மேற்காசியாவில் சனி பிடிக்க போகும் நாடுகளில் துருக்கியும் ஒன்று

Image may contain: 1 person, suit

இனி மேற்காசியாவில் சனி பிடிக்க போகும் நாடுகளில் துருக்கியும் ஒன்று

முதலாம் உலகப்போருக்கு முன்னரான 400 ஆண்டுகளின் வரலாற்றை நிர்ணயித்த நாடு துருக்கி, ஆட்டோமான் சாம்ராஜ்யமும் அதன் பெரும் பலமும் மகா ஆச்சரியமானவை

வாஸ்கோடகாமாவும், கொலம்பஸும் கடலில் திரிந்ததற்கு முதல் காரணம் துருக்கி, அவர்கள்தான் நிலவழி பாதையினை ஐரோப்பியருக்கு அடைத்தார்கள்

நெப்போலியனால் கூட அவர்களை வெல்லமுடியவில்லை, எதிர்க்கவே தயங்கினான்

அப்படிபட்ட துருக்கி முதலாம் உலகப்போருக்கு பின் சரிந்து பரிதாபமாகி பின் ஐரோப்பாவின் நோயாளி என பரிகசிக்கபட்டும் பின் கமால் பாஷா காலத்தில் சீரானது, இன்று ஐரோப்பாவின் ஒரே இஸ்லாமிய நாடு துருக்கி

இப்பொழுது என்ன சிக்கல்

துருக்கி அதிபர் எர்டோகன் கொஞ்சம் அடாவடி பார்ட்டி, அமெரிக்க எதிரி போல ஆகிவிட்டார். இப்பொழுது சிரிய அகதிகள் விவகாரத்தில் முக்கிய பங்கு, ஐஎஸ் குர்து ஒழிப்பில் பிசி என்பதாலும் சில பெரிய இடங்களுக்கு ஆசைபடுகின்றார்

பெரிய ஆசை என்றால்?

இஸ்லாமியருக்கு எல்லாம் தலைவர் எனும் ஆசை

இந்த ஆசையினை யாரெல்லாம் கண்டார்கள் என்றால் எகிப்தின் நாசர், ஈராக்கின் சதாம் உசேன், லிபியாவின் கடாபி

பின்லேடனும் இந்த வகையில் வருவார்

இவர்கள் திட்டம் என்னவென்றால் இஸ்ரேல் வெல்ல முடியா தேசம் அல்ல, இஸ்லாமியர் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் வெல்லலாம்

ஆனால் இஸ்லாமியர் ஒன்று சேர்ந்தார்களா? சேர்வார்களா என்றால் ஒருகாலமும் இல்லை

எகிப்து பெரும் பலத்துடன் 1960, 70 களில் 10 நாடுகளோடு மிரட்டி யுத்தம் தொடங்கியபொழுது, இஸ்ரேல் அட்டகாசமாக வென்றது

நாசர் அதன் பின் எழும்ப முடியவில்லை, இஸ்ரேலின் மோசே தயானின் அடி அப்படி இருந்தது

சதாம் உசேன் ஈரானோடு மோதி, குவைத்தை பிடித்து வேறு சிக்கலில் வீழ்ந்ததால் இஸ்ரேலோடு மோத வாய்ப்பில்லாமல் போனது, ஆனாலும் வளைகுடா போரில் அவர் வீசிய ஸ்கர்ட் ஏவுகனைகளுக்கு பதிலாக அமெரிக்கா பேட்ரியாட் ரக ஏவுகனைகளை கொடுக்க இஸ்ரேல் என்ன செய்தது?

தோல்வி அடைந்த பேட்ரியாட்டை அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து ஏரோ என ஏவுகனை செய்து வெற்றிகரமாக சோதித்து தன் ஏவுகனை என்றது

லிபிய அதிபர் கடாபி அணுகுண்டு செய்துவிட்டு இஸ்ரலோடு மோத காத்திருந்தபொழுது உள்நாட்டு மக்களாலே கொல்லபட்டார்

இப்பொழுது துருக்கியின் எர்டோகான் அதே வரிசைக்கு வந்து அதே சவால் விடுகின்றார்

இவர் அந்த தலைவர்களின் முடிவே பெறுவாரா இல்லை ஏதும் சாதிப்பாரா என தெரியவில்லை

ஆனால் இன்று இருக்கும் நிலமையில் நாசரும், சதாமும், கடாபியும் செய்யமுடியா விஷயத்தை எர்டோகன் நிச்சயம் செய்ய முடியாது

எனினும் இவரின் இந்த ஆசைக்காக விரைவில் துருக்கி என்னபாடு பட போகின்றதோ தெரியாது

ஆனால் இருக்கும் நிலமையில் நாசரும், சதாமும், கடாபியும் செய்யமுடியா விஷயத்தை எர்டோகன் நிச்சயம் செய்ய முடியாது

துருக்கியில் சனிபகவான் தன் இடதுகாலை வைத்து குடிபோகும் காட்சி அரசியல் நிபுணர்கள் கண்களுக்கு பிரகாசமாக தெரிகின்றது

 

தலைவி தலைவி ஏம் என்னை கைவிட்டாய்

Image may contain: 1 person, smiling, text

ஏதோ தோன்றுவதை எழுதுகின்றோம் என எழுதிகொண்டிருந்தால் விஷயம் பெரிதாகின்றது

பலர் பின் தொடர்கின்றார்கள், சிலர் கவனிக்கின்றார்கள் என்றுதான் நினைத்துகொண்டிருந்தோம் ஆனால் இப்பொழுது திசை மாறுவது போல் தோன்றுகின்றது

போலி கிறிஸ்துவத்தை அல்லது இந்துக்களின் சில நியாயங்களை எழுதுவோம் என எழுதினால் அது எங்கே செல்கின்றது தெரியுமா?

சொல்லவே நடுக்கமாய் இருக்கின்றது

ஆம் H. Raaja என்பவரின் பக்கத்திற்கு செல்கின்றது, அதனை பார்க்கும்பொழுதே பகீர் என்கின்றது

அவர் ஒருமாதிரியானவர் என்பதால் அடிவயிற்றில் உருளை உருண்டு தொண்டை வரை வருகின்றது.

இவரெல்லாம் நம்மை கவனிக்க ஆரம்பித்துவிட்டாரா இனி கடையினை சாத்திவிட்டு கிளம்பு என உள்மனம் எச்சரிக்க ஆரம்பித்தாயிற்று

ஆனாலும் அவரை வசைபாடியும் எழுதியிருக்கின்றோம் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் செல்கின்றார்கள் என்பதில் கொஞ்சம் ஆறுதல்

அவரது அட்மின் மிக பெருந்தன்மையானவர் என்பது புரிகின்றது, அட்மினுக்கு நன்றி

எனினும் இனி எதுவும் எழுத கூடாது என ஒரு அச்சம் மேலோங்குகின்றது.

ஆனாலும் ஒரே ஒரு கேள்வி அலைபோல் அடிக்கின்றது

இவர்கள் எல்லாம் நம் பதிவினை பார்க்கின்றார்கள், நல்லதோ கெட்டதோ ஆனால் பார்க்கின்றார்கள் தேவையானதை எடுத்துகொள்கின்றார்கள்

ஆனால் தங்க தலைவி பார்வைக்கு ஒன்றுமே செல்லவில்லையா? அவர் ஒரு பதிவினை கூட நோக்கவில்லையா?

அய்யகோ என்ன கொடுமை இது?

சங்கம் மிக்க துயரமும் வருத்தமும் கொள்ளும் நேரமிது.

கதறி கதறி அழுதுகொண்டிருக்கின்றது சங்கம்.

“தலைவி தலைவி ஏம் என்னை கைவிட்டாய்”

தங்க தலைவி இனி சிங்க தலைவி

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு என்பது மகா சுவாரஸ்யமானது

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு என்பது மகா சுவாரஸ்யமானது, கிறிஸ்தவ நம்பிக்கை அங்குதான் தொடங்குகின்றது

என்ன நடந்தது?

இயேசு சிலுவையில் மரித்ததும் அவர் மலையில் குடைந்த கல்லறையில் அடக்கம் செய்யபட்டார், துணி சுற்றி கல்லறையில் வைத்து வாசலில் கல்லும் வைத்து அடைக்கபட்டது

யூதர்கள் கோரிக்கைபடி அதில் ரோம அரசின் முத்திரை இடபட்டு காவலாளிகளும் நிறுத்தபட்டனர் இதுவரை 4 நற்செய்தியும் சரியாக சொல்கின்றது

அதன் பின் 4 நற்செய்தியும் மாற்றி சொல்கின்றன‌

அதாவது வானதூதர் வந்து கல்லை புரட்டினார், காவலர் அஞ்சி நடுங்கினர், அதன் பின் இயேசு உடல் அங்கே இல்லை

இன்னொரு நற்செய்தி சொல்வது இயேசுவின் சீடர்கள் வந்தபொழுது கல்லறை திறந்திருந்தது இயேசு உடல் இல்லை. அவர்கள் கதறி அழ வான தூதர் “அவர் இங்கு இல்லை” என சொன்னார்.

( 3ம் நாள் செய்ய வேண்டிய‌ சில யூத சடங்குகளும் உண்டு, சீடர்கள் அதற்கு வந்தனர்

வெற்று கல்லறையினை கண்டதும் யாரோ உடலை திருடினார்கள் என்றுதான் அழுதார்களே தவிர அவர் உயிர்த்தார் என்ற நம்பிக்கையே அவர்களுக்கு அப்பொழுது இல்லை)

இன்னும் சில முரண்பாடுகள் உண்டு, ஆனாலும் அது வெற்று கல்லறையாக இருந்தது என்பது எல்லா நற்செய்தியும் ஒப்புகொள்ளும் விஷயம்.

அதன் பின் இயேசு மதலேன் மரியாள் எனும் சீடருக்கு தோன்றினார், இன்னும் பலருக்கு தோன்றினார் , பின் பூட்டிய வீட்டுக்குள் எல்லாம் வந்தார் இயேசு

ஆனால் சிலுவையில் அறையபடுவதன் முன்பு போதித்தது போல போதிக்கவே இல்லை

அவர் உயிர்த்ததை சீடர்கள் மட்டும் நம்பினர், அந்த நம்பிக்கையினை எல்லோருக்கும் விதைத்தனர்

நம்பிய கூட்டம் பெருக பெருக கிறிஸ்தவம் வளர்ந்தது

ஆக இயேசுவின் வெற்று கல்லறையினைத்தான் கண்டார்களே தவிர அவரின் உடல் உயிபெற்று எழுவதை கண்ணால் கண்டது யாருமில்லை

வானதூதர் அவர் உயிர்த்தார் என்பதை சொன்னாரே தவிர கண்ணால் கண்டவர் யாருமில்லை

அதன் பின் இயேசு சீடரோடு பேசியிருக்கின்றார், உணவருந்தியிருக்கின்றார். தான் உயிர்த்ததை சீடருக்கு மட்டும் காட்டினார்

பொதுமக்களுக்கு காட்டவே இல்லை, இதோ உயிர்த்துவிட்டேன் என ஜெருசலேம் ஆலய வாசலில் வந்து நிற்கவில்லை

அப்படி இயேசு வந்திருந்தால் யூத இனம் இவ்வளவு சிக்கலை சந்தித்திருக்காது, வரலாறே மாறி இருக்கும்

அவர் ஏன் அப்படி வரவில்லை என்பதுதான் யூதரின் கேள்வி.

கிறிஸ்து உயிர்ப்பு என்பது நம்பிக்கையில் வரவேண்டும், அந்த நம்பிக்கையில் கிறிஸ்து ரட்சகர் என ஏற்க வேண்டும் என்ற விசித்திரமான நிர்பந்தம் கிறிஸ்துவத்தில் உண்டு

ஆக சீடர்கள் நம்பினர், கிறிஸ்தவர்களும் நம்பினர் அவர்களுக்கு இயேசு உண்டு

இளையராஜாவுக்கு ஏன் உண்டு?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரம்

“ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை அகற்றும் திட்டம் எதுவும் இல்லை” – மத்திய உள்துறை இணை அமைச்சர்.

இவர்கள்தான் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வோம் என முன்பு சீறியவர்கள்

இந்தியாவிற்கும் காஷ்மீருக்குமான இணைப்பே அந்த சட்டபிரிவுதான் அதை ரத்து செய்தால் காஷ்மீர் துண்டிக்கபடும் என சொன்னாலும் கேட்கவில்லை, கடும் அழிச்சாட்டியம்

இப்பொழுது ராமர் கோவிலை போலவே இதலிருந்தும் பின்வாங்கிவிட்டார்கள்

இனி எல்லாவற்றிலும் இப்படியே பின்வாங்கி ஆட்சியினை காங்கிரசிடம் ஒப்படைத்துவிட்டு செல்வார்கள்.

எவன் தயவும் தேவை இல்லை : ஸ்டாலின்

எவன் தயவும் தேவை இல்லை என கூட்டணி குறித்து ஸ்டாலின் சொன்னதாக செய்திகள் வந்தது

இதற்கு பெரிதாக சீறவேண்டிய உரிமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு, காரணம் திமுகவின் வெற்றியில் எல்லா தேர்தலிலும் அதன் பங்கும் உண்டு

இதனால் வழக்கம் போல இளங்கோவன் மட்டும் சீறியிருக்கின்றார், தங்க தலைவி குஷ்பு விரைவில் பதிலளிப்பார் என சங்கம் நம்புகின்றது

வேறு யாரும் வாய் திறக்கவில்லை

உண்மையில் திமுக தனியே நின்று வெற்றிபெறும் பலம் கொண்ட கட்சியா என்றால் ஒருகாலமும் இல்லை

ஆனானபட்ட அண்ணா காலத்திலே அது 7 கட்சி கூட்டணியோடுதான் ஆட்சிக்கு வந்தது, இவ்வளவவிற்கும் அண்ணா, ராமசந்திரன் என எல்லா ஜாம்பவான்களும் இருந்தனர்

ராமசந்திரன் பிரிந்தபின்னால் இன்னும் மோசம், வேறு வழியின்றி “நேருவின் மகளே வருக” என திமுக வரவேற்றதெல்லாம் அப்படித்தான்

1989லும் தேசிய முண்ணணி கூட்டணியிலே அது ஆட்சிக்கு வந்தது, தனியாக வரவில்லை, பின்பு டெல்லியில் காட்சி மாற அதுவும் டிஸ்மிஸ் ஆனது

அதன் பின் அதிமுக வலுவானதும் ரஜினி மூப்பனார் என 1996ல் கூட்டணி வைத்தே ஆட்சிக்கு வந்தது

2006ல் காங்கிரஸ் ஆதரவிலே அதன் ஆட்சியும் நடந்தது, நிச்சயம் அது மைனாரிட்டி ஆட்சி, காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்திருக்க வேண்டும் ஆனால் ஒருவித தந்திரத்தில் “எங்களால் அரியணை இழந்த காங்கிரஸ் எங்களால் அரியணைக்கு வந்தால் என்ன அர்த்தம்”” என்ற வகையில் கொண்டு சென்றார்

2011ல் விஜயகாந்தின் வரவால் திமுக ஆட்சியினை இழந்தது, இதனை சரியாக கணித்த திமுக பின்பு 2016ல் அவரை கூட்டணிக்கு கொண்டுவர தலைகீழாக நின்றது

பழம் கனிந்தது, பால் பொங்கியது என என்னவெல்லாமோ சொல்லி காவல் இருந்தார்கள், இறுதியில் போயஸ் கார்டனில்தான் பால் பொங்கியது

திமுகவிற்கும் இழப்பு அதே நேரம் விஜயகாந்திற்கும் பெரும் இழப்பு

ஆக 60 வருட திமுக வரலாற்றை நோக்கினால் தகுந்த‌ கூட்டணி இன்றி அது ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே இல்லை, இது கலைஞருக்கு தெரியும்

அதனால்தான் அவர் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகளை அமைப்பார், பல கட்சிகளுடன் நெருக்கமாக இருப்பார்

தேர்தல் தேதி அறிவித்தவுடன் அவரின் சிந்தனை கூட்டணி பற்றியும் தொகுதிபங்கீடு பற்றியுமே இருக்கும், அப்படித்தான் பலமுறை வெற்றிபெற்றார்

சுருக்கமாக சொன்னால் திமுக என்பது பெரும் வாக்கு வங்கியற்ற கட்சி, ஓட்டை மட்டையினை வைத்துகொண்டு சிக்ஸர் அடிப்பது போல கலைஞர் தன் தந்திர சாகசத்தால் வெற்றி பெற்றார்

1989ல் அதிமுக பிரிந்தபொழுது திமுக வெற்றி பெற்றிருக்கலாம், அப்பொழுது காங்கிரசும் கனிசமான இடங்களை பெற்றிருந்தது

ஆனால் இப்பொழுது நிலமை அப்படி அல்ல, ஏகபட்ட கட்சிகள் களத்தில் இருக்கின்றன, போதாகுறைக்கு ரஜினி கமல் வேறு

பெரும் பலம் கையில் இருந்தும் ஆர்.கே நகரில் தினகரனை ஆளும்கட்சியால் அடக்க முடியவில்லை என்பதும் இன்னொரு அபாய சங்கு

இக்காலத்தில் இருந்து கொண்டு எவன் தயவும் எனக்கு தேவை இல்லை என சொல்வாரானால் முக ஸ்டாலினின் கப்பல் நிச்சயம் கரையேறாது

இது இன்று இல்லாவிட்டாலும் இன்னொருநாள் உலகிற்கு புரியும்

சீன விண்கலம் அமெரிக்கா பக்கம் விழபோகின்றதாம்

Image may contain: 1 person

எங்கோ சுற்றிகொண்டிருக்கும் சீன விண்கலம் அமெரிக்கா பக்கம் விழபோகின்றதாம்

அதனை எப்படியாவது தமிழகத்தில் விழவைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த தருணம் இது