சண்டையினை நிறுத்துங்கள், ஆட்டத்தை தொடருங்கள்..

Image may contain: 2 people, people smiling, night, close-up and text

சமூக வலைதள சண்டை குறித்து கஸ்தூரி கருத்து, தான் டிரைலைரை கலாய்த்தால் அவர்களுக்கென்ன வந்தது? என சீற்றம்

அம்மணி அவர்கள் அப்படித்தான் உங்களிடம் சண்டைக்கு வருவார்கள்

ஆனால் நாங்களோ நீங்கள் யாரை கலாய்த்தாலும் வரமாட்டோம் ஆனால் உங்கள் அற்புத நடனத்தை காண மட்டும்தான் ஓடோடி வருவோம்

சண்டையினை நிறுத்துங்கள், ஆட்டத்தை தொடருங்கள்..

Start………….

 

காலாவுக்கு தடையில்லை : உச்ச நீதிமன்றம் உத்தரவு

Image may contain: 1 person

“காலா’வுக்கு தடையில்லை; திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது : உச்ச நீதிமன்றம் உத்தரவு

அது எம்.ஆர் ராதா சுடபட்ட நேரம், காமராஜர் ஆட்சியில் உங்கள் அபிமான ராமசந்திரன் சுடபட்டார் என திமுக அழிச்சாட்டியத்தை தொடங்கியது

தமிழகத்தில் அசாதாரண நிலை தென்பட்டது, போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கபட்டது

“ராமசந்திரன் தனிபட்ட விவகாரத்தில் சுடபட்டார்ண்ணே, நா என்ன செய்யட்டும்ணே?” என்ற காமராஜரின் குரலும் எடுபடவில்லை

திமுக இதுதான் வாய்ப்பு என ஒப்பாரி வைத்தது, ராமசந்திரனின் கண்மணிகளோ வன்முறையில் ஈடுபட்டன‌

ஒரே ஒரு குரல் மட்டும் துணிந்து பேசியது, அது பெரியாரின் குரல்

“ஒரு கூத்தாடி பயல இன்னொரு கூத்தாடி பய சுட்டதுக்கு இந்த மாகாணமே போர்களம் ஆகுதுண்ணா இந்த மக்களுக்கு சுத்தமா அறிவே இல்லீங்க‌

சர்க்கார் மக்கள கவனிக்குமா, இல்ல இந்த கூத்தாடிகள கவனிக்குமா? இதெல்லாம் அநியாயமுங்க. இந்த கூத்தாடி பயலுக நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் என்ன பண்ணிட்டானுகன்னு இவ்வளவு கலவரம்?

இன்னும் இவங்க நிறைய சிந்திக்கணுமுங்க, சிந்திக்க வைக்கணுமுங்க‌

கூலிக்கு கூத்தாடும் பயலுகளை எல்லாம் பெரிய ஆளா உருவாக்குறத இந்த திமுக பயலுக நிறுத்தணுமுங்க, மக்களும் உணரணுமுங்க , இல்லண்ணா நாடு கெட்டுபோமுங்க”

பெரியாரின் வாக்கு இப்பொழுதும் கேட்கின்றது, அதுவும் காலா படத்திற்கு உச்சநீதிமன்றம் எல்லாம் பேசவந்துவிட்டபின் அக்குரல் மிக சத்தமாகா கேட்கின்றது

 

ஏழுமலையானே நீர் எம்மை கைவிடவே இல்லையப்பா….

Image may contain: 1 person, close-up

“சட்டமன்றம் நடக்கின்றது, எதிர்கட்சி ஒரு நெருக்கடியும் கொடுக்கவில்லை. வகுப்பினை கட் அடித்து சென்றுவிட்டு திரும்பும் கல்லூரிமாணவன் போலவே இருக்கின்றது.

அதுதான் எவ்வளவு நிம்மதி

அட இப்பொழுதாவது தமிழகம் நம்மை கவனித்துவிடுமோ என அஞ்சினால் அது காலா படம், ரஜினி அது இது என நம்மை மறந்தே விட்டது

ஏழுமலையானே நீர் எம்மை கைவிடவே இல்லையப்பா..”

இப்படி என்னையும் என் ஆட்சியினையும் மறந்து மக்கள் எங்காவது சுற்றிகொண்டே இருக்கட்டும், வேறு யாரையாவது திட்டிகொண்டே இருக்கட்டும்

அது தொடர்ந்தால் அமைச்சர்கள் அத்தனை பேரையும் கூட்டிகொண்டு வந்து மொட்டை போடுகின்றேன் பெருமாளே…..

கோவிந்தா..கோவிந்தா……”

 
 

ஆப்பரேஷன் புளூ ஸ்டார்

Image may contain: outdoor and water

Image may contain: 2 people, beard, sunglasses, glasses and close-up

பெரும் சோக வரலாறு அவர்களுடையது, பாஞ்சாலி காலத்திலிருந்து அதன் வளமைக்காய் தாக்கபட்டார்கள். பின்னாளில் இந்துவும் வேண்டாம், இஸ்லாமும் வேண்டாம் என அவர்களாக ஒரு சீக்கிய மதம் தொடங்கி அவர்களாக அவர்களின் கலாச்சாரத்தை காத்து வாழ்ந்து வந்தார்கள்.

தனித்த சமூகமாக இந்நாட்டில் இருந்து வந்தார்கள், பாசுமதி அரிசி முதல் கோதுமை வரை அவர்களாலே இந்தியா முழுக்க சென்றுகொண்டிருந்தது

பிரிவினை நடந்தபொழுது பாதி பஞ்சாப் பாகிஸ்தானுக்கு போயிற்று, ஒரு சராசரி சீக்கியனால் தாங்கி இருக்கமுடியும்? இன்னும் பிரிவினை கலவரத்தில் 10 லட்சம் பஞ்சாபியர் செத்தனர். பிரிவினை வலி அவர்களுத்தான் தெரியும்.

திடீரென தமிழகத்தை இரு நாடுகளாக பிரித்து ஒரு பக்கம் செல்ல விசா தொந்தரவும், உளவாளி முத்திரை சித்திரவதை மரணமும் அன்றாடம் நடக்குமென்றால் சென்னை டூ மதுரை பயணம் எப்படி இருக்கும்? எந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்?, இது தான் பஞ்சாபியர் நிலை.

ஏராளமான குடும்பங்களும், உறவினர்களும் எல்லைகோட்டுக்கு இங்கும் அங்கும் ஏக்கமாய் பார்த்துகொண்டே இருக்கும் நிலை.

இந்நிலையில் பஞ்சாபியர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர், அதாவது பஞ்சாப் மொழி பேசுபவருக்கு தனி மாநிலம், சீக்கிய மதத்திற்கு ஒரு மத அந்தஸ்து என சில கோரிக்கைகள், ஆனால் டெல்லி காதுகொடுத்தே கேட்கவில்லை (நாம் கச்சதீவு, ராமேஸ்வரம் மீணவர், ராஜபக்ஸே,காவிரி,மீத்தேன் என கத்தினாலும் கேட்கின்றார்களா அப்படித்தான்) அவர்களும் அசட்டை செய்யபட்டார்கள்.

விளைவு அகாலிதளம் மகா மக்கள் ஆதரவு பெற்றது, இது இந்திராவை சிந்திக்கவைத்தது, அப்படியும் பஞ்சாப் மொழி மாநிலத்திற்கு பதிலாக பிஞ்சிபோன பஞ்சாபை மேலும் பிரித்த்து ஹரியான உருவாக்கபட்டு சீக்கியர்களின் கோபம் மேலும் அதிகமானது.

ஒரு கட்டத்தில் உலகநாடுகளையே அடக்கிய இந்திரா? சும்மா இருப்பாரா?, அதிசயமாக உள்நாட்டில் காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகள் எல்லாம் பல மாநிலங்களில் உடைய ஆரம்பித்தன,

தமிழ்நாட்டிலும் இப்படித்தான் உடைந்தது

அவ்வாறாக அகாலிதளத்திற்கு எதிராக அவரும் அவரின் வாரிசு சஞ்சயும் கண்டெடுத்த ஒருவர்தான் பிந்திரன்வாலே.

காங்கிரஸ் மேடையில் சஞ்சாயால் அமரவைக்கபட்ட பிந்திரன்வாலே பின்னாளில் “புனித பூமி” (காலிஸ்தான்) அடையாமல் ஓயமாட்டேன் எனும் தீவிரவாதியானான்

எப்படி கதர் பஞ்சாபி துப்பாக்கி எடுத்தார்?

அந்த காலம் அப்படி, அந்த பக்கம் ஆப்கனை விழுங்கி ரஷ்யா பாகிஸ்தானின் எல்லைக்கு வந்தது, அப்பக்கம் ஈரானிய புரட்சி வேறு அமெரிக்காவிற்கு சவால் விட்டது

இந்த பக்கம் இந்தியா, பாகிஸ்தான் அழுதால் நாட்டமைக்கு தாங்குமா? ஏராளமான பணமும் ஆயுதமும் பாகிஸ்தானுக்கு வந்தது, அவர்களால் பப்பாளி மரத்தில் ஏற்றபட்ட ஒரு அப்பாவி சீக்கியன் பிந்திரன்வாலே.

இது சுதந்திர‌ போராட்டம் என்றார் அவர், பல கொலைகள் அரங்கேறின. இந்துக்கள் குறிபார்த்து கொல்லபட்டனர்.(அப்பொழுதுதானே கலவரம் வரும்). ஊரை ரத்தகறை ஆக்கிவிட்டு பொற்கோயிலுக்குள் ஒளிந்தனர். பொற்கோயிலுகுள் சென்ற இந்திய ஜனாதிபதி ஜெயில்சிங் மயிரிழையில் உயிர்தப்பினார்

ஆம் சீக்கியரையே பொற்கோவிலில் கொல்லுமளவு வெறியேறிய கூட்டத்தோடு உள்ளே இருந்தான் பிந்த்ரன் வாலே

திடீரென வெளிவருவது படுகொலைகளை நிகழ்த்திவிட்டு ஓடிபோய் கோவிலில் ஒளிந்துகொள்வது என கடும் அழிச்சாட்டியம்

ஒருமுறை ரயிலை நிறுத்தி பல நூறுபேரை அக்கொடூர கும்பல் சுட்டுகொன்றபொழுது இனி பொறுப்பதற்கில்லை என களமிறங்கினார்

முதலில் கோவிலை சுற்றி ராணுவம் முற்றுகையிட்டு அக்கும்பலை சரணடைய சொன்னது, அவர்கள் கேட்கவில்லை

அன்றைய நாள் அக்கோவிலில் விழாக்காலம், கோவிலுக்கு அடிக்கல்நாட்டிய நாள் என கொண்டாடுவார்கள். அன்று துப்பாக்கி சூட்டை பிந்ரன்வாலே தொடங்கிவைத்தான், அன்று ராணுவம் தாக்காது என்பது அவன் கணிப்பு

ஆனால் திருப்பி அடிக்க தொடங்கியது இந்திய ராணுவம்

ஆப்பரேஷன் புளூ ஸ்டார் ஆரம்பமானது , அதற்கு தலமை தாங்கியவர் சுந்தர்ஜி எனும் தமிழர்

துணிந்த இந்திரா ராணுவ நடவடிக்கை தொடங்கினார், பொற்கோயில் ரத்த்தால் கழுவபட்டது, தீவிரவாதம் முடித்துவைக்கபட்டது.

இந்த திட்டத்திற்கு பிரிட்டனிடம் இருந்து தொழில்நுட்ப உதவிகளை இந்தியா பெற்றது எனும் செய்திகள் உண்டு, மார்கெரட் தாட்சர் அவ்வுதவியினை வழங்கினார் என்பார்கள்

அதனால்தான் 85 ராணுவ வீரர்கள் பலியோடு முடிந்தது, அதில் பெரும்பாலோனோர் தமிழர்கள்

பொற்கோயிலில் ராணுவம் புகுந்தது ஒவ்வொரு சீக்கியனுக்கும் வலிதான், ஏற்கனவே இந்தியா தங்களை சரியாக அங்கிகரிக்கவில்லை எனும் கோபம் இருந்தது அது கூடிற்று. ஆனாலும் ஒரு சிறிய மகிழ்ச்சி இருந்தது.

அதாவது பிந்திரன்வாலே கூட்டத்தை பெரும்பான்மை சீக்கிய‌ மக்கள் ஆதரிக்கவில்லை, அவன் தொலைந்ததில் நிம்மதியான சீக்கியர்கள் ஏராளம்.

இந்த சம்பவம் இந்நாட்டில் தீவிரவாதம் ஒருநாளும் வெல்லமுடியாது என காட்டிற்று, பஞ்சாபில் தீவிரவாதத்தை ஒழித்ததில் கேபிஎஸ் கில் எனும் சீக்கியருக்கும பெரும் பங்கு உண்டு

பஞ்சாபில் ஏற்பட்ட கிளர்ச்சியினை இந்தியா அடக்கினாலும் அதனை வைத்து சர்வதேச சக்திகள் ஆடின‌

சீக்கியர் மேல் இந்திரா சந்தேகம் கொண்டிருப்பதாகவும் பாகிஸ்தானோடு போர்தொடுத்து அந்த சாக்கில் மொத்த பஞ்சாபையும் அழித்து, பொற்கோவிலையும் அழிக்க போவதாக சில தகவல்கள் கசியவிடபட்டன‌

பாகிஸ்தானின் முரடன் ஜியா உல்கக்கும் எல்லையில் படையினை குவித்தான்

தங்கள் பொற்கோவில் அழியபோகின்றது என்ற வதந்தியில் ஒவ்வொரு சீக்கியனும் அஞ்சதொடங்கினான்

கோவில்கள் அப்படியாவனை ஜெருசலேம் கோவிலை இடிப்பேன் என இயேசு சொன்னதாக கிளம்பிய வதந்தியில்தான் அவரை கொன்றார்கள்

இந்திரா மேலும் அதே பழி தொடர்ந்தது. ஆனால் இந்திரா மவுனம் காத்தார், சீக்கியர் கேட்கும் வதந்தி உண்மை ஆக கூடாது என்பதற்காக தன் சீக்கிய‌ மெய்காப்பாளரையும் மாற்ற மறுத்தார்

அதுதான் வினையானது

இந்திரா ஆபத்தானவர், அவரால் பொற்கோவில் தரைமட்டமாகும் பல்லாயிரம் சீக்கியருக்கு பதிலாக இரு சீக்கியர் சாகட்டும் என்றுதான் இந்திரா படுகொலை நடந்தது

அதன் பின் நடந்த கலவரங்களில் எண்ணற்ற சீக்கியர் கொல்லபட்டது பெரும் சோகம்

பஞ்சாபில் மாநில கட்சியினை அடக்க போய் பிந்ரன்வாலேயினை சஞ்சய்காந்தி வளர்க்க அது இந்திரா உயிரோடும் ஆயிரகணக்கான சீக்கியர் சாவோடும் முடிந்தது

நச்சு பாம்புக்கு பால் வார்த்தால் அதுதான் நடக்கும், ஈழத்திலும் பிரபாகரன் எனும் பாம்புக்கு பால் வார்த்து அதுதான் நடந்தது

34 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் பஞ்சாப் பொற்கோவிலில் அச்சண்டை நடந்துகொண்டிருந்தது

இன்று அந்த நினைவு நாள், அமைதி சீக்கியர் அஞ்சலி செலுத்த சிற்சில குரல்கள் காலிஸ்தான் உருவாகும் என வருகின்றன‌

மக்கள் அதனை மறந்தாயிற்று, இப்பொழுது கூட அங்கு காங்கிரஸ் ஆட்சிதான். ஆனால் சில அயோக்கியன் எங்கும் உண்டல்லவா, அப்படி சில குரல்கள்

முன்பெல்லாம் பஞ்சாப் காஷ்மீரில் கலகம் என்றால் இங்கிருந்து தமிழ் உணர்வாளர்கள் ஆதரவு தெரிவித்து பெரும் அழிச்சாட்டியம் செய்வார்கள்

இப்பொழுது இங்கு அந்த கும்பல்கள் இருக்குமிடம் தெரியவில்லை, ஜெயா கலைஞர் ஆட்சியில் எல்லாம் குத்தாட்டம் போட்ட தமிழுணர்வு புரட்சியாளர்கள் பழனிச்சாமி ஆட்சியில் மகா அமைதி என்பதுதான் ஆச்சரியம்

நிச்சயம் ஒரு இரும்பு முதல்வர் எனும் பட்டத்தை நோக்கி பழனிச்சாமி செல்கின்றார், நம்பித்தான் ஆகவேண்டும்

இன்று பொற்கோவில் தாக்குதல் நினைவு நாள், அந்த பிந்ரன்வாலேயால் கொல்லபட்டோருக்கும் அவனால் கொல்லபட்ட ராணுவத்தாருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்

பொற்கோவில் சம்பவத்தால் இந்திரா மட்டும் இறக்கவில்லை, அத்தாக்குதலை நடத்திய தளபதிகள் பலர் பின்னாளில் ராணுவத்தின் கீழ்நிலையில் இருந்த சீக்கியர்களால் கொல்லபட்டனர். பல காரணங்களுக்காக அவை மறைக்கபட்டன‌

இந்திராவினை தொடர்ந்து கொல்லபட்ட நிறைய தளபதிகள் உண்டு, அவர்களின் தியாகம் மகத்தானது

இந்நாட்டில் எந்த விலை கொடுத்தேனும் தீவிரவாதத்தை வேறறுப்போம், அதற்கு விலை பிரதமரின் உயிர் என்றால் அதையும் கொடுக்க இத்தேசம் தயார் என்ற உணர்ச்சிபூர்வமான உண்மையினை இத்தேசம் உலகிற்கு சொன்ன நாள் இது

 

 

தவறின் மேல் தவறு செய்கின்றார் ரஜினி…..

Image may contain: 1 person, text

அந்த ஜெயலலிதா அப்பொழுது நடிகை, தான் தமிழச்சி என பத்திரிகைக்கு சொல்லிவிட்டு பெங்களூர் படபிடிப்பிற்கு சென்றார்

இதே வாட்டாள் நாகராஜ் “கன்னட துரோகியே மன்னிப்பு கேள்” என அவர் தங்கிய வீட்டை முற்றுகையிட்டு பயமுறுத்தினான்

படகுழுவும் இன்னபிற சக்திகளும் எவ்வளவோ கெஞ்சியும் “நான் தமிழச்சி, ஒருகாலமும் இவர்களிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என தமிழிலே பேசி தைரியமாக நின்றார் ஜெயா.

அதன் பின் சட்ட நடவடிக்கை மூலம் விரட்டபட்டான் நாகராஜ்

தன்னை மலையாளி என்றவர்களுக்கு பதிலடியாக கேரளா சென்று நான் தமிழன் தமிழிலில்தான் பேசுவேன் தமிழ்நாடு எனக்கு சோறுபோட்ட பூமி என தைரியமாக நின்றார் ராமசந்திரன்

இதோ காலாவிற்காக கன்னடத்தில் கன்னடரிடம் கெஞ்சுகின்றார் ரஜினி

மகா கேவலம், அவமானம்

ரஜினியின் மொத்த பிம்பமும் நொறுங்கி சரியும் நேரமிது

கேவலம் பட வசூலுக்காக‌ கன்னடனிடம் கெஞ்சிகொண்டிருக்கும் இவரை என்ன நினைப்பார்கள்?

தவறின் மேல் தவறு செய்கின்றார் ரஜினி…..


பத்திரிகையாளர் ஏதும் கேள்வி கேட்டால் “ஏய்ய்ய்ய் வேற கேள்வி இருக்கா?..” என சீறும் ரஜினி வாட்டாள் நாகராஜ் என்றால் தலையினை தொங்க போடும் மர்ம்மம் என்ன?

அவரிடம் “ஏய்ய்ய்ய்ய்” என சீறினால் என்ன மிஸ்டர் ரஜினி??

 


பாவம் அந்த‌ நீதிபதி ஆறுமுகசாமி

Image may contain: one or more people and people sitting

அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு பாதாம் அல்வா வழங்கப்பட்டதா மருத்துவர்களிடம் விசாரணை – செய்தி

ஏதோ ஒரு படத்தில் இனிப்பு நீர் தாக்கிய‌ கிழவனுக்கு ஜாங்கிரி கொடுத்து கொன்று கவுண்டமணியும் செந்திலும் சொத்துக்களை பறிக்க திட்டமிடுவார்கள்

அந்த காமெடி காட்சி அப்பல்லோவிலும் அரங்கேறிற்றோ என்னமோ?

பாவம் அந்த‌ நீதிபதி ஆறுமுகசாமி,

“உன்ன எவண்டா ஜாங்கிரி கொடுக்க சொன்னது?” என கொதிக்கும் கவுண்டமணியின் நிலை போல் ஆகிவிட்டது அவர் நிலை.

 

காவேரி வேறு , காலா வேறு

Image may contain: 2 people, sunglasses and close-up

கன்னட தேர்தலுக்காக காவேரியில் காலம் தாழ்த்தியவர்கள், இப்பொழுது காலா சினிமாவிற்காக காலம் தாழ்த்த முயற்சிக்கின்றார்கள்

அரசியலில் கொள்கையாளர்கள் இருக்க வேண்டுமே அன்றி, சினிமாக்காரர்கள் இருந்தால் என்னாகும் என்பதற்கு நடக்கும் சம்பவங்களே சாட்சி

காலா என்பது எவனோ ஒரு சினிமாக்காரன் முதலீடு செய்திருக்கும் படம், இது கன்னடத்தில் ஓடினால் என்ன? ஓடாவிட்டால் என்ன?

சினிமாவினை சினிமாவால் எதிர்க்க இங்கிருக்கும் மற்ற கன்னட நடிகர்களை வாட்டாள் நாகராஜ் வீட்டுக்கு அனுப்புங்கள்

மாறாக கமலஹாசன் சென்று குமாரசாமியிடம் கெஞ்சுவதும், தனுஷ் நீதிமன்றம் சென்று புலம்புவதும் தீர்வாகாது

காவேரி வேறு , காலா வேறு

இது வாழ்வு அது நாடகம்

நீதிமன்ற தீர்ப்புபடி காவேரி வரட்டும் என்பதுதான் மிகசரி

இப்பிரச்சினையில் அவசரமாக செய்ய வேண்டியது இந்த வேல்முருகனை உள்ளே வைத்தது போல, சைமனும் திருமுருகன் காந்தியும் பொத்திகொண்டிருக்க சில சமிக்கைகளை செய்தது போல இந்த வாட்டாள் நாகராஜ் என்பவனையும் பிடித்து உள்ளே போடவேண்டும்

ஏன் சனியனை சுட்டு கொன்றாலும் தப்பில்லை

வாட்டாளை பிடித்து காவேரியில் மூழ்கடித்து கொல்லாமல் சில சர்ச்சைகளை தவிர்க்க முடியாது

குறைந்த பட்சம் சமூக அமைதிகாக அவன் நாக்கை வேண்டுமானால் கூட வெட்டலாம்

 

 எனது கருத்துகள் தவறாக சித்திரிக்கப்படுகின்றன: ரஜினி

 

Image may contain: 1 person, smiling, close-upமிஸ்டர் ரஜினி

காலாவிற்காக கன்னடத்தில் கெஞ்சிய நீங்கள், காவேரிக்காக மட்டும் மவுன போராட்டம் ஏன் நடத்தினீர்

காவேரியினை திறந்து விடுங்கள் என்றாவது கன்னடத்தில் பேசினீரா?

ஏன் பேசவில்லை? இப்படிபட்ட சுயநலவாதியா நீங்கள்

உமது படம் ஓடுவதற்கு கன்னடனிடம் கெஞ்சுவதும், காவேரி விவகாரத்தில் மவுன விரதம் இருப்பதும் தமிழர் நெஞ்சில் எவ்வளவு வெறுப்பினை ஏற்படுத்தும் என்பதை நினைத்தீரா?

இதெல்லாம் மனசாட்சி உள்ள மனிதன் செய்யும் விஷயமா? துளி மனசாட்சி இருந்தாலும் இப்படி செய்வீரா?

ச்சீ..தூதூ… இப்படி பணத்திற்காக மட்டும் உடம்பை சுமக்கும் ஈனபிறவியா நீங்கள்??

நெஞ்சு அறிய இப்படி ஒரு பச்சோந்திதனம், இப்படி ஒரு அயோக்கியதனம் செய்துவிட்டு உமக்கு என்னய்யா ஆன்மீகம்?

தயவு செய்து இந்த ராகவேந்திரர், பாபாஜி போன்றோரை வணங்கி அவர்களை கொச்சைபடுத்த வேண்டாம்

உமக்கு கூவத்து கரை போதும், புனிதமான இமயமலை வேண்டவே வேண்டாம்

 
 

Image may contain: 1 personமிஸ்டர் ரஜினி கர்நாடகாவில் சமூக விரோதிகளே இல்லையா? வாட்டாள் நாகராஜ் என்ன தியாகியா?

அவனை சமூக விரோதி என சொல்ல ஏன் மனம் வரவில்லை? உங்கள் உடலில் ஓடுவது கன்னட ரத்தம் என்பதலா?

சொல்லுங்க..


காலா’ படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்: தனுஷ் நீதிமன்றத்தில் மனு

முதலில் இயக்குநர் ரஞ்சித்திற்கு பாதுகாப்புகொடுங்கள், படம் பார்த்த வெறுப்பில் வெளிவரும் ரஜினி ரசிகர்கள் கொலைவெறியில் அவரைத்தான் தேடி செல்வார்கள் 

 

 எனது கருத்துகள் தவறாக சித்திரிக்கப்படுகின்றன: ரஜினி

ஒழுங்காக பேசினாலே ஆயிரம் கோணங்களில் சித்தரிப்பார்கள், இவர் உளறி கொட்டினால் விடுவார்களா?

உளறுவதில் கூட‌ கோபம் வந்தால் எப்படி???

அதெல்லாம் இருக்கட்டும், உங்கள் கருத்து என்றால் என்ன சார்? எதை உருப்படியாக சொன்னீர்கள்??


2019-ல் பிரதமர் மோடியைத் தோற்கடிக்க உலகளாவிய சதி: கர்நாடகா பாஜக தலைவர்

ஆக உலகமே சேர்ந்து சிரியாவினை ஐ.எஸ் இயக்கத்திடம் இருந்து மீட்டது போல இந்தியாவினை பஜகவிடமிருந்து மீட்க போகின்றார்களாம்

நல்ல விஷயங்களை யார் செய்தால் என்ன?

தன்னை வீழ்த்த விரும்பும் உலக நாடுகளுக்குத்தான் மாதம் 4 முறை பிரதமர் பறக்கின்றார், ரொம்ப வெகுளியான பிரதமர் போலிருக்கின்றது


தூத்துக்குடி பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்

Image may contain: 1 person, sitting

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்

இந்த விஜய் என்பவருக்கு வந்திருக்கும் சமூக பொறுப்பினை கண்டால் ஆன்மீக அரசியல், மய்யம் வரிசையில் அடுத்து இவர்தான் எனும் சந்தேகம் வலுக்கின்றது

இவரின் அரசியல் என்னவாக இருக்கும்?

“அனாதை தமிழர் அரசியல்”, “ஆதரவற்றோர் தமிழர் அரசியல்” என்ற வகையில் வரும்போலிருக்கின்றது

அது இருக்கட்டும், இவர் எப்படி தூத்துகுடி வரை சென்றுவிட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை வெடித்தது என சொல்லாமல் வரலாம்?

தமிழிசையும், எச்.ராசாவும் இதனை குறித்து வைத்திருக்கின்றனர். அது அடுத்த விஜய் படம் வரும்பொழுது தெரியும்

 
 

இந்தாண்டு ராஷ்டிரபதி பவனில் இப்தார் விருந்து ரத்து

Image may contain: 1 person, sitting

இந்தாண்டு ராஷ்டிரபதி பவனில் இப்தார் விருந்து ரத்து

வழக்கமாக ஜனாதிபதி மாளிகையில் இப்தார் விருந்து நடத்துவது மரபு, அனால் ரத்து செய்யபடுவது இது முதல்முறை அல்ல‌

கலாம் ஜனாதிபதியாக இருந்தபொழுது அதனை ரத்து செய்தார், ஆனால் அதற்கான பணத்தை அனாதை இல்லங்களுக்கு அளிக்க ஏற்பாடு செய்தார்

பின்பு பிரதீபா பாட்டில், பிரணாப் முகர்ஜி அந்த விருந்தை மீண்டும் கொண்டுவந்தனர்

இப்பொழுது இருக்கும் ஜனாதிபதி கோவிந்த், இது மதசார்பற்ற நாட்டின் ஜனாதிபதி இல்லம் அதனால் இங்கு இப்தார் விருந்து, கிறிஸ்மஸ் எல்லாம் கொண்டாட முடியாது என சொல்லிவிட்டார்

இது மதசாற்பற்ற நாடு என அவர் சொல்லியிருப்பது வாழ்த்துகுரியது

அதே நேரம் ராம்லீலா, தீபாவளி , கோகுலாஷ்டமி என அவர் ஏதும் அந்த மாளிகையில் செய்தால் இருக்கின்றது கச்சேரி

கலாம் இப்தார் விருந்து நிகழ்ச்சி பணத்தை அனாதை இல்லங்களுக்கு அளித்தார், இந்த ராம்நாத் கோவிந்த் அந்த நிதியினை என்ன செய்யபோகின்றார்?

ராமர்கோவில் கட்டும் நிதிக்கு அதை அனுப்பாதவரை நல்லது.

 
%d bloggers like this: