சீக்கியர் உலகம்

Image may contain: outdoor

வெள்ளையன் இந்தியாவினை ஆளும்பொழுது இரு இனங்களை அவனுக்கு மிக பிடித்தது, அந்த இரு இனத்தையும் விசுவாசமான, கடிமனாக உழைக்க கூடிய, நன்றியுள்ள இனம் என அவன் மிக நம்பினான்

தான் சென்ற இடங்களுக்கு இந்த இரு இனங்களையும் அழைத்தே சென்றான், அப்படி அந்த இரு இனங்களும் பல நாடுகளில் நிரம்ப வாழ்கின்றன‌

சீக்கிய இனமும், தமிழினமும் அவை

மலேசியாவில் இந்த இரு இனங்களும் உண்டு, இதில் தமிழர் ஓரளவு பெரும்பான்மை என்பதால் அவர்களுக்கு அமைச்சர் பதவி அன்றே கொடுக்கபட்டது

சீக்கியர் வெளிநாடுகளில் அதிகம் உண்டு, ஆனால் பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தபின் பலருக்கு பாகிஸ்தான் குடியுரிமை அது இது என சிக்கல்கள் வந்ததால் உலக அளவில் அதிகம் தெரியாது

Image may contain: 1 person, suitஆனால் மலேசியாவில் முன்பே வந்ததால் அவர்கள் ஏராளம் உண்டு ஆனால் தமிழரை விட குறைவு

இந்நிலையில் இம்முறை ஒரு சீக்கியர் அமைச்சராக பொறுப்பற்றுவிட்டார், அவர்களுக்கு கனத்த மகிழ்ச்சி

உலகில் கனடாவில் நிறைய சீக்கியர் உண்டு, பஞ்சாப் பிரிவினை காண சகிக்காமை, பொற்கோவில் சிக்கலிலும் இந்திரா படுகொலையிலும் இனி இந்தியாவில் வாழமுடியாது என ஈழமக்களை போல கனடா சென்ற சீக்கியர் அதிகம்

இதனால் முன்பே கனடாவில் முதல் சீக்கிய அமைச்சர் பதவி அவர்களுக்கு கிடைத்தாயிற்று

இப்பொழுது மலேசியாவிலும் கிடைத்திருப்பதால் சீக்கிய மக்களுக்கு மகிழ்ச்சி

மலேசியா பல இன‌ம் கலந்த நாடு என்றாலும் சீனர்களும் மலேயர்களும் வேறு நாட்டினை நினைப்பதில்லை. சீனர்களுக்கு தங்கள் பூர்வீக சீன இடம் எல்லாம் சுத்தமாக தெரியாது , தேடவும் மாட்டார்கள்

ஆனால் தமிழர்கள் அப்படி அல்ல 1964ல் அண்ணா வந்தபொழுது கூடிய பெரும் கூட்டத்தை பார்த்து இவர்கள் இன்னமும் தமிழகத்தையே நினைக்கின்றார்களோ என்ற சில சர்ச்சைகள் வந்தன‌

ஆனால் மன்மோகன் சிங் வந்தபொழுது மலேசிய சீக்கியர்கள் அப்படி பெரும் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடதக்கது

பொதுவாக எல்லா நாடும் அப்படித்தான், தம் மக்கள் இன்னொரு நாட்டின் மீது அபிமானம் காட்டுவது அவ்வளவு பிடிக்காது, அதில் உண்மையும் இல்லாமல் இல்லை

கடந்த கால மலேசிய பிரதமர் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தார், ரஜினியுடன் கைகுலுக்கினார், சென்னைக்கு வந்து ரஜினியினை வலிய போய் சந்தித்தார்

இது பலருக்கு சரியாக படவில்லை, ஏன் ஒரு நாட்டு பிரதமர் ரஜினியினை சென்று சந்திக்க வேண்டும்? அப்படி ரஜினி என்ன சாதித்தார் என்றெல்லாம் முணுமணுப்புகள் வந்தன‌

இப்பொழுது மலேசியா தேர்தலுக்கு பின் பலத்த சீரமைப்புகளை செய்கின்றது

அந்த கபாலி படம் மட்டும் இப்பொழுது வந்தால் படமும் இருக்காது, ரஜினிக்கு அந்த கோட்டும் இருக்காது, தாடியும் இருக்காது, பிய்த்து எறிந்திருப்பார்கள்

இனி அந்த காலா படத்து கருப்பு வேட்டியினை மகராஷ்டிர அரசு உருவ போகின்றது என்பது வேறு விஷயம்

நாம் சீக்கிய கதைக்கு வருவோம்

உலகில் கனடாவினை தொடர்ந்து மலேசியாவிலும் சீக்கியர் அமைச்சராகி இருப்பது சீக்கிய நண்பர்களுக்கு மகிழ்வினை கொடுத்திருக்கின்றது

நிச்சயம் சீக்கிய இனம் வாழ்த்துகுரியது, நன்றிக்குரியது

பஞ்சாபை இரண்டாக பிளந்து ஒன்றை பாகிஸ்தானுக்கு பாகிஸ்தானுக்கு கொடுத்த போதிலும், இருந்த மீதி பஞ்சாபை ஹரியானா என வகுந்த போதிலும்

அவர்களுக்கு மத சலுகை மொழி சலுகை மறுதத போதிலும், வஞ்சக வலையில் பிந்தரன் வாலே விழுந்து பஞ்சாப் எரிந்து, இந்திரா செத்து அதன் பின் கலவரங்கள் பெருகி அவர்கள் சொல்லொனா கஷ்டங்களை அனுபவத்தி போதிலும் அவர்களின் இந்திய அபிமானம் மாறவில்லை

(இலங்கையில் அமைதி ஏற்படுத்த போய், புலிகளால் கொல்லபட்ட 1500 வீரர்களில் 98% சீக்கியரே)

இந்திய ராணுவத்தையும் இந்த நாட்டையும் தாங்கி பிடிப்பதில் அவர்களுக்கு பெரும் பங்கு இன்றும் உண்டு.

அவர்கள் கண்ட பிரச்சினைகளில் 100ல் ஒரு பங்கு கூட காணாத தமிழகம் பல இடங்களில் பொங்குகின்றது, அவர்கள் அளவிற்கு பட்டிருந்தால் என்ன ஆயிருக்குமோ?

தமிழரை விட அவர்கள் துயரம் பன்மடங்கு பெரிது, ஆனால் தமிழரை விட இந்திய பற்று மகா அதிகம்.

அந்த இனம் அன்றும் இன்றும் என்றும் இந்தியாவினை தாங்கி நிற்கும் இனம், வாழ்த்துகுரியவர்கள் நன்றிகுரியவர்கள் அவர்கள்.

 


4 thoughts on “சீக்கியர் உலகம்

  1. ஈழம் புலிகள் விடயத்தில் சில இடங்களில் பக்க சார்பில்லாமல் எழுதினாலும் இந்திய தேசிய வெறி உமக்கு அதிகம் போல ஆதலால் எந்த தலைப்பை பற்றி எழுதினாலும் வரிக்கு ஒருமுறை புலிகள் கொன்றார்கள் , இன்றைய ஈழ ஆதரவாளர்கள் என்று பித்து பிடித்து பேசுகிறீர் உங்களுக்கு மனச்சிதைவு இருக்கிறது , தொடர்ச்சியாக புலிகள் , ஈழம் என்று வெறுப்பு எதிர்ப்பு என்று நினைத்து நினைத்து மனது சீழ் பிடித்து வழிகிறது நல்ல மருத்துவரை பார்க்கவும்

    Like

  2. புலிகளின் ஈழ போராட்டத்தின் பிம்பத்தை உடைக்கிறேன் என்று சில ஆசாமிகள் உலவுகின்றன. இதில் திராவிட குரூப் உண்டு அவர்கள் இந்திய தேசியத்தை ஏற்காதவர்கள் திமுக, கருணாநிதி யை துரோகி என்று விமர்சித்ததால் பதில் அவதூறு செய்பர்வர்கள் அது போகட்டும். ஆனால் தீவிர இந்திய தேசிய வாதிகள் – பார்ப்பன வெறியர்கள் , காங்கிரஸ் இல் சோனியா குடும்பத்தின் காலில் விழுது பதவி பிச்சை எடுப்பவர்கள் பிஜேபி யின் ஒரு பகுதியினர் என்று இந்த turf வரும்போது மிக மோசமாக அடி வாங்குகின்றனர் , , புலிகள் என்று சொன்னால் உடனே புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்கள் என்று ஒரு பெயர் பட்டியலை வாசிப்பது தமிழர்களை கொன்றவர்கள் எப்படி தமிழர்களுக்காக போராடுவார்கள் என்பது , அப்படியா!!! ,, சரி உங்கள் கணக்குப்படி பார்த்தால் இந்திய அரசும் இந்த ராணுவ படையும் சொந்த நாடு மக்களை எல்லா காலங்களிலம் படுகொலை செய்து உள்ளன , அப்புறம் ஏன் பாக்கிஸ்தான் கார்ன் குண்டு வைக்கிறான் கசாப் கொல்றன்னு பொலம்புர , இந்தியனே இந்தியனா கொல்றன் , போய் அதை கேளு 70 ஆண்டுகளுக்கு முன் இல்லாத ஒரு போலி தேசம் இது, காஷ்மீர் வட கிழக்கு மக்களில் ரத்தம் இன்று ஒவ்வரு நாளும் சிந்தப்படுகிறது இந்த போலி தேசத்துக்காக.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: