விக்டோரியா மகாராணி பிறந்த நாள் இன்று

Image may contain: 1 person, close-upஇந்த உலகம் பெரும் மன்னர்களை கண்டிருக்கின்றது, வெகு சில ராணிகளையும் கண்டிருக்கின்றது, அவர்களில் ஒருவர் விக்டோரியா மகாராணி

மேற்கே கனடா முதல் கிழக்கே நியூசிலாந்து வரையிலான நாடுகளை ஆளும் ஜாதகம் அவருக்கே வாய்த்தது, அதுவும் 63 ஆண்டுகள் ஆண்டார். இந்த உலகை ஆண்ட அரசிகளில் அதிக வயதுடையவர் அவர்தான்

இந்த மகாராணி ஆண்ட காலத்தில்தான் இந்தியா பிரிட்டன் அரசின் காலணியாக கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து எடுக்கபட்டது, அதன்பின்பே இந்தியாவின் சட்டங்கள் எழுதபட்டன பல சீர்திருத்தங்கள் செய்யபட்டன‌

அதன் விளைவாகவே இந்தியாவில் காங்கிரஸ் இயக்கம் எல்லாம் தொடங்கபட்டது

இந்தியர்பால் அவருக்கொரு அனுதாபம் இருந்தது, இந்தியரான அப்துல் கரீம் என்பவரை தன் அருகிலே அமர்த்தி இந்தியமொழி கற்று, இந்தியாவினை ஆண்ட அரசி அந்த விக்டோரியா

Image may contain: 1 personகரீமிற்கும் அவருக்கும் காதல் எனும் கட்டுகதைகள் அன்றே கதை வந்தாலும் ராணி காலத்திற்கு பின் ஏகபட்ட சர்ச்சைகள் வந்தன, அது டயானா கதைகளையும் மிஞ்சின‌

ஆனால் ராணி விக்டோரியா அந்த இந்தியனை அருகில் வைத்தது இந்திய விவகாரங்களை கையாளவே

இந்தியாவிற்கு பல நன்மைகள் அவரால் விளைந்தன, இந்தியர் சார்பாக உருவாக்கபட்ட எந்த இயக்கத்தையும் அவர் தடுக்கவில்லை, அனுமதித்தார்

அவரின் வெள்ளிவிழா, தங்க விழா, வைரவிழாவின் பொழுதெல்லாம் இந்தியாவில் மக்கள் நல கட்டங்கள் வந்தன‌

மும்பையின் விக்டோரியா டெர்மினல் (இப்பொழுது சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்), கல்கத்தா விக்டோரியா நினைவகம், சென்னை விக்டோரியா ஹால் எல்லாம் உருவாக்கபட்டன‌

சென்னை கோட்டையில் அன்று அரசபிரதிநிதி கூட்டம் நடக்கும்பொழுது சுமார் 15 நிமிடம் ராணியினை புகழ்ந்துவிட்டுத்தான் கூட்டம் தொடங்குவார்கள்

இதே வரலாறு பின் ஜெயலலிதா காலத்தில் அதே கோட்டையில் நடந்த காமெடி எல்லாம் உண்டு

விக்டோரியா ராணியின் காலம் பிரிட்டன் வரலாற்றில் முக்கியமானது, தொழிற்புரட்சி மூலம் எழுந்த நன்மையினை பிரிட்டன் முழுமையாக பயன்படுத்தியது

உலகெல்லாம் அவர்கள் வென்று அசைக்கமுடியா வல்லரசாக திகழ்ந்தது விக்டோரியா காலத்தில்தான். அன்று பிரிட்டன் உலகின் நம்பர் 1 நாடாக இருந்தது

ஐரோப்பா முழுக்க அரச குடும்பங்களுடன் நல் உறவு கொண்டிருந்தார், சம்பந்தம் எல்லாம் எடுத்தார். இதனால் அவருக்கு நற்பெயர் இருந்தது. ஐரோப்பாவின் பாட்டி என்று அழைப்படும் அளவு இருந்தது

இவர் காலத்தில்தான் கோஹினூர் வைரம் பிரிட்டனுக்கு கொண்டு செல்லபட்டு அளவு குறைக்கபட்டு ராணி மகுடத்தில் பொருத்தபட்டது

பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பேரரசி அவரே, அவர் கொடுத்த சில சலுகைகளில்தான் இந்தியா ஓரளவு வளர்ந்து பின் விடுதலையும் பெற்றது

உலகின் சரிபாதியினை 63 ஆண்டுகள் ஆண்ட அரசி என்றபெருமை அவரை தவிர யாருக்குமில்லை

அந்த அரசியின் பிறந்த நாள் இன்று. அவரின் உருவம் பொறித்த நாணயம் சுதந்திரம் பெறும் காலத்தின் முன்பு வரை இந்நாட்டில் புழக்கத்தில் இருந்தது

மாபெரும் பிரிட்டன் சாம்ராஜ்யத்தை, சூரியன் அஸ்தமிக்கா சாம்ராஜ்யத்தை இன்னும் விரிவாக்கி அதை உலக நம்பர் 1 வல்லரசாக்கி ஆண்ட ஐரோப்பாவின் சிவகாமி தேவி

ஒரு காலத்தில் இந்தியாவினை ஆண்ட அவரின் படம், இன்று சென்னை கோட்டை மியூசியத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும், அவர் இங்கு விட்டு சென்ற அடையாளம் அது

இந்தியாவின் பல பிரமாண்ட ஆங்கிலேயர் கால கட்டங்களில் எல்லாம் அவர் நினைவு இருந்துகொண்டே இருக்கும்

இந்தியாவின் முன்னாள் மகாராணிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், இத்தேசத்திற்கு ஓரளவு நல்ல விஷயங்களை செய்த அவரை நன்றியோடு நினைத்துகொள்ளலாம்

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: