மிக மிக கொடுமையான விஷயம் இது… மெல்ல மெல்ல விஷயம் பற்றி எரிகின்றது

Image may contain: 1 person

MP மாநிலத்தில் போலிஸ் தேர்வு நடந்திருக்கின்றது, இட ஒதுக்கீடு எல்லாம் உண்டல்லவா அதனால் என்ன செய்திருக்கின்றார்கள்?

தேர்வுக்கு வந்த இளைஞர்கள் நெஞ்சின் மீது மார்க்கர் பென்னால் எஸ்சி, எஸ்டி என எழுதி நிறுத்தி இருக்கின்றார்கள், ஆடு மாடுகளை இனவாரி பிரிப்பது போல் பிரித்து நிறுத்தியிருக்கின்றார்கள்

இவை எல்லாம் மன்னர் காலங்களிலும், சாதிகொடுமை உச்சத்தில் 
அவர்கள் கலாச்சாரம், அவர்கள் சிந்தனை இவ்வளவுதான். இப்படித்தான் அவர்களால் யோசிக்க முடியும்

மிக மிக கொடுமையான விஷயம் இது, மெல்ல மெல்ல விஷயம் பற்றி எரிகின்றது

தமிழகத்திலும் 90 ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் இருந்தது, நீதிகட்சி, பெரியார் , திமுக எல்லாம் உருவாகி அதனை ஒழித்து இன்று ஓரளவு பாதுகாப்பும் நாகரீகமும் உள்ள மாநிலமாக இது திகழ்கின்றது

திராவிடம் என்ன செய்தது என்றால் இம்மாதிரி விஷயங்களை இங்கு கனவிலும் செய்யமுடியாத அளவு தன்மான சூழலை உருவாக்கி இருக்கின்றது, மறுக்க முடியாது

MP பக்கம் அப்படி யாரும் வரவில்லை, அந்த காட்டுமிராண்டிதனம் இன்னும் தொடர்கின்றது.

சுயமரியாதை என்றால் என்ன? எதற்காக பலர் இங்கு தன்மானம், சுயமரியாதைகாக போராடினார்கள் என்பதை நாமெலாம் விளங்கிகொள்ளும் நேரமிது

இன்று மாலை கவர்னரை சந்திக்கின்றார் முதல்வர் பழனிச்சாமி

Image may contain: 2 people

இன்று மாலை கவர்னரை சந்திக்கின்றார் முதல்வர் பழனிச்சாமி

“என்ன தவம் செய்தேனோ ஜெயா இருக்கும்பொழுது நான் கவர்னராக இல்லை, அப்படி இருந்திருந்தால் சென்னா ரெட்டி பட்ட பாட்டிற்கு நானெல்லாம் என்ன பாடு பட்டிருப்பேன் எம்பெருமானே….”

டால்மியா கோட்டை

Image may contain: outdoor

டால்மியா என்பவர் மிகபெரும் சக்தி, அவர்குழுமம் தமிழ்நாட்டில் கல்லகுடியினை டால்மியாபுரம் என மாற்றியபொழுது தன்மானத்தோடு பொங்கி எழுந்தது தமிழகம், உபயம் திமுக‌

இன்று டெல்லி செங்கோட்டையின் பராமரிப்பு பொறுப்பை டால்மியாவிடம் மோடி அரசு கொடுக்கின்றதாம், பிண்ணணி காரணம் அந்த டால்மியா விஸ்வ ஹிந்து பரிஷத் அனுதாபியாம்

கல்லகுடியில் டால்மியாவினை விரட்டிய திமுக எங்கே? பெரும் பாரம்பரியமிக்க செங்கோட்டையினை இனி டால்மியா கோட்டை என மாற்ற துடிக்கும் பாஜக எங்கே?

இனி செங்கோட்டையினை விற்ற கட்சி என்ற அவப்பெயரை சுமக்க தயாராகின்றது பாஜக‌

கல்லகுடியில் இழந்ததை மதவாத சக்தி மூலம் செங்கோட்டையில் பெறுகின்றது டால்மியா குழுமம்

அது இனி டால்மியா கோட்டை என மாற்றம்பெற்றாலும் ஆச்சரியமில்லை, தண்டவாளத்தில் தலைவைத்து போராட அங்கு கலைஞரா உண்டு?

 

சொன்னபடி வோட்டுக்கு பணம் தரவில்லை தினகரன்

Image may contain: 2 people, people smiling, text

வோட்டுக்கு பணம் தரவில்லை தினகரன் என ஆர்.கே நகரில் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள்

இந்த மாபெரும் அவமானத்தை கண்டும் காணாமல் இருக்கின்றது தேர்தல் ஆணையம்

அதன் பணி தேர்தலை நடத்துவதோடு சரி என நினைத்துவிட்டது போல, இப்படி ஆம் பணம் தருவதாக சொன்னார் அதனால் வாக்களித்தோம் என பகிரங்கமாக சொன்னபின்னும் , ஆதாரங்களோடு வந்து நின்றபின்னும் ஏன் தேர்தல் கமிஷன் தூங்குகின்றது

நல்ல நாடாக இருந்தால் இந்நேரம் தினகரனின் எம்.எல்.ஏ பதவி முடக்கபட்டிருக்க வேண்டாமா?

ராமர்கோவில் கட்டுவோம், ஆளுக்கு 15 லட்சம் தருவோம் என ஆட்சிக்கு வந்த கட்சி இன்னும் ராமர்கோவி கட்டியா இருக்கின்றது?

இல்லை 15 லட்சம் தந்துவிட்டதா?

அதுவே ஆசைகாட்டி ஏமாற்றும் கட்சி எனும்பொழுது தினகரனை அது எப்படி தண்டிக்கும்?

எனினும் தேர்தல் ஆணையம் இந்த ஆர்.கே நகர் உரிமை மீட்பு போராளிகளின் கோரிக்கையினை கொஞ்சம் கவனிப்பது நல்லது

 

ஸ்ரீ லங்கா வில் புடவையை ஆபாச உடை என்று போராட்டம்

Image may contain: 1 person, standing

இலங்கை சேலை எதிர்ப்பு என்பது விஷயம் என்பது சாதாரண விஷயம் அல்ல, இது பல பின்னணிகளை கொண்டது

விஷயம் கொஞ்சம் ஆழநோக்க வேண்டியது, எவ்வளவு ஆழம் என்றால் 100 ஆண்டுகளுக்கு முன்பானது

அன்று தமிழகமும் இலங்கையும் சைவ பூமியாக இருந்து கிறிஸ்துவ மத இன்ன பிற சக்திகளை எதிர்த்து போராடிகொண்டிருந்தது, அவர்களுக்கு கத்தோலிக்கமும் இங்கு பிரிவினை கிறிஸ்தவமும் சவால்கள்

சைவ பூமி என்றால் சாதி வன்மங்கள் உட்பட எல்லாம் இருந்தன‌

இதனால் இந்து கல்லூரிகளும் உடை கட்டுப்பாடுகளும் அன்றே இருபக்கமும் இருந்தன‌

இங்கு திராவிட சக்தியும், இலங்கையில் இன்னபிற சிக்கலும் வந்த காலத்தில் இவை எல்லாம் அடங்கின‌

இன்று இங்கு திராவிடம் பின்னடைந்து, ஈழத்தில் புலிகட்டுபாடு நீங்கி அமைதியும் திரும்பிய நிலையில் மறுபடியும் மதவாத சக்திகள் தலை தூக்குகின்றன‌

தமிழகத்திலும், இலங்கையிலும் அச்சக்திகள் ஓசைபடாமல் தலை தூக்குகின்றன, மறுபடியும் அவை தங்கள் கரங்களை இறுக்குகின்றன‌

உதாரணம் வேண்டுமென்றால் அங்கிள் சைமன் வேல் தூக்கி முப்பாட்டன் முருகன் என குதிப்பது இதனால்தான்,

அவர் என்ன செய்வார் பாவம், கோலை நீட்டினால் குதித்துத்தான் ஆகவேண்டும்

இப்பொழுதெல்லாம் யாழ்பாணம், கிழக்கு இலங்கையில் இந்து மதவாத சக்திகள் அதிகம், சிவசேனை கூட கடை திறந்து அல்ல கிளை திறந்துவிட்டது

கொஞ்ச நாளைக்கு முன் யாழ்பாண கல்லூரியில் ஆடைகட்டுபாடு வந்ததும், சர்ச்சை வந்ததும் செய்திகள்

இப்பொழுது விவகாரம் கிழக்கு பக்கம் வந்திருக்கின்றது, இஸ்லாமிய பேராசிரியை வேலை செய்யும் இந்து கல்லூரிகளில் அவர்களின் இஸ்லாமிய உடை தவிர்த்து சேலை அணிய நிர்பந்திக்கபட்டிருக்கின்றனர்

விஷயம் இங்கிருந்துதான் தொடங்கிற்று

இலங்கையில் இன ரீதியான மோதல் உண்டே தவிர ஆடை கட்டுபாடு எல்லாம் எக்காலமும் இல்லை. இஸ்லாமிய நிறுவணங்களில் இந்துபெண்கள் சேலை கட்டி செல்லும்பொழுது ஏய் “ஹபாயா” ஆடை அணிந்து வா என எந்த இஸ்லாமியனும் சொன்னதில்லை

இப்பொழுது இஸ்லாமிய பெண்கள் சேலை கட்டிவரவேண்டும் என மிரட்டபடும்பொழுதுதான், எங்கள் மத உடை ஏன் மாற்றபட வேண்டும் என சர்ச்சை வெடித்தது அது சேலை ஆபாசமா? இஸ்லாமிய உடை ஆபாசமா என திசை திரும்பி செல்கின்றது

இஸ்லாமிய பெண்கள் இந்துக்கள் கல்லூரியில் இஸ்லாமிய உடையில் வர தடை விதிக்கபட்டு சிலர் அதை கொச்சைபடுத்தியதிலே விஷயம் வெடித்தது

சேலை, ஹபாயா இரண்டுமே கண்ணியமான உடை என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

எனினும் இலங்கையில் பரவும் இந்துத்வா பிற்போக்கு சக்திகள் இதனை சர்ச்சையாக்குகின்றன‌

இந்துத்வா தன் கொடுங்கரங்களை இலங்கையில் பரவிடுவதை சிங்களம் ரசிக்குமா என்றால் ரசிக்காது, பின் ஏன் ஹம்பாந்தோட்டா சீனன் பக்கம் செல்லாது

வரலாற்றை மாற்ற நினைக்கின்றோம் என தமிழகத்தில் எச்.ராசா , எஸ் வீ சேகர் எல்லாம் அடிவாங்கலாம், ஆனால் அது ஈழத்தில் ரகசியமாக செய்யபடுகின்றது

இங்கும் அங்கிள் சைமன் முப்பாட்டன் முருகன், பெரியாத்தா கண்ணகி என குஸ்திகாட்டும் விவகாரமும் இதுதான்

முருகனுக்கும், கண்ணகிக்கும் இலங்கையில் பெரும் ஆலயங்கள் உண்டு

எல்லா கணக்குகளையும் ஒரே புள்ளிக்கு கொண்டுவாருங்கள், பெரும் திட்டத்தோடு இந்துத்வா கும்பல் ஊடுருவியிருப்பது தெரியும்

அது இங்கு காமெடியானாலும் இலங்கையில் பற்றி எரிய தொடங்கிவிட்டது

இதனை மறைத்துவிட்டு சேலை ஆபாசம் என இஸ்லாமியர் பொங்குகின்றார்கள் என இங்கு இஸ்லாமிய வெறுப்பு விதைக்கபடுகின்றது

இச்சதியில் தமிழர்கள் மிக கவனமாக இருப்பது நல்லது, முப்பாட்டன் முருகன் என குதிப்போர் யாரின் கைகூலி என இனியாவது தமிழகம் புரிந்துகொள்ளட்டும்

தமிழர் எல்லாம் இந்துக்கள், இந்துக்களாக மதரீதியாக எழும்பினால் தமிழன் உலகாள்வான், விண்வெளி ஆள்வான் எனும் விஷ கருத்து விதைக்கபடுகின்றது

இந்த வீரதமிழர் முண்ணணி, வீர சைவர், வீர வைணவர் என பல கோஷ்டிகள் உருவாவது இதனால்தான்

பெரியார், கலைஞர் போன்றோரை இவர்கள் குறிவைத்து அடிப்பதும் இந்த பின்னலில்தான்.

இது இப்பொழுது உணராவிட்டாலும் விரைவில் நிச்சயம் உணர்வீர்கள்

 

 


Image may contain: 1 person, crowd

 

ஸ்ரீ லங்கா வில் புடவையை ஆபாச உடை என்று போராட்டம் : செய்தி

இலங்கையர்கள் ஆடையில் முன்பு சேலை முக்கிய பங்கு வகித்தாலும், வெள்ளையர வரவுக்கு பின் அவர்கள் பாணி மாறியது குறிப்பாக வடக்கில் தமிழர் இடங்களில் மாற்றம் வந்தது அது சிங்கள தரப்பிற்கும் வந்தது

மிக மாடலாக உடை அணிபவர்கள் என அன்றே அவர்களுக்கு பெயரும் இருந்தது

என்னதான் மார்டன் என்றாலும் பட்டு முதலான சேலைகளுக்கு இன்றும் அங்கே மார்க்கெட் தனி, பெரும் சந்தை அது

சேலை ஒன்றும் ஆபாச உடை அல்ல, அணியும் விதத்தை பொறுத்தது அது. முறையாக அணிந்தால் அதை விட பாதுகாப்பான உடை பெண்களுக்கு இல்லை

இப்பொழுது என்ன சிக்கல் என்றால், இன்று இலங்கையின் மிக முக்கிய தொழில்களில் இன்று ரெடிமேட் ஆடைகள். அந்த கும்பலுக்கு எப்படி சேலை பிடிக்கும்?

அதனால் ஆளாளுக்கு இறங்கிவிட்டார்கள்

இப்பொழுது உலகில் எங்கு போராட்டம் நடந்தாலும் அதன் பின்னால் சில வியாபாரி இருக்கின்றான். இலங்கை மட்டும் விதிவிலக்கா என்ன?

நல்ல வேளையாக இந்த போராட்டம் இலங்கையில் நடக்கின்றது

தமிழகம் என்றால் கேட்க வேண்டுமா? சேலை கட்டும் போராட்டம் என சொல்லி, சில பெண்களுக்கு அவர்கள் வராவிட்டால் ஆண்களுக்கே நடுரோட்டில் சேலை கட்டுவார்கள் போராளிகள்.

சகிக்குமா?

 
 

சங்கத் தொழிலாளிகளுக்கு மே தின வாழ்த்துக்கள்

Image may contain: 1 person, sitting

உலகெல்லாம் தொழிலாளர் தினம் கொண்டாட தொடங்கியாயிற்று

எங்கெல்லாம் தொழிலாளர்கள்,பாட்டாளிகள், தங்கள் முதலாளிகளுக்கும் எஜமானர்களுக்கும் உழைத்து களைக்கின்றார்களோ, அவர்களெல்லாம் இது நமக்கான நாள் என கொண்டாட தொடங்கிவிட்டனர்

சங்கமும் குஷ்பு எனும் பெரும் எஜமானியின் நலனுக்காக உழைத்துகொண்டிருகின்றது என்பது ( அவரை தவிர ) எல்லோரும் அறிந்த விஷயம்

தலைவி குஷ்புவின் நல்வாழ்விற்காக அயராது பாடுபடும் சங்கத்து தொழிலாளர்கள் எல்லோருக்கும் “தொழிலாளர் தின” வாழ்த்தை தெரிவிப்பதில் சங்கம் பெருமை அடைகின்றது.

செம்மொழி விருது தமிழுக்கு இல்லை

மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகம் ஜனாதிபதி விருதுகளை அறிவித்திருக்கின்றது, இதில் செம்மொழி தகுதி பெற்ற தமிழர்களுக்கும் விருது முறைப்படி உண்டு

இதி செம்மொழி என சொல்லபட்டுள்ள சமஸ்கிருதம், பாலி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என சில மொழி விற்பனருக்கு விருது அறிவிக்கபட்டாயிற்று

ஆனால் தமிழில் யார் பெறுவார் என அறிவிப்பே இல்லை, சுருக்கமாக சொன்னால் தமிழில் விருது இல்லை

சும்மாவே அதிகாலை சேவலுக்கு முன்பாகவே எழுந்து இன்று எதிலாவது மத்திய அரசு சிக்காதா என வாசலில் காத்த்திருப்பவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் விடுவார்களா?

மத்திய அரசின் தமிழ் வெறுப்பு தொடர்கின்றது என பெரும் சத்தம் ஆரம்பித்தாயிற்று

தமிழில் விருதுபெறும் தகுதியானவர் உண்டா என்றால் உண்டு, ஆனால் அதை உருப்படியாக அரசியல் கலப்பின்றி கொடுக்க முடியுமா என்றால் முடியாது

விருது அறிவிப்பு என சொன்னால் தமிழறிஞர் பழனிச்சாமி என்றொருவர் இருக்கின்றார், புத்தகம் எல்லாம் எழுதியிருகின்றார் என மாநில அரசு சொல்லும்

அது யாரென விசாரிக்க மத்திய அரசு குழு முதல்வரிடம் கேட்டால் “ஹிஹீஹ அது நானே” என்பார் பழனிச்சாமி, மத்திய குழுவிற்கு எப்படி இருக்கும்?

மாநில அரசு பழனிச்சாமி, கோகுல இந்திராவே முத்தமிழ் அறிஞர் என சொல்லும்

இன்னொரு தரப்பு இரண்டாம் கலைஞர் ஸ்டாலின் பொருத்தமானவர் என சொல்லும், அதிலும் ஒரு தரப்பு மூன்றாம் கலைஞரே செமொழி ஆசான் என உரண்டு புரண்டு கத்தும்

கனிமொழி முறைக்கலாம்

இதில் மனுஷ் வேறு கவிதை எழுதி அழிச்சாட்டியம் செய்வார் , கஸ்தூரி வேறு கவிதை களத்திற்கு வந்துவிட்டது

திராவிட செல்வன் தினகரனுக்கு செம்மொழி விருது இல்லையா என ஒருகுரல் கேட்டால், முக ஸ்டாலினுக்கு இல்லாத விருது என் மீசைக்கு சமம் என கலிங்கபட்டி சிங்கம் உறுமும்

வைரமுத்து தூதுமேல் தூது விட்டு பார்ப்பார்.

இது போக ராமதாஸ், திருமா எல்லாம் ஆளாளுக்கு ஒருவரை காட்டுவார்கள், சைமன் எங்க அண்ணன் காசியானந்தனுக்கு ஏன் கொடுக்கவில்லை என புரள்வார்

ஜெயமோகன் கோஷ்டி ஆசான், தேவதேவன் என புதுபுது தமிழறிஞர்களை எல்லாம் இழுத்து வரும், அதை படித்தால் இதுவா செம்மொழி என தமிழுக்கான அங்கீகாரமே ரத்தாகும் ஆபத்தும் உண்டு

அப்படியான கொடுந்தமிழ் எழுத்தாளர், கவிஞர்கள் இப்பொழுது ஏராளம்

இதெல்லாம் கடந்து தமிழக பாஜகவிடம் நம்ம பக்கம் யாரும் தமிழறிஞர் உண்டா என கேட்டால், தமிழறிஞர் என்ன தமிழிசையே உண்டு என அம்மணி சிரித்தால் என்னாகும்?

பின் யாருக்கு கொடுப்பார்கள்

நாளையே தமிழருக்கு செம்மொழி விருது உண்டு என அரசு அறிவிக்கட்டும், இங்கு ஆளாளுக்கு இவருக்கு கொடு அவருக்கு கொடு என கும்மியடியில் இறங்கமாட்டார்களா?

இதை உணர்ந்தோ என்னமோ தமிழுக்கான செம்மொழி விற்பனர் விருது வழங்கபடவில்லை

தமிழில் ஏகபட்ட தமிழிழின உணர்வாளர்கள் அவர்களின் படைப்பின் மூலம் விருதுவாங்க தகுதி உள்ளவர்கள்

ஆனால் ஒரே ஒருவர் அரசியல் காரணங்களுக்காக புறக்கணிக்க படுகின்றார். தேசிய விருது முதல் பத்ம விருதுவரை அரசியல் ஒன்றே அவருக்கான அங்கீகாரத்தை பறிக்கின்றது

அது , நிச்சயம் Kavignar Thamarai செம்மொழி விருது பெறும் பட்டியலில் அவருக்கும் இடம் உண்டு

செம்மிழியினை கொண்டு பாடல் எழுதும் ஒரே கவிஞர் அவர்தான், செம்மொழியினை 100% பயன்படுத்தும் ஒரே படைப்பாளர் அவர்தான்

ஆனால் அரசியலில் ஊறிவிட்ட அமைப்பில் அதனை எல்லாம் எதிர்பார்க்க முடியாது

செம்மொழி விருது தமிழுக்கு இல்லை என மத்திய அரசு அடுத்த ஆட்டத்திற்கு வழிவைத்தாயிற்று

நிச்சயம் சொல்லலாம் மத்திய அரசு தீபாவளி மூடில் இருக்கின்றது, அது கொளுத்திவிட இங்கோ கடும் ஆரவாரம்

பல புஸ்வானங்கள் பார்த்துவிட்ட நிலையில், இதோ அடுத்த சங்கு சக்கரம் செம்மொழி விருது பெயரில் வருகின்றது

பார்த்து மகிழ மத்திய அரசு ரெடி..

இந்த சர்ச்சை பற்றி எரியும் பொழுது எச்.ராசாவின் அட்மின் கேட்பார், “இங்கு செம்மொழி விருது பெற எவன் இருக்கின்றான், ஒரு பயலுமில்லை..”

அத்தோடு அடுத்த சரவெடி தயார்.

 
 

கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் காவேரி இல்லை

கன்னட தேர்தலில் ராகுல் தலமையில் காங்கிரஸ் கோஷ்டி கடும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றது

பாஜக தரப்பு மோடி, அமித்ஷா, யோகி என களமிறங்குகின்றது. யோகிக்கும் கன்னடத்திற்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. உபி அரசினை போட்டுவிட்டு அந்த சாமியாரும் வந்திருக்கின்றார்

 

இப்படி இருதேசிய கட்சிகளும் வரிந்து கட்டி கன்னடத்தில் பிரச்சாரத்தில் நிற்கும்பொழுது ஒரு விஷயத்தை அப்படியே இருவரும் மறைக்கின்றார்கள்

அது காவேரி விவகாரம்.

தொட்டால் அவ்வளவுதான் என்பதால் இருவருமே அதை மறைத்து வேறு என்னமோ அணல் பிரச்சாரம் செய்கின்றனர்

நல்ல பத்திரிகையாளர்கள் என்றால் மெதுவாக தேர்தலில் வென்றுவிட்டால் காவேரி சிக்கலை எப்படி தீர்ப்பர்கள் என இருவரிடமும் கேட்கலாம்,

கேட்டு சிக்கலில் மாட்டி விடலாம்

ஆனால் கவுரி கொலை முதல் பல பத்திரிகையாளர் கொலைகள் அப்படி கேட்க தடுக்கின்றன போல..

“இந்தியர்களுக்கு ஆள தெரியாது, அவர்களை பற்றி பேசாதே” என்றான் ஹிட்லர்

தன்னிடம் இந்திய விடுதலை பற்றி பேசிய சென்பகராமனிடம் “இந்தியர்களுக்கு ஆள தெரியாது, அவர்களை பற்றி பேசாதே” என்றான் ஹிட்லர்

பின் நேதாஜியிடம் “போரில் வென்றால் இந்திய அதிபராக இரும்புகரம் கொண்டு அந்நாட்டை நடத்து, ஜனநாயகம் என்பது இந்தியருக்கு புரியாது” என்றான் அதே ஹிட்லர்

“இன்று சுதந்திரம் கேட்கும் இந்திய தலைவர்களில் பெரும்பாலானோர் சுயநலவாதிகள், அம்மக்களுக்கும் ஜனநாயக மகத்துவம் தெரியாது அதனால் இந்தியா சீரழியும்” என்றார் சர்ச்சில்

“இந்தியர்கள் உணர்ச்சிபூர்வமாக சிந்திப்பார்களே ஒழிய அறிவுபூர்வமாக சிந்திப்பதே இல்லை” என்றான் இன்னொரு பிரிட்டிஷ் ராஜதந்திரி

இலங்கை முன்னாள் தளபதி பொன்சேகா நெற்றியிலடித்தார் போல் சொன்னான் ” தமிழக அரசியல்வாதிகள் பெரும் கோமாளிகள், டெல்லி ஒருநாளும் இந்த கோமாளிகளுக்கு செவி சாய்காது”

இந்தியாவினை இந்தியர் தவிர எல்லா நாட்டுக்காரனும் மிக சரியாக கணித்திருக்கின்றான் என்பதுதான் ஆச்சரியம்

இந்தியாவிலும், தமிழகத்திலும் நடக்கும் காட்சிகள் அவர்கள் சொன்னதை திரும்ப திரும்ப காதில் கேட்க வைக்கின்றன‌

அதிலும் பொன்சேகா சொன்னது மிக்க சரி.

விசித்திரமான நகரங்களில் முதலிடம் மதுரைக்கே..

மதுரையின் பிரமாண்ட திருவிழா நடந்துகொண்டிருக்கின்றது, அவ்வளவு பெரும் பக்த கூட்டம்

ஆனால் தேர்தல் என்று வந்தால் திராவிட கட்சிகள்தான் வாக்குகளை அள்ளும், ஏன் என்றால் ராமசந்திரன் காலத்தில் இருந்து செல்லூர் ராஜூ காலம் வரை அப்படித்தான்

மதுரை முத்து காலத்திலிருந்து அட்டாக் பாண்டி காலம் வரை அதன் அரசியல் விசித்திரமானது

பக்தி கொண்டாட்டம் என வரும்பொழுது பெரும் ஆரவாரம் காட்டும் மதுரை, வைகையாற்றில் அழகரை இறக்கும் அதே மதுரை சிலிர்க்க வைக்கின்றது

ஆனால் அதே மதுரை செல்லூர் ராஜுவினை கோட்டையில் இறக்கிவிட்டது என்பதுதான் திகைக்க வைக்கின்றது

விசித்திரமான நகரங்களில் முதலிடம் மதுரைக்கே..


ஏம்பா பாரதிராஜா, “காவேரி காய்ந்து கிடக்கும்பொழுது அழகருக்கு என்னடா பட்டு, மீனாட்ச்சிக்கு என்னடா கல்யாணம்..” என உங்கள் அல்ட்ராசிட்டி கோஷ்டிகளை கூட்டி சென்று அழிச்சாட்டியம் செய்தால் என்ன?

ஐபிஎல் என்றால் ஓடி சென்று தடுத்த கோஷ்டியினை அழகர் பக்கம் காணவே இல்லை..

சென்றால் என்ன நடக்கும் என்பது தெரியாத கோஷ்டியா அது, மீறி சென்றால் வைகையில் புதைத்துவிட மாட்டார்களா?