நடராஜனுக்கு பட திறப்பு விழா

நடராஜனுக்கு பட திறப்பு விழா செய்து படத்தை திறந்து அவரிம் மாபெரும் தியாகங்களை எல்லாம் பேசியிருக்கின்றார்கள்

வைரமுத்து, பாரதிராஜா முதல் நல்லகண்ணு வரை வந்து புலம்பிய எல்லோருக்கும் இருந்த ஒரே ஒற்றுமை தேவர் சாதி என்பதுதான், அங்கிள் சைமன் பாதி தேவர் என்பதால் கலந்துகொண்டிருக்கின்றார்

இந்த தேவர் சாதி வெறிக்கு பெயர் தமிழுணர்வு என நம்பிகொள்ளுங்கள்

நடராஜன் என்பவர் யார் யாரெக்கெல்லாம் படி அளந்திருக்கின்றார், எம்மாதிரி மாய அம்புகளை யார் மூலம் எல்லாம் ஏவி அரசியல் நடத்தினார் என்பது அட்டகாசமாக தெரியும் நேரமிது

இந்த துக்க விழாவிலும் தினகரனின் காமெடி குறையவில்லை, பெரும் தொழிலதிபர்கள், டாக்டர்கள், பொறியாளர்கள் எல்லாம் சசிகலாவினை கட்ட வரிசையில் நின்றார்களாம் ஆனால் நடராஜன் நல்லவர் என்பதற்காக சசிகலாவினை இவர்கள் கட்டி வைத்தார்களாம்

ஆனாலும் அந்த கல்யாணத்தை நடத்தி வைத்த மகா நல்லவர் கலைஞர் பற்றி தினகரன் ஒருவார்த்தையும் சொல்லவில்லை

ஐடி ரெய்டோ, துக்க வீடோ தினகரனின் காமெடி மட்டும் குறையவே இல்லை, மகா தமாஷான மனிதர் போலிருக்கின்றது

 

மனிதனின் விண்கலம் பூமியினை மிரட்டுவது ஒன்றும் புதிதல்ல

Image may contain: cloud and sky

உலக வல்லரசு ஆக வேண்டுமென்றால் தரையில் மட்டும் ஆக்கிரமிப்புகளை செய்தால் போதாது, விண்வெளியிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும்

இதனை முதலில் தொடங்கி வைத்தது சோவியத் ரஷ்யா, அவர்கள் விண்வெளி அறிவு பெற்றால் நிச்சயம் அமெரிக்காவினை நொறுக்குவர் என உணர்ந்த கென்னடி அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட முழு ஒத்துழைப்பு வழங்கினார்

அன்று ரஷ்யாவின் வளர்ச்சி அமெரிக்காவினை நொறுக்கும் அளவில் இருந்தது, அன்றே ஸ்டார் வார் எனப்படும் விண்வெளி யுத்ததிற்கு ரஷ்யா தயாராக இருந்தது

கென்னடி கொஞ்சமும் சளைக்காமல் சவால் விட்டு அமெரிக்க விண்வெளி துறையினை ஊக்கபடுத்தினார்.

ஆனால் அவர் இறந்தபின்பே அமெரிக்கர் நிலவுக்கு சென்றனர் எனினும் கென்னெடியின் கனவு பெரிது

இன்றுவரை விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியது இந்த இரு நாடுகளுமே

இப்படி இவர்கள் இருவரும் ஆளும் விண்வெளிக்கு நாங்களும் பட்டா போட வருவோம் என கிளம்பிய சீனா டியாங்டெங் எனும் செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பியது

அது செயற்கைகோள் என்றாலும் சோதனை முயற்சி, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியின் முதல்படி

அப்படி 2011ல் அனுப்பபட்ட அந்த கலம் ஒழுங்காக வேலை செய்தால் இந்நேரம் மனிதனை அனுப்பி இருக்கும் சீனா

ஆனால் அவர்களுக்கு எல்லாம் காப்பி அடிக்க தெரியுமே தவிர உருப்படியாக செய்ய தெரியாது என்பதால் இந்த கலம் போக்கு காட்டியது

மத்திய அரசு பழனிச்சாமியினை வைத்திருப்பது போல முதலில் ஒழுங்காக சமத்தாக இருந்த கலம் பின்பு வைகோ , நாஞ்சில் சம்பத் அளவிற்கு சென்றுவிட்டது

அதன்பின் அதனை கட்டுபடுத்த தெரியா சீனர்கள் இனி இது பூமியில் விழும் என சொல்லிவிட்டு அமைதி காத்தார்கள்

மனிதனின் விண்கலம் பூமியினை மிரட்டுவது ஒன்றும் புதிதல்ல, முன்பு அமெரிக்காவின் ஸ்கை லேப் என்பது இப்படி நாஞ்சில் சம்பத் நிலமைக்கு சென்று, பின் உலகை பயமுறுத்தி இறுதியில் கடலில் விழுந்தது

அதே காரியத்தை இந்த டியாங்டெங்கும் செய்கின்றது

ஞாயிறு காலை அது பூமியில் விழுமாம், நிச்சயம் தீபிடித்து எரியும் ஆனாலும் 9 டன் எடையுள்ள கலம் என்பதால் முழுக்க எரியாமல் சில பாகங்கள் பூமியில் விழுமாம்

அது விழும் இடத்தை கணித்தால் லண்டன் , மும்பாய், பாரிஸ் , ரோம், பாங்காங்க், என சீனாவின் பீஜிங்கும் வருகின்றது

இன்னொரு வாய்பினை கணித்தால் தென் அமெரிக்கா, தெற்கு ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என வருகின்றன‌

இதனால் இந்த ஏரியாக்கள் கொஞ்சம் பதற்றத்தில் இருக்கின்றன‌

தமிழகத்திற்கு இந்த ஆபத்து இல்லை, காரணம் இது முனிவர்களும், ரிஷிகளும் வாழ்ந்த புண்ணிய பூமி

குஷ்பு வாழும் அதிர்ஷ்ட பூமி, அதனால் இங்கு ஒரு ஆபத்தும் வராது

 

மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் திரண்டு போராட வேண்டும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 2-ல் அ.தி.மு.க. உண்ணாவிரதம் : பன்னீர் செல்வம்

இவரும் பழனிச்சாமியும் முன்பு மாதம் இருமுறை டெல்லிக்கு ஓடுவார்களாம், இப்பொழுது மட்டும் உண்ணாவிரதமாம்

ஏப்ரல் 1ல் உண்ணாவிரதம் இருந்தால் என்ன? மிக பொருத்தமாக இருக்கும்


மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் திரண்டு போராட வேண்டும் – வைகோ

இவர் எப்பொழுதும் போர், போராட்டம் என சொல்லிகொண்டே இருப்பதால் முக்கியமான பிரச்சினைக்கு இவர் அழைத்தும் தமிழகம் திரும்பிபார்க்கவில்லை


தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி- மு.க.ஸ்டாலின்

ஆமாம், அவர் கட்சி 30 எம்பிக்களும், 100 எம்.எல்.ஏக்களுடன் தமிழகத்தில் அசுரபலத்தில் இருக்கின்றது, இதில் கருப்புகொடி காட்டியவுடன் அவர் அஞ்சிவிடுவார்

அவரே தமிழகத்திற்கு கருப்புகொடிதான் காண்டிகொண்டிருகின்றார், இதில் இவர் வேறு கருப்புகொடியாம்

பழனிச்சாமி அரசுக்கு எந்த நெருக்கடியும் கொடுத்துவிட கூடாது என்பதில் ஏன் இவ்வளவு கவனமாக இருக்கின்றீர்கள் மிஸ்டர் ஸ்டாலின்?


 

 

உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்திற்கே சாதகமானது, ஆனால்….

Image may contain: one or more people, outdoor and nature

நிச்சயம் காவேரியில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்திற்கே சாதகமானது, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மிக உகந்த நேரம் இது.

ஆனால் இதற்காக போராட நல்ல தலமை இங்கு இருக்கின்றதா என்றால் இல்லை. ஆளாளுக்கு அவிழ்த்துவிட்ட மந்தை போல ஒவ்வொரு பக்கம் செல்கின்றார்களே தவிர ஒன்றும் உருப்படியில்லை

ஆளும் கட்சி பாஜகவின் அடிமை என்பதால் பழனிச்சாமி அரசு ஏதோ சொல்கின்றது, கட்டி வைக்கபட்டிருப்பவன் உறுமி என்ன பயன்? ஒன்றும் ஆகபோவதில்லை

டெல்லியில் அதிமுக எம்பிக்கள் போராட்டத்தை தலமை எற்று நடத்த யாருமில்லை, அவர்கள் செத்துவிடுவோம் என மிரட்டினாலும் யார் சொல்லி சாவீர்கள்? என பதிலுக்கு கலாய்க்கின்றார்கள்

நல்ல தமிழ் தலமை டெல்லியில் இல்லை என்பது புரிகின்றது

ராஜாஜி, அண்ணா,முத்துராமலிங்க தேவர், வைகோ, ஜெயலலிதா, முரசொலிமாறன் எல்லாம் ஒவ்வொரு காலகட்டத்தில் தமிழக முகங்களாக டெல்லியில் அறியபட்டவர்கள் இன்று சத்தமில்லை

ஆந்திர வழியில் அதாவது ஜெகமோகன் ரெட்டியும் சந்திரப்பாவும் இணைந்து ஆந்திர நலனுக்கு குரல் கொடுப்பது போல இங்கு தமிழக எம்பிக்கள் சேரவில்லை

இங்கு கனிமொழி அங்கு தம்பிதுரை இரண்டு பிரிவு. திமுகவிடம் எம்பிக்கள் இல்லை , அதிமுகவிடம் தைரியமில்லை தலமையுமில்லை

ஒரு விஷயம் உறுத்துகின்றது

இவ்விஷயத்தில் மனதறிந்து தமிழகத்திற்கு துரோகம் செய்யும் கட்சி காங்கிரஸ்

ஆம் தமிழகத்தில் சிதம்பரம் முதல் டெல்லியில் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரசார் உண்டு ஆனால் கன்னடத்தில் நடக்கும் தேர்தலுக்காக தமிழக நலனை பலிகொடுக்கின்றார்கள்.

நிச்சயமாக சொல்லலாம் இந்த சிக்கலில் ஓரளவு உதவகூடியவர்கள் காங்கிரஸில் இருக்கின்றார்கள், அவர்களால் முடியவும் செய்யும்

ஆனால் கன்னட வோட்டு வங்கி அவர்களை தடுக்கின்றது, இங்கே காங்கிரசுக்கு வோட்டு விழாதபொழுது கன்னட காங்கிரஸ் வோட்டும் பாதிக்கபட வேண்டுமா? என்பது போல் யோசிக்கின்றார்கள்

இவ்விவகாரத்தில் படுகாட்டமாக கண்டிக்க வேண்டிய கட்சி சாட்சாத் காங்கிரஸ் அடுத்து பாஜக‌

தேசிய ஆளும் கட்சி அது, நியாயத்தை அதுதான் செய்ய வேண்டும், நியாயமா?

அவர்களா செய்வார்கள்? காங்கிரஸின் கள்ள அரசியல் கணக்கு அப்படியே பிஜேபிக்கும் இருக்கின்றது.

இதில் திமுக திணறுகின்றது. தமிழக பிரதான கட்சி அது. தமிழக நலனை ஓரளவு காக்கும் கட்சி என அதனைத்தான் சொல்லமுடியும்

ஆனால் இப்பொழுதெல்லாம் அதன் நகர்வு பழனிச்சாமி அரசை காப்பது போலவே தெரிகின்றது. பழனிச்சாமி அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் திட்டம் எதுவும் ஸ்டாலினிடம் இருப்பதாக தெரியவில்லை

டெல்லியில் சொல்லபட வேண்டிய தீர்வுக்கு அகில இந்திய அளவில் ஆதரவு திரட்டமாட்டோம் சென்னைகுள்ளே முடங்கி கொண்டு கத்துவோம் என்பதெல்லாம் ஒரு முடிவினையும் ஒரு காலமும் தராது.

இந்நிலையில் திமுக என்ன செய்யலாம்?

அன்றே வழிகாட்டினார் கலைஞர், ஆம் தமிழகம் பாதிக்கபடும் பொழுது மத்தியில் இருக்கும் ஆட்சிக்கு எதிரானவர்களை திரட்டி தமிழக நியாய இந்தியா முழுக்க ஆதரவு திரட்ட வேண்டும் எனும் வழி அது

அக்கால டெசோ அதனைத்தான் செய்தது,

திமுக ஈழவிவகாரத்தில் தனித்து குரல்கொடுத்தால் எடுபடாது என்றுதான் வாஜ்பாய், ராமராவ், பரூக் அப்துல்லா, பாதல் என அன்றைய காங்கிரசுக்கு எதிரானவர்களை கொண்டு டெசோ அமைத்து ஈழதமிழருக்கு இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என இந்திய குரலை உருவாக்கினார்

ராமசந்திரன், பிரபாகரன் போன்றோரால் அது முறியடிக்கபட்டது, பிரபாகரனின் ஏகாதிபத்திய படுகொலைகளால் டெசோ இயங்கவில்லை

( இதனால்தான் பின்னாளில் முள்ளிவாய்காலில் கொடுமை நிகழ்ந்தபொழுது அகில இந்திய அளவில் ஒரு குரலும் ஆதரவில்லை , இங்கே சீமானும், நெடுமாறனும் முட்டு சந்தில் நின்று கத்தியதை கழுதை கூட கேட்கவில்லை )

இப்பொழுதும் பாஜகவிற்கு எதிரான இந்திய மாநில தலமைகளை திரட்டி “தமிழருக்கு துரோகம் செய்கின்றது பாஜக” எனும் பெரும் எதிர்ப்பினை உருவாக்கி அகில இந்திய அளவில் ஆதரவினை திரட்டலாம்

சந்திரபாபு நாயுடு, மம்தா, விஜயன் என பலரை திரட்டி அட்டகாசமாக தேசிய அளவில் பாஜக முகதிரையினை கிழிக்கலாம், நியாயகுரலை உயர்த்தலாம் அது இன்று இல்லையேல் நிச்சயம் பின்னாளில் பலனளிக்கும்

அதில் வருங்கால பாராளுமன்ற தேர்தல் கூட்டணி கணக்கும் கலந்திருக்கும், நிச்சயம் காங்கிரஸ் வராது சிக்கல் அது அல்ல‌

இங்கிருக்கும் கூடங்குளம், நெய்வேலி நிலையங்களில் எல்லாம் தயாரிக்கபடும் மின்சாரம் இந்தியா எங்கும் செல்லும்பொழுது, இங்கிருக்கும் துறைமுகம் முதல் எல்லா வருமானமும் இந்தியா முழுக்க பகிரபடும்பொழுது காவேரி மட்டும் கன்னட சொத்தா? என அகில இந்திய அளவில் கேட்டால் நிச்சயம் தமிழகத்தின் நியாயம் எல்லா இந்தியருக்கும் புரியும்

இதனை திமுகவும் செய்யபோவதில்லை, செய்யும் திட்டமுமில்லை, அங்கு இப்பொழுது கேட்பதெல்லாம் தளபதி வாழ்க, மூன்றாம் கலைஞர் வாழ்க, அண்ணியாரேஏஏஏ

ஆக அது உருப்படாது

ராமதாஸ் ஒருவர்தான் இப்போதைக்கு ஓரளவு நல்ல கருத்துக்களை வழிகளை சொல்லும் அரசியல்வாதி ஆனால் மனிதர் பாதி வழியில் கவிழ்த்துவிடுவார்

இப்படியாக பெரும் சாதகம் உச்சநீதிமன்ற தீர்ப்பில் இருந்தும் மிக நல்லதொரு வாய்ப்பு தமிழக அரசியல்வாதிகளால் வீணடிக்கபட்டு நாசமாகிகொண்டிருக்கின்றது

காவேரியின் காய்வு தொடர்கின்றது.

Image may contain: sky, bridge, outdoor and nature
 

ஆனந்த ரங்க பிள்ளை

Image may contain: one or more people and text

17ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் பெரும் போர் ஐரோப்பியரால் நிகழ்த்தபட்டன, காரணம் அவர்களா என்றால் இல்லை

இங்கிருந்த சிற்றரசர்கள் வாரிசு சண்டையில் அவர்கள் உதவியினை கேட்க ராபர்ட் கிளைவும் டுப்ளெவும் ஆளுக்கொரு பக்கம் குதித்தனர்

முதலில் இருவரும் ஆற்காடு நவாபின் வாரிசுகளுக்கு ஆதரவாக மோதினாலும், ஒரு கட்டத்தில் நவாபினை தள்ளிவிட்டு இவர்கள் இருவரும் பகிரங்கமாக மோதினார்கள்

இதில் சென்னை கோட்டையே சில நேரம் டூப்ளேவால் கைபற்றபபட்டது, இறுதியில் ராபர்ட் கிளைவின் அடி முன்னால் நிற்க முடியாது பிரான்ஸ் படை அன்று பிரான்சில் நடந்த குழப்பங்களாலும் தன் எல்லையினை பாண்டிச்சேரியோடு சுருக்கிற்று

இன்றும் பாண்டிச்சேரியில் டூப்ளே சிலை உண்டு

இந்த ஐரோப்பிய காலணியாக்கத்தை நமக்கு யார் வரலாறாக கொடுத்தவர் என்றால் டூப்ளேவின் மொழிபெயர்ப்பாளராக இருந்த சில தமிழர்கள்

அவர்கள் அன்றாடம் நடந்த நிகழ்வுகளை எழுதி வைத்திருக்கின்றார்கள்

இதனால்தான் எப்படி ஆங்கிலேயன் காலூன்றினான், எப்படி பிரென்ஞ்படை பின் வாங்கியது? ஏன் ஆங்கில ஆட்சி ஏற்பட்டது பிரென்ஞ் ஆட்சி ஏன் இந்தியாவில் மலரவில்லை என பல கேள்விகளுக்கு விடை கிடைக்கின்றது

அன்றைய டெல்லி சுல்தான், நவாப், தமிழக பாளையத்தார் என பல வரலாறுகளை அது வெளிச்சம் போட்டு காட்டுகின்றது

மாவீரன் மருதநாயகம் பற்றிய குறிப்புகளை இவர்கள்தான் எழுதி வைத்தார்கள்

அவர்களில் ஒருவர் ஆனந்தரங்கம் பிள்ளை, அன்றே சில மொழிகள் படித்தவர். முதலில் சென்னை கோட்டையில் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் அப்பொழுது அங்கு வந்தவனே ராபர்ட் கிளைவ்

இவர் மூலமே தமிழக நிலவரத்தை அறிந்தான் கிளைவ்

சென்னை கோட்டையினை பிரென்ஞ்படை பிடித்தபொழுது பிரென்ஞ் பக்கம் சென்றார், அம்மொழியும் அவருக்கு தெரிந்திருக்கின்றது. அவர் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர்

அன்றைய அரசுபணிக்கு அது அவசியமாகவும் இருந்தது.

1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார் என்பதுதான் இவரின் சாதனை

அவர் கடமைக்காக எழுதினாலும் பின்னாளில் அது பெரும் வரலாற்று பெட்டகம் ஆனது

அந்த காலகட்டத்தை கண் முன் நிறுத்தும் பெரும் கல்வெட்டாக அவரின் நாட்குறிப்பு நிற்கின்றது

இந்தியா ஆங்கில அடிமையான அந்த தொடக்க காலங்கள் சுவாரஸ்யமானவை, துரோகம், அவமானம், வீரம் என எல்லாம் கலந்த கலவை

அந்த சரித்திரத்தை நமக்கு பதிந்து தந்தவர் ஆனந்தரங்கம் பிள்ளை

இன்று அவருக்கு பிறந்தநாள். அந்த வரலாற்று தமிழனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

 

மலேசிய இந்தோனிசிய இந்திய தமிழர் தனவனம்

Image may contain: 1 person, standing

மனிதர்களில் சுவாரஸ்யமானவர்கள் இருக்கின்றார்கள், காலம் வரும்பொழுதுதான் அவர்களை சந்திக்க முடிகின்றது.

அப்படி ஒரு மனிதரை நேற்று சந்திக்க முடிந்தது, பொதுவாக மலேசிய தமிழரில் ஏகபட்ட தும்பிகள் உண்டு அதனால் இவர் அழைக்கும் பொழுதெல்லாம் போனை கூட தவிர்த்தது உண்டு.

ஆயினும் இந்தோனேஷியாவில் இருந்து வந்திருப்பதால் நேற்று சந்தித்தாகிவிட்டது

பெரிய வியாழன் வேறு, செல்லும் பொழுது “பேக்கரி தொடங்கினாலும் தொடங்கினோம், பன் பட்டர்ன்னு டார்ச்சர் பண்றாங்க” என்ற வடிவேலு டயாலாக்கோடுதான் சென்றோம்

அவருடன் பேச தொடங்கினால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி, காரணம் பார்க்க வெகுபாமரன் போல இருந்த அவரின் வாழ்வும், அது திசைமாறி சென்ற விதமும் தூக்கிவாரி போட்டது

இன்று இந்தோனேஷியாவின் மிகபெரும் தொழிலதிபராக இருந்தாலும் மகா எளிமையாக அவர் பேச பேச அசந்துவிட்டேன். டாலர் பரிவர்த்தனை முதல் சர்வதேச அரசியல் , உலக நாட்டு கலாச்சாரம் என பலவற்றையும் விரல் நுனியில் வைத்திருக்கின்றார்

அவர் மலேசிய பிறப்பு , ஆனால் 11 வயதில் 1960களில் சொந்த ஊரான முசிறிக்கு வந்திருக்கின்றார் அங்குதான் படித்திருக்கின்றார், அப்பொழுது அரசியலிலும் குதித்திருக்கின்றார்

அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி போன்றோருடன் எல்லாம் நெருங்கி பழகி இருக்கின்றார், சுத்தமான திமுக‌

அதுவும் 1970 முதல் 1977 வரையான காலங்களில் கடும் திமுக பிரச்சாரம் எல்லாம் செய்திருக்கின்றார், அவர் இதயம் இப்பொழுதும் கலைஞர் என்றே துடிப்பதை உணரமுடிகின்றது

1980ல் மலேசியா திரும்பினார், அவருக்கு அப்பொழுது அங்கு ஒட்டமுடியவில்லை. தமிழகத்தில் வளர்ந்த பலருக்கு மலேசிய தமிழரோடு எளிதில் ஒட்டமுடியாது அச்சிக்கல் அவருக்கும் வந்ததால் ஹாங்காங் சென்றிருக்கின்றார்

அது பிரிட்டனின் ஹாங்காங் என்பதால் அவருக்கு ஐரோப்பா எளிதாயிற்று, அங்கு ஆஸ்திரியாவில் 4 வருடம் படித்திருக்கின்றார், அதன் பின் ஜெர்மனியில் உலோகவியல் படித்து அமெரிக்காவில் 4 வருட வேலை

இக்காலங்களில் உலகெல்லாம் சுற்றி இருக்கின்றார், அவர் காலடி படாத நாடு இல்லை, பின்பு கார்மென்ட் தொழிலுக்கு தோதான நாடு என இந்தோனேஷியாவினை கண்டு அங்கு தொழிற்சாலை அமைத்து செட்டில் ஆகிவிட்டார்

மனைவி சிங்கபூர்காரர், அந்நாட்டு உள்துறையில் பெரும் பதவி வகிப்பவர்

மனிதரிடம் பேச பேச விஷயங்கள் கொட்டி வந்தன, அபூர்வ தகவல்கள், அட்டகாசமான உண்மைகள். விட்டால் 1 வருடம் தூங்காமல் பேசலாம் அவ்வளவு நுட்பமான தகவல்கள்

அவருடன் பேசியபின் இந்தோனேஷியா பற்றிய அபிமானம் மாறியது, அந்நாடு பிறக்கும் குழந்தைக்கெல்லாம் 1 ஏக்கர் கொடுக்குமாம், இன்னும் சலுகைகள் ஏராளம் உண்டாம்

மிக பெரிய பெட்ரோல் ரிசர்வ் அங்குதான் உண்டு. ஆனால் சர்வதேச அரசியல் அதனை முடக்கி வைத்திருக்கின்றது என்றார், பின்னாளில் இந்தோனேஷியா அரபுநாடுகள் போல் ஆகலாம், இந்தோனேஷியா பின் தங்க அங்கு மக்களின் பேராசை இன்மையும் இன்னொரு காரணம், அமைதியான இயல்பான வாழ்க்கை அவர்களுடையது

கார்மென்ட் தொழிலில் அவர்கள்தான் முண்ணணி

லத்தீன் அமெரிக்கா பற்றி பேச்சு வந்தது, இவருக்கு அங்கும் தொழில்கள் உண்டு, அது ஒருமாதிரி இமேஜ் உள்ள நாடுகள் என்பதால் அதுபற்றி கேட்டால் சொன்னார்

மெக்சிகோ போதை பழக்கமும், குண்டர் கும்பலும் உள்ள நாடு என்பார்கள், ஆனால் எல்லா உணவகங்களிலும் தனி மேஜை இருக்கும், எதற்கு என்றால் உணவில்லாதோர் அங்கு வந்து உண்ணலாம், அதை கவனிக்கும் மற்ற மேஜையில் சாப்பிடும் மக்கள் அவர்களுக்கும் சேர்த்து பணம் கொடுப்பார்கள்

இதனால் அங்கு பிச்சைக்காரர் குறைவு, தாங்கள் சாப்பிடும் உணவை வசதியற்றோரும் சாப்பிடவேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் அவர்களிடம் உண்டு என்றார்

லத்தீன் அமெரிக்க நாடுகளை சர்வதேச அரசியலும் அவர்கள் ஊடகங்களுமே அப்படி பேச வைக்கின்றன என்பது அவர் கருத்து

சீனா, ஜப்பான் பற்றி அவர் பேச பேச ஆச்சரியாய் இருந்தது. உண்மையில் பெரும் அனுபவம் வாய்ந்த நபர்

ஒருவழியாக பேசிவிடைபெறும் பொழுது கேட்டேன், உலகெல்லாம் சுற்றி இருக்கின்றீர்கள், பல தொழில்களை செய்து சம்பாதித்திருக்கின்றீர்கள், உங்கள் வாழ்வின் மகிழ்வான காலம், துக்கமான காலம் எது?

அவர் சொன்னார், “நான் அன்பில் தர்மலிங்கத்தோடு உழைத்த அந்த 1970களின் திமுக பிரச்சார காலங்கள் என் வாழ்வின் மகிழ்வான காலம்

1977ல் திமுக தோற்றது என் வாழ்வின் மிக சோகமான காலம்” சொல்லும்பொழுதே அவர் குரல் உடைந்தது

மனிதர் மனமார திமுகவினை நேசிக்கின்றார்.

கலைஞரை சந்தித்தீர்களா என்றேன்? “நான் இளைஞனாக திமுக வெறியில் இருந்தபொழுது தள்ளி இருந்து பார்த்தேன், அதன் பின் நானும் வெளியேறிவிட்டேன்”

“ஏன் இனி சந்திக்க கூடாதா?” என்றேன், அவர் மெதுவாக சொன்னார்

“சந்திக்கலாம், ஆனால் பார்த்துவிட்டு உயிரோடு திரும்புவேனா என்ற சந்தேகம் இருக்கின்றது, எப்படி எல்லாம் மாபெரும் நெருப்பை மூட்டிய மனிதன் அவர். உணர்ச்சி கொடுத்த கடவுள் அவர். இக்கோலத்தில் அவரை பார்த்துவிட்டு நெஞ்சு வெடிக்காமல் திரும்ப முடியும் என்கின்றீர்களா?”

கலைஞர் எனும் மனிதர் எத்தனை கோடி மனிதர்களை பாதித்திருக்கின்றார், உலகமெல்லாம் சுற்றிய மனிதனை கூட இளவயதில் பாதித்த தன் நினைவுகளால் கட்டி போட்டிருக்கின்றார்

நிச்சயமாக சொல்லலாம், இம்மாதிரி தொண்டர்கள்தான் திமுகவின் பலம். 1960களில் திமுக எவ்வளவு பெரும் பாதிப்பினை உண்டு பண்ணியிருக்கின்றது என்பது தெளிவாக புரிகின்றது

அவருடன் பேசிகொண்டிருந்த பொழுது அந்த அன்பில் தர்மலிங்கம் காலத்து திமுகவில் வாழ்ந்தது போலவே இருந்தது

நள்ளிரவு வரை நீண்ட சந்திப்பு பிரிய மனமில்லாமல் முடிந்தது, கிளம்பும் பொழுதுதுதான் அவர் காரில் வரவில்லை என்பது புரிந்தது

இந்த கோலாலம்பூரில் எல்லோரும் கார் வைத்திருப்பார்கள், அவர் இந்தோனேஷியாவில் இருந்து இங்கு பிரபல கார் கம்பெனி அழைத்ததால் வந்தவர், ஒரு கார் என்ன? பல கார்கள் கிடைத்திருக்கும்

ஆனால் அவரோ தெருவெல்லாம் என்னோடு நடந்தார், வாடகைக்கு பென்ஸ் கூட கிடைகுக்குமே ஏன் காரில் வரவில்லை என்றேன்?

அவர் சொன்னார் “ஸ்டான்லி ராஜன், இதே கோலாலம்பூரில் சைக்கிள் கூட இல்லாமல் சிறுவயதில் நடந்தேன், பின்பு வேலை தேடி வந்தபொழுதும் நடந்தேன்

இங்கு கார்வோட்டி பழகினால் அந்த நினைவு அற்றுபோகும், அந்த நினைவோடு இங்கு நடந்து திரிவது ஒரு சுகம். அதில் ஒரு திருப்தி உண்டு, அதனால்தான் கோலாலம்பூர் தெருக்களில் காரில் வருவதில்லை, அந்த இளம் நினைவுகளுக்கன மரியாதை அது”

அதற்கு மேல் ஏதும் கேட்க தோன்றவில்லை, யாரோ கன்னத்தில் அடித்தது போல் இருந்தது

மிகபெரும் பண்பாளரை சந்தித்த மகிழ்ச்சியில் திரும்பினேன், எவ்வளவு பெரும் அனுபவசாலி? எவ்வளவு பெரும் தொழிலதிபர்

ஆனால் எவ்வளவு எளிமை, எவ்வளவு அமைதி?

கேட்டால் நான் கலைஞர் தொண்டன் சார், தலைவன் வழி இதுதான் என அமைதியாக சொல்லி கடந்து செல்கின்றார்

கலைஞருக்கு இதனை விட என்ன பெருமை வேண்டும்?

முகநூலில் இப்படிபட்ட நண்பர்களும் கிடைத்தார்களா? என்றால் எனக்கே ஆச்சரியமாக இருக்கின்றது

எழுதி என்ன கிழித்தோம் என அடிக்கடி சலிப்புறும் மனம், இப்படிபட்ட பெரும் மனிதர்கள் நண்பர்களாக கிடைத்தது எழுதியதால்தான் என ஆறுதலும் கொண்டது

காலம் அவருக்கு எல்லா நலமும் வளமும் அருளட்டும், அவரின் மனதிற்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

 
 

திரு திரு சீமான்

Image may contain: 2 people

“அத்தான் உங்க போக்குல காவேரி நீரை கொடுக்காத கன்னடத்தை காலி செய்து மானமுள்ள தமிழ்பிள்ளைகள் வெளிவரவேண்டும் என சொல்லிவிடாதீர்கள், வந்து பிய்த்துவிடுவார்கள்

அடியே தமிழ்பொண்டாட்டி, சிங்களரின் கொழும்பை விட்டு மான தமிழர் வெளியேறவேண்டும் என என் அண்ணன் சொன்னானா?

இல்லை ஈழதமிரருக்கு நீதிவழங்கா அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன், பிரான்ஸ், கனடா எல்லாவற்றையும் விட்டு தமிழர் கிளம்ப வேண்டும் என நான் தான் சொன்னேனா?

சொன்னால் 4 காசு வந்திருக்குமா?”


Image may contain: 1 person, close-upஅண்ணே, ஈழத்தில் எத்தனை மாவீரர்கள் தற்கொலை படையாக வெடித்தார்கள், வீரகாவியம் படைத்தார்கள். அவர்கள் மானமும் வீரமும் கொண்டவர்கள்.

Image may contain: 1 person, outdoorஅங்கே அக்கா, தங்கச்சி , அண்ணன், தம்பி எல்லாம் சயனைடு கடிச்சி செத்தாங்க , தற்கொலைபடையா செத்தாங்க. அவ்வளவும் வீரம்ணே.

இங்கே இந்த அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்ய என்ன தயக்கம்? மானமில்லையா? வீரமில்லையா?

அண்ணன் பிரபாகரன் தம்பியாக சொல்கின்றேன் சயனைடு தின்று செத்து வீர தமிழன்னு காட்டுங்கடா, நல்ல தமிழனுக்கு பொறந்தா சாவுங்கடான்னு சொல்லுங்கண்ணே

சீக்கிரம் சொல்லுங்கண்ணே சாகட்டும்..”