மறுபடியும் குழப்புகின்றது அமெரிக்கா

இந்த வடகொரிய அதிபரும் டிரம்பும் சந்திக்க 4 நாட்களே உள்ள நிலையில் மறுபடியும் குழப்புகின்றது அமெரிக்கா

அமெரிக்க உயர் அதிகாரி ஒரு இடத்தில் இதுபற்றி ” அட அந்த கிம் முழங்காலில் நின்று கெஞ்சி அழுத பின்புதான் நமது மாண்புமிகு அதிபர் டிரம் சம்மதித்தார்” என சொல்லிவிட விஷயம் பற்றி எரிகின்றது

மானகொரியன் கிம் பக்கம் இருந்து இன்னும் கொஞ்ச நேரத்தில் கடும் எதிர்ப்பு வரும், மறக்குடி வடகொரியா இதனை சும்மா விடாது

அடுத்து என்ன நடக்குமோ என மறுபடியும் உலகம் நோக்கி கொண்டிருக்கின்றது

ஈழத்தில் சாதிக் கொடுமை….

Image may contain: one or more people and outdoor

ஈழம், யாழ்பாணம் தமிழர் தொப்புள் கொடி இன்னபிற விஷயங்களுடன் கலைஞரும் திமுகவும் அவருக்கு துரோகம் இழைத்தது என சொல்லிகொண்டிருப்பவர்கள் இதனை கவனிக்கலாம்

யாழ்பகுதியில் கண்ணகை ஆலயம் உள்ளது, அங்கு நடந்திருக்கும் சம்பவம் அப்படி

கண்ணகை என்பது கண்ணம்பாள் சாமி வகையறா, கண்ணகிக்கு வேறு இடங்களில் அங்கு கோவில் உண்டு

இங்கு திருவிழா கொண்டாடி இருக்கின்றார்கள், சிக்கல் சாதி வடிவில் வந்திருக்கின்றது

( சாதிய வன்மங்களுக்கு தமிழகத்தை விட தீபற்றி எரியும் பகுதி அது, புலிகள் ஈழத்தையே எரித்ததால் வெளி தெரியவில்லை

ஒவ்வொரு போராளிகுழுவிற்கும் சாதி அடையாளம் இருந்தது, இதனால்தான் புலிகள் சக குழுக்களை அழிக்கும்பொழுது கொடூரமாக உற்சாகபடுத்தியது யாழ்பாண மேல்வர்க்கம்

அமைதி திரும்பிய பின் அதே சாதிகொடுமை பட்டவர்த்தனமாக தெரிகின்றது )

இப்பொழுது திருவிழாவில் உயர்சாதி மட்டும் தேரினை இழுக்க வேண்டுமாம் இல்லை என்றால் தீட்டாம் மரபு சரியுமாம்

ஆனால் உயர்சாதிகளிடம் தேரை இழுக்க ஆள்பலமும் இல்லை, உடல் பலமும் இல்லை

என்ன செய்திருக்கின்றார்கள்?

அக்காலத்தில் யானையும், குதிரையும் இழுத்த தேர்தானே என புல்டோசர் வைத்து இழுத்திருக்கின்றார்கள்

சுற்றிலும் ஆயிரகணக்கான தாழ்ந்த சாதி இளைஞர்கள் இருக்க அவர்கள் நடுவில் இவர்கள் எந்திரம் வைத்து தேரினை இழுத்திருக்கின்றார்கள்

எப்படிபட்ட கொடுமை இது, நினைக்கவே நெஞ்சு பதறுகின்றதல்லவா?

கவனியுங்கள், சக மனிதனை அழைத்து இழுக்க சொல்ல அவர்களுக்கு சாதி தடுக்கின்றது, அந்த அளவு சாதிவெறி கலந்த சமூகம் அது

இவர்களுக்கு பின் எங்கிருந்து ஒற்றுமை வரும், எங்கிருந்து தீர்வு கிடைக்கும்

அந்த தேரினை யானை, குதிரை என மிருகம் இழுக்கலமாம், புல்டோசர் எந்திரம் இழுக்கலமாம், ஆனால் குறைந்த சாதி மனிதன் தொட்டுவிட கூடாதாம்

ஈழப்போராட்டம் நாசமாக இப்படியான விஷயங்களும் காரணம்

இவ்வளவு நடந்தபின்னும் ஈழத்தில் ஒரு சத்தம் இருக்கும் என கருதுகின்றீர்கள்? அவர்களிடம் கேட்டால் இது இங்கு சாதாரணம் என்கின்றார்கள்

தமிழகத்தில் இப்படி நடந்தால் எப்படி ஆர்ப்பாட்டமாய் வெடித்திருக்கும்? அங்கு ஏன் வெடிக்கவில்லை

பெரியார் மண் என இதனை சொல்வது இதனால்தான்

இந்த ஈழ சாதிவெறி இருக்கும் வரை அங்கு ஒரு முடிவும் வராது, ஒரு வேளை ஈழதமிழருக்கு உரிமை கிடைத்தாலும் அது உயர்சாதி தமிழருக்கே கிடைக்கும், அடிசாதி தமிழருக்கு ஒன்றும் கிடைக்காது எனும் நிலை அப்பொழுதே இருந்தது

இதனால்தான் பெரியார் அந்த ஈழத்து காந்தி செல்வநாயகத்திடம் சொன்னார்

“ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படிங்க உதவ முடியும்”

அவர் சொன்ன அர்த்தம் இந்த சாதிவெறிதான், இந்த அடிமைதனத்தைத்தான் அன்றே அப்படி சொன்னார்

பெரியார் பிறந்த மண் என்பதால்தான் இன்னும் இங்கு ஜேசிபி வைத்து தேர் இழுக்கும் நிலை வரவில்லை

வரவும் வராது..

 

ரஜினி நம்பிக்கைகுரிய மனிதரே அல்ல

பார்க்கும் இடமெல்லாம் கலைஞரை வணங்குவார் ரஜினி, 1996ல் கலைஞருடன் அவர் காட்டிய நெருக்கம் உலகறிந்தது

பின் சட்டென மாறினார், என் வோட்டு இரட்டை இலைக்கு என்றார், வாக்களித்ததை கூட உலகெல்லாம் வீடியோவில் காட்டினார்

கலைஞர் அமைதியாக சொன்னார்., “வாக்களிப்பது இவர் சொந்த விஷயம், ஆனால் இப்படி பகிரங்கமாக காட்ட வேண்டுமா? இந்த மனிதர் நம்பிக்கைகுரியவர் அல்ல”

ஜெயா இதனால்தான் ரஜினியினை ஓரமாக‌ நிறுத்தியே வைத்திருந்தார், என்னதான் ரஜினி அம்மா ஜெயாஜி என்றாலும் ஜெயா அசரவில்லை

ரஜினி நம்பிக்கைகுரிய மனிதர் அல்ல என்பது அவரின் கணக்கு

எல்லோரும் அவரிடம் பழகிவிட்டு இந்த முடிவிற்கே வந்தனர், சோ ராமசாமிக்கு கூட சலிப்பாயிற்று

இன்று ஏதாவது விஜய்படத்தில் சிக்காதா? வேறு யார் படத்திலாவது சிக்காதா? வைரமுத்து சிக்கமாட்டானா என திணவெடுத்து அலையும் பாஜக கோஷ்டி படம் பார்த்து அப்செட்டில் இருக்கின்றது

இவ்வளவிற்கும் ரஜினிக்கு பல இடங்களில் எவ்வளவு வக்கலாத்து வாங்க முடியுமோ அவ்வளவு வாங்கியவர்கள் அவர்கள்

இப்பொழுது அவர்களும் அதே முடிவிற்கு வந்திருப்பர்

“ரஜினி நம்பிக்கைகுரிய மனிதரே அல்ல”

இது இனி இமயமலை பாபாவிற்கு புரியும் முன் அவரின் ரசிகர்களுக்கு புரிந்தால் நல்லது

 
 

அந்த பெயரை மொத்தமாக அழிக்க வந்திருக்கும் படம் காலா

Image may contain: sky and outdoor

மும்பை அன்று சிறு தீவுகள் தொகுப்பு, மராட்டிய அரசர்களிடமிருந்து போர்த்துகீசியர் கைக்கு சென்றது

பின்பு ஏதோ ஐரோப்பிய அரச திருமண‌ சம்பந்த விவகாரத்தில் அது பிரிட்டனுக்கு வந்தது, பிரிட்டன் அந்த மீன்பிடி தீவினை வணிக மையமாக மாற்றியது

பம்பாய், ஹாங்காங், பினாங் எல்லாம் வெள்ளையனின் அந்த வகையறா.

மராட்டிய பகுதியில் பருத்தி அபாரமாக விளைய மும்பையில் மில்கள் வந்தன, அதற்கு தொழிலாளர்கள் தேவைபட்டனர்

மில் முதலாளிகள் எல்லாம் பார்சி, குஜராத்திவம்சம் என்றே இருந்தது

1900களிலே தென்னகத்தில் விவசாயம் சாக ஆரம்பித்தது, அப்பொழுதே மக்கள் பல இடங்களுக்கு நகர்ந்தார்கள், அப்படி பலர் சென்ற இடம்தான் பம்பாய்

நிச்சயமாக சொல்லலாம் அந்த பம்பாய் தென்னகத்தில் ஊருக்கு பல வீடுகளுக்கு சோறு போட்டது, அவ்வளவு மக்கள் குடியேறினர்

தாராவி, செம்பூர் போன்ற பகுதிகள் அவர்கள் ஏரியா ஆனது

அரேபிய பகுதியில் பெட்ரோல் கிடைத்தபின் மும்பையின் வளர்ச்சி எகிறியது, பெரும் வணிகசந்தை ஆனது. அங்கிருக்கும் தமிழர்களும் ஓரளவு முன்னேறினர்

சிக்கல் எங்கு வந்தது என்றால் கடத்தல் பேர்வழிகள் வடிவில் வந்தது. ஹாஜி மஸ்தான் என்பவர் கடத்தலில் கொடிகட்டி பறந்தார், அது போக வியாபார உலகமும் இஸ்லாமிய பார்சி கைகளில் இருந்தது

பால்தாக்கரே முதன் முதலில் மண்ணின் மைந்தர் கோஷத்தை அங்கு எழுப்பினார், மராட்டிய எழுச்சி அவரால் தொடங்கபட்டது சந்தேகமில்லை

கடத்தல் உலகமும், வியாபார உலகமும் சில இஸ்லாமியர் கையில் இருந்ததால் அவரால் இஸ்லாமியருக்கு எதிரான சிவசேனையினை நடத்த சிக்கலே இல்லை, பெரும் சக்தியாக உருவாக்கினார்.

ஹாஜி மஸ்தானின் கீழ் பல அடியாட்கள் உருவாகினர், அவர்களில் ஒருவர்தான் வரதராஜ முதலியார்

வரதர் ரவுடியாக உருவாகவும் பல காரணங்கள் இருந்தன‌

பால்தாக்கரேயின் இஸ்லாமிய கோபம் வரதராஜர் மேலும் திரும்பிற்று, தமிழர் இஸ்லாமியரோடு கை கோர்த்து மராட்டிய பூமியில் ஆட்டம் போடுவதாக கணித்தார், தமிழர் மேல் பாய்ந்தார்

தமிழர்கள் 24 மணி நேரத்தில் பம்பாயினை காலி செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தார், தமிழருக்கு எதிராக மும்பையில் எழுந்த ஒரே மிரட்டல் அது

அதன் பின் வரதராஜ முதலியார் சீற இருவருக்கும் முட்டிகொண்டது. ஆனால் வரதராஜ முதலியாரின் சீற்றமே பால்தாக்கரேயினை யோசிக்க வைத்து நிதானிக்க வைத்தது

நிச்சயம் வரதராஜ முதலியார் ரவுடி, சந்தேகமில்லை ஆனால் பின்னாளில் தமிழர் ஆதரவு எடுத்து தான் அவர்கள் அனுதாபி தான் இல்லை என்றால் தமிழர் மும்பையில் வாழமுடியாது என காட்டிகொண்டார்

பிரபாகரனின் புலிகள் கூட வரதரின் பாதுகாப்பில் மும்பையில் தங்கிய காலம் உண்டு, அந்த அளவு அவரின் அதிகாரம் இருந்தது

வரதராஜரின் கீழ் பல சிறு ரவுடிகளும் இருந்தனர், ஒரு சில நல்ல தலைவர்களும் இருந்தனர்

பின் சவான் எனும் அதிகாரியின் அதிரடியில் வரதரஜர் மும்பையில் நுழையமுடியாதபடி சென்னைக்கு விரட்டபட்டார்

மும்பையின் காட்சிகளும் மாறின, தமிழருக்கு பெரும் ஆபத்து இல்லை, இன்றுவரை இல்லை

மும்பை கலவரம் குண்டுவெடிப்பிற்கு பின் தாவுத் மும்பையில் இல்லை, பால் தாக்கரேவும் இல்லை

இன்று தமிழரும் அடுத்த தலைமுறையில் தமிழே தெரியாமல் மும்பை குடிமக்களாகவே ஆகிவிட்டனர்

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் அங்கு தமிழர் குடியேறிகள் ஆனால் அம்மண் அவர்களை அரவணைத்து கொண்டது, பால் தாக்கரே காலத்தை தவிர ஒரு சிக்கலும் அங்கு இல்லை

சிவசேனையும் மும்பையினை உருவாக்க பாடுபட்ட இனம் என தமிழரை அரவணைத்தே செல்கின்றது

இந்த வரதராஜ முதலியார் கதையினை ஏற்கனவே மணிரத்னம் அட்டகாசமாக எடுத்திருந்தார், சில சினிமாதனம் உண்டே தவிர நிறைய நிஜம்

அந்த ஆம்புலன்ஸ் சமாச்சாரம், ஒரு பாட்டி தீயினை கொளுத்தி சாகுதல் எல்லாம் உண்மை சம்பவம்

நாயகன் படம் வரலாற்றில் நிற்கின்றது என்றால் வரதராஜரையும் அச்சூழலையும் மணிரத்னம் கவனித்து வளர்ந்தவர், அதனால் அவரால் அற்புதமாக அப்படத்தை செதுக்க முடிந்தது

ரஜினியின் பாஷா எல்லாம் கட்டுகதை, ஆனால் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்த படம் அது

அந்த பெயரை மொத்தமாக அழிக்க வந்திருக்கும் படம் காலா


பைத்தியம் பாரிசாலன் என்பவரை தாக்கிவிட்டார்களாம்

அவன் வீடியோவினை பார்த்தால் நமக்கே அடிக்கத்தான் தோன்றும், அவ்வளவு இம்சை. ஆனால் பாவம் மனநல சிகிச்சை தேவைபடுபவனை யார் அடிப்பர்?

மனநோயாளியினை தாக்கிய அந்த கும்பல் யாரென தெரியவிலை

இனியாவது பாரிசாலனை நல்ல மனநல மருத்துவமனையில் சம்பந்தபட்டவர்கள் சேர்க்கட்டும்

 


 

 
 
 

1986ல் காணாமல் போன ரஷ்ய விமானி சோர்ஜி மீண்டு திரும்பினார்

ஒவ்வொருவர் வாழ்வும் ஒவ்வொருவர் வகையில் விசித்திரமானது, அதில் இந்த ரஷ்யருக்கு ஏற்பட்டிருக்கும் நிலை மகா விசித்திரமானது

அது 1986ம் ஆண்டு சோவியத் ரஷ்யா ஆப்கனில் நிலை கொண்ட நேரம் அந்த 30 வயது சோர்ஜி பேட்டலிக் எனும் பைலட் விமானத்தை ஓட்டி சென்றார், விமானத்தையும் அவரையும் காணவில்லை

சோவியத் ஆப்கனிலிருந்து வாபஸ் ஆனபின்பு அவரை காணாமல் போனவர் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள், அவர் குடும்பத்தாரும் அவர் படத்திற்கு மாலை போட்டுவிட்டு ஊதிபத்தி கொளுத்திவிட்டனர்

கர்பமாக இருந்த மனைவியும் மகளை பெற்றுவிட்டாள்

இப்பொழுது ஆப்கன் காட்டுபகுதியில் இருந்து அந்த நபர் ஆப்கன் ரஷ்ய தூதரகம் சென்று தன்னை அடையாளபடுத்தி இருகின்றார்

அவர்களும் பலத்த சோதனைக்கு பின் அவரை ஒப்புகொண்டு ரஷ்யாவிற்கு அவர் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்

அங்கு சென்றவர் தன் மகளை கண்டிருக்கின்றார், மனைவியினை கட்டி அழுதிருக்கின்றார் ஆனால் சில விஷயம் அவரால் நம்பமுடியாமல் இருந்திருக்கின்றது

அன்றைய சோவியத் யூனியன் கெடுபிடி தளர்ந்து ஒரு மாதிரி ஆகிவிட்ட ரஷ்யாவினை அவரால் அங்கீகரிக்க்க முடியவில்லை, ஆப்கன் காட்டுபகுதியில் வாழ்ந்த அவரால் 60 வயதில் ரஷ்ய நவீன வாழ்விற்கு திரும்ப முடியவில்லை

“வெயில்” படத்து பசுபதி போல ஒருமாதிரி அலைந்த மனிதர் மறுபடி ஆப்கனுக்கே திரும்ப போகின்றாராம்

ஆப்கன் பற்றிய ஆயிரம் பகீர் கதைகள் வந்தாலும், இவருக்கு ஆப்கன் மிக பிடித்திருக்கின்றதாம், அம்மக்கள் அப்படி அன்பான உபசரிப்பாளர்களாம், அதனால் கிளம்புகின்றாராம்

இந்த மனிதரை மகா ஆச்சரியமாக பார்க்கின்றது உலகம்

(இல்லை இவர் உளவாளி, உளவாளிகள் இப்படித்தான் மறைந்திருப்பார்கள் இது எல்லாம் உளவுதுறை நாடகம் என்றெல்லாம் சில குரல்கள் வருகின்றன

ஆனால் நீண்டகாலம் ஒரு இடத்தில் வாழ்ந்துவிட்டால் அதுவும் 50 வயதை கடந்துவிட்டால் ஒரு மனசிக்கல் வரும் என்கின்றார்கள், அது வாழ்ந்த இடத்திலே இருக்க வைக்கும் என்கின்றார்கள்

இனி அவர் ஆப்கன் திரும்பலாம், ஆனால் இனி அவரை ஆயிரம் கண்கள் கண்காணிக்கும், பழைய நிம்மதி இனி கொஞ்சநாளைக்கு இருக்காது)

ஒவ்வொருவர் விதியும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் வினோத உலகமிது, ஆனாலும் இவர் மிக வினோதம்

 
 

மிஸ்டர் சிவகுமார்??, அந்த கம்பெனி எங்கே இருக்கின்றது? சீக்கிரம் சொல்லுங்கள்

Image may contain: 1 person, smiling, close-up

நானும் ஐடி கம்பெனியில்தான் வேலை செய்கின்றேன், ஒரு மண்ணாங்கட்டி நிம்மதியும் இல்லை.

கைவலிக்க லேப்டாப்பினை தட்டினால் சைனா டீயும், குச்சி வைத்த நூடுல்ஸ் 2 கோப்பையும் வருகின்றது அவ்வளவுதான்

பக்கத்து சீட் சீனப்பெண்ணிடம் ஹாய் என்றால் கூட, “இதை சொல்லத்தான் இந்தியாவில் இருந்து வந்தாயா? ஒழுங்காக வேலை செய்..” என பார்வையிலே மிரட்டுகின்றாள்

இது போக அப்ரைசல் இம்சை வேறு..

சிவகுமாரின் பேச்சை கேட்டவுடன் ஐடி கம்பெனியிலும் சொர்க்கம் உண்டு என்பது புரிந்து துள்ளி குதித்தாயிற்று,

2 டண் காண்டம் அள்ளினார்களா?

இது போதாதா? இது அல்லவா வேலை, இது அல்லவா கம்பெனி

இனி சிவகுமாரிடம் கேட்டுவிட்டு அவர் சொன்ன கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட வேண்டியதுதான், படு சந்தோஷமான வேலை சூழல் கிடைக்கும் போலிருக்கின்றது

மிஸ்டர் சிவகுமார்??, அந்த கம்பெனி எங்கே இருக்கின்றது? சம்பளமே இல்லாமல் வேலை செய்ய தயார்…

சீக்கிரம் சொல்லுங்கள் சிவகுமார்,

கொடுக்கும் அடியினை எல்லாம் வாங்கிகொண்டு மதம் பிடித்தவுடன் அந்த அடியினை நினைவுபடுத்தி பாகனை தூக்கி எறியும் யானைபோல் எறிந்துவிட்டு அந்த சொர்க்கலோகத்திற்கு ஓடி வரவேண்டும்


Image may contain: 1 person, close-upநிதியானந்தா சாமி மடத்தில் அள்ளாத காண்டம் குப்பையினை..

சிவகுமாரின் மகன்கள் நடிக்கும், அவர் உறவினர் ஞானவேல்ராஜா என்பவர் உலாவும் சினிமா உலகில் அள்ளாத காண்டம் குப்பையினை..

ஏன் நிர்மலா தேவி நடமாடிய கல்லூரி அலுவலகம் பக்கம் கூட அள்ளாத காண்டம் குப்பையினை…

ஏராளமான பெண்கள் பணிபுரியும் இவரின் கார்மென்ட் ஆலையில் அள்ளாத காண்டம் குப்பையினை……

ஐடி கம்பெனிகளில் மட்டும் அள்ளினார்களாம், அதை அருகில் இருந்து பார்த்தாராம் சிவகுமார்

வயதனால் புத்தி தள்ளாடும் என்பது இதுதான்…

இப்படி எல்லாம் இந்த கிழடு உளறி கொட்டினால் ஐடி கம்பெனி பெண்களின் வாழ்வு என்னாகும்? எதிர்காலம் என்னாகும்? மதிப்பும் மரியாதையும் என்னாகும்?

கொஞ்சமாவது இந்த நபருக்கு சமூக பொறுப்பு இருக்கின்றதா?

எவ்வளவு பேர் பெயரும் அவர்கள் குடும்பமும் இந்த நபரின் பொறுப்பற்ற உளரலால் பாதிக்கபடும்,

எவ்வளவு குடும்பங்களில் சந்தேக புயல் வீசும்??

சினிமாவில் இவர் பார்த்தது போலவே ஐடி பெண்களும் இருப்பார்களா? இவரின் கேவலமான பார்வை இதுதானா?

விரைவில் ஐடி கம்பெனிகள் சார்பாக இந்த கூத்தாடி படத்திற்கு காண்டம் மாலை அணிவித்து போராட்டம் நடத்தபடும் என எதிர்பார்க்கபடுகின்றது

திரையுலக மார்கண்டேயனான‌ சிவகுமார், இன்றுமுதல் “மார்”காண்டம்” நேயன் என வெறுப்போடு அழைக்கபடுவார்.

(வயசானாலும் டை அடித்து இளைஞன் போல சுற்றிவரும் பொழுதே இந்த மனிதரின் அற்ப புத்திகண்டு தமிழகம் சுதாரித்திருக்க வேண்டும்..)


 

பாரீசில் காலா படம் பார்த்த தலைவி

Image may contain: 1 person, close-up

பாரீசில் காலா படம் பார்க்க தலைவி இப்படித்தான் கருப்பு மேக் அப்பில் சென்றிருக்கின்றார்

தலைவியும் ரஜினியின் ரசிகை என்பதை பல இடங்களில் சொல்லி இருக்கின்றார், ரஜினியினை அவர் கண்டித்த இடங்களே இல்லை

எனவே ரஜினி ரசிகர்களும் தலைவிக்கு ஆதரவளிக்க சங்கம் கேட்டு கொள்கின்றது

  
 

ராபர்ட் கென்னடியின் நினைவு நாள் இன்று …

Image may contain: 1 person, suit

இந்திரா குடும்பம் போலவே துரதிருஷ்டம் பிடித்த குடும்பம் அமெரிக்காவின் கென்னடி குடும்பம்

நமக்கெல்லாம் ஜாண் கென்னடி தெரியும், அமெரிக்காவின் மிக பிரசித்திபெற்ற அதிபர், அவரின் மகா துணிச்சலும் நாட்டுபற்றும் இன்றுவரை அமெரிக்கர்களை கண்ணீர் விட வைக்கும் விஷயங்கள்

கென்னடிக்கு பல சகோதரர்கள் உண்டு, அவர்களில் ஒருவர் ராபர்ட் கென்னடி

ஜாண் கென்னடி போலவே ராபர்ட் கென்னடியும் அரசியலில் வேகமாக முன்னேறிகொண்டிருந்தார். மற்ற அமெரிக்க அதிபர்களிடம் இல்லா ஒரு விசித்திர தன்மை அவரிடம் இருந்தது

ஆம், கருப்பர்களை அவர் நேசித்தார். மார்ட்டின் லுத்தர் கிங்கின் போராட்டத்தை ஆதரித்தார், அந்த புகழ்பெற்ற சிவில் சட்டம் முழு வடிவம் பெற ஒத்துழைத்தது அந்த ராபர்ட் கென்னடியே

ஆனால் வரலாறு மார்ட்டின் லுத்தரை குறிப்பிட்ட அளவு ராபர்ட் கென்னடியினை குறிப்பிடவில்லை

திமுகவின் சகல அடையாளமும் கலைஞர் என மாறிப்போனதில் எப்படி மதிவாணன், சிற்றரசு, சம்பத் என பல ஜாம்பவான்கள் மறைக்கபட்டார்களோ அப்படி அங்கு சகலமும் மார்ட்டின் லுத்தர் கிங் என்றே ஆனது

உண்மையில் அந்த கருப்புமக்களின் போராட்டத்திற்கு துணை நின்றவர் அந்த ராபர்ட் கென்னடி

வியட்நாம் போரினை எதிர்த்தார், கருப்பர்கள் உரிமையினை அங்கீகரித்தார் என அவரை அமெரிக்க தேசம் ஒருமாதிரி பார்த்தது

அடுத்த அமெரிக்க அதிபர் எனும் வகையில் ஆதரவு பெருகிற்று

அப்பொழுதுதான் இஸ்ரேல் தன் புகழ்பெற்ற 6 நாள் போரினை வெற்றிகரமாக நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்தது

அமெரிக்கர்களின் மனப்பான்மையில் ராபர்ட் கென்னடி அதனை வரவேற்றார், மோஷே தயானை வெகுவாக பாராட்டினார்

இந்த நிகழ்வு பாலஸ்தீனியருக்கு வெறுப்பேற்றியது, வருங்கால அமெரிக்க அதிபர் இப்படிபட்டவரா? என்ற கோபத்தில் பாலஸ்தீன இளைஞன் ஒருவன் அவரை சுட்டு கொன்றான்

(சும்மாவே பாலஸ்தீனத்தினை அடிக்க துணை நிற்கும் அமெரிக்கா அதன் பின் வரிந்து கட்டி அடிக்க ஆரம்பித்து அது இன்றுவரை தொடர்கின்றது)

கென்னடிக்கும், மார்ட்டின் லுத்தருக்கும் என்ன நேர்ந்ததோ அதுவே ராபர்ட் கென்னடிக்கும் நேர்ந்தது.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனினும் அமெரிக்கா வலுவான தலமையினை பெற்றுவிட கூடாது என்ற அந்நிய சக்திகளின் திட்டம் என கடைசியில் முடிவு செய்யபட்டது

கென்னடி போலவே மகா துணிச்சலான அந்த ராபர்ட் கென்னடி பதவிக்கு வருமுன்பே கொல்லபட்டார்

இன்னும் கென்னடியின் வம்சத்தில் பலர் திடீர் விபத்துக்களில் கொல்லபட்டனர், வரலாற்றின் மிகபெரும் மர்மம் இது

கென்னடி குடும்பம் மறுபடி பதவிக்கு வராமல் ஏதோ ஒரு சக்தி பார்த்துகொண்டது

இன்று அந்த ராபர்ட் கென்னடியின் 50ம் நினைவு நாள்

அமெரிக்க வரலாற்றின் மாபெரும் இளந்தலைவர் அவர், பல்வேறு காரணங்களுக்காக கொல்லபட்டவர், ஆனால் நிச்சயம் நாட்டுக்காக உயிர்விட்டவர்

மார்ட்டின் லுத்தரை போலவே அவரும் ஒரு புரட்சியாளர், அந்த புரட்சி வெற்றிபெற முழுபாடு பட்டவர்

அமெரிக்க கென்னடி குடும்பத்திற்கும் இந்தியாவின் இந்திரா குடும்பத்திற்கும் தியாக தொடர்புகள் ஒரே மாதிரி உண்டு

ராஜிவ் கென்னடி. சஞ்சய் ராபர்ட் கென்னடி என சோகமான பொருத்தங்கள் ஏராளம்

இனி அப்படி நடக்காமல் இருக்க பிரார்திப்போம்

அந்த அமெரிக்க தேசம் அந்த ராபர்ட் கென்னடியின் நினைவில் இன்று மூழ்கி இருக்கின்றது

லிங்கனுக்கு பின் அமெரிக்க கருப்பர்களை நேசித்த மாமனிதன் அவர் என சொல்லி கண்களை துடைத்துகொள்கின்றார்கள்

அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

(இப்பொழுது கருப்பர்களுக்காக பாடுபட்ட ராபர்ட் கென்னடி நினைவுநாளில் கறுப்பு காலா வந்திருக்கின்றது என சில அலப்பறைகள் கண்களை துடைத்துகொள்ளும், அதனை எல்லாம் நாம் கடந்து செல்ல வேண்டும்)

 

யூதர்கள் ஜெருசலேமினை திரும்ப பெற்ற நாள், இதே ஜூன் 7

Image may contain: one or more people and people sittingஅது 1967ம் ஆண்டு, இன்றைய ஈரான் போல அன்றைய எகிப்து மிரட்டிகொண்டிருந்தது. அந்த நாட்டின் அதிபர் நாசர் அரபுகளின் தலைவராய் இருந்தார்

அவருக்கு சோவியத்தின் ஆயுதங்கள் குவிந்து கிடந்தன, விமானம் மட்டும் 800க்கும் மேல் இருந்தது, அவர் ராணுவ வீரன் என்பதால் வியூகங்களை கவனமாக வகுத்தார்

இஸ்ரேலை எல்லா நாடுகளும் சுற்றி இருந்து தாக்கி கைபற்ற வேண்டும் என்ற ஒப்பந்தம் செய்யபட்டது, எகிப்து, ஜோர்டார், சிரியா, ஜோர்டான், லெபனான், சதாம் இல்லா ஈராக் என பல நாடுகள் ஒன்று சேர்ந்தன‌

பிண்ணணி ஆதரவாக அல்ஜீரியா, பாகிஸ்தான், மொராக்கோ, குவைத், சவுதி, யுஏஇ, சூடான், மொராக்கோ, அராபத்தின் இயக்கம் என பல நாடுகள் இருந்தன‌

நிச்சயம் இஸ்ரேல் படை சிறியது, எதிரிகள் படை பெரியது

யுத்தத்தை எதிர்பார்த்த இஸ்ரேல் முன்பே உளவு தகவல்களை திரட்டி இருந்தது, குறிப்பாக எகிப்தினை மிக நன்றாக கணித்திருந்தார்கள். அங்கு மொசாத் உளவாளிகள் இருந்தார்கள்

எங்கோ பேசிவிட்ட நாசர், இன்னும் 2 மணிநேரத்தில் யுத்தத்தை தொடங்க நான் உத்தரவிடுவேன் என சொல்லி இருந்தார்

விஷயம் இஸ்ரேலுக்கு கடத்தபட்டது, அவர்களுக்கு இருந்தது 2 மணிநேர அவகாசமே, அதற்கும் எகிப்தின் பலம் வாய்ந்த விமானபடையினை முறியடிக்க வேண்டும்

நாசர் செய்த தவறு விமானங்களை வெறும் மைதானத்தில் நிறுத்திவைத்தது, அதை வாய்ப்பாக பயன்படுத்திய இஸ்ரேல் நொறுக்கி தள்ளியது கிட்டதட்ட 500 விமானங்கள் அழிக்கபட்டன‌

அதாவது எகிப்தின் முதுகெலும்பு முறிந்தது, அவை அன்றைய நவீன மிக் விமானங்கள்,களத்தில் இறங்கி இருந்தால் இஸ்ரேல் காலி

2 மணிநேரம் கழித்து நாசர் உத்தரவிட்டபொழுது பறக்க ஒருசில விமானங்களே இருந்தன, மனம் வெறுத்தார் நாசர்

ஆனால் யுத்தத்தை தொடங்கினார்

எகிப்திய விமானபடை வரும் என நம்பிய மற்ற நாடுகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது

மோஷே தயானின் அட்டகாசமான தாக்குதல் திட்டம் மின்னல் வேகத்தில் நடந்தது

பெரும் படையினை எதிர்பார்த்த எதிராளிகளுக்கு தயானின் குழுவாய் பிரிந்து தாக்கும் நுட்பம் பிடிபடவில்லை, இஸ்ரேல் எல்லா திசையிலும் முன்னேறியது

வெறும் 6 நாட்களில் சண்டையினை எதிரிகள் நிறுத்தினார்கள், காரணம் விஷயம் எல்லை மீறி இருந்தது

எல்லா நாடும் தங்கள் நிலங்களை இழந்துகொண்டிருந்து, விட்டால் தலைநகரையே இஸ்ரேல் பிடித்துவிடும் சூழல் உருவானது

எகிப்தின் சினாய், சிரியாவின் கோலன் , ஜோர்டானின் ஜெருசலேம் என முக்கிய பகுதிகளை எல்லாம் கைபற்றியது இஸ்ரேல்

உலகின் மகா ஆச்சரியமான யுத்தங்களில் இன்றுவரை முதலிடத்தில் இருப்பது இஸ்ரேல் நடந்திய இந்த 6 நாள் யுத்தமே

அவ்வளவு துல்லியம், அவ்வளவு வேகம், அவ்வளவு ஒருங்கிணைப்பு

மோசே தயான் என்பவர் எப்படிபட்ட ஜெகஜால கில்லாடி என்பதை உலகம் உணர்ந்தது

இந்த சண்டைக்கு பின்பே மத்திய கிழக்கில் இருந்து சோவியத் வெளியேறிற்று, என்ன செய்தாலும் அராபியர்களால் இஸ்ரேலை வெல்லமுடியாது என அதற்கு விளங்கிற்று

இஸ்ரேலும் யுத்ததிற்கு பின் ராஜதந்திர நகர்வுகளை செய்தது

இதில் சினாய் திருப்பி கொடுக்கபட்டது அத்தோடு எகிப்துடன் வலுகட்டாயமாக அமைதி ஒப்பந்தமும் ஏற்பாடாயிற்று

ஆனால் கோலனும், ஜெருசலேலும் அப்படியே தக்க வைக்கபட்டன‌

இயேசு கொல்லபட்டபின் 70 ஆண்டுகள் கழித்து ஜெருசலேமினை இழந்த யூதர்கள் கிட்டதட்ட 2000 ஆண்டுகள் கழித்து ஜெருசலேமினை பெற்றார்கள்

அது இதே நாள், இதே ஜூன் 7

Image may contain: one or more people, crowd and outdoorஅது அவர்களிடம் கிடைத்து இன்றோடு 50 ஆண்டு ஆகின்றது, கொண்டாட்டம் களை கட்டுகின்றது

ஜெஹோவா ஆபிரகாமின் சந்ததிகளுக்கு இஸ்ரேலை கொடுத்தார் என ஆரவாரம் விண்ணை பிளக்கின்றது

ஜெருசலேமில் அந்த கொண்டாட்டத்தை கொண்டாடும் பொழுது பாலஸ்தீனியர் தடுப்பார் அல்லவா? என்ன செய்யலாம் என திட்டமிட்ட இஸ்ரேல் தந்திரமான காரியத்தை செய்துவிட்டது

பாலஸ்தீன கிராமம் ஒன்றினை இஸ்ரேல் முன்பு ஆக்கிரமித்தது, அதுயாருக்கு என்பதில் இன்றுவரை சண்டை

அங்கு கால்பந்து அரங்கம் கட்டி அர்ஜெண்டினா அணியினை அழைத்து விளையாட சொல்லிவிட்டது, கால்பந்து ஜூரத்தில் நனைகின்றார்களாம்

இதற்கு பாலஸ்தீனியர் எதிர்ப்பு தெரிவிக்க, பஞ்சாயத்து திசைமாற மிக தந்திரமாக ஜெருசலேமில் தன் 50ம் ஆண்டு வெற்றிவிழாவினை இல்லை கடவுள் கொடுத்த வெற்றியினை கொண்டாடுகின்றார்கள்

இனி அங்கு கோயில் கட்டவேண்டியதுதான் பாக்கி, அதற்கான ஆரம்ப விஷயம்தான் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் என்றானது

அதே நேரம் பலருக்கு நன்றி செலுத்துகின்றார்கள்?

யாருக்கு? அன்று மோஷே தயானோடு யுத்த தளபதிகளாக நின்று ஜெருசலேமினை மீட்டவர்களுக்கு

அவர்கள் யாரெல்லாம்?

ஏரியல் ஷெரோன், இட்சாக் ராபின், ஷிமன் பெரஸ், ஈசர் வேய்ஸ்மென், லெவி எஸ்ல்கோல், யோசே நக்ரீஸ், பென்ஞ்சமின் நேத்தான்யாகு என பலர்

இவர்கள் எல்லாம் பின்னாளில் இஸ்ரேலிய பிரதமர், பாதுகாப்பு அமைச்சர்கள் என உயர்ந்தவர்கள்

ஆம் அங்கு யார் நாட்டிற்காக துப்பாக்கி தூக்குகின்றானோ அல்லது உளவுதுறையில் சாதிக்கின்றானோ அவனுக்கே நாட்டை ஆளவும் பாதுகாக்கவும் தகுதி உண்டு என்பது விதி

ஆனால் அருமை தமிழகத்தில் எப்படி?

எவன் நன்றாய் சினிமாவில் நடிக்கின்றானோ அவனுக்கே முழு தகுதி இருப்பதாய் இங்கு விதி

அவர்கள் ஷிமன் பெரஸ், இட்சாக் ராபின், ஏரியல் ஷெரோன், எகுத் ஓல்மர்ட் பெஞ்சமின் நேத்தன்யாகு என்ற முன்னாள் தளதிகளை பிரதமராக்கி அந்த வரிசையினை வாழ்த்தி கொண்டிருக்கின்றார்கள்

நாமோ அண்ணா, கலைஞர், ராமசந்திரன், ஜெயா, பழனிச்சாமி என்றொரு வரிசையினை வைத்திருக்கின்றோம்

ரஜினி, கமல், விஜய் என அடுத்தவரிசையும் ரெடி.

(பழனிச்சாமி முன்பு நடிக்காமல் இருக்கலாம், இப்பொழுது அட்டகாசமான நடிப்பு)

பின் யார் உருப்படுவார்கள் என்றால் இஸ்ரேலியர்கள்தான் நிச்சயம் உருப்படுவார்கள்

தமிழகம் இந்த கோமாளிகள் ஆட்சியிலும் அழியாமல் இருக்கின்றது என்றால் இங்கு இருக்கும் கோவில்களும் அதன் தெய்வங்களுமே காப்பாற்றி வருகின்றன‌

 

காலா காலா காலா…..

காலா படத்தினை முதலில் பார்த்திருப்பது ரஜினியின் குருட்டு ரசிகர்கள்

அவர்கள் பாபா படத்தையே பார்த்துவிட்டு இப்படித்தான் சொன்னார்கள்,

அதன் பின் ராமதாஸ் கும்பல் படபெட்டியினை தூக்கிகொண்டு ஓடியபொழுது பார்த்தவர்கள் சோடா கொடுத்து அதனை கடலில் எறியும்படி உற்சாகபடுத்தினார்கள்

அவ்வளவு கொடுமையான படம் அது

அப்படியாக காலா படத்தை முதலில் பார்த்துவிட்ட ரஜினி கும்பல்கள் புரளி கிளப்ப, பலத்த சர்ச்சை மெதுவாக வருகின்றது

ராமரை வம்புக்கு இழுத்தாரா ரஜினி? சிவசேனையினை சாடினாரா? பாஜகவினை பதம் பார்த்தாரா? என்றெல்லாம் பேச்சு வருகின்றது

ராமர் என்பது இங்கு தொடக்கூடாத விஷயம், தொட்டிருந்தால் ரஜினிக்கு பாபர் மசூதி நிலைதான்


ரஞ்சித் சிவசேனையினை பிஜேபியினை வச்சு செஞ்சுட்டார் : ரஞ்சித் பாசறைகள் உற்சாகம்

இததானடா நாங்களும் சொன்னோம், அவன் மும்பை தமிழர் கதையில் மராட்டியரை வம்புக்கு இழுப்பான்.அது ரஜினிக்கு ஆபத்து

சிவசேனையினை மிக சீண்டியிருக்கின்றாராம் ரஞ்சித்தர்

இதோ இழுத்துட்டான்ல, இனி பாருங்க ரஜினிக்கு வரும் சோதனை எப்படின்னு….

இனி சிவசேனா ரஜினியினை வச்சி செய்யும் பாருங்கடா…

 

ஒரு சிலர் காலா பார்க்க போகின்றோம் என ஆர்பரித்தார்கள், டிக்கெட்டை எல்லாம் பதிவேற்றினார்கள்.

சிலர் பார்த்துவிட்டோம் என்றார்கள்

ஆனால் ஒரு பயலும் படம் எப்படி இருக்கின்றது என சொல்ல காணோம், சொல்வதற்கு ஒன்றுமே இல்லை போலிருக்கின்றது.


அந்த சிவகுமார் என்ன சொல்லி தொலைத்தார்?

இந்தியாவிற்கு ராக்கெட் தேவையா என்ற மகா அறிவார்ந்த சிந்தனையினை சொன்ன அவர், இப்பொழுது என்ன சொல்லி வம்பிழுத்தார்?

நடிகனை வைக்க வேண்டிய இடத்தில் வைக்காமல் மாபெரும் ஞானி போல கொண்டாடினால் இப்படித்தான் ஆகும்?


எவனோ முக ஸ்டாலின் வீட்டை கொளுத்துவோம் என சொல்லி இருக்கின்றான் , ஆனால் ஒரு சத்தமும் இல்லை

ஸ்டாலினுக்கும் கலைஞருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்

சொன்னவன் யார் என தெரியவில்லை, அவனுக்கு விரைவில் அமைச்சர் ஜெயக்குமார் அல்லது தமிழிசை சொல்லபோவது இதுதான்

“தம்பி, கொசுவுக்கு பயந்து வீட்டை கொளுத்தலமா?”


 

%d bloggers like this: