பிரச்சினைக்கு நீதிமன்றம் நாடவேண்டுமே தவிர மக்கள் போராட கூடாது : ரஜினி

Image may contain: 3 people

பிரச்சினைக்கு நீதிமன்றம் நாடவேண்டுமே தவிர மக்கள் போராட கூடாது : ரஜினி

அந்த தளபதி வசனம் நினைவுக்கு வந்து தொலைக்கின்றது

“கலெட்டர் சார், நீங்க எப்போவாவது ஏழையா இருந்திருக்கீங்ளா?

கையில காலணா இல்லாம பசியோட தெருவில அலைச்சிருக்கீங்களா?

வயிறு பசிக்கும்பொழுது கோர்ட்படி ஏறமுடியாதுசார், அங்கெல்லாம் போக வழியில்லாம இங்க வாராங்க அது ஏன் உங்களுக்கு பொறுக்கல

தொட்றா.. தொட்டு பார்ரா பாக்கலாம்”

உங்களுக்கு நினைவுக்கு வரும் விஷயங்களை நீங்களும் எழுதுங்கள்


இந்த அனில் அகர்வால் மட்டும் பிராமணனாக இருந்தால் நடந்திருப்பதே வேறு, ஸ்டெர்லைட்டை பெயர்த்து கடலில் எறிந்திருப்பார்கள்

மனிதர் அகர்வாலாய் ஆகிவிட்டதால் பலருக்கு உள்ளூர வருத்தம்


திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தொழில்துறை பின்னடைவுக்கு, தொடர் போராட்டங்களும் வன்முறைகளும் முக்கிய காரணம் : ரஜினி

 

ஸ்டெர்லைட் தவிர எந்த ஆலை மூடபட்டது மிஸ்டர் ரஜினி?

தைரியமிருந்தால், ஆண்மை இருந்தால் ராமநாதபுரம் கமுதி பக்கமும், தேனி ஆண்டிபட்டி பக்கமும் , மதுரை பக்கமும் பெரம்பலூர் ஜெயங்கொண்டம் பக்கமும், விழுப்புரம், சிதம்பரம் பக்கமும் தொழில்துறை பின்னடைய என்ன காரணம் என சொல்லுங்கள் பார்க்கலாம்

அட அங்கெல்லாம் ஒரு நல்ல தொழிற்சாலையினை காட்டிவிடுங்கள் பார்க்கலாம்

 

 

தூத்துகுடியில் போராடியது சமூக விரோதிகளாம் ரஜினி சொல்கின்றார்

Image may contain: 1 person

தூத்துகுடியில் போராடியது சமூக விரோதிகளாம் ரஜினி சொல்கின்றார்.

எந்த ரஜினி தளபதி, பாஷா, கபாலி, காலா என திரையில் அடித்து நொறுக்கிய ரஜினி

காலா டிரெய்லரை கண்டால் “உடம்புதான் நமக்கு பலம்..மக்களை திரட்டுங்கலே, நாம யாருண்ணு காட்டுவோம்லே” என முழங்குகின்றது

“அடங்க மறுப்பவன் … புடுங்குபவன் யாருன்னு காட்டு” என பாடல் வேறு

“நிலம் உங்களுக்கு அதிகாரம் எங்களுக்கு வாழ்க்கை” இதைத்தானே தூத்துகுடிகாரனும் ஸ்டெர்லைட்டிடம், அரசிடமும் சொல்லிகொண்டே இருந்தான்

இவர் சொன்னால் பஞ்ச் டயலாக், மக்கள் சொன்னால் அது சமூக விரோதமாம்

டிரைய்லர் முழுக்க அடி , உதை , போராட்டம், புரட்சி, பேதி வருமளவு புரட்சி மருந்து.

பாடல் முழுக்க காது கிழியும் அளவு ஒரே புரட்சி போராளி இம்சைகள்

கபாலியில் இவர் அடித்து உடைப்பாராம், சகலத்தையும் நொறுக்குவாராம் அது போராட்டமாம் புரட்சியாம் மலேசிய தமிழரை காப்பாராம்

காலாவில் எல்லோரையும் அடித்து விரட்டி மும்பை தமிழரை சேவ் பண்ணுவாராம்

ஆனால் தூத்துகுடி மக்கள் நிஜத்தில் போராடினால் அது சமூக விரோதமாம், என்னய்யா நியாயம் இது?

ஆனால் தூத்துகுடி மக்கள் என்ன செய்தார்கள், உடலோடு வந்து உயிர்கொடுத்தார்கள், அது தவறாம்

திரையில் அது புரட்சியாம், நிஜத்தில் நடந்தால் சமூக விரோதமாம்

“காலா உன்னை துரும்பென நினைக்கின்றேன், காலடியில் வாடா உன்னை மிதிக்கின்றேன்” எனும் பாரதியின் வாக்கு இனி படம் வரும்பொழுது புரியும்

“எலேய் வேங்கையன் முவனே, நீ ஒத்தையில வந்தாலும் சரி பத்து பேரோட வந்தாலும் சரி மதுரைக்கு தெற்கே வந்துருல பாப்போம்

மதுரை என்னலே, மும்பை தமிழர்ல‌ பாதி நாங்கதாம்ல, நீ வந்துரு பாத்துருவோம்”


தமிழகத்தில் ஸ்டெர்லைட்டை அடுத்து மூட வேண்டியது சினிமா தொழிற்சாலை

ஆளாளுக்கு போராளிகள், புடுங்கிகள் என அங்கிருந்துதான் வந்து சமூகநலனை கெடுக்கின்றார்கள், சமூக அமைதியினை சீர்குலைக்கின்றார்கள்

ராமசந்திரனில் இருந்து இன்றைய பாரதிராஜா,சைமன், ரஜினி, கமல், இப்பொழுது பா.ரஞ்சித் எல்லாம் அந்த ஆலை உற்பத்தி செய்த நச்சு கிருமிகளே

அந்த ஆலை முதலில் மூடபடாமல் தமிழகம் உருப்படாது.

அது ஆலை முழுக்க சாக்கடை, அதிலிருந்து கொசுகூட்டம் உற்பத்தி ஆகி கொடூர நோய்களை பரப்பிகொண்டே இருக்கின்றது

மருந்து தெளித்தோ, கொசுவலை போட்டோ இதனை கட்டுபடுத்த முடியவில்லை

ஒரே தீர்வு அதனை மண் அள்ளிபோட்டு மூட வேண்டியதுதான்


தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் 3-வது சீசனுக்கான வீரர்கள் தேர்வு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது : செய்தி

மிஸ்டர் பாரதிராஜா & கோ, எங்கே வாயில் துண்டு பீடியுடன் மரத்தடியில் 3 சீட்டு விளையாடி கொண்டிருக்கின்றீர்கள்

உங்களுக்கான நேரம் இதோ….


 

 

“தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் என்றால் சுடுகாடு தான் ” : ரஜினி

“தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் என்றால் சுடுகாடு தான் ” : ரஜினி

ஆவடி முதல் கன்னியாகுமரி வரை ஏகபட்ட தொழிற்சாலை நிரம்பிய தமிழகம் இது, திருச்சி பெல் தொழிற்ச்சாலை எல்லாம் பெரும் பிரமாண்டம்

எல்லா ஆலையிலுமா போராட்டம் நடக்கின்றது? தூத்துகுடியில் ஸ்பிக் முதல் இன்னும் ஏகபட்ட விஷயம் உண்டு, அதெற்கெல்லாமா போராட்டம் உண்டு?

நெல்லை சிமென்ட் தொழிற்ச்சாலை பிரமாண்டம் என்ன? ஒரு குரல் கேட்டிருக்கும்?

எது எல்லாம் ஓரளவு பாதுகாப்பான தொழிற்சாலையோ அங்கெல்லாம் மக்கள் நலன் காக்கபடுமோ அங்கெல்லாம் ஒரு எதிர்ப்புமில்லை

மாறாக அபாய ஸ்டெர்லைட், உறங்கும் எரிமலையான அணுவுலை, கடற்கரை மக்களை கொன்ற தாதுமணல் (இது பெரும்பாலும் வராது) இதுபோன்ற கொடிய தொழிற்சாலைகளைத்தான் எதிர்க்கின்றார்கள்

தொழிற்சாலை வேண்டாம் என எந்த தமிழனும் சொல்லவில்லை, சொல்லவும் முடியாது

உயிர்கொல்லும் ஆலைகள் வேண்டாம் என்பதே நிலைப்ப்பாடு

அது தெரியாமல் ரஜினி என்னவோ பேசிகொண்டிருந்தால், இவர் அரசியலுக்கு வந்தால்தான் நாடு சுடுகாடாகும்

வையகத்து வைரச்சிலையே வாழ்க…

Image may contain: 1 person, smiling, sky, bridge and outdoor

பிரான்சின் வெறும் கண்ணாடி மாளிகை முன் இந்தியாவின் முழு வைரசிலை

கோஹினூர் வைரத்தைவிடவும் மிக பெரும் வைரம் இந்தியாவில் இருந்திருக்கின்றது என்பதை பிரான்ஸ் இப்பொழுதுதான் உணர்ந்திருக்கின்றது

அச்சிலை முன் , அவர்களின் புகழ்பெற்ற கண்ணாடி மாளிகையின் பெருமை அவர்கள் மனதளவில் நொறுங்கிவிட்டது

வையகத்து வைரச்சிலை வாழ்க…

 

ரஜினி வீழ்ச்சிக்கு தயாராவது தெரிகின்றது

Image may contain: 2 people

ரஜினி 1980களில் இருந்து மாஸ் ஹீரோ, பெரும் தயாரிப்பாளர் எல்லாம் அவருக்காக காத்திருப்பார்கள், கை கட்டி நிற்பபார்கள்

சினிமாவில் அவருக்கான இடம் நிச்சயம் பெரிது, அதற்கான மரியாதை அங்கு கொடுக்கபட்டது, இன்றும் உண்டு

அவரின் ரசிகர்களுக்கு அவர் கடவுள், அந்த வட்டம் வேறு

எந்த இயக்குநரும் ரஜினியினை கொஞ்சமும் மரியாதை குறைவாக நடத்த முடியாது, ஏன் தயாரிப்பாளரே குனிந்து கொண்டுதான் நிற்பார்

இப்படியான பெரும் மரியாதைகுரியவராக கடவுளாக ரஜினி சினிமாவில் வரலாம்

அவருக்காக அரசியல்வாதிகள், ஏன் மோடி கூட வந்து காபி அருந்தலாம்

ரசிகர் வட்டத்திலும், பெரும் பணங்கும் புழங்கும் தயாரிப்பாளர் மத்தியிலும், நடிகர் மத்தியிலும் , அரசியல்வாதிகளின் மேல் மட்டத்திலும் அவருக்கு பெரும் மரியாதை இருக்கலாம்

அதற்காக அதே மேட்டிமை தன்மையில் அரசியலுக்கு ரஜினி வருவாரேயானால், பேட்டிகளில் கூட அதே ஆணவதன்மையினை காட்டுவாரேயானால்

மாபெரும் வீழ்ச்சி அடைவார் என்பது உண்மை, சினிமா மாயையில் அரசியலை அதே போல் எண்ணிகொண்டே இருக்கும் ரஜினி அந்த வீழ்ச்சிக்கு தயாராவது தெரிகின்றது

 

மழை வந்து காவேரி வெள்ளமாய் வரவா இவ்வளவு போராட்டம்?

Image may contain: outdoor, water and nature

கன்னடத்தில் மழைபெய்ய ஆரம்பித்து அணைகளின் நீர்மட்டம் உயர்கின்றது, தமிழகம் இப்பொழுதே குரல் எழுப்ப வேண்டிய நேரமிது

இப்பொழுது விழித்தால் ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்க சிக்கல் இருக்காது

மாறாக தூங்கிகொண்டே இருந்தால் எஞ்சிய வெள்ள‌ நீரை கன்னடம் திறந்துவிட்டு இந்த ஆண்டுக்கான மொத்த நீரையும் கொடுத்தாயிற்று என கணக்கை சரி செய்துவிடும்

மழை வந்து காவேரி வெள்ளமாய் வரவா இவ்வளவு போராட்டம்?

தீர்ப்பு வந்துவிட்ட நிலையில் இப்பொழுதே தமிழக அரசு சுதாரித்து களமிறங்குவதுதான் சரி

ஆனால் அதுவோ அதனை சுத்தமாக மறந்தாயிற்று நினைவு படுத்தவேண்டிய எதிர்கட்சியோ அறிவாலத்தில் சீட்டு விளையாடிகொண்டிருக்கின்றது

இந்த யழவு ஐபிஎல் வேறு முடிந்துவிட்டது

 
 

மோடி ஸ்பீக்கிங்….

Image may contain: 1 person, sitting and close-up

அர்ரே பழ்ணிச்சாமி பையா, நம்பிள் தூத்துகுடிலே செத்தவங்களுக்கு இர்ங்கல் சொல்ல முடியாது , புரிஞ்சுக்கோ

நம்பிள் இன்னும் குஜ்ராத்ல செத்தவங்க்ள்க்கு, காஷ்மீர்ல செத்தங்கட்கு கூட ஒன்னும் சொல்லலே. சொல்ல ஆரம்பிச்சா 1 வருசம் சொல்லணும் , அவ்வ்ளோ விஷ்யம் இருக்கு பைய்யா

இந்த ரஜ்னி அனுப்ன மாத்ரி இன்னும் நிறையாபேர அங்கே அனுப்பு, ஆள் இல்லண்ணே காவ்ரி பத்தி பேசி அந்த குமாரசாமி பையனை அழவுடு

நம்பிளை டிஸ்டர்ப் பண்ணாதே பையா, நம்பிள் சிங்கப்பூர் கோமதி விலாஸ்ல தோசே சாப்ட போறான்”

%d bloggers like this: