ஜூன் 4 ராஜிவின் மாபெரும் துணிச்சல் தெரிந்த நாள்

Image may contain: 1 person, standing

இலங்கையில் வடமாராட்சி என்றொரு பகுதி உண்டு, அன்று புலிகளின் கோட்டை அது

அப்பொழுது இருந்த இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஆப்பரேஷன் லிபரேஷனை தொடங்கினார், அதாவது புலிகளை முற்றிலும் ஒழிப்பது

பிரபாகரனின் ஏ1 முகாம் உட்பட பல்லாயிரம் தமிழரோடு அப்பகுதியினை வளைத்தது சிங்களபடை, புலிகள் அப்பொழுது தற்கொலை தாக்குதல் வேறு நடத்தியதில் சிங்கள படை கொலை வெறியில் இருந்தது

மில்லர் எனும் புலி நடத்திய தாக்குதலில் பல ராணுவத்தார் கொல்லபட சீறி நின்றது சிங்கள தரப்பு

இனி பொறுப்பதில்லை, மொத்த புலிகளையும் தமிழரோடு முடித்துவிடுங்கள் என உத்தரவிட்டா அதுலத் முதலி எனும் பாதுகாப்புதுறை அமைச்சர்

கடும் யுத்தம் தொடங்கியது , சப்ளை முடங்கியது உணவில்லை , மருந்தில்லை, செஞ்சிலுவை சங்கத்தை கூட சிங்களம் அனுமதிக்கவில்லை

சுருக்கமாக சொன்னால் 2009 முள்ளிவாய்க்கால் அன்று தொடங்கியது

வழக்கம் போல ஈழகுரல்கள் எழும்பின, அமிர்தலிங்கம் உட்பட இலங்கை தமிழ் அரசியல்வாதிகளும் குரல் எழுப்பினர்

அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி கப்பல் நிறைய உதவிபொருளை அனுப்பினார் ராஜிவ், நடு கடலில் திருப்பி அனுப்பியது இலங்கை

அவ்வளவுதான் இந்திய ராணுவ விமானப்படைக்கு உத்தரவு கொடுத்தார் ராஜிவ், அவை உணவு மருந்துடன் பறந்தன, அவற்றிற்கு பாதுகாப்பாக மிராஜ் விமானங்களும் பறந்தன‌

அதாவது சிங்கள விமானம் தடுத்தால் அவற்றை சுட்டு வீழ்த்த வந்த விமானம் அது

உணவுபொருள் வடமாரட்சியில் வீசபட்டதும் தமிழர் ஆனந்தபெரு மூச்சுவிட்டனர், இனி இந்தியா நம்மை காப்பாற்றும் என மகிழ்ந்தனர்

இனி ஒரு அடி சிங்களபடை முன்னேறினால் இந்திய களமிரங்கும் என இந்திய அரசு அறிவிக்க, அலறி அடித்து ஓடிவந்து ஒப்பந்தமிடவந்தான் ஜெயவர்த்தனே

ராஜிவின் நடவடிக்கையினை உலகமே நோக்கியது, காரணம் ஐநா அனுமதி இன்றி இன்னொரு நாட்டில் விமானத்தை பறக்கவிடுவது என்பது போருக்கு சமம்

இலங்கை புத்த மொட்டை சாமி எல்லாம் நவதுவாரத்தை பொத்தி அஞ்சி கொண்டிருந்தது

போராளி குழுக்கள் எல்லாம் நன்றி கண்ணீர் வடித்தன, ஈழ மக்கள் எல்லாம் கைகூப்பி இந்தியாவினை தொழுதனர்

ஆனால் ஒரே ஒரு குரல் மட்டும் கோபத்தை மறைத்தபடி, ஒருவித வஞ்சகத்துடன் சொன்னது “இந்தியா தங்கள் வல்லரசு சக்தியினை காட்டிவிட்டது”

அதன் அர்த்தம் என்னவென்றால் இவர்கள் இங்குவருவது அத்துமீறல் என்றது போன்றது

எல்லோரும் மகிழ பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் நிம்மதி இல்லை, ஆனால் காட்டிகொள்ளவில்லை

புலிகளால் இப்படிபட்ட பேரழிவு வந்தபின்பே , இனி புலிகளால் ஒருநாளும் சிங்களனை வெல்லமுடியாது என்றபின்பே இந்தியா களமிறங்கி அமைதிபடையினையும் அனுப்பியது

ஆனால் பெரும் உள்நோக்கத்துடன் வம்பிழுத்து அந்நிய உதவியுடன் அதனை விரட்டி, ராஜிவினையும் கொன்றனர் புலிகள்

விளைவு 2009ல் முள்ளிவாய்க்கால் நடந்தபொழுது, 1987 ஜூன் 4ல் நடந்த அந்த சம்பவத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் சொல்லி மறுத்தது இந்தியா

இந்த ஜூன் 4 ஈழதமிழருக்காக ராஜிவ் களமிறங்கிய நாள், அன்றே அவருக்கான நாளும் குறிக்கபட்டது

ஆப்பரேஷன் பூமாலை என ராஜிவ் செய்த விஷயமெல்லாம் சாதாரணம் அல்ல, அதற்காக தன் உயிரையும் கொடுத்தார் அவர்

அதனை புறந்தள்ளிய புலிகள் இறுதியில் அழிந்தும் போயினர்

ஜூன் 4 ராஜிவின் மாபெரும் துணிச்சல் தெரிந்த நாள், ஈழமக்களுக்காக அவர் உயிர்கொடுக்க துணிந்த நாள்

புலிகள் எவ்வளவு நன்றிகெட்டவர்கள் என பின்னாளில் உலகம் உணர்ந்த நாள்

ஈழதமிழரின் கண்ணீரை இந்தியா துடைக்க நினைத்த நாளிது, அந்த இந்திய கரங்களை வெட்டிவிட்டுத்தான் ஈழமக்களை தீரா அழிவில் தள்ளினான் பிரபாகரன்

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s