பொய்யினை களைய தோல்வியினை கூட ஏற்றது பாஜக

Image may contain: 3 people, people smiling

“அது ஒண்ணுமில்ல, வோட்டு மெஷின்ல நாம தில்லுமுல்லு பண்ணி ஜெயிக்கிறோம்னு ஒரு பேச்சு இருக்கு

அதை பொய்யாக்க உபி இடைதேர்தலில் தோற்றிருக்கின்றோம், அவ்வளவுதான்

இதை உடனே தமிழிசையிடம் சொல்லுங்கள், அதன் பின் பக்தாள் கூட்டம் உலகெல்லாம் பரப்பிவிடும்

பொய்யினை களைய தோல்வியினை கூட ஏற்றது பாஜகன்னு அடிச்சி விடுவோம்,

நம்ம வேலையே இப்படி ஏராகூடமா பொய் சொல்றதுது தானே, கட்சி அதுலதான ஓடிட்டு இருக்கு”

 

போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்ல : இயக்குனர் ப. ரஞ்சித்

Image may contain: text

அப்படி உண்மையினை ஒத்துகொள்ளும்

அது என்ன இனி எழுத்தாளன் இல்லை? உம்மை எழுத்தாளன் என சொன்னது யார்?

இன்றுமுதல் நீர் “பொறுக்கி கவிஞர் 
” என அன்போடு அழைக்கபடுவீர்.

ஏற்கனவே அடுத்தவர் கவிதையினை பொறுக்குபவர் எனும் பேச்சு இருப்பதால் மிக சரியாக பொருந்தும்

  

போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்ல : காலா பட இயக்குனர் ப. ரஞ்சித்

இவர் எப்பொழுது அவருக்கு பி.ஏ ஆனார்? அவர் சொல்வதற்கு இவர் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும்? ஆக இவரும் குருமூர்த்தி கும்பலா

தலித் வேடம் போட்ட பாஜக அடியாளா?

தெற்கே அணல் தெறிக்கின்றது, காடுவெட்டியினை பிரிந்த சோகம் மறக்க ரஜியின் சுயரூபம் தெரிந்ததா? என கிளம்புகின்றார் ராமதாஸ்

அடுத்த வாரம்தானே காலா வரும்? வரட்டும் தெரியும்

தலைவர் “செம்ம மாட்ட்டு….”.


ரஜினியினை பார்த்து எவனோ அடையாளம் தெரியாமல் “நீங்கள் யார்?” என கேட்டுவிட்டான். இதற்குத்தான் அவ்வளவு ஆர்ப்பாட்டம்.

Image may contain: 3 people, beard

1980ளில் ராமசந்திரனை பொம்மை போல் வைத்திருந்தார்கள், பொம்மை என்றால் மேக் அப், தொப்பி, கண்ணாடி, பல்செட் என வைத்து ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள்

உண்மையில் திரைபடத்தை விட முதல்வர் வேடத்தில் அட்டகாசமாக நடித்தார் ராமசந்திரன், குறிப்பாக திரை உலகை நோட்டம் பார்க்கின்றேன் என அவர்களோடு கொஞ்சிகொண்டே இருந்தார்

அண்ணனுக்கு என் மேல் அவ்வளவு பிரியம் என பாரதிராஜா, பாக்யராஜ் , சத்யராஜ் என பலர் அப்பொழுதுதான் பேச தொடங்கினார்கள். பிரியம் ஒன்றுமில்லை எல்லாம் அரசியல்

பொதுவாக ராமசந்திரனை நினைத்தவுடன் பார்க்க முடியாது, அலங்காரம் முடித்து வந்தபின்புதான் பார்க்க முடியும்

அன்றைய தினம் பிறந்தநாளுக்கு வாழ்த்து வாங்க என அந்த நடிகர் சென்றிருக்கின்றார், வாயில் காப்போன் சொல்லியும் கேளாமல் “அண்ணனுக்கு என் மேல எவ்வளவு பிரியம் தெரியுமுங்களா” என சொல்லிவிட்டு உள்ளே ஓடியிருக்கின்றார்

அங்கே கண்ணாடியின்றி, வழுக்கு தலையுடன், வாயில் பல் இன்றி ஒரு உருவம் இருந்திருக்கின்றது, எடுத்த எடுப்பில் “நீங்கள் யார்?” என கேட்டிருகின்றார் நடிகர்

அவ்வளவுதான் ராமசந்திரன் சில சமிக்கைகளை கொடுக்க அவரின் மெய்பாதுகாவலர்கள் பிடித்து சாத்தி புத்தி சொல்லியிருக்கின்றார்கள்

அதிர்ச்சி விலகாத நடிகரை பிடித்து, இப்படி எல்லாம் வர கூடாது, வெளியில் சொன்னால் நடப்பதே வேறு என சொல்லி சிரித்த முகத்துடன் அனுப்பிவைத்தார் ராமு

முதுகில் அடிவாங்கிய வலியுடன், பொன்மன செம்மல் வாழ்க, புர்ச்சி தலைவன் வாழ்க என ஓடினாராம் அந்த நடிகர்

அவர் செய்த தவறென்ன ? “நீங்கள் யார்” என மேக் அப் இல்லா ராமசந்திரனை கேட்டது

அட அவ்வளவு ஏன்? அப்பல்லோவில் ஜெயாவினை பார்க்க அனுமதித்திருந்தாலும் மேக் அப் இல்லா ஜெயாவினை பார்த்து பன்னீரும் பழனிச்சாமியும் அப்படித்தான் கேட்டிருப்ப்பார்கள்

அப்படி மேக் அப் இல்லாத ரஜினியினை பார்த்து எவனோ அடையாளம் தெரியாமல் “நீங்கள் யார்?” என கேட்டுவிட்டான். இதற்குத்தான் அவ்வளவு ஆர்ப்பாட்டம்.

 

தமிழரின் கலாச்சாரம் இந்துமத தாக்கமும் ஆழபதிந்த நாடு இந்தோனேஷியா

Image may contain: people standing, sky, outdoor and nature

இன்று இந்தோனேஷியா என்றிருந்தாலும், அது உலகின் மிகபெரிய இஸ்லாமிய நாடாக இருந்தாலும் தமிழரின் கலாச்சாரம் இந்துமத தாக்கமும் ஆழபதிந்த நாடு இந்தோனேஷியா

15 ஆயிரம் தீவுகள் உள்ள நாடென்றாலும், சில தீவிலே மக்கள் வசிக்கின்றார்கள்

சாவக தீவு ஜாவா ஆயிற்று, சு மதுரா என்பது சுமத்ரா ஆயிற்று

No automatic alt text available.இன்றும் அங்கு ஏகபட்ட இந்து ஆலயங்களும், அடையாளங்களும் உண்டு, உணவு முறைவரை தமிழர் தாக்கம் உண்டு, தமிழர் மதமான இந்துமத தாக்கம் உண்டு

ஜல்லிகட்டு போன்றே அங்கு மாடுபிடி விளையாட்டு உண்டு, பொங்கல் போன்றே அறுவடை விழா உண்டு

அக்கிராமத்து பெண்கள் பல்லாங்குழி முதல் தாயம் , சுட்டிக்கல் வரை தமிழகத்துவிளையாட்டுகளை அப்படியே அழகாக விளையாடுகின்றார்கள்

கபடியும் அந்நாட்டு கிராமங்களில் உண்டு

இஸ்லாமிய நாடான போதிலும் அவர்களுக்கு ராமாயணமும், பாரதமும் மிக முக்கிய கதைகள்

அவர்களின் விமான நிறுவணம் கூட “கருடா ஏர்வேஸ்”, அவர்களின் கரன்சியில் பிள்ளையார் படம் உண்டு

No automatic alt text available.அவர்கள் பெயர்கள் கூட ராமன், சீதா, கீதா, ராணி என்றுதான் பெரும்பாலும் வைக்கபடும், அவர்கள் கலாச்சாரம் அப்படி

மொழியும், மதமும் மாறி இருக்கின்றதே அன்றி அவர்களின் பழக்கவழக்கம் முதல் கலாச்சாரம் வரை எல்லாம் இந்துக்கள் அடையாளமே

அப்படிபட்ட இந்தோனேஷிய அதிபர் தன் பேரனுக்கு நேரேந்திரா என பெயரிட்டிருக்கின்றார் இது ஒன்றும் ஆச்சரியமல்ல‌

இப்பொழுது இந்தோனேஷியா சென்ற மோடியிடம் என் பேரன் பெயரும் நரேந்திரன் என சொல்லிவிட்டார் இந்தோனேஷிய பிரதமர்

(விவேகானந்தரின் இயர்பெயர் நரேந்திரன்)

இந்த பக்தாஸுக்கு பாகிஸ்தானை தவிர வேறு நாடு தெரியாது என்பதால் இப்பொழுது இப்படி குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் எப்படி?

மோடியின் பெருமை கண்டு தன் பேரனுக்கே அவர் பெருமையினை சூட்டிவிட்டார் இந்தோனேஷிய அதிபர் என கடும் அழிச்சாட்டியம்

விரைவில் விவேகானந்தரையும் இனி நரேந்திரன் என்றுதான் அழைக்க வேண்டும் என கிளம்புவார்கள் பாருங்கள்

 

புகையினை தூர எறிவோம், நலம் காப்போம்  

Image may contain: text

சில மூலிகைகளின் புகை அன்றைய காலங்களில் மருந்தாகவும், வழிபாடுகளிலும் இன்னும் பல விஷயங்களுக்காகவும் பயன்பட்டது

இங்கு கஞ்சா எனப்படும் சிவஞான மூலிகை அப்படித்தான் மருந்தாக இருந்தது என்கின்றார்கள், இன்னும் முறையாக எடுத்தால் கஞ்சா அற்புதமான மருந்து என மருத்துவ உலகமே சொல்கின்றது

(பொடி போடும் கூட ஒரு மூலிகையின் பொடியினை முகர்ந்தால் கிடைக்கும் பலன் என்பதில் ஆரம்பித்த்தே பின் திசைமாறி நாசமாயிருக்கின்றது)

இந்த பழக்கம் போலவே தென்னாபிரிக்க பழங்குடியினரிடம் சில இலைகளை, சில மூலிகைகளை புகைக்கும் பழக்கம் இருந்திருக்கின்றது, தென் அமெரிக்காவினை கொள்ளையிட்ட ஸ்பானியர் அதை ஐரோப்பாவில் பரப்பினர்

ஆனால் அந்த உண்மையான மூலிகைகளை விட்டுவிட்டு புகையிலை எனும் ஒற்றை இலையினை மட்டும் வியாபாரமாக்கினார்கள், அதில் சில ரசாயாணங்களையும் சேர்த்தனர்

ஐரோப்பிய குளிருக்கும் இன்னும் பல விஷயங்களுக்கும் அது பெரும் வரவேற்பை பெற்றது, அப்படியே ஐரோப்பியர் கால்பதித்த நாடெல்லாம் பரவிற்று

இந்தியாவிலும் அது அப்படித்தான் வந்தது, புகையிலையினை விளையவைக்கும் அளவிற்கு இங்கு அது பணப்பயிர் ஆனது

ஐரோப்பாவில் வியாபாரம் யூதர் கைகளில் சிக்கியபின் அது உலகெல்லாம் பெரும் வியாபாரமானது, இன்று புகையிலை பொருள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இல்லா நாடே இல்லை

கடும் போட்டிக்காகவும் வியாபாரத்திற்காகவும் தயாரிக்கபடும் புகையிலை இன்று ஆபத்தான பொருளாக மாறிவிட்டது

இன்று புகையிலை சிகரெட்டின் இன்னொரு வடிவம், இ.சிகரெட் எனும் வடிவில் ரசயாண கலவையினை எலக்ட்ரானிக் மெஷினில் மாட்டி இழுக்கும் அளவிற்கு சென்றாயிற்று

உடலுக்கு மிக தீதான விஷயம் இது, உலகில் அனுதினமும் சில லட்சம் மக்கள் சிகரெட்டால் சாகின்றார்கள் என்கின்றது ஆய்வு

வெள்ளையன் வியாபாரத்திற்காக பரப்பிவிடும் விஷயங்கள் எல்லாம் நுட்பமானது, முதலில் நன்றாக சம்பாதித்துவிட்டு பின் அந்த ஆபத்திலிருந்து விலகுவான்

சர்ச்சில், சேகுவேரா போன்றோரை கூட புகைக்கும் பழக்கத்திற்கு மாடலாக காட்டி சம்பாதித்த மேற்குலகம் இப்பொழுது அதனை கட்டுபடுத்துகின்றது

ஆனால் இந்தியாவில் அதெல்லாம் பற்றி யாரும் கவலைபடவில்லை, இங்கு டாஸ்மாக் அடைப்பதே நினைத்துபார்க்க முடியா விஷயம்

உண்மையில் இப்பொழுது சிகரெட் பொருட்களின் மிகபெரும் சந்தை ஆசியா, சினிமா இன்னபிற விளம்பரம் மூலம் அது ஊடுருவி நிலைத்தது

இன்று இந்நாட்டின் மிகபெரும் ஆபத்தான விஷயம் புகைப்பது, அது சம்பந்தபட்டவரை அன்றி அதை அதிகம் சுவாசிக்கும் அருகிருப்பவரையும் பாதிக்கும் தன்மையுடையது

சிகரெட்டை ஒருபுறம் தயாரித்துகொண்டே உலகநாடுகள் புகை இலைஒழிக என்பார்கள், நாமும் ஆமாம் என சொல்ல வேண்டும்

இங்கு அதற்கான டீலர்கள் கோடிகணக்கில் சம்பாதித்துவிட்டு ஆமாம் புகையில்லா உலகம் என்பார்கள் நாம் ஆமாம் என சொல்லவேண்டும்

புகைத்தவர்கள் உடல்நலம் கெட்டார்கள் செத்தார்கள்

ஆனால் மறைமுகமாக இத்தொழில் பல்லாயிரம்பேரை ஓசையின்றி கொன்றுகொண்டிருக்கின்றது

தென் தமிழகத்தின் குடிசைதொழிலில் ஒன்று பீடிசுற்றுதல், வீட்ட்டிலிருந்தே ஏராளமான பெண்கள் செய்யும் தொழில் அது

ஆரம்பத்தில் அந்த ஆபத்து தெரியவில்லை, ஆனால் அந்த நெடியும் அவர்கள் கைகளில் ஒட்டும் துகளும் அப்பெண்களுக்கு தீரா நோய்களை கொண்டுவருகின்றது

இதை பற்றி எல்லாம் பேசாமல் அல்லது பேசவிடாமல் பெரும் கொடுமை நடக்கின்றது

ஏன்? எதற்கு என தெரியாமல் யாரோ பீடி புகைத்து சாக, தங்களை பலியாக்கிகொண்டிருகின்றார்கள் தென்னக பெண்கள்

புகையிலை ஒழிப்பு என்பது இங்கு டாஸ்மாக் ஒழிப்பு போன்றது, நடக்காத விஷயம்

ஆனால் அதிலிருந்து விலகி நிற்பது சாலசிறந்தது, நம்மை நாமேதான் காப்பாற்றி கொள்ள வேண்டும்

உண்மையில் மூலிகை புகைகள் சக்தி வாய்ந்தவை பல நோய்களுக்கு மருந்தாகவும், வலி நிவாரணியாகவும், சில நுண்ணிய உறுப்புகளை வலுப்பெற செய்யும் விஷயமாகத்தான் அன்று இருந்திருக்கின்றது

வெள்ளையனின் லாப வெறி அதனை மனுகுலத்தை கொல்லும் விஷமாக மாற்றிவிட்டது வரலாற்று சோகம்

கஞ்சா என்பது மகா அற்புதமான மூலிகை

டாஸ்மாக்கையும், எங்கோ இருந்து வரும் புகையிலையினையும் அனுமதிக்கும் தேசம் கஞ்சாவினை அனுமதிக்காது , காரணங்கள் ஏராளம் சத்தியமாக மக்கள் நலனா என்றால் சுத்தமாக இல்லை

உண்மையில் மூலிகை புகைத்தல், சில மூலிகைகளை முகர்தல், வெற்றிலை எனும் தாம்பூலம் தரித்தல் என அற்புதமான விஷயங்கள் இங்கு இருந்திருக்கின்றன‌

எல்லாவற்றிலும் புகையிலை கலந்து வியாபாரம் செய்து இச்சமூகத்தை கெடுத்திருக்கின்றது வெள்ளையன் காலம்

வெற்றிலையுடன் பாக்கு சுண்ணாம்புடன், மிளகு, கிராம்பு போன்றவை கலந்து மெல்லும் பழக்கமே இருந்திருக்கின்றது, மிளகில்லா வெற்றிலையில் பலனில்லை

வெள்ளையன் காலமே மிளகினை நீக்கிவிட்டு புகையிலையினை கலந்திருக்கின்றது, இப்படி பல பழக்கங்கள் மாறி இருக்கின்றன‌

நமது சமையலில் மிளகினை நீக்கி மிளகாய் வற்றலை கொடுத்து நலம் கெடுத்தவன் அவனே, கருப்புகட்டியினை நீக்கி சீனியினை புகுத்தியவனும் அவனே

உழைப்போருக்கு நலமும் ஆழ்ந்த உறக்கமும் கொடுத்து நலம் காக்கும் பனங்கள்ளும், இன்னும் பல மூலிகை சாறும் வழக்கொழிந்து இந்த வெளிநாட்டு லிக்கர்கள் அவன் காலத்திலே வந்தன, சீமை சரக்கு என அது கொண்டாடபட்டது

உள்நாட்டு மது வகைகள் அதனால் அழிந்தது, இன்று வெறும் ராசாயாணம் டாஸ்மாக்கில் விற்கபடுகின்றது

அவன் இந்த காபி, டீ பழக்கத்தை கொண்டுவந்து எப்படி உணவுபழக்கத்தை மாற்றி நம்மை கெடுத்தானோ அப்படியே நம்முடைய பாரம்பரிய புகைப்பிலும் இந்த ரசாயாண குப்பையினை புகைக்க சொல்லி திசைமாற்றி இருக்கின்றார்கள்.

பண்டைய சித்தர்களும், மருத்துவ முறைகளும் சொன்ன மூலிகை புகைகளை அவர்கள் சொன்ன அளவில் பயன்படுத்தலாம் தவறே இல்லை

வெள்ளையன் தயாரிக்கும் இந்த ராசாயாண‌ குப்பை புகையினை தூர எறிவோம், நலம் காப்போம்

 

மோடி மஹாதீர் திடீர் சந்திப்பு

Image may contain: one or more people and people standing

முன் கூட்டியே திட்டமிடாமல், ஒரு நாடு அழைக்காமல் வலிய சென்று “அய்யா நான் உங்க நாட்டுக்கு மேல் பறக்கின்றேன் , கொஞ்சம் இறங்கி உங்களை பார்க்கட்டுமா” என உலகிலே கேட்கும் ஒரே தலைவர் நமது மோடி ஒருவர்தான்

அப்படி இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லும்பொழுது சட்டென மலேசியாவில் இறங்கி மகாதீரை சந்தித்திருக்கின்றார்

ஏன் சந்தித்தார் என்பதற்கு காரணம் தெரியவில்லை

“நாமெல்லாம் இனி செத்தாலும் ஆட்சிக்கு வரமுடியாது, ஒரு மனிதர் 22 வருடம் ஆண்டு மறுபடியும் 92 வயதில் பிரதமாகியிருக்கின்றார், பார்த்துவிட்டு கண்ணீரை துடைத்துவிட்டு போவோம்” என்ற பெருமூச்சாக இருக்கலாம்

“நான் பதவிக்கு வந்து 1 மாதத்திற்குள் சொன்னதை செய்கின்றேன், 4வருடமாக நீங்கள் ஒன்றுமே செய்யவில்லையா?” என மகாதீர் மோடியினை கேட்டால் நன்றாகத்தான் இருக்கும்.


Image may contain: 1 person, sitting“உங்கள மாதிரித்தான் நானும் 95 வயசுவரை பிரதமராக இருக்கணும்னு ஆசைபடுறேன், ஆனா இந்தியாவில ஒரு பயலும் விடமாட்டேங்குறாங்க‌

அதுக்கு நாட்டுக்கு ஏதாவது செய்திருக்கணும் மோடி, சும்மா வாய்சவுடால் விட்டுகொண்டிருந்தால் தேர்தலில் அடிதான் விழும்

அட போங்க அழுகையா வருது, நான் டீ வித்தவன், இப்பொல்லாம் ஒரு நாளைக்கு 21 மணிநேரம் நாட்டுக்காக உழைக்கிறேன், அது போக……

அது இருக்கட்டும் மோடி தூத்துகுடியில ஏதோ துப்பாக்கிசூடாமே?

அட அது இலங்கையில் உள்ள தூத்துகுடிங்க, இந்தியா இல்லை, உங்ககிட்ட யாரோ பொய் சொல்லிருக்காங்க‌””


 

செயல்தலைவர் “மாதிரி பட்ஜெட்” போட்டு வாசித்தால் கைதட்டலாம்

இந்த ஜெயக்குமார் பட்ஜெட் வாசித்தபொழுது இது சரியில்லை நான் போடுகிறேன் சிறந்த பட்ஜெட் என அறிவாலயத்தில் செயல்தலைவர் “மாதிரி பட்ஜெட்” போட்டு வாசித்தால் கைதட்டலாம்

சும்மா “மாதிரி சட்டமன்றம்” என அவரே முதல்வர் போல வீற்றிருந்து 4 பேர் கைதட்டுவதெல்லாம் சகிக்கவில்லை

முன்பெல்லாம் திமுகவில் திருச்சி சிவா முதல் டி.ஆர் பாலு வரை பொளந்துகட்டுவார்கள்

ஆற்காடு வீராசாமி முதல் கடைநிலை தொண்டன் வரை உற்சாகமாய் பேசுவான், கலைஞரும் பேசவிட்டு ரசிப்பார்

இப்பொழுதெல்லாம் ஸ்டாலின், கனிமொழி குரல் தவிர ஒரு குரலையும் அவர்கள் அனுமதிப்பதில்லை . இதெல்லாம் நல்ல விஷயம் அல்ல‌


1989ல் புலிகளுக்கு இடம் கொடுத்து சமூக அமைதியினை கெடுக்கின்றார், இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கின்றார், சமூக விரோதம் இது என்றுதான் கலைஞர் அரசை கலைத்தார்கள்

இப்பொழுது தூத்துகுடி போராட்டத்தில் சமூக விரோதிகள் அதிகம் கலந்துவிட்டார் என்கின்றார்கள்

அப்படியானால் இங்கு சமூக விரோதிகள் அதிகமாகிவிட்டார்கள் என்றால் பழனிச்சாமி அரசை டிஸ்மிஸ் செய்தால் என்ன என கேட்டால் ஒரு பயலையும் காணவில்லை


சொந்த ஊரில் காடுவெட்டி குருவுக்கு மணி மண்டபம்- அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

எவ்வளவு முக்கியமான விஷயம்?

அங்கே பீனிக்ஸ் பறவை வடிவமாம், இங்கு மாம்பழ வடிவமா இல்லை ஓநாய் வடிவமா என இன்னும் தெரியவில்லை

பாமக , ஆம் நாங்கள் வன்னியர் கட்சியேதான் என உலகிற்கு உரத்து சொல்லும் நேரமிது.


 

பிரச்சினைக்கு நீதிமன்றம் நாடவேண்டுமே தவிர மக்கள் போராட கூடாது : ரஜினி

Image may contain: 3 people

பிரச்சினைக்கு நீதிமன்றம் நாடவேண்டுமே தவிர மக்கள் போராட கூடாது : ரஜினி

அந்த தளபதி வசனம் நினைவுக்கு வந்து தொலைக்கின்றது

“கலெட்டர் சார், நீங்க எப்போவாவது ஏழையா இருந்திருக்கீங்ளா?

கையில காலணா இல்லாம பசியோட தெருவில அலைச்சிருக்கீங்களா?

வயிறு பசிக்கும்பொழுது கோர்ட்படி ஏறமுடியாதுசார், அங்கெல்லாம் போக வழியில்லாம இங்க வாராங்க அது ஏன் உங்களுக்கு பொறுக்கல

தொட்றா.. தொட்டு பார்ரா பாக்கலாம்”

உங்களுக்கு நினைவுக்கு வரும் விஷயங்களை நீங்களும் எழுதுங்கள்


இந்த அனில் அகர்வால் மட்டும் பிராமணனாக இருந்தால் நடந்திருப்பதே வேறு, ஸ்டெர்லைட்டை பெயர்த்து கடலில் எறிந்திருப்பார்கள்

மனிதர் அகர்வாலாய் ஆகிவிட்டதால் பலருக்கு உள்ளூர வருத்தம்


திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தொழில்துறை பின்னடைவுக்கு, தொடர் போராட்டங்களும் வன்முறைகளும் முக்கிய காரணம் : ரஜினி

 

ஸ்டெர்லைட் தவிர எந்த ஆலை மூடபட்டது மிஸ்டர் ரஜினி?

தைரியமிருந்தால், ஆண்மை இருந்தால் ராமநாதபுரம் கமுதி பக்கமும், தேனி ஆண்டிபட்டி பக்கமும் , மதுரை பக்கமும் பெரம்பலூர் ஜெயங்கொண்டம் பக்கமும், விழுப்புரம், சிதம்பரம் பக்கமும் தொழில்துறை பின்னடைய என்ன காரணம் என சொல்லுங்கள் பார்க்கலாம்

அட அங்கெல்லாம் ஒரு நல்ல தொழிற்சாலையினை காட்டிவிடுங்கள் பார்க்கலாம்

 

 

தூத்துகுடியில் போராடியது சமூக விரோதிகளாம் ரஜினி சொல்கின்றார்

Image may contain: 1 person

தூத்துகுடியில் போராடியது சமூக விரோதிகளாம் ரஜினி சொல்கின்றார்.

எந்த ரஜினி தளபதி, பாஷா, கபாலி, காலா என திரையில் அடித்து நொறுக்கிய ரஜினி

காலா டிரெய்லரை கண்டால் “உடம்புதான் நமக்கு பலம்..மக்களை திரட்டுங்கலே, நாம யாருண்ணு காட்டுவோம்லே” என முழங்குகின்றது

“அடங்க மறுப்பவன் … புடுங்குபவன் யாருன்னு காட்டு” என பாடல் வேறு

“நிலம் உங்களுக்கு அதிகாரம் எங்களுக்கு வாழ்க்கை” இதைத்தானே தூத்துகுடிகாரனும் ஸ்டெர்லைட்டிடம், அரசிடமும் சொல்லிகொண்டே இருந்தான்

இவர் சொன்னால் பஞ்ச் டயலாக், மக்கள் சொன்னால் அது சமூக விரோதமாம்

டிரைய்லர் முழுக்க அடி , உதை , போராட்டம், புரட்சி, பேதி வருமளவு புரட்சி மருந்து.

பாடல் முழுக்க காது கிழியும் அளவு ஒரே புரட்சி போராளி இம்சைகள்

கபாலியில் இவர் அடித்து உடைப்பாராம், சகலத்தையும் நொறுக்குவாராம் அது போராட்டமாம் புரட்சியாம் மலேசிய தமிழரை காப்பாராம்

காலாவில் எல்லோரையும் அடித்து விரட்டி மும்பை தமிழரை சேவ் பண்ணுவாராம்

ஆனால் தூத்துகுடி மக்கள் நிஜத்தில் போராடினால் அது சமூக விரோதமாம், என்னய்யா நியாயம் இது?

ஆனால் தூத்துகுடி மக்கள் என்ன செய்தார்கள், உடலோடு வந்து உயிர்கொடுத்தார்கள், அது தவறாம்

திரையில் அது புரட்சியாம், நிஜத்தில் நடந்தால் சமூக விரோதமாம்

“காலா உன்னை துரும்பென நினைக்கின்றேன், காலடியில் வாடா உன்னை மிதிக்கின்றேன்” எனும் பாரதியின் வாக்கு இனி படம் வரும்பொழுது புரியும்

“எலேய் வேங்கையன் முவனே, நீ ஒத்தையில வந்தாலும் சரி பத்து பேரோட வந்தாலும் சரி மதுரைக்கு தெற்கே வந்துருல பாப்போம்

மதுரை என்னலே, மும்பை தமிழர்ல‌ பாதி நாங்கதாம்ல, நீ வந்துரு பாத்துருவோம்”


தமிழகத்தில் ஸ்டெர்லைட்டை அடுத்து மூட வேண்டியது சினிமா தொழிற்சாலை

ஆளாளுக்கு போராளிகள், புடுங்கிகள் என அங்கிருந்துதான் வந்து சமூகநலனை கெடுக்கின்றார்கள், சமூக அமைதியினை சீர்குலைக்கின்றார்கள்

ராமசந்திரனில் இருந்து இன்றைய பாரதிராஜா,சைமன், ரஜினி, கமல், இப்பொழுது பா.ரஞ்சித் எல்லாம் அந்த ஆலை உற்பத்தி செய்த நச்சு கிருமிகளே

அந்த ஆலை முதலில் மூடபடாமல் தமிழகம் உருப்படாது.

அது ஆலை முழுக்க சாக்கடை, அதிலிருந்து கொசுகூட்டம் உற்பத்தி ஆகி கொடூர நோய்களை பரப்பிகொண்டே இருக்கின்றது

மருந்து தெளித்தோ, கொசுவலை போட்டோ இதனை கட்டுபடுத்த முடியவில்லை

ஒரே தீர்வு அதனை மண் அள்ளிபோட்டு மூட வேண்டியதுதான்


தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் 3-வது சீசனுக்கான வீரர்கள் தேர்வு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது : செய்தி

மிஸ்டர் பாரதிராஜா & கோ, எங்கே வாயில் துண்டு பீடியுடன் மரத்தடியில் 3 சீட்டு விளையாடி கொண்டிருக்கின்றீர்கள்

உங்களுக்கான நேரம் இதோ….


 

 

“தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் என்றால் சுடுகாடு தான் ” : ரஜினி

“தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் என்றால் சுடுகாடு தான் ” : ரஜினி

ஆவடி முதல் கன்னியாகுமரி வரை ஏகபட்ட தொழிற்சாலை நிரம்பிய தமிழகம் இது, திருச்சி பெல் தொழிற்ச்சாலை எல்லாம் பெரும் பிரமாண்டம்

எல்லா ஆலையிலுமா போராட்டம் நடக்கின்றது? தூத்துகுடியில் ஸ்பிக் முதல் இன்னும் ஏகபட்ட விஷயம் உண்டு, அதெற்கெல்லாமா போராட்டம் உண்டு?

நெல்லை சிமென்ட் தொழிற்ச்சாலை பிரமாண்டம் என்ன? ஒரு குரல் கேட்டிருக்கும்?

எது எல்லாம் ஓரளவு பாதுகாப்பான தொழிற்சாலையோ அங்கெல்லாம் மக்கள் நலன் காக்கபடுமோ அங்கெல்லாம் ஒரு எதிர்ப்புமில்லை

மாறாக அபாய ஸ்டெர்லைட், உறங்கும் எரிமலையான அணுவுலை, கடற்கரை மக்களை கொன்ற தாதுமணல் (இது பெரும்பாலும் வராது) இதுபோன்ற கொடிய தொழிற்சாலைகளைத்தான் எதிர்க்கின்றார்கள்

தொழிற்சாலை வேண்டாம் என எந்த தமிழனும் சொல்லவில்லை, சொல்லவும் முடியாது

உயிர்கொல்லும் ஆலைகள் வேண்டாம் என்பதே நிலைப்ப்பாடு

அது தெரியாமல் ரஜினி என்னவோ பேசிகொண்டிருந்தால், இவர் அரசியலுக்கு வந்தால்தான் நாடு சுடுகாடாகும்

%d bloggers like this: