13 பேர் உயிரை கொடுத்து சொன்ன செய்தி இதுதான்

தூத்துகுடியில் 13 பேர் உயிரை கொடுத்து தமிழகத்திற்கு சொல்லியிருக்கும் செய்தி இதுதான்

இந்த பாஜக சங் பரிவார கும்பல் ஐஎஸ் தீவிரவாதிகளை விட, நிபா வைரஸை விட மகா கொடுமையானவர்கள், இவர்களை எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் வளர அல்ல நுழையவே விட கூடாது என்பது

தும்பிகளாவது சாவில் அழுவார்கள், இவர்கள் அவர்களை விட மகா கொடுமையான பாதக கும்பல்

கொஞ்சமேனும் மனித தன்மையோ, இரக்கமோ சக மனிதன் சாவில் கண்ணீர்விடும் இயல்பான மானிட குணமோ கொஞ்சமுமில்லை

மனம் முழுக்க கொடூரம், வஞ்சகம், சக மனிதனை குறைந்தப்ட்சம் உயிரினமாக கூட நினைக்கா ஒரு குரூர மனம்

இவர்கள் இப்படித்தான் இவர்களை ஒருகாலமும் ஆதரிக்காதீர்கள் என சொல்லி உயிரிவிட்டிருக்கின்றார்கள் அந்த தியாகிகள்

மரணம் எல்லோருக்கும் பொதுவானது, இன்னொருவன் மரணத்தில் மகிழ்பவன் மிருகத்தை விட கொடிய பாவி

அப்படிபட்ட மாபாவிகளை அடையாளம் காட்டிவிட்டு அந்த தியாகிகள் விடைபெற்றிருக்கின்றார்கள்

அந்த ரத்த சாட்சிகள் தியாகம் வீணாகாது, இந்த கும்பல்கள் தமிழகத்திலிருந்து அல்ல இந்தியாவிலிருந்தே களையபட வேண்டும்

 
 

கதவைப் பூட்டிக்கொண்டு முதல்வர் வெளியே வர மறுப்பு

Image may contain: 1 person

கதவைப் பூட்டிக்கொண்டு முதல்வர் வெளியே வர மறுப்பு

எதற்கு வரமறுகின்றார் என்றால், ஸ்டாலின் தர்னா செய்கின்றாராம், அதனால் கதவை பூட்டிகொண்டு உள் இருக்கின்றாராம்

இப்படி விசித்திரமான முதல்வரை தமிழகம் கண்டதுண்டா?

உள்ளே என்ன செய்வார்?

செந்தில் பாணியில் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி “ஹவா ஹவா அவ்வவா அவ்வஅ அவா” ஆடிகொண்டிருக்கலாம்


சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவினர் -: முதல்வர் விளக்கம்

ஆட்சியில் ஊடுருவியிருக்கும் சமூக விரோதிகளை என்ன செய்வது? யார் சுடுவது? என்பது பற்றி எல்லாம் நாம் பேச கூடாது

சரி சமூக விரோதிகளை சுட்டுவிட்டா அவர்களுக்கு 10 லட்சம், அரசு வேலை??

ஆக தமிழர்களே, ஒரு குடும்பத்திற்கு அரசு வேலை வேண்டுமென்றால் சமூக விரோதியினை உருவாக்கலாம்


 
 

மோடியை வம்பிற்கு இழுத்த கோலி

Image may contain: 1 person, smiling, text

கிரிக்கெட் வீரர் கோலி கிரிக்கெட்டில் வம்பிழுப்பதை அடுத்து டிவிட்டரிலும் வம்பிழுத்திருக்கின்றார்

யாரிடம் என்றால் மோடியிடம், எப்படி?

நான் என் உடலை கட்டுபாட்டோடு வைத்திருக்கின்றேன், ஏன் என்றால் நமக்காக ஓடி உழைக்கும் மோடியுடன் பணியாற்ற அது அவசியம் என சொல்லிவிட்டு, இந்த தோனி ஹிர்திக் ரோஷன் போன்றோருக்கு என் போல் உடல்பயிற்சி செய்யமுடியுமா என சவால் விட்டிருகின்றார்

வழக்கமாக கேமரா தன்னை நோக்கி இருந்தாலே உற்சாகம் ஆகும் மோடி, டிவிட்டரில் தன் பெயரை கண்ட ஆர்வத்தில் நான் உங்கள் சவாலை ஏற்கின்றேன் என சொல்லிவிட்டார்

விஷயம் வேகமாக பரவுகின்றது

விரைவில் மோடி ஜிம்மில் இருந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ வரலாம்

தமிழ்நாடு பற்றி எரிகின்றது, 13 தமிழர் சுட்டுகொல்லபட்டு நாடே கொந்தளித்த நிலையில் அதுபற்றி ஒருவார்த்தை இல்லை

பெட்ரோல் விலை கின்னஸ் சாதனை படைத்த நிலையிலும் ஒருவார்த்தை இல்லை

ஆனால் கோலிக்கு ஓடி சென்று உங்கள் சவாலை ஏற்கின்றேன் என சொல்கின்றார் பிரதமர்

இதே போல் சவாலை வெளிநாட்டு பிரதமர் என் நாட்டில் பெட்ரோல் விலை 20ரூபாய் உங்கள் நாட்டில் அப்படி முடியுமா? சவாலை ஏற்க தயாரா என்றால் மோடியினை காண முடியும்?

நாம் சவால் விடுவோம்

மிஸ்டர் மோடி நீர் தூத்துகுடிக்கு ஓடிவர தயாரா?, இதற்கு பதில் வருமா என்றால் வராது

இந்த கோலியின் சவாலை மோடி ஏற்றுவிட்டடதால் இனி மோடியின் வீடியோ வரும், பார்த்து தொலையலாம். அவர் யோகா செய்த கொடுமை எல்லாம் பார்த்தோம் அல்லவா அப்படி.

ஆனால் இந்த பக்தாஸ் எல்லாம் மோடியின் ஜிம் வீடியோ பார்த்துவிட்டு, படையப்பா கிளைமேக்ஸில் சட்டை இல்லாமல் நிற்கும் ரஜினியினை பார்த்து அப்பாஸ் சொல்வது போல “வாவ் வாட் எ மேன்” என சொல்லி வியப்பார்கள் அல்லவா? அதுதான் கொடுமை

அதனை நிச்சயம் பொறுமையாக பார்க்கமுடியாது

 

விக்டோரியா மகாராணி பிறந்த நாள் இன்று

Image may contain: 1 person, close-upஇந்த உலகம் பெரும் மன்னர்களை கண்டிருக்கின்றது, வெகு சில ராணிகளையும் கண்டிருக்கின்றது, அவர்களில் ஒருவர் விக்டோரியா மகாராணி

மேற்கே கனடா முதல் கிழக்கே நியூசிலாந்து வரையிலான நாடுகளை ஆளும் ஜாதகம் அவருக்கே வாய்த்தது, அதுவும் 63 ஆண்டுகள் ஆண்டார். இந்த உலகை ஆண்ட அரசிகளில் அதிக வயதுடையவர் அவர்தான்

இந்த மகாராணி ஆண்ட காலத்தில்தான் இந்தியா பிரிட்டன் அரசின் காலணியாக கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து எடுக்கபட்டது, அதன்பின்பே இந்தியாவின் சட்டங்கள் எழுதபட்டன பல சீர்திருத்தங்கள் செய்யபட்டன‌

அதன் விளைவாகவே இந்தியாவில் காங்கிரஸ் இயக்கம் எல்லாம் தொடங்கபட்டது

இந்தியர்பால் அவருக்கொரு அனுதாபம் இருந்தது, இந்தியரான அப்துல் கரீம் என்பவரை தன் அருகிலே அமர்த்தி இந்தியமொழி கற்று, இந்தியாவினை ஆண்ட அரசி அந்த விக்டோரியா

Image may contain: 1 personகரீமிற்கும் அவருக்கும் காதல் எனும் கட்டுகதைகள் அன்றே கதை வந்தாலும் ராணி காலத்திற்கு பின் ஏகபட்ட சர்ச்சைகள் வந்தன, அது டயானா கதைகளையும் மிஞ்சின‌

ஆனால் ராணி விக்டோரியா அந்த இந்தியனை அருகில் வைத்தது இந்திய விவகாரங்களை கையாளவே

இந்தியாவிற்கு பல நன்மைகள் அவரால் விளைந்தன, இந்தியர் சார்பாக உருவாக்கபட்ட எந்த இயக்கத்தையும் அவர் தடுக்கவில்லை, அனுமதித்தார்

அவரின் வெள்ளிவிழா, தங்க விழா, வைரவிழாவின் பொழுதெல்லாம் இந்தியாவில் மக்கள் நல கட்டங்கள் வந்தன‌

மும்பையின் விக்டோரியா டெர்மினல் (இப்பொழுது சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்), கல்கத்தா விக்டோரியா நினைவகம், சென்னை விக்டோரியா ஹால் எல்லாம் உருவாக்கபட்டன‌

சென்னை கோட்டையில் அன்று அரசபிரதிநிதி கூட்டம் நடக்கும்பொழுது சுமார் 15 நிமிடம் ராணியினை புகழ்ந்துவிட்டுத்தான் கூட்டம் தொடங்குவார்கள்

இதே வரலாறு பின் ஜெயலலிதா காலத்தில் அதே கோட்டையில் நடந்த காமெடி எல்லாம் உண்டு

விக்டோரியா ராணியின் காலம் பிரிட்டன் வரலாற்றில் முக்கியமானது, தொழிற்புரட்சி மூலம் எழுந்த நன்மையினை பிரிட்டன் முழுமையாக பயன்படுத்தியது

உலகெல்லாம் அவர்கள் வென்று அசைக்கமுடியா வல்லரசாக திகழ்ந்தது விக்டோரியா காலத்தில்தான். அன்று பிரிட்டன் உலகின் நம்பர் 1 நாடாக இருந்தது

ஐரோப்பா முழுக்க அரச குடும்பங்களுடன் நல் உறவு கொண்டிருந்தார், சம்பந்தம் எல்லாம் எடுத்தார். இதனால் அவருக்கு நற்பெயர் இருந்தது. ஐரோப்பாவின் பாட்டி என்று அழைப்படும் அளவு இருந்தது

இவர் காலத்தில்தான் கோஹினூர் வைரம் பிரிட்டனுக்கு கொண்டு செல்லபட்டு அளவு குறைக்கபட்டு ராணி மகுடத்தில் பொருத்தபட்டது

பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பேரரசி அவரே, அவர் கொடுத்த சில சலுகைகளில்தான் இந்தியா ஓரளவு வளர்ந்து பின் விடுதலையும் பெற்றது

உலகின் சரிபாதியினை 63 ஆண்டுகள் ஆண்ட அரசி என்றபெருமை அவரை தவிர யாருக்குமில்லை

அந்த அரசியின் பிறந்த நாள் இன்று. அவரின் உருவம் பொறித்த நாணயம் சுதந்திரம் பெறும் காலத்தின் முன்பு வரை இந்நாட்டில் புழக்கத்தில் இருந்தது

மாபெரும் பிரிட்டன் சாம்ராஜ்யத்தை, சூரியன் அஸ்தமிக்கா சாம்ராஜ்யத்தை இன்னும் விரிவாக்கி அதை உலக நம்பர் 1 வல்லரசாக்கி ஆண்ட ஐரோப்பாவின் சிவகாமி தேவி

ஒரு காலத்தில் இந்தியாவினை ஆண்ட அவரின் படம், இன்று சென்னை கோட்டை மியூசியத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும், அவர் இங்கு விட்டு சென்ற அடையாளம் அது

இந்தியாவின் பல பிரமாண்ட ஆங்கிலேயர் கால கட்டங்களில் எல்லாம் அவர் நினைவு இருந்துகொண்டே இருக்கும்

இந்தியாவின் முன்னாள் மகாராணிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், இத்தேசத்திற்கு ஓரளவு நல்ல விஷயங்களை செய்த அவரை நன்றியோடு நினைத்துகொள்ளலாம்

 

இவர் எப்படி தலைவர் வகையில் வருவார்???

Image may contain: 1 person, smiling, text

அய்யா நீதிபதி

நாம் நீதிமன்ற அவமதிப்பு என கண்டிக்கபட்டாலும் பரவாயில்லை சொல்வதை சொல்லிவிடுகின்றோம் அதன் பின் உங்கள் பாடு..

இப்போதுள்ள தலைவர்கள் பேச்சு பற்றி இந்த வழக்கில் ஏன் பேச்சு?

இது ஒரு மனநிலை பாதிக்கபட்ட கூட்டமும் அவன் தலைவனும் அடிதடியில் இறங்கியது பற்றிய வழக்கு

இந்த பைத்தியங்கள் பற்றிய தீர்ப்பில் பழைய தலைவர்கள் பற்றி சொன்னால், எங்கள் அண்ணனையும் தலைவன் என நீதிமன்றமே சொல்லிவிட்டது என அந்த ஆமைகுஞ்சுகள், தும்பிகள் எல்லாம் பயங்கர ஓலமிடும்

தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்கள் , இவர் எப்படி தலைவர் வகையில் வருவார்???

 

கடந்த தேர்தலில் தூத்துகுடியில் ஒரே ஒரு அரசியல்வாதி மட்டும் உண்மை பேசினான்

Image may contain: 1 person, smiling, text

கடந்த தேர்தலில் தூத்துகுடியில் ஒரே ஒரு அரசியல்வாதி மட்டும் உண்மை பேசினான்

“மக்களே இந்த தூத்துகுடி சில தனியார் முதலாளிகள்கிட்ட சிக்கி இருக்கு, எனக்கு ஆதரவு தாங்க, சுத்தமான தூத்துகுடியா, ஆபத்தில்லா தூத்துகுடியா மாற்றி காட்டுறேன்”

அன்றே அவர் அலுவகத்தில் சென்னையில் கல்வீசபட்டது, கொலை மிரட்டல் எல்லாம் வந்தது.

சாதி கலவரத்தை தூண்டுகின்றார் என பலர் குதித்தார்கள்

ஸ்டெர்லைட் மட்டுமல்ல, தூத்துகுடியினை பாதிக்கும் பல விஷயங்களை குறிப்பாக “சக்கரவர்த்தி” வைகுண்ட ராஜனை பகிரங்கமாக குற்றம் சாட்டியாவர் விஜயகாந்த்

ஆனாலும் அஞ்சாமல் நின்றார் அந்த விஜயகாந்த், தேர்தலில் தோற்றும் போனார்

இந்த போராட்டத்தில் ஒருவரை தூத்துகுடி ஏறெடுத்து பார்க்க முடியாத குற்ற உணர்வோடு இருக்குமென்றால் அது விஜயகாந்த் எனும் ஒருவரையே

மற்றவர்களை தூக்கி போட்டு மிதிக்க அதற்கு உரிமை இருக்கின்றது

தூத்துகுடிக்கும மின்சாரம் இல்லையாம் : ஏன் இந்த நாடகம்?

“எImage may contain: 1 person, beard and close-upடப்பாடி அரசை மாத்துங்கோண்ணா, கலெக்டர மாத்துறேள், எஸ்பி மாத்துறேள்

ஸ்டெர்லைட்ட மூட சொன்னா, இணையத்தை முடக்குறேள்

உங்க காதிலே ஏதோ பெரிய பிரச்சினை போல இருக்கு, இந்த செவிட்டு காதோட உலகம் எல்லாம் போய் என்ன பேசுறோளோ தெரியலை….”

 


தலைவி லண்டனில் இருப்பதால் தூத்துகுடிக்கு வரமுடியவில்லை என அவரின் அலுவலகம் தெரிவித்துகொள்கின்றது

அங்கிருந்தும் தூத்துகுடி மக்களுக்கு ஆறுதலும், அவர்களுக்கு தன்னுடைய அனுதாபமும் ஆதரவும் என்றும் உண்டு என்றும் தலைவி தெரிவித்திருகின்றார்

தூத்துகுடி கொடூரங்களுக்காகவும் அம்மக்களின் துயரில் பங்குபெற்றிருப்பதாலும் சங்க நடவடிக்கைகள் கொஞ்ச நாளைக்கு ரத்து செய்யபட்டிருக்கின்றன‌


Image may contain: 2 people, people smiling, text

ஐ.எஸ் இயக்கம் 1000 கோடி டெப்பாசிட் செய்தால் அனுமதிப்பீர்களா? 350 கோடி வட்டி கிடைக்கும்

பணம் கிடைக்கும் என்றால் எதை வேண்டுமானாலும் செய்வதற்கு பெயர் என்ன தெரியுமா? அதனை அரசே செய்தால் எவ்வளவு அசிங்கம் தெரியுமா?

  
 


 

மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை அடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் நிறுத்தம்:தமிழ்நாடு மின்சாரவாரியம்.

மொத்த தூத்துகுடிக்குமே மின்சாரம் இல்லையாம் , இதில் ஏன் இந்த நாடகம்?


 

%d bloggers like this: