காடுவெட்டி குரு எனும் குருநாதன் மறைந்துவிட்டார்

Image may contain: 1 person, close-up

மருத்துவர் ராமதாஸின் வலதுகரமாகவும் பெற்றெடுக்கா பிள்ளையாகவும் இருந்த காடுவெட்டி குரு எனும் குருநாதன் மறைந்துவிட்டார்

அப்பல்லோவில் நீண்ட நாள் சிகிச்சையில் இருந்த அவரால், மருத்துவர்களை கட்சி தலைவராக கொண்ட அவரால் நலம் பெற முடியவில்லை, அவர் காலம் முடிந்தாயிற்று

ஆனால் எதிர்பாராமல் சில ராமசந்திரனையே எதிர்த்தன‌,் சங்க தலைவராக இருந்தவர். 1980களில் கலைஞரை பலவீனபடுத்த‌ சாதி அரசியலை ராமசந்திரன் கையில் எடுக்க, பல சாதி சங்கங்கள் கங்கணம் கட்டி உருவாகி போராட வந்தன‌, குரு அதில்தான் தலைவராக உருவானார்

திமுகவினை பலவீனமாக்க ராமசந்திரன் செய்த சில காரியங்களே இன்றைய சாதி அரசியல். அதில் சந்தேகமில்லை

ஆனால் எதிர்பாராமல் சில ராமசந்திரனையே எதிர்த்தன‌ ,

அப்படி எதிர்பாரா பின் விளைவாக ராமசந்திரனுக்கு அதிர்ச்சி கொடுத்த போராட்டத்தை நடத்தியவர் குரு, உண்மையில் அவரின் வன்னியர் சங்கம்தான் உண்மையான பாமக‌

பின் ராமதாஸ் வந்து அதை கட்சியாக்கி கைபற்றிகொண்டார்

ஒருவகையில் ராமதாஸுக்கு குருநாதார் குரு

சிலமுறை எம்.எல்.ஏவாகவும் இருந்தாவர், அடிக்கடி சர்ச்சையாக பேசி சிக்கிகொள்ளும் வழக்கமும் உண்டு. திமுகவுடன் 2008ல் மிக கடுமையான உரசலில் இருந்தவர்

அரசியலில் ஜெயாவின் உடன்பிறவா சகோதரி போலவே, நான் பெற்றெடுக்கா பிள்ளை எனும் ராமதாஸின் வசனமும் குறிப்பிடதக்கது, அதற்கு உரித்தானவர் குரு

அவரை மாவீரன் குரு என வன்னியர் சொல்லிகொண்டிருப்பார்கள், அப்படி எங்கே மாவீரம் காட்டினார் என்றால் அந்த பெரம்பூர் முதல் ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி ஏரியாக்களில் வீரத்தை காட்டினார், அதில் சங்கம் வளர்ந்தது பின் பாமக வளர்ந்தது

அவரின் இன்னொரு பக்கம் சர்ச்சையானது, அவைகளை பற்றி பேச இது நேரமில்லை

நிச்சயம் இது ராமதாஸுக்கு மிக பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை

காலமெல்லாம் வன்னியர் நலன் என சொல்லி பேசிகொண்டிருந்த காடுவெட்டி குருவின் ஆன்மா இனியாவது சாதிமதம் கடந்த இறைவனில் இளைப்பாறட்டும்

மருத்துவர் ராமதாஸ் அவர்களிடம் ஆழ்ந்த‌ இரங்கலை தெரிவித்துகொள்வோம்


காடுவெட்டி குருவிற்கு அஞ்சலி என முழங்கி, பாமகவின் வாக்கு வங்கியில் மண் அள்ளி போடும் காரியங்களை பலர் செய்துகொண்டிருக்கின்றனர்

குரு ஒன்றும் தியாகி அல்ல, பெரும் சிந்தனையோ அல்லது நல்வழி காட்டும் உயரிய பெருந்தன்மையோ அவரிடம் இல்லை

அவரை பெரும் தியாகி என பாமாகவினர் சொல்ல , அதற்கு பலர் மறுதலிக்க மொத்தத்தில் குருவின் கீர்த்தி உலகெல்லாம் தெரிந்துகொண்டிருக்கின்றது

உண்மையில் குரு போன்றவர்களுக்காக பேருந்தை உடைப்பதும், கடைகளை அடைக்க சொல்லி மிரட்டுவதெல்லாம் சரியல்ல‌

இங்குதான் ஸ்னைப்பர் குழுவினை அனுப்ப வேண்டும், ஆனால் செய்யமாட்டார்கள்


தமிழகத்தை ஏன் ராமதாஸ் இரண்டாக பிரிக்க சொன்னார் என்பதும், அப்படி பிரிந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதற்கு இப்போது ஓடிகொண்டிருக்கும் மக்கள் டிவி காட்சிகளே சாட்சி

நல்ல வேளையாக தமிழகம் இரண்டாக பிரியவில்லை, இல்லையேல் அரசு மரியாதையுடன் காடுவெட்டியின் இறுதி சடங்கு நடைபெற்றுகொண்டிருக்கும்

காடுவெட்டி குரு சமூக நீதியினை காத்தார் என்றால் ஆட்டோ சங்கரும், இன்னும் சிலரும் என்ன நீதியினை காத்தார்களோ தெரியவில்லை?

“புரட்சி” போலவே தமிழனுக்கு அர்த்தம் தெரியாத இன்னொரு பெயர் “சமூக நீதி”


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s