திரிசங்கு சொர்க்கத்தில் கன்னட தேர்தல் முடிவுகள்

Image may contain: sky and outdoor

நாம் முன்பே சொன்னது போல திரிசங்கு சொர்க்கத்தில் முடிந்திருக்கின்றது கன்னட தேர்தல், யாருக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை

இந்த இடத்தில் காங்கிரஸ் பெருந்தன்மையான மற்றும் தந்திரமான நகர்வினை மேற்கொண்டது, சட்டென குமாரசாமிக்கு நிபந்தனையற்ற ஆதரவினை கொடுத்துவிட்டது

மதவாதத்தை எதிர்ப்பதே எங்கள் இலக்கு எனும் கொள்கை ரீதியாக விட்டுகொடுத்து தன் பெருந்தன்மையினை நிருபித்திருக்கின்றார் ராகுல்

அதே நேரம் இந்த குமாரசாமி என்பவரும் சொல்லிகொள்ளும் தகுதி கொண்டவர் அல்ல, ஒரு மாதிரி ஆசாமி

தங்களுக்கு முழு மெஜாரிட்டி கொடுக்காத மக்கள் குமாரசாமியின் ஆட்சியில் எக்கேடும் கெட்டு போகட்டும் என்ற குதர்க்கமும் இருக்கலாம்

குமாரசாமி ஆட்சி எப்படி இருக்கும் என்றால் தமிழகத்தை நினைத்து கொள்ளுங்கள் போதும்

இந்நிலையில் பாஜகவும் விடுவதாக இல்லை, ஆளுநர் என்பவர் அவர்கள் கைப்பாவை. இங்கு என்று அல்ல வடக்க முழுக்க பல இடங்களில் இதே அட்டகாசம்தான்

கூட்டணிகளை விட பாஜக முக்கால் பங்கு இடம்தான் வென்றிருக்கும் ஆனால் பாஜக ஆளுநர் பாஜகவினைத்தான் அழைப்பார்

இந்த இடைவெளியில் அடுத்த ஆட்சி நாங்கள்தான் என சொல்லி உருட்டி மிரட்டி
எப்படியாவது எதிர்கட்சியிலிருந்து சிலரை உருட்டி வந்து விடும் பாஜக‌

இதுதான் அவர்கள் 21 மாநிலங்களில் ஆளும் தந்திரம், சில இடங்கள் மட்டும் விதிவிலக்கு

இதே தந்திரத்தை கன்னடத்திலும் அரங்கேற்றுகின்றார்கள், எடியூரப்பா முட்டிகொண்டு நிற்பது இதனால்தான், இந்நேரம் சிலருக்கு விலை முடிந்திருக்கலாம்

இப்படியாக ஆளாளுக்கு திட்டங்கள் வியூகங்களோடு இருக்கின்றார்கள்

இந்த தேர்தலில் விசித்திரம் என்னவென்றால் கன்னட வெறியனான வாட்டாள் நாகராஜ், காவேரி என்றாலே வாள் வாள் எனகத்தும் நாகராஜ் டெப்பாசிட் இழந்திருக்கின்றார்

ஆக கன்னடத்திலும் வாய்பேசும் சைமன்களை மக்கள் மதிப்பதில்லை என்பது புரிகின்றது, இதெல்லாம் தும்பிகள் சோகம்

இப்போதைக்க்கு பாஜக மெஜாரிட்டி காட்டுவது எளிதானது அல்ல, குமாரசாமிக்கே வாய்ப்பு

தமிழகத்திற்கு தண்ணீர்விடாத கன்னடத்தை குமாரசாமி வடிவில் ஆண்டவன் பழிவாங்குகின்றான், நன்றாய் படட்டும்


 கன்னட காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை ஆந்திரா, பஞ்சாபில் வைத்து கண்காணிக்க முடிவு. கட்சி தாவலாம் என அச்சம்

தமிழகம் எப்படி எல்லாம் வழிகாட்டி இருக்கின்றது?,

இந்தியாவிற்கே முதலில் மாநில சுயாட்சி புரட்சி காட்டிய தமிழகம் இப்பொழுது எம்.எல்.ஏக்களை எப்படி பாதுகாப்பது என்ற அளவிலும் கூவத்தூர் ஸ்டைலில் வழிகாட்டியிருகின்றது

தமிழண்டோவ்…….


 

பாலகுமாரன் : தனிபெரும் எழுத்தாளனுக்கு ஆழ்ந்த அஞ்சலி

Image may contain: 1 person, beard

தமிழக எழுத்தாளர் வரிசையில் தனி இடம் பிடித்தவர் பாலகுமாரன், சோழநாட்டு கம்பனின் தமிழ் அவருக்கு அனாசயமாய் வந்தது

எழுத்துலகில் ஒருவித ரசனையான எழுத்தினை காட்டினார், அவரின் எழுத்தெல்லாம் சமாதனத்தையும் அன்பையும் சமத்துவத்தையும் தாங்கியே வந்தன‌

நாவல்களில் தனி முத்திரை பதித்துவிட்டு சினிமா உலகிற்கும் வந்தார்

சுஜாதா போலவே பாலகுமாரனின் வசனங்களும் காலத்தினை வென்றவை

‘நாயகன்’ ‘குணா’, ‘செண்பகத்தோட்டம்’, ‘மாதங்கள் ஏழு’, ‘கிழக்கு மலை’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’, ‘பாட்ஷா’, ‘முகவரி’, ‘சிட்டிசன்; என எழுதி குவித்தார், அற்புதமான வசனங்கள்

இது நம்ம ஆளு படத்தின் அற்புதமான இயக்குநரும் அவரே

சோழநாட்டு அபிமானம் அவரில் கலந்திருந்தது அதனால்தான் “உடையார்” என ராஜராஜ சோழனின் கதையினை அவரால் எழுதமுடிந்தது

இன்றுவரை எழுத்துலகில் ஒருவன் ராஜராஜனுக்கு வைத்திருக்கும் மிகபெரிய காணிக்கை அந்நூல்

காவேரி குறித்தும், தஞ்சை பகுதி குறித்தும் அவர் எழுதிய அளவு நுட்பமாக இன்னொருவன் எழுதமுடியாது. ஆனால் இவர் படித்து வளர்ந்தெல்லாம் சென்னையிலே

முன்னோர்களின் ஏதோ நினைவு அவரில் கலந்து அந்த தொடர்ச்சியாகத்தான் இவ்வளவும் எழுதி குவித்தார்

தமிழின் தலைசிறந்த எழுத்தாளன் மறைந்திருப்பதில் மனம் கனக்கின்றது, அவருக்கு 72 வயதுதான் ஆகியிருந்தது. இருதய அறுவை சிகிச்சை எல்லாம் முடிந்து நலமாய்தான் இருந்தார்

திடீரென அவர் பிரிந்துவிட்டார்,

அந்த அதிர்ச்சி செய்தியினை கேட்டவுடன் மனமும் கண்களும் அப்படியே கலங்கி நிற்கின்றன‌

எழுத்தில் ஒருவகை தாள நயத்துடன் எழுதியவர் அவர், மெல்லிய பூங்காற்று போன்ற எழுத்து அது

எத்தனையோ லட்சம் வாசகர்களை கட்டிபோட்ட, எத்தனை ஆயிரம் பேரோ அவரை ஞானதகப்பனாக கொண்டாடிகொண்டிருக்க அவர் விடைபெற்றுவிட்டார்

ஆனந்த விகடனும், குமுதமும் அவருக்காகவே விற்பனையான காலங்களும் உண்டு

எழுத்து சித்தர் இனி இல்லை, ஆனால் அவரின் எழுத்துக்களில் எந்நாளும் அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்

ஜீன்ஸ் படத்தில் அற்புதமான வசனம் ஒன்று எழுதியிருப்பார்

உதவாக்கரை நாசர் அழும்பொழுது அவர் அண்ணன் சொல்வார்

“நாச்சியப்பா நீ என் தம்பிடா, நீ எப்படி இருந்தாலும் பிரச்சினை இல்ல, ஆனா நீ கண்கலங்கினால் மட்டும் அண்ணனால் தாங்க முடியாது”

பாசம் என்பது பணத்திற்கு அப்பாற்பட்டது என்பதை அட்டகாசமாய் சொன்ன வசனம் அது

இனி இப்படி எல்லாம் எழுத யார் இருக்கின்றார்கள்? அவரின் வசனங்கள் எல்லாம் காதில் ஒலிக்க தொடங்கிவிட்டது

தனிபெரும் எழுத்தாளனுக்கு ஆழ்ந்த அஞ்சலி


பாலகுமாரன் என் நண்பர், பாஷா போல இன்னும் ஒரு படத்திற்கு எழுத சொன்னேன் அவர் மறுத்துவிட்டார் : ரஜினிகாந்த்

இந்த ரஞ்சித் படத்திற்கு எழுத சொல்லியிருப்பாரோ? அதுதான் பாலகுமாரனின் மனதை பெரிதாக பாதித்ததோ என்னமோ.


 

தமிழகம் பெரியார் பூமி , இங்கு பாஜக நுழைய முடியாதாம்

Image may contain: 1 person, screen and textதமிழகம் பெரியார் பூமி அதனால் இங்கு பாஜக நுழையமுடியாது என்றெல்லாம் சொல்லி கொண்டிருக்கின்றார்கள்.

எந்த சித்தாந்தையும் தாங்கி நடத்த நல்ல வாரிசு தலைவர்கள் வேண்டும்

லெனினுக்கு பின் ஸ்டாலின் அப்படி தாங்கினார், அதன் பின் வந்த தலைவர்கள் உருப்படி இல்லை சோவியத் சிதைந்தது

ஆனால் மாவோவிற்கு பின் இன்று ஜின்பெங்க் வந்து தாங்கியதில் சீனா நீடிக்கின்றது

இங்கு பெரியாரின் அரசியல்வாரிசாக அண்ணா வந்தார், அவரை தொடர்ந்து கலைஞர் வந்தார்

அதன் பின் எங்கிருக்கின்றார்கள் நல்ல தலைவர்கள்?

அப்பக்கம் ஒரு பிரமண ஜெயலலிதா திராவிட கழக பிரிவின் தலைவரான கொடுமை எல்லாம் நடந்தது, அன்றே பெரியார் பூமி நாசமானது. ஆனால் யாரும் சொல்லவில்லை

கலைஞர் இருக்கும்வரை ஒருமாதிரி இழுத்துகொண்டு சென்றார், இப்பொழுது யாருமில்லை

பெரியாரின் வாரிசாக அண்ணா, ராமசந்திரன் , ஜெயா , பன்னீர், பழனிச்சாமி, சசிகலா, தினகரன் என்றொரு பக்கம்

Image may contain: 5 people, people smiling

அண்ணா, கலைஞர் , ஸ்டாலின் உதயநிதி என இன்னொரு பக்கம்

வைகோ எனும் கட்டுபாட்டை இழந்த லாரி ஒருபக்கம்

தமிழக ஆளும்கட்சியினை ஒருநாளும் பகைக்க விரும்பா ஜால்ரா வீரமணி ஒருபக்கம்

பின் எங்கிருக்கின்றார்கள் நல்ல பெரியாரிஸ்டுகள், தலைவர்கள்?

ஒருவருமில்லை

பெரியாரின் இன்றைய தொடர்ச்சி யார் தெரியுமா?

இப்பக்கம் உதயநிதி அப்பக்கம் பழனிச்சாமி

பின் எங்கிருந்து நிற்கும் சித்தாந்தம்? நிச்சயம் நிலைக்காது

திராவிடம் எனும் பெயரில் ஒருவித பிழைப்புவாதம் செய்து, அச்சிந்தாந்தையே நாசமாக்கிவிட்டார்கள்

கேரளாவில் கூட பிணராயி விஜயன் போல வந்துவிட்டார்கள், இங்கு அப்படி யாருமில்லை

திராவிட அரசியலே இங்கு பெரியார் கொள்கை தாங்கிய நல்ல தலைவர் வராமல் பார்த்துகொண்டது

இங்கு இன்னும் பெரியாரிஸ்டுகள் உண்டு, அருண்மொழி போல அருமையான பெரியாரிஸ்டு உண்டு, ஆனால் எக்கட்சியில் சேர்ப்பார்கள்? எல்லாம் சுயநலம்

இன்று உதயநிதி இடத்திற்கு அவரை போல கொள்கையாளர்தான் வரவேண்டும்? விடுவார்களா?

அதனால் இங்கு பாஜக நுழையமுடியாது என்பதெல்லாம் மண்கோட்டையினை கட்டிவைத்துகொண்டு கனவு காணும் விஷயங்கள்

பாஜகவினை எதிர்கும் அளவு அது இரும்பு கோட்டையோ, நல்ல திராவிட‌ தளபதிகளோ தலைவனோ இல்லை

ஆச்சரியமாக தமிழகத்தில் பாஜகவிற்கும் நல்ல முகங்கள் இல்லை, அப்படி மிக சரியான முகத்தை நிறுத்தினால் இங்கும் நிச்சயம் மாற்றம் நிகழும்

 
 

தமிழகத்திலும் நம்மை வீழ்த்தி பாஜக ஆட்சிக்கு வருமா?

Image may contain: outdoor

இன்னும் கொஞ்சநேரத்தில் இங்கு லட்டு வழங்கபடும்….

இந்த கட்டிடம் பிறமாநிலங்களின் வெற்றிக்கு லட்டு வழங்குவதற்காகவே இங்கு அமைக்கபட்டிருக்கின்றது, அவ்வளவு நல்ல மனது அவர்களுக்கு


 கர்நாடக முடிவு தெரிந்தாயிற்று, இனி அடுத்த தேர்தல் எங்கே? ராஜஸ்தானா?

இனி அங்கு கச்சை கட்டுவார்களா?

எப்படியும் தமிழ்நாட்டு சனியன்கள் 3 ஆண்டுகளுக்கு அசையாது என தெரிகின்றது, அடுத்த மாநிலங்களாவது மகிழ்ந்திருக்க எதிர்ப்பார்ப்போம்


Image may contain: 1 personஎன்ன சொல்லுங்கள், அக்காவினை பற்றி ஒரு கருத்தினை கணித்தால் மிக சரியாக நிறைவேற்றி கொடுப்பார்கள்

இதோ லட்டு கொடுத்தாயிற்று

இனி தாமரை மலர்ந்தே தீரும் என அக்கா சொல்வார், நாம் தமிழ்நாட்டை தவிர என திருத்த வேண்டும்

பெங்களூர் பாஜக கும்பலில் ஆடும் ஒருவரை பார்க்க எஸ்.வீ சேகர் போலவே இருக்கின்றது


பக்தாஸுக்கு இன்று தீபாவளி , இனி ஆடி தீர்ப்பார்கள்

தமிழகத்தில் என்னவோ சத்தமே இல்லை. எல்லா சவுடால் பார்ட்டிகளும் வடகொரிய அதிபர் போல் மகா அமைதி

வட போச்சே வடிவேலு போல பல முகங்கள்


Image may contain: 6 people, people smiling, people sitting and indoor

என்னது? இப்படி தமிழகத்திலும் நம்மை வீழ்த்தி பாஜக ஆட்சிக்கு வருமா?

இப்பொழுது நடப்பதே அவர்கள் ஆட்சிதானே, நம்மை வீழ்த்தி எல்லாம் வரமாட்டார்கள். நம்மாலே வருவார்கள்

சும்மாவா நம்மை விட்டு வைத்திருக்கின்றார்கள்??

 


Image may contain: 1 personஇனி நான் கன்னடத்துல எப்படி நடமாடுவேன்?

எப்படி? எப்படி?

அந்த மோடிய அப்படியே பிடிச்சி…………

 
 

முடிவு வீரமணிக்கு முன்பே தெரியும் போல, அப்பல்லோவில் சில நாட்களுக்கு முன்பே அட்மிட் ஆகிவிட்டார்


பாஜக வெற்றியினை கூட சகிக்கலாம்

ஆனால் மங்கூஸ் மண்டையன் மனுஷ்யபுத்திரன் இப்பொழுது ஒரு கவிதை எழுதுவான் பாருங்கள், அதை கண்டால் காந்தியின் சாம்பலுக்கே கோபம் வரும்


Image may contain: 1 person, smiling, textகன்னடம் நுழைவு வாயிலாக இருக்கலாம்

ஆனால் பாஜகவினை பின்வாசல் வழியே ஓட அடிக்க தமிழகம் தயாராக இருக்கின்றது.

Image may contain: one or more people, people standing and textஊன்ற காலே இருக்காது, ஏற்கனவே “கை”யினை முறித்து போட்ட தமிழகம் இது

(3 முட்டை குடிச்ச மமதைலே பேச கூடாது ராகவா, சண்டைங்கிறது வேற..)

 

இப்பொழுதெல்லாம் தோற்றால் வாக்கு மெஷின் மேல் பழிபோடுவது வழக்கமாயிற்று

தோல்விக்கு வேறு காரணங்களை தேடலாம்

வாக்கு வித்தியாசம் 1% ஆனால் காங்கிரஸ் தோல்வி என சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

இச்சிக்கல் அன்றே வந்தது, விகிதாச்சார வாக்குமுறைக்கு இந்தியா மாறவேண்டும் என்றெல்லாம் பலர் சொன்னார்கள். காங்கிரஸ் விடாபிடியாக மறுத்தது

இனியாவது விகிதாச்சார வாக்குக்கு இத்தேசம் மாறட்டும்


Image may contain: 2 people, people smiling, close-up21 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்கின்றது : செய்தி

“தப்புங்கோவ்…..நாங்க 22வது மாநிலங்கோவ்….”


தினகரனோ, திவாகரனோ பெங்களூர் பக்கமே செல்லமுடியாது

Image may contain: 1 person, sitting

முந்தைய காங்கிரஸ் சித்தராமையா அரசு மூலம் சசிகலா சிறையில் பெற்ற சலுகைகள் ஏராளம், எல்லாம் அரசியல் கணக்கு

இந்த ரூபாதான் அதனை வெளிகொண்டுவந்தார், அவருக்கு சித்தராமையா கொடுத்த இடைஞ்சல் கொஞ்சமல்ல‌

இனி இந்த பெண்சிங்கம் சிலிர்க்கும், தியாக தலைவி சின்னம்மா இனி உண்மையிலே ஊதுபத்தி உருட்டவேண்டியதுதான்.

தினகரனோ, திவாகரனோ பெங்களூர் பக்கமே செல்லமுடியாது

 
 

திருமுருகன் காந்தி ஆவேசம்

ஈழத்தில் செத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த யாரிடம் அனுமதி வாங்க வேண்டும் : திருமுருகன் காந்தி ஆவேசம்

திருப்பெரும்புதூரில் செத்த 17 பேருக்கு அஞ்சலி செலுத்தினாலோ இல்லை அமைதிபடையாய் சென்று செத்த 1500 இந்தியவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் யார் தடுக்க போகின்றார்கள்

ஏன் இங்கு அஞ்சலி? முள்ளிவாய்க்காலுக்கே சென்று செலுத்தினால் என்ன?

ஆங்கில நாட்காட்டியின் படி நேற்று இஸ்ரேல் சுதந்திர நாள்

Image may contain: one or more people, crowd and outdoor

 

ஆங்கில நாட்காட்டியின் படி நேற்று இஸ்ரேல் சுதந்திர நாள், 70 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அது நேரடி போரினை சந்தித்தது

அன்றிலிருந்து இன்றுவரை அதன் ஆக்கிரமிப்பு தொடர்கின்றது

ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் அந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து பாலஸ்தீனியர் ஆர்ப்பாட்டம் செய்வர், இம்முறை டிரம்பின் அழிச்சாட்டியத்தில் ஜெருசலேம் விவகாரமும் சேர்ந்து அந்த பகுதி பற்றி எரிகின்றது

நேற்றுமட்டும் 41 பாலஸ்தீனியர் சுட்டு கொல்லபட்டிருக்கின்றனர்

எங்காவது சேவ் சிரியா போல சேவ் பாலஸ்தீன் என சத்தம் வருமா என்றால் வராது

காரணம் இவர்கள் அப்படி சத்தமிட வெளிநாட்டு தூதரகங்களில் இருந்து சில சமிக்கைகள் வரவேண்டும்

அப்படிபட்ட போராளிகள்தான் இங்கு இருக்கின்றார்கள்

இன்று இஸ்ரேல் ஆடலாம், ஆனால் ஆண்டவன் எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு வைத்திருப்பான்

அதுவரை ஆடட்டும்

 
%d bloggers like this: