முள்ளிவாய்க்கால் நினைவாக பிரபாகரன் நினைவலைகள் என ஆளாளுக்கு வந்தாயிற்று

முள்ளிவாய்க்கால் நினைவாக பிரபாகரன் நினைவலைகள் என ஆளாளுக்கு வந்தாயிற்று

அதில் திருமா என்பவர் சொன்ன கோழிகறி கதையும் வருகின்றது

உண்மையில் சைமனின் ஆமைகறி கடைசி காமெடி , அதற்கு முன்பு திருமாவின் கோழிகறி, ஜெகஸ்கஸ்பரின் இறால் கறி போன்றவை பிரசித்திபெற்றவை

ஆளாளுக்கு ஆமை கறி சைமன் என்கின்றார்களே தவிர, எனக்கு சிங்கவால் இறால் கறி கொடுத்தார் பிரபாகரன் என்ற ஜெகத் கஸ்பர் சாமியாரின் கட்டு கதையினையோ

“எனக்கு கோழிகறி கொடுத்தார் பிரபாகரன் நான் சைவம் என்றேன், இது என்ன சைவ சிறுத்தையா?” என காமெடி செய்தார் என சொன்ன திருமாவினையோ யாரும் கண்டுகொள்ளவில்லை

இன்று சிலர் அதே கோழிகறி காமெடி பேச தொடங்கியாயிற்று, இது போக எனக்கு பிரபாகரன் நண்டு உடைத்து கொடுத்தார் போன்ற கதைகளும் உண்டு

கஸ்பர் விட்டதும் கப்சா, திருமா விட்டதும் பெரும் ரீல் ஆனால் சீண்டுவாரில்லை

ஆனால் ஆமைகறி சைமன் மட்டும் மாட்டிகொண்டார், காரணம் அந்த வாய்

அன்றே புலிகள் மேல் ஒரு கவனம் இருந்தது, மற்ற போராளிகளை விட புலிகள் உணவிலே கவனமாக இருந்தனர், பிரபாகரனே நன்றாக சமைக்க கூடியவர்.

புலிகள் பயிற்சியில் சமையலும் ஒரு பாடம்

சந்திரிகா கடும் பொருளாதார தடை காலத்தில் புலிகளுக்கு உணவு தட்டுபாடு இருந்தது அப்பொழுது ஒரு கப்பல் புலிகளின் ஆயுதகப்பல் என பிடிபட்டபொழுது அதில் இருந்த பொருளை பார்த்து சிரிப்பாய் சிரித்தது சிங்களம்

ஆம், அது தாய்லாந்தில் இருந்து வந்த உடும்பு கறி

இப்படி புலிகளின் உணவு வெறி இன்னொரு பக்கம், அதை எல்லாம் புலிகள் கூடுமானவரை மறைத்தே வந்தனர்

இப்பொழுது ஆளாளுக்கு ஆமை, இறால், கோழி என சொல்லி அதனை திறக்கின்றனர்

புலிகளிள் இருந்தால் இப்படித்தான் பேசிகொண்டிருப்பார்கள், அதில் யாழ்பாண மேலாண்மையும் இருக்கும்

அன்றே நம்மை கள்ளதோணி என்றும், வழியற்றதுகள் என்றும் சொன்னவர்கள் யாழ்பாணத்தார் , தமிழக தமிழரை அவர்கள் எள்ளி நகையாடியது கொஞ்சமல்ல,

இவர்கள் ஆளாளுக்கு கோழிகறி, ஆமைகறி, கோழிகறி, நண்டு என பேசிகொண்டிருக்க அன்று புலிகள் அவர்களுக்குள் இப்படித்தான் பேசியிருப்பார்கள்?

“பாத்தியளே ஆமை கறிக்கும், இறாலுக்கும், கோழிக்கும் வக்கற்ற பயல்களை கூட்டி பேசியிருக்கோம். இவனுகள் வாழ்க்கையில் ஆமைகறி கூட பார்த்ததில்லை போல‌

இவைகள் எங்கிருந்து நமக்கு உதவும்?

சிங்களன் ஆட்டுகறி கொடுத்தால் இவையள் அங்கே போய்விடுமோ என்ற கனத்த பயம் வந்துட்டு பாருங்கோவன்”

 
 

ஒரு வழியாக காவேரி வழக்கு முடித்து வைக்கபட்டிருக்கின்றது

Image may contain: bridge, outdoor, water and nature

ஒரு வழியாக காவேரி வழக்கு முடித்து வைக்கபட்டிருக்கின்றது, இதுதான் தீர்ப்பு இதனை அரசு இதழில் உடனடியாக அச்சிட்டு ஆகவேண்டியதை பாருங்கள் என சொல்லிவிட்டது உச்சநீதிமன்றம்

இனி மேலாண்மை குழு அமைக்கும் விஷயம் நடைபெற வேண்டும், ஒழுங்காக நீர் பகிரபட வேண்டும்

இதில் இரு விஷயங்கள் சர்ச்சையாகும், முதலாவது நல்ல மழைபெய்யும் நேரத்தில் வெள்ள கணக்கை எல்லாம் நாங்கள் திறந்துவிட்ட நீர் என கன்னடம் கணக்கு காட்டும்

இன்னொன்று வறண்ட காலத்தில் எப்படி பங்கிடபோகின்றார்கள் என்பது

இதெல்லாம் நிபுணர்கள் பிரச்சினை பார்த்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது

இது இன்று கன்னடத்தில் அணல் வீசும் முடிவுதான், அவர்கள் எடியூரப்பா சிக்கலை பார்த்துகொண்டிருக்க, வாட்டாள் நாகராஜும் டெப்பாசிட் போன அதிர்ச்சியில் இருப்பதால் இதனை இன்னும் கண்டுகொள்ளவில்லை

இனி இப்பக்கம் வரகூடாது என நீதிமன்றம் சொல்லியிருப்பதால் கலைஞர் 1970களில் தொடுத்த வழக்கு, அவர் 1989ல் அமைத்த நடுவர்மன்ற தீர்ப்பினை போலவே இன்று முடிந்திருக்கின்றது

இனி தமிழகத்தில் காவேரி அரசியல் செய்யமுடியாது, மத்திய அரசு தமிழரை காவேரியில் வஞ்சிக்கின்றது போன்ற குரல்கள் கேட்காது

இப்பொழுது கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுதான்

அக்கும்பல் ஒருமாதிரி காமெடி ரகம், காவேரியினை மீட்ட சோழன் பழனிச்சாமி, காவேரியினை ஓடவிட்ட அகத்திய முனிவன் பன்னீர்செல்வம் என நிச்சயம் வருவார்கள்

கலைஞரும் ஜெயலலிதாவும் கொண்டுவராத காவேரியினை நாங்கள் கொண்டுவந்தோம் என கொஞ்சமும் வெட்கமின்றி சொல்வார்கள்

அதை எப்படி எதிர்கொள்வது என்றுதான் தமிழகம் ஆழ்ந்த கவலையில் உள்ளது

 

  இன்று மாலை News7 சேனலில் வாஜ்பாய் அணுகுண்டு வெடித்த நிகழ்வு

 

இன்று மாலை News7 சேனலில் வாஜ்பாய் அணுகுண்டு வெடித்த நிகழ்வு பற்றி விவாதிக்க போகின்றார்களாம்

அதை அந்த மே11லே செய்திருக்கலாம் ஏன் ஒருவாரம் கழித்து வெடிக்கின்றார்கள் என தெரியவில்லை

சிலர் அழைத்து விளம்பரத்தில் உங்கள் பதிவின் சாயல் என்றார்கள், அப்படி எல்லாம் இருக்கமுடியாது. அவர்கள் தனி தகவல் திரட்டி ஒளிபரப்பலாம்

இங்கு அச்சேனல் வராது, வாய்ப்பு உள்ளவர்கள் பார்த்து விஷயத்தை சொன்னால் ஜெயாவிற்கு பன்னீர்செல்வம் இருந்தது போல, கலைஞருக்கு அன்பழகன் இருப்பது போல, மோடிக்கு பழனிச்சாமி இருப்பது போல உங்களுக்கு மிக்க நன்றி உடையவனாய் இருப்பேன்

தேம்ஸ் நதிகரையில் ஒரு தேவதை……

Image may contain: 2 people, people smiling, bridge, outdoor and water

தேம்ஸ் நதிகரையில் ஒரு தேவதை……

(தலைவியின் கண்கள் அழுது அழுது வீங்கி இருக்கின்றன, அந்த பாவி பய திருநாவுக்கரசு அப்படி அழவைத்திருக்கின்றான்,

கெரகம் புடிச்ச பய..அவன் உருப்படவே மாட்டான்)


அண்ணே உங்க தலைவி மகள் இரண்டும் அவர் போல அழகா இல்லண்ணே

ஆமாடா, கலைஞர் மகனுக்கும் அவர் அறிவா இருக்குது.. இதெல்லாம் தமிழ்நாட்டு சோகம்டா

 


கர்நாடகாவில் பாஜக வெல்ல நேர்ந்திருந்தாரோ முதல்வர் பழனிச்சாமி

Image may contain: 1 person

கர்நாடகாவில் பாஜக வெல்ல நேர்ந்திருந்தாரோ என்னமோ முதல்வர் பழனிச்சாமி திருப்பதிக்கு போயிருக்கின்றார்

அவர் மகா பக்தியாக சாமி தரிசனம் செய்திருக்கின்றார், ஜெயலலிதா இல்லாத காலங்களில் அவரால் நிம்மதியாக சாமி கும்பிட முடிகின்றது, இல்லாவிட்டால் ஜெயாவினை மட்டுமே வணங்க வேண்டும்

அப்படி கும்பிட்டுகொண்டிருக்கும் பொழுது ஒரு பூசாரிக்கு சாமி வந்திருக்கின்றது

உரத்த குரலில் கத்தியபடி சாமியாடிய அவர் ,”ஏய்ய் எடப்பாடிய வந்து என்னை பாக்க சொல்லு, தமிழ்நாடு சீரழந்து போய் கிடக்கு அவன் ஒரு மாயயில் இருக்கிறான் அவனுக்கு ஒன்னும் தெரியாது என அவன் இவன் வாடா போடா” என கத்தி ஆடியிருக்கின்றார்

இது என்னடா சோதனை? ராஜபக்சே வரும்பொழுதே வராத சாமி, மோடி வந்தபொழுதே வராத சாமி இப்பொழுது வந்துவிட்டதா என ஆளாளுக்கு அவரை போட்டு விசாரித்திரித்ததில் அவர் மேல் தவறு இல்லை சாமி வந்தது உறுதியாயிற்றாம்

ஆம் அவர் திமுகவோ, ரஜினி, கமல் கட்சியோ அல்ல, சசிகலா ஆளுமல்ல, பன்னீரின் ஏஜென்டும் அல்ல‌

இப்பொழுது சிக்கல் என்னவென்றால் எந்த சாமி தன்னை வந்து பார்க்க சொல்லியது என தெரியாமல் மண்டையினை குழப்புகின்றார்களாம்

இதற்கு ஏன் குழம்ப வேண்டும்

அவர்கள் சாமி , இதய தெய்வம் எல்லாம் அம்மா ஜெயலலிதாதான், நிச்சயம் அவர் வந்தது போல்தான் தெரிகின்றது

அதுவும் சாமி ” இவனுக்கு ஒன்றுமே தெரியாது, வாடா, போடா” என அழைத்ததில் எல்லாம் உறுதிபடுத்த முடிகின்றது

அது ஜெயா தெய்வமேதான்

அவர் இவரை , அந்த ஜெயா இருக்குமிடமான‌ “அங்கு” வந்து பார்க்க சொன்னால் இவர் கிளம்பவேண்டாமா?

உடனே கிளம்பட்டும், இல்லாவிட்டால் சாமி சும்மா விடுமா


குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தடை இல்லை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

விவகாரம் சிபிஐ விசாரணை அளவிற்கு சென்றபின் சம்பந்தபட்ட அமைச்சர் பதவி விலகுவதுதான் மானமுள்ள தர்மம்

இவர்களிடம் மானமாவது தர்மமாவது? மிதித்தாலும் பதவிவிட்டு இறங்கமாட்டார்கள்


 

திருநாவுக்கரசை எதற்காக ராகுல் தமிழக‌ காங்கிரஸ் தலைவராக ஆக்கினார்?

Image may contain: 3 people

காங்கிரஸ் இப்போது 3 மாநிலத்தில்தான் ஆளுகின்றதாம், இது இன்னும் குறைந்து காங்கிரசை செவ்வாய் கிரகத்தில் தேடும் காலம் வரலாம்

ஏன் என்றால் இதுதான் காரணம்

இந்த தெருநாவுக்கரசை எதற்காக ராகுல் தமிழக‌ காங்கிரஸ் தலைவராக்கினாராம் என்றால் அக்காரணம் படு பயங்கரமானது

“தெருநாவுக்கரசர் அதிமுகவில் எம்ஜிஆர் பக்கத்திலே இருந்தவர் இதனால் எம்ஜிஆர் வோட்டு எல்லாம் வரும், பாஜகவில் இருந்திருக்கின்றார் இதனால் பாஜகவோட்டு வரும்

சினிமாவில் நடித்திருப்பதால் பெரும் மக்கள் அபிமானம் உண்டு

பலகாலம் அரசியலில் இருப்பதால் பழுத்த அனுபவம்

அதிமுகவிலும் பாஜகவிலும் அவருக்கு ஸ்லீப்பர் நண்பர் இருப்பதால் நினைத்ததை சாதிக்கலாம், அவரை மட்டும் தலைவராக்கி தேர்தலை சந்தித்தால் எல்லா கட்சி வோட்டையும் வாங்கி , மறவர் சாதி வோட்டையும் வாங்கி காங்கிரஸ் ஆட்சி அமைக்கும், தெருநாவு முதல்வராவார்”

இப்படி ராகுலிடம் அள்ளி விட்டிருகின்றார்கள், அவரும் நீர் கிடைத்தது என் அதிர்ஷ்டம் என அணைத்து ஆதரித்தாராம்

அந்த ராகுலை பப்பு என சொல்வதில் என்ன மிகை? இன்னும் அதிகமாக சொல்ல வேண்டும்

இப்படிபட்ட மனிதர்களை காங்கிரஸில் அதுவும் தலைவராக வைத்துகொண்டிருக்கும் மனோநிலையில்தான் ராகுல் இருக்கின்றார்

பின் எப்படி காங்கிரஸ் உருப்படும், சுத்தமாக உருப்படாது

ராகுல் திறமையானவர் என்றால் இந்நேரம் தெருநாவு விரட்டபட்டிருக்க வேண்டும், அவரோ தெருநாவு முதல்வராவர் எனும் கனவில் இருப்பது போல் தெரிகின்றது

இந்த ராகுல் இனி காங்கிரசை காப்பாற்றுவார்? அது நேரு வந்தாலும் முடியாது


“நான் ஜெயலலிதாவினையே பார்த்தவன் குஷ்பு எனக்கு எம்மாத்திரம்?” : தெருநாவுக்கரசர்

ஜெயலலலிதா இவரை உதிர்ந்த முடி என சொன்னது குறிப்பிடதக்கது,

நல்ல வேளையாக தலையில் இருந்து விழுந்த ரோமம் என அழுத்தி சொன்னார், இல்லாவிட்டால் தெருநாவு அன்றே தூக்குபோட்டு செத்திருக்க வேண்டும்

அது ஜெயலலிதாவின் பெருந்தன்மை

காங்கிரஸ் கணவான்களே, இந்த தெருநாவினை வாயினை அடக்கி வையுங்கள்.

இல்லை என்றால் நாளை ” நான் சோனியாவினையே பார்த்தவன்” என்பார், கேட்க சகிக்காது


 

கொள்ளை அடி அணை கட்டு..

கஜினி முகமது சோமநாதபுரத்தில் கொள்ளையிட்ட செல்வத்தில் அவன் சொந்த ஊரான கஜினியில் அணைகட்டினான்

ராஜராஜ சோழன் ஈழவெற்றியின் அடையாளமாக, அனுராதபுரத்தை கொள்ளையடித்து வந்து பெரியகோவிலை கட்டினான்

இதில் கஜினி என்பவன் கொள்ளையன் , ராஜராஜன் என்பவன் மாமன்னமா?

சாதரண மனிதன் செய்தால் கொள்ளை, அதை அரசன் படையோடு செய்தால் போர்

அலெக்ஸாண்டர் முதல் கிழக்கிந்திய கம்பெனிவரை இந்த கொள்ளையினைத்தான் செய்தது, இப்போது அமெரிக்கா எண்ணெய்க்காக செய்கின்றது

ஆனாலும் கொள்ளையில் கோவில் கட்டியதை விட, கோவிலில் அடித்த கொள்ளையில் அணைகட்டிய கஜினி எப்படி மன்னன் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்

 

நாளை எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

 

Image may contain: 1 person, close-up

நாளை எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

“ஒரு வாரம் கூட நான் முதல்வராக‌ இருந்திர கூடாதுல்ல, இதில் உங்களுக்கு ஒரு சந்தோஷம்”


 பாஜகவோடு கூட்டணி ஒருநாளும் இனி இல்லை : குமாரசாமி

ஆம், முதல்வர் பதவி தராத கட்சியோடு என்ன கூட்டணி வேண்டியிருக்கின்றது?


எடியூரப்பா அரசு நிலைக்காது , கலையும் : திருமா

தமிழக அரசை தவிர எல்லா அரசும் கலைவதில் இவருக்கொரு தனி ஆனந்தம்


கன்னட ஆளுநர் பாஜகவின் வேலைக்காரர் : சிவசேனா பாய்ச்சல்

இது யாருக்கு தெரியாது?

கன்னட ஆளுநர் மட்டுமா, தமிழக ஆளுநர் இல்லையா? ஏன் முன்பு தமிழக ஆளுநராகவும் இருந்த மராட்டிய ஆளுநர் வித்யாசாகர் ராவ் யார்?

பாஜகவின் பெரும் வேலைக்காரர் அவர்தானே, அவர் கெடுத்து வைத்ததுதான் இப்போதைய தமிழ்நாடு. பழனிச்சாமியினை நியமித்ததே அவர்தான்

சிவசேனா அந்த மராட்டிய ஆளுநரையும் சேர்த்து திட்டினால் வரவேற்கலாம்


இனப்படுகொலை என்றால் ஒரு இனத்தை மொத்தமாக குவித்து வைத்து கொல்வது

இனப்படுகொலை என்றால் ஒரு இனத்தை மொத்தமாக குவித்து வைத்து கொல்வது

ஹிட்லர் அதனை செய்தான் அதன் பின் கொஞ்ச வருடம் முன்பு யூகேஸ்லேவியாவில் நடந்தது, ஆப்ரிக்காவில் அடிக்கடி நடக்கும்

முள்ளிவாய்க்காலில் 2009ல் நடந்தது இனபடுகொலை ஆகாது, யாழ்பாணத்தில் தமிழர் இயல்பு வாழ்க்கை வாழ்ந்தனர், மட்டகிளப்பு அமைதியாக இருந்தது

கொழும்பு தமிழர் மீது ஒரு குண்டூசி கூட விழவில்லை

சிக்கல் புலிகள் பிடித்து வைத்த முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் மூலமாக வந்தது, அவர்களை கிளிநொச்சியில் இருந்தே மிரட்டி கூட கூட்டிகொண்டு கிழக்கு நோக்கி புலிகள் நடத்தினார்கள்

புலிகள் இத்தனை ஆயிரம் மக்களை விடுத்திருந்தால் இக்கொடும் சாவு நடந்திருக்காது, பின் அதுதான் நடந்தது

இதற்கு காரணம் காங்கிரஸ் தோற்கும் வாஜ்பாய் 2009ல் பிரதமராவார் அவர் வைகோவின் பேச்சை கேட்டு ஈழத்தில் தலையிட்டு போரை நிறுத்துவார் எனும் தவறான வழிகாட்டல்

இதனால்தான் அத்தனை ஆயிரம் மக்களை பிடித்து வைத்து புலிகள் காவல் இருந்தனர், சிங்களமோ ஆயிரம் பேர் கொல்லபட்டாலும் புலிகளை விட கூடாது எனும் வெறியில் இருந்தது

இதுதான் சில ஆயிரம் மக்கள் இறக்க காரணம்

அதனால்தான் இக்கொடூர சாவு இனபடுகொலை வகைக்குள் வராது, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என முடிந்துவிட்டது

சும்மா இனபடுகொலை என சொல்பவன் சொல்லிகொண்டே இருப்பான், அவனை திருத்த முடியாது

 
 

துரியோதனன் வீரசுவர்க்கம் அடைந்ததுபோல் அவன் அடையட்டும்

Image may contain: 1 person, sitting and indoor

பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடும் பூரா பயலும் அவர் இறந்தநாளான இன்று ஒரு அஞ்சலியும் செலுத்தவில்லை

பிரபாகரன் இல்லை என்பதே உண்மை, இலங்கை அரசு கடந்தவருடம் குண்டுதுளைக்கா கார்களை, பாதுகாப்பு வாகனங்களை எல்லாம் கடலில் தள்ளியது

அதற்கு இரு காரணம், பராமரிப்பு செலவு அதிகம் விற்றுவிட்டால் ரவுடிகள் வாங்கி தங்கள் பாதுகாப்பிற்கு வைத்துகொள்வார்கள் என்பதால் அம்முடிவு எடுக்கபட்டது

அதாவது இனி கொழும்பு அரசதந்திரிகளுக்கு ஆபத்து இல்லை என்பதை சொல்லிவிட்டது

இதனால் பிரபாகரன் வைகோவின் கார் டிக்கி, சீமான் வீட்டு சமையலறை, பழ.நெடுமாறன் மருத்துவமனையில் மட்டும் வாழ்ந்துகொண்டே இருக்கட்டும்

முள்ளிவாய்க்காலில் செத்த எல்லோருக்கும் அஞ்சலி செலுத்துகின்றார்கள்

ஆனால் 40 வருடம் போர்களத்திலே கழித்த பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த யாரும் தயாரில்லை

இவ்விஷயத்தில் ஜெயலலிதா, ஹிட்லர், பிரபாகரன் எல்லாம் ஒரே வகையறா

எல்லா சர்வாதிகாரிகளும் இப்படித்தான் மறக்கபடுகின்றார்கள், அவர்களின் உண்மையான அபிமானிகள் என யாருமில்லை

புலிகும்பலில் சிலதுதான் புலிகளின் கோடிகணக்கான சொத்துக்களை பிரபாகரன் வந்தால்தான் தருவோம், அதனால் அவர் உயிரோடு வரவேண்டும் என சொல்லி ஆட்டையினை போட்டுவிட்டு அழிச்சாட்டியம் செய்கின்றன என்றால் ஒரு உண்மையான அனுதாபியுமா இல்லை?

இந்த மக்களுக்குத்தான் அவர் அந்த போராட்டம் போராடினாராம்

எவனாவது ஒருவன் மே 18ல் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துவான் என பார்த்தால் ஒருவன் கூட இல்லை

எப்படி உருவானார் பிரபாகரன்?

எனக்கு அரசியல் தெரியாது, மார்க்சிசம் புரியாது, கொல்வதை தவிர எதுவும் தெரியாது என நின்றவனை ஆளாளுக்கு வளைத்தார்கள்

இப்படி நடந்தால் ஈழம் கிடைக்கும் என யார்சொன்னாலும் ஏற்றுகொண்டு கண்மூடிதனமாக பாயும் ஒரு குணம் அவருக்கு இருந்தது

அவரின் பலம் அது, பலவீனமும் அது

இந்தியா, அமெரிக்கா, இலங்கை, திராவிட கட்சிகள் , இலங்கை தமிழ்கட்சிகள் என நாடுகளும், இயக்கங்களும் உளவு நிறுவணங்களும் அவர்கள் விருப்பத்திற்கு வளைக்கபார்த்தன, வளைத்துவிட்டு அவரை முடக்கவும் பார்த்தன‌

யாழ்பாணத்தார், கிறிஸ்தவ மடாதிபதிகள், ராமசந்திரன், கருணாநிதி, வைகோ கும்பல் என ஆளாளுக்கு அவரை பயன்படுத்தினார்கள்

ஈழம் என்ற ஒற்றை அங்குசத்தை காட்டி அந்த யானையினை இஷ்டத்திற்கு வித்தைகாட்ட வைத்தார்கள். அந்த அப்பாவி பிரபாகரனும் நம்பினான்

இக்கொலையினை செய் ஈழம் மலரும் என அவனை தூண்டிவிட்டனர், ஒவ்வொரு கொலைக்கு பின்னாலும் ஒவ்வொரு கும்பல் பலன் பெற்றது

இதில் எல்லோராலும் ஏமாற்றபட்ட பிரபாகரன் தன்னால் முடிந்தவரை எல்லோரையும் கொன்றுவிட்டு தானும் செத்தார்

ராஜிவ் அவரை ஏமாற்றவில்லை எனினும் துர்போதனையால் அப்படுகொலை நடந்தது

எத்தனையோ பேர் ஈழம் பெயரை சொல்லி பிரபாகரனை ஏமாற்றி காரியம் சாதித்தனர், இது இலங்கை தமிழ்கட்சியிலிருந்து தொடங்கி அமெரிக்கா வரை நீண்டது

அவர் போராட்டத்தை கூர்ந்து பார்த்தால் தெரியும், இதனால்தான் படுகொலையாளியாக மாறினார், யாரையும் அவர் நம்பவில்லை

தங்களை வெறும் கூலிபடையாக பாவித்த ஒவ்வொருவரையும் குறிவைத்து தூக்கினார்

இதில் அவர் செய்ய தவறியது தனக்கு தவறான வழிகாட்டிய திராவிட தலைவர்களை

காலம் கொஞ்சம் அவகாசம் கொடுத்திருந்தால் அவர்களையும் உண்மையில் சாத்தியிருப்பார் அதற்குள் காலம் முந்திகொண்டது தமிழக துரதிருஷ்டம் நீடிக்கின்றது

ஆயுதம் எவ்வளவு பெரும் அழிவில் முடிக்கும் என அவருக்கு தெரியவில்லை , எப்போது ஆயுதம் தூக்கவேண்டும் எனதெரிந்த அவருக்கு எப்போது கீழே வைக்க வேண்டும் என தெரியவில்லை

ஆனால் இலங்கை இஸ்லாமியர் இதில் கவனமாக இருந்தார்கள், அவர்கள் ஆயுதமேந்தினால் அள்ளிகொடுக்க எத்தனையோ நாடுகள் தயார் எனும்பொழுது அமைதிகாத்தார்கள், அழிவினை தடுத்தார்கள்

ஆனால் பிரபாகரன் இந்த விஷயத்தில் சிக்கினார், பெரும் அழிவினை கொடுத்தார்

1986க்கு முற்பட்ட பிரபாகரனை எல்லோருக்கும் பிடித்திருந்தது, வெறும் 28 வயது இளைஞனாக அவர் தலைவனாக நின்றது அந்நாளில் பெரும் ஆச்சரியம்

அந்த பிரபாகரன் மேல் எதிரியும் குற்றம் சொல்லமுடியாது

பெரும் எதிர்காலமும் வாய்ப்பும் அவருக்கு அன்று இருந்தது. ஆனால் எடுப்பார் கைபிள்ளையாக மாறி எல்லாம் நாசமாயிற்று

என்ன இருந்தாலும் பாரதத்து துரியோதனன் வீரசுவர்க்கம் அடைந்தது போல பிரபாகரனும் அடைந்தான் என்பதுதான் வரலாறு

பாரதபோரின் அழிவுக்கு துரியோதனன் முழு காரணம் எனினும் கடைசிவரை அவன் துணிவாக தனியாக போராடியதால் அவனும் வீரன் என பெயர்பெற்று நிற்கின்றான்

பிரபாகரனும் அப்படியே, சந்தேகமே இல்லை

துரியனை கெடுத்தது சகுனி என்றால் பிரபாகரனை கெடுத்த சகுனிகள் தமிழகம் முதல் அமெரிக்கா வரை உண்டு

ஒருவகையில் அவன் கொடூர கொலையாளி, படுபயங்கர இயக்கத்தை நடத்தியவன். ஆனால் மறுபக்கம் அவன் பெரும் அப்பாவி, ஏமாளி

ஒரு பயலும் அந்த பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தமாட்டான், நாம் செலுத்துவோம்

துரியோதனன் வீரசுவர்க்கம் அடைந்ததுபோல் அவன் அடையட்டும்


தைரியமாக பிரபாகரனுக்கு ஒரு அஞ்சலி செலுத்த முடியவில்லை , அவ்வளவு பயம் , யார்மீதோ அவ்வளவு அச்சம்

பிரபாகரனை தவிர நரகாசுரன் முதல் லீகுவான்யூ வரை வீர வணக்கம் வைப்பார்கள் தும்பிகள்..

ஏதும் கேட்டால் வீழ்ந்துவிடாத வீரம், மண்டியிடாத மானம்….

இனி என்றைக்காவது அவனுக்கு வீரவணக்கம், இவனுக்கு வீரவணக்கம் என வரட்டும், காதை திருகி இதனை கேட்க வேண்டும்


 
%d bloggers like this: