காலா படத்துக்கு எங்குமே வரவேற்பில்லை

Image may contain: 1 person, smiling, text

காலா படத்துக்கு எங்குமே வரவேற்பில்லை, அவரின் தீவிர ரசிகர்கள் கூட தேவதாஸ் கோலத்தில் ரஜினியினை காண விரும்பவில்ல்லை

ரஜினியினை அவரின் ரசிகன் இந்த பரதேசி கோலத்தில் காண விரும்பமாட்டான், அவன் மனநிலை அப்படி

ஏன் டிக்கெட் மந்தம் என்றால் ரசிகனின் கருத்துபடி படம் எப்படி இருக்கும் என்றால் இப்படித்தான்

ரஜினிக்கு ஒரு மாதிரி பெயிண்ட் அடித்து , ஒரு மாதிரி ஆடை உடுத்தி போராளி போல உலாவ விட்டிருப்பார் ரஞ்சித், ரஜினி ஸ்டைலாக நடப்பார், ஸ்டைலாக சிரிப்பார்

தெருவில் நடப்பார், அங்கே சுருண்டு கிடக்கும் நாயினை மிதித்து “போ போய் போராடு” என்பார், மாடு கட்டபட்டிருந்தால் “மாட்டின் குணமே போராடுவது அதை கட்டிவைக்காதே” என வசனம் பேசி அவிழ்த்துவிடுவார்,

எவனாவது மும்பை கேட் பக்கம் புறாவுக்கு இரை போட்டால் “புறாவோட குணமே தேடி இரைபொறுக்குறது அத கெடுக்காதே” என சொல்லி அந்த திணையினை கடலுக்குள் வீசுவார்

அப்படியே சப்பாத்தி சாப்பிடுவார், ஒரு மராட்டியன் வந்து உனக்கு சப்பாத்தி ஒரு கேடா என்பான், உடனே ரஜினி பொங்கி நெல்லை தமிழில் பேசுவார்

எலேய்.. தமிழேன் எங்க போனாலும் கூழும் கஞ்சியியும்தான் குடிக்கணுமோல., அவன் சப்பாத்தி, பரோட்ட, வடபாவ் எல்லாம் சாப்ட கூடாதால….

நா சப்பாத்தி சாப்படுவேம்ல, நல்லா சால்னா வச்சி சாப்பிடுவேம்ல, உன் முன்னால உக்காந்து சாப்பிடுவேம்ல..

ருசியா, டேஸ்டா நக்கி நக்கி சாப்பிடுவேம்ல‌

உன்னால பொறுக்க முடியலண்ணா சாவுல சவத்து மூதி,

எந்த செறுக்கி பயவுள்ளையாவது சப்பாத்திய புடுங்க வந்தா தூக்கி போட்டு மிதிப்பேம்ல‌ “

கூடவே 4 பேர் நம்பர் சிஸ்டத்தில் அடிவாங்குவார்கள், ஆங்காங்கே அம்பேத்கர் படம் தென்படும், சே படம் இருக்கும் , ரஜினி சம்பந்தமே இல்லாமல் “யாருக்கு பொறந்தா என்னடா? சுகபிரசவமாதான் பொறந்தோம்” என வடிவேலுவிடம் சொல்லும் பைத்தியம் போல ஏதாவது சொல்லிகொண்டிருப்பார்

இந்த கருப்பு உடையினை ஏற்கனவே ” கொடி பறக்குது” படத்திலே பார்த்தாயிற்று, அன்றே சகிக்கவில்லை

கபாலியில் பல இமாலய தவறுகளை செய்திருந்தார் ரஞ்சித், அதாவது தோட்ட துண்டாடல் என்பது 1960ல் நடந்தது அது 1999ல் நடந்தது போல காட்டியிருந்தார்

இன்னொன்று அக்கால மலேய தமிழர்கள் வெள்ளை ஆடை அணிவார்கள் இல்லை கோட் சூட் அணிவார்கள், ரஜினி அணிந்தது போல ஒரு மாதிரி எல்லாம் அணியமாட்டார்கள்

இன்னும் ஏராள சொதப்பல்கள் உண்டு, அந்நேரம் ரஞ்சித் கையில் கிடைத்தால் மலேசியரில் பலர் அடித்திருக்கலாம் அன்னார் சிக்கவில்லை

இப்பொழுது பழைய பம்பாயின் கலாச்சாரத்தை சொல்கின்றேன் என சொதப்பி இருப்பார். பம்பாய்க்காரர்கள் போட்டு சாத்தபோகின்றார்கள்

படம் எவ்வளவு தாமதமாக வருகின்றதோ அவ்வளவுக்கு ரஞ்சித்துக்கும், ரஜினிக்கும் நல்லது

வராமலே போனால் இன்னும் நல்லது

(இந்த வயதான ரஜினிக்கு இன்னும் இளமையாக இருக்கும் குஷ்புவினை ஜோடியாக நடிக்க வைத்திருந்தாலவது படத்திற்கு தமிழகத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருந்திருக்கும் அதனையும் செய்யவில்லை)

 

உலகெல்லாம் இன்று சுற்று சூழல் தினம்

No automatic alt text available.

உலகெல்லாம் இன்று சுற்று சூழல் தினம் கொண்டாடுகின்றார்கள் என இந்தியாவும் கொண்டாடுகின்றதாம்

உலகின் மாசடைந்த நகரங்களில் டெல்லி முதலிடத்தில் இருக்கின்றது, அங்கு இருந்துகொண்டு மோடி என்னவோ முழங்கிகொண்டிருக்கின்றார்

சுற்றுபுற சூழல் எல்லாம் அழிய ஆரம்பித்து நெடுங்காலம் ஆயிற்று, என்று தொழில்புரட்சி என ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் எந்திரமயம் ஆனதோ அன்று தொடங்கியது இந்த அழிவு

ஆனால் அவர்கள் பின்னாளில் விழித்துகொண்டார்கள் , எதெல்லாம் ஆபத்தான சுற்றுசூழலை கெடுக்கும் விஷயமோ அதை எல்லாம் மூன்றாம் உலக நாடுகளில் தங்களின் தந்திரத்தால் அமைத்து கொண்டார்கள்

கூவம் போல ஆகியிருந்த லண்டன் தேம்ஸ் நதியினை கூட சுத்தமாக்கிவிட்டார்கள்

இன்று ஐரோப்பா ஓரளவு சுற்று சூழலை காக்க தொடங்கிவிட்டது, நாசமாய் போவதெல்லாம் ஆசிய ஆப்ரிக்க நாடுகளின் சுற்று சூழல்

ஆனால் தொழில்நுட்பம் ஐரோப்பியர் , அமெரிக்கர் கையில் இருக்கின்றது, உற்பத்தி ஆகும் பொருளின் விலை முதல் எல்லாம் அவர்கள் கட்டுபடுத்துகின்றார்கள், ஆனால் அதை உருவாக்கும் இடங்களை மட்டும் மூன்றாம் உலகநாடுகளில் அமைத்து கொல்கின்றார்கள்

இந்தியாவில் இயங்கும் பெரும் பரகாசுர கம்பெனிகளுக்கு பின்னால் எல்லாம் ஐரோப்பிய கரங்கள் உள்ளன‌

சுருக்கமாக சொன்னால் சாவதற்கு நாம், வாழ்வதற்கு அவர்கள்

ஸ்டெர்லைட் முதல் இன்னும் ஏராளமான அழிவு ஆலைகளில் எல்லாம் அவர்கள் கட்டுப்பாடு உண்டு

திருப்பூர் சாயபட்டறை எல்லாம் என்ன வகை? இங்கிருந்து சூழலை கெடுத்து ஆற்றை நாசமாக்கி அவர்கள் வாழும் வழி

இப்படி ஆலைகள் ஒருவகையில் சுற்று சூழலை கெடுக்கின்றன என்றால், பெட்ரோல் சமாச்சாரங்களால் ஏராளம்

வெறும் டீசல் பெட்ரோல் அல்ல, அது போக கழிவு எண்ணெய்கள் ஏராளம் சேரும், ஒருமுறை கார் பட்டறை பகுதிக்கு செல்லுங்கள் தெரியும்

ஒவ்வொரு எந்திரத்திற்கும் கழிவு எண்ணெய் உண்டு, அவற்றை என்ன செய்ய வேண்டும்? அப்படியே எங்கு எண்ணெய் எடுத்தார்களோ அந்த அரேபிய தீர்ந்துவிட்ட எண்ணெய் கிணறில் கொட்டவேண்டும்

நிலக்கரி சாம்பலையும் நிலக்கரி தோண்டிய பள்ளங்களில் நிரப்ப வேண்டும்

எங்கு எடுத்தோமோ அங்கே மறுபடி புதைத்தால் சிக்கலே இல்லை, ஆனால் செய்வார்களா என்றால் செலவு கணக்கு பார்த்து விட்டுவிடுவார்கள்

அவை எல்லாம் இப்பொழுது ஆற்றிலும் கடலிலும் கலக்கின்றன‌

கச்சா எண்ணெயால் இதுதான் அழிவா என்றால் அதனின்று வரும் பிளாஸ்டிக் டப்பா, பாட்டில் , பைகள் இவைதான் இன்று மாபெரும் சூழல் அழிவிற்கு காரணம்

கட்டுபாடில்லாத தொழில்சாலை அதன் கழிவுகள், அதனால் ஆற்றில் சேரும் குப்பைகள் என நம் சூழலை அழியவிட்டுவிட்டு ஐரோப்பா சுத்தம், சிங்கப்பூர் சுத்தம், அமெரிக்கா சுத்தம் என சொல்லிகொண்டிருக்கின்றோம்

அவர்கள் சுமக்க வேண்டிய அழுக்கை எல்லாம் இந்தியா சுமக்கின்றது, அவர்களுக்காகத்தான் இங்கு உற்பத்தி நடக்கின்றது, அந்த தொழிற்சாலை சீர்கேடுகளை நாம் அனுபவிக்கின்றோம்

அவர்கள் பலனை மட்டும் அனுபவிக்கின்றார்கள், நாம் அவர்கள் நாடு சுத்தம் என சொல்லிகொண்டே அவர்களுக்காக நம் நாட்டை நாசபடுத்திகொண்டிருக்கின்றோம்

அந்த சீர்கேடு பல்வகையான நோய்களை இங்கே கொண்டு வந்து சாகடித்துகொண்டே இருக்கின்றது

இவை எல்லாம் உலக அநீதிகள், கூர்ந்து பார்க்கலாமே தவிர ஏதும் செய்துவிடமுடியாது

இந்தியா எங்கும் பிளாஸ்டிக் பைகளும் கோக், பெப்சி கேன்களும் குப்பையாக நிரம்பி கிடக்கின்றன, கடலை கூட விடுவதில்லை

இது யார் கலாச்சாரம்? யார் தொடங்கி வைத்தது என்றால் நிச்சயம் நாம் அல்ல, பலன் பெற்றதும் நாம் அல்ல ஆனால் அழிவு மட்டும் நமக்கு

இதுபோக வெளிநாட்டு குப்பைகளை வாங்கி மறுசுழற்சி என்றபெயரில் அபாயகரமான குப்பைகளை வாங்கி இன்னும் சீரழிகின்றோம், கேட்டால் தொழில் என்பார்கள்

மொத்ததில் கடந்த 80 வருடத்தில் ஆறு, குளம், ஏரி என எல்லாவற்றையும் ஆலை கழிவு, வாகன கழிவு என எல்லாவற்றையும் கலக்கவிட்டு நாசமாக்கிவிட்டோம்

மலை உச்சியிலும் ஆழ்கடலிலும் தவிர எல்லா இடமும் கெட்டு கிடக்கின்றது

இதை எல்லாம் யோசித்தால் பைபிளின் திருவெளிப்பாட்டின் சில வரிகள் நினைவுக்கு வரும், குரானிலும் அந்த சாயல் உண்டு

அதாவது உலக அழிவு காலங்களில் நீர் நிலைகளில் 3ல் இரண்டு பங்கு கசப்பாகி மனிதர் பயன்படுத்த முடியாதபடி ஆகிவிடுமாம்

அந்த காட்சி கண்முன்னே இப்பொழுது தெரிகின்றது

கூவம் கண் கண்ட சாட்சி, எப்படி இருந்த கூவம்?

சென்னை கோட்டையினை ஆண்ட ராபர்ட் கிளைவின் மாளிகை சென்னை கோட்டையில் இன்றும் உண்டு

அந்த மாடியில் இருந்து கூவம் ஆற்றை ரசித்தபடி தேநீர் குடிப்பானாம், மாலையில் அதில் படகோட்டி ரசிப்பானாம்

அப்படி இருந்த கூவம் இப்பொழுது அதே கோட்டையில் உலவும் அரசியல்வாதிகள் மனம்போல் கெட்டே விட்டது

இது போன்ற ஏகபட்ட கூவம் இந்தியா முழுக்க உண்டு, ஆனால் அரசு கங்கையினை காப்போம் என இறங்குமே தவிர மற்ற ஆற்றுபக்கம் வராது

இந்தியாவில் சுற்று சூழல் சீர்கேடு என்பது மிக மிக அதிக அளவில் இருக்கின்றது

முன்னோர்கள் பாடுபட்டு உருவாக்கிய குளம், கிணறு எல்லாவற்றையும் குப்பை போட்டு நாசமாக்கி வைத்திருக்கும் ஒருவித மோசமான தலைமுறை இப்பொழுது உருவாகிவிட்டது சோகம்

அந்நிய சக்திகள் இந்நாட்டின் சூழலை கெடுத்தாலும் இம்மக்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு

இதெல்லாம் வரும் காலத்தில் மாறவேண்டும் , இல்லாவிட்டால் இந்தியா மக்கள் வசிக்க தகுதி இல்லா நாடாகிவிடும், இப்பொழுதே பாதி அப்படி இருக்கின்றது

அடுத்த சந்ததிக்கு ஏதாவது செய்தாக வேண்டுமென்றால் இவற்றிற்கொரு முடிவு கட்டியே தீரவேண்டும்

அதை செய்யாமல் மாடி வீடு கட்டி, பெரும் சொத்துக்களை குவித்து வைத்து அவர்கள் வாழ வழி செய்தேன் என சொல்வது கொலைக்கு சமானம்

அந்த பாவத்திற்கு மன்னிப்பே இல்லை

வருங்கால சந்ததிக்கு சொத்துக்களை விட்டு செல்வதை விட, அவர்கள் நிம்மதியாக வாழ நல்ல சூழலை செய்வதே சால சிறந்தது

இந்த அழகான பூமி நமக்கு மட்டுமல்ல , எல்லா உயிர்களுக்கும் மரம் செடி கொடிகளுக்குமானது

நிச்சயம் இது வாடகை வீடு, அந்த வீட்டினை நன்கு பராமரித்து அடுத்துவரும் சந்ததிக்கு பசுமையாய் விட்டு செல்வதே மானிட தர்மம், அதுவே நீதி


தமிழகத்தில் அடுத்த ஆண்டில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை : ‍ பழனிச்சாமி அறிவிப்பு

நல்லது, ஆனால் இந்த வருடம் முதல் ஏன் தடை இல்லை என யாரும் கேட்க கூடாது

ஆக அடுத்தவருடம் ஆட்சியில் இருப்போம் என்ற நம்பிக்கை அவருக்கே இல்லை போலிருக்கின்றது


 
 

கனிமொழி கவிதைகள்…

No automatic alt text available.

 

கனிமொழி என் இலக்கியவாரிசு என நேரடியாக சொல்லி அவர் அரசியல்வாரிசு அல்ல என மறைமுகமாகவும் சொன்னவர் கலைஞர்

இலக்கிய வாரிசான‌ கனிமொழியினை பின் ஏன் எம்பி ஆக்கினார் எனது கலைஞரின் மனதுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்

அந்த கனிமொழி அவ்வப்போது கவிதை எல்லாம் எழுதுவார், அது கலைஞரின் சில வரிகள் போல ஓரளவுதான் புரியும், சில நேரம் கமலஹாசன் பேச்சை போலவே இருக்கும்

கனிமொழி கவிதையினை ரசித்து கைதட்ட மனுஷ் போன்ற பெருங்கவிகள் முன்பு உண்டு. இப்பொழுது மனுஷ் முக ஸ்டாலினை புகழ்ந்துகொண்டிருப்பதால் இப்பக்கம் வரவில்லை

இந்நிலையில் கலைஞரை நினைத்து கனிமொழி கவிதை ஒன்றினை வடித்துவிட்டார், வடிக்கட்டும் சிக்கல் இல்லை. ஆனால் அதன் சில வரிகள் பலருக்கு கண்களை சிவக்க வைக்கின்றன‌

என்ன கவிதை?

கலைஞர் இல்லா ஊரில் அவர் உடன்பிறப்புக்கள் ரத்தம் ஆறாய் ஓடுகின்றதாம், இவர்கள் ஊர் கூடி இழுத்தாலும் தேர் வரவில்லையாம் அதனால் கலைஞர் வரவேண்டுமாம்

இது போக கலைஞரின் பாணியில் சாதி,மதம் வட்டமிடும் கழுகு, ஓநாய், வாள்
என முரசொலி பிராண்ட் வார்த்தைகள்

இதில் இருவரிகள் சிக்குகின்றன‌

முதலில் கலைஞர் இல்லா ஊரில் உடன்பிறப்புக்கள் ரத்தம் ஓடுகின்றன என்றால் எந்த திமுகவினர் செத்தார்கள்? ஒரு பயலுமில்லை

செத்த 13 பேரும் பொதுமக்கள். அவர்களை பாஜக நக்சலைட் என சொல்ல, கனிமொழியோ திமுக உடன்பிறப்பு என்கின்றார்

கனிமொழி சொன்னதை சரிசெய்ய இனி யாரும் கீதா ஜீவன் மண்டையில் ஒரே போடாக போடலாம், அம்மணி கவனமாய் இருப்பது நன்று

இன்னொரு வரி ஊர்கூடி தேர் இழுத்தாராம் நகரவில்லையாம்

அதாவது திமுக போராட்டம் தோல்வி என்பதும் , எதிர்பார்த்த எழுச்சியினை கொடுக்கவில்லை என்பதும் இதன் பொருள். அப்படியானால் என்ன அர்த்தம் செயல்தலைவரை சாடுகின்றாராம்

உண்மையில் தேர் நகராமல் இருக்க இரண்டே காரணம், ஒன்று தேருக்கு பின்னால் இழுத்துபிடிக்கும் பழனிச்சாமியும் தேரை கல்லில் கட்டியிருக்கும் மத்திய அரசும் காரணம்

இரண்டாம் காரணம் தேருக்கு தடைகல்லாக இருக்கும் திமுக மாவட்ட செயலாளர்கள், அவர்கள் இருக்கும் வரை தேர் நகராது

எப்படியோ திமுக சரி இல்லை என்பதை கனிமொழி ஒப்புகொண்டுவிட்டார்

இது இனி என்னாகும்?

ஸ்டாலின் ஆதரவு மனுஷ் அடுத்த இம்சை கவிதையினை இனி வெளியிட கனிமொழி தரப்பு சும்மா இருக்குமா?

கவிஞர் சல்மா என ஒரு ஆட்டுகுட்டியினை ஏன் இழுத்துகொண்டே திரிகின்றார், ஆக சல்மாவிடம் இருந்து அடுத்த கவிதை வரும்

இப்படியாக கவிதை போர் ஆரம்பமாகும், அந்த இம்சைகளை பார்த்து தொலைக்க வேண்டும்

(ஆனாலும் கலைஞர் பாணியிலே வசனகவிதை என வந்துவிட்டார் கனிமொழி வாழ்த்துக்கள்

எனினும் கலைஞர் எழுதினால் ரட்சகன் எனும் வடமொழி வார்த்தை வந்திருக்காது, அவர் அவ்வளவு கவனமாக இருந்திருப்பார்

அது இருக்கட்டும் இப்பொழுது முக ஸ்டாலின் எங்கிருப்பார் மனுஷ், வைரமுத்து போன்றோருடன் கவிதை டியூசனில் இருக்கலாம்..)

 
 
 
 
 
 

 

 
 
 

குழந்தை பெத்துக்கிட்டா கவர்ச்சியா ஆடக்கூடாதா : நடிகை கஸ்தூரி ஆதங்கம்

 

Image may contain: 1 person, close-upகுழந்தை பெத்துக்கிட்டா கவர்ச்சியா ஆடக்கூடாதா : நடிகை கஸ்தூரி ஆதங்கம்

எந்த நாய் உங்களை கவர்ச்சியாய் ஆடகூடாது என சொல்லிற்று? அவனை வன்மையாக கண்டிக்கின்றோம்

முடிந்தால் அவனை கம்பத்தில் கட்டி தோலை உரிக்கவும் செய்கின்றோம், எவ்வளவு பெரிய அயோக்கியவன் அவன்??

நீங்கள் கவர்ச்சியாக‌ ஆடிகொண்டே இருங்கள், பார்க்க தமிழ் கூறும் நல்உலகம் எப்பொழுதும் தயாராக இருக்கின்றது

உங்கள் கவர்ச்சி கலைச்சேவை எந்நாளும் தேவை…

தயவு செய்து மனம் தளர்ந்துவிடாதீர்கள்..

 


 
 
 

Image may contain: 1 person, close-upகாவிரி பிரச்சனையை இரு மாநிலங்களும் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும் : கமல்

இவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்ளே தள்ள வேண்டும்

40 ஆண்டுகால சிக்கலுக்கு நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன பின்னும் இவர் இப்படி நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து சொல்லிகொண்டிருந்தால் அதனைத்தான் செய்ய வேண்டும்

இவர் வைத்திருப்பது மய்யம் அல்ல, பொய்யம்


மேடையில் பெண்ணுக்கு உதட்டு முத்தமிட்டதால் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு சிக்கல்

அதாவது அன்னார் தென்கொரியா சென்றபொழுது பிலிப்பைன்ஸ் மக்களின் மாநாட்டில் மேடைக்கு வந்த பெண்ணிடம் இப்படி மரியாதை காட்டி இருக்கின்றார்

விஷயம் சர்ச்சையாகின்றது, பலர் கண்டிக்க அவரோ என்ன குற்றம் கண்டீர் என்பது போல பேசிகொண்டிருக்கின்றார்

தமிழகத்து மய்யம் ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் இங்கும் இதுதான் நடக்கும் எனும்பொழுதே பகீர் என்கின்றது மனது.

 

சென்னையில் வாலிபர் கழுத்தறுத்து கொல்லபட்டிருக்கின்றார், விவகாரத்தை தோண்டினால் பெரும் அருவெருப்பான சமாச்சாரங்கள் வருகின்றன‌

பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடூரங்களின் தொடர்ச்சியாக இந்த மன நல சிக்கல்களின் உறவுகளும் வருகின்றன‌

அந்த சிக்கலில் ஒருவனை கொன்றே போட்டிருக்கின்றார்கள்

பாலியல் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இனி இந்தியாவில் இளைய சமுதாயத்தை காப்பாற்ற வழியில்லை என்பதை நடக்கும் விஷயங்கள் சொல்கின்றன‌


ஜூன் 5 : ஈழ முதல் போராளி சிவகுமார் நினைவுநாள்

Image may contain: 1 person, flower

அது 1974ம் ஆண்டு, தமிழர்களை சிங்கள அரசுகள் ஒடுக்க ஆரம்பித்த நேரம். வஞ்சகமாக இந்திய மலையக வம்சாவழிதமிழரில் பெரும்பான்மையினரை இந்தியாவிற்கு அனுப்பிவிட்டு (அப்பொழுது ஒரு ஈழதமிழரும் அதனை கண்டிக்கவில்லை,எதிர்க்கவில்லை என்பதுவேறுகதை ) ஈழதமிழரை குறிவைத்து காய்களை நகர்த்தியது.

இறுதியாக ஒரு திட்டத்தினை கொண்டுவந்தது. அது சிறிமாவோ பண்டாரநாயக அரசு, ஒரு யானைகுட்டியை கொடுத்து கச்சதீவை வாங்கியர் (அதாவது கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கபட்டபொழுது இந்திராவுக்கு இவர் ஒரு யானைகுட்டி பரிசளித்தார்) என சிங்களர்களால் கொண்டாடபட்ட சிறீமாவோ ஒரு கடும் கட்டுப்பாடு

அதாவது இடஒதுக்கீடு எனும் முறையை ஒரு சட்டம் மூலம் கொண்டுவந்தார் அதன்பெயர் தரப்படுத்துதல்.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் நமது மாநிலத்தில் 95% மதிப்பெண்பெற்ற உயர்சாதி மாணவனுக்கு கிடைக்கும் உயர்படிப்பும் அரசு வேலையும் 65% எடுத்த தாழ்த்தபட்டமாணவனுக்கு கிடைக்கின்றதல்வா?

அதேதான் அங்கே தரபடுத்துதல், உயர்வகுப்பு மாணவன் நிலையில் ஈழமாணவர்களும், தாழ்த்தபட்ட வகுப்பில் சிங்கள மாணவர்களும் வையுங்கள் அதேதான், புரிந்திருக்கும்.

நமது நாடு வித்தியாசமான அரசியல், உயர்வகுப்பினர் யாரும் கலவரம் செய்யவில்லை, ஆனால் ஈழமக்கள் கல்வியை உயர்வாய் கருதுபவர்கள் பொங்கிவிட்டார்கள்.

சொல்லபோனால் ஈழபிரச்சினை பெரும் திருப்பமாக இங்குதான் மாறிற்று, மாணவர்கள் போராட இறங்க, அரசியல்வாதிகள் தீ மூட்டினார்கள்.

தங்களுக்கு பிடிக்காத தமிழ்தலைவர்களை துரோகிகள் என காட்டிகொடுத்தார்கள், இன்றுவரை துரோகிகள் வரிசை நீண்டுகொண்டே இருக்கின்றது. கலைஞர் கூட துரோகியாகிவிட்டார்

மாணவர்கள் கூட்டமைப்பு ஆயுதம் தாங்க தீர்மானித்தது, சிவகுமாரனும் அதில் ஒருவர்.

அப்படி புறப்பட்ட மாணவர்களில் ஒருவர்தான் சிவகுமாரன், முதல் போராளி நிச்சயம் அவர்தான்.

நமது மதிப்பெண்கள் குறைக்கபட்டுவிட்டன, இனி எதிர்காலமில்லை என அரசியல்வாதிகள் முழக்கமிடும் கூட்டத்தில் எல்லாம் அவன் முன்னணியில் இருந்தான்,

சிங்களனோடு பேசும் தமிழர்கள் துரோகிகள் என்பதை குறித்துகொண்டான், அவர்கள் கைகாட்டிய திசையில் ஆல்பர்ட்துரையப்பா இருந்தார், அவர் அப்போது யாழ்பாண மேயர்.

அவரை குறிவைத்தார் சிவகுமாரன், அவரது வாகனத்திற்கு குண்டுவைத்தார், ஆனால் உயிர்தப்பினார் துரையப்பா,(பின்னாளில் அவர் பிரபாகரனால் கொல்லபட்டார்)

ஆனால் ஈழத்தில் தமீழத்திற்காய் முதலில் வெடித்தகுண்டு இதுதான்.

அதன்பின் காவல்துறையின் தீவிரசோதனையில் அகப்பட்டு அனுராதாபுரம் சிறையில் அடைக்கபட்டார், ஒரு பைசா குறையாமல் சிவகுமாரனின் தாய் தாலியை விற்று கொடுத்த பணத்தில் ஒரு தமிழ் வக்கீல், கவனிக்கவும் தாலிவிற்ற பணத்தில் தமிழ்வக்கீல் வாதாடி ஜாமீனில் வெளிவந்தார் சிவகுமாரன்.

ஆம் போராளிக்கும் பணம் வாங்கிகொண்டு வாதாடிய தமிழ் வழக்கறிஞர்கள் அங்கு இருந்திருகின்றார்கள்.

அப்பொழுதுதான் 1974 யாழ்பாண உலகதமிழ்மாநாடு நடைபெற்றது, சிங்கள அரசு ஒரு தமிழ்பேச்சாளருக்கு தடைவிதித்திருந்தது, சீமான் போன்ற ஒரு மாதிரியான பேச்சாளர் அவர், அவரை மேடையில் ஏற்ற போலிஸ் தடை விதித்திருந்தது..

ஆனால் அவர் மேடையேறினார், அங்கேயே கைதுசெய்ய நினைத்த போலீசுக்கும் மக்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டு கலவரமாக மாறியது.

பெரும் கலவரம் அங்கு துப்பாக்கிசூட்டில் முடிந்தது, 11 பேர் பலியாகி இருந்தார்கள். துரதிருஷ்டவசமாக‌ மின்கம்பி அறுந்து விழுந்து செத்தவர்களும் இதில் உண்டு, சிங்களம் வசமாக மாட்டி கொண்டது

துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டவர் அமைச்சர் சந்திரசேகர. மாநாட்டு பந்தலிலே அமைச்சரை கொல்வேன் என சூளுரைத்தவர் சிவகுமாரன்.

அமைச்சர் மீதான எல்லா கொலைமுயற்சியும் தோல்வியில் முடிந்தது, அமைச்சருக்குஆயுள் கெட்டி.

ஆனாலும் இளைஞர்களை திரட்டி போராடிகொண்டிருந்தார் சிவகுமாரன், சிங்கள அரசின் உளவாளியாக யாழ்பாணத்தில் இருந்த நடராஜா என்பவரை கொல்லும் திட்டத்தில் இருந்த சிவகுமாரனை, நடராஜனை உலவவிட்டு சுற்றிவளைத்தது போலீஸ்.

ஒருமுறை சிக்கி அனுபவித்த சித்திரவதைகளை எண்ணிய சிவகுமாரன், இம்முறை சயனைடு கடித்து உயிர்விட்டார்.

ஈழ இளைஞர்களிடையே ஒரு எழுச்சி ஏற்பட்டது, ஏன் ஈழவரலாற்றிலே முதல்முறையாக பெண்களும் சுடுகாடுவரை சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஈழத்தின் முதல் விடுதலை குண்டும் அவன் வீசியது, முதல் தற்கொலை போராளியும் அவனே.

அதன்பின் நடந்ததெல்லாம் உலகம் அறிந்தவை.

ஆனால் தமிழக தமிழர் தற்போது அறிபவை ஒன்றே ஒன்றுதான். ஈழம் என்றால் பிரபாகரன், போராட்டம் என்றால் பிரபாகரன்.

இடஒதுக்கீடு எனும் தரபடுத்ததுதல் சட்டமும், கல்வி இல்லை என்றால் வாழ்கை இல்லை எனும் பயமுறுத்தலும் அவனை போராளி ஆக்கிற்று.

இந்த சலசலப்பு இந்தியாவிலும் எதிரொலித்தது.
பெரும்பான்மை சமூகம் அடிமட்டத்திலும், சிறுபான்மை சமூகம் ஆளும் வர்க்கத்திலும் இருந்து வர்க்கபேதம் அதிகரிக்கும்பொழுது இட ஒதுக்கீடு தவிர்க்கமுடியாதது

இந்திய மாநிலங்களில் அது இல்லையா? என சிறீமாவோ கேட்ட கேள்விக்கு இந்தியா பதில்கூறமுடியவில்லை.
இடஒதுக்கீடு இல்லாமல் இந்தியாவில் எந்தமாநிலத்தில் ஆட்சிசெய்யமுடியும்? வாக்கு வங்கியின் ஆதாரமே அதுதானே. ஜனநாயக ஆட்சிதான் ஆனால் மெஜாரிட்டி வோட்டுவங்கி இருக்கும் இடம்தானே அரசியலுக்கு முக்கியம்.

ஆனால் திறமைக்குத்தான் முக்கியம் என சொல்லி, ? அதிக மதிப்பெண் எடுத்தவனுக்குத்தான் முன்னுரிமை என ஈழமாணவர் அமைப்புகள் கேட்டது எக்காலத்திலும் தவறாகாது.

மக்களாட்சியின் பெரும் முரண் இது

சிவகுமாரன் சாவினை தொடர்ந்து பெரும் கலவரம் வெடித்தது, மாணவர்கள்பால் ஈழமக்களிடையே அனுதாபம் தோன்றிற்று இனகலவரங்கள் வெடித்தன‌

ஒருநாடும் எட்டிபார்க்காத நிலையில்தான் இந்தியா கொஞ்சம் மனிதாபிமானத்தோடு களமிறங்கிற்று..

கொழும்பு கலவரத்தை காரணமாக கொண்டு களமிறங்கி ஆடிபார்த்தது, அது இந்திரா படுகொலையாலும், ஜெயவர்த்தனேவின் ராஜதந்திரத்தாலும், பிரேமதாசாவின் நரித்தனத்தினாலும் வெளியேறிற்று.

இன்று என்னவெல்லாமோ நடந்து முடிந்துவிட்டது.

ஆனால் ஈழபோராட்டத்தை முதலில் ஆயுதபோராட்டமாக துணிவுடன் தொடங்கியர் இந்த பொன்.சிவகுமாரன்.
அந்தோ பரிதாபம், ஈழத்திற்காக போராடுகின்றோம், களமாடுகின்றோம் என கத்தி கத்தி முஷ்டிமடக்கும் யாரும் அவனை நினைவுகூறவில்லை.

ஈகிகள் என ராஜிவ்கொலையாளிமுதல் சாஸ்திரிபவன் முன்னால் இறந்த முத்துக்குமார் வரை நினைவு கூறுபவர்கள், முதல் தற்கொலை போராளியான இவரை , குட்டிமணி குழுவை, உமா மகேஸ்வரனை, சபாரத்தினத்தை எல்லாம் அம்னீசியா நோயாளிகளாக மறந்துவிடுவதும் வேடிக்கை,

இப்படி எத்தனையோ பெரும் தியாகிகள், போராளிகள் அங்கு உண்டு, இவர்களை எல்லாம் மறைத்துவிட்டு நாங்கள் மட்டும் தான் என இறுதிவரை சொன்னவர்கள் புலிகள், இவர்களை போன்றவர்களுக்காக ஒரு தீக்குச்சி கூட புலிகள் கொளுத்தவில்லை

பிரபாகரனின் ஒருவிதமான சிறுபிள்ளைத்தனமான ஹீரோயிச கொள்கை அது, தான் மட்டும்தான், என் சொல் கேட்டவர்கள் மட்டும் போராளிகள், தமிழகத்தில் அது மட்டும்தான் தொடர்ந்தது

பிரபாகரனுக்காய் செத்தவர்கள்தான் மாவீரர்கள் போராளிகள் என்பது பிற்காலத்தில் உருவான பச்சை பொய், பொன் சிவகுமாரன் சாகும்பொழுது பிரகாரன் குட்டிமணி கும்பலில் துப்பாக்கி துடைக்கும் வேலையில்தான் இருந்தார்.

இவர்கள் எல்லாம் ஈழத்திற்காய் அல்லாமல் காதல்தோல்வியிலோ அல்லது கடன் தொல்லையிலா செத்தார்கள்?

இன்று ஜூன் 5 அந்த மாவீரனின் நினைவுநாள்.

இதை எல்லாம் நினைத்துபார்த்து அவனை நினைவுகூறகூட யாருமில்லை என்பதுதான் உண்மையான ஈழ சோகம்.

சுருக்கமாக சொன்னால் இன்றுதான் 1974ல் ஈழம் புதுபோராட்டத்துடன் களமிறங்க பெண்கள் கூட சிவகுமாரனின் சாம்பலில் சத்தியம் செய்துகொண்டிருந்தார்கள்,

ஆனால் பிரபாரனுக்காய் செத்தவர்கள்தான் “போராளிகள்”,பிரபாகரனை ஆதரித்தவர்கள்தான் “இன‌உணர்வாளார்கள்”, இப்படித்தான் ஈழவரலாறு இப்பொழுது தமிழகத்தில் திருத்தி எழுதபடுகின்றது.

உண்மையான ஈழஎழுச்சி இந்த நாளில்தான் தொடங்கியது . பின்பு பற்றி எரிந்தது, பல குழுக்கள் உருவாயின, பின்பு புலிகள் எல்லோரையும் அடக்கி தானும் அழிந்தனர், ஈழபோராட்டம் முற்றுபெற்றது

 

சங்கம் புதிதாக குஷ்பு மதம் என்றொரு மதத்தை தொடங்கிவிட்டது

Image may contain: 1 person, close-up

சாதி சான்றிதழை கிழித்துவிட்டால் சாதி ஒளிந்துவிடுமாம், அமீரும் ரஞ்சித்தும் கண்டுகொண்டார்கள்

இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தில் அவர்கள் குருநாதன் பாரதிராஜா என்பவரை காணவில்லை

முதலில் இவர்கள் குடியுரிமையினை கிழித்துவிட்டு இந்தியர் அல்ல என அடித்து விரட்ட வேண்டும்

ஏம்பா அமீர், ரஞ்சிதிடம் சென்று சாதி ஒழிப்போம் என்றால் வருவானா? சாதி இல்லாமல் அவனால் எப்படி வாழ முடியும்?

இவ்வளவு பேசும் அமீர் தான் இஸ்லாமியன் இல்லை என தாடி எடுத்துவிட்டு மதத்தை துறப்பானா என்றால் இல்லை

சாதி ஒழியவேண்டுமாம் மதம் மட்டும் வாழவேண்டுமாம், அவன் நியாயம் அப்படி

எல்லோரும் இதுபற்றி பேசுவதால் சங்கமும் சாதி மதம் ஒழிக்க ஒரு முடிவினை சொல்லபோகின்றது

சங்கம் புதிதாக குஷ்பு மதம் என்றொரு மதத்தை தொடங்கிவிட்டது

ஆம் சங்கத்து மதம் குஷ்பு மதம், சங்கத்து கொள்கை குஷ்பு இசம், சங்கத்துக்கு ஒரே ஜாதி குஷ்பு ஜாதி

சாதி மதங்களை ஒழிக்க வந்த அவதார தேவதை, தங்க கடவுள் குஷ்பு வாழ்க………….

 

காவேரி முதல் ஜல்லிக்கட்டு வரை

காவிரி விவகாரம், தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் : கர்நாடக முதல்-மந்திரி அறிவிப்பு

ஒரு மயிறு பேச்சுவார்த்தையும் வேண்டாம், உச்சநீதிமன்ற தீர்ப்புபடி காவேரியினை திறந்துவிடுங்கள் என பழனிச்சாமி சொல்ல வேண்டும்

வழக்கு முடிந்தாயிற்று, காவேரி வாரியம் அமைந்தாயிற்று, அரசிதழிலிலும் முடிவு வந்தாயிற்று

பின் என்ன பேச்சுவார்த்தை வேண்டிகிடக்கின்றது???

மிஸ்டர் பழனிச்சாமி, ஏய் குமாரசாமி உன்னிடம் பேச வேண்டிய அவசியமில்லை என தைரியமாக சொல்லுங்கள், எஜமான் மோடி எவ்வளவு சந்தோஷபடுவார் தெரியுமா? 


கன்னட முதல்வர் குமாரசாமியினை சந்தித்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க கோரினேன் : கமல ஹாசன்

யார் இவர்?

காவேரி விவசாய சங்க தலைவரா? இல்லை தஞ்சாவூர் பக்கம் கழனியில் உழுதுகொண்டிருப்பவரா?

நீர்பாசன அமைச்சரா? இல்லை அரசு அதிகாரியா? இல்லை காவேரி கண்காணிப்பு குழு அதிகாரியா?

இவர் கேட்பாராம், ஆனால் கேட்க வேண்டிய பழனிச்சாமி பற்றி மோடி பற்றி பேசமாட்டாராம்

மேக் அப் போடுவதில் கமலஹாசன் சினிமாவில் மட்டும் கில்லாடி என இனி நினைக்க வேண்டாம்

ரஜினியோ கமலஹாசனோ நேரடியாக மோடியினையோ பழனிசாமியினையோ சீண்டவே மாட்டார்கள் அல்லவா? அங்குதான் இருக்கின்றது அரசியல் சூட்சுமம்

(மிஸ்டர் பொய்யம் உண்மையினை சொல்லுங்கள், விஸ்வரூபம் படத்திற்கு சிக்கல் வரகூடாது என்றுதானே சொல்லிவிட்டு வந்தீர்?)

 
 


ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்காதீர்!: ஓ.பி.எஸ்.கன்னட முதல்வர் குமாரசாமியினை சந்தித்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க கோரினேன் : கமல ஹாசன்

யார் இவர்?

காவேரி விவசாய சங்க தலைவரா? இல்லை தஞ்சாவூர் பக்கம் கழனியில் உழுதுகொண்டிருப்பவரா?

நீர்பாசன அமைச்சரா? இல்லை அரசு அதிகாரியா? இல்லை காவேரி கண்காணிப்பு குழு அதிகாரியா?

இவர் கேட்பாராம், ஆனால் கேட்க வேண்டிய பழனிச்சாமி பற்றி மோடி பற்றி பேசமாட்டாராம்

மேக் அப் போடுவதில் கமலஹாசன் சி வேண்டுகோள்

அட, பன்னீருக்கும் வெட்கம், மானம், கூச்சம் எல்லாம் இருக்கின்றதே. இது எப்பொழுதிலிருந்து? திடீரென எப்படி வந்தது?

மெடிக்கல் மிராக்கிள் என்பது இதுதான்

(இப்படி பட்டம் கொடுக்க சொல்லி நோட்டினை ரகசியமாக நீட்டுவதே அவர்தான், நோட்டை நீட்டாவிட்டால் அப்படி ஏன் அழைக்க போகின்றார்கள்?,

ஆனால் மனிதர் அப்படி ஒரு பக்கம் பணத்தை வீசிகொண்டே இன்னொரு பக்கம் உருகிகொண்டிருக்கின்றார்)


ரஜினியின் பிம்பத்தை திட்டமிட்டுச் சிதைக்க முயல்கிறார் கமல்ஹாசன் – தமிழருவி மணியன்

இவர் மட்டும் என்ன செய்கின்றார்? கமலஹாசன் தூரமாய் இருந்து செய்வதை மணியன் அருகில் இருந்து செய்கின்றார்.


படிப்பு மட்டுமே வாழ்க்கை என்பது அல்ல‌

அந்த பிரதீபா நன்றாகத்தான் படித்திருக்கின்றாள், ஆனால் நீட் தேர்வு தோல்வி சோகத்தில் தற்கொலை செய்திருக்கின்றாள்

மிகபெரும் சோகம் எனினும் நிச்சயம் அப்பெண் அப்படி செய்திருக்க கூடாது

ஆமை தன் முட்டையின் வாய் பகுதியினை கடலை நோக்கியே திருப்பி வைத்திருக்குமாம், காரணம் முட்டையினை விட்டு வெளிவரும் குஞ்சுகள் நேரே கடலுக்கு செல்ல ஏற்பாடாம், இல்லை என்றால் அக்குஞ்சுகள் திசைமாறி செல்லுமாம்

அப்படி பத்தாம் வகுப்பிலிருந்தே டாக்டர் கனவு கண்ட அந்த மாணவி, பின் பல நெருக்கடிகளால் திசைமாற , தன் வாழ்வு வீணோ என நினைத்து இறந்திருக்கின்றாள்

படிப்பும் அது கொடுக்கும் வேலையுமே தங்கள் வாழ்வுகடன் என எண்ண வைக்கும் கொடும் சமூக நம்பிக்கையின் தாக்கம் இது

ஒவ்வொருவர் வாழ்விற்கும் ஒரு நோக்கம் இருக்கின்றது, அது ஏன் என நமக்கு தெரியாது, ஆண்டவனையன்றி யாருக்கும் தெரியாது

அது திரும்பும் இடத்தில் நாமும் திரும்ப வேண்டும், அது வளையும் இடத்தில் நாமும் வளைய வேண்டும்

அதை மீறிய செயல்கள்யாவும் பலனை தரா

ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு காரணமிருக்கும், வாழ்வு தரும் ஒவ்வொரு தோல்வியும் நம்மை திசைமாற்றி நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்லும்

இதனைத்தான் விதிப்படி வாழ்க்கை என்றார்கள், ஆற்று நீர் இலை போல வாழ்வு என்றார்கள்

படிப்பு மட்டுமே வாழ்க்கை என்பது அல்ல‌

ஒழுங்காக படித்திருந்தால் கருணாநிதி என்பவர் இன்று எங்கோ தமிழாசிரியராய் இருந்திருப்பார், காங்கிரஸில் பதவி கிடைத்திருந்தால் பெரியார் புரட்சியுமில்லை வெங்காயமுமில்லை

அந்த கோபாலமேனன் இலங்கையில் சாகாவிட்டால் அந்த சனியன் ஏன் நடிக்க வரபோகின்றது? தமிழகம் சீரழிய போகின்றது

அதுவும் 45 வயதுவரை வாய்ப்பே இல்லாமல் மனம் வெறுத்து,அதன் பின் வசூல் சக்கரவர்த்தியாகி அது பின்னாளில் முதல்வரே ஆனது

5ம் வகுப்பு தாண்டி இருந்தால் அவர் அலுவலக பியூணாக இருந்திருப்பார், படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருந்தாலும், படித்திருந்தால் அந்த மாபெரும் உயரத்தை எட்டியிருக்க முடியுமா? என்ற கேள்வியும் அவருள்ளே இருந்தது

சாத்தப்ப செட்டியார் சம்பாதித்தை அவர் பாதுகாத்திருந்தால் நான் ஏன் கவிஞராக போகின்றேன் என்பார் கண்ணதாசன்

தென்னாப்ரிக்காவில் காந்தியினை வெள்ளையன் மிதித்து எறியாவிட்டால் இந்தியாவின் எதிர்காலம் குழப்பமாகவே இருந்திருக்கும்

ஏராளமான உதாரணங்களை உலகில் சொல்லமுடியும்

அலெக்ஸாண்டர் முதல் ஹிட்லர் வரை தன் திட்டமெல்லாம் வெற்றிபெற்றது என சொல்லும் ஒருவனை காட்டுங்கள், ஒருவனும் அப்படி இல்லை

அட ஆனானபட்ட அவதாரங்களான கண்ணன், ராமன், இயேசு கிறிஸ்துவரை தாங்கள் நினைத்ததை முழுக்க சாதிக்கமுடியாமல் கிடைத்ததை ஏற்றுகொண்ட தருணங்கள் உண்டு

அவதாரங்களே தப்பமுடியாது எனும்பொழுது சாதாரண மனிதரான நாம் ஏங்கி தவிப்பது எப்படி சாத்தியம்?

இதனால்தான் நடப்பதெல்லாம் நன்மைக்காக என்பார்கள், ஒவ்வொரு தோல்வியிலும் நன்மை உண்டு என்பார்கள்

இப்படிபட்ட மனநிலையினை பதின்மவயது குழந்தைகளுக்கு சொல்லிகொடுப்பார் யாருமில்லை

புத்தங்களை புரட்டிய அளவு, அனுபவ மொழிகளையோ இல்லை தத்துவ நூல்களையோ அவள் புரட்டியிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது

எல்லோரும் எழுதியது போல அவளும் எழுதினாள், தோற்றுவிட்டாள். அதற்காக இங்கு எல்லாம் மோசடி என்பது ஏற்புடயதாகாது

அப்படியானால் தோற்ற 61% மாணவர் நிலை என்ன?

ஒன்றுமட்டும் புரிகின்றது

மன வளம் என்பது இப்பொழுது உள்ள குழந்தைகளிடம் வளர்க்கபடுவதில்லை, பந்தயத்திற்கு தயார் படுத்தும் குதிரை போல அவர்கள் வளர்க்கபடுகின்றனர்

குதிரைக்கு வெற்றி தெரியுமா? தோல்வி தெரியுமா? பந்தயம் முடிந்ததும் புல் மேய சென்றுவிடும்

ஆனால் மானிட மனம் அப்படியா? அதுவும் பிஞ்சுமனம் தோல்வியினை தாங்குமா?

சிறுவயதில் இருந்தே பெரும் எதிர்ப்பார்ப்புகளை அவர்கள் மேல் சுமத்திவிடுகின்றோம், அந்த சுமை அவர்களை மனதாலும் சில நேரம் உடலாலும் சாகடிக்கின்றன‌

தேர்வுகள், பாட திட்டங்களை விட முக்கியமானது மன வள பயிற்சி, மன ஆற்றுபடுத்தும் பயிற்சி

அதுவே இன்றுள்ள மாணவர்களுக்கு மிகுந்த தேவை

கல்வி என்பது வேலைக்கான விஷயம் என்பது மாற்றபட்டு உலகில் வாழ தேவையான அறிவு என்பதை உணரவைக்க வேண்டும்

பள்ளி தேர்வு என்பது வெறும் மைல் கல், சிறப்பு தேர்வுகள் என்பது வாயில் சீட்டு.

சீட்டு கிடைத்தால் நுழையலாம் இல்லை அடுத்த ஆயிரம் வாசல்களில் ஏதாவது ஒன்றில் நுழைந்தால் வாழ்ந்துவிட்டு போகலாம்

படிக்க சொல்லிகொடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும், உழைக்க கற்றுகொடுக்க வேண்டும், சிந்திக்க கற்றுகொடுக்க வேண்டும்

மேல்நாட்டு இளைய சமுதாயம் உழைப்பு, சிந்தனை இந்த இரண்டிலுமே மேல் எழும்பிகொண்டிருக்கின்றது

இவ்வாறான சாவுகள் இனி தடுக்கபட வேண்டும். அந்த அபலை பெண்ணுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

 
%d bloggers like this: