நேரு நாத்திகராக இருந்தாலும் இந்தியா அவரை கொண்டாடியது. நேரு நாத்திகராக இருந்தாலும் பக்தி மார்க்கத்திற்கு எதிரானவர் அல்ல‌

பெரியார் காலத்தில் மேலிடத்தில் அவருக்கு ஆதரவு இருந்தது, அதனால் கடவுள் அவமதிப்பு என சில போராட்டங்களை அவர் நடத்தி இருக்கலாம்

ஆனால் இப்பொழுதுள்ள காலம் வேறு , காலத்தை கணித்து போராட வரவேண்டுமே தவிர, காலம் தவறி வம்பிழுத்தால் மண்டையில் அடிவாங்க போவது உறுதி.

உலகெல்லாம் நாத்திகவாதம் விடைபெற்றாயிற்று, இந்தியாவின் எல்லா மத ஸ்தலங்களும் நிரம்பி வழிகின்றன‌

ஆன்மீக விஷயங்களை தேடி தேடி மக்கள் ஓடுகின்றார்கள், தங்களுக்கு மேலொரு சக்தி உண்டென்று நம்புகின்றார்கள்

ராமர் படத்தை செருப்பால் அடிப்பதெல்லாம் மிக கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும், மாறிவிட்ட காலத்தில் இவை எல்லாம் செய்ய கூடாதவை

மாநில சுயாட்சி, தமிழ் வளர்ச்சி போன்ற விஷயங்கள் வரவேற்கபடுமே தவிர இம்மாதிரி விஷயங்கள் பெரும் குழப்பமே கொடுக்கும்

ராமாயணம் நடந்ததா? மகா பாரதம் நடந்ததா என்பதற்கு முன்னால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்படி கற்பனையாக எழுத ஒருவனால் முடியுமா என்பதை இவர்கள் சிந்திப்பதில்லை

பெண்ணுக்கு ஆசைபட்டால் யாராயிருந்தாலும் அழிவார்கள் என்றும், மண்ணுக்கு ஆசைபட்டால் யாராயிருந்தாலும் ஒழிவார்கள் என்ற மாபெரும் உன்னத தத்துவத்தை உணர்த்தும் இதிகாசங்கள் அவை

மானிட சமூகம் முன்பொருமுறை பெரும் அறிவோடு திகழ்ந்திருக்கின்றது பின்னால் அது மறைந்து காட்டுமிராண்டி ஆகிவிட்டது

இப்பொழுது அழிவோடு கூடிய அறிவினை மானிடம் பெற்றிருக்கின்றது

ஆனால் இன்றிருப்பதை விட, சுற்றுபுறத்திற்கு கொஞ்சமும் கேடு விளைவிக்கா மாபெரும் அறிவியலும் முன்னேற்றமும் அக்காலமே இருந்திருக்கின்றது

கடவுள்கள் எல்லாம் மானிடரோடு உறவாடியிருக்கின்றார்கள் என்பதற்கு பைபிளும் குரானுமே சாட்சி

பைபிளுக்கும் குரானுக்கும் தோராவிற்கும் பல்லாண்டு முன்பு நடந்த விஷயங்கள் ராமாயணமும் மகாபாரதமும்

அவை இந்நாட்டின் மாபெரும் அடையாளம்

செங்கடல் பிளந்தது என்பதை நம்புபவர்கள் ராமாயணமும் மகா பாரதமும் பொய் என்பதுதான் வினோதம்

ராமாயணமும் மகா பாரதமும் நடக்க வாய்பில்லை என்றால் கண்ணகி மார்பை திருகி மதுரையினை எரித்தது எல்லாம் நடந்திருக்குமா என்றால் பதில் இல்லை

இலக்கியம், பக்தி, உபதேசம், அறிவு நூல், தத்துவ நூல், போர் வியூகம் என அக்காலத்தின் எல்லா விஷயங்களையும் அடக்கியவை இந்நாட்டு இதிகாசமான ராமாயணமும் மகாபாரதமும்

அதனை எல்லாம் சாதாரணம் பொய் என ஒதுக்கிவிட முடியாது, விஷயம் இருக்கின்றது ஆழ படிக்க வேண்டும்

சில ஆண்டுகள் நாத்திகவாதத்திற்காக கண்ணில் பட்டதை எல்லாம் பொய் என கிளம்புவது அரசியலே அன்றி அறிவுடமை ஆகாது

தமிழனுக்கு மதமில்லை என்பதெல்லாம் மகா அயோக்கியதனம். மதமில்லா சமூகம் என அறிவார்ந்த சமூகம் ஒன்று கூட உலகில் இல்லை

ராமர் என்பர் கடவுள் என்பவருக்கு கடவுள் , மற்றவருக்கு ஆழ்ந்த தத்துவ அடையாளம்

மசூதியினை இடித்து கோவில் கட்டுவோம் என்பதை கண்டிக்கலாம் மாறாக ராமர் படத்தை இழிவுபடுத்துவது எல்லாம் மகா வன்மையாக ஒடுக்கபட வேண்டியது.

அவர் படம் மீது செருப்பை வீசுபவன் எல்லாம் காட்டுமிராண்டி பயல் , அயோக்கிய பயல்

நடராசன் என்பவர் தமிழகத்தை பிடித்த ஒரு வியாதி

Image may contain: 1 person, sunglasses

எம்.நடராஜன் என்பவர் மாபெரும் இன உணர்வாளர், தமிழ் தேசிய போராளி என்றெல்லாம் சிலர் கிளம்புகின்றார்கள். இவர்களை எல்லாம் சும்மா விட கூடாது

இந்தி எதிர்ப்பு போராட்டம், கலைஞரின் அபிமானம் என இருந்த நடராசன் 1985களில் ராமசந்திரனை சந்தித்தபின்பு மாறிவிட்டார்

ராமசந்திரனின் ஆளாக ஜெயலலிதாவினை கண்காணிக்கும் பொறுப்பு நடராஜனுக்கு கொடுக்கபட அங்கிருந்து ஆரம்பித்தது நடராஜனின் அரசியல் விளையாட்டு. இதில் தமிழுணர்வு, தமிழ் தேசியம் என்பதெல்லாம் சுத்தமாக இல்லை

பிரபாகரன் சென்னையில் ராமசந்திரனால் சிறைவைக்கபட்ட பொழுதோ, இல்லை ராஜிவ் பிரபாகரன் ஒப்பந்தம் நடைபெற்றபொழுதோ நடராஜன் ஒரு சத்தமுமில்லை

அமைதிபடை சென்றபொழுது கலைஞர் எதிர்த்தபொழுது, நடராஜன் ஜெயா வீட்டின் வாட்ச்மேனாக இருந்தார்

ராமசந்திரன் மறைவுக்கு பின் கலைஞரை எதிர்க்க அவர் சில விஷயங்களில் பகிரங்க ஈழ துரோகம் செய்தார் அவை எல்லாம் மறக்க முடியாது.

அமைதிபடையினை திரும்ப பெறமுடியாது என இந்தியா மல்லுகட்டிய நேரம், நடராஜனின் கூட்டாளியாக ராஜிவ் காந்தியே இருந்தார்

கலைஞர் ஆட்சியில் புலிகளுக்கு உதவியது ஒன்றும் ரகசியமல்ல, ஆனால் புலிகளுக்கு கலைஞர் உதவுகின்றார் என்ற ஆதாரங்களை டெல்லிக்கு அனுப்பியதில் நடராஜன் பங்கும் இருந்தது, ஆம் அவரின் ஒரே குறி கலைஞர் அரசு டிஸ்மிஸ் செய்யபட வேண்டும், ஜெயா முதல்வராக வேண்டும்

புலிகளும், தமிழ் தேசியமும் எப்படி கெட்டால் என்ன?

அந்த ஆதாரங்கள் அடிப்படையில் கலைஞர் அரசும் கலைக்கபட்டது, எந்த ராஜிவ் இலங்கைக்கு அமைதிபடை அனுப்பினாரோ, எந்த ராஜிவ் எங்கள் முதுகில் குத்தினார் என பிரபாகரன் கோபமடைந்தானோ அந்த ராஜிவோடு கூட்டணி கண்டது நடராசனின் அதிமுக‌

அந்த தேர்தல் பிரச்சாரம் நடந்தபொழுது காணாமல் போனார் நடராசன், வெளிநாடு சென்றார். யாரை சந்தித்தார் என்ற தகவல் எல்லாம் இல்லை

ஆனால் அப்பொழுதுதான் ராஜிவ் கொலை நடந்து ஜெயா ஆட்சிக்கும் வந்தார்

பின் ஜெயா பிரபாகரனை பிடித்து தூக்கில் போடவேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியபொழுது நடராசனிடம் இருந்து சத்தமில்லை

2000ல் புலிகள் ஆனையிறவில் வென்று, சிங்களனை சுத்தமாக அடக்கி ஈழ அறிவிப்பு செய்ய முயன்று அதற்கு தமிழகத்தில் இருந்து பெரும் ஆதரவு கோரிய நிலையில் வைகோ, நடராசன் , சீமான் அப்பொழுது களத்தில் இல்லை

உண்மையில் அது புலிகளின் மாபெரும் வெற்றி, உலகமே பெரும் அச்சத்தோடு நோக்கிய நாள். அட்டகாசமாக 50 ஆயிரம் சிங்கள ராணுவத்தை சுற்றி வளைத்து பெரும் வெற்றி பெற்றனர் புலிகள்

ஆனால் சிங்கள அரசு உதவி கேட்க வாஜ்பாய் அரசு மிரட்ட புலிகள் பின் வாங்கினர். உண்மையில் அன்று தமிழகம் பொங்கி இருந்தால் ஓரளவு தீர்வு ஈழதமிழருக்கு கிடைத்திருக்கும்

அன்று ஒருவரும் வாய்திறக்கவில்லை, ஏன் என்றால் அப்படித்தான். ஈழத்தில் தீர்வா? பின்னே நாம் எப்படி அரசியல் செய்ய? வேண்டாம் ஒரு முடிவும் பெறாமலே போகட்டும்

அதனை விட இன்னொரு வாய்ப்பு ஒருகாலமும் புலிகளுக்கு கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரியும், மொத்த சிங்கள ராணுவமும் துப்பாக்கியினை எறிந்துவிட்டு அழுத தருணம் அது

அன்று ஒரு தீர்வு கிடைத்திருக்க வேண்டும், ஆனால் ஒரு குரலும் இங்கு இல்லை, நடராசன் மகா அமைதி

நிச்சயம் புலிகளுக்கு தமிழக இன உணவாளர்கள் செய்த மாபெரும் துரோகம் அது, அன்றே மனதார செத்தார் பிரபாகரன்

அதன்பின்னும் புலிகள் நார்வே குழுவோடு பேசினர், யாரோடெல்லாமோ பேசினர், இங்கிருந்து ஒரு ஆதரவு இல்லை

பின் எப்பொழுது இந்த உணர்வாளர்கள் வந்தார்கள்?

புலிகளை அழிக்க உலகம் திரண்ட அறிகுறி தெரிந்தது, கலைஞர் ஆட்சியில் இருந்தார் , போதாதா? குவிந்துவிட்டார்கள்

உலகத்தார் ஒத்துழைப்புபடி சிங்கள ராணுவம் வெற்றிபெற்றது, புலிகளுக்கோ யாருமில்லை

சிரிய அதிபருக்காவது ரஷ்யா வந்தது, இலங்கையில் ஆச்சரியமாக ரஷ்யாவும் அமெரிக்காவும் சிங்களனையே ஆதரித்தது, சீனா உட்பட‌

இப்படி புலிகளை உலகம் அழிக்க, சாதுர்யமாக பழியினை கலைஞர் மேல் போட மறுபடி களம் கண்டார் நடராசன்

எந்த நடராசன்? கலைஞரால் வளர்க்கபட்டு அவருக்கு திருமணம் செய்வித்து அவருக்கு அரசு வேலையும் கொடுக்கபட்ட அதே நடராசன்

கலைஞரை எதிர்த்து கும்மாளமிட்டார்களே தவிர, “கலைஞர் மத்திய அரசிலிருந்து வெளியேறினால் அதிமுக மத்திய அரசை ஆதரிக்கும், பிரபாகரனை கொல்லாமல் இலங்கையில் அமைதி இல்லை என சொன்ன ஜெயலலிதாவினை யாரும் குற்றம் சாட்டவில்லை”

ஏன் என்றால் அப்படித்தான், நடராஜனும் அந்த முகாமிலே இருந்தார்

ஆனால் கலைஞரை திட்டும் கோஷ்டி பெருகியது, சீமான் வேல்முருகன் திருமுருகன் என் அது வளர்ந்தது

அவர்கள் பேச பேச பல தரப்பில் இருந்து அவர்களுக்கு உதவி வந்தது. மணல் மாபியா முதல் பல அதிமுக ஆதரவு கொள்ளையர்கள் உதவினர்

யாரெல்லாம் என்பதற்கு சீமான் திருமணத்திற்கு வந்த பிரபலங்களே சாட்சி, அதில் நடுநாயகமாக வீற்றிருந்தார் நடராசன்

அந்த ஒற்றை காட்சி போதும், ஆயிரம் விஷயங்களை சொல்ல‌

இனி கலைஞரை எதிர்க்க, திமுகவினை பாதிக்க ஒரு அடையாளம் வேண்டும் என்பதற்காக அந்த முள்ளிவாய்க்கால் மண்டபம் உருவாக்கபட்டது

யாரெல்லாம் முள்ளிவாய்க்கால் கொடுமை நடக்க முழு காரணமாக இருந்தார்களோ அவர்கள்தான் அதனை உருவாக்கினார்கள்

கலைஞர் ஆலோசனைபடி 1980களிலே தீர்வு ஏற்பட்டிருக்குமானால் யுத்தம் தொடர்ந்திருக்காது, முள்ளிவாய்க்காலும் நடந்திருக்காது

ராஜிவ் கொலைக்கு பின் புலிகளை கைகழுவினார் கலைஞர், இவர்கள்தான் கலைஞரை எதிர்க்க அவர்களை ஆதரித்தார்கள், முள்ளிவாய்க்கால் நடக்க மறைமுக காரண இவர்கள்தான்

அதிலும் விளாரில் அமைக்கபட்ட முள்ளிவாய்க்காலுக்கான நிதி திரட்டல் சுவாரஸ்யமானது

நடராஜன் கார் இறக்குமதி மோசடியில் சிக்கினார், விளார் கிராமத்தில் அந்த நிலமும் சர்ச்சைகுள்ளானது, புறம்போக்கு நிலம் இருந்தது

யோசித்த நடராசன் ஒரு மேடையிலே காரினை ஏலம் விட்டார், ஆம் அது இருந்தாலும் சிக்கல். பின் தன் சொந்த நிலத்தை முள்ளிவாய்க்கால் நினைவாலயம் கட்ட கொடுத்ததாக சொன்னார்

இப்படி மோசடி கார் பணம் , புறம்போக்கு நிலம் இரண்டையுமே தன் தியாகத்தால் மறைத்தார் நடராசன்

(இதனால்தான் பின்பு ஜெயா முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபத்தின் ஒரு பகுதியினை இடித்தார், அவருக்கு டெல்லியில் இருந்து வந்த உத்தரவு அப்படி)

ஆக இந்த நடராஜன் எனும் நபர் சுத்த சுயநலவாதி. புலிகளுக்கு இவர் உண்மையான நண்பனே அல்ல, இவர் பேசிய தமிழ் தேசியம் இன்னபிற எல்லாம் கலைஞரை எதிர்க்க வேண்டும் அதில் ஜெயா பலன்பெற வேண்டும் என்ற நோக்கமே தவிர வேறு இல்லை

ஜெயா இருக்கும் வரை தான் ஆடலாம் என்பது அவருக்கு தெரியும், ஆடினார்

ஜெயா இல்லா நிலையில் ஆடலாம் என்றால் அவரால் முடியவில்லை. 1989களில் அனுபவமில்லா ராஜிவினை ஏமாற்றியது போல 2017களில் டெல்லியினை அவரால் நெருங்க முடியவில்லை

அடித்து கடாசியது டெல்லி, தன் சாகசங்கள் எதுவும் எடுபடா நிலையிலும் தான் கலைஞரை வீழ்த்த போட்ட சாகச பழைய‌ திட்டங்கள் தனக்கு எதிரான சங்கிலியாக வருவதை எண்ணி மனம் நொந்தார்

அது அவருக்கு தீரா சோகமாகி மனிதர் நோய்ற்றார், உறுப்பு மாற்றியும் தீர்வில்லை

உறுப்பினை மாற்றி ஒருவன் வாழ்வதாக இருந்தால் அது சாகாவரம் அல்லவா? வலுமிக்கவன் எவனாவது சாவானா?

பின் ஆண்டவன் என ஒருவன் எதற்கு?

உறுப்பு மாற்றி வாழ்ந்தவன் யாருமில்லை. தமிழகத்து ராமச்ந்திரன் முதல் ஏராள உதாரணம் உண்டு

அப்படி செத்தும் போனார் நடராசன்

இப்பொழுது சிலர் கிளம்புகின்றான், அதாவது நடராசன் பெரும் தமிழ் போராளியாம், தமிழ் தேசியவாதியாம். அவரின் மரணத்தில் சந்தேகமாம்

இவர்களுக்கு வேண்டியவர்கள் எப்படி செத்தாலும் அதில் சந்தேகமாம்

அந்த பதர்கள் எவனும் அப்பல்லோவில் ஜெயா செத்தது பற்றி வாயே திறக்கவில்லை என்பதுதான் மர்மம்

சசிகலா மேல் பழிபோட ஜெயா மரணத்தை எல்லோரும் மர்மம் என்றார்களாம், ஆனால் மாபெரும் தமிழ்தேசியவாதி என இவர்கள் சொல்லும் நடராசனின் மரணம் சந்தேகமாம்

இவர்களை எல்லாம் அப்படியே கப்பலில் ஏற்றி ஐ.எஸ் இயக்கத்திடம் அனுப்ப வேண்டும்.

நடராசன் என்பவர் தமிழகத்தை பிடித்த ஒரு வியாதி. எப்படியோ தன் பிடியில் சிக்கிவிட்ட ஜெயா எனும் குட்டிசாத்தானை வைத்து பெரும் ஆட்டம் ஆடிய மாய மந்திரவாதி

இதனால் தமிழகம் அடைந்த கடும் சீரழிவு , ஈழம் அடைந்த பேரழிவு இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து வரும் என்பதை தவிர சொல்ல ஒன்றுமில்லை

 

பரோலில் சசிகலா….

Image may contain: 1 person, sitting

பரோலில் வந்த சசிகலாவினை மூன்றே நாளில் உள்ளே தள்ளும் விஷயத்தில் இறங்கி இருகின்றது தினகரன் தரப்பு

அதாவது கணவர் நடராஜனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சசிகலாவிற்கு பரோல் கொடுத்தது சிறை, அதுவும் அரசியல் பேச கூடாது, யாரையும் சந்திக்க கூடாது, பேட்டி கொடுக்க கூடாது என ஏகபட்ட நிபந்தனை. இதில் ஒன்றை மீறினாலும் பரோல் ரத்தாகும்

இப்பொழுது 25ம் தேதி காவேரி விவகாரம் தொடர்பாக தஞ்சையில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது தினகரன் கோஷ்டி

ஆனால் நடராஜன் இறந்ததால் அது மாற்றபடும் என செய்திகள் வந்தன, இங்குதான் சசிகலாவிற்கு சனி பிடிக்கின்றது

“நடராஜனுக்காக பார்க்க வேண்டாம், குறித்த நாளில் போராடுங்கள் என உத்தரவிட்டார் சின்னம்மா” என தினகரன் தரப்பு குதிக்கின்றது

கணவனை இழந்த நிலையிலும் காவேரிகரை விவசாயிகளை நினைக்கின்றார் தியாகதலைவி எனும் அனுதாப அரசியல் அவர்கள் கணக்கு

ஆனால் “கணவருக்கு அஞ்சலி செலுத்த சென்று தினகரனுக்கு உத்தரவிட்டீர்களா? ம்ம்ம் போங்கள் உள்ளே, பரோல் ரத்தாயிற்று” என சட்டம் சீற வாய்ப்பு உண்டு என்பதை மறக்கின்றார்கள்

கொஞ்சம் முயற்சித்தால் இதனை சாக்காக வைத்து சசிகலாவின் பரோலை ரத்து செய்ய முடியும்

ஸ்டாலின் இதனை எல்லாம் செய்யமாட்டார், அவர் ஏதோ இந்திரன் வந்து தனக்கு முடிசூடுவான் எனும் கனவில் இருப்பவர்

ஆனால் பழனிச்சாமி கோஷ்டி செய்யலாம், எனினும் சசிகலா மீது அனுதாபம் வரலாம் என்பதால் செய்யதயங்கலாம்

டிராபிக் ராமசாமி என்பவர் இப்பொழுது சத்தமில்லை

ஆனால் சசிகலா பரோலை ரத்து செய்ய அட்டகாசமான வாய்ப்புகளை தினகரன் தரப்பே எடுத்து கொடுப்பதுதான் சோகம்..

ஜெயலலிதா வளர்த்துவிட்டவர்களுக்குத்தான் கொஞ்சமும் அறிவில்லை என்றால், சசிகலா வளர்த்ததும் அப்படித்தான் இருக்கின்றது.

 

பெரியார் பெரியவரா ….

Image may contain: 1 person, text

ஒரு சிலர் கிளம்பிவிட்டான் , அதாவது தமிழிசை பெரியார் பெரியவரா என கேட்டதற்கு உன் சமூகம் மேலாடை அணிய பெரியார்தான் காரணம் என கிளம்பிவிட்டான்

பெரியார் ஜாக்கெட் வியாபாரி எனும் கோணத்தில் பேசினானோ என்னமோ?

மேலாடை சர்ச்சை நடந்தது 18ம் நூற்றாண்டில், அதாவது மாவீரன் நெப்போலியன் காலம், அவன் ஐரோப்பாவில் வெற்றிகொடி நாட்டிய காலத்தில்தான் இங்கு கன்னியாகுமரி பக்கம் அக்கொடுமை நடந்தது.

நாடார்கள் மட்டும் அல்ல, இன்னும் சில தாழ்த்தபட்ட சாதிகளுக்கு மேலாடை அணிய உரிமை இல்லை

வெள்ளையர் தந்திரமாக கிறிஸ்தவர்களாக அவர்களை மாற்ற இக்கொடுமையினை முழுக்க கண்டிக்கவில்லை, இதனால் பலர் கிறிஸ்தவராக மாறி தப்பினர்

இந்த கொடும் பழக்கம் இருந்த காலத்தில்தான் அய்யா வைகுண்டர் அவதரித்தார், அவரின் தீரமிகு போராட்டமே அக்கொடுமையினை நீக்கியது

அதாவது இந்து உயர்சாதி மன்னரால் தொடுக்கபட்ட அக்கொடுமையினை ஒரு இந்து சாமியார்தான் எதிர்த்து போராடி வெற்றிபெற்றார்

இதெல்லாம் நடந்து கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு பின்புதான் பெரியார் பிறந்தார், அடுத்த 40 ஆண்டு கழித்துத்தான் பெரியார் போராளியானார்

ஆக பெரியாருக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே நடந்துவிட்ட போராட்டத்தை பெரியார் நடத்தினார் என்பது பெரும் மோசடி

பின்னாளில் வைக்கம் கோவிலில்தான் அம்மக்களுக்கு ஆதரவாக, அதாவது நடந்துகொண்டிருந்த போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கினார்.

ஆக பெரியார் கோஷ்டிகளின் பொய்களும் எல்லை மீறி சென்றுகொண்டிருக்கின்றன.

பெரியாழ்வார், பெரியாரில் யார் பெரிது என்பது முக்கியமல்ல‌

இந்துக்களின் மேலாடை விவகாரத்தில், சாதி கொடுமையில் ஒரு தாழ்த்தபட்ட‌ இந்து சாமியார்தான் போராடினார் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்