எங்கள் இனம் அழிந்த மே17ல் நினைவேந்துவோம்

எங்கள் இனம் அழிந்த மே17ல் நினைவேந்துவோம், அதை எல்லாம் பற்றி நீ பேசகூடாது

சரி அது ஏன் மே 17?

அன்றுதான் எம் இனம் அழிந்தது, தடுப்பார் யாருமில்லை

1974 யாழ்பாண கலவரத்தில் யார் செத்தார்?

ஈழதமிழர்

1983 ஜூலை கலவரத்தில் 10,000 பேர் செத்தது என்ன?

அதுவும் தமிழர்

1986 வடமராட்சி கணக்கென்ன?

தெரியாது

அப்பொழுதெல்லாம் இந்தியா களமிறங்கி காத்தது

ம்ம் ஆமாம் , காத்தது

அதை எல்லாம் விட்டுவிட்டு ஏன் மே 17?

ம்ம் அன்றைக்கும் செத்தார்கள் , கருணாநிதி தடுக்கவில்லை

சென்னை முதல் வடமாரச்சி வரை எத்தனைமுறை பிரபாகரனை காத்தது இந்தியா? என்ன நன்றிகடன் இருந்தது

அதெல்லாம் பழைய கதை, கடைசியில் கலைஞர் காக்கவில்லை

ஏன் 1991ல் ஒரு சீட்டில் திமுகவினை அமர வைத்தார்களே மறக்க முடியுமா?

அதெல்லாம் போராட்டத்தில் சகஜம்

ஒஹோ, உங்களுக்கெல்லாம் என்ன வேண்டும் அந்த யுத்தம் நின்றிருக்க வேண்டும்

ஆம் நிச்சயமாக, அந்த வீரபோராட்டம் தொடர்ந்திருக்க வேண்டும்

எத்தனை முறை பிரபாகரனை காப்பாற்றியது இந்தியா?

பலமுறை ..ம்ம் அப்படித்தான் காப்பற்றவேண்டும், அது கடமை

அது இருக்கட்டும் காப்பாற்றபட்டு என்ன முடிவுக்கு வந்தார்

வரமாட்டார், நாடு அடையாமல் ஓய்ந்திருக்கமாட்டார்

மண்ணாங்கட்டி 1980 முதல் கிட்டதட்ட 28 ஆண்டுகாலம் அடையாத நாட்டை அதன் பின் அடைந்திருப்பாரா?

அதெல்லாம் தெரியாது, யுத்தம் நின்றிருக்க வேண்டும் பிரபாகரன் உயிர்தப்பி இருக்க வேண்டும்

தப்பினால்

யுத்தம் தொடரும்

அதவாது கொன்று கொண்டே இருப்பீர்கள்

ஆமாம், யாரெல்லாம் குறுக்கே வருகின்றார்களோ அவர்களை எல்லாம் கொல்வோம்

ஆனால் சிக்கிகொண்டால் இந்தியா காப்பாற்ற வேண்டும்

ஆம் கண்டிப்பாக,…

அப்படி காப்பாற்றிவிட்டால் யாரையும் புலிகள் கொல்வர்

ம்ம் போராட்டம் என்றால் அப்படித்தான்

1987ல் வடமாராட்சியில் ராஜிவ் காத்த பிரபாகரன் பின் அவர்மேலே பாய்ந்தார், 2009ல் காக்கபட்டிருந்தாலும் பின் யார் மேல் பாயமல் இருப்பார்?

போராட்டம் என்றால் சாவுகள் தடுக்க முடியாதவை

ஒஹோ , யாராவது செத்துகொண்டே இருக்க வேண்டும், அதற்கு இங்கிருந்து ஊளை இட்டுகொண்டே இருக்க வேண்டும்

அது ஆதரவு

எத்தனயோ இடங்களில் ஈழதுயரம் நடந்தது அதை எல்லாம் விட்டுவிட்டு ஏன் மே 17

அன்றுதான் புலிகள் முற்றிலும் அழிந்தனர்

இந்த டெலோ, புளாட், எபிஆரெல்ப், ஈரோஸ் இயக்கம் அழிந்த நாளெல்லாம் பற்றி பேசமாட்டீர்கள்

ஆமாம்

ஏனென்றால் அந்த இயக்கம் எல்லாம் புலிகளால் அழிக்கபட்டது

ஆமாம், அதனால் பேசமாட்டோம்

ஆக மே 17 புலிகள் அழிந்ததுதான் கவலை , மக்கள் அழிந்தது அல்ல‌, ஜூலை கலவரத்தில் செத்த தமிழருக்கு அஞ்சலி செலுத்தினீரா

இல்லை

யாழ்பாண கலவரத்தில் செத்தவருக்கு அஞ்சலி உண்டா?

இல்லை

இந்த அமைதிபடையாக சென்று செத்தானே 1500 இந்திய வீரன் அவனுக்கு என்றாவது அஞ்சலி செலுத்தினீரா

இல்லை

ஈழவிவகாரத்தில் தலையிட்டு செத்தாரா ராஜிவ், அவரோடு 17 பேர் செத்தார்களே தமிழர்கள் அவர்களுக்கு என்றாவது அஞ்சலி உண்டா

இல்லை

புலிகளால் கொல்லபட்ட தமிழர்களுக்கு என்றாவது அஞ்சலி உண்டா?

இல்லை

அமிர்தலிங்கம், பத்மநாபா, சபாரத்தினத்திற்கு ஒரு தீக்குச்சியாவது உண்டா

இல்லை

பின் என்ன மே 17?

எங்களுக்கு இந்தியாவினை, கலைஞரை எல்லாம் திட்ட ஒரே வாய்ப்பு இதுதான், இதிலும் புலிகளின் தவறை சொல்லவே மாட்டோம், இந்தியாவினை மட்டும் திட்டிகொண்டே இருப்போம், இதைவிட்டால் வேறு வாய்ப்பே இல்லை

 

காவேரியினை பறிகொடுத்தது யார்

காவேரி விவகாரத்தில் ஓரளவு நியாயத்துடன் கொஞ்சம் குழப்பத்துடன் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது

அதாவது காவேரி வாரியம் அமைக்கபடுமாம், அது டெல்லியில்தான் இயங்குமாம். இரு மாநிலங்களும் அதனை கேட்காமல் புது அணை கட்ட கூடாதாம்

நீர் பகிர்வினை இதுதான் பார்த்துகொள்ளுமாம்

இந்த முடிவினை அரசிதழில் அச்சடிப்பார்களா என்பது பற்றி உரிய தகவல் இல்லை

ஆனால் இவர்களை தாண்டி மத்திய அரசுக்கு அதிகாரமில்லை, என்ன நடந்தாலும் வாரியமே பொறுப்பு என உச்சநீதிமன்றம் துண்டை உதறி தோளில் போட்டுவிட்டு கிளம்பிற்று

இதெல்லாம் சரி, அடுத்தால் சொல்லியிருப்பதுதான் காமெடி

இரு மாநில அரசுகளும் முடிவெடுக்க முடியாவிட்டால் மத்திய அரசு உத்தரவிடுமாம்.

இதில் தமிழக அரசு கேட்க வேண்டிய கேள்வி இரண்டு

முதலாவது என்றைக்கு கன்னடம் மத்திய அரசு சொல்லி நீர் திறந்திருக்கின்றது?

இரண்டாவது சமீபத்தில் உத்தரவிட்ட 4 டிம்சி நீர் வரவே இல்லையே?

இது அவ்வளவு சரியான தீர்ப்பு என தெரியவில்லை

இனி இந்த வாரியத்தில் தகறாறு வரும், வாரியம் மத்திய அரசிடம் செல்லும், அது நீதிமன்றம் செல்லும்

பின் என்னாகும்?

வழக்கு முதலில் இருந்தே தொடங்கும்

காவேரியினை பறிகொடுத்தது யார் என்ற முதல்வர் வரிசையில் பழனிச்சாமியும் சேர்ந்துகொள்வார்

எனினும் வாரியம் அமைக்கபட்டு எல்லாம் முறையாக நடந்தால் மிக்க மகிழ்ச்சி

இப்போதைக்கு தீர்ப்பு ஓரளவு நியாயமாக வந்திருப்பதால் இந்த தமிழக கட்சிகளும், குபீர் போராளிகளும் வாய்திறக்க முடியாது, பூட்டு போட்டாயிற்று

 

அண்ணே பிராமணர் பத்தி உங்களுக்கு தெரியாது

Image may contain: 2 people, people smiling

“அண்ணே பிராமணர் பத்தி உங்களுக்கு தெரியாது, ஒருத்தரையும் முன்னேற விடமாட்டாங்க‌ , எல்லா வாய்ப்பையும் பறிச்சுட்டு நம்மளை அடிமையா வச்சிருவாங்க‌

பெரியார் யார்டா?

புரட்சியாளர், அவர் காலத்துல பிராமண அட்டகாசம் அப்படி

அது தெரியும், அவர் சொத்துமதிப்பு எவ்வளவு?

அண்ணே அவர் சொத்து அன்னைக்கே பல லட்சம் இப்போ ஏராளமான கோடிண்ணே

எல்லாம் எப்படி வந்தது?

உழைப்புண்ணே அவங்க அப்பா அப்படி உழைச்சார், பெரியாரும் நல்ல உழைச்சி சேத்துட்டுத்தான் வந்தாரு

ஆக அந்த காலத்திலே உழைச்சி சொத்து சேத்துருக்காங்க‌

கண்டிப்பாண்ணே

இப்போதானடா பிராமணர் யாரையும் வாழ விடமாட்டங்கண்ணு சொன்ன, அவர் அவ்வளவு சொத்து பிராமணர் காலத்துலே சேர்த்திருக்க முடியதுடா எப்படிடா?

அதெல்லாம் உழைப்புண்ணே வேலை செய்யணும்

அதான் நாய நானும் சொல்றேன், பிராமணன நோண்டாம ஒழுங்கா வேலை செய், கஷ்பட்டு உழைச்சி பாரு. வாழ்க்கையில முன்னேறுவ, இல்ல இப்படித்தான் அழுதுட்டே இருப்ப போடா..”

 

எஸ்விசேகர் வீட்டுமேல கல்லெறிந்த விவகாரத்தில்….

எஸ்விசேகர் வீட்டுமேல கல்லெறிந்த விவகாரத்தில் சிபிஐக்கு மாற்றக்கோரி பொதுநலவழக்கு

எங்கே? நிர்மலா தேவி விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை கோரட்டும் பார்க்கலாம்

ஜெயா மர்மத்திலே அப்படி ஒரு கோரிக்கை வரவில்லை

எஸ்வீசேகர் வீட்டுமேல் யார் கல்லெறிந்திருப்பார் என்றால் அவரே எறிந்திருப்பார், காரணம் அந்த பத்திரிகையாளர் பற்றிய பதிவு அவரின் சுயசாதிக்கே இழுக்கு

மனிதர் அப்படி வகையறா, அதனால் அவரே அவர் வீட்டில் கல்வீசி இருக்க வாய்ப்பு அதிகம், இதற்கா சிபிஐ?

வேண்டுமானால் யாருடைய பாதுகாவலில் சேகர் தலைமறைவாய் இருகின்றார் என கண்டுபிடிக்க சிபிஐ விசாரணை கோரலாம், அதுதான் விஷயம்

சிக்கிமில் என்ன நடந்தது?

No automatic alt text available.

சிக்கிமில் என்ன நடந்தது என பலர் கேட்கின்றார்கள், நடந்தது இதுதான்

இந்தியா பாகிஸ்தானுக்கு ராட்கிளிப் கோடுபோல, இந்தியா சீனா இடையே மக்மோகன் எல்லைகோடு ஒன்று உண்டு, ஆனால் சீனா ஒருபோதும் மதித்ததில்லை

அதுவும் மாவோ வந்தபின் கோட்டையே அழித்துவிட்டார்கள்

திபெத் தவிர, சிக்கிம் பூட்டான் என பல நாடுகளை அபகரிக்கும் திட்டம் சீனாவிற்கு இருந்தது, சிக்கிமை முடக்கினால் அருணாசல பிரதேசத்தை முடக்கலாம் எனும் வியூகமும் இருந்தது

நேபாளம் உலகின் ஒரே இந்துநாடு எனும் அரணாக அன்று இந்தியாவிற்கு பாதுகாப்பாக இருந்தது, இப்போது இல்லை

அன்று சிக்கிமில் அரசர் ஆண்டுகொண்டிருந்தார், அவர் பெயர் சோக்யால் இவர் மனைவி அமெரிக்க பெண்மணி

இந்த அமெரிக்க பெண்மணிக்கு இந்தியாவினை அறவே பிடிக்காது, சிக்கிமின் ராணியாக தானே ஆளவேண்டும் எந்நாடும் தலையிட கூடாது என நினைத்துகொண்டிருந்தார்

அமெரிக்கா தன் படைகளை அனுப்பவும், சீனா சிக்கிம் எல்லையில் கொக்குபோல் காத்திருந்த காலம் அது, சிறு சிக்கல் என்றாலும் உள்ளே செல்ல காத்திருந்தார்கள்

அப்பொழுது ராவின் ஏஜெண்டாக தானு என்பவர் சிக்கிமிற்கு அனுப்பபட்டார்

அரசி இந்திய எதிரி, சிறு கலகம் வந்தாலும் சீனபடைகள் புகுந்துவிடும் அபாயம். இருக்கும் ஒரே வாய்ப்பு நேபாளிகள்

ஆம் அரசவம்சம் வேறு, மக்கள் வம்சம் எல்லாம் நேப்பாளிகள்

இந்த நேப்பாளிகளை வைத்துத்தான் ஆட வேண்டும், ஆனால் சிறு கலவரம் என்றாலும் அமெரிக்கா முதல் சீனா வரை உள்ளே பாயலாம்

இந்த சிக்கலான பிரச்சினையினைத்தான் உளவாளி தானு வெற்றிகரமாக கையாண்டு, அரசர் வேண்டுமா ? ஜனநாயகம் வேண்டுமா? எனும் கோரிக்கையினை சாதுர்யமாக இந்தியா வேண்டுமா? வேண்டாமா? என மாற்றி பாட வைத்தார்

சீனாவின் கொடுமைகளை திபெத்தில் கண்ட சிக்கிம் மக்கள் சீனா பக்கம் செல்லாமல் இருப்பதில் இந்திய உளவுதுறை மகத்தான வெற்றி பெற்றது, சீனா சிக்கிமில் வரமுடியா சூழல் இதுதான்

பாகிஸ்தான், அமெரிக்காவுக்கான எல்லா வாசல்களையும் மூடி இந்தியா மட்டுமே சிக்கிமிற்கு பொருத்தம் என சூழ்நிலையினை உருவாக்கி சிறு சேதாரமின்றி சிக்கிமை இந்தியாவோடு அவர்தான் இணைத்தார்

இதற்கு வழிகாட்டியாவர் இந்திரா

இதுபோக இன்னும் பல சாகசங்கள் நிகழ்த்தபட்டன என்றாலும் ஓரளவு வெளிவந்த தகவல் இதுதான்

இப்படித்தான் சிக்கிம் இந்தியாவோடு இணைந்தது

இதில் உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம், ஈழத்தை வங்கம் போல் இந்திரா தனித்துகொடுக்க விரும்பினாரா? இல்லை இந்தியாவோடு இணைக்க விரும்பினாரா?

ஈழம்பற்றி இந்திரா உறுதியாக சொல்லவில்லை ஆனால் சென்னையில் பிடிபட்ட பிரபாகரனை இலங்கை கேட்டபொழுது அவர் இப்படித்தான் சொன்னார்

“தனி ஈழத்தை நான் ஆதரிக்கவில்லை ஆனால் பிரபாகரன் எனும் பையனை கொடுக்க முடியாது”

அந்த பிரபாகரன் தன் மகனை கொல்வான் என கனவிலும் நினைக்கவில்லை இந்திரா

ஏன் ஈழம் சிக்கலானது என்றால் இரண்டே விஷயம் , இல்லை ஒரே விஷயம்

இங்கு ஏற்கனவே திராவிட நாடு கேட்ட பகுதி தமிழகம், அங்கே தனிநாடு உருவானால் இங்கே நிச்சயம் கொந்தளிப்பர்

அக்கருத்து வந்தபொழுது கலைஞர் ஈழம் அமைந்தால் திமுக அரசியலை விட்டு வெளியேறும் என்றெல்லாம் சொல்லிபார்த்தார், திமுக இல்லை என்றால் திக வராதா? என அக்கோரிக்கை நிராகரிக்கபட்டது

இன்றே அகண்ட ஈழம் அல்லது அகண்ட தமிழ்நாடு கேட்டோர் அன்றே இருந்தனர் இதுதான் முதல் சிக்கல்

இன்னொன்று ஈழத்தை அப்படியே பிரித்து சிக்கிம் போல இந்தியாவோடு இணைக்கும் திட்டமும் பரிசீலனையில் இருந்தது

ஆனால் சிங்களனிடமிருந்து விடுதலைபெற்று இந்தியாவிடம் அடிமையாவதா என சீறியது யாழ்பாணம், குறிப்பாக புலிகள்

இப்படி இழுத்தால் இங்கு எரியும், அப்படி இழுத்தால் அவர்கள் தயாரில்லை

இதனால்தான் நீங்கள் சிங்கள நாட்டில் தனி மாநிலமாய் வாழுங்கள் இதை தவிர வேறு தீர்வு இல்லை ஆனால் அது எங்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக இருக்கும் என்றுதான் அமைதிபடை அனுப்பபட்டது

அதோடு புலிகள் வம்புசண்டைக்கு போக எல்லாம் நடந்து முடிந்துவிட்டது

ஈழத்தை முதலில் கெடுத்தது தமிழக திராவிட கட்சிகள், வங்கம் உருவானாலும் கல்கத்த்த அமைதி ஆனால் ஈழம் அமைந்தால் நிச்சயம் தமிழகம் அமைதியாக இருக்காது

இரண்டாவது ஈழ அமைதியினை கெடுத்தது புலிகள், சாட்சாத் அவர்கள்தான். ஒரு முடிவுக்கும் வரமாட்டோம் நாடு அடைந்து நாங்களே ஆள்வோம் என செய்யகூடாத காரியமெல்லாம் செய்து நாசமாக்கினார்கள்

இந்திரா இருந்திருந்தால் ஈழம் அமைந்திருக்காது, ஆனால் மகா உறுதியான நடவடிக்கை மூலம் பல சர்ச்சைகளை கடந்து அழிவுகளை குறைத்திருப்பார்

ஈழசிக்கலின் மூலம் இதுதான், ஆனால் சிலர் பங்குனி 17, இந்தியா இனம் அழித்தது, கலைஞர் ஈழம் கொன்றான் என சொல்லிகொண்டே இருப்பார்கள். அவர்களை திருத்தவே முடியாது

இந்நாட்டின் வடக்கு மேற்கு எல்லை போலவே தெற்கு எல்லையிலும் அமைதி நிலவ வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு இருக்கின்றது , இத்தேசம் அதனைத்தான் செய்தது

 

வஜுபாய் ருதபாய் வாலா, கர்நாடக கவர்னர்

Image may contain: 1 person, close-up

இந்த கன்னட தேர்தல் முடிவு அந்த நபரை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துவிட்டது, அவர் யார்? அவருக்கு இருந்த வலி என்ன? என்பதை இந்த‌ தேர்தல் முடிவு மூலம் உலகிற்கு தெரிய வாய்ப்பு வந்துவிட்டது

அவர் பெயர் வஜுபாய் ருதபாய் வாலா, கர்நாடக கவர்னர்

இப்பொழுது அவர் கன்னட கவர்னர், ஆனால் முன்பு யார்? என்பதற்கு நாம் 22 வருடம் முன்னோக்கி செல்ல வேண்டும்

அது 1996ம் வருடம் அப்பொழுது திராவிட தமிழன் மூப்பனார் பிரதமராக விடாமல் திராவிட கன்னடர் தேவகவுடாவினை பிரதமராக தமிழக திராவிடர்கள் ஆக்கி வைத்திருந்த நேரம்

(அப்பொழுதும் உன்னை பிரதமராக்கினால் காவேரி விடுவீரா என தமிழக திராவிட சிங்கங்கள் கேட்கவில்லை என்பது வேறு விஷயம்)

அப்பொழுது குஜராத் பாஜக தலைவராக இருந்தவர் இந்த வஜுபாய் வாலா, அந்த தேர்தலில் குஜராத்தில் பாஜக ஓரளவு வென்றிருந்தது, மோடி எல்லாம் இந்த வாலாவிற்கு குனிந்து நின்ற நேரம் அது

121 உறுப்பினருடன் பாஜக அரியணை ஏறி இருந்தது, சுரேஷ் மேத்தா முதல்வராக இருந்தார், குஜராத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த முதல் தருணம் அது

தேவகவுடா அந்த ஆட்சியினை கலைத்தார், கட்சியினை எல்லாம் உடைத்தார் பல அட்டகாசங்கள் நடந்தன. தேவகவுடாவினை இயக்கியது காங்கிரஸ்

அப்பொழுது இந்த அநியாயத்திற்கு எப்படி உடன்பட்டீர்கள் என அன்றைய குஜராத் கவர்னர் பால்சிங்கிடம் கண்ணீர் விட்டவர் இந்த வஜுபாய் லாலா

அந்த வஜுபாயிடம் தான் இன்று தேவகவுடா தன் மகனுக்காக நிற்கின்றார்

விடுவாரா வஜுபாய்? நாட்டாமை படத்து பொன்னம்பலம் போல , “22 வருஷ்மாய் இந்த திருவிழாவிற்குதான் காத்துகொண்டிருந்தேன், வாங்க..” என தொடை தட்டி முழங்குகின்றார்

முற்பகல் செய்தால் பிற்பகல் விளையுமல்லவா?, தேவகவுடா குஜராத்தில் விதைத்தது இப்பொழுது கன்னடத்தில் விளைந்திருக்கின்றது

அன்றுபட்ட வலி வஜூலாவிற்கு மறக்குமா? தன் வடுக்களை தடவிக்கொண்டே சிரிக்கின்றார்.

தகப்பன் செய்யும் பாவம் பிள்ளையினை பாதிக்கும் என்பது குமாரசாமி விஷயத்தில் சரியாகின்றது.

கன்னடத்தில் ஆட்சி இழுக்கும் மர்மம் இதுதான், எடியூரப்பாவின் மாபெரும் நம்பிக்கையும் இதுதான்

காலம் எப்படி எல்லாம் ஆட்டம் போடுகின்றது?

இதனால் அறியபடும் நீதி என்னவென்றால் தமிழிசை போன்றோரை, எச்.ராசா போன்றோரை அற்பமாக எண்ண வேண்டாம்

பின்னொரு நாளில் அவர்களும் கவர்னராகி பெரும் அட்டகாசங்கள் செய்ய வாய்ப்பு இருக்கின்றது

ஏதோ ஒரு மாநிலம் பிற்காலத்தில் படாதபாடு படபோகின்றது.

 
 

இந்தியாவுடன் சிக்கிம் இணைந்த நாள்

No automatic alt text available.

இந்தியா விடுதலை பெறும்பொழுது சிக்கிமும் விடுதலைபெற்றது, ஆனால் மக்கள் இந்தியாவோடு இணைவதை விரும்பவில்லை

இந்த பூட்டான் போல சிக்கிமை தன் கட்டுபாட்டில் வைக்கலாம் என திட்டமிட்டது இந்தியா, அதுவரை சிக்கல் இல்லை

ஆனால் சீனபோருக்கு பின் நிலமைகள் மாறின, அதன் முக்கியத்துவம் அதிகமானது, ஆனால் சிக்கிம் அரசரோ இணைய மறுத்தார்

இன்று சீனா முறுக்கி நிற்கும் டோக்லஹாம் பகுதி, அந்த நாலந்துலா பகுதி எல்லாம் சிக்கிமின் பகுதிகள்

அந்த சிக்கிம் இல்லை என்றால் கிழக்கேஉள்ள மாநிலங்களுக்கான தொடர்பு கடுமையாக பாதிக்கபடும்

டோக்லாஹாம் பகுதியினை துண்டித்தால் நிச்சயம் அருணாசல் பிரதேசம் இந்திய கட்டுபாட்டில் இருக்க ஏகபட்ட சிக்கல் வரும், சீனா எதிர்பார்ப்பது அதுதான்

கோழிகழுத்து பகுதி என அழைக்கபட்டு இப்பொழுது சீனா கடும் எரிச்சலோடு பார்க்கும் பகுதி அதுதான், சீனர்களுக்கும் குறி இருந்தது ஆனால் திபெத்தை ஆக்கிரமித்த சர்ச்சை இருந்ததால் அமைதி காத்தார்கள்

எனினும் இடம்பார்த்து அடிக்க காத்திருந்தார் மாவோ

சிக்கிம் யாருக்கு எனும் நிலையில் இந்திராவின் வழிகாட்டலில் இந்திய உளவுதுறை அட்டகாசமான நகர்வுகளை மேற்கொண்டது, ஒருபக்கம் நேபாளிகளால் சிக்கல் வரும்படி பார்த்துகொண்டே இன்னொருபக்கம் சிக்கிம் அரசருக்கு தனிபட்ட முறையில் செக் வைத்தது இந்தியா

கிடுக்கிபிடியில் சிக்கிய நேபாளம் வேறு வழியின்றி இந்தியாவோடு இணைந்தது

வங்கப்போர் போலவே இந்திய வரலாற்றில் மாபெரும் வெற்றி சிக்கிம் இணைப்பு

1947ல் உங்களோடு சேரமாட்டோம் என இருந்த சிக்கிமை, 1975ல் இதே நாளில் காதை பிடித்து இழுத்து வந்து சேர்த்தது இந்தியா

இந்திரா இத்தேசத்திற்கு செய்த மகத்தான காரியம் சிக்கிம் இணைப்பு. அந்த இந்திராவினை மறக்க முடியாது

இந்திய தேசத்தின் பாதுகாப்பிற்கு என்ன செய்யவேண்டுமோ அதை எல்லாம் துணிந்து செய்தார் இந்திரா

காங்கிரஸ் இத்தேசத்திற்கு என்ன செய்தது என கேட்டால், ஒரு வார்த்தையில் சொல்லமுடியாது, சொல்ல ஆயிரம் விஷயங்கள் உண்டு

இந்திய உளவுதுறையின் சாதனைகளும் கொஞ்சமல்ல, அவ்வகையில் உளவுதுறையின் மாபெரும் வெற்றிநாள் இது

 

லெபனானின் ஹெஸ்புல்லா, பாலஸ்தீனத்தின் ஹமாஸ், ஏமனின் ஹவுத்தி

Image may contain: outdoor

லெபனானின் ஹெஸ்புல்லா, பாலஸ்தீனத்தின் ஹமாஸ், ஏமனின் ஹவுத்தி முதனால தீவிரவாதிகளுக்கு ஈரான் உதவுவதால் அதன் மீது பொருளாதார தடையினை அமெரிக்கா அறிவித்துவிட்டதாம்

ஆனால் இந்தியாவில் தீவிரவாதத்தை ஏவிவிடும் பாகிஸ்தான் இவர்களுக்கு நண்பன், அதனை முற்றிலும் முறிக்கமாட்டார்கள்

சிரிய தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வான்படையோடு களமிறங்குவார்கள்

அமெரிக்கா எது செய்தாலும் சரி, அதனையே ஈரான் செய்தால் மாபெரும் தவறு.

பாகிஸ்தான் செய்தால் கண்டுகொள்ளவே மாட்டார்கள்

 

இலங்கையின் தந்திரம் மகா நுட்பமானது

Image may contain: 2 people, people smiling, beard

 

என்ன சொல்லுங்கள், இந்த இலங்கையின் தந்திரம் மகா நுட்பமானது

புலிகளை ஒழிக்க அமெரிக்காவின் உதவி தேவைபட்டபொழுது நெருங்கினார்கள், அமெரிக்காவும் நிரம்ப உதவியது. ரசாயாண ஆயுத சிக்கல்,போர்குற்றம் வராமல் இலங்கையினை காத்துகொண்டதில் அமெரிக்க பங்கு அதிகம்

எப்படி நெருங்கினார்கள் என்றால் 1991ல் வளைகுடா போரின்பொழுது இந்தியவிமான நிலையத்தில் அமெரிக்க விமானங்களுக்கு எரிபொருள் வழங்கியதை ராஜிவ் கண்டிக்க அது தடைபட்டது

அப்பொழுது “பிளிஸ் கம் ஹியர்” என வலிய அழைத்து எரிபொருள் கொடுத்தது இலங்கை

அப்பொழுது கைகேயி போல வரம் வாங்கிய இலங்கை பின் அந்த வரத்தை புலிகளை அழிக்க பயன்படுத்தியது

இப்பொழுது புலிகள் இல்லை, ஒரு பொட்டுவெடி கூட வெடிப்பதில்லை

இந்நிலையில் சட்டென ஈரானுடன் கைகோர்த்துவிட்டது இலங்கை. இலங்கைக்கு ஏராளமான எரிபொருளை கொடுக்கின்றது ஈரான்

இலங்கையும் தன் தேயிலை எல்லாம் ஈரானுக்கு கொடுக்கின்றது

இப்பொழுது தடைவிதித்த காலத்தில் கூட தைரியமாக ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இலங்கை, அதன் உச்ச மத தலைவரை அழைத்து விருந்தெல்லாம் கொடுக்கின்றது

அவரும் கொழும்பு வந்து அமெரிக்கா ஒழிக, அது சனியன், அது திருந்தாது என்றெல்லாம் சொல்லிகொண்டிருகின்றார், இலங்கை அதிபரும் சிரிக்கின்றார்

இது டிரம்ப் கோஷ்டிக்கு கண்களை சிவக்க வைக்கின்றது

இனி பாருங்கள், அமெரிக்காவில் மே 17, 18 எல்லாம் அணல் பறக்கலாம், பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என பிரபல வெளிநாட்டு பத்திரிகை எழுதலாம், இங்கும் பலர் பயங்கர வேடிக்கை காட்டலாம்

 

கர்நாடகா வோட்டும் வேட்டும்

Image may contain: 3 people, people sitting and text

“தகப்பன்னா தேவகவுடா மாதிரி இருக்கணும் மகனே, எனக்கு அப்படி அப்பா வாய்க்கவில்லை

ஆமாம்பா, சோனியாகாந்தி கூட ராகுலுக்கு வழிவிட்டுவிட்டார்கள் , எனக்கும் அப்படி வாய்க்கவில்லை”


Image may contain: 3 people, people sitting“அப்பா, நீங்க கொஞ்சநாளைக்கு தேவகவுடா வீட்டுக்கு போய் டியூசன் படிங்கப்பா..,

இந்த காடுவெட்டி எல்லாம் நம்பிகொண்டிருந்தால் வேலைக்கே ஆகாது”

 

Image may contain: 2 people, beard and text“பாருங்க தமிழ்நாட்டில் 117 எம்.எல்.ஏக்களை ஒரு பைசா செலவில்லாமல் வாங்கி ஆட்சி செய்கின்றோம்

ஆனால் இந்த கன்னடத்தில் 10 எம்.எல்.ஏ வாங்க முடியல்லை.

இங்கேயும் ஒரு பழனிச்சாமி கும்பல் கிடைச்சிருந்தா, இவ்வளவு கஷ்டம் தேவையா?”


Image may contain: 1 person, smiling

“டேய்…..

எவனாவது குமாரசாமி மாதிரி உங்களுக்கும் யோகம் வரும், அடுத்த தேர்தல்ல தனியா நில்லுங்கண்ணே முதல்வர் ஆகலாம்னு சொல்ல வந்தீங்க……………”.

 

Image may contain: one or more people

கர்நாடகத் தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை இழந்துள்ளனர் : செய்தி

“அதே மாதிரி அடுத்த தேர்தலில் இங்கேயும் நடந்துருமோ? அதை நினைச்சாலே கண்ணு கலங்குது..”


Image may contain: 1 person, close-up

அவசரபட்டு லட்டு கொடுத்துட்டோமோ? இனி திருப்பி கேட்டா நல்லா இருக்காது

இன்று வேப்பிலை அரைத்து, மக்களை பிடித்து வைத்து கதற கதற வாயில் கொடுத்துவிடலாம்

 


கர்நாடகத்தின் வளர்ச்சி தடுக்கப்படுவதை பாஜக அனுமதிக்காது : பிரதமர் மோடி

அதாவது எடியூரப்பா முதல்வராக மாட்டார் என சொல்கின்றாராம், நல்லது.


தமிழ்நாட்டில்தான் பாலமும், பஸ் நிலையமும் இடிகின்றன என்றால், வடக்கே வாரனாசியிலும் மேம்பாலம் இடிந்து பலர் இறந்திருக்கின்றார்கள்

ஆக கட்டுமானத்தில் ஊழல் என்பது திராவிட ஆட்சிக்கும், ராமர் ஆட்சிக்கும் பொது சொத்தாகிவிட்டது

தமிழகத்தில் சுடுகாட்டு கூரை இடிந்து 2 பேரும், பஸ் நிலையம் இடிந்து 5 பேரும் , ஆற்றுபாலம் ஆற்றில் போனதையும் வசமாக மறைத்துவிட்டு வாரனாசியில் பாஜக ஊழல் என பலர் குதிக்கின்றார்கள்