ஜூன் 4 ராஜிவின் மாபெரும் துணிச்சல் தெரிந்த நாள்

Image may contain: 1 person, standing

இலங்கையில் வடமாராட்சி என்றொரு பகுதி உண்டு, அன்று புலிகளின் கோட்டை அது

அப்பொழுது இருந்த இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஆப்பரேஷன் லிபரேஷனை தொடங்கினார், அதாவது புலிகளை முற்றிலும் ஒழிப்பது

பிரபாகரனின் ஏ1 முகாம் உட்பட பல்லாயிரம் தமிழரோடு அப்பகுதியினை வளைத்தது சிங்களபடை, புலிகள் அப்பொழுது தற்கொலை தாக்குதல் வேறு நடத்தியதில் சிங்கள படை கொலை வெறியில் இருந்தது

மில்லர் எனும் புலி நடத்திய தாக்குதலில் பல ராணுவத்தார் கொல்லபட சீறி நின்றது சிங்கள தரப்பு

இனி பொறுப்பதில்லை, மொத்த புலிகளையும் தமிழரோடு முடித்துவிடுங்கள் என உத்தரவிட்டா அதுலத் முதலி எனும் பாதுகாப்புதுறை அமைச்சர்

கடும் யுத்தம் தொடங்கியது , சப்ளை முடங்கியது உணவில்லை , மருந்தில்லை, செஞ்சிலுவை சங்கத்தை கூட சிங்களம் அனுமதிக்கவில்லை

சுருக்கமாக சொன்னால் 2009 முள்ளிவாய்க்கால் அன்று தொடங்கியது

வழக்கம் போல ஈழகுரல்கள் எழும்பின, அமிர்தலிங்கம் உட்பட இலங்கை தமிழ் அரசியல்வாதிகளும் குரல் எழுப்பினர்

அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி கப்பல் நிறைய உதவிபொருளை அனுப்பினார் ராஜிவ், நடு கடலில் திருப்பி அனுப்பியது இலங்கை

அவ்வளவுதான் இந்திய ராணுவ விமானப்படைக்கு உத்தரவு கொடுத்தார் ராஜிவ், அவை உணவு மருந்துடன் பறந்தன, அவற்றிற்கு பாதுகாப்பாக மிராஜ் விமானங்களும் பறந்தன‌

அதாவது சிங்கள விமானம் தடுத்தால் அவற்றை சுட்டு வீழ்த்த வந்த விமானம் அது

உணவுபொருள் வடமாரட்சியில் வீசபட்டதும் தமிழர் ஆனந்தபெரு மூச்சுவிட்டனர், இனி இந்தியா நம்மை காப்பாற்றும் என மகிழ்ந்தனர்

இனி ஒரு அடி சிங்களபடை முன்னேறினால் இந்திய களமிரங்கும் என இந்திய அரசு அறிவிக்க, அலறி அடித்து ஓடிவந்து ஒப்பந்தமிடவந்தான் ஜெயவர்த்தனே

ராஜிவின் நடவடிக்கையினை உலகமே நோக்கியது, காரணம் ஐநா அனுமதி இன்றி இன்னொரு நாட்டில் விமானத்தை பறக்கவிடுவது என்பது போருக்கு சமம்

இலங்கை புத்த மொட்டை சாமி எல்லாம் நவதுவாரத்தை பொத்தி அஞ்சி கொண்டிருந்தது

போராளி குழுக்கள் எல்லாம் நன்றி கண்ணீர் வடித்தன, ஈழ மக்கள் எல்லாம் கைகூப்பி இந்தியாவினை தொழுதனர்

ஆனால் ஒரே ஒரு குரல் மட்டும் கோபத்தை மறைத்தபடி, ஒருவித வஞ்சகத்துடன் சொன்னது “இந்தியா தங்கள் வல்லரசு சக்தியினை காட்டிவிட்டது”

அதன் அர்த்தம் என்னவென்றால் இவர்கள் இங்குவருவது அத்துமீறல் என்றது போன்றது

எல்லோரும் மகிழ பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் நிம்மதி இல்லை, ஆனால் காட்டிகொள்ளவில்லை

புலிகளால் இப்படிபட்ட பேரழிவு வந்தபின்பே , இனி புலிகளால் ஒருநாளும் சிங்களனை வெல்லமுடியாது என்றபின்பே இந்தியா களமிறங்கி அமைதிபடையினையும் அனுப்பியது

ஆனால் பெரும் உள்நோக்கத்துடன் வம்பிழுத்து அந்நிய உதவியுடன் அதனை விரட்டி, ராஜிவினையும் கொன்றனர் புலிகள்

விளைவு 2009ல் முள்ளிவாய்க்கால் நடந்தபொழுது, 1987 ஜூன் 4ல் நடந்த அந்த சம்பவத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் சொல்லி மறுத்தது இந்தியா

இந்த ஜூன் 4 ஈழதமிழருக்காக ராஜிவ் களமிறங்கிய நாள், அன்றே அவருக்கான நாளும் குறிக்கபட்டது

ஆப்பரேஷன் பூமாலை என ராஜிவ் செய்த விஷயமெல்லாம் சாதாரணம் அல்ல, அதற்காக தன் உயிரையும் கொடுத்தார் அவர்

அதனை புறந்தள்ளிய புலிகள் இறுதியில் அழிந்தும் போயினர்

ஜூன் 4 ராஜிவின் மாபெரும் துணிச்சல் தெரிந்த நாள், ஈழமக்களுக்காக அவர் உயிர்கொடுக்க துணிந்த நாள்

புலிகள் எவ்வளவு நன்றிகெட்டவர்கள் என பின்னாளில் உலகம் உணர்ந்த நாள்

ஈழதமிழரின் கண்ணீரை இந்தியா துடைக்க நினைத்த நாளிது, அந்த இந்திய கரங்களை வெட்டிவிட்டுத்தான் ஈழமக்களை தீரா அழிவில் தள்ளினான் பிரபாகரன்

 

ஒரு வழியாக டிரெம்ப் வழிக்கு வந்துவிட்டார்

ஒரு வழியாக டிரெம்ப் வழிக்கு வந்துவிட்டார், வடகொரிய அதிபரை சிங்கப்பூரில் சந்திக்க ஒப்புகொண்டுவிட்டார்

விட்டால் புட்டீன் வடகொரிய அதிபரை சந்தித்துவிடுவார் அதன் பின் நம் மதிப்பு என்னாவது என ஓடி வருகின்றார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் வருகின்றார் என்றால் அமெரிக்க உளவுதுறை முதல் பாதுகாப்பு அதிகாரிகள் வரை குவிந்து பாதுகாப்பினை பலபடுத்துவார்கள்

கடலில் நீர்மூழ்கி முதல் வானத்தில் செயற்கைகோள் வரை தீவிரமாக அமெரிக்க அதிபருக்காக காவல் செய்யும்

அவர்களிடம் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் காவலை செம்மைபடுத்துகின்றோம் என்பதை வெளியே தெரியாமலே செய்வார்கள்

அதாவது நகரம் இயங்கிகொண்டே இருக்கும், ஒரு கெடுபிடிகளும் இருக்காது ஆனால் பாதுகாப்பு ரகசியமாக பலபடுத்தபட்டு கொண்டே இருக்கும்

இந்த நீட் தேர்வுக்கு சென்ற மாணவர்களை சோதித்தது போல கெடுபிடிகள் எல்லாம் இருக்காது

வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு என்பதால் உலகில் இருந்து 3000 பத்திரிகையாளரும் இன்னும் பலரும் குவிந்திருக்கின்றார்கள், சுருக்கமாக சொன்னால் சிங்கப்பூரின் பாதுகாப்பு இப்பொழுது வேறு கரங்களுக்கு மாற்றபட்டாயிற்று

14ம் தேதி தொடங்க இருக்கும் உலககோப்பை கால்பந்து திருவிழாவின் கவனத்தைவிட 12ம் தேதி நடக்க இருக்கும் டிரம்ப் கிம் சந்திப்பே மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது

இரண்டுபேரும் ரஜினி மோடி போல இணக்கமாக பேசட்டும், கட்டபொம்மன் ஜாக்சன் துரை போல முழக்கம் எல்லாம் இல்லாமல் இருந்தால் நல்லது

முன்பு டிரம்ப் அவரை வில்லன் என்றிருக்கின்றார், கிம் அவரை காமெடியன் என்றிருக்கின்றார், இருவரும் பலவாறு எல்லாம் திட்டி முன்பு கடும் பதற்றம் ஏற்படுத்தி யிருக்கின்றார்கள்

நேரில் சந்திக்கும் பொழுது அந்த நினைவுகள் வராமல் இருக்கட்டும்

 

கலைஞர் இருக்கட்டும், ஆனால் பேசா கலைஞராக இருக்கட்டும் என்ற முடிவோ என்னமோ?

Image may contain: 1 person, standing

அந்த சலசலப்பு ஆங்காங்கே எழுந்தது, நேற்று பல இடங்களில் பெரும் குரலாகவே கேட்டது

அதாவது ஏன் கலைஞருக்கு வெளிநாட்டு சிகிச்சைகள் அளிக்கவில்லை, அல்லது வெளிநாட்டு மருத்துவகுழுவினை வரவழைக்கவில்லை

முதிய வயதுதான் சந்தேகமில்லை, ஆனால் மலேசியாவின் மகாதீர் போல ஒரு மெடிக்கல் மிராக்கிள் கலைஞர்

அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள் கூட நோயில் விழுந்ததில்லை, விபத்துக்களில் சிக்கிய காலம் தவிர அவர் அவராகவே இருந்தார்

அவர் குடும்பத்தாருக்கும் நீண்ட ஆயுள் ஒருவரம் அவரின் இரு சகோதரிகளும் 95 வயதை முழு நினைவாற்றலுடன் கடந்தனர்

கலைஞருக்கும் அந்த வரம் உண்டு, ஆனால் அவர் உடல்நலம் இயற்கையாய் இருந்ததே தவிர அதை கண்காணிக்க பெரும் நேரம் அவர் ஒதுக்கவில்லை

70 வயதுகளில் வெளிநாட்டில் செய்யவேண்டிய முழு உடல் பரிசோதனையினையும் அவர் தள்ளிபோட்டே வந்தார், நிச்சய்ம் 80 வயதிலாவது செய்திருக்க வேண்டும் செய்யவில்லை

காரணம் தெரியவில்லை

இப்பொழுதும் காவேரி மருத்துவமனை என்கின்றார்கள் , ஸ்டெஸ்கோமி என்கின்றார்கள் , ஏதோ சொல்கின்றார்களே தவிர வெளிநாட்டு மருத்துவகுழுவினை அழைத்ததாகவோ உயர் சிகிச்சை கொடுத்ததாகவோ தகவல் இல்லை

பணம் நிச்சயம் காரணமாக இருக்கமுடியாது, அவருக்கு அப்படி சிகிச்சை கொடுக்க பணமில்லை என்றால் உலகம் சிரிப்பாய் சிரிக்கும்

அப்படி இல்லை என சொல்லி தொலைத்தால் கூட கொட்டி கொடுக்க தமிழகம் ரெடி

ஆனால் ஏன் செய்யவில்லை என்பதுதான் தெரியவில்லை, செய்திருக்கலாம்

அந்த உருக்கமான குரலை மறுபடியும் கேட்க வைத்திருக்கலாம்

முடியாமல் போல ஸ்டீபன் ஹாக்கின்ஸுக்கு கூட எத்தனையோ நவீன விஞ்ஞான வசதிகளை உருவாக்கி பேச வைத்து, எழுத வைத்து பயன்படுத்திகொண்டது மேல்நாடுகள்

கலைஞருக்கும் அதனை செய்திருக்கலாம், ஏன் செய்யவில்லை என்பது தெரியவில்லை

இதற்கு மேல் கேட்டால் ஏய் ஆரிய அடிவருடி எம் தளபதிக்கு தெரியாததெல்லாம் உனக்கு தெரியுமா? கனிமொழிக்கு தெரியாத மருத்துவமுறை உனக்கு தெரியுமா, குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க பார்க்கின்றாயா? என சீறுவார்கள்.

சீறட்டும், ஆனால் அவர் முழு நலம்பெற பலர் முழு முயற்சி எடுக்கவில்லை என்பதை தவிர சொல்ல ஏதுமில்லை

கலைஞர் இருக்கட்டும் ஆனால் பேசா கலைஞராக இருக்கட்டும் என்ற முடிவோ என்னமோ?

 

ஸ்னொலினுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ….

Image may contain: 1 person, text and outdoor

அவள் பள்ளி மாணவி, அவளுக்கு விவரம் தெரிய ஆரம்பித்ததில் இருந்தே தெரிந்ததெல்லாம் ஸ்டெர்லைட்டால் ஏற்படும் பாதிப்பு

அந்த பாதிப்பினை கண்ணால் கண்டே வளந்த பெண் அவள், 11 வருடமாக அதன் பாதிப்பை அணு அணுவாய் உணர்ந்தவள்

அதனால்தான் எல்லா மக்களையும் போல தன் தாயோடு போராட வந்தாள். தமிழ்சமூகம் எப்படிபட்டது? 10 வயது கடந்தாலே பெண்ணை பொது இடங்களுக்கு அனுப்புமா?

ஆனால் அப்பெண் வந்திருக்கின்றாள், வாழ்வா சாவா? என அச்சமூகம் கதறி நின்றபொழுது அவளுக்கும் வேறு தெரிவு இருக்கவில்லை

அப்படி வந்தபெண்தான் தூத்துகுடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தாள்

தூத்துகுடி போராட்டத்தில் வன்முறையாளர் புகுந்திருக்கலாம், அவர்கள் கலவரத்தை அரங்கேற்றி இருக்கலாம்

அந்த கொடூரர்களை சுட்டு கொல்லலாம், ஏன் பிடித்து ஸ்டெர்லைட்டின் அமில குளத்திலும் வீசலாம்

ஆனால் அந்த அயோக்கியர்களை தப்பவிட்டு இப்பெண்ணை சுட்டது எவ்வகை நியாயம்?

காவலர் தாக்கபட்டார்கள், வாகனம் எரிக்கபட்டது என்பதெல்லாம் பெண்களா செய்தார்கள்? இவர்கள் பக்கம் துப்பாக்க்கி திரும்ப வேண்டிய அவசியம் என்ன?

உளவுதுறை தோல்வி, காவல்துறையின் அலட்சியம், திடீரென புகுந்த கொடூர ரவுடிகள் என எல்லோரும் கரங்களும் இந்த மாணவியின் மரணத்தில் இருக்கின்றது

பெற்ற மகளை தன் அருகே சுட்டு வீழ்த்தியபொழுது அந்த பெண்ணின் அன்னை எப்படி எல்லாம் கலங்கியிருப்பாள்?

தாயிருக்க பிள்ளை சாகும் சங்கடம் கொஞ்சமா? , அந்த அன்னைக்கு ஆழ்ந்த ஆறுதல்கள்

நீண்ட அலைகழிப்பிற்கு பின் அவள் உடல் இன்றுதான் புதைக்கபடுகின்றது

அந்த ஸ்னொலினுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

யார் யாரோ செய்த தவறுகளினால் வாழ வேண்டிய பெண் ஒருத்தி கொடூரமாக கொல்லபட்டிருக்கின்றாள், அந்த மலரை மொட்டிலே கருக்கி விட்டார்கள்

தூத்துகுடியில் பிறந்ததை தவிர என்ன தவறு அவள் செய்தாள், அதுதான் அவள் செய்த தவறு

அக்காலத்தில் ஆடிமாத காற்று தேரிகாட்டு மணலை அள்ளி தூத்துகுடி கடல் பக்கம் கொட்டுமாம், நல்ல மழைதுளிக்காக வாய் பிளந்திருக்கும் சிப்பிகள் மீது அந்த மண் விழுமாம்

உப்பு கடலில் நல்ல மழை துளிக்காக ஏங்கும் சிப்பிகள் வாயில் அக்கொடுங்காற்று மணலை தூவிவிட்டு செல்லுமாம்

அந்த மண்துகளை சுற்றி உறுத்தல் ஏற்படாமல் இருக்க சிப்பி கட்டும் ஒரு திரவமே இறுகி முத்தாகுமாம்

தூத்துகுடி முத்து இப்படித்தான் புகழ்பெற்றது

அப்படி நல்ல நீரினை குடிக்க மாட்டோமா? நல்ல காற்றை சுவாசிக்க மாட்டோமா என போராட‌ வந்த இந்த இளம்பெண் மீது மண்போட்டு மூடியிருக்கின்றார்கள் பொறுப்பில்லா கொடியவர்கள்

இந்த இளம்பெண்ணின் தியாகமும் தூத்துகுடி வரலாற்றில் முத்தாய் ஜொலிக்கட்டும், இவளை மூடித்தான் ஸ்டெர்லைட்டின் கல்லறை கட்டபட்டது என வரலாறு சொல்லட்டும்

மூடப்பட்டு மண்ணோடு மண்ணாகும் ஸ்டெர்லைட்டே அவளின் சமாதி, ஆம் அதனை மறுபடி திறந்தால் ஆயிரம் ஸ்லோனின்கள் உருவாகிகொண்டே இருப்பார்கள்

அந்த சமாதி அப்படியே இருக்கட்டும்

பொறுப்பில்லா அரசுகளும், விளைவுகளை திட்டமிட்டே கணித்து கொடும் கலவரம் ஏற்படுத்துவோரும் எவ்வளவு அபாயகரமானவர்கள் என சொல்லிவிட்டு சரிந்திருக்கின்றது அந்த தளிர்

ஸ்னொலின் என்றால் பனிமயதாயின் இன்னொரு பெயர்

அப்பெண்ணின் இறுதிசடங்கினை பார்க்கும்பொழுது தேவமாதா செத்துகிடந்தது போன்றே மனம் கனக்கின்றது

தூத்துகுடியின் தெய்வங்கள் எல்லாம் கலங்கி அழும் நேரமிது

இப்பாதகம் நடக்க காரணமான எல்லோருக்கும் நரகத்தில் கூட இடமில்லை, அவர்களை சாத்தான் கூட அருகே சேர்க்கமாட்டான்

மண் காக்க உயிர்விட்ட கட்டபொம்மனை போலவே வரலாற்றில் நிலைத்துவிட்ட, தில்லையாடி வள்ளியம்மை வரிசையில் இடம்பெற்றுவிட்ட அந்த தியாக மலரை தீரா கண்ணீருடன் தூத்துகுடி வழி அனுப்பி வைக்கின்றது

 

திராவிட குரல் செல்வனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

Image may contain: 1 person, smiling, close-up

அக்கால கட்டத்தில் அப்படி ஒரு குரலை தேடிகொண்டிருந்தார்கள், சீர்காழி போல வெண்கல குரலும் அல்லாமல், ஸ்ரீனிவாஸ் போல புல்லாங்குழல் குரலும் அல்லாமல் இடைபட்ட குரலை தேடிகொண்டிருந்தார்கள்

அக்காலம் ராமசந்திரன், சிவாஜி கணேசன் போன்றோர் உச்சத்தில் இருந்தாலும் சில இளைஞர்கள் வந்துகொண்டிருந்த காலமது, அவர்களுக்காக தேடிகொண்டிருந்தார்கள்.

அப்பக்கமோ அந்த இளைஞன் பொறியில் படிப்பினை பாதியில் விட்டுவிட்டு பட்டபடிப்பில் ஓப்பேற்றிகொண்டே இசைகுழுக்களில் பாடிகொண்டிருந்தான். மிக திறமையான பாடகன் அன்றே சுசீலாவோடு சில மேடைகளில் பாடும் அளவு திறமை இருந்தது

திரையுலகின் அன்றைய ஜாம்பவான் ராமசந்திரனுக்கு சந்தேகபுத்தி அதிகம், அப்படிபட்ட நிலையில் டி.எஸ் சவுந்திரராஜன் தன்னை விட சிவாஜிக்கு நன்றாக பாடுவதாக சந்தேகம் எழுந்தது, அவரின் பிறவிகுணம் அது

அதே காலகட்டத்தில் சுசீலாவிற்கும் சவுந்தரராஜனுக்கும் பிணக்குகள் எழுந்தன‌

உடன் இருந்தவர்கள் வேறு “அண்ணே நீங்க இன்னும் இளமையாய் இருக்கின்றீர்கள், ஆனால் டிஎம்.சவுந்திரராஜன் பாடினால் கிழவன் போல் பாடல் குரல் இருக்கின்றது, உங்கள் இமேஜ் என்னாவது?” என சிரிக்காமல் சொன்னார்கள்

உடனே இதை நம்பிய ராமசந்திரன், இளவயது கதாநாயகி தேடிகொண்டிருந்த ராமசந்திரனுக்கு இளம்குரல் பாடகனும் தேவைபட்டார்கள், அந்த இளம் பாடகரும் வந்தார்

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் எனும் எஸ்பி பாலசுப்பிரமணியம் திரைக்கு வந்த கதை இப்படித்தான்

1970களில் அவர் ராமசந்திரனுக்கு பாட வருமுன் சுந்தர தெலுங்கிலும் சிலபாடல்கள் பாடியிருந்தார், எனினும் அடிமைப்பெண் படத்தில் “ஆயிரம் நிலவே வா” என்பதே அவரின் முதல் தமிழ்பாடலாயிற்று

ராமசந்திரனுக்கு மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து சில பாடல்களை பாடிய பாலசுப்பிரமணியத்திற்கு 1975க்கு பின் வாய்ப்புகள் பெருகின.

ராமசந்திரன் வாழ்வில் செய்த மிக உருப்படியான விஷயம் இதுதான்.

அரசியலுக்கு ராமசந்திரன் கிளம்ப ஏகபட்ட இளைஞர்கள் குதித்தனர், அவர்களுக்கு பாலசுப்பிரமணியம் குரல் அட்டகாசமாக பொருந்தியது

அப்பொழுது இளையராஜா யுகம் வேறு ஏற்பட மேடைபாடல் காலங்களிலே நண்பர்களாக இருந்த அவர்களுக்கு நேரம் போதா அளவு பாடல்கள் குவிந்தன‌

1980களில் உச்சம் பெற்ற எஸ்,பி.பி அதன் பின் கிட்டதட்ட 30 வருடங்கள் அதிலே நின்றார். தமிழ் மட்டுமல்ல தென்னக மொழி அனைத்திலும் பாடினார்

அன்று அவர் முகம் தெரியாது, இன்றுள்ள வசதி அன்றில்லை, வெறும் ரேடியோ மட்டுமே. கச்சேரிகள் என்ற கொடுமை தெருவுக்கு தெரு நடக்கும் காலகட்டமது

அங்கெல்லாம் எஸ்பி குரல் மட்டுமே ஒலித்தது. உண்மையில் வசீகரமான குரல் அது. வெண்கல குரலை தேனில் குழைத்து கொடுத்தது போல ஒரு ஏகாந்தம் அதில் உண்டு, இன்றுவரை உண்டு

எந்த பாடல் ஆனாலும் அதன் தன்மை மாறாமல் பாடுவதில் அவரை மிஞ்ச முடியாது. அது காதல், கடவுள், உருக்கம், துக்கம் என எதுவானாலும் அதுவாகவே உருகிபாடுவார்

தமிழகத்தில் எல்லோரும் அவர் குரலை கேட்டார்கள், அவரை தேடினார்கள்

பொதுவாக எல்லோரும் நடித்துவிட்டு பாடுவார்கள், ரஜினி கூட “அடிக்குது குளிரு..” என பயமுறுத்தினார், ஜெயலலிதா “அம்மா என்றால் அன்பு” அன்றே அரசியல் பாடினார் இன்னும் ஏராளம்

ஆனால் பாடிவிட்டு நடிக்க வந்தவர் எஸ்.பி. அவர் குரல் அவருக்கு கொடுத்த அங்கீகாரம் அப்படி

உண்மையில் அற்புதமான நடிப்பு அவரிடம் இருந்தது. திருடா திருடா படத்தின் அந்த சுவாரஸ்யமான சிபிஐ அதிகாரியினை மறக்க முடியாது, இன்னும் ஏராளமான வேடங்கள்

அற்புத நடிகனும் அவருக்குள் இருந்தான் நேரம் வரும்பொழுது வெளிவந்தான்

பாடகர்களில் ஆச்சரியமானவர் எஸ்பி, அவர் முறையாக சங்கீதம் பயின்றதாக செய்தி இல்லை, பொறியில கல்லூரி கனவில்தான் வளர்ந்தார்

ஆனால் அவர் தந்தைக்கு இசைஞானம் இருந்திருக்கின்றது, அது எப்படியோ இவருக்குள் இறங்கிவிட்டது

ஆச்சரியமாக முறையே சங்கீதம் படிக்காவிட்டாலும் எந்த ராகத்திலும், எந்த தாளத்திலும் அட்டகாசமாக பாடலை இழுத்துகொண்டு போகும் வித்தை அவருக்குள் இருந்தது

சங்கராபரணம் படத்திற்காக 4 மொழிகளிலும் விருது வாங்கிய சாதனையாளர் அவர் வாங்கியது சாதாரண விஷயம் அல்ல‌

4 மொழி இசை விற்பனர்களும் ஒரு குற்றம் கண்டுபிடிக்கமுடியாதபடி அப்பாடல் இருந்தது

பிறவி கலைஞன் என சொல்லபடும் விஷயம் இதுதான்

அந்த பாடல் ஞானம் அவருக்கு எல்லா விருதுகளையும் கொடுத்தது, தேசிய விருதுகளை கொடுத்தது

40 ஆயிரம் பாடலை பாடியவர் எனும் கின்னஸ் சாதனையினையும் கொடுத்தது

கிட்டதட்ட 4 தலைமுறை நடிகர்களுக்கு பாடியிருக்கின்றார், எம்.எஸ் விஸ்வநாதன் காலமுதல் இப்பொழுதிருக்கும் இசை அமைப்பாளர் வரை 5 தலைமுறையினருடன் பணி செய்திருக்கின்றார்

சுசிலாவோடு இணைந்து பாடியது முதல் ஜாணகி, வாணி ஜெயராம் என தொடர்ந்து இன்றைய பாடகிகள் வரை பாடியிருகின்றார்

கண்ணதாசன் காலமுதல் இன்றைய இம்சை கவிஞர்கள் காலம் வரை பாடியிருகின்றார்

நிச்சயமாக இது அவருக்கு பெரும் ஆசீர்வாதம், ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம்

பாடகராக மட்டும் கடந்து செல்லமுடியாத மனிதர் அவர். இசை அமைப்பாளர், பிண்ணணி குரலாளர், நடிகர், தயாரிப்பாளர் என ஏக முகங்கள் உண்டு

எல்லாவற்றிற்கும் மேல் கொஞ்சமும் பந்தா இல்லாத பாடகர், அவரின் பேட்டிகளிலோ நெரலை நிகழ்ச்சிகளிலோ கொஞ்சமும் ஆணவம் இருக்காது, யாரையும் புண்படுத்தும் சொற்களும் இருக்காது

ஜென்டில்மேன் என சொல்லபடும் அந்த பண்பு அவரிடம் நிரம்ப உண்டு

அந்த அற்புத பாடகனுக்கு இன்று பிறந்த நாள்

நிச்சயம் தமிழ் திரையுலகின் அற்புதமான பாடல்கள் 1970க்கு பின் கிடைத்தன, தமிழ் திரையிசையின் பொற்காலங்கள் அவை

கண்ணதாசனும், வாலியும், வைரமுத்துவும் இன்னும் சிலரும் பண்டைய இலக்கியங்களை பிழிந்து சாறு கொடுத்தனர். அந்த தேன் தமிழை தன் குரல் மூலம் உயர நிறுத்தியவர் எஸ்.பி.பி

ரஜினியின் வளர்ச்சி முதல் பலர் வளர்ச்சியில் அவருக்கும் மறைமுக பங்கு உண்டு மறுக்க முடியாது

தமிழ் திரை இசைக்கு தன் அற்புத குரலால் காலத்தை வென்ற பாடலை கொடுத்த அந்த காந்தர்வ குரல் பாடகருக்கு, திராவிட குரல் செல்வனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை – தமிழக அரசு

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை – தமிழக அரசு

இப்பொழுது யாராவது 7 தமிழர் விடுதலை வேண்டும் இல்லை சிறை உடைப்போம் தமிழரை மீட்போம் என கிளம்புவார்களா என்றால் இல்லை

இந்த கும்பல் முன்பு செய்த அட்டகாசம் என்ன? திருமுருகன் எல்லாம் சிறை உடைப்போம் என்றெல்லாம் முழங்கினார்

காங்கிரஸ் , திமுக அரசு என்றால் இவர்கள் 7 தமிழர் என பொங்குவதும். பாஜக பழனிச்சாமி அரசு என்றால், “7 பேரா? அவர்களை அப்பொழுதே விடுவித்தாயிற்றே” என பம்முவதும் புதிதல்ல‌

காலா நிச்சயம் ஓடாது என்பது வேறு விஷயம்….

ரஜினியினை நிலை குலைய வைக்க வேண்டும், அவர் அரசியல் பக்கமே வராமல் அடித்துவிரட்ட வேண்டும் என்றொரு கும்பல் கிளம்பி இருப்பது தெரிகின்றது

கன்னடத்தில் காலா படத்திற்கு வரவேற்பு இருந்தால்தான் ஆபத்து, கன்னடர்கள் எதிர்ப்பது நல்ல விஷயம். அப்படியே அங்கிருந்து இங்கு வந்த எல்லா நடிகர்களையும் விரட்டி வாட்டாள் நாகராஜ் கழுத்தை பிடியுங்கள் என அனுப்பினால் விஷயம் தீரும்

ஆனால் வெளிநாட்டில் ரஜினி படத்திற்கு தடை என சில கிளம்பி இருகின்றன, யாரென்று பார்த்தால் ஈழதமிழர்கள்

அதாவது ரஜினி ஈழபடுகொலையினை கண்டிக்கவில்லையாம், இன்னும் தூத்துகுடியில் என்னமோ பேசிவிட்டாராம் அதனால் பழிவாங்குவார்களாம்

விஜயும், அஜித்தும் இன்னும் பலரும் ராஜபக்சே சட்டையினை இழுத்தா நியாயம் கேட்டார்கள் என்றெல்லாம் நாம் கேட்க கூடாது

காலா படத்திற்கு ஐரோப்பிய அரசுகள் ஏதும் சொன்னால் அர்த்தம் உண்டு, இவர்களாக குதிப்பது சரியல்ல‌

யாழ்பாணத்திலும் , கொழும்பிலும் தமிழர் காலா படத்தினை எதிர்ப்பார்த்திருக்க நார்வேயில் இருந்து ஊளையிடுவது எல்லாம் அரசியல்

இவர்கள் பின்புலம் எது என கண்டால் வைகோ சீமானிய பாரதிராஜா தொடர்புகள் அன்றி வேறல்ல‌

ரஜினியினை எதிர்ப்பவர்கள் இப்பொழுது ஏன் வருகின்றார்கள்? 2009ல் நடந்த சம்பவத்திற்கு இப்பொழுது ஏன் குதிக்கின்றார்கள்?

அவ்வளவு தீவிர தமிழ் உணர்வாளர்கள், லைகா சுபாஷ்கரனின் கழுத்தை பிடித்து ரஜினி வைத்து நீ எப்படி படமெடுக்கலாம் என கேட்டார்களா?

இல்லை எந்திரன் 2.0 வரும்பொழுது தடுப்பார்களா?

மாட்டார்கள்

ஈழதமிழன் ரஜினி வைத்து படமெடுத்து பலநூறுகோடி வியாபார கணக்கு என்றால் கம்மென்று இருப்பார்கள்

வேறு தயாரிப்பாளர் என்றால் ஏய் ரஜினி என பொங்குவார்கள்

இந்த ஈழதமிழர்கள் தமிழக திரையுலகினை கட்டுபடுத்தும் அதிகாரத்தை யார் கொடுத்தது? அல்லது கட்டுபடுத்தலாம் என நினைக்கின்றார்களா?

ஒரு காலமும் நடக்காது

நார்வே மிக சிறிய நாடு, அதில் ஈழதமிழர் எண்ணிக்கை மிக மிக சொற்பம், சில ஆயிரம் கூட தேறாது

இவர்கள் எதிர்த்து ஒன்றும் நடக்காது, எல்லாம் வெற்று விளம்பரம், வீண் கூச்சல்

படம் நிச்சயம் ஓடாது என்பது வேறு விஷயம்,

ஆனால் எங்களால்தான் தோல்வி என சொல்வார்கள் அல்லவா? அதுதான் தாங்கமுடியாத எரிச்சலை கொடுக்கும்