ரோமன் திருச்சபைக்கு அவ்வப்போது வரும் சோதனைகள்

Image may contain: 1 person, smiling

இந்த ரோமன் திருச்சபைக்கு அவ்வப்போது சோதனைகள் வரும், ரோமர்கள், யூதர்கள், இஸ்லாமியர், மார்ட்டின் லுத்தர், நெப்போலியன், விஞ்ஞானிகள் கம்யூனிஸ்டுகள் என அதற்கு சோதனைகள் காலம் காலமாய் வரும்

இப்பொழுது விஷயம் பேய் வடிவில் வந்திருக்கின்றது

பைபிளிலே இயேசு பேயினை விரட்டினார் என இருப்பதால் பேய் இருப்பதை அச்சபை நம்புகின்றது, இப்பொழுதெல்லாம் பேய் ஓட்ட தெரியாமல் பல பாதிரிகள் இருக்கின்றார்களாம், அவர்களுக்கான பயிற்சி நடைபெறும் என வாடிகன் அறிவித்தது

மிகாவேல் முதல் அந்தோணியார் வரை ஏகபட்ட புனிதர்களின் பெயரில் இன்றும் ஓட்டபடும் பேய்களை விரட்ட என்ன ஸ்பெஷல் பயிற்சியோ தெரியவில்லை

பேய் ஓட்ட என்ன பயிற்சி? இயேசு பெயரை சொன்னால் பேய் ஓடாதா என்றால் ஓடும். இயேசுவின் பெயரை ஒழுங்காக சொல்ல பயிற்சி போலிருக்கின்றது

இதில் பல கண்டனங்கள் வருகின்றன, பேய் இருப்பது இல்லை என்பது வேறுவிஷயம் , ஆனால் இந்த விஞ்ஞான காலத்தில் அப்படி செய்தால் நிரூபித்தாக வேண்டும்

ஏற்கனவே கலிலியோ முதல் பல விஞ்ஞானிகள் சொன்னது பொய் என அவர்களை பாடாய்படுத்திய திருச்சபை பின் அவை உண்மை என்றதும் ஹிஹிஹீஹ் என தலையினை சொரிந்து நின்றது

இப்பொழுதும் அப்படிபட்ட நிலை வேண்டாம் என பல கண்டனங்கள்

விஷயம் பற்றி எரிகின்றது, காரணம் உலகெல்லாம் ரோமன் சபை உண்டு எனினும் அந்நாட்டு சட்டங்கள் அதனை தடுக்கின்றன‌

பல நாடுகளில் இது ஏமாற்றுவேலை என தடுக்க சட்டமுண்டு. இந்தியாவில் கூட சில மாநிலங்களில் கண்கட்டு வித்தை தடுப்பு சட்டம் உண்டு

இங்கு ஆள்வது பாஜக வேறு, விடுவார்களா?

ஆளாளுக்கு இதுதான் வாய்ப்பு என குதித்துவிட்டார்கள், பாஜகவின் உடன்பிறவா சகோதரிகளான சங், சமிதி அமைப்புகள் “ஏய் போப்பே பேய் இருப்பதை நிரூபித்தால் உனக்கு பரிசு என தொடை தட்டுகின்றன..”

அவர்களுக்கென்ன அவர்கள் மதத்தில் எல்லாமே தெய்வம், சாத்தான் என்பதே கிடையாத மதம் அது

தமிழக பகுத்தறிவாளர்கள், வீரமணி கோஷ்டி எல்லாம் சைலன்ட். சங்கராச்சாரி இப்படி சொன்னால் குதிபார்களே தவிர வாடிகனுக்கெல்லாம் பதில் சொல்வதாக இல்லை

இப்பொழுது ஆளாளுக்கு வாடிகனுக்கு பேயினை காட்ட முடியுமா? என கடிதம் எழுதிகொண்டே இருக்கின்றார்கள்

இந்தியாவில் பேய்களுக்கா குறைவு? எல்லாம் அரசியல் முதல் பல தொழில்களில் மாறுவேடத்தில் சுற்றிகொண்டிருக்கின்றது

சாதிப்பேய் , மதப்பேய் என ஏராள பேய்கள் உண்டு

பெரியார் சிலை முதல், ராமர் பெயர் வரை சொல்லி இங்கு ஏகபட்ட பேய்களை நொடியில் கிளப்பமுடியும்

உண்மையில் வாடிகன் பேய் இருப்பதை நிரூபித்தால் என்னாகும்?

கத்தோலிக்க சபையே பாதியாகும் , ஏராளமான பேய்கள் பாதிரி எனும் பெயரில் அங்குதான் சுற்றிகொண்டிருக்கின்றன‌

பிரிவினை சபைகள் கேட்கவே வேண்டாம், பேய்களின் கூடாரமே அதுதான்

பேய்களை விரட்டுகின்றேன் என வாடிகன் கிளம்பினால் நிச்சயம் கிறிஸ்தவம்தான் காலியாகும்.

இதனால் போப்பாண்டவர் பலமுறை யோசித்துவிட்டு பேய் விரட்டுவது நல்லது.

 

கன்னடத்தில் அச்சத்தின் உச்சியில் பாஜக இருப்பது தெரிகின்றது

தொண்டர்கள் மக்களை கை கால்களை கட்டி தூக்கி வந்து வாக்களிக்க வைக்க வேண்டும் என ஆவேசமாக பேசியிருக்கின்றார் எடியூரப்பா

வாக்களித்தபின் அந்த மக்களை கொல்வதா வேண்டாமா என அன்னார் இன்னும் முடிவு சொல்லவில்லை

போகிற போக்கில் இனி கழுத்தில் கத்தி வைத்து வாக்கு வாங்குவார்கள் போல‌

பாஜக ஒரு மாதிரி கட்சிதான், அதற்காக இந்த அளவிற்கு எல்லாம் மிரட்டினால் என்னாகும்?

கன்னடத்தில் அச்சத்தின் உச்சியில் பாஜக இருப்பது தெரிகின்றது, கருத்து கணிப்புகளும் சங்கு என்றே சொல்கின்றன‌

ஒருவேளை பாஜக‌ படுதோல்வி அடைந்தால் உடனே காவேரி மேலாண்மை வாரியம் அமைய வாய்ய்பு உண்டு

அதனால் எடியூரப்பா இன்னும் பேசட்டும், வோட்டு போடவில்லை என்றால் கழுத்தை அறுங்கள் என சீறட்டும், பாஜக தோற்கட்டும்

அப்படியாவது காவேரி வரட்டும்

என்ன ராசியோ தெரியவில்லை, இந்தியா எங்கும் சர்ச்சை கிளப்புவர்கள் பாஜகவில்தான் இருக்கின்றார்கள்

 

இன்று தந்தி டிவியில் தைரிய நாயகி, தங்க தலைவி….

Image may contain: 1 person

இன்று தந்தி டிவியில் தைரிய நாயகி, தங்க தலைவி, தரணிவாழ் மக்களின் தனிபெரும் நாயகி குஷ்பு பேச இருக்கின்றாராம்

அகில உலகம் போலவே சங்கமும் அவரின் இடி முழக்க பேச்சை கேட்க ஆர்வமாயிருக்கின்றது

தெய்வம் வருவதற்கு முன் பக்தர்கள் காத்திருகும் எதிர்பார்ப்பே தனி அல்லவா?

தலைவி பேச வரும்பொழுது சங்கத்திற்கு வேறு என்ன வேலை இருக்கின்றது? இப்பொழுதே டிவிமுன் அமர்ந்தாயிற்று

கோடை இடியாக முழங்கபோகின்றார் தலைவி

தலைவி தந்தி டிவியில் பேசபோவதால் அந்த நேரத்தில் மற்ற எல்லா டிவிக்களுக்கும் ஒளிபரப்பை நிறுத்தும்படி சங்கம் கோரிக்கை வைக்கின்றது

தந்தி டிவி வாழ்க, ஆதித்தனார் குடும்பம் வாழ்க வாழ்க, ஆசீர்வதிக்கபட்ட இந்த ஞாயிற்று கிழமை வாழ்க‌

எங்கள் தைரிய நாயகி வாழ்க. வாழ்க‌

 

விஞ்ஞான வசதிகளை நீட் தேர்வு வளாகத்தில் பயன்படுத்தினால் என்ன?

தேர்தல் காலங்களில் கட்டிலில் கிடக்கும் கிழவிக்கு கையில் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாக்குசாவடிக்கு தூக்கி சென்று வாக்கு வாங்குவார்கள் தொண்டர்கள். எவ்வளவு தூரம் என்றாலும் சளைக்காமல் ஓடுவார்கள்

தலைவர்களும் ரகசிய கூட்டம் என்ற பெயரில் அவர்களை உசுப்பிவிடுவார்கள்

வீடு வீடாக சென்று அவர்கள் வாக்காள முதியவர்களை தூக்கி வரும் அழகை காண்பதற்கு அவ்வளவு ஆனந்தமாக இருக்கும், எவ்வளவு கருணை, எவ்வளவு கவனிப்பு?

யாரும் கேட்காமல் அவர்களாக வந்து அப்படி உதவுவார்கள், வாகனம் முதல் எல்லாம் இலவசம்

நீட்டுக்கு செல்லும் மாணவர்களுக்கு எந்த கட்சியும் அதன் தொண்டனும் தேர்தல் கால அவசரத்தில் உதவவே இல்லை. எல்லாம் கண்துடைப்பு

ஆனால் மக்கள் முந்திகொண்டு உதவி ஜனநாயகத்தை காத்துகொண்டிருக்கின்றார்கள்.

வாழ்க மக்கள் நாயகம்

இந்த நீட் தேர்வு மையங்களில் ஏகபட்ட சோதனை அலப்பறைகள், ஹிட்லர் காலத்தில் வதை முகாமுக்கு கொண்டு செல்லபடும் யூதர்களை சோதனை செய்வது போல் கடும் சொதனை

பூனூல் முதல் தலையில் இருக்கும் பூ வரை பிடுங்குகின்றார்களாம், ரத்தம் கசிந்தாலும் கண்டுகொள்ளவில்லையாம்

எதற்கு இதெல்லாம்?

இன்று விஞ்ஞானம் உச்சத்தில் இருக்கும் காலம். சில கருவிகளை பொருத்தினால் எந்த எலக்ட்ரானிஸ் சிக்னலும் வேலை செய்யாத அளவு தடுத்துவிடலாம்

எவ்வளவோ விஞ்ஞான வளர்ச்சிகள் உள்ள காலத்தில், கிரிக்கெட் வீரர் நடு மைதானத்தில் சிறிய தாளை எடுத்தாலே கண்டுபிடிக்க கூடிய காலங்களில் இன்னும் ஹிட்லர் காலத்து கெடுபிடிகள் ஏன்?

உளவுதுறையும், பாதுகாப்பு துறையும் பயன்படுத்தும் சமாச்சாரங்கள் ஏராளம். அதில் ஒன்றை பயன்படுத்தினாலே போதும் , சத்தமின்றி கண்காணிக்கலாம் முறைகேடுகளை தடுக்கலாம்

விஞ்ஞான வசதிகளை நீட் தேர்வு வளாகத்தில் பயன்படுத்தினால் என்ன? இந்த நெருக்கடிகள் குறையும்

அவர்களே மிகுந்த பதற்றத்துடன் எழுத வரும் மாணவர்கள். அவர்களை ஊர் ஊராக அலைகழித்து அதன் பின்னும் இப்படியான கெடுபிடிகள் மனதளவில் அவர்களை பாதிக்கும்

பின் எப்படி தேர்வு எழுதுவார்கள்?

வருங்காலங்களிலாவது இதனை தவிர்க்கட்டும், உலகெல்லாம் சுற்றும் மோடி இனியாவது நல்ல நாட்டில் தேர்வு அறை வரை சென்றுவிட்டு வரட்டும்

 
 

வங்கத்து தாகூர் கொண்டாடபட்டார்.. தமிழகத்து பாரதி விரட்டபட்டார்….

Image may contain: 1 person, smiling, hat and close-upஇங்கு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும், வேலூர் கோட்டையும் இன்ன பல கோட்டைகள் எல்லாம் அழிந்து கிடக்கும்

ஆனால் பத்மநாபபுரம் உள்ளிட்ட பல அரண்மனைகள் அப்படியே இருக்கும்

எப்படி என்றால், யாரெல்லாம் வெள்ளையனை ஆதரித்தார்களோ அவர்கள் எல்லாம் வாழ்வை கொண்டாட அனுமதிக்கபட்டார்கள். யாரெல்லாம் வெள்ளையனை எதிர்த்தார்களோ அவர்கள் எல்லாம் சிதறடிக்கபட்டனர், ஓட விரட்டபட்டனர்

அதில் கவிஞர்களும் விதிவிலக்கு அல்ல‌

வங்கத்து தாகூர் அப்படித்தான் கொண்டாடபட்டார், தமிழகத்து பாரதி அப்படித்தான் விரட்டபட்டார்

தாகூர் பெரும் கவிஞர் சந்தேகமில்லை. வங்கத்து கவி உள்ளம் அவரிடமும் இருந்தது. ஆனால் சுத்த வெள்ளையன் ஆதரவு

வங்கம் பிரிக்கபடும்வரை அவர் எந்த எதிப்பினையும் தெரிவிக்கவில்லை, வங்கம் பிளவுபட்டபொழுது பொங்கினார்

ஆனால் உலகெல்லாம் அவருக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அவரின் கவிதைகள் ஆன்மாவினை தொட்டன . உச்சமாக நோபல் பரிசுவரை வழங்கபட்டது

வாழும்பொழுதே கொண்டாடபட்ட பெரும் கவிஞன்

Image may contain: 1 person, smiling, beard and close-upஇப்படிபட்ட கவிஞன் பெரும் அடையாளமாக திகழ்ந்தவன் இந்நாட்டிற்கு குரல் கொடுத்தானா என்றால் இல்லை, மாறாக ஜார்ஜ் மன்னர் வரும்பொழுது அவருக்கு வரவேற்பு பாடல் எழுதினான்

30 நிமிடம் ஓடகூடிய அந்தபாடல்தான் இன்று சுருக்கபட்டு தேசிய கீதம்

ஜார்ஜ மன்னன் இந்தியா வந்தபொழுது இங்கு பெரும் பஞ்சம், பலகோடி பேர் செத்தனர். வாஞ்சிநாதன் துப்பாக்கி ஏந்திய காலம்

இந்தியர் செத்துகொண்டிருக்க மும்பையில் அவருக்கு மிகபெரும் வரவேற்பு வாசல் கட்டபட்டது, இன்று இந்தியா கேட் என அழைக்கபடும் அந்த வாசல் அன்றே ஜார்ஜ் மன்னனுக்காக கட்டபட்டது

இந்தியா அலறிகொண்டிருக்க, அவருக்கு வரவேற்பு பாடல் எழுதியவர் தாகூர்

அந்த தாகூரின் செயல் ஒரு நாளும் மறக்க முடியாத துரோகம்

இங்கு ஏகபட்ட குளறுபடிகள் உண்டு. தேசிய கீதமாக அறிவிக்கபடவேண்டியது நிச்சயம் பாரதியாரின் பாடல். அதுதான் மகா பொருத்தமானது

ஆனால் வட இந்திய ஆதிக்கமும், வங்காளிகளின் அட்டகாசமும் இந்த அடிமை சாசனத்தை தேசிய கீதமாக்கின‌

தமிழகத்து ராஜாஜி, காமராஜர் இன்ன்பிற அடையாளங்கள் எல்லாம் பாரதியினை இந்திய அளவிற்கு கொண்டு சென்றார்களா என்றால் இல்லை

ஆனால் வங்காளி இந்தியா முழுக்க கொண்டாட வழிவகை செய்யபட்டான்

இந்த ஒருமாதிரி போக்குத்தான் இம்மாநிலத்தில் திராவிட குரலாய் ஒலித்தது, ஜெயித்தது

தாகூர் ஒரு சந்தர்பவாதி அவனி ஜார்ஜ் மன்னர் வரவேற்ற நம் தேசிய கீதத்தையும், வங்க தேசிய கீதமும் பல முரண்பாடு கொண்டவை

இந்தியாவின் அடிமைசாசன பாடல்தான் இப்படி இருந்ததே தவிர, வங்கத்தை பற்றி அட்டகாசமாக எழுதியிருக்கின்றார் தாகூர்

இன்றும் வங்கதேசத்தின் தேசிய கீதம் தாகூருடையது, உலகிலே இரு நாட்டிற்கு தேசிய கீதம் எழுதிய ஒரே நபர் தாகூர்

தாகூர் மகா கவிஞனாக இருக்கட்டும், ஆனால் சுயநல்ம் மிகுந்திருந்தது, நாட்டுபற்று என்பது இல்லை

பாரதிக்கு கொஞ்சமும் சுயநலமில்லை, இந்நாட்டிற்காக தன்னால் எதை எல்லாம் இழக்கமுடியுமோ அவ்வளவையும் இழந்துவிட்டு அபலையாக மரித்தான்

அவன் மட்டும் வெள்ளையனை ஆதரித்திருந்தால் இன்று உலகபெரும் கவியாக என்னவெல்லாமோ விருது வழங்கி மாபெரும் கவிஞனாக்கி இருப்பார்கள்,

ஏன் அவன் சந்ததி கூட 4 மில்களோடு தென்னகத்தை ஆண்டுகொண்டிருக்கும். பாரதி இத்தேசத்திற்கு இழந்தது ஏராளம்

கொஞ்சமும் அசையவிலை பாரதி

இதில் தாகூர் என்ன இழந்தார் என சொல்லமுடியுமா? பெற்றார், நிரம்ப பெற்றார்

இன்று தாகூரின் பிறந்தநாள் என கொண்டாடுவார்கள்

ஆனால் தேசிய கவிஞராகவோ, தேசிய கீதம் எழுதியவன் என்றோ அவனை ஏற்க முடியாது

எங்கள் எட்டயபுரத்து பாரதியுடன் ஒப்பிடும்பொழுது அவன் வீட்டு அருகே கூட வருவதற்கு தாகூருக்கு தகுதி இல்லை

இத்தேசத்தில் மாற்றவேண்டிய விஷயம் உண்டென்றால் அந்த அடிமை வாக்குமூல கவிதையான ஜனகண மன என்பதை மாற்றி எம் பாரதியின் பாடலான வந்தே மாதரம் என்போம் என்பதையோ, தாயின் மணிக்கொடி பாரீர் என்பதையோ அறிவிக்க வேண்டும்

தாகூர் நல்ல கவிஞன், பல பரிசுகளை வென்ற கவிஞன். ஆனால் இந்நாட்டுகாக அவர் எதனையும் செய்யவில்லை, செய்ய விரும்பவுமில்லை

அவ்விஷயத்தில் என்றுமே பாரதி தாகூரை விட பலமடங்கு உயர்ந்து ஓளி வீசிகொண்டே இருப்பான்

வெள்ளையனுக்கு பணிந்து நிலைத்து நிற்கும் அழகு அரண்மனைகளை விட, பாஞ்சாலங்குறிச்சியின் அழிந்த கோட்டைக்கு சிறப்பு அதிகம்


தனி கறியினை விட எலும்பினை ஒட்டிய கறி சுவை அதிகம் என எலும்பு வாங்க சென்றால், இங்கொருவன் சர்வ சுத்தமாக எலும்பினை பிரிகின்றான்,

ஒரு மில்லிகிராம் கறி கூட எலும்பில் இல்லை

போன பிறவியில் சலூனில் சவரம் செய்திருப்பான் போலிருக்கின்றது, அப்படி ஒரு சுத்தமான வளித்தெடுப்பு