இளைய ராஜா 75

Image may contain: 1 person, smiling, indoor

1970கள் வரை தமிழக இசை குறிப்பாக திரைஇசை கர்நாடக சங்கீதத்திலேதான் சிக்கி இருந்தது, அதாவது கர்நாடக இசைவடிவிலேதான் பாடல்களும்,பிண்ணனி இசை எல்லாமே அமைந்திருக்கும், தவறென்று சொல்லுவதற்கில்லை. காரணம் இசை என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது அக்காலம் வகுத்திருந்த விதி.

1975களில் இந்திதிணிப்பு தமிழகத்தில் தடுக்கபட்டிருந்தாலும், இந்திபாடல்கள் தாக்கம் ஆரம்பமானது, பெரியாரும் இல்லை,அண்ணாவுமில்லை. இந்தியை எதிர்த்தார்களே தவிர, இந்தி இசை வரவேற்பினை பெற்றகாலம்.

அப்பொழுதுதான் மக்களின் இசையாக, தமிழரின் ஆதி இசையின் பிரதிபலிப்பாக, உண்மையான கிராமத்து பண்ணாக அறிமுகமானார் அந்த இளைஞன், படம் “அன்னகிளி”, மொத்த தமிழகமே திரும்பி பார்த்தது.

அதன்பின் அற்புதமான இசையை அவர் கொடுத்தார், கண்ணதாசனின் இறுதி 5 காலங்களில் அவரின் ஈடுஇணையில்லா கவிதைகளை அற்புதமாக பாடலாக்கிய வரலாறு இளையராஜா.

கண்ணதாசன் காலம் சென்றபின்னர் அக்கால வைரமுத்துவும் அவரும் கொடுத்த பாடல்கள் சாகாவரம் பெற்றவை.

எப்படி இளையராஜாவால் சாதிக்கமுடிந்தது?

இன்று நாமெல்லாம் மாறிவிட்டாலும், வாழ்க்கைமுறை மாறிவிட்டாலும் நமது முன்னோர்கள் வயலிலும்,களனியிலும் ஓடியாடி பாடிகொண்டே உழைத்தவர்கள், பாடிகொண்டே ஓய்வெடுத்தவர்கள், பாடிகொண்டே நம்மை தூங்க வைத்தவர்கள், துக்கவீட்டையும் உச்சஸ்தானி ராகத்தில் ஒப்பாரியாய் பாடியவர்கள்.

அந்த பழமையை மீட்டு இசையில் தந்தவர் இளையராஜா, அதனால்தான் தொடக்ககால விமர்சனங்களை, இவர் இசைப்பது இசையல்ல என்ற வாதங்களை எல்லாம் தூளாக்கிவிட்டு மக்களை அவரை கொண்டாட செய்தது.

மிகசிறுவயதிலிருந்தே அண்ணன் பாவலர் வரதராஜனின் கரம் பிடித்து பொதுவுடமை கொள்கை பிரச்சார பாடல்களை பாடியவர், மக்களுக்கான கருத்தினை மக்கள் இசையில் சொன்னவர், மண்ணை , மக்களின் உணர்ச்சிகளை கிராம இசைமூலம் வெளிபடுத்தும் வித்தை அங்கேதான் அவருக்கு வசபட்டது.

அவரே சொன்னதுபோல நேரு மறைந்தபொழுது கண்ணதாசன் எழுதிய அஞ்சலிகவிதையை ஒரு மேடையில் மக்களுக்கு பாடலாய் பாடியதுதான் அவரின் முதல் இசையமைப்பு பாடல்.

பின்னாளின் சினிமாவிற்காக கொஞ்சம் மேற்கு இசை கருவிகளும், கர்நாடக இசையும் கற்று கூர்படுத்திகொண்டார்.

மானிட உணர்ச்சிகளை இசைமூலம் வெளி கொண்டுவரும் வரம் அவருக்கு சாதாரணம், மேற்கத்திய பியாணோ முதல் மண்பாண்ட கடம் வரை அவர் விரும்பிய இசையை அவருக்காய் இசைக்கும்,

அது ராஜாவை தவிர யாருக்கும் சாத்தியமில்லை.

மானிட வாழ்வின் எல்லா சூழ்நிலைக்கும் அவரின் இசை பொருந்தும், தாலாட்டு, மகிழ்ச்சி, சூழ்ச்சி, பாசம்,நேசம், காதல், திருமணம், முதுமை, தோல்வி, வெறுமை,தனிமை, துரோகம், வஞ்சகம் என எல்லா பக்கங்களுக்கும் இசையால் உற்சாகமும், மருந்தும்,ஆறுதலும் தருபவர்தான் அவரது இசை.

மானிட வாழ்வின் அனைத்து பக்கங்களையும் இசைத்தவர், அவ்வளவு ஏன்? மனைவியோடு சண்டையிட்டுவிட்டு அவரது சிலபாடல்களை கேளுங்கள் மனம் தானாக ஆறுதல் அடையும் 🙂

அடுத்தவர் வலியை தன்வலியாய் உணரும் கலைஞன் தான் காலம்தாண்டி நிற்க முடியும், பாரதியும்,கண்ணதாசனும், இன்னும் பலரும் அப்படித்தான் நின்றார்கள்.

இளையராஜாவும் அப்படித்தான் பிண்ணனி இசையில் 1000 படங்களை தாண்டியும் அவரால் செல்லமுடிகின்றது, பலபடங்களின் பிண்ணனி இசையாலே பார்வையாளரை கட்டிபோட சொல்கின்றது, மிக திறமையான கவிஞரும், இயக்குநரும் கிடைக்கும் இடங்களில் எல்லாம் ராஜா மிக உயர்ந்து நின்றார்.

பாலசந்தரும்,பாரதிராஜாவும்,மணிரத்னமும்,சுந்தர்ராஜனும்,பாக்யராஜும்,மகேந்திரனும்,பாலுமகேந்திராவும் அவரை அப்படித்தான் பயன்படுத்திகொண்டார்கள், காலத்தை வென்ற படங்களை அவர்களால் அப்படித்தான் கொடுக்கமுடிந்தது.

ரஜினியை, கமல்ஹாசனை, மோகனை,சிவகுமாரை, சரத்பாபுவை, ராமராஜனை, 1980களின் மிக சிறந்த நடிகைகளை நினைக்கும்போதெல்லாம் ராஜாவின் இசை முந்திகொண்டு முன்னால் நிற்கும் அல்லவா? அங்குதான் நிற்கின்றது ராஜாவின் வெற்றி.

நமக்கு இசைக்க தெரியாது, ராகங்கள் பெயர்,அளவு, என்பதெல்லாம் புரியாது, கொழுகட்டை தெரியுமே அன்றி ஏழுகட்டை புரியாது

தாளம்,பல்லவி,சரணம், உச்சஸ்தானி,ராஜஸ்தானி என எதுவும் புரியாது.

ஆனால் அந்த சங்கதிகளை அவரது இசையோடு கேட்டால் உள்ளம் உருகும், தாலாட்டு புரியும், காதல் புரியும், தனிமை புரியும், இயற்கை புரியும், கடவுள் புரியும், பாசம் புரியும் இன்னும் என்னவெல்லாமோ புரியும்,

மனம் அந்த இசையோடு ஒன்றி இனம்புரியா தன்மைக்கு கொண்டு செல்லும், அந்த இசை ஆன்மாவை தொடும், அதில் மனம் லயிக்கும், ஆன்மா அதில் கட்டுபடும்

அதிலோர் ஏகாந்தம் கிடைக்கும்.

உற்சாகம்,சுறுசுறுப்பு,ஓய்வு,ஆறுதல்,தைரியம்,பக்தி என எல்லாவற்றையும் இசைமூலம் கொடுக்கதெரிந்த ஒரு வரத்தினை ஆண்டவன் அவருக்கு கொடுத்திருக்கின்றான்.

அவர் 5000 பாடல்களுக்கு மேல் அவர் இசை அமைத்திருக்கலாம்,1000 படங்களுக்கு மேல் பின்னனி இசையில் பின்னியிருக்கின்றார்.

கண்ணதாசனோடு பல படங்கள், மூன்றாம்பிறை, பல பாலசந்தர் படங்கள், பதினாறு வயதினிலே போன்ற படங்களில் காவியம் படைத்திருக்கின்றார், அந்த மகாகவியின் இறுதிபாடலான கண்ணே கலைமானே போன்ற பாடல்ககளை இசைத்த பெருமை அவரையே சாரும்.

பழைய வைரமுத்துவின் தொடக்ககால பாடல்கள் எத்தனைமுறை கேட்டாலும் சிலிர்பூட்டகூடியவை.

ஒருமுறை மலேய டிரைவருடன் மாலைபொழுதில் டாக்சியில் சென்றுகொண்டிருந்தேன், தமிழ்வானொலி கேட்டுகொண்டிருந்தார், ஆச்சரியமாக கேட்டேன் தமிழ்தெரியுமா என்று?

அவருக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் (என்னைபோலவே) சொன்னார், “மாலை 5 மணிமுதல் 7 மணிவரை இந்த வானொலியில் போடும்பாடல்கள் என்னை உற்சாகம் கொள்ளசெய்யும், மறக்காமல் கேட்பேன், மொழியை விடுங்கள், அந்த இசை அவ்வளவு உற்சாகமானது. அதுமட்டுமல்ல‌ இம்மாதிரி பாடல்களின் சி.டி என்னிடம் ஏராளம் உண்டு என எடுத்து காட்டினார்”

அதில் இளையராஜா கைவீசிகொண்டிருந்தார், ரேடியோவில் “இது ஒரு பொன்மாலை பொழுது” பாடல் ஒலியேறிகொண்டிருந்தது. இசைக்கு மொழியில்லை என்பது விளங்கிகொண்டிருந்தது.

இதுதான் இளையராஜாவின் வெற்றி, அவர் சிம்பொனிவரை சாதித்த வெற்றி.

250 வருடங்களுக்கு முன்பு ஐரோப்பாவில் ஒரு யூதன் இருந்தான், அவன் வாழ்ந்தது 36 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் இசையில் புதுபரிமாணமே கொடுத்தான், இன்றுள்ள மேற்கத்திய இசைக்கு அவன் பிதமாகன். “ஹோஓ”, “ஊஊ” என அவர்கள் கிராமி, என பலவிருதுகள் கொடுக்கின்றார்கள் அல்லவா? அந்த அளவுஎல்லாம் அவன் நிர்ணயித்தது. சிம்பொனி இசைக்கு பிதாமகன் அவர்.

அவன் காலத்து இசைப்பாளர்கள் சொன்னார்கள் “இவனைபோல ஒரு இசைகலைஞன் இனி பலநூறு ஆண்டுகளுக்கு சாத்தியமில்லை” இன்றும் அந்த இடம் வெற்றிடம்தான்.

சந்தேகமே இன்றி சொல்லலாம், அப்படி இங்கு இளையராஜா.

இனி கண்ணதாசன் இல்லை, வைரமுத்துவோ இளையராஜாவோடு இணையும் நிலையில் இல்லை.

நல்ல கிராமத்து கவிஞன் இளையராஜாவோடு கைகோர்த்தால்..

கண்ணதாசனின் “கலைமான்” துள்ளிவரும், வைரமுத்துவின் “பூங்காற்று திரும்புமா?” என்றால் நிச்சயம் திரும்பும்.

ஓலைகுடிசையில் இருந்து கொட்டும் மழையினை ரசிக்கும் அந்த சுகாந்தம் திரும்பும், மலைஉச்சி பனிகாற்று உடலை தழுவ, தேநீர் குடிக்கும் அந்த ஏகாந்தம் கிடைக்கும்..

அந்த இசைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நிச்சயமாக இளையராஜா மணிமேகலையின் அட்சய பாத்திரம், அள்ள அள்ள இசை வந்துகொண்டே இருக்கும்

இன்னும் அவர் கொடுக்கலாம், கொடுக்கமுடியும், செவி திறந்து காத்திருக்கின்றது தமிழகம்

இசைராஜனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நாம் தான்சேனை கண்டதில்லை, தியாக ராஜரை கண்டதில்லை ஆனால் இவர்கள் போன்றவர்களை இளையராஜா எனும் ஒரு மனிதரில் நம் தலைமுறை கண்டது

அந்த இசை அரசனுக்கு மறுபடியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள், அவர் பல்லாண்டு வாழட்டும்

எளிதில் கிடைக்காத அந்த வரம் நெடுநாள் நிலைக்கட்டும்

(இக்காலகட்டத்தில் நினைத்துபார்க்க வேண்டிய சிகரம் இளையராஜா. தன் திறமையால் உயர்ந்தார். தன் திறமை மதிக்கபடும் இடத்தில் அவர் இருந்தார்

தன்னை மதிக்காதவர்களை அவரும் மதிக்காமல் நகர்வாரே தவிர ஒரு இடத்திலும் நான் தலித் என்பதால் விரட்டபட்டேன் என்றோ?, நான் தலித் என்பதால் இப்படி நடந்தது என ஒரு இடத்திலும் சொன்னதில்லை

இளையராஜாவின் இந்த குணம் வரவேற்கதக்கது, இறுதி வரை நான் கலைஞன் என்ற நிலையில் இருந்தாரே தவிர தலித் புரட்சி, வெங்காயம் எல்லாம் அவர் பேசவில்லை

திறமை ஒரு மனிதனை உயர்த்தும், மாறாக திறமை இல்லாதவனே ஜாதி அடையாளத்தில் ஒளிகின்றான் என அடித்து நிரூபித்தவர் இளையராஜா)

 

நாட்டில் ஒரு செய்தியினையும் நம்ப முடியவில்லை

நாட்டில் ஒரு செய்தியினையும் நம்ப முடியவில்லை, நான் நீங்கள் யார்? என ரஜினியினை கேட்கவே இல்லை என்கின்றான் சம்பந்தபட்டவன்

பின் எங்கிருந்து இவ்வளவு வீடியோக்களும் அவசர செய்திகளும் வந்தன?

உண்மை வாசலை தாண்டுமுன் பொய் ஊரை சுற்றிவிடும் என்பார்கள், நிலமை அப்படித்தான் இருக்கின்றது.

துப்பாக்கி சூடு நடந்து ஸ்டெர்லைட்டும் மூடபட்டபின்னால் காவல்துறையினை சிலர் தாக்கிய கொடூர வீடியோக்கள் வருகின்றன‌

காவல்துறையினர் கொடூரமாக தாக்கபட்டிருக்கின்றனர் என்பது தெரிகின்றது

எது உண்மை? எது பொய் என குழம்பினால் ஒரு மண்ணும் புரியவில்லை.

இனி குஷ்பு வீடியோ தவிர எதையும் நம்ப கூடாது என சங்கம் முடிவெடுத்திருக்கின்றது

இந்திராவிற்கு எதிராக மல்லுகட்டிய பெரும் வீரன்

Image may contain: 1 personஇந்திராவிற்கு எதிராக மல்லுகட்டிய பெரும் வீரன் என வரலாறு சொன்னது

அமைதிபடை, சிங்களபடை நடுவே துப்பாக்கி ஏந்தி கடல் கடந்தவன் நான்

ராஜிவ் கொலையிலே நான் குற்றம்சாட்டபட்டேன், கலைஞரை கொலை செய்ய முயன்றேன் என என்னை கட்சியினை விட்டு விரட்டினார்கள்

ராஜிவ் கொலை நடந்த பின் சிபிஐ விசாரணையில் அகப்படாமல் புலிகள் தமிழகத்தில் சயனைடு கடித்தபொழுது என்னிடம் சொல்லாமல் வீரசாவு அடைந்ததில்லை, அப்படி ஒரு மாபெரும் கொலை தளபதியாக இருந்தேன்

இப்படி எல்லாம் பெரும் வீரனான என்னை இந்த அற்ப‌ சீமானை கொல்ல திட்டமிட்டான் என்று நெஞ்சில் ஈட்டியினை பாய்ச்சினால் எப்படி?

ஐய்யகோ சீமானை கொல்லும் அளவிற்கா வை.கோ சென்றுவிட்டான்?

இனி இருந்து என்ன பயன்? பிரபாகரன் கொடுத்த சயனைடு குப்பியினை கடித்துவிட வேண்டியதுதான்

 

போராடிய பொதுமக்களை ரஜினி சமூக விரோதிகள் என சொல்லவே இல்லை : தமிழிசை

Image may contain: 1 person, standing, suit and outdoor

பட்டம் மேல் இந்தியா என எழுதி இருகின்றேன், என் ஆட்சியில் உயர்ந்திருக்கின்றது இந்தியான்னு நீங்க சொல்லணும் சரியா?

அதை எங்க ஆட்கள் ஊரெல்லாம் சொல்லி சந்தோஷபடுவாங்க‌..”

(பெட்ரோல் விலை உட்பட ஆயிரம் பிரச்சினை இருக்கும்பொழுது இவர் பட்டம் விட்டு விளையாடிகொண்டிருக்கின்றார்

இந்தியா எரியும்பொழுது மோடி பட்டம் விட்டார் என இனி வரிகளை மாற்றிகொள்ளலாம்)


போராடிய பொதுமக்களை ரஜினி சமூக விரோதிகள் என சொல்லவே இல்லை : தமிழிசை

ரஜினிக்காக ரஜினி ரசிகர்கள் முட்டுகொடுப்பது நியாயம், சம்பந்தமே இல்லாமல் தமிழிசை ஏன் வருகின்றது?

ரஜினியோ பழனிச்சாமி அரசுக்கு ரகசிய ஆதரவில் இருக்கின்றார்


Image may contain: 2 people, people standing

ஆளாளுக்கு தூத்துகுடிக்கு அவன் வரவில்லை இவன் வரவில்லை என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்

“தூளு கிளப்புறவன் தூத்துகுடி ஆளு” என ஆடிகொண்டிருந்த, அதிலிருந்து “தல” என அழைக்கபட்ட தறுதலையிடமிருந்து ஒரு சத்தமுமில்லை ஆறுதலுமில்லை

தல போல ஒரு …ம் வராது?

இதை பற்றி எல்லாம் நாம் பேசகூடாது,

இவரைத்தான் காணவில்லை என்றால் ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா, தூத்துகுடிகாரன்டா என சொல்லிகொண்டிருந்த சிங்கத்தையும் காணவில்லை


 

தியானம் செய்யும் ரஜினிக்கு கோபம் கொப்பளிக்கலாமா : தினகரன்

அதானே, தியாக தலைவி சின்னம்மா , ஜெயா கல்லறையில் அடித்தார்கள் அல்லவா? அதுதான் சாந்த சொரூபம்.

ரஜினி உழைத்த பணத்தில் 2 லட்சம் கொடுத்தார் ஒரு நியாயாம் இருக்கின்றது, மனைவியின் வாடகை பாக்கி கஷ்டத்திலும் பாதிக்கபட்ட மக்களுக்கு கொடுத்திருக்கின்றார்,

தினகரன் என்ன தொழில் செய்தார்? எங்கு சம்பாதித்தார்? இவர் அவரை கலாய்க்கின்றாராம்.

 


எஸ்.வி.சேகரைக் கைது செய்வதற்குத் தடையில்லை : உச்ச நீதிமன்றம்

ஏதோ போலிசும் அவரும் அரை அடி தொலைவில் உள்ளது போலவும், உத்தரவு கொடுத்தால் மறுநிமிடம் கைது செய்யபோவது போலவும் செய்திகள்

முதலில் அவரை தேடி கண்டுபிடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடட்டும்


 

ஓட்டம் பிடித்ததால் சென்னையில் பரபரப்பு

தங்கையை பெண் பார்க்க வந்தவர் திருமணமான அவரது அக்காவுடன் ஓட்டம் பிடித்ததால் சென்னையில் பரபரப்பு

கே.பாலசந்தருக்கு கூட தோன்றாத சிந்தனை எல்லாம் இப்போது உள்ளவர்களுக்கு தோன்றுகின்றது

அக்கா செட் ஆகிவிட்டார், தங்கையுடன் திருமணம் நிச்சயமாகிவிட்டது, பின் எதற்கு அக்காவினை கூட்டி கொண்டு தனியே ஓட வேண்டும்?

சுத்த விவஸ்தை கெட்ட மனிதராக இருப்பான் போலிருக்கின்றது…

 

சேலைகட்டிய மோனலிசா

Image may contain: 1 person, smiling, selfie and close-up

சேலைகட்டிய மோனலிசா இப்படித்தான் இருந்திருப்பாள் என பிரான்ஸ் உறுதிபடுத்திகொள்கின்றது

ஷேக்ஸ்பியர் கண்ட டெஸ்டிமோனா இப்படித்தான் இருந்திருப்பாள் என ஐரோப்பா கண்ணால் கண்டு ஆச்சரியபட்டு கொண்டிருக்கின்றது…

மானிட சாதியின் மாபெரும் கவுரவம் தலைவி…

 
 

திருமுருகன் போன்ற பல திடீர் , குபீர் போராளிகளை எல்லாம் காணவே இல்லை

ஸ்டெர்லைட் போராட்டம் 13 உயிர்பலியோடு முடிந்திருக்க கூடாது என்பதுதான் சோகம், நிச்சயம் அப்பலி நடந்திருக்க கூடாது

எனினும் இப்பொழுது ஸ்டெர்லைட் மூடபட்டாயிற்று

அந்த அப்பாவிகள் 13 பேரும் ஸ்டெர்லைட்டை மட்டும் மூடப்பட சாகவில்லை, ஒரு சில முகங்களை அடையாளம் காட்டிவிட்டு செத்திருக்கின்றார்கள்

அதனால் விழித்துகொண்ட உளவுதுறை மிக அட்டகாசமாக புள்ளிகளை குறி வைத்து கொடுக்கின்றது, அரசு தூக்குகின்றது

வேல்முருகனை உள்ளே போட்டிருப்பதும், நாம் தமிழர் தும்பிகளை போட்டு சாத்த ஆரம்பித்திருப்பதும் இம்மாநிலத்தில் செய்யவேண்டிய விஷயங்கள்

மக்கள் போராட்டம் எனும் போர்வையில் ஒளிந்துகொண்டு இந்நாட்டிற்கு எதிராகவும், மிக மிக கொடூர சிந்தனையிலும் இவர்கள் பேசிகொண்டு இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை மக்கள் மனதில் விதைதது எல்லாம் ஏற்றுகொள்ள முடியாது

அரசு இப்பொழுது மிக துணிவான நடவடிக்கைகளை எடுக்கின்றது, இது இன்னும் தொடரட்டும்

விழித்துகொண்ட உளவுதுறைக்கும், நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்ட காவலருக்கும் வாழ்த்துக்கள்

திருமுருகன் போன்ற பல திடீர் , குபீர் போராளிகளை எல்லாம் காணவே இல்லை

ஆழவேர்விட்டு வளரும் ஆலமரத்திற்கும், மழையில் முளைக்கும் காளான்களுக்கும் வித்தியாசம் உண்டு என்பது இதுதான்


1960களிலே இணையம் , சமூக வளைத்தளம் எல்லாம் இருந்திருந்தால் ராமசந்திரன் என்பவரை ஓட ஓட அடித்து விரட்டி இருக்கலாம்

அப்படி ஒரு நபர் இருந்த இடமே தெரிந்திருக்காது

காலம் அவரை முன்னால் கொண்டுவந்து தப்பிக்க செய்துவிட்டது என்பதுதான் மகா சோகம்…

அவன் தப்பிவிட்டானே என்ற ஆத்திரத்தில்தான் இனி ஒருபயலும் அந்த வழியில் வந்துவிட கூடாது என்று அவருக்கு விழவேண்டிய அடியினையும் சேர்த்து இங்கு பலருக்கு கொடுத்து கொண்டிருக்கின்றார்கள்


 

 
%d bloggers like this: