டிரம்பிற்கு மனசாட்சி ஏது?

வடகொரியா மாபெரும் கோபத்தில் இருக்கின்றது, மிக நுட்பமான தந்திரத்தில் அது வீழ்த்தபட்டதை எண்ணி உறுமிகொண்டிருக்கின்றது

அதாவது ஏவுகனை சோதனை , அணுகுண்டு என மிக சந்தோஷமாக இருந்த நாடு வடகொரியா, முதலில் அது யுத்தம் தவிர எதற்கும் தயாரில்லை

ஆனால் சி.ஐ.ஏ அதிகாரி சென்றுவந்ததிலிருந்து அதன் போக்கில் மாறுதல் தெரிந்தது. இனி எல்லாம் சமாதானம் என இறங்கி வந்து தென் கொரிய அதிபருடன் எல்லாம் வடகொரிய அதிபர் பேசினார்

ஜூன் 12ல் வடகொரிய அதிபருடன் டிரம்ப் தென்கொரியாவில் பேச ஏற்பாடெல்லாம் ஆயிற்று

நாம் பேசவேண்டுமென்றால் உங்கள் அணு ஆயுத மையம் தகர்க்கபடுவதை உலகம் காணவேண்டும் என சொன்னது அமெரிக்கா, அதற்கென்ன இதோ பாருங்கள் என சர்வதேச நிபுணர் முன்னிலையில் அதை தகர்த்து வீடியோவினையும் வெளியிட்டது

அதுவரை வடகொரிய ராக்கெட், அணுகுண்டு வீடியோ எனபார்த்து கடுப்பான அமெரிக்கா, வடகொரிய அணுவுலை தகர்க்கபட்டதை பார்த்து நம்பியார் சிரிப்பு சிரித்தது

எல்லாம் இடித்தாகிவிட்டதா? என உறுதிபடுத்திய டிரம்ப், இப்பொழுது அண்ணாமலை ரஜினி வீட்டை இடித்துபோட்ட ராதாரவி போல பேசிகொண்டிருக்கின்றார்

உன்னிடம் என்ன பேச்சு, அணுவுலையினை இடித்துவிட்டாய் அல்லவா? அப்படியே போ. பொருளாதார தடை எல்லாம் விலக்க முடியாது, விலக்கினால் நீ அணுகுண்டு செய்வாய் என சொல்லி வில்லன் சிரிப்பு சிரிக்கின்றது

அடடா என்ன ஒரு ராஜதந்திரம் என அமெரிக்க அடிப்பொடிகள் ஜால்ரா அடிக்க டிரம்பிற்கு ஒரே சிரிப்பு

ஆனால் விஷயம் தெரிந்த உலக நாடுகள், “ச்சீ நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷன்?” என காரிதுப்பிகொண்டிருக்கின்றன‌

பெரும் அசிங்கபட்டுகொண்டிருக்கின்றார் டிரம்ப்

வடகொரியா ஆத்திரத்தின் உச்சியில் இருக்கின்றது, எந்நேரமும் கடன் வாங்கியாவது அணுகுண்டு வீசலாம் , அல்லது அண்ணாமலை ரஜினி போல “இந்த நாள் உன் காலண்டரில் குறிச்சு வச்சுக்கோ” என சவால் விட்டுகொண்டிருக்கலாம்

ஆனாலும் டிரம்பின் செயல் மகா மோசம் , இந்த மனிதருக்கு பைபிள் படிக்க்க என்ன யோக்கியதை இருக்கின்றது என அமெரிக்காவிலே சிலர் கேட்டுகொண்டிருக்கின்றனர்

டிரம்பிற்கு மனசாட்சி ஏது?

ஆனால் நிச்சயம் இது அமெரிக்காவிற்கு மாபெரும் அழிவினை ஒரு நாள் கொண்டுவரும், நிச்சயம் வரும்

 
 


எல்லோரின் கண்களையும் குளமாக்கி இருப்பவர் சசிகலா புஷ்பா

தூத்துகுடிக்கு ஆறுதல் சொல்ல சென்றவர்களில் எல்லோரின் கண்களையும் குளமாக்கி இருப்பவர் சசிகலா புஷ்பா

ஆம், தன் தேனிலவு காலங்களையும் தியாகம் செய்துவிட்டு தினகரன் பின்னால் ஓடிவந்து ஆறுதல் சொல்லிகொண்டிருகின்றார்

அவர், எம்.எல்.ஏ ஆக இருந்தபொழுதும், மேயராக இருந்தபொழுதும் அந்த ஸ்டெர்லைட் அவர் கண்ணுக்கு தெரியாமல் இருந்திருகின்றது, பாவிகள் மறைத்துவிட்டார்கள்

அதனால் தன் திருமணம் முடிந்த நேரத்திலும் எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு வந்திருகின்றார். தியாக தலைவி சின்னம்மாவின் தொண்டர் என்றால் சும்மவா?

இனி திவாரகரனின் அணி விரைவில் தூத்துகுடி வரலாம், அதை உற்று கவனிக்க வேண்டும், காரணம் சசிகலா புஷ்பாவின் முதல் கணவர் அந்த அணியில் இருக்கலாம்

 
 

காசை விட்டெறிந்தால் சீட் என்ற அளவில் திசைமாறி விட்டார்கள்

ஈழப்போரில் புலிகளின் தோல்விக்கு மகா முக்கிய காரணம் தளபதிகள் சமாதான காலத்தில் சுகவாழ்விற்கு பழகிவிட்ட்டார்கள், இன்னொன்று நாமே நிரந்தரம் என்ற இறுமாப்பில் இருந்தார்கள்

பிரபாகரனால் அவர்களை அடக்க முடியவில்லை, மனம்போன போக்கில் இருந்த அவர்கள் பிரபாகரனுக்கு மாபெரும் தோல்வியினையும் சாவையும் கொடுத்தார்கள்

இதெல்லாம் இப்பொழுது ஏன் என்றால், திமுக நடத்தும் சமீபத்திய போராட்டங்களை பாருங்கள், ஒன்றும் பிரமாதமில்லை

காரணம் மாவட்ட செயலாளர்கள் நிரந்தர பதவி என்பதால் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. என்ன பெரிய கட்சிதலமை? நம்மை விட்டால் யார் உண்டு?

காசை விட்டெறிந்தால் சீட் என்ற அளவில் திசைமாறிவிட்டார்கள்

கட்சி தொண்டனிடத்திலும் சோர்வு தெரிகின்றது, இது பெரும் பின்னடைவினை கொண்டு வருகின்றது

முன்பு நடந்த தேர்தலிகளில் பல தேர்தலில் திமுக வெற்றியினை தவர விட இதுதான் காரணம்

அதிமுக என்பது நாடக கம்பெனி, ஆனால் ஜெயா ஆட்டி வைத்திருந்தார், சசிகலா தவிர கட்சியில் யாரும் நிரந்தரமில்லை. சோம்பலோ இல்லை இனி எனக்கு என்ன? என யாராவது மல்லாந்து கிடந்தாலோ நெஞ்சிலே மிதி விழுந்தது

திமுகவில் அதெல்லாம் சுத்தமாக இல்லை

அதிமுக தொண்டன் எப்பொழுது எம்.எல்.ஏ ஆவான், மாவட்ட செயலாளர் ஆவான், அமைச்சர் ஆவான் என்பதெல்லாம் ஜெயா காலத்தில் அவனுக்கே தெரியாது

ஒரே அமாவாசையில் யாரோ அமைச்சராவான், அமைச்சர் கட்சி விட்டே விரட்டபட்டிருப்பார்

இதனால் கட்சிக்குள் பயமும் இருந்தது, எதிர்பார்ப்பும் இருந்தது

திமுக இந்த விஷயத்தில் மகா மோசம், எல்லா மாவட்ட செயலாளரும் முடி மன்னர்கள் போல, அரபு சுல்தான்கள் போல நிரந்தரம்

திமுக இந்த மாவட்ட செயலாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து, தொண்டர்களுக்கு நம்பிக்கையும் உறுதியும் கொடுத்தால் தவிர அதுவும் உருப்படாது, அது நடத்தும் போராட்டமும் உருப்படாது

 
 
 

அடேய் காவேரி என்னாச்சி?

Image may contain: one or more peopleஅர்ரே பழ்னிச்சாமி பையா, பெட்ரோல் விலை கூடி போச்சி, டாலர்க்கு எதிரா இந்திய பணம் மோசம்மா போச்சி, ரொம்ப பிராப்ளம் ஆக்து,. இப்போ நீ வேற டமில்நாட்ல பிராப்ளம்னு கண்ண கசக்குது

நம்பிள் சிங்கப்பூர் போறான், நிம்பிள் ஊட்டி, காஷ்மீர்னு எங்காது போய் நிம்மதியா இரு. அர்சியல்னா இப்டித்தான், பயப்டாத பையா. 


Image may contain: 1 person, smiling, close-up 

இன்று சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்..


Image may contain: 1 person, smiling, selfie, outdoor and close-up

 

இரும்பு பெண் தாட்சர் வாழ்ந்த லண்டனில் “தமிழகத்து தாட்சர்”, தங்க தலைவி நிற்கும் அற்புத தருணம்…


Image may contain: 1 person, outdoorஅண்ணே முன் ஜாமீன் கொடுக்கலண்ணு நீதிபதிக்கு எல்லாம் குறி வைக்காதீங்கண்ணே..

சும்மாவே போட்டு அடிக்காங்க‌


அடேய் காவேரி என்னாச்சி?

ஒரு பயலும் கவலைபட்டதாக தெரியவில்லை, குமாரசாமி சபாநாயாகரை எல்லாம் அமர்த்தி அவர்போக்கில் ஆட்சியினை ஆரம்பித்துவிட்டார்

“காவேரி கொண்டான்” ஒருவரையும் இப்போது காணவில்லை, இம்மாததிற்குரிய காவேரி நீர் என்னாயிற்று என கேட்கவுமில்லை


ஶ்ரீரங்கம் மூலவர் பெருமாள் மீது செருப்பினை வீசியது யார் என பிடித்து விசாரித்தார்கள், அவன் மனநலம் சரி இல்லாதவனாம்

தமிழகத்தில் போராடி செத்தால் நக்சலைட், கோவிலிலில் செருப்பு வீசினால் மனநலம் சரியில்லாதவன்.


சீக்கியர் உலகம்

Image may contain: outdoor

வெள்ளையன் இந்தியாவினை ஆளும்பொழுது இரு இனங்களை அவனுக்கு மிக பிடித்தது, அந்த இரு இனத்தையும் விசுவாசமான, கடிமனாக உழைக்க கூடிய, நன்றியுள்ள இனம் என அவன் மிக நம்பினான்

தான் சென்ற இடங்களுக்கு இந்த இரு இனங்களையும் அழைத்தே சென்றான், அப்படி அந்த இரு இனங்களும் பல நாடுகளில் நிரம்ப வாழ்கின்றன‌

சீக்கிய இனமும், தமிழினமும் அவை

மலேசியாவில் இந்த இரு இனங்களும் உண்டு, இதில் தமிழர் ஓரளவு பெரும்பான்மை என்பதால் அவர்களுக்கு அமைச்சர் பதவி அன்றே கொடுக்கபட்டது

சீக்கியர் வெளிநாடுகளில் அதிகம் உண்டு, ஆனால் பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தபின் பலருக்கு பாகிஸ்தான் குடியுரிமை அது இது என சிக்கல்கள் வந்ததால் உலக அளவில் அதிகம் தெரியாது

Image may contain: 1 person, suitஆனால் மலேசியாவில் முன்பே வந்ததால் அவர்கள் ஏராளம் உண்டு ஆனால் தமிழரை விட குறைவு

இந்நிலையில் இம்முறை ஒரு சீக்கியர் அமைச்சராக பொறுப்பற்றுவிட்டார், அவர்களுக்கு கனத்த மகிழ்ச்சி

உலகில் கனடாவில் நிறைய சீக்கியர் உண்டு, பஞ்சாப் பிரிவினை காண சகிக்காமை, பொற்கோவில் சிக்கலிலும் இந்திரா படுகொலையிலும் இனி இந்தியாவில் வாழமுடியாது என ஈழமக்களை போல கனடா சென்ற சீக்கியர் அதிகம்

இதனால் முன்பே கனடாவில் முதல் சீக்கிய அமைச்சர் பதவி அவர்களுக்கு கிடைத்தாயிற்று

இப்பொழுது மலேசியாவிலும் கிடைத்திருப்பதால் சீக்கிய மக்களுக்கு மகிழ்ச்சி

மலேசியா பல இன‌ம் கலந்த நாடு என்றாலும் சீனர்களும் மலேயர்களும் வேறு நாட்டினை நினைப்பதில்லை. சீனர்களுக்கு தங்கள் பூர்வீக சீன இடம் எல்லாம் சுத்தமாக தெரியாது , தேடவும் மாட்டார்கள்

ஆனால் தமிழர்கள் அப்படி அல்ல 1964ல் அண்ணா வந்தபொழுது கூடிய பெரும் கூட்டத்தை பார்த்து இவர்கள் இன்னமும் தமிழகத்தையே நினைக்கின்றார்களோ என்ற சில சர்ச்சைகள் வந்தன‌

ஆனால் மன்மோகன் சிங் வந்தபொழுது மலேசிய சீக்கியர்கள் அப்படி பெரும் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடதக்கது

பொதுவாக எல்லா நாடும் அப்படித்தான், தம் மக்கள் இன்னொரு நாட்டின் மீது அபிமானம் காட்டுவது அவ்வளவு பிடிக்காது, அதில் உண்மையும் இல்லாமல் இல்லை

கடந்த கால மலேசிய பிரதமர் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தார், ரஜினியுடன் கைகுலுக்கினார், சென்னைக்கு வந்து ரஜினியினை வலிய போய் சந்தித்தார்

இது பலருக்கு சரியாக படவில்லை, ஏன் ஒரு நாட்டு பிரதமர் ரஜினியினை சென்று சந்திக்க வேண்டும்? அப்படி ரஜினி என்ன சாதித்தார் என்றெல்லாம் முணுமணுப்புகள் வந்தன‌

இப்பொழுது மலேசியா தேர்தலுக்கு பின் பலத்த சீரமைப்புகளை செய்கின்றது

அந்த கபாலி படம் மட்டும் இப்பொழுது வந்தால் படமும் இருக்காது, ரஜினிக்கு அந்த கோட்டும் இருக்காது, தாடியும் இருக்காது, பிய்த்து எறிந்திருப்பார்கள்

இனி அந்த காலா படத்து கருப்பு வேட்டியினை மகராஷ்டிர அரசு உருவ போகின்றது என்பது வேறு விஷயம்

நாம் சீக்கிய கதைக்கு வருவோம்

உலகில் கனடாவினை தொடர்ந்து மலேசியாவிலும் சீக்கியர் அமைச்சராகி இருப்பது சீக்கிய நண்பர்களுக்கு மகிழ்வினை கொடுத்திருக்கின்றது

நிச்சயம் சீக்கிய இனம் வாழ்த்துகுரியது, நன்றிக்குரியது

பஞ்சாபை இரண்டாக பிளந்து ஒன்றை பாகிஸ்தானுக்கு பாகிஸ்தானுக்கு கொடுத்த போதிலும், இருந்த மீதி பஞ்சாபை ஹரியானா என வகுந்த போதிலும்

அவர்களுக்கு மத சலுகை மொழி சலுகை மறுதத போதிலும், வஞ்சக வலையில் பிந்தரன் வாலே விழுந்து பஞ்சாப் எரிந்து, இந்திரா செத்து அதன் பின் கலவரங்கள் பெருகி அவர்கள் சொல்லொனா கஷ்டங்களை அனுபவத்தி போதிலும் அவர்களின் இந்திய அபிமானம் மாறவில்லை

(இலங்கையில் அமைதி ஏற்படுத்த போய், புலிகளால் கொல்லபட்ட 1500 வீரர்களில் 98% சீக்கியரே)

இந்திய ராணுவத்தையும் இந்த நாட்டையும் தாங்கி பிடிப்பதில் அவர்களுக்கு பெரும் பங்கு இன்றும் உண்டு.

அவர்கள் கண்ட பிரச்சினைகளில் 100ல் ஒரு பங்கு கூட காணாத தமிழகம் பல இடங்களில் பொங்குகின்றது, அவர்கள் அளவிற்கு பட்டிருந்தால் என்ன ஆயிருக்குமோ?

தமிழரை விட அவர்கள் துயரம் பன்மடங்கு பெரிது, ஆனால் தமிழரை விட இந்திய பற்று மகா அதிகம்.

அந்த இனம் அன்றும் இன்றும் என்றும் இந்தியாவினை தாங்கி நிற்கும் இனம், வாழ்த்துகுரியவர்கள் நன்றிகுரியவர்கள் அவர்கள்.

 


ஒரு விசித்திரமான நடிகர் கவுண்டமணி

Image may contain: 1 person, smiling

ஆயிரம் காமெடி நடிகர்கள் வந்தாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகர்கள் குறைவு

அதவாது டிரண்ட் செட்டர் என்படும், எக்காலமும் நிற்கும் காமெடிகளை செய்தவர்கள் மிக குறைவு

அதில் ஒருவர் கவுண்டமணி

சர்வர் சுந்தரம் படத்திலே அறிமுகமானார் ஆனால் இன்று பார்த்தாலும் தெரியாது, அப்படி ஒரு துக்கடா வேடம்

பின் ஆங்காங்கே தோன்றினார், 16 வயதினிலே படம் அவரை கவனிக்க வைத்தது

சுருளிராஜனின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பினார் கவுண்டமணி, நிச்சயம் 1980களில் கவுண்டமணியால் தமிழகம் கவலை மறந்து சிரித்தது.

கொங்குநாட்டு குசும்பு அவரிடம் இருந்தது, கிராமத்து கலாச்சாரமன எதையும் அசால்ட்டாக சொல்லி செல்லும் வெகுளிதனம் அவரிடம் இருந்தது

திரையில் அவரை காணும்பொழுது சக மனிதராக அவர் உணரபட்டு மக்கள் மனதில் இடம்பிடித்தது இதனால்தான்

அந்த கிராமத்து குணமான “என்றா..” “டேய்..கோமுட்டி தலையா” போன்ற பேச்சுக்களை அதே தொணியில் கொடுத்தபொழுது மக்கள் மனதில் அவரால் எளிதில் அமர முடிந்தது

அதிலும் செந்தில் இணைந்தபின் எங்கோ சென்றார், கரகாட்டகாரன் படம் மாபெரும் வெற்றி பெற முதல் காரணம் இளையராஜா இரண்டாம் காரணம் கவுண்டரும் செந்திலும்

இன்னும் ஏராளமான படங்கள் அவரால் வென்றன‌

கவுண்டமணிக்கு ஒரு சிறப்பு என்னவென்றால் சலவை தொழிலாளி வேடம் முதல் முதல் அமைச்சர் வேடம் வரை சகல வேடத்திலும் நடித்தவர்

எந்த நடிகனுக்கும் இல்லா சிறப்பு அது

அதனால்தான் எல்லா தரப்பும் அவரை சிலாகித்து கொண்டாடியது

ஒரு விசித்திரமான நடிகர் அவர், திரையில் கலக்குவாரே தவிர தனிபட்ட முறையில் பேட்டிகளோ, இம்சை பேட்டிகளோ ஒருகாலும் இல்லை

தனக்கு வாழ்வு கொடுத்த சுருளிராஜனை தவிர யாரையும் பற்றி அவர் பேசியதுமில்லை

திரை வாழ்வில் அரசியல்வாதி, தொழிலதிபர் முதல் தெருவில் வம்பிழுப்பவன் வரை கலாய்த்த ஒரே நடிகர் கவுண்டமணி

அவருக்கான இடம் நிச்சயம் பெரிது, காலத்திற்கும் பொருந்தும் வசனங்களை பேசியவர். இன்று அவர் பேசிய வசனங்கள் சால பொருந்துகின்றன‌

அந்த அற்புதமான கலைஞனுக்கு இன்று பிறந்த நாள்

கவுண்டமணி என்ற பெயரை சொன்னவுடன் முகத்தில் எல்லா தமிழருக்கும் ஒரு புன்னகை வருமல்லவா? அதுதான் அவரின் மாபெரும் வெற்றி

திரையில் தமிழகத்து யதார்த்தங்களை மிக அழகாக சிரிக்க சிரிக்க சொன்ன கவுண்டணி இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்,

 

இரு நடிகைகளுக்கு சென்னையில் சனி பிடித்துவிட்டது

Image may contain: 2 people

இரு நடிகைகளுக்கு சென்னையில் சனி பிடித்துவிட்டது

ஒருவர் ராதாவின் மகள் கார்த்திகா, இன்னொருவர் சர்ச்சையில் புகழ்பெற்ற காயத்ரி ரகுராம்

என்ன சொல்லிவிட்டார்கள் என்றால் தூத்துகுடியில் காவலர் செய்தது சரி என சொல்லிவிட்டார்கள்

இது சாதாரண விளைவுகளை ஏற்படுத்தாது, காரணம் சென்னையின் மிக முக்கிய புள்ளிகள் தூத்துகுடி மக்கள்

பிரமாண்ட கடைகள், உணவகம், பொழுது போக்கு மையம், போக்குவரத்து என சென்னையின் பெரும் ஆதிக்கம் தூத்துகுடியினரிடமே உள்ளது

தூத்துகுடியார்கள் இல்லை என்றால் சென்னையின் பல இயக்கம் இல்லை..

அந்த சென்னையில் இருந்து கொண்டு தூத்துகுடி மக்கள் செத்தது சரி என சொன்னால் இவர்கள் இனி சென்னையில் எப்படி நடமாடுவார்களோ தெரியாது

சென்னையில் இந்த இரு மூதேவிகளும் எங்கும் தாக்கபடும் அயாயம் வந்தாயிற்று, இருவரும் அண்டார்டிக்கா போவது நல்லது

சென்னை இனி இவர்களுக்கு பாதுகாப்பான நகரம் அல்ல என்பதை மட்டும் சொல்லிகொள்கின்றோம்

 
%d bloggers like this: