யுவர் டைம் ஸ்டார்ட் நவ்..

Image may contain: 1 person

இந்த தயாரிப்பாளர்கள் பாதிக்கபட்டதாகவும் இன்ன சில சிக்கல்களாலும் நடைபெறும் வேலைநிறுத்தம் தொடர்வதால் இப்பொழுது பேச்சுவார்த்தை நடக்கின்றது

இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு பேசிய கூட்டத்தில் நானும் இயக்குநர் என கலந்துகொண்டார் சிம்பு

வழக்கமாக வம்பு பேசும் சிம்பு, இப்பொழுது உருப்படியாக பேசியிருக்கின்றார்

நடிகர்களுக்கு வெள்ளை பணமாகவும் கருப்பு பணமாகவும் கொடுக்கபடும் சம்பளம் வெள்ளையாக மட்டும் கொடுக்கபட வேண்டும் என ஒரே போடாக போட்டிருக்கின்றார், ஆடி போய் இருக்கின்றது திரையுலகம்

ஆம் கருப்பு பணம் சினிமாவில் உண்டு என சிம்பு அதிரடியாக சொல்லியிருக்கின்றார், கருப்பு பணத்தை ஒழித்துவிட்டோம் என சொல்லிகொள்ளும் பாஜக என்ன செய்ய போகின்றதோ தெரியாது

வெள்ளையில் சம்பளம் பெற்றா ஹீரோக்களின் சம்பள கணக்கு, வருமான வரி கணக்கு எல்லாம் வெளிப்படையாகும் எந்த ஹீரோவும் ஒரு கட்டம் தாண்டி செல்ல முடியாது

சினிமாவில் ஹீரோக்களுக்கு பெரும் சம்பளம் மிகபெரிய செலவு என சொல்லபடும் காலத்தில் , கருப்பு பணத்தை ஒழியுங்கள் என அட்டகாசமாக சொல்லிவிட்டார் சிம்பு

வழக்கமாக அவர் ஏதோ பேசி வம்பு நடக்கும் உலகில், முதன் முறையாக உண்மை சொல்லி வம்பு வளர்க்கின்றார் சிம்பு

இப்படி நடிகர்கள் கருப்பு வெள்ளை சம்பளத்தை பற்றி சொன்ன சிம்பு, நடிகைகள் சம்பளம் பற்றி வாய்திறக்கவில்லை அதனால் நாமும் ஒன்றும் சொல்ல கூடாது

“அக்கோவ், தமிழிசை அக்கோவ் கேட்டுச்சா?? “

தமிழ் சினிமாவில் கருப்பு பணம் சம்பளமாக கொடுக்கபடுமாம், அங்கே மோடி சவால் எடுத்து கருப்பு பணத்தை ஒழிக்க இங்கு என்ன பேசுகின்றார்கள் பார்த்தீர்களா?

ரஜினி, கமலை வெளுத்து வாங்க அட்டகாசமான வாய்ப்பை சிம்பு கொடுத்துவிட்டார், இனி நீங்கள் பெர்பார்மென்ஸை தொடங்கலாம்

யுவர் டைம் ஸ்டார்ட் நவ்..

 

தேனவள் நாணிச் சென்ற‌ சிறப்பினில் கவிதை தொட்டாள்

Image may contain: 1 person, smiling, selfie and close-up

“வானவர் கூந்தல் கண்டு
மண்ணிடை மனதை விட்டார்

மீணவர் விழியை கண்டு
மீனென வலையை விட்டார்

மானவள் நடையை கண்டு 
வேடவர் அம்பை தொட்டார்

தேனவள் நாணிச் சென்ற‌
சிறப்பினில் கவிதை தொட்டாள்”


தமிழக மணல் மாபியா பற்றி இன்னும் தலக்காட்டு மக்களுக்கு தெரியாது போல

கன்னடத்தில் தலக்காடு என்றொரு இடம் உண்டு, சிறிய ஊர். ஆனால் அது சில விஷயங்களுக்காக பரபரப்பாக பேசபடுகின்றது

அதாவது அந்த ஊர் காவேரி கரையில் உள்ளது, காவேரி சிக்கல் அல்ல மாறாக சிக்கல் மணலால் வந்தது

முன்பொருகாலத்தில் அலமேலு எனும் ராணி இந்த ஊர் மண்ணாய் போகட்டும் என சாபமிட்டாராம், அதிலிருந்து அந்த ஊர் மண்ணாகிவிட்டதாம் இவர்கள் அதனால் அருகில் குடியேறினார்களாம்

இன்றும் எடுக்க எடுக்க மண்ணாய் வருகின்றதாம், என்ன செய்தாலும் மணல் கூடுமே தவிர குறையாதாம், தலக்காடு மண் பிரச்சினையினை சரி செய்ய இவர்களால் முடியவே இல்லையாம்

இது மைசூர் சமஸ்தானத்திற்கு 400 ஆண்டுகாலம் வாரிசு இல்லாத சாபம் போல, மண் சாபம் என சொல்லிவிட்டு அந்த மண்ணை தொடாமால் வாழ்கின்றனர் தலக்காட்டு மக்கள்

இது சாபமா? இல்லை அள்ள அள்ள வருமா? வந்து மறுபடியும் மூடுமா? என பல செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன‌

என்ன பெரிய சாபம்?

தமிழக பன்னீர் செல்வம், மணல் மாபியா ஆறுமுக சாமி வசம் ஒரு மாதம் தலக்காடு கிடைக்கட்டும், ஒரு சொட்டு மணல் அங்கு இருக்கும்?

ஒரு ஸ்பூன் விடாமல் அள்ளி ஏற்றுமதி செய்யமாட்டார்களா?

தமிழக மணல் மாபியா பற்றி இன்னும் தலக்காட்டு மக்களுக்கு தெரியாது போல, முடிந்தால் இவர்களை உள்ளே விட்டு பார்க்கட்டும்

மணலோடு ராணி அலமேலு அவர் சாபம் எல்லாம் அள்ளிகொண்டு வந்துவிடுவார்கள்.

 
 

டீ, காபி விலையை கேட்டவுடன் வாங்க மறுத்து விட்டேன் – ப. சிதம்பரம்

டீ, காபி விலையை கேட்டவுடன் வாங்க மறுத்து விட்டேன் – ப. சிதம்பரம்

பெரிய பெரிய கம்பெனிகளையே அசால்ட்டாக வாங்கிய சிதம்பரம் காபி விலை அதிகம் என்றவுடன் வாங்கவில்லையாம்

சென்னை விமான நிலையத்தில் அவர் காபி விலை கேட்டாராம், உடனே ஆடிபோய் வேண்டாம் என்றாராம்

வாழ்வில் முதன் முறையாக சிதம்பரம் விமான நிலையத்தின் உள்ளே சென்றார் என நம்புங்கள், முன்பு அவர் நிதியமைச்சராக இருந்தபொழுதெல்லாம் ரயிலிலும், உருளைகிழங்கு லாரியிலுமே இந்தியா முழுக்க சுற்றினார்

போராட்டம் வெல்லட்டும் , நாசகார ஸ்டெர்லைட் ஒழியட்டும்

Image may contain: one or more people, crowd and outdoor

அந்த ஸ்டெர்லைட் முதலில் மகராஷ்ட்ரா ரத்னகிரி பக்கம் அமைந்தது, அதனால் பாதிக்கபட்ட விவசாயிகள் பொங்கினர். ஒரு கட்டத்தில் உள்ளே நுழைந்து ஆலையினை அடித்து நொறுக்கினர்

அன்று முதல்வரான சரத்பவாருக்கு வேறு வழி இல்லாததால் உடனே கிளம்புங்கள் என உத்தரவிட்டார், அடித்து நொறுக்கியவர் மேல் ஒரு வழக்கும் இல்லாமல் அவர் பார்த்துகொண்டார்

கோவாவில் நுழைய முயன்ற ஸ்டெர்லைட் அங்கிருந்தும் விரட்டபட்டது

குஜராத்திலும் இந்த அபாய ஆலைக்கு எதிர்ப்பு கிளம்பியது, இந்நிலையில்தான் அதன் கவனம் தமிழகம் மீது வந்தது

இங்கோ வளர்ப்புமகன் திருமணம், தமிழகத்தை சுருட்டுதல் என மிக அட்டகாச ஆட்சி செய்துகொண்டிருந்த ஜெயாவிடம் அனுமதி வாங்குவது அவர்களுக்கு சிரமமில்லை

1995ல் ஜெயாதான் ஸ்டெர்லைட்டை அனுமதித்தவர்

ஆனால் அதன் அபாயம் உணர்ந்து எதிர்ப்பு வந்தவுடன் கொஞ்சம் சமாளிக்கபார்த்தார் ஆனால் வெளியேறு என சொல்லவில்லை

வைகோ வழக்கு தொடர்ந்து வாதாடினார், உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட்டை மூடவும் உத்தரவிட்டது, ஜெயாவின் மறைமுக ஆதரவும் ஆலைக்கு உதவவில்லை

பணம் படைத்த அணில் அகர்வால் குடும்பம் சும்மா இருக்குமா? உச்ச நீதிமன்றம் பாய்ந்தார்கள். அங்கும் வழக்காடினார் வைகோ

இந்திய நீதி எப்படிபட்டது? உயர் நீதிமன்றம் தடை செய்த ஆலையினை உச்ச நீதிமன்றம் இயக்க அனுமதித்தது,, இது முரண்

அதன் பின் ஸ்டெர்லைட் இயங்க யாரும் தடை செய்யவில்லை, ஆனால் தூத்துகுடி உறுமிகொண்டே இருந்தது

வைகோ கண்டித்து கொண்டே இருந்தார், பல போராட்டங்களை அவர் நடத்தினார்

வைகோவிடம் ஏகபட்ட கோளாறுகள் உண்டென்றாலும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் அவர் காட்டியது நியாயமான போராட்டம், அதில் அவரை பாராட்டியே ஆக வேண்டும்

ஆனால் அதே வைகோ பின்பு ஸ்டெர்லைட்டை அனுமதித்து அதற்கு உதவிய ஜெயாவுடனும் கூட்டு சேர்ந்து புன்னகைக்க தவறவில்லை, அது வன்மையாக கண்டிக்கதக்கது. அரசியல் அப்படித்தான்

ஜெயா ஆட்சி, கலைஞர் ஆட்சி எதுவந்தாலும் யாருக்கும் அந்த ஆலையினை மூட சொல்லும் எண்ணமில்லை

நாமும் தூத்துகுடிக்கு சில நேரம் சென்றிருக்கின்றோம், அங்கு இருக்கும் மாசு மிக அதிகம், காற்றின் கருமை நிறம் சில நிமிடங்களில் உடலில் படும் அளவு கடும் மாசு

உண்மையில் டெல்லியினை விட தூத்துகுடியில்தான் காற்று மாசு மிக மிக அதிகம்

இந்நிலையில் இப்பொழுது இன்னும் 700 ஏக்கரில் ஸ்டெர்லைட்டை விரிக்கின்றார்களாம்

கவனியுங்கள், இந்த ஸ்டெர்லைட் இங்கு வர அனுமதி கொடுத்தவர் ஜெயலலிதா, இன்று கிட்டதட்ட ஆயிரம் ஏக்கரில் விரிவாக்குங்கள் என அனுமதி கொடுத்திருப்பதும் பழனிச்சாமி அரசு

உண்மையில் இப்பொழுது தூத்துகுடி பகுதி பொங்கி கொண்டிருக்கின்றது, பெரும் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது

இனியும் தங்கள் பகுதி மாசடைய விடமாட்டோம், சாக தயாரில்லை என இறுதி போராட்டத்திற்கு கிளம்பிவிட்டார்கள்

ஆனால் பல ஊடகங்கள் மறைக்கின்றன‌

குறிப்பாக ஜல்லிகட்டு போராடத்தை உலகறிய செய்த வைகுண்டராஜனின் நியூஸ் 7 பின் வாங்குகின்றது

இவ்வளவிற்கும் அது வைகுண்டராஜனின் சொந்த ஊர் என்பது குறிப்பிடதக்கது. பணக்காரர்கள் அகர்வால் என்றாலும் வைகுண்டராஜன் என்றாலும் உறவு வந்துவிடும் போல‌

இப்பொழுது ஒரு சில ஊடகங்கள் அதை கவனிக்க அது விஸ்வரூபமெடுக்கின்றது

கமலஹாசன் கூட இது மக்கள் போராட்டம் என களமிறங்கிவிட்டார்

இன்னும் பிரபல கட்சிகள் ஏதும் வாய்திறக்கவில்லை

தூத்துகுடி சசிகலா புஷ்பா கூட இரண்டாம் திருமணத்தில் கடும் பிசி

தூத்துகுடி திமுக ஈரோட்டில் கொடிபிடிக்கின்றது, பழனிச்சாமி அனுமதி கொடுத்தவர் என்ற முறையில் மகா அமைதி

ராமதாஸ் மட்டும் கண்டிக்கின்றார்

இது பரவுகின்றது, ஆச்சரியமாக லண்டன் வாழ் தமிழர்கள் அணில் அகர்வால் வீட்டு முன்னாலே ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்

இப்போராட்டம் வெல்ல வேண்டும், ஸ்டெர்லைட் முடக்கபட வேண்டும்

தூத்துகுடி மக்கள் முரட்டு மனிதர்கள் என்றாலும் மகராஷ்ட்ராவில் நடந்தது போல ஆலை உள்ளே நுழைந்தெல்லாம் அடித்து நொறுகவில்லை

மாறாக ஆர்ப்பாட்டம் மட்டும் செய்கின்றார்கள்

மகாராஷ்ட்ரா அரசு விரட்டிய ஆலை, கோவா மக்கள் விரட்டிய ஆலை, குஜராத் மக்கள் விரட்டிய ஆலை தமிழகத்தில் இயங்கலாமாம்

அதற்கு உச்சநீதி மன்றம் எல்லாம் உதவுமாம்

நீதிமன்றம் அதன் சட்ட ஆதாரத்தை பார்க்கும், நடந்தது என்னவென்றால் மகாரஷ்ட்ர அரசும், கோவா அரசும் மக்கள் நலனுக்காக அந்த ஆலையினை தடை செய்தன‌

ஆனால் இந்த ஜெயா அரசு கொஞ்சமும் யோசிக்காமல் அதை அனுமதித்தது, பழனிச்சாமி அரசு விரிவாக்கவும் அனுமதி கொடுத்திருக்கின்றது

நிச்சயம் இதில் மாநில அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்

மற்ற மாநிலங்களில் எல்லாம் விரட்டபட்ட ஆலை இங்கிருந்தும் விரட்டபட்டே ஆக வேண்டும்

அவர்கள் எல்லாம் வாழவேண்டும், தூத்துகுடியார்கள் மட்டும் சாக வேண்டும் என்பதெல்லாம் அயோக்கியதனம்

பழனிச்சாமி மிக முக்கிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரமிது

ஸ்டெர்லைட் ஒன்றும் அரசு திட்டம் அல்ல, அதற்கு எந்த வரைமுறையும் கிடையாது, லாப வேட்கையில் அது யாரையும் கொல்ல துணிந்தது. அதன் பலம் முன்பு சாதாரணமானோர் ஏதும் செய்ய முடியாது

இதே வேதாந்தா பல இடங்களில் விரட்டபட்டது, மும்பை கோவா தொடர்ந்து வடகிழக்கின் தாண்டேவாரா காடுகளின் கனிமத்திற்காக இது நுழைந்ததும் அம்மக்கள் விரட்டியதும் வரலாற்று சாட்சிகள்

இந்த பரகாசுர தனியார் கம்பெனியிடமிருந்து தூத்துகுடியினை விடுவிப்பது அரசுகளின் கடமை.

போராட்டம் வெல்லட்டும் , நாசகார ஸ்டெர்லைட் ஒழியட்டும்

அதை ஒழிக்கமுடியவில்லை என்றால் பழனிச்சாமி அரசு ஒழியட்டும்

அரசு மாறினால் நிச்சயம் ஸ்டெர்லைட் தானாக அடங்கி ஒழியும்

ஆயிரம் ஏக்கர் விரிவாக்க அனுமதிகொடுத்துவிட்டு ஒன்றுமறியாத கன்னிபோல் பழனிச்சாமி மவுனமாக இருப்பது நிச்சயம் தவறு, பெரும் அயோக்கியதனம்.

ஒரு மக்கள் விரோத ஆலையினை விரட்ட கூட அதிகாரமில்லா மாநில முதல்வர் எதற்கு?

தூத்துகுடி மக்களின் நியாயமான போராடத்தை ஆதரிக்க வேண்டியது நம் கடமை

கடமையிலிருந்து தவறாமல் போராட்டத்தை எல்லோரும் ஆதரித்து அந்த ஸ்டெர்லைட்டை விரட்டியே தீரவேண்டும்


பலத்த எதிர்ப்புக்கு இடையே இந்த தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்ததும் ஜெயாவின் அதிமுக என்பதும், இப்பொழுது விரிவாக்க அனுமதி கொடுத்திருப்பதும் அதிமுக அரசு என்பது மறைக்கபடுகின்றதல்லவா?

இதுதான் தமிழக ஊடகங்கள் கடைபிடிக்கும் தர்மம்


 

அது என்ன குருத்தோலை ஞாயிறு?

No automatic alt text available.

ஓய்வுநாளில் மனிதன் ஓய்ந்திருக்க வேண்டும் என்பது கடவுள் கொடுத்த கட்டளை

அதன்படி யூதர்கள் இன்றும் சனிகிழமை அதிகம் நடக்க கூட மாட்டார்கள், இன்றும் இஸ்ரேலில் கட்ட லிப்டுகளில் கூட சனிகிழமை தானே நின்று செல்லும் லிப்டுகள் உண்டு

ஆம் பட்டனை தொட்டால் வேலையாம்

அப்படி ஓய்வுநாளை மிக நுணுக்கமாக அனுசரிக்கின்றார்கள்

இந்த கிறிஸ்தவமும் இருக்கின்றதே, இம்சைபிடித்தது. ஓய்வு நாளிலும் காலையில் எழு சர்ச்சுக்கு போ, மதியம் வரை விழுந்து கிட என பெரும் அழிச்சாட்டியம் செய்கின்றது

கர்தரின் நல்ல பக்தர்கள் என்றால் ஞாயிற்றுகிழமை வாயே திறக்க கூடாது, ஒரு அடி எடுத்து வைக்க கூடாது. ஆனால் இவர்கள் கர்த்தருக்கே பைபிள் போதிப்பவர்கள் அதனால் அப்படித்தான் இருப்பார்கள்

இன்று குருத்து ஞாயிறு வேறு

அது என்ன குருத்தோலை ஞாயிறு?

இயேசு போதித்த காலங்களில் அவர் ஹீரோ, யூத மத குருமார்கள் அவரை ஒழிக்க தேடினாலும் யூதர்கள் அவரை மீட்க வந்தவராகவே கருதின‌

இயேசு அதிரடி போதனையால் மட்டுமல்ல, பார்வை கொடுத்தல், பாவங்களை மன்னித்தல், தொழுநோயினை சடுதியில் குணப்படுத்துதல் , ஏன் செத்தவனை கூட உயிர்பித்தல் என பின்னிகொண்டிருந்தார்

அவர் ஜெருசலேமில் நுழைய சில நாட்களுக்கு முன்புதான் லாசர் என்பவனை கல்லறையில் இருந்து உயிரோடு கொண்டு வந்தார், அதனால் பெரும் புகழ் பெற்றிருந்தார்

எல்லா யூதனும் பாஸ்காவில் ஜெருசலேமில் வந்து வழிபட வேண்டும் என்பது அவர்கள் சமயவிதி, அப்படித்தான் அந்த பாஸ் ஓவர் விழாவிற்காக வந்தார்

அவரை கண்ட கூட்டம் அவரை ஆலிவ் மர குருத்து இலைகளை பிடித்து வரவேற்றது

ஆம், பாலஸ்தீன கலாச்சாரபடி ஆலிவ் குருத்து என்பது சமாதானம், நல்வாழ்வின் அடையாளம், யாசர் அராபத் கூட ஐநாவில் ஒரு கையில் ஆலிவ் குருத்து மறுகையில் துப்பாக்கியாய் நின்று எதுவேண்டும் என கேட்டார்

அப்படி சமாதமாக மகிழ்வாக அவரை வரவேற்றது அன்றைய யூத கூட்டம்

ஆனால் 4 நாட்களிலே இதே இயேசுவினை சிலுவையில் அறையுங்கள் என சொன்னதும் இதே கூட்டம்தான்

ஏன்?

இயேசு ஜெருசலேம் தேவாலயத்தை இடித்து 3 நாளில் கட்டுவதாக சொன்னவர் என அவர்ளின் குருமார்கள் சொல்ல, உடனே இயேசுவை கொல்ல துணிந்தது இதே கூட்டம்

அவர்களின் ஜெருசலேம் கோவில் அபிமானம் அப்படி, அதற்காக அந்த இயேசுவினை கொல்ல நொடியில் துணிந்தார்கள்

இன்று யூதர்கள் எப்படி இருகின்றார்கள்?

2000ம் ஆண்டாக இந்த உலகில் சூரியன், சந்திரன் அடுத்து மாறாத ஒன்று உண்டென்றால் யூதர்களின் அதே ஜெருசலேம் கோவில் பற்று

இன்றும் அதனை கட்டத்தான் உலகோடு மல்லுகட்டி பாதி வெற்றியும் பெற்றிருக்கின்றார்கள்.

உலகெல்லாம் அடிவாங்குவார்கள், உயிரையும் இழப்பார்கள், சொத்துக்கள் நாசமானாலும் கவலையுற மாட்டார்கள்,

சம்பாதித்து கொண்டே ஓடுவார்கள்

2000 வருடமாக இப்படி ஒரு இருக்க முடியுமா என்றால் நிச்சயம் யூதர்களை தவிர யாரும் இருக்க முடியாது

அன்று இயேசுவிற்கு ஆலிவ் குருத்து பிடித்த அதே இனம், விரைவில் அல் அக்சா மசூதியினை இடித்துவிட்டு யூத ஆலயம் அமைக்க இருக்கும் தங்கள் மெசியாவிற்கும் ஆலிவ் குருத்து காட்டி வரவேற்க மிக தயாராய் இருக்கின்றது

 
%d bloggers like this: