புகையினை தூர எறிவோம், நலம் காப்போம்  

Image may contain: text

சில மூலிகைகளின் புகை அன்றைய காலங்களில் மருந்தாகவும், வழிபாடுகளிலும் இன்னும் பல விஷயங்களுக்காகவும் பயன்பட்டது

இங்கு கஞ்சா எனப்படும் சிவஞான மூலிகை அப்படித்தான் மருந்தாக இருந்தது என்கின்றார்கள், இன்னும் முறையாக எடுத்தால் கஞ்சா அற்புதமான மருந்து என மருத்துவ உலகமே சொல்கின்றது

(பொடி போடும் கூட ஒரு மூலிகையின் பொடியினை முகர்ந்தால் கிடைக்கும் பலன் என்பதில் ஆரம்பித்த்தே பின் திசைமாறி நாசமாயிருக்கின்றது)

இந்த பழக்கம் போலவே தென்னாபிரிக்க பழங்குடியினரிடம் சில இலைகளை, சில மூலிகைகளை புகைக்கும் பழக்கம் இருந்திருக்கின்றது, தென் அமெரிக்காவினை கொள்ளையிட்ட ஸ்பானியர் அதை ஐரோப்பாவில் பரப்பினர்

ஆனால் அந்த உண்மையான மூலிகைகளை விட்டுவிட்டு புகையிலை எனும் ஒற்றை இலையினை மட்டும் வியாபாரமாக்கினார்கள், அதில் சில ரசாயாணங்களையும் சேர்த்தனர்

ஐரோப்பிய குளிருக்கும் இன்னும் பல விஷயங்களுக்கும் அது பெரும் வரவேற்பை பெற்றது, அப்படியே ஐரோப்பியர் கால்பதித்த நாடெல்லாம் பரவிற்று

இந்தியாவிலும் அது அப்படித்தான் வந்தது, புகையிலையினை விளையவைக்கும் அளவிற்கு இங்கு அது பணப்பயிர் ஆனது

ஐரோப்பாவில் வியாபாரம் யூதர் கைகளில் சிக்கியபின் அது உலகெல்லாம் பெரும் வியாபாரமானது, இன்று புகையிலை பொருள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இல்லா நாடே இல்லை

கடும் போட்டிக்காகவும் வியாபாரத்திற்காகவும் தயாரிக்கபடும் புகையிலை இன்று ஆபத்தான பொருளாக மாறிவிட்டது

இன்று புகையிலை சிகரெட்டின் இன்னொரு வடிவம், இ.சிகரெட் எனும் வடிவில் ரசயாண கலவையினை எலக்ட்ரானிக் மெஷினில் மாட்டி இழுக்கும் அளவிற்கு சென்றாயிற்று

உடலுக்கு மிக தீதான விஷயம் இது, உலகில் அனுதினமும் சில லட்சம் மக்கள் சிகரெட்டால் சாகின்றார்கள் என்கின்றது ஆய்வு

வெள்ளையன் வியாபாரத்திற்காக பரப்பிவிடும் விஷயங்கள் எல்லாம் நுட்பமானது, முதலில் நன்றாக சம்பாதித்துவிட்டு பின் அந்த ஆபத்திலிருந்து விலகுவான்

சர்ச்சில், சேகுவேரா போன்றோரை கூட புகைக்கும் பழக்கத்திற்கு மாடலாக காட்டி சம்பாதித்த மேற்குலகம் இப்பொழுது அதனை கட்டுபடுத்துகின்றது

ஆனால் இந்தியாவில் அதெல்லாம் பற்றி யாரும் கவலைபடவில்லை, இங்கு டாஸ்மாக் அடைப்பதே நினைத்துபார்க்க முடியா விஷயம்

உண்மையில் இப்பொழுது சிகரெட் பொருட்களின் மிகபெரும் சந்தை ஆசியா, சினிமா இன்னபிற விளம்பரம் மூலம் அது ஊடுருவி நிலைத்தது

இன்று இந்நாட்டின் மிகபெரும் ஆபத்தான விஷயம் புகைப்பது, அது சம்பந்தபட்டவரை அன்றி அதை அதிகம் சுவாசிக்கும் அருகிருப்பவரையும் பாதிக்கும் தன்மையுடையது

சிகரெட்டை ஒருபுறம் தயாரித்துகொண்டே உலகநாடுகள் புகை இலைஒழிக என்பார்கள், நாமும் ஆமாம் என சொல்ல வேண்டும்

இங்கு அதற்கான டீலர்கள் கோடிகணக்கில் சம்பாதித்துவிட்டு ஆமாம் புகையில்லா உலகம் என்பார்கள் நாம் ஆமாம் என சொல்லவேண்டும்

புகைத்தவர்கள் உடல்நலம் கெட்டார்கள் செத்தார்கள்

ஆனால் மறைமுகமாக இத்தொழில் பல்லாயிரம்பேரை ஓசையின்றி கொன்றுகொண்டிருக்கின்றது

தென் தமிழகத்தின் குடிசைதொழிலில் ஒன்று பீடிசுற்றுதல், வீட்ட்டிலிருந்தே ஏராளமான பெண்கள் செய்யும் தொழில் அது

ஆரம்பத்தில் அந்த ஆபத்து தெரியவில்லை, ஆனால் அந்த நெடியும் அவர்கள் கைகளில் ஒட்டும் துகளும் அப்பெண்களுக்கு தீரா நோய்களை கொண்டுவருகின்றது

இதை பற்றி எல்லாம் பேசாமல் அல்லது பேசவிடாமல் பெரும் கொடுமை நடக்கின்றது

ஏன்? எதற்கு என தெரியாமல் யாரோ பீடி புகைத்து சாக, தங்களை பலியாக்கிகொண்டிருகின்றார்கள் தென்னக பெண்கள்

புகையிலை ஒழிப்பு என்பது இங்கு டாஸ்மாக் ஒழிப்பு போன்றது, நடக்காத விஷயம்

ஆனால் அதிலிருந்து விலகி நிற்பது சாலசிறந்தது, நம்மை நாமேதான் காப்பாற்றி கொள்ள வேண்டும்

உண்மையில் மூலிகை புகைகள் சக்தி வாய்ந்தவை பல நோய்களுக்கு மருந்தாகவும், வலி நிவாரணியாகவும், சில நுண்ணிய உறுப்புகளை வலுப்பெற செய்யும் விஷயமாகத்தான் அன்று இருந்திருக்கின்றது

வெள்ளையனின் லாப வெறி அதனை மனுகுலத்தை கொல்லும் விஷமாக மாற்றிவிட்டது வரலாற்று சோகம்

கஞ்சா என்பது மகா அற்புதமான மூலிகை

டாஸ்மாக்கையும், எங்கோ இருந்து வரும் புகையிலையினையும் அனுமதிக்கும் தேசம் கஞ்சாவினை அனுமதிக்காது , காரணங்கள் ஏராளம் சத்தியமாக மக்கள் நலனா என்றால் சுத்தமாக இல்லை

உண்மையில் மூலிகை புகைத்தல், சில மூலிகைகளை முகர்தல், வெற்றிலை எனும் தாம்பூலம் தரித்தல் என அற்புதமான விஷயங்கள் இங்கு இருந்திருக்கின்றன‌

எல்லாவற்றிலும் புகையிலை கலந்து வியாபாரம் செய்து இச்சமூகத்தை கெடுத்திருக்கின்றது வெள்ளையன் காலம்

வெற்றிலையுடன் பாக்கு சுண்ணாம்புடன், மிளகு, கிராம்பு போன்றவை கலந்து மெல்லும் பழக்கமே இருந்திருக்கின்றது, மிளகில்லா வெற்றிலையில் பலனில்லை

வெள்ளையன் காலமே மிளகினை நீக்கிவிட்டு புகையிலையினை கலந்திருக்கின்றது, இப்படி பல பழக்கங்கள் மாறி இருக்கின்றன‌

நமது சமையலில் மிளகினை நீக்கி மிளகாய் வற்றலை கொடுத்து நலம் கெடுத்தவன் அவனே, கருப்புகட்டியினை நீக்கி சீனியினை புகுத்தியவனும் அவனே

உழைப்போருக்கு நலமும் ஆழ்ந்த உறக்கமும் கொடுத்து நலம் காக்கும் பனங்கள்ளும், இன்னும் பல மூலிகை சாறும் வழக்கொழிந்து இந்த வெளிநாட்டு லிக்கர்கள் அவன் காலத்திலே வந்தன, சீமை சரக்கு என அது கொண்டாடபட்டது

உள்நாட்டு மது வகைகள் அதனால் அழிந்தது, இன்று வெறும் ராசாயாணம் டாஸ்மாக்கில் விற்கபடுகின்றது

அவன் இந்த காபி, டீ பழக்கத்தை கொண்டுவந்து எப்படி உணவுபழக்கத்தை மாற்றி நம்மை கெடுத்தானோ அப்படியே நம்முடைய பாரம்பரிய புகைப்பிலும் இந்த ரசாயாண குப்பையினை புகைக்க சொல்லி திசைமாற்றி இருக்கின்றார்கள்.

பண்டைய சித்தர்களும், மருத்துவ முறைகளும் சொன்ன மூலிகை புகைகளை அவர்கள் சொன்ன அளவில் பயன்படுத்தலாம் தவறே இல்லை

வெள்ளையன் தயாரிக்கும் இந்த ராசாயாண‌ குப்பை புகையினை தூர எறிவோம், நலம் காப்போம்

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: