முதல்வர் பதவி விலகும்வரை சட்டப்பேரவை நிகழ்வுகளில் தி.மு.க. பங்கேற்காது – மு.க.ஸ்டாலின்

பிரிட்டனில் இலங்கை தமிழ்பெண் மேயராக தேர்வு : செய்தி.

இது என்ன அநியாயம்?

பிரிட்டனுக்கு யாரும் வரலாம் வாழலாம், ஆனால் ஆளும் உரிமை பிரிட்டானியருக்குத்தானே உண்டு? இதுதானே தமிழ் தேசிய சித்தாந்தம்

இதை எப்படி அனுமதிக்கலாம்

உடனே தமிழ்தேசிய வாதிகளும், பாரதிராஜா கோஷ்டியும் அப்பெண்ணை பதவிவிலக கோர வேண்டும்

தமிழனை தமிழன் ஆளட்டும், பிரிட்டனை பிரிட்டானியர் ஆளட்டும்.


முதல்வர் பதவி விலகும்வரை சட்டப்பேரவை நிகழ்வுகளில் தி.மு.க. பங்கேற்காது – மு.க.ஸ்டாலின்

ஆட்சியினை கவிழ்க்கும் வித்தை தெரியாது, வேறு தெரிவுகளும் யோசிக்கும் மனநிலையும் இல்லை

பழனிச்சாமி பதவி விலகும் வரை சட்டப்பேரவை பக்கம் வரமாட்டோம் எனபதெல்லாம் பழனிச்சாமிக்கு மிக பெரும் நிம்மதியினை மட்டுமே கொடுக்கும்

அதற்குத்தான் ஆசைபடுகின்றார் ஸ்டாலின்.

பழனிச்சாமிக்கு இதை விட பெரும் சந்தோஷம் என்ன இருக்க முடியும்?


தமிழகத்தில் 1970 முதல் தமிழர் அல்லா முதல்வர்கள் ஆளும்பொழுது நடக்காத பெரும் துப்பாக்கி சூடு பச்சை தமிழன் ஆட்சியில் நடந்திருக்கின்றது

தமிழனை தமிழன் ஆண்டால் எல்லாம் சரியாகும் என்ற சைமன், பாரதிராஜா கோஷ்டி இப்பொழுது அமைதியான காரணம் இதுதான்

தமிழனுக்கு தமிழர் அல்லாத முதலமைச்சரே பலவிதங்களில் பாதுகாப்பு, சுட்டால் நம்மை தமிழர் அல்லாதவர் என சொல்லிவிடுவார்களோ என சுடுவதற்கே யோசிப்பார்கள்

ஆக இனி தமிழ்நாட்டை தமிழன் அல்லாதோரே ஆளவேண்டும், தமிழர் ஆண்டால் பெரும் கொடூரமாக சுடுகின்றார்கள்


பெட்ரோல் டீசல் விலையினை ஒரே இரவில் குறைக்க முடியாது : அமைச்சர் தர்மேந்தர்

ஆனால் விலையினை உயர்த்துவதை மட்டும் ஒரே நொடியில் உயர்த்துவார்கள், அது பற்றி எல்லாம் நாம் கேட்டால் தேசதுரோகி

 

ஸ்டெர்லைட்டுக்கு பிறகு … மீதம் இருப்பது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி …..

ஸ்டெர்லைட் மூடபடுவதாக அரசு அறிவித்தாயிற்று, கடந்த 1 மாத காலமாகவே அது இயங்கவில்லை , பராமரிபிற்காக நிறுத்தபட்டிருந்தது இனி மொத்தமாக மூடபடும்

அதற்குள், ஒரு கம்பெனி மூடபடுவது சாதாரண விஷயமா? எங்கெல்லாம் இருந்து ஆணைகள் வரவேண்டும் தெரியுமா? உச்சநீதிமன்றம் எல்லாம் அவர்களை கைவிடாது என பல அழுகுரல்கள்

இதெல்லாம் யாருக்கு தெரியாது

பல துறைகளில் இருந்து ஆணைவரத்தான் வேண்டும், அதற்கு அரசு முதல் ஆணையினை பிறப்பிக்க வேண்டும்

அரசு பிறப்பித்தபின்பே ஒவ்வொரு துறையும் களத்தில் இறங்கும், இனி ஒவ்வொரு நடவடிக்கையாக எடுக்கபடும்

அதற்குள் ஆயிரம் அழுகுரல்கள், ஸ்டெர்லைட் மூடபடுவதில் இவர்களுக்கு உள்ளூர வருத்தம் போல..

உச்சநீதிமன்றம் சட்டத்தின் அடிப்படையிலே தீர்ப்பு சொல்லும், மாநில அரசின் ஆணைகளும் முக்கியமானவை இல்லை என்றால் அது மராட்டிய ரத்னகிரியிலே நிலைத்திருக்கும் இங்கு ஏன் வரபோகின்றது

ஆலை மூட்டைகட்டி செல்ல சில மாதம் ஆகலாம், ஆனால் இனி இயங்காது என்பது மிகபெரும் ஆறுதல், அதை ஒரு பயலும் சொல்ல காணோம்

மபி போபாலில் கடைசியில் ஏற்பட்ட பேரழிவுதான் உலகறியும், ஆனால் அதன் சிற் சில விபத்துகளில் அங்கு பலர் செத்துகொண்டேதான் இருந்தார்கள் ஆனால் விழிப்புணர்வில்லா அப்பகுதியில் அதை உணர்ந்து சொல்ல யாருமில்லை

ஒரே ஒரு நள்ளிரவு நச்சு கசிவு பேரழிவினை கொடுத்தது

ஸ்டெர்லைட் அப்படி ஒரு அபாய ஆலை, மறைமுகமாக பலரை கொன்றது, சில நச்சு கசிவுகளில் மறைமுகமாக ஏராளமான மக்களை பாதித்தது

போபால் போல இதுவும் மொத்தமாக ஒரு நாள் கொல்லும் என மக்கள் அஞ்சிய நிலையில்தான் போராட்டம் வலுத்து , பலர் செத்து இப்பொழுது முடிவு கிடைத்திருக்கின்றது.

அந்த சிவசங்கரன் என்பவர் கடும் வயிற்றேரிச்சலில் இருந்திருப்பார் போல, அவருக்கு நல்ல செய்திகள் எல்லாம் கிடைகின்றன‌

ஏர்செல் அவரின் கம்பெனி அதை மிரட்டி வாங்கினார்கள், அது இன்று திவால்

இந்த ஸ்டெர்லைட் அவரின் கம்பெனி , அவர் வைத்த பெயர். பல சிக்கல்களால் வேதாந்தா எடுத்தது. இன்று அதுவும் காலி

இனி மீதம் இருப்பது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி

நாடார்களால் முன்பொரு காலத்தில் தொடங்கபட்து பின் சிவசங்கரனிடம் சிக்கியது. நாடார்களால் பெரும் போராட்டம் நடத்தி அது சிவசங்கரனிடம் இருந்து மீட்கபட்டது

இப்பொழுது அது நிமித்தம் தனக்கு ஏதும் நல்ல செய்தி வருமா? என சிவசங்கரன் எதிர்பார்த்துகொண்டே இருக்கலாம்….

ஆனால் மெர்கண்டைல் வங்கியின் இன்றைய பெரும் ஆதாரம் யார் என்றால் “தென்னகத்து அம்பானி” அண்ணாச்சி வைகுண்டராஜன் என்கின்றார்கள்

டாடாவிற்கே டாட்டா காட்டிய அண்ணாச்சியினை மீறி சிவசங்கரனுக்கு என்ன நல்ல செய்தி செல்லமுடியும் என்பதுதான் சவால்..

 
 

தமிழகத்தில் புத்தரை மறந்துவிட்டார்கள்

Image may contain: text

அது இன்றைய நேபாளமும் இந்தியாவும் சார்ந்த பகுதிகள், அன்றும் இன்றும் அங்கு இந்துமதமே பிராதனம்,

இந்துமதத்தின் இதயமே இன்றும் அங்குதான் இருக்கின்றது, தமிழ்கடவுள் முருகனே அங்கிருந்துதான் பழனிக்கு பறந்ததார் , பின் அகத்தியனும் வந்தார்.

அதற்காக இவர்களை வந்தேறிகள் என சொல்லிவிட கூடாது, வந்தேறி என்பதற்கு இப்பொழுது தமிழகத்தில் வேறு வார்த்தை, அவர்களுக்கு பிடிக்காதவர்கள் அல்லது ஆதரவு தாராதவர்கள் எல்லாம் வந்தேறிகள்.

அந்த நேபாள‌ நாட்டின் இளவரசனாக 2600 ஆண்டுக்கு முன் புத்தர் பிறந்தார், பிறந்தவுடன் அரண்மனை ஜோதிடன் கணித்து சொன்னான், ஒரு முதியவர், ஒரு நோயாளி, ஒரு பிணம் மூலம் இவர் ஞானம் பெற்று சந்நியாசம் செல்வார், இனி உங்கள் பொறுப்பு.

அவ்வளவுதான் வெளிஉலகம் காணாமல் அவர் வளர்க்கபட்டார், சகலமும் அரண்மனையிலே, கொஞ்சம் எங்கோ இடிக்கின்றது அல்லவா? அதேதான் சின்னதம்பி குஷ்பு போலவே தங்ககூட்டிலே வளர்க்கபட்டார், வாழ்வின் எந்த துன்பமும் அவரை எட்டியதில்லை, மணவாழ்கையும் சிறப்பாக சென்றது.

அதன் பின் மன்னராகும் காலத்தில் நாட்டை பார்த்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் வெளிவந்தவருக்குத்தான் நோயாளி, முதியவர், பிணம் எல்லாம் பார்த்து ஞானம் வந்தது, சொல்லபோனால் வாழ்வில் இப்படி எல்லாம் சிக்கல் உண்டா என அவர் சிந்தித்ததே அப்பொழுதுதான்.

இதனை எல்லாம் தடுக்க முடியாதா? என்ற அவரின் கேள்விக்கு அமைச்சரிடமும் பதிலில்லை, ஆண்டவனிடமும் பதில் இல்லை. தானாகே தேடி காட்டிற்குள் சென்றார். இதுதான் அவர் அரண்மனை விட்டு ஓடிய சம்பவமே அன்றி, மனைவியிடம் சண்டையிட்டோ அல்லது சமையல் பிடிக்காமலோ அல்ல.

அப்படியும் ஞானம் வந்ததா என்றால் இல்லை, அக்கால முனிவர்கள் உணவை வேறுத்தால் ஞானம் வரும் என்றனர், அவரும் ஒரு சட்டி, ஒரு அகப்பை, ஒரு பருக்கை படிபடியாக என குறைத்து பார்த்தால், உடல் மெலிந்து மூளை சோர்வடைந்ததே தவிர ஞானம் கடிதம் கூட போடவில்லை, அதன் பின் நன்றாக உண்டார், உடல் செத்துவிட்ட பின் ஞானம் வந்து என்ன? பேய்வந்து என்ன?

அது ஒரு பவுர்ணமி நாள், வைகாசி மாத விசாக நட்சத்திரம் (முருகனுக்கும் அதுதான் உகந்தது, அதுவும் வைகாசி விசாகம் ஸ்பெஷல்) அன்று ஒரு அரச மரத்தடியில் அவருக்கு ஞானநிலை எட்டியது, அதன் பின் உண்மையினை உணர்ந்து போதிக்க தொடங்கினார், அதனை 4 ஆக பிரித்தார்

* மனித வாழ்க்கை சிக்கல்களும், துயரமும் நிறைந்தது அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது
* பேராசையும், சுயநலமும் தான் துன்பத்திற்கு காரணம், ஆனால் கடும் தியானம் மூலம் மனதை அடக்கலாம், ஆசையினை வெல்லலாம்.
* அன்பும், சமாதனமும் கொண்ட சமூகத்தில் துன்பமில்லை
* 8 வழிகளில் இவ்வுலகில் நல்வாழ்க்கை சாத்தியம் (நன்னடத்தை, நல்வழி, நற்சிந்தனை என 8 வரும்)

அன்றைய ரத்த பலிகளில் மூழ்கி இருந்த நேபாளத்திற்கு இது புதிய தத்துவம், ஆனால அவர்கள் பெரும்பாலும் ஏற்றுகொள்ளவில்லை, ஆனால் ஆசியா முழுக்க அது பரவிற்று.

ஒரு காலத்தில் இந்தியாமுழுக்க அது பரவி இருந்தது, இன்றும் தமிழகத்தில் பெரும்பான்மையான மடங்கள் எனும் இடங்கள் அவர்கள் தங்கி இருந்தது.

பெரும் மாற்றத்தை ஆசியாவெங்கும் புத்தமதம் உருவாக்கிற்று, அக்காலமே அது கடல்கடந்தும் பரவிற்று.
உண்மையில் புத்தர் எந்த மதமும் ஏற்படுத்தவில்லை, எந்த கடவுளையும் தொழ சொல்லவில்லை, அவர் சொன்னதெல்லாம் வாழ்க்கை நெறி, வாழ்கை தத்துவம், மாற்றமுடியாததை ஏற்றுகொள் எனும் தத்துவம்.

பண்டைய தமிழகம் புத்தமதத்தில் இருந்ததால் பழைய செய்யுள்களில், காப்பியங்களில் எல்லாம் அதன் தாக்கம் இருந்தது, மிக அழுத்தமாக இருந்தது.

புத்தமதத்தின் பெரும் சாதனை சாதியினை ஒழித்தது, உண்மையில் சாதியினை ஒழித்து காட்டிய பெரும் சாதனை அதனுடையது, அதனால்தான் அம்பேத்கர் அம்மதத்தை தழுவினார்.

இப்படி வரலாற்றின் முதல் புரட்சியாளனான புத்தன், உத்திரபிரதேசத்தில் தனது 80ம் நாள் உயிர்விட்டார்.

அவர் பிறந்தது, ஞானம் பெற்றது, மறைந்தது எல்லாமே ஒரே நாள், அதாவது வைகாசி விசாக நட்சத்திர பவுர்ணமி அன்று தான் அவரின் வரலாறு சொல்கின்றது,

பௌர்ணமிக்கு அப்படி என்ன சக்தியோ தெரியவில்லை, இந்து மதமும் அதனை குறிப்பிட்டுத்தான் சொல்கின்றது.

இந்த மானிட குல வரலாற்றில் முதன் முதலில் மனிதநேயம் பேசியன் புத்தன், முதன் முதலில் எல்லா மக்களும் நன்றாக வாழவேண்டும் என ஆசைபட்டவன் புத்தன், சாதியும் மூட நம்பிக்கையும் ஒழியவேண்டும் என ஆசைபட்டவன் புத்தன்.

நிச்சயமாக சொல்லலாம், அடுத்த 600 ஆண்டுகளில் தோன்றிய இயேசு கிறிஸ்துவிற்கு அவன் தான் முன்னோடி. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என திருமூலர் சொல்லி, அண்ணாதுரை முழங்கிய வரிகளை முதன் முதலிலே சொன்னவன்

பண்டைய இந்தியாவில் பிறந்து, பீகாரில் ஞானம் பெற்று, உத்திரபிரதேசத்தில் மறைந்த இந்தியாவின் பெரும் மகான் அவர். உலகெல்லாம் கொண்டாடபடும் இந்தியர் அவர்.

நாம் புத்தமதத்தவர் அல்லாதவராக இருக்கலாம், ஆனால் மனிதநேயம் உள்ள மனிதர்கள் என்றால், இந்த உலகத்து மக்களை எல்லாம் நேசிக்கும் மனிதம் இருக்கிறது என்றால் நமக்குள்ளும் புத்தர் சிரித்துகொண்டிருப்பார்.

அம்மாபெரும் மகானை இன்று நினைத்துகொள்வதில், மானிட சமூகம் பெருமிதம் கொள்கின்றது

பெரும் ஆரவாரத்துடன் புத்தரின் விழாவினை இலங்கை உட்பட‌ கிழக்காசியா நாடுகள் கொண்டிருக்கின்றன‌, ஆனால் அவர் கால் நடையாக நடந்த இந்தியாவில் அப்படி ஒரு சுவடு தெரியவில்லை

தமிழகத்திற்கும் தமிழுக்கும் புத்த துறவிகள் செய்திருக்கும் தொண்டு ஏராளம், ஐம்பெரும் காப்பியங்களில் அவர்கள் பாதிப்பு மிக்க உண்டு, ஆனால் தமிழகத்திலும் புத்தரை மறந்துவிட்டார்கள்

எப்படி நினைப்பார்கள்?

ஆசையினை ஒழி என சொன்னவன் எல்லாம் வழிகாட்டி அல்ல, மாறாக அத்தனைக்கும் ஆசைபடு என சொல்பவன் அல்லவா இன்றைய தமிழக ஆன்மீகவாதி,

பாரத பிரதமரும், தமிழக முதல்வரும் அவனிடமல்லவா பணிவார்கள்?

பின் எப்படி “ஆசையினை ஒழி, அமைதியாக வாழலாம்” என சொன்ன, “சாதி ஒழிக, எல்லோரும் சமம்” என சொன்ன‌, “மூட பழக்கங்களை ஒழி, மனிதனை நினை” , என சொன்ன‌ அந்த உத்தம புத்தனை நினைப்பார்கள்??

அவர்கள் நினைக்கமாட்டார்கள், நாம் நினைத்துகொள்ளலாம்

 

“நம்ம உடம்புதான் நமக்குப் பெரிய ஆயுதம்…” : காலா வசனம்

“நிலம் உங்களுக்கு அதிகாரம், எங்களுக்கு வாழ்க்கை..” : காலா வசனம்

அதெல்லாம் முதல் உலகபோருக்கு முந்தைய காலம், இப்பொழுதெல்லாம் நிலம் எல்லோருக்குமே பணம

நிலம் இப்பொழுது யாருக்கும் அதிகாரமும் அல்ல, வாழ்க்கையும் அல்ல மாறாக பணம்..

பாலஸ்தீனியர், திபெத்தியர், பாகிஸ்தானிய காஷ்மீரிகள் போன்றவர்களை தவிர‌ 


“நம்ம உடம்புதான் நமக்குப் பெரிய ஆயுதம்…” : காலா வசனம்

பெண் உளவாளிகளை விபசாரத்திற்கு கூட தயாராக இருக்கும் படி சில உளவு நிறுவணங்கள் கொடுக்கும் பயிற்சி இது.

சன்னிலியோன் பழைய‌ படங்களுக்கு அட்டகாசமாக பொருந்தும்.

மும்பை சேரி கதை படத்திற்கு மும்பையின் காமத்திபுராவிற்கான வசனத்தை எழுதி வைத்திருக்கின்றார்கள்

ஏதும் சொன்னால் நாம் தலித் எதிரி…

 

 


நியூசிலாந்தில் தொற்றுநோய் பரவுவதை தடுக்க 2 லட்சம் பசுக்களை கொல்ல முடிவு

மாட்டு பக்தாஸ் எல்லாம் எப்படி பொறுப்பார்கள்? இனி நியூசிலாந்து மீது பொருளாதார தடை விதிப்பபு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் எப்படி பொங்குவார்கள் பாருங்கள்

நியூசிலாந்து மீது போர் தொடுத்து பசுக்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வந்தாலும் ஆச்சரியமில்லை

நோய் பரவும்பொழுது மாடுகளுக்கு சிகிச்சை அளிக்காமல் கொல்லும் முடிவிற்கு வந்திருக்கும் இந்த முடிவு பற்றி “பீட்டா” வாய் திறக்குமா? என்றால் திறக்காது

ஏன் கொல்ல வேண்டும், மொத்த பசுக்களை கொல்வதை விட சிகிச்சையோ இல்லை பாதிக்கபடா பசுக்களை வேறிடம் கொண்டு சென்றால் என்ன என்றெல்லாம் பீட்டா கேட்காது

ஆனால் இங்கு மாட்டின் கொம்பை பிடித்தால் கூட அய்யகோ தடை செய்வீர் என அலறிய அமைப்பு அது

பீட்டாவின் பொய்முகம் கிழியும் நேரமிது

 
 


%d bloggers like this: