ஓடி ஓடி உழைக்கணும்

Image may contain: 1 person, close-up

மே தினம் என்பதால் பல உழைப்பாளர் பாடல்கள் பல டிவிக்களில் வருகின்றது

இந்த ராமசந்திரனும் சில யானைகளோடு “ஓடி ஓடி உழைக்கணும்” என பாடி கொண்டிருக்கின்றார்

மவனே, உன்னை “ஓடி ஓடி உதைக்கணும்”

காவேரிக்காக கஸ்பர் நடப்பாராம்.. மீட்பாராம்…. கர்த்தர் அவரை ஆசீர்வதிக்கட்டும்

Image may contain: 1 person, close-up

காவேரியில் நீர்வராதது ஜெகஸ் கஸ்பர் எனும் கன்னியாகுமரி பாதிரிக்கு இப்பொழுதுதான் தெரிந்ததாம். கன்னியாகுமரி தொலைவில் இருப்பதால் அப்படி மெதுவாக தெரிந்திருக்கின்றது

காவேரிக்காக கஸ்பர் நடப்பாராம். மீட்பாராம். நல்லது கர்த்தர் அவரை ஆசீர்வதிக்கட்டும்

ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்து பேச்சிபாறை, பெருஞ்சாணி அணை நீரை வறண்ட ராதாபுரம் பக்கம் மிஞ்சியதை கொடுக்கலாம் என்றால் கன்னியாகுமரியே பற்றி எரியும்

பலமுறை பற்றி எரிந்ததது

இந்த பாதிரி கொஞ்சம் ராதாபுரம் மக்களுக்காக அப்பக்கம் நடந்துவிட்டு காவேரி பக்கம் வந்தால் என்ன?

பாதிரி அதற்கெல்லாம் நடக்க மாட்டார் , அப்படி நடந்தால் ஜெகத் கஸ்பர் கன்னியாகுமரியிலே சிலுவையில் அறையபடுவார் என்பது அவருக்கு தெரியும்

அதனால் காவேரிக்கு நடக்க தொடங்கிவிட்டார்

ராதாபுரம் விவசாயி எப்படி போனால் என்ன? காவேரி விவசாயி வாழட்டும் என எண்ணுகின்றார் அல்லவா?

அந்த பெரிய மனதின் பெயர்தான் கிறிஸ்தவ சாமியார்.

என்ன வரிசையோ தெரியவில்லை

இந்த பொன்னார், தமிழிசை, நாஞ்சில் சம்பத், இந்த சர்ச்சை சாமியார் என மொத்த வரிசையும் கன்னியாகுமரி பக்கம் இருந்துதான் வந்து தொலைகின்றது

ஒரு மாதிரி மாவட்டமாக இருக்கலாம், இதனை தமிழகத்தோடு இணைக்க முன்பு கடும் போராட்டமாம்

ஏன் போராடவேண்டும்?

கொஞ்சநாள் விட்டிருந்தால் கேரள அரசே விட்டுவிட்டு ஓடியிருக்கும்.

மோடி எத்தனை மோடியடி…

Image may contain: 7 people, people smiling, people standing

சில சக்திகள் சாகும் வரை பொய் பேசிகொண்டிருக்க வேண்டும் என தீர்மானம் செய்திருக்கும், அதில் முக்கியமான பாஜக ஒரு உண்மையும் பேச கூடாது என ராமர் பாதத்தில் சத்தியம் செய்திருக்கும் போல‌

இல்லாவிட்டால் இப்படி பொய்களாக சொல்லமுடியாது, நேற்று மோடி அவிழ்த்துவிட்ட பொய் அவர்களின் பொய்களின் சிகரம்

“இந்தியாவில் தாங்கள் ம‌தங்கள் இடையே வேறுபாடு நாங்கள் பார்த்ததே இல்லை, வளர்த்ததுமில்லை” என சொல்லியிருக்கின்றார் மோடி

எங்கே சொல்லியிருக்கின்றார், புத்த பூர்னிமா விழாவிற்காக இலங்கை, பர்மா, ஜப்பான் தாய்லாந்தில் இருந்தெல்லாம் புத்த துறவிகளை அழைத்து விழா கொண்டாடி சொல்லியிருக்கின்றார்

ஆனால் தலாய் லாமாவையோ இல்லை, திபெத் புத்த துறவிகளை கவனமாக அழைக்கவில்லை, அழைத்தால் சீனா மோடியினை பிடித்து மொட்டை அடித்துவிடும் அல்லவா? அதனால் விட்டுவிட்டார்

இந்த விழாவில் அவர் சொல்லியிருக்கும் பொய்கள் எவ்வளவு கொடுமையானவை?

பாபர் மசூதி இடிப்பு முதல் ஏகபட்ட கலவரங்களை நடத்தி, மாட்டுகறி சர்ச்சை வரை இவர்கள் எல்லாம் எதன் பெயரில் செய்தார்கள்?

இந்துக்கள் நாடு இது மற்றவர்கள் எல்லாம் ஓடுங்கள் என எந்த அடிப்படையில் கொடிபிடித்தார்கள்?

இவை எல்லாம் மத நல்லிணக்க விஷயங்களா?

மத நல்லிணக்கம் வளர்ப்பவர்கள், ஒரு மிலாடி நபியிலோ, ரமலான் பெருநாளிலோ இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை இப்படி அழைத்து விழா கொண்டாடியிருக்கின்றார்களா?

கிறிஸ்தவ பண்டிகைகளை இப்படி சிறப்பித்தாரா?

ஆனால் உலகெல்லாம் இருந்து புத்தமத துறவிகளை மட்டும் அழைத்து ஆசிபெறுவாராம்

அதுவும் பர்மாவில் இஸ்லாமியருக்கு எதிராகவும், இலங்கையில் ஈழதமிழருக்கு எதிராகவும் புத்த பிக்குகள் செய்யும் கொலைகள் கொஞ்சமல்ல‌

ஈழதமிழரின் கண்ணீருக்கு முதல் காரணம் புத்த குருக்களே

அந்த ரத்தகறை படிந்த அடுத்தநாட்டு குருக்களை அழைத்து இங்கு விருது கொடுப்பாராம் , ஆனால் இந்நாட்டு மதகுருக்களை விரட்டி வெறுப்பார்களாம்

இங்குள்ள மற்ற மதங்களையும் மோடி இப்படி மதித்து அரவணைத்தால் அவரை நிரந்தர பிரதமராக இத்தேசம் ஏற்றுகொள்ளாதா?
இந்த பர்மா, இலங்கை புத்த குருக்களால் ஏற்பட்ட ரத்த ஆறு கொடுமையானது அதில் நீந்தி தப்பி இந்தியா வந்த அகதிகள் எண்ணிக்கையும் அதிகம்

அவர்களுக்கு அடைக்கலமும் உணவும் கொடுக்கும் இந்தியா, அந்த கூடுதல் செலவுக்கு காரணமான கொடூர புத்த வெறியர்களை அழைத்து விருது கொடுப்பது எவ்வளவு பெரும் முட்டாள்தனமான கொடுமை?

ராமன் எத்தனை ராமனடி என்பது போல் மோடி எத்தனை மோடியடி

இந்தியா எத்தனையோ ஆட்சியினை கண்டிருக்கின்றது இப்படி ஒரு நாடக ஆட்சியினை இப்பொழுதுதான் பார்க்கின்றது

அதில் “ராஜபார்ட்” மோடி

 

சமூக சிந்தனை படம் “வேலைக்காரன்”

Image may contain: 1 person

தமிழ் திரைப்பட உலகில் நீண்ட காலத்திற்கு பின் வந்த உருப்படியான சமூக சிந்தனை படம் “வேலைக்காரன்”

இந்த உலகில் கார்பரேட்டுகள் எப்படி எல்லாம் நம்மை பைத்தியமாக்கி , அடிமைகளாக வைத்திருக்கின்றது என்பதற்கு அதைவிட நல்ல படம் இல்லை

தொழிலாளரின் பலம் என்ன என்பதை அசாத்தியமாக சொன்னபடம். சோவியத் யூனியன் அல்லது காஸ்ட்ரோ இருந்தால் கூட நிச்சயம் கொண்டாடியிருப்பார்கள்

அருமையான அர்த்தமுள்ள படம்.நல்ல அரசு என்றால் அப்படத்திற்கும் அந்த இயக்குநருக்கும் தேசிய விருது வழங்கி இருக்க வேண்டும்

படம் பெரும் வெற்றிபெறவில்லை என்கின்றார்கள். அப்படியானால் மிக சிறந்தபடம் என்றே பொருள்

தமிழகத்தில் ஒருபடம் ஓடினால்தான் அதை சந்தேகிக்க வேண்டும், ஓடாவிட்டால் நிச்சயம் நல்ல படம் என்றே பொருள்

இந்த மே தினத்தில் வேலைக்காரன் படம் பார்க்க முடிவாயிற்று,

இந்த படம் முடிந்தவுடனே விடுமுறை சிறப்பான தங்க தலைவி குஷ்பு நடித்த பொற்கால திரைபடங்கள் பக்கம் செல்ல வேண்டும்

தாழ்த்தபட்டவருக்கான பாதுகாப்பு சட்டம்

தாழ்த்தபட்டவருக்கான பாதுகாப்பு சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவில்லை மாறாக அதை தவறாக உபயோகபடுத்துவதை தடுக்க சில மாறுதல்களை செய்திருக்கின்றது

எல்லா விஷயத்திலும் நன்மையும் தீமையும் உண்டென்பது போல சாதிய வன்கொடுமை சட்டமும் சில இடங்களில் பழிவாங்க பயன்படுவது ஒன்றும் ரகசியமல்ல‌

நியாயம் அவர்கள் பக்கம் இல்லாவிட்டாலும் பல இடங்களில் சாதிய வன்கொடுமை எனும் சட்டம் அநியாயமாக பலரை காத்தது

சிலரின் ஆயுதமாகவே அச்சட்டம் ஆகிபோனது. இதனால் பாதிக்கபட்ட அப்பாவிகள், அச்சட்டம் பாய்ச்சபட்டு அநியாயமாக அமைதியானவர்கள் ஏராளம் உண்டு,

ஏன் சொத்துக்களை இழந்தவர்களே உண்டு

விசாரணையின்றி “என்னது? சாதி பெயரை சொல்லி திட்டினானா?” என கேட்டு தகுந்த‌ விசாரணையின்றி சாதிய வன்கொடுமையில் தண்டிப்பதும் , இந்த பொடா தடா சட்டங்களும் ஒன்றுதான்

இந்த சட்ட திருத்தத்தால் தலித்துக்களின் உரிமை ஒன்றும் பாதிக்கடாது, உரிய ஆதாரமும் சாட்சிகளும் இருக்கும் பட்சத்தில் நியாயம் நிச்சயம் கிடைக்கும்

இதனை தீவிரமாக எதிர்ப்பது எல்லாம் அரசியலே அன்றி வேறல்ல‌

இந்த சட்ட தளர்வினை எதித்து முக ஸ்டாலின் எல்லாம் கொதிக்கின்றார் என்கின்றார்கள். இது திமுகவிற்கு பின்னடைவினை கொண்டுவருமே தவிர நிச்சயம் நற்பெயரை பெற்று தராது

இன்று பிரேமதாசா நினைவு தினம்

Image may contain: 1 person, smiling, standing

இலங்கை மிகசிறிய தீவு, சிங்கள எண்ணிக்கையும் அதிகம் அல்ல ஆனால் மிக சிறந்த ராஜ தந்திரிகள் எல்லாம் அங்கு உருவானார்கள்

தங்கள் நாட்டுக்கு ஆபத்து வந்தபொழுதெல்லாம் அற்புதமாக முறியடித்தார்கள். அவர்கள் வரம் அப்படி. பண்டாராநாயக காலத்திலிருந்து புலிகளை வீழ்த்திய ராஜபக்சே வரை அவர்களின் நாட்டுபற்று துணிவும் அலாதியானது

ஜெய்வர்த்தனே என்பவரெல்லாம் யூதர் போன்றே நரிமூளைக்காரர். இலங்கையில் இந்தியாவின் ஆட்டத்தை தன் அபார அணுகுமுறையால் கத்தியின்றி ரத்தமின்று முடித்து வைத்த வித்தகர்

அந்த வரிசையில் ஒருவர் பிரேமதாச‌

மிக மிக ஒடுக்கபட்ட ஏழை இனத்திலிருந்து தன் அயாராத உழைப்பில் பெரும் இடத்திற்கு சென்றார். அவர் பிரதமராக இருந்த காலத்தில்தான் அமைதிபடை இலங்கை சென்றது

அதை எதிர்த்த முதல் அரசியல்வாதி பிரேமதாச, ஆனால் இந்தியா பயிற்சி கொடுத்த போராளிகளை இந்தியாவின் படைகொண்டே அடக்கும் தந்திரத்தினை கையாண்ட ஜெயவர்த்தனேவினை அவரால் மீறமுடியவில்லை

பின் ஜெயவர்த்தனேவுக்கு பின் அதிபரான பிரேமதாச அதிரடி ஆட்டம் ஆடினார்.

ஜெயவர்த்தனே அமெரிக்க அடிமை. பிரேமதாச ஒருவித சோஷலிஸ்ட் என்பதால் அமெரிக்காவினை அவர் விரும்பவில்லை. இந்தியா, அமெரிக்கா (சீனா அன்று களத்தில் இல்லை) என எந்த நாட்டுக்கும் கட்டுபடாத இலங்கையினை அவர் நிர்மானித்தார்

அதில் அவர் காட்டிய ராஜதந்திரம்தான் இந்திய படைகளை வெளியேற்றுவது. இந்தியா அங்கு முகாம் நிரந்தரமாக அமையும் முடிவில் இருந்தது. புலிகளை நொறுக்கி கிட்டதட்ட முடிக்கும் நிலைக்கு வந்தது

ஒரு இலங்கை அதிபராக பிரேமதாச இந்திய படைகள் தங்குவதை விரும்பவில்லை, விரும்பவும் முடியாது. யாரும் எதிர்பாரா வகையில் புலிகளுடன் கை கோர்த்தார்

ஆயுதங்களை அள்ளிகொடுத்தார், கப்பல் கப்பலாக கொடுத்தார்

சோர்ந்திருந்த புலிகளும் பிரேமதாசாவினை பிடித்து கொண்டு, “இது அண்ணன் தம்பி பிரச்சினை, ஏய் இந்திய நாய்களே வெளியேறுங்கள்..” என கத்தவும் தவறவில்லை

சிங்களருடன் புலிகள் கைகோர்ப்பது கனவிலும் நடக்காது என நம்பிய இந்தியா அதிர்ந்தது, ஆயினும் இந்தியா போராடியது

சிங்களரும் புலிகளும் கைகோர்த்தபின் இந்திய படைகளுக்கே மனம் வெறுத்தது, ச்சீ இவர்களை காக்கவா வந்தோம் என மூத்த தளபதிகளே மனம் வெறுத்தனர்

மண்டியிடா மானம், வீழ்ந்துவிடா புலி வீரம் எல்லாம் பிரேமதாசா முன் குப்புற கிடந்தது

பின் அமைதிபடை மீட்கபட்டது, புலிகளுக்கும் வடக்கு கிழக்கு முழுக்க கொடுக்கபட்டது. பிரேமதாச அதில் கைவைக்கவில்லை

புலிகள் விஷயத்தில் அவர் வேகம் காட்டவில்லை, இந்த நாட்டை இந்தியாவிடம் இருந்து மீட்டவர்கள் என்ற அபிமானம் அவருக்கு இருந்தது, பிரிவுபடா இலங்கைக்குள் தமிழருக்கு தீர்வுகொடுக்கவும் அவரிடம் திட்டம் இருந்தது.

ஆனால் அமெரிக்க எதிர்ப்பு அவருக்கு இருந்தது. அமெரிக்க எதிரிகள் எங்கிருந்தாலும் வாழமுடியாது அல்லவா?

ராஜிவினை புலிகள் அப்பொழுதுதான் கொன்றிருந்தனர். எக்காரணம் கொண்டும் தன் மீது புலிகள் பாயமாட்டார்கள் என மலைபோல் நம்பி இருந்தார் பிரேமதாச‌

புலிகளின் உயிரை மீட்டு கொடுத்த என்னை புலிகள் ஏன் தொடபோகின்றார்கள் என அவரின் பாதுகாப்பு தளர்த்தபட்டது

நம்பியவரை கொல்வதில் புலிகளின் படிப்பு ஆராய்ச்சிபடிப்பிற்கும் அப்பாற்பட்டது

அப்படி இதே மே தின ஊர்வலத்தில் கொழும்பில் மனித வெடிகுண்டால் கொல்லபட்டார் பிரேமதாச‌

பிரேமதாசவும், ராஜிவும் பிராந்திய எதிரிகள் என்றாலும் அடிப்படை ஒற்றுமை அமெரிக்க எதிரிகள்

அதனாலே அமெரிக்க கைகூலிகளால் கொல்லபட்டார்கள்

இப்படி பெருந்தலைவகளை எல்லாம் மனிதவெடிகுண்டை அனுப்பி தங்கள் பலத்தை வெளிகாட்டிய புலிகளால் , மிக இக்கட்டான 2009ல் ராஜபக்சே நிழலையும் தொடமுடியாமல் போயிற்று

சுருக்கமாக சொன்னால் பின்னாள் இலங்கை அதிபர்கள் புலிகளை எப்படி கையாள வேண்டும் என செத்து பாடம் கொடுத்தவர் பிரேமதாச‌

இதற்குபின்புதான் சிங்கள தரப்பு புலிகளை சுத்தமாக நம்பவில்லை, ஒருகாலமும் நம்பதகாதவர்கள் புலிகள் எனும் அபிமானம் அவர்களுக்கு இதே நாளில்தான் வந்தது

இலங்கை வரலாற்றில் துணிச்சல் மிக்க அதிபர் பிரேமதாச, அவரின் நடவடிக்கை எல்லாம் இலங்கைக்கானது, இறுதியில் இலங்கைக்காக உயிரையும் விட்டார்

இன்று அவரின் நினைவு தினம்

பிரேமதாசாவிற்கு காட்டிய நன்றிகடனை பின்னாளில் ராஜபக்சேயிடம் வட்டியும் முதலுமாக வாங்கினர் புலிகள்

அந்த தீவு தேசம் அந்த தியாக தலைவனுக்கு அஞ்சலி செலுத்திகொண்டிருக்கின்றது

 

ஷோபா, தமிழக திரையுலகம் மறக்கமுடியாத பெயர்

31739940_10211629913438514_592487916689686528_n

அபூர்வமாக வரும் நல்ல நடிகைகளில் நிச்சயம் அவருக்கு இடமுண்டு, மகா அற்புதமான திறமை அவருக்கு இருந்தது

தன் மிகசிறந்த படங்களில் நடித்தபொழுது அவருக்கு வயது வெறும் 16தான், அப்பொழுதே தேசிய விருதினை அனாசயாக தட்டி சென்றவர்

ஷோபா, தமிழக திரையுலகம் மறக்கமுடியாத பெயர்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி குறுகிய காலமே நடித்தாலும், காவிய படங்களில் தன் முத்திரையினை ஆழ பதித்துவிட்ட நடிகை

அவரது திறமையில் தென்னக மொழிகளில் எல்லாம் அந்த 17 வயதிற்குள்ளேயே 100 படங்களை நெருங்கிய நடிகை, அச்சிறப்பு யாருக்குமில்லி ஸிரிதேவிக்கு கூட இல்லை

16 வயதினிலே படமும் பாலசந்தரின் நிழல் நிஜமாகின்றதும் ஒரே படத்து கதை. இரண்டுமே வெற்றிபெற்றன‌

ஆனால் 16 வயதினிலே கதைக்கு பொருந்தகூடிய நடிகை என ஷோபாவைத்தான் திரையுலம் சொன்னது

அந்த முள்ளும் மலருரும் ஷோபாவும், பசி ஷோபாவும் இன்னும் சில படங்களில் அசைக்க முடியாத நடிப்பினை கொடுத்த அந்த சின்னஞ்சிறிய சிட்டுகுருவி எந்நாளும் நினைவில் இருக்கும்

அவள் ஆயுள் கொஞ்சம் நீண்டிருந்தால் கிட்டதட்ட 2000 வரை தமிழ் திரையில் ஒரு நடிகையும் உதித்திருக்க முடியாது

17 வயதிலே பெரும் உச்சம் பெற்றுவிட்டு, இனி வருங்கால நடிகைகளுக்கு தடையாக இருக்க கூடாது என நினைத்தாரோ என்னமோ வாழ்வை முடித்து கொண்டார்.

அவரின் விதி பாலுமகேந்திரா வடிவில் வந்தது. அந்த பாலுமகேந்திராவினை அவர் 16 வயதிலே திருமணம் செய்தார்

அப்படியே மரித்தும் போனார்

பாலுமகேந்திரா மாபெரும் கலைஞன், ஆனால் அவரோடு பழகியவர்களில் சிலர் ஒருமாதிரி ஆகிவிட்டார்கள், பல திறமைசாலிகளுக்கு கூட ஒருவித மனசிலேகம் வந்துவிட்டது

பாலா அவரிடம்தான் இருந்தார், பாலாவின் படங்களின் கொடூரம் உலகறிந்தது. சுகா என்ற அவரோடு இருந்த‌ அற்புத எழுத்தாளன் இன்று கமலஹாசனின் மய்யத்தில் மய்யமாகிவிட்டார்

இப்படி பலரை திசைதிருப்பிவிட்ட பாலுமகேந்திராவால் ஷோபாவின் வாழ்க்கையும் திசைமாறி முடிந்தே விட்டது

அந்த ஷோபா செத்திருக்க கூடாது, அவரின் கூட்டத்தில் இன்னும் சிலர் அம்முடிவுக்கு வந்திருந்தால் கூட நல்லது. அங்கிள் சைமன் கூட அந்த கோஷ்டியில் கொஞ்சநாள் இருந்தார்

அந்த நெற்றியும் அதிலிருக்கும் பொட்டும், முன்னெற்றியில் ஆடும் அந்த முடியும், குறும்பான கண்களும் , ஆயிரம் முகபாவனைகளை நொடியில் காட்டும் அந்த முகம் தமிழ் திரையுலகின் மிகபெரும் அடையாளம், மாபெரும் நடிகை அவள்

முளையிலே கருகிவிட்ட செடி அது, மொட்டாகவே கருகிவிட்ட அந்த மலர் அது. அவள் விதி அப்படி இருந்திருக்கின்றது

அந்த மகா அற்புத நடிகையின் நினைவு நாள் இன்று. அவளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

அவரின் படங்கள் முடியும்பொழுதெல்லாம் இரு சொட்டு கண்ணீர்வராமல் கடந்து போக முடியாது