அந்த நள்ளிரவு கைது

Image may contain: 5 people, people standing

அந்த நள்ளிரவு கைது, எமர்ஜென்ஸிக்கு அடுத்து தமிழகம் கண்ட பெரும் கொடுமை. ஒரு அடிப்படையுமின்றி குற்றசாட்டுமின்றி, நீதிமன்ற ஆணையுமின்றி அவரை வீடுபுகுந்து கைது செய்தது ஆணவத்தின் உச்சம்

கலைஞர் வரமாட்டேன் என சொல்லவில்லை, அப்படி சொல்பவரும் அல்ல மாறாக 80 வயதினை நெருங்கி இருந்த அவரால் நள்ளிரவில் உடனே தயாராக முடியவில்லை, அதற்குள் வலுகட்டாயமாக தூக்கிய காட்சிகள் தமிழக வரலாற்றின் பெரும் கறை

கலைஞர் கைது செய்யபட்டார், அதன் பின் நீதிவேண்டி நீதிபதி வீட்டு வாசலில் முதிர்ந்த வயதில் லுங்கியோடு அமர்ந்து போராடினார். மொத்த தமிழகமே அதிர்ந்த நேரமிது அவர் மேல் பெரும் அனுதாபம் பிறந்தது

பின் அது ஆதாரம் என ஒன்றுமே இல்லாத வழக்கு என அடிபட்டுபோனது வேறு விஷயம்

கலைஞர் அதை சாதாரணமாக கடந்து சென்றார், அவர் பார்க்காத கைதா? சிறையா? வழக்கா?

இதற்கு மேல் உன்னால் என்ன செய்துவிட முடியும் என அசால்ட்டாக இருந்தார்.

ஆனால் கலைஞரின் கைதிற்கு காரணம் கேட்ட முரசொலி மாறன், அறுவை சிகிச்சை செய்தவர் என்றும் பாராமல் மிக கடுமையாக பொலிசார் நடந்துகொண்டனர்

அது அவரின் உடல்நிலையினை பாதித்து அப்படியே மாறன் மறைந்தும் போனார்

உண்மையில் முரசொலிமாறனுக்கு நடந்தது கொலை, அதுதான் நடந்தது. அச்சம்பவம் நடந்திராவிட்டால் மாறனின் நாட்கள் நீடிக்கபட்டிருக்கும்

தன் கண்முன்னால் முதிர்ந்தவயதில் கலைஞர் இழுத்து செல்லபடுவதை கண்டு மனதால் நொந்து நோயினை தீவிரபடுத்திகொண்டார் மாறன்

கலைஞர் மீதான அவரின் பாசம் அப்படி இருந்திருக்கின்றது, இன்றும் கலைஞர் வீட்டு முன்னறையில் அவர் படம் சிரித்துகொண்டிருப்பதிலும் அர்த்தம் இருக்கின்றது

எல்லாவற்றையும் தாங்கினார் கலைஞர், இந்த அனுதாபமே அவருக்கு 2004ல் பெரும் பாராளுமன்ற வெற்றியினையும் அடுத்து சட்டமன்றத்து ஆட்சியினையும் கொடுத்தது

டான்சி வழக்கில் சிறை சென்ற ஜெயா, ஆட்சிக்கு வந்த மமதையில் செய்த மாபெரும் அநியாயம் அந்த நள்ளிரவு ஆட்டம்

தன்னை மிக கடுமையாக நடந்து கைது செய்த முத்துகருப்பனை பின் அமைந்த தன் ஆட்சியில் கலைஞர் பழிவாங்கவுமில்லை, கொஞ்சமும் அதை கண்டுகொள்ளவுமில்லை

அதுதான் கலைஞர்

கலைஞரை கைது செய்து அடக்க நினைத்தவர்கள் பின் பெங்களூர் சிறையில் அடைபட்டதும் வரலாறு

அக்கிரமக்காரர்கள் ஆடித்தான் அழிவார்கள் என்பது அச்சம்பவத்தில் உண்மையாயிற்று, ஆடியவர்களும் அடங்கிவிட்டார்கள்.

பின்னாளில் ஜெயா கைது செய்யபட்டபொழுது சோ ராமசாமியிடம் அது பற்றி கேட்டார்கள்

“ஜெயா தண்டனை விதித்தவுடன் அவர் போக்கில் சிறை சென்றார், ஐயோ கொலை பண்றாங்க.. கொலை பண்றாங்க என சத்தமா இட்டார்” என இச்சம்பவத்தை சீண்டினார் சோ ராமசாமி

அவரால் முடிந்தது அவ்வளவுதான்.

 
Advertisements

டிராபிக் ராமசாமி திரைப்படத்தில் குஷ்பு

Image may contain: 1 person, standing and text

தலைவி நடித்திருப்பதால் இந்த டிராபிக் ராமசாமி படத்தினை ஒருமுறையாவது பார்த்து சங்க கடமையினை நிறைவேற்ற வேண்டும்

ஆனால் அங்கிள் சைமனும் நடித்து தொலைத்திருப்பதால் கடும் ஆலோசனையில் சங்கம் இருக்கின்றது

பாற்கடலில் வந்த விஷம் போல அந்த இம்சையும் அமிர்தம் அருகில் வந்து நிற்கின்றது

எனினும் தலைவி வரும் காட்சியில் மட்டும் தியேட்டரில் உட்புகுந்து பார்த்துவிட்டு ஓடிவந்துவிட வேண்டும் என தீர்மானம் போட்டாயிற்று

தலைவி வரும் காட்சிகள் முடிந்ததும் தியேட்டர் காலியாகிவிடுவதாக நம்பதகுந்த செய்திகள் சொல்வதும் கவனிக்கதக்கது

தலைவி தலைகாட்டுவதால் அப்படம் முதலுக்கு மோசமில்லை குறிப்பாக காலா அளவிற்கு நஷ்டமில்லை என செய்திகள் சொல்கின்றன‌

அடுத்து தலைவி படம் முழுக்க நடிக்கும் வகையில் ஒரு படம் நிச்சயம் வரும், அது தசாவாதரம் கமல் போல தலைவி படம் முழுக்க வருவது போல் இருக்கும் என சங்கம் தீர்க்கமாக நம்புகின்றது

 
 

இந்த பிக்பாஸ் பற்றி என்ன சொன்னார்கள்

Image may contain: 1 person, smiling, standing and text

இந்த பிக்பாஸ் பற்றி என்ன சொன்னார்கள், அங்கு கேமரா மட்டும்தான் இருக்கும், ரகசியமாக கண்காணிக்கும் விளையாட்டு என்றார்கள்

அப்படி எல்லாம் அல்ல, இது ஒரு ஷூட்டிங் எல்லோரும் கேமரா முன்பு நடிக்கின்றார்கள் என சொல்ல வந்துவிட்டார்கள் படபிடிப்பு தொழில் நுட்ப சங்கத்தினர்

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி படபிடிப்பில் வடமாநில தொழிலாளர்கள்தான் அதிகம் பயன்படுத்தபடுகின்றார்களாம், உள்மாநில தொழிலாளர்களுக்கு வேலை இல்லையாம் அதனால் ஸ்டைக்காம்

ஆக இது படபிடிப்பு போல திட்டமிட்டு செய்யபடும் விஷயம் என்பது உறுதியாயிற்று

இது என்ன வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்வதால் ஸ்ட்ரைக்?

அதில் நடிக்கும் நடிகைகளில் 90% அயல்மாநில நடிகைகள்தான், நிச்சயம் உள்ளூர் நடிகைகளும் ஸ்ட்ரைக் செய்தே தீரவேண்டும்

அதுபற்றி எல்லாம் யார் பேசபோகின்றார்கள்??


முன்பெல்லாம் கிராமங்களில் சுவருக்கு சுண்ணாம்புதான் பூசுவார்கள்

அந்த சுண்ணாம்பினை சுவற்றில் அடிக்க பனை மட்டையினை ஊற வைத்து பிரஷ் போல செய்வார்கள். அதுவும் வெள்ளை அடித்தபின் நிறம் மாறி இருக்கும்

இந்த பிக்பாஸில் ஒரு மண்டையினை பார்க்கும்பொழுது அந்த பிரஷ் நினைவுதான் வந்தது, அது என்.எஸ்.கே பேத்தியாம்

அவருக்கு இப்படி ஒரு அவமானம் வந்திருக்க கூடாது, இப்படி எல்லாம் வருவார்கள் என்றுதான் விரைவிலே இறந்தாரோ என்னமோ?

ஆளும் அவள் மண்டையும்……


 

உலக குத்துசண்டை சாம்பியன்களிலே 17 வயதிலே பட்டம் பெற்றவர் மைக் டைசன்

Image may contain: 1 person

பிறப்பிலே அவர் முரடர், அதுவும் தந்தை கைவிட்டு போனபின் தாயின் பாதுகாப்பில் வளரும்பொழுது அந்த பிஞ்சு மனமும் பாதிக்கபட்டது என்கின்றார்கள்

ஒரு வகையான விரக்தியிலே வளர்ந்தார், தாய் படும் துன்பங்கள் அவருக்குள் வெளிகாட்ட முடியாத கோபத்தை வளர்த்தன, அந்த கோபம் தெருவில் வெளிபட்டது

சிறுவயதிலே அடிதடிக்கு பெயர்பெற்றார், அவரின் கனத்த குரலையும் திக்கி பேசும் ஒரு மாதிரி ஸ்டைலையும் எல்லோரும் கிண்டல் செய்ய அவரின் வழக்கு எண்ணிக்கை அதிகரித்தது

13 வயதிலே 40 முறை கைதுசெய்யபட்டார், இதுவே தமிழகம் என்றால் இனம் காக்க வந்தவன் என்றோ இல்லை வருங்கால தமிழகம் என்றோ இல்லாவிட்டால் சாதி சங்கங்களோ அவனை எழுச்சி நாயகன் , புரட்சி நாயகன் ஆக்கி இருக்கும்

ஆனால் அமெரிக்கா அல்லவா? சிறுவர் சீர்திருத்தபள்ளிக்கு அனுப்பினார்கள், அங்கும் அடிதடி

ஆனால் அவன் அடிக்கும் அடியினை தற்செயலாக‌ பார்த்துகொண்டிருந்த ஒரு குத்துசண்டை பயிற்சியாளர், 15 வயது நிரம்பியிருந்த அவனின் சண்டையில் அசந்தார், அப்படியே அவனை தூக்கி கொண்டு போய் சண்டை சொல்ல்லி கொடுக்க தொடங்கினார்

(இறுதி சுற்று படத்தில் இதே காட்சி வேறு வகையில் வைக்கபட்டிருக்கும்)

இயல்பிலே யாரையாவது போட்டு சாத்தும் இயல்புடைய அந்த குத்துசண்டை வீரன் அதன்பின் காட்டாற்று வெள்ளத்தை அடக்கி அணையில் இருந்து வெளியேறும் வெள்ளமாக பொங்க தொடங்கினான்

குத்து சண்டை உலகம் 16 வயதே ஆன அவனை ஆச்சரியமாக பார்த்தது, மைக் டைசன் என கத்த ஆரம்பித்தது

உலக குத்துசண்டை சாம்பியன்களிலே 17 வயதிலே பட்டம் பெற்றவர் அவர்தான், அடி என்றால் அப்படி ஒரு அடி

அதுவும் 20 வயதிற்குள்ளே முதல்நிலை வீரரானார், என பல அமைப்புகள் நடத்திய குத்துசண்டையின் ஒட்டுமொத்த சாம்பியன் என்ற பெருமை இன்றுவரை அவருக்குத்தான் உண்டு

1980 முதல் 1990 வரையான காலகட்டங்களில் குத்துசண்டை அவரின் கட்டுபாட்டில் இருந்தது, தனது பிரத்யோக ஸ்டைலான ஹூக் குத்தினை அவர் குத்தும்பொழுது அரங்கம் அதிர்ந்தது

இரண்டாம் முகமது அலி என கொண்டாடபட்டார்

ஆனால் 1990க்கு பின் அவரின் மனநிலையில் பாதிப்பு இருந்தது, குத்து சண்டை என்பது வளையத்திற்குள் போட வேண்டியது என்பதை மறந்து எல்லா இடங்களிலும் குத்த ஆரம்பித்தார்

விளைவு வீழ்ச்சியினை தொடங்கினார்

அவருக்குள் இருந்த அரக்கன் அவ்வப்போது விழித்த்தான், கற்பழிப்பு போன்ற வழக்குகளில் சிக்கினார்

அவரின் குத்துசண்டை ஸ்டைலுக்காகவும் அந்த உடற்கட்டிற்காகவும் ஏகபட்ட பெண்கள் அவரை சுற்றி சுற்றி வந்தனர், ஆயினும் ஏன் கற்பழிப்பு வழக்கில் சிக்கினார் என்பதுதான் ஆச்சரியம், அது அவரை வீழ்த்த செய்யபட்ட சதி என்ற பேச்சுக்களும் உண்டு

இன்னொன்று அமெரிக்காவின் சில சமூக அமைப்புகளும் அவருக்கு விரக்தியினை கூட்டின‌

முகமது அலி போலவே மன அமைதிக்காகவும், அமெரிக்க இனவெறுப்பாலும் இஸ்லாமிற்கு மாறினார்

கிறிஸ்தவம் எப்படி இந்திய சாதியிடம் தோற்றதோ அப்படி அமெரிக்க இனவெறியிடமும் தோற்றது, உண்மையில் இஸ்லாம் இவற்றில் எல்லாம் வெற்றியும் பெற்றது

அவ்வழக்கில் தண்டனை பெற்று வந்தபின் அவரால் பிரகாசிக்க முடியவில்லை, ஹோலிபீல்டுடன் மோதும்பொழுது அவரின் காதை கடித்து துப்பி சர்ச்சையில் சிக்கினார்

அதன் பின் டைசன் எழவில்லை, அப்படியே 2005ம் ஆண்டு குத்துசண்டையில் இருந்து வெளியேறினார்

நிச்சயம் டைசன் மாபெரும் குத்துசண்டை வீரன், சந்தேகமில்லை 17 வயதிலே உலகினை திரும்பிபார்க்க வைத்த மாவீரன்

ஆனால் முறையற்ற வாழ்வு அவரின் எதிர்காலத்தை சீரழித்தது, முகமது அலிக்கு பின் மாபெரும் இடத்தினை பிடித்திருக்க வேண்டிய டைசன் 100 வீரர்களில் 16ம் இடத்தையே பிடித்தார்

எவ்வளவு திறமையும் தகுதியும் உள்ளவனாயினும் கட்டுபாடும் ஒழுக்கமும் இல்லாவிட்டால் என்னாகும் என்பதற்கு டைசனை தவிர யாரையும் சொல்ல முடியாது

மாபெரும் எதிர்காலத்தை தன் முரட்டு குணத்தாலும், முன்யோசனை இல்லா ஒழுக்க குறைவாலும் கெடுத்துகொண்டவர்

குத்துசண்டை அமைப்பு அவருக்கு 16ம் இடம் கொடுத்தாலும், உலக ரசிகர்கள் மனதில் அவர் தனி இடம் பிடித்தே இருக்கின்றான்

அவருக்கு இன்று பிறந்த நாள், வாழ்த்துக்கள் டைசன்

உங்களிடம் ஒரே ஒரு கோரிக்கை மிஸ்டர் டைசன், கிரிக்கெட்டர் கோலி விடுத்த சேலஞ்சினை எங்கள் பிரதமர் ஏற்றிருக்கின்றார்

நீங்களும் அவருக்கு குத்துசண்டைக்கு ஒரு சேலன்ஞ் வையுங்கள், என்ன தொகை என்றாலும் கொடுக்க இந்தியா தயார்.

உலக கால்பந்து கோப்பை : அக்னி பரீட்சைக்கு தயாராகின்றது அர்ஜென்டினா

இன்றிரவு அக்னி பரீட்சைக்கு தயாராகின்றது அர்ஜென்டினா, மிக வலுவான பிரான்ஸை எதிர்த்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆடுகின்றார்கள்

அர்ஜென்டினா இதுவரை அபார ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை, இந்த ஆட்டத்திலும் சுணங்கினால் பிரான்ஸ் கோல் போடும்பொழுது அர்ஜென்டினாவும் மிதிபட்டு தூக்கி எறியபடும்

இரு விடா கண்டர்கள் சந்திக்கின்றார்கள், வெற்றிவாய்ப்பு பிரான்ஸுக்கு சாதகம் என சொல்லபட்டாலும் அர்ஜென்டினா சுதாரித்துகொண்டால் பிரகாசமான வாய்பிருக்கின்றது

மிக மிக சுவாரஸ்யமான போட்டியினை நோக்கி உலகம் இன்றைய இரவினை எதிர்பார்க்கின்றது

எல்லா அணியும் வலுவான அணிகளே, யார் கோப்பையினை வெல்வார் என கணிக்க முடியவில்லை

கடந்த உலக கோப்பையில் பால் எனும் ஆக்டோபஸ் கணித்தது, என்ன கணிக்கும் என்றால் தட்டில் இரு அணிகளின் பெயர்களை எழுதி அதில் உணவு வைப்பார்கள், அந்த பால் எந்த தட்டு உணவை எடுக்குமோ அந்த அணி வெற்றிபெறும்

ஆச்சரியமாக இது நடந்தது, ஆனால் அந்த பால் ஆக்டோபஸ் இப்போது இல்லை

சிங்கப்பூரில் ஒரு கிளி கணித்தது, பின் சொதப்பியது

இப்பொழுது எங்கோ ஒரு பூனைக்கு உணவு வைத்து கணிக்கின்றார்கள்

நாமும் கணிக்க வேண்டுமல்லவா?

அதனால் தங்க தலைவி படத்து முன் சீட்டு குலுக்கிபோட்டு யார் வெல்வார் என பார்த்துவிட வேண்டும்

ஈரான் ரவுடி நாடு

“ஈரான் ரவுடி நாடு , ஏமனில் சிரியாவில் ஈராக்கில் அது கலகம் செய்கின்றது, அதை ஒடுக்க வேண்டும். அந்த ரவுடி அணுகுண்டு செய்துவிட்டால் அவனை அடக்க முடியாது, அவனை பட்டினி போட்டு வழிக்கு கொண்டுவர வேண்டும்..” என இந்தியாவிடம் ஈரானுடன் உறவு கொள்ளாதே என மிரட்டுகின்றது அமெரிக்கா

இந்தியா என்ன செய்ய வேண்டும்?

“அதை விட மோசமான ரவுடி பயல் பாகிஸ்தான், காஷ்மீர் முதல் அவனால் பல சிக்கல். இந்திய எதிர்ப்பு தீவிரவாதிகளுக்கு எல்லாம் அவனே அடைக்கலம்

பாகிஸ்தானை தனிமைபடுத்தி அடக்குங்கள், அதன் பின் ஈரான் பக்கம் செல்லலாம்..” என சொல்ல வேண்டும்

சொல்வார்களா என்றால் இல்லை, அதற்கு அகன்ற மார்பு வேண்டுமாம்

இதே மோடி எதிர்கட்சியாக இருந்தால் 56 இன்ஞ் மார்பு வந்துவிடுகின்றது, ஆளும் கட்சியாக இருந்தால் மார்பே இல்லாத அதிசய பிறவியாகிவிடுகின்றார் மோடி


இந்தியா பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பில்லாத நாடாம், சொல்வது யாரென்றால் வெளிநாட்டினர்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் மோனிகா லெவன்ஸ்கி பாதுகாப்பாகவா இருந்தார்?

வாரத்திற்கு 3 துப்பாக்கி சூடு நடக்கும் நாடு அமெரிக்கா, ஆசிரியரும் மாணவர்களும் கொல்லபட்டுகொண்டே இருக்கின்றனர்

எங்காவது ஒரு சத்தம், அமெரிக்கா பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லா நாடு என வந்திருக்கும்?

வரவே வராது

பிரான்சில் கொள்ளை கும்பல் அசத்துகின்றது, பாதுகாப்பு நிறைந்த வைரகடை முதல் பிரபலங்கள் தங்கும் நட்சத்திர ஹோட்டல் வரை சும்மா கீரை கட்டு அள்ளுவது போல கொள்ளை நடக்கின்றது, ஸ்பெயின் இன்னும் மகா மோசம் என்கின்றார்கள்

அதெல்லாம் யார் வாயிலும் வராது, எந்த எழுத்திலும் செய்தியிலும் வராது

ஆனால் இந்தியா என்றால் பொங்கிகொண்டு வருவார்கள்

அமெரிக்க துப்பாக்கி சூடும் அதில் சாகும் அப்பாவி மாணவர்களையும் யாராவது கணக்கில் எடுத்தார்களா?

அப்படி எடுத்தால் எது பாதுகாப்பே இல்லாத நாடு என தெரிய வரும்

வல்லவன் வகுத்ததே நீதி என்பதை இனி வல்லவன் சொன்னதே செய்தி என திருத்திகொள்ளலாம்


ச‌மூக ஊடகங்களில் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க இளைஞர்களுக்கு மோடி அழைப்பு

எதற்கு? அம்பானி மகன் கல்யாணத்தை எப்படி சிறப்பிக்க என ஐடியா கொடுப்பதற்கா?

சமூக ஊடகங்களில் இளைஞர்கள் ஏராளமான கருத்துக்களை சொல்லிகொண்டுதான் இருக்கின்றார்கள், இவர்தான் கேட்பதே இல்லை

அப்படி இளைஞர்கள் என்ன சொல்கின்றார்கள்? இவரை தன் பரிவாரங்களுடன் உடனே பதவி விலக சொல்கின்றார்கள்


 

இ.பி.எஸ் நீங்க கலக்குங்க சார்….

சிவாஜி கணேசனுக்கு அரசு விழா நடத்தபடும் என தமிழக அரசு சொல்லியிருப்பது வாழ்த்துகுரிய விஷயம், இதற்காக முயற்சிகளை எடுத்த திமுகவிற்கு வாழ்த்துக்கள்

தன் தந்தையின் சிலையின் அடியில் கலைஞர் பெயரும் பொறிக்கபட வேண்டும் என சொன்ன பிரபு, தன் குடும்பம் எந்நாளும் நன்றியுள்ள குடும்பம் என்பதை நிரூபித்துவிட்டார்

முந்தைய அரசுகள் செய்ய தயங்கியதை எல்லாம் மிக அசால்ட்டாக செய்கின்றார் பழனிச்சாமி.

நீங்க கலக்குங்க சார்….


முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை: அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்த கேமராக்கள் பொருத்துவதிலே பெரும் ஊழல் நடக்குமே, அதை என்ன போகின்றீர்கள் மை லார்ட்..

 


இந்த ஜக்கி சாமியும், யோகா பிராடு சாமியும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக கிளம்பி இருக்கின்றன‌

சாமிகளுக்கு எதற்கு தொழில் துறை அக்கறை ? ஆன்மீக சாமிகளுக்கு தாமிரத்தை உருக்கினால் என்ன? உருக்காவிட்டால் என்ன?

அப்படி நாட்டுபற்று இருந்தால் ஸ்டெர்லைட்டை பாபா ராம்தேவ் ஆசிரமம், ஜக்கிசாமி ஆசிரமத்தின் நடுவில் வைத்து தொழிலை காக்கட்டும்