இந்த ரத யாத்திரை பற்றி நாம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்

இந்த ரத யாத்திரை பற்றி நாம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவில் கட்டுவோம் என சொன்னவர்கள்தான் ஆட்சியில் இருக்கின்றார்கள், அதுவும் மத்தியிலும், உபி மாநிலத்திலும் இருக்கின்றார்கள்

அவர்கள் கழுத்தை பிடித்து வைத்து ராமர் கோவில் என்னாயிற்று என கேட்கலாம், அதை விட்டுவிட்டு இந்தியா எங்கும் ரதம் ஓட்டி விளையாடுவோம் என்பது அர்த்தமில்லாத விஷயம்

இந்த அய்யாகண்ணு என்பவர் பழனிச்சாமியினை விட்டுவிட்டு டெல்லியில் அம்மண போஸ் கொடுப்பதற்கும் இந்த காவி சாமிகள் மோடியினையும் யோகியினையும் விட்டுவிட்டு தமிழகத்தில் ரதம் ஓட்டி விளையாடுவதற்கும் வித்தியாசம் ஏதுமில்லை

அட அவர்கள்தான் ரதம் ஓட்டி விளையாடினார்கள், இதில் தமிழக கட்சிகளும் குறுக்கே அமர்ந்து விளையாடியதல்லவா?

அது இன்னொரு காமெடி

கட்டபடவே போகாத கோவிலுக்கு ஒரு ஊர்வலம், அதற்கொரு எதிர்ப்பு வேறு

அவர்கள் உண்மையான பக்தர்கள் என்றால் அந்த ரதத்தில் மோடி, அத்வாணி, யோகி ஆகியோரை கட்டி வைத்து, ராமர் கோவிலால் ஆட்சிக்கு வந்து இன்னும் கட்டாமல் இருக்கும் துரோகிகளை பாரீர் என இந்தியா முழுக்க இழுத்து வந்திருக்க வேண்டும்

அது உண்மையான ஊர்வலமாக இருந்திருக்கும்

 
 

அந்த மாபெரும் பாடகனுக்கு இன்று பிறந்தநாள்

Image may contain: 1 person, glasses, sunglasses and close-up

மதுரையினை ஆண்ட திருமலை நாயக்கருக்கு பட்டு துணி மீது படுபிரியம், அதனை நெய்து கொடுக்கவே சில‌ சவுராஷ்ட்டிரா குடும்பங்களை கொண்டு வந்து மதுரையில் குடியமர்த்தினார்

அவர்கள் பலுகி பெருகினர், மங்கா பல அடையாளங்கள் அதில் உருவாயினர்

அதில் ஒருவர்தான் டி.எம், சவுநத்ரராஜன்

தன் வெண்கல குரலால் கிட்டதட்ட 30 ஆண்டுகாலம் தமிழகத்தை கட்டி போட்ட பாடகர், தியாகராஜ பாகவதர் எனும் மாபெரும் பாடக பிம்பம் டி.எம். சவுந்தர ராஜன் பாடல்கள் வந்தபின் மங்கி போயிற்று

ராமசந்திரன், சிவாஜி என இரு பெரும் ஜாம்பவான்களுக்கு பாடிய ஒரே பாடகர் அவர்

தமிழ் பாடல் உலகின் அற்புதமான பாடல்கள், கண்ணதாசன் வாலியின் வரிகள் எல்லாம் அவரால் சாகா வரம் பெற்றன‌

பாடக என்பதையும் தாண்டி மிகபெரும் முருக பக்தர், அதனால்தான் யாரும் பாடமுடியாத அருணகிரி நாதரின் முத்தைதிரு எனும் அற்புத பாடலை அவரால் மகா சிறப்பாக பாட முடிந்தது

ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும்

சீர்காழி கோவிந்த ராஜன், சவுந்திர ராஜனுக்கு பின்னால் எந்த பாடகர்கள் குரலிலும் ஆண்மை ஓங்கி ஒலிக்கவில்லை

இன்றுள்ள பாடகர்களில் எது ஆண்குரல் எது பெண்குரல் என கண்டுபிடிக்கவே மகா சிரமமாய் போயிற்று

தமிழ் திரையுலகில் அழியா பாடல்களை கொடுத்த, அவனின்றி பாடல் பாட ஆளில்லை என்ற அளவு கோலோச்சிய அந்த டி.எம் சவுந்திரராஜனுக்கு இன்று பிறந்த நாள்

அவர் குரலால் பாடல்களில் புகழ்பெற்ற ராமசந்திரனும், சிவாஜி கணேசனும் அவருக்கு என்ன கைமாறு செய்தார்கள் என்பது நினைவில் இல்லை

அப்படி நடந்ததாகவும் தெரியவில்லை. ராமசந்திரனுக்கு தன்னை விட சிவாஜிக்கு டிஎம்ஸ் சிறப்பாக பாடியது போல் தோன்றிற்று

உண்மையில் சிவாஜியின் அபார நடிப்பிற்கும் கணீர் குரலுக்கும் டிஎம்ஸ் குரல் பொருந்தியதே தவிர வேறு அல்ல,

ஆனால் ராமசந்திரனுக்கு அது பொறுக்கவில்லை, சில சர்ச்சைகள் வந்ததாய் சொல்வார்கள்

உண்மையில் டி.எம்.எஸ் வாழ்ந்த காலத்திலே அவருக்கு விழா எடுத்த ஒரே நபர் மு.க அழகிரி

(இம்மாதிரி மகா நல்ல விஷயங்களையும் அவர் செய்தார், ஆனால் அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் எல்லாம் கூட வைத்து தன் பெயரை கெடுத்தும் கொண்டார்)

அந்த மாபெரும் பாடகனுக்கு இன்று பிறந்தநாள். தமிழ் திரை இசை பாடல்கள் உள்ள வரை அவருக்கு மரணமில்லை

 

கையினை வெட்டும் அளவு அக்கா வன்முறையாளர் இல்லை

தமிழகத்தில் பாஜகவினை யாரும் வம்புக்கு இழுத்தால் “கை” இருக்காது : தமிழசை

கையினை வெட்டும் அளவு அக்கா வன்முறையாளர் இல்லை

கை இருக்காது என்பது காங்கிரஸ் இருக்காது, கை சின்னம் கொண்ட காங்கிரஸ் இருக்காது என அர்த்தம் கொள்ள வேண்டியது.

அக்காவின் காங்கிரஸ் வெறுப்பு கொஞ்சமா என்ன?

இங்கு எங்கே காங்கிரஸ் இருக்கின்றது? அதனை தமிழிசை வேறு விரட்ட வேண்டுமா??


இந்தியாவில் நக்சலைட்டுகளின் இறுதிக்காலம் நெருங்கி விட்டது- ராஜ்நாத் சிங் பேச்சு

இவர்கள் ஆட்சி முடிய‌ இன்னும் ஒருவருடம் கூட இல்லை, இனி வரும் வாய்ப்பும் இல்லை

ஆனாலும் அவர் நக்சல்கள் இறுதிகாலம் பற்றி பேசிகொண்டிருக்கின்றார்


துர்கா ஸ்டாலின் எல்லாம் திமுக மாநாட்டை நடத்தும் அளவு வந்தாயிற்று

இந்த திமுகவின் ஈரோடு மாநாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது, நேற்று செய்தி பார்க்கும்பொழுது கலைஞர் டிவியில் அந்த காட்சி தெரிந்தது

மாநாட்டு பந்தலை பார்த்து ஆலோசனைகளை கொடுத்துகொண்டிருந்தது துர்கா ஸ்டாலினும், உதயநிதியும்

இதன்பின் யாருக்காவது அம்மாநாடு நடக்கும் திசைபக்கம் தலைவைத்து படுக்க விருப்பம் வருமா?

என்றாவது தயாளு அல்லது ராசாத்தி அம்மாளை கட்சி மேடைகளில் யாராவது பார்த்ததுண்டா?

அம்மனிதனுக்கு கட்சியினை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்ற எல்லா கோணமும் பிசறின்றி தெரிந்திருக்கின்றது

துர்கா ஸ்டாலின் எல்லாம் திமுக மாநாட்டை நடத்தும் அளவு வந்தாயிற்று, ஆக இன்னொரு சசிகலா உருவாகிகொண்டிருக்கின்றார்.

உதயநிதி என்பவர் நிச்சயம் ரஜினி கமலுக்கு போட்டி அல்ல, ஆனால் அதிமுக ஜெயாடிவி நிர்வாகி விவேக் என்பவரை போல இங்கு உருவாகிகொண்டிருக்கின்றார்


மொகலாயர்களும், மவுரியர்களும் ஆளாத மாநிலம் தமிழகம்தான் : திருச்சி சிவா ஈரோடு மாநாட்டில் பேச்சு

கேரளாவினை எந்த மவுரியனும், மொகலாயனும் ஆண்டான் என யாரும் நல்ல வேளையாக கேட்கவில்லை

ஏன்? சிவாஜியின் சிவசேனை கூடத்தான் அவுரங்கசீப்பை விரட்டியது

இங்கே விஜயநகர மன்னர்கள் கூடத்தான் கன்னடாவிலும், தெலுங்கு தேசத்தில் இருந்தும் விரட்டினார்கள்

ஏதோ மவுரியர்களையும், முகலாயர்களையும் திமுக தான் விரட்டி அடித்தது போல திருச்சி சிவா பேசிகொண்டிருக்கின்றார்

ஒருவேளை மதவாத‌ சிவசேனையோடு திமுகவிற்கு ஏதும் ஒப்பந்தம் இருக்குமோ?

எப்படி இருந்தவர் திருச்சி சிவா? இந்த சசிகலா புஷ்பாவிடம் அடி வாங்கியபின் சித்தம் கலங்கிவிட்டார்


காவேரி விவகாரத்தில் ஒரு விசித்திரம் உண்டு

காவேரி மேலாண்மை வாரியம் என்பதற்கும் , மேற்பார்வை வாரியம் என்பதற்கும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் உள்ள அதிகார வித்தியாசங்கள் உண்டு

அதனால் மேலாண்மை வாரியம் எனும் உத்தரவிடும் அதிகாரம் கொண்ட அமைப்பே வேண்டுமே தவிர, மேற்பார்வை எனும் மிக்சர் தின்னும் அமைப்பெல்லாம் தேவை இல்லை

காவேரி விவகாரத்தில் ஒரு விசித்திரம் உண்டு

கலைஞர் காவேரி கரையில் வளர்ந்தவர், ஜெயாவும் அப்படியே அவர் மைசூரில் வளர்ந்தாலும் அவரின் முன்னோர்கள் திருச்சி திருவரங்கத்தார்

ஜெயாவினை இயக்கியதாக சொல்லபடும் சசிகலாவும் அதே காவேரிபாயும் மன்னார்குடிகாரர்

கிட்டதட்ட தமிழகத்தை ராமசந்திரன் ஆண்ட 10 ஆண்டுகளை தவிர இவர்கள்தான் ஆண்டார்கள், அதிலும் கலைஞர் மத்திய அரசில் எல்லாம் பங்குபெற்றார்

இவர்களுக்கு இது சொந்த ஊர் பிரச்சினையும் கூட, ஆனாலும் காவேரி மீளவில்லை

இந்த ராமர் கோவில் விவகாரமும் இப்படியே

வாஜ்பாய் பிரதமராக இருந்தபொழுதும் கட்டவில்லை, அதாவது அது பெரும்பான்மை அரசு இல்லை என சமாளிக்கலாம்

இப்பொழுது மோடி, யோகி என இருவரும் மிருக பலத்தோடு இருக்கும் நேரம், நினைத்தால் நொடியில் கட்டலாம்

ஏன் கட்டவில்லை?

கட்டினால் உலக அதிருப்தி ஒரு பக்கம் என்பதும், வேலை முடிந்துவிட்டால் அதை வைத்து அரசியல் செய்யமுடியாது என்பதும் இன்னொரு காரணம்

ஆக என்ன முடிவிற்கு வரமுடியும் என்றால், இங்கு எதை சொல்லி ஆட்சிக்கு வருகின்றார்களோ அதை சத்தியமாக செய்யவே மாட்டார்கள் என்பது புரிகின்றது

 

ஆசான் Pa Raghavan எழுதியும் புரியாத விஷயம் ஏதுமில்லை

எப்பொழுதும் யாராவது ஒரு தொடர் எழுதுவார்கள், பத்திரிகை உலகில் அது சகஜம்

ஆனால் தினமணியில் Pa Raghavan புதிதாக ஒரு தொடர் எழுதுகின்றார், விஷயம் ஆன்மீகம் துறவு தத்துவம் பற்றியது.

உண்மையில் இந்து மத தத்துவம் மிக உயர்ந்தது, ஆழமிக்கது. துறவு என்பதற்கும் ஆன்மீகம் என்பதற்கும் அது வகுத்திருந்த எல்லையும் ஆழமும் உயரமும் பெரிது

சிக்கல் என்னவென்றால் யாரும் பாமரருக்கு புரியும் வகை சொல்லவில்லை

எமக்கும் துறவில் ஆசை இருந்தது. ஆனால் கத்தோலிக்க திருச்சபை ஒரே மகனை ஏற்காது என்றார்கள். பெற்றோருக்கும் விருப்பமில்லை

சரி காதலில் தோற்றால் துறவறம் செல்லலாம் என தோற்கும் காதலாக செய்தாலும் அடுத்த காதல் வந்ததே தவிர துறவு வரவில்லை

நான் துறவியாக பெரும் விருப்பம் கொண்டவன் என் பெரியப்பா, ஒரே காரணம் சொத்துகள் அவர் வசமாகும் என்பது ஆனாலும் அந்த சண்டாளனும் துறவினை ஒழுங்காக போதிக்கவில்லை

நல்ல குருவும் இல்லை, துறவு புரியவுமில்லை. நாம் துறவியானால் பெரியப்பனுக்கு சொத்து போய்விடும் ஒரு சென்ட் கூட அந்த சண்டாளனுக்கு செல்ல கூடாது எனும் தீவிரமான முடிவெடுத்ததால் துறவுக்கு துறவு சொல்லி ஆயிற்று

ஆனாலும் அவ்வப்போது தேடுவதுண்டு, எல்லா மதங்களின் வாயிலிலும் தேடியிருகின்றேன்

பல சித்தாத்தங்களை படித்தால் பைபிளின் பழைய ஏற்பாடு முழுக்க யூதருக்கானது, புதிய ஏற்பாடு ஒரு மாதிரி பயமுறுத்துவது அதாவது கிறிஸ்துவினை ஏற்காவிட்டால் உனக்கு நரகம் என்பது

பைபிளின் சங்க திருவுரை ஆகமம் என்பதும் , தமிழக சித்தர்களின் பாடலும் வேறல்ல, இரண்டும் சொல்ல வருவது வாழ்க்கை என்பது காற்றை கையில் பிடிப்பதற்கு சமம்

மாபெரும் ஞானி சாலமோனே அதனை சொல்லியிருக்கின்றார்

இதை தவிர பைபிளில் உருப்படியாக படித்த ஆன்மீகம் ஏதுமில்லை

இஸ்லாம் ஒரே கடவுளை போதித்தாலும் யூத சாயல் நிரம்ப இருந்தது

துறவு என்றால் என்ன என்பதை இந்துமதம் எப்படி சொல்லியிருக்கின்றது என தேடினால் ஒன்றும் புரியவில்லை

ஆனால் முதன் முதலில் புரியும்படி ஆண்மீகத்தை போதித்தவர் விவேகானந்தர்

தமிழில் கிருபானந்தவாரி ஓரளவு சொன்னார், பழைய காஞ்சி மகான் சந்திரசேகரன் இன்னும் கொஞ்சம் விளக்கி இருந்தார்

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் இந்துக்களில் எல்லா நதிகரையினையும் தொட்டது, அது துறவை பற்றி மேலோட்டமாக சொன்னது

அந்த வரிசையில் தினமணியில் Pa Raghavan
” யதி” என்றொரு தொடரை எழுதுகின்றார்

துறவு என்பது அடைவது அல்ல உணர்வது என்ற ஒற்றை வரியில் தொடர் டாப் கியரில் எகிறுகின்றது

இந்து மத அபிமானிகள், ஆன்மீக தேடல் கொண்டவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய விஷயம் அது.

(இந்த ஜக்கி, நித்தி , பாபா ராம்தேவ் பேசுவது எல்லாம் ஆன்மீகமே அல்ல, அது வியாபாரம் என்பது யாருக்கும் தெரியாதது அல்ல‌)

விவேகானந்தராக, இரண்டாம் கண்ணதாசனாக ஆன்மீக தொடர் எழுதும் குருநாதருக்கு வாழ்த்துக்கள்

ஆசான் Pa Raghavan எழுதியும் புரியாத விஷயம் ஏதுமில்லை, அப்படியும் புரியாவிட்டால் யார் எழுதியும் புரியாது

இது மிகபெரும் தொடராக வரும் என்கின்றார்கள், கிட்டதட்ட ஆயிரம் நாட்கள் தொடர்ந்து எழுதபோகின்றார்

அந்த எல்லாம் வல்ல பரம்பொருள் அவருக்கு எல்லா பலனும், நிரம்பிய ஞானமும் அருளட்டும்

 
 

இந்த ஆதரவு எந்நாளும் நிலைக்கட்டும்

அந்த பள்ளியின் ஆசிரியர் விவகாரத்தை எழுதியதில் ஐடி முடக்கபட்டது என்பதுதான் விஷயம்

ஆனாலும் நம்மை இத்தனை பேர் தேடியிருக்கின்றார்கள் எனன்பது எனக்கே மகா ஆச்சரியமும், வியப்புமாயிருக்கின்றது

தொலைபேசியில் என்னாயிற்று என்றார்கள்? உடலுக்கு ஏதும் சிக்கலா என்றார்கள், ஏராளமான விசாரிப்புகள்.

ஐடி முடக்கபட்டது என்றதும் போக் செய்தெல்லாம் மீட்க முயன்றார்கள் , அவர்கள் அனைவருக்கும் நன்றி

தற்காலிக ஐடிக்கு சென்றாலும் ஓடிவந்து சேர்ந்தார்கள்

உங்கள் அன்புக்கும் விசாரிப்பிற்கும் மிக்க நன்றி, எந்நாளும் உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் பாத்திரமான இதயத்தை இறைவன் அருளட்டும்

உங்களில் பலபேரை யாம் பார்த்தது கூட இல்லை, ஆனாலும் எவ்வளவு ஆர்வமாக தேடினீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது

இந்த ஆதரவும், அன்பும் இருக்கும் வரை எவ்வளவும் எழுதி குவிக்கலாம்

இந்த ஆதரவு எந்நாளும் நிலைக்கட்டும்