ஆப்பரேஷன் புளூ ஸ்டார்

Image may contain: outdoor and water

Image may contain: 2 people, beard, sunglasses, glasses and close-up

பெரும் சோக வரலாறு அவர்களுடையது, பாஞ்சாலி காலத்திலிருந்து அதன் வளமைக்காய் தாக்கபட்டார்கள். பின்னாளில் இந்துவும் வேண்டாம், இஸ்லாமும் வேண்டாம் என அவர்களாக ஒரு சீக்கிய மதம் தொடங்கி அவர்களாக அவர்களின் கலாச்சாரத்தை காத்து வாழ்ந்து வந்தார்கள்.

தனித்த சமூகமாக இந்நாட்டில் இருந்து வந்தார்கள், பாசுமதி அரிசி முதல் கோதுமை வரை அவர்களாலே இந்தியா முழுக்க சென்றுகொண்டிருந்தது

பிரிவினை நடந்தபொழுது பாதி பஞ்சாப் பாகிஸ்தானுக்கு போயிற்று, ஒரு சராசரி சீக்கியனால் தாங்கி இருக்கமுடியும்? இன்னும் பிரிவினை கலவரத்தில் 10 லட்சம் பஞ்சாபியர் செத்தனர். பிரிவினை வலி அவர்களுத்தான் தெரியும்.

திடீரென தமிழகத்தை இரு நாடுகளாக பிரித்து ஒரு பக்கம் செல்ல விசா தொந்தரவும், உளவாளி முத்திரை சித்திரவதை மரணமும் அன்றாடம் நடக்குமென்றால் சென்னை டூ மதுரை பயணம் எப்படி இருக்கும்? எந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்?, இது தான் பஞ்சாபியர் நிலை.

ஏராளமான குடும்பங்களும், உறவினர்களும் எல்லைகோட்டுக்கு இங்கும் அங்கும் ஏக்கமாய் பார்த்துகொண்டே இருக்கும் நிலை.

இந்நிலையில் பஞ்சாபியர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர், அதாவது பஞ்சாப் மொழி பேசுபவருக்கு தனி மாநிலம், சீக்கிய மதத்திற்கு ஒரு மத அந்தஸ்து என சில கோரிக்கைகள், ஆனால் டெல்லி காதுகொடுத்தே கேட்கவில்லை (நாம் கச்சதீவு, ராமேஸ்வரம் மீணவர், ராஜபக்ஸே,காவிரி,மீத்தேன் என கத்தினாலும் கேட்கின்றார்களா அப்படித்தான்) அவர்களும் அசட்டை செய்யபட்டார்கள்.

விளைவு அகாலிதளம் மகா மக்கள் ஆதரவு பெற்றது, இது இந்திராவை சிந்திக்கவைத்தது, அப்படியும் பஞ்சாப் மொழி மாநிலத்திற்கு பதிலாக பிஞ்சிபோன பஞ்சாபை மேலும் பிரித்த்து ஹரியான உருவாக்கபட்டு சீக்கியர்களின் கோபம் மேலும் அதிகமானது.

ஒரு கட்டத்தில் உலகநாடுகளையே அடக்கிய இந்திரா? சும்மா இருப்பாரா?, அதிசயமாக உள்நாட்டில் காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகள் எல்லாம் பல மாநிலங்களில் உடைய ஆரம்பித்தன,

தமிழ்நாட்டிலும் இப்படித்தான் உடைந்தது

அவ்வாறாக அகாலிதளத்திற்கு எதிராக அவரும் அவரின் வாரிசு சஞ்சயும் கண்டெடுத்த ஒருவர்தான் பிந்திரன்வாலே.

காங்கிரஸ் மேடையில் சஞ்சாயால் அமரவைக்கபட்ட பிந்திரன்வாலே பின்னாளில் “புனித பூமி” (காலிஸ்தான்) அடையாமல் ஓயமாட்டேன் எனும் தீவிரவாதியானான்

எப்படி கதர் பஞ்சாபி துப்பாக்கி எடுத்தார்?

அந்த காலம் அப்படி, அந்த பக்கம் ஆப்கனை விழுங்கி ரஷ்யா பாகிஸ்தானின் எல்லைக்கு வந்தது, அப்பக்கம் ஈரானிய புரட்சி வேறு அமெரிக்காவிற்கு சவால் விட்டது

இந்த பக்கம் இந்தியா, பாகிஸ்தான் அழுதால் நாட்டமைக்கு தாங்குமா? ஏராளமான பணமும் ஆயுதமும் பாகிஸ்தானுக்கு வந்தது, அவர்களால் பப்பாளி மரத்தில் ஏற்றபட்ட ஒரு அப்பாவி சீக்கியன் பிந்திரன்வாலே.

இது சுதந்திர‌ போராட்டம் என்றார் அவர், பல கொலைகள் அரங்கேறின. இந்துக்கள் குறிபார்த்து கொல்லபட்டனர்.(அப்பொழுதுதானே கலவரம் வரும்). ஊரை ரத்தகறை ஆக்கிவிட்டு பொற்கோயிலுக்குள் ஒளிந்தனர். பொற்கோயிலுகுள் சென்ற இந்திய ஜனாதிபதி ஜெயில்சிங் மயிரிழையில் உயிர்தப்பினார்

ஆம் சீக்கியரையே பொற்கோவிலில் கொல்லுமளவு வெறியேறிய கூட்டத்தோடு உள்ளே இருந்தான் பிந்த்ரன் வாலே

திடீரென வெளிவருவது படுகொலைகளை நிகழ்த்திவிட்டு ஓடிபோய் கோவிலில் ஒளிந்துகொள்வது என கடும் அழிச்சாட்டியம்

ஒருமுறை ரயிலை நிறுத்தி பல நூறுபேரை அக்கொடூர கும்பல் சுட்டுகொன்றபொழுது இனி பொறுப்பதற்கில்லை என களமிறங்கினார்

முதலில் கோவிலை சுற்றி ராணுவம் முற்றுகையிட்டு அக்கும்பலை சரணடைய சொன்னது, அவர்கள் கேட்கவில்லை

அன்றைய நாள் அக்கோவிலில் விழாக்காலம், கோவிலுக்கு அடிக்கல்நாட்டிய நாள் என கொண்டாடுவார்கள். அன்று துப்பாக்கி சூட்டை பிந்ரன்வாலே தொடங்கிவைத்தான், அன்று ராணுவம் தாக்காது என்பது அவன் கணிப்பு

ஆனால் திருப்பி அடிக்க தொடங்கியது இந்திய ராணுவம்

ஆப்பரேஷன் புளூ ஸ்டார் ஆரம்பமானது , அதற்கு தலமை தாங்கியவர் சுந்தர்ஜி எனும் தமிழர்

துணிந்த இந்திரா ராணுவ நடவடிக்கை தொடங்கினார், பொற்கோயில் ரத்த்தால் கழுவபட்டது, தீவிரவாதம் முடித்துவைக்கபட்டது.

இந்த திட்டத்திற்கு பிரிட்டனிடம் இருந்து தொழில்நுட்ப உதவிகளை இந்தியா பெற்றது எனும் செய்திகள் உண்டு, மார்கெரட் தாட்சர் அவ்வுதவியினை வழங்கினார் என்பார்கள்

அதனால்தான் 85 ராணுவ வீரர்கள் பலியோடு முடிந்தது, அதில் பெரும்பாலோனோர் தமிழர்கள்

பொற்கோயிலில் ராணுவம் புகுந்தது ஒவ்வொரு சீக்கியனுக்கும் வலிதான், ஏற்கனவே இந்தியா தங்களை சரியாக அங்கிகரிக்கவில்லை எனும் கோபம் இருந்தது அது கூடிற்று. ஆனாலும் ஒரு சிறிய மகிழ்ச்சி இருந்தது.

அதாவது பிந்திரன்வாலே கூட்டத்தை பெரும்பான்மை சீக்கிய‌ மக்கள் ஆதரிக்கவில்லை, அவன் தொலைந்ததில் நிம்மதியான சீக்கியர்கள் ஏராளம்.

இந்த சம்பவம் இந்நாட்டில் தீவிரவாதம் ஒருநாளும் வெல்லமுடியாது என காட்டிற்று, பஞ்சாபில் தீவிரவாதத்தை ஒழித்ததில் கேபிஎஸ் கில் எனும் சீக்கியருக்கும பெரும் பங்கு உண்டு

பஞ்சாபில் ஏற்பட்ட கிளர்ச்சியினை இந்தியா அடக்கினாலும் அதனை வைத்து சர்வதேச சக்திகள் ஆடின‌

சீக்கியர் மேல் இந்திரா சந்தேகம் கொண்டிருப்பதாகவும் பாகிஸ்தானோடு போர்தொடுத்து அந்த சாக்கில் மொத்த பஞ்சாபையும் அழித்து, பொற்கோவிலையும் அழிக்க போவதாக சில தகவல்கள் கசியவிடபட்டன‌

பாகிஸ்தானின் முரடன் ஜியா உல்கக்கும் எல்லையில் படையினை குவித்தான்

தங்கள் பொற்கோவில் அழியபோகின்றது என்ற வதந்தியில் ஒவ்வொரு சீக்கியனும் அஞ்சதொடங்கினான்

கோவில்கள் அப்படியாவனை ஜெருசலேம் கோவிலை இடிப்பேன் என இயேசு சொன்னதாக கிளம்பிய வதந்தியில்தான் அவரை கொன்றார்கள்

இந்திரா மேலும் அதே பழி தொடர்ந்தது. ஆனால் இந்திரா மவுனம் காத்தார், சீக்கியர் கேட்கும் வதந்தி உண்மை ஆக கூடாது என்பதற்காக தன் சீக்கிய‌ மெய்காப்பாளரையும் மாற்ற மறுத்தார்

அதுதான் வினையானது

இந்திரா ஆபத்தானவர், அவரால் பொற்கோவில் தரைமட்டமாகும் பல்லாயிரம் சீக்கியருக்கு பதிலாக இரு சீக்கியர் சாகட்டும் என்றுதான் இந்திரா படுகொலை நடந்தது

அதன் பின் நடந்த கலவரங்களில் எண்ணற்ற சீக்கியர் கொல்லபட்டது பெரும் சோகம்

பஞ்சாபில் மாநில கட்சியினை அடக்க போய் பிந்ரன்வாலேயினை சஞ்சய்காந்தி வளர்க்க அது இந்திரா உயிரோடும் ஆயிரகணக்கான சீக்கியர் சாவோடும் முடிந்தது

நச்சு பாம்புக்கு பால் வார்த்தால் அதுதான் நடக்கும், ஈழத்திலும் பிரபாகரன் எனும் பாம்புக்கு பால் வார்த்து அதுதான் நடந்தது

34 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் பஞ்சாப் பொற்கோவிலில் அச்சண்டை நடந்துகொண்டிருந்தது

இன்று அந்த நினைவு நாள், அமைதி சீக்கியர் அஞ்சலி செலுத்த சிற்சில குரல்கள் காலிஸ்தான் உருவாகும் என வருகின்றன‌

மக்கள் அதனை மறந்தாயிற்று, இப்பொழுது கூட அங்கு காங்கிரஸ் ஆட்சிதான். ஆனால் சில அயோக்கியன் எங்கும் உண்டல்லவா, அப்படி சில குரல்கள்

முன்பெல்லாம் பஞ்சாப் காஷ்மீரில் கலகம் என்றால் இங்கிருந்து தமிழ் உணர்வாளர்கள் ஆதரவு தெரிவித்து பெரும் அழிச்சாட்டியம் செய்வார்கள்

இப்பொழுது இங்கு அந்த கும்பல்கள் இருக்குமிடம் தெரியவில்லை, ஜெயா கலைஞர் ஆட்சியில் எல்லாம் குத்தாட்டம் போட்ட தமிழுணர்வு புரட்சியாளர்கள் பழனிச்சாமி ஆட்சியில் மகா அமைதி என்பதுதான் ஆச்சரியம்

நிச்சயம் ஒரு இரும்பு முதல்வர் எனும் பட்டத்தை நோக்கி பழனிச்சாமி செல்கின்றார், நம்பித்தான் ஆகவேண்டும்

இன்று பொற்கோவில் தாக்குதல் நினைவு நாள், அந்த பிந்ரன்வாலேயால் கொல்லபட்டோருக்கும் அவனால் கொல்லபட்ட ராணுவத்தாருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்

பொற்கோவில் சம்பவத்தால் இந்திரா மட்டும் இறக்கவில்லை, அத்தாக்குதலை நடத்திய தளபதிகள் பலர் பின்னாளில் ராணுவத்தின் கீழ்நிலையில் இருந்த சீக்கியர்களால் கொல்லபட்டனர். பல காரணங்களுக்காக அவை மறைக்கபட்டன‌

இந்திராவினை தொடர்ந்து கொல்லபட்ட நிறைய தளபதிகள் உண்டு, அவர்களின் தியாகம் மகத்தானது

இந்நாட்டில் எந்த விலை கொடுத்தேனும் தீவிரவாதத்தை வேறறுப்போம், அதற்கு விலை பிரதமரின் உயிர் என்றால் அதையும் கொடுக்க இத்தேசம் தயார் என்ற உணர்ச்சிபூர்வமான உண்மையினை இத்தேசம் உலகிற்கு சொன்ன நாள் இது

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: