பிரபாகரனின் தம்பி என்றால் சும்மாவா?

அந்த பிரபாகரனுக்கு அப்பொழுது 14 வயது இருக்கும், அப்பொழுதே அவர் போராளி. சிங்கள அரசினை எதிர்க்க ஒரு பஸ்ஸை எரிக்க வேண்டும் என அவரும் கூட்டாளிகளும் முடிவெடுத்தனர், ஆனால் பஸ் வந்ததும் ஓடிவிட்டனர்

ஆனால் அமைதியாக திட்டமிட்டபடி வெகு சிலரோடு பஸ்ஸை எரித்துவிட்டு திரும்பினார் பிரபாகரன், போலிஸ் விசாரித்து வீட்டுக்கே வந்தது

பின் வாசல் வழியாக தப்பி ஓடினார் பிரபாகரன், அதற்கு முன்பு என்ன செய்திருந்தார் என்றால் போலிஸ் தன் படத்தினை கைபற்ற கூடாது என முன்யோசனையில் தன் படங்களை எல்லாம் எரித்திருந்தார்

அதன் பின் அவர் சிக்கவே இல்லை, அவரின் படம் கூட சிங்களனிடம் இல்லை, பெரும் அழிவு அவர் கொடுத்தாலும் அவரை சிங்களனால் தொட முடியவில்லை

பஸ்தியான் பிள்ளை எனும் மிகபெரும் காவல்துறை அதிகாரி கொலைக்கு பின் சிங்கள போலீஸ் அவரை தேடுவதை அஞ்சி நிறுத்தியது, அதன் பின்பே ராணுவம் களத்திற்கு வந்தது

பிரபாகரன் பிடிபட்ட ஒரே இடம் சென்னை பாண்டிபஜார், மாணிக்கம் எனும் ஏட்டு அவரை பிடித்து விலங்கிட்டார், ஆனால் பிரபாகரன் இந்திராகாந்தியால் விடுவிக்கபடும் வரை அது பிரபாகரன் என அவருக்கே தெரியாது

அதன் பின் பிணமாகத்தான் பிரபாகரன் உடல் கிடைத்தது

இச்சம்பவம் இப்பொழுது ஏன் நினைவு கூற வேண்டும் என்றால் பிரபாகரனின் தம்பி அங்கிள் சைமனை காணவில்லை

பிரபாகரன் பாணியில் புகைபடத்தை எல்லாம் கிழ்த்துவிட்டு எங்கோ பதுங்கிவிட்டார் போல, இனி அவரை எப்படி யார் அடையாளம் காணமுடியும்?

எஸ்.வீ சேகரையே பிடிக்கமுடியாத தமிழக பொலீஸ், பிரபாகரனிடம் பயிற்சிபெற்ற வீரதமிழ் பிள்ளையினை எப்படி பிடிக்கமுடியும்? வாய்ப்பே இல்லை

இனி தமிழக காவலரோடு மாபெரும் யுத்தம் நடத்தி அவர்களை தோற்கடித்து, இந்திய ராணுவத்த்தை அங்கிள் தமிழகத்திற்கு வரவைப்பார் பாருங்கள்

பிரபாகரனின் தம்பி என்றால் சும்மாவா?

மாபெரும் அவமான அறிக்கை இரண்டை மிக அபத்தமாக வாசித்திருக்கின்றது பழனிச்சாமி அரசு

இன்றைய சட்டசபை நிகழ்வில் மாபெரும் அவமான அறிக்கை இரண்டை மிக அபத்தமாக வாசித்திருக்கின்றது பழனிச்சாமி அரசு

முதலவாது மேட்டூர் அணை திறப்பு இல்லை என சொல்லிவிட்டு நிலத்தடி நீரை பயன்படுத்துங்கள் விதை தருகிறோம், மின்சாரம் தருகின்றோம், அங்கே கொஞ்சிவிளையாடும் வஞ்சியருக்கு மஞ்சள் அரைத்து தருகின்றோம் என்ற அளவில் மகா அபத்தமாக பேசுகின்றார்கள்

6 ஆண்டுகளாக மேட்டூர் அணை திறக்கபடவில்லை, காவேரி மணலையும் அள்ளியாயிற்று என்றால் நிலத்தடி நீர் என்ன ஜெயா கல்லறைக்கு அடியிலா கிடைக்கும்?

அப்பொழுதும் உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றியோ, இம்மாதம் பெற வேண்டிய நீரை கன்னடத்திடமிருந்து பெரும் நடவடிக்கை பற்றியோ ஒரு அறிக்கையுமில்லை

மாபெரும் அபத்தம் இது, எதிர்கட்சி திமுகவோ இதுதான் வாய்ப்பு என மணி அடித்ததும் குதிதோடும் பள்ளி சிறுவர்களை போல சபையினை விட்டு ஓடிவிட்டது

இரண்டாவது பெரும் அழிச்சாட்டிய அறிவிப்பு டிரான்ஸ்பர்மர்கள மாற்றை தாமிர கம்பி இல்லையாம், ஸ்டெர்லைட் மூடபட்டதால் கம்பி இல்லையாம்

அட பைத்தியகார அரசே, ஸ்டெர்லைட் வரும் முன்னால் இங்கு டிரான்ஸ்பார்மரே இல்லையா? 1989ல் இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு கலைஞர் வழங்கும்பொழுது ஸ்டெர்லைட் எங்கிருந்தது

இது சாதாரண விஷயம் அல்ல, பழுத்த அரசியல்வாதி இருந்தால் பழனிச்சாமி அரசின் வேட்டியினை உருவ முடியும்

என்ன சொல்ல வருகின்றார்கள்? ஸ்டெர்லைட் தாமிரத்தில்தான் இங்கு டிரான்ஸ்பார்மரே இயங்கியது அதாவது எங்களின் பினாமியாக ஸ்டெர்லைட் இயங்கியது என சொல்லாமல் சொல்கின்றார்கள்

மிக ஆற்றல்வாய்ந்த எதிர்கட்சி இல்லாததால் விஷயம் தூங்குகின்றது, ஆனால் அட்டகாச அரசியல் வாய்ப்பு இது

எத்தனையோ அரசுகளை கண்ட சென்னை கோட்டை முதன் முதலாக கோமாளிகள் ஆட்சியினை கண்டுகொண்டிருக்கின்றது

நாமும் அதனை கண்டு தலையில் அடித்து கொண்டிருக்கின்றோம்

 

மனுஷ்யபுத்திரன் ஸ்டைல்

Image may contain: text

தனக்கு கொஞ்சமும் தெரியாத அல்லது புரியாத விஷயம் என்றாலும் தலையினை சிலுப்பிகொண்டு சென்று கருத்து சொல்வது மனுஷ்யபுத்திரன் ஸ்டைல்

அப்படி இப்பொழுது காலா விவகாரத்தில் ராவணன் திராவிடன் என கிளம்பிவிட்டார்

மனிதருக்கு ஒரு மண்ணும் தெரியவில்லை, இவரை டிவி விவாதத்திற்கு அழைத்தவனை பரிதாபமாக நோக்க வேண்டி இருக்கின்றது

ராம கதையின் மூலம் வால்மிகி, அவனிடமிருந்தே எல்லோரும் காப்பி அடித்தார்கள், அதற்கு கலாச்சாரத்திற்கு தக்கபடி மாற்றிகொண்டார்கள், அதில் கம்பன் குறிப்பிட தக்கவன்

வால்மிகி ராமயணபடி ராமன் சத்ரியன் கருப்பன், ராவணனே பிராமணன் சிவபக்தன் நல்ல நிறமானவன்

வால்மிகி ராமாயணத்தில் இலங்கை என தெளிவாக சொல்லபடவே இல்லை, ஒரு நாடு என்றுதான் குறிப்பிட்டான், பின்னர் ஆளாளுக்கு இழுத்து இலங்கை என முடிச்சு போட்டுவிட்டார்கள்

கடல் கொண்ட குமரிகண்டமும் அக்காலம் இருந்திருக்கலாம், அதில் ஒரு பகுதி ராவண பூமியாக இருந்திருக்கலாம் என்பது யூகம், எதற்கும் பெரும் ஆதாரமில்லை

ஆனால் ராமன் ராவண சண்டை நடந்ததும், பெண் ஆசையால் அவன் அழிந்தான் என்பதும் வரலாறு

இத்தேசத்தின் மிகபெரும் இதிகாசம் அது மேற்காசியா முதல் ஜப்பான் வரை அக்கதை இருந்தது, தொன்றுதொட்டு வந்தது

மேற்கே நபிபெருமானின் எழுச்சிக்கு பின் அது இல்லை என்றாலும் புத்தனின் எழுச்சிக்கு பின் இன்னும் கிழக்காசியாவில் பிரமாதமக வாழ்கின்றது

நடக்காத ஒரு சம்பவம் இத்தனை ஆண்டு காலம் காக்கபட்டு வருவது சாத்தியமே இல்லை

தமிழில் பல ராமாயணம் உண்டு என்றாலும் கம்பன் தன் அழகு தமிழால் அழியா இடம் பெற்றான், ஆனால் தமிழ் கலாச்சாரபடி சில இடங்களில் மாற்றியும் இருந்தான்

எங்கேயும் ராவணன் தமிழன் என்றோ, அவன் திராவிட அடையாளம் என்றோ இதிகாசத்திலுமில்லை, தமிழ் புராணங்களிலுமில்லை

அவன் பெயரும் அவனின் மனைவி மற்றும் சகோதரர் பெயரையும் கவனியுங்கள் அவை தமிழ்பெயரே அல்ல‌

இந்த ராவணன் திராவிடன் எனும் கட்டுகதை எல்லாம் 1900களுக்கு பின் வந்தது, அது ஆரிய கட்டுகதை என்றார்கள் தமிழனுக்கு ராமன் கடவுளில்லை என்றார்கள்

ஆனால் தமிழனாய் பிறக்காத இயேசுவும், நபிபெருமானும் இங்கு கொண்டாடபட்ட்பொழுது கள்ள மவுனம் காத்தார்கள்

ராவணன் திராவிடன், தமிழன் என்பதெல்லாம் கட்டுகதை ஆதாரம் இல்லா செய்திகள்

வால்மிகியோ இன்னும் பலரும் அப்படி எல்லாம் சொல்லவே இல்லை, ராவணனின் வாழ்வினையும் அவன் பக்தி , வரம் இன்னபிற விஷயங்களை நோக்கினால் அவன் சுத்த பிராமணனாகவே இருந்திருக்கின்றான்

பிராமணர் வந்தேறி ஆனால் பிராமண ராவணன் தமிழர் அடையாளம், திராவிட தலைவன் என்பதெல்லாம் பெரும் புரட்டு

மனுஷ் என்பவருக்கு சில உளறல்களை தவிர ஒரு மண்ணும் புரியாது, ரஞ்சித் போன்றே ஒரு அரைகுறை

இந்த மங்குஸ் மண்டையனை அழைத்து பெரும் பைத்தியக்கார விவாதங்களை நடத்தும் டிவிக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்…

எத்தனையோ யுகங்களாக வரும் மத நம்பிக்கையினை புற்றீசல் போல அற்ப ஆயுள் கொண்ட நாத்திக திராவிட வாதம் தீடீரென ராவணன் தமிழன் திராவிடன் என குழப்பியதால் ஒரு சேதாரமும் வராது

அக்குழப்பம் உண்மையும் ஆகாது

ராமகாதை என்பது இங்குள்ள பெரும் நம்பிக்கை, இந்திய அடிப்படை ஆதாரம்
அதன் வேரின் ஆழம் பெரிது, மலை போன்ற விஷயம் அது அதன் முன்னால் இந்த அற்ப திராவிட புரட்டுக்கள் எல்லாம் புல் போன்றது

அந்த புல்லை பிடித்து தொங்கிகொண்டு இதுதான் வாதம் என சொல்லிகொண்டிருக்கும் மனுஷை அப்பக்கம் விடாமல் இருப்பது அந்த டிவிக்கு நல்லது

 

பிரதமரை கொல்ல சதியா?

No automatic alt text available.

மோடிக்கு ஏதும் ஆகிவிட்டால் இன்னொருவர் வந்து இந்தியாவினை வளப்படுத்திவிட மாட்டாரா?

அதன் பின் பலமான இந்தியா உருவாகி மாவோயிஸ்டுகளை அழித்துவிடாதா?, மாவோயிஸ்டுகளுக்கு பாதுகாப்பே இப்படி ஒரு பேச்சு பிரதமர் இருப்பதுதானே

அதனால் மாவோயிஸ்டுகள் அவ்வளவு முட்டாள்தனமாக எல்லாம் திட்டமிட்டிருக்க மாட்டார்கள், அவர்களுக்கு கொஞ்சமேனும் அறிவிருக்கும் என நம்பபடுகின்றது

மோடி ஆட்சியினை தொடரவிடுவதை விட இத்தேசத்திற்கு என்ன பெரும் கெடுதல் செய்துவிட முடியும்?

இந்த தேசத்தை நம்மை விட மோடி நன்றாக கெடுத்து கொண்டிருக்கின்றார் என்பது அவர்களுக்கு தெரியாதா?


முதலில் அச்செய்தியினை நம்பமுடியவில்லை, ஆயிரம் பொய்செய்திகள் வரும் இணையமிது, நிமிடத்திற்கு ஒரு பிரேக் நியூஸ் வரும்

அப்படித்தான் மோடிக்கு கொலை திட்டம் என்ற செய்தியும் வந்தது

இந்திய வரலாற்றை புரட்டினால் ஒரு விஷயம் விளங்கும்

யாரெல்லாம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அறியபடும் பெரும் தலைவராக இருக்கின்றார்களோ அவர்களை சில சக்திகள் குறி வைக்கும்

இது சாஸ்திரி, இந்திரா, ராஜிவ் என தொடர்ந்தது. இந்தியாவின் தனிபெரும் தலைவர்களை யாரோ விரும்புவதில்லை

இடையில் இந்த மொரார்ஜி, விபிசிங், நரசிம்மராவ், தேவகவுடா, குஜ்ரால், மன்மோகன் போன்ற தனிபெரும் அடையாளம் இல்லாதவர்களுக்கு பெரும் ஆபத்தில்லை

ஆனால் யார் தனிபெரும் சக்திவாய்ந்த தலைவராக உருவாகின்றாரோ அவருக்கு இங்கு ஆபத்து அதிகம்

சர்ச்சைகளை கடந்து பார்த்தால் மோடி காஷ்மீர் முதல் வேலூருக்கு முந்தைய ஆந்திர எல்லை வரை அறியபடுகின்றார்

அங்கிருந்து கன்னியாகுமரி வரை மோடி என்ற நபரை கொண்டுவர பலர் படாதபாடுபட்டாலும் மோடி இந்தியாவின் தனிபெரும் தலைவராக உருவாகிவிட்டார் என்பது உண்மை

அதை ஒப்புகொள்ளத்தான் வேண்டும்

அதனால் அந்த மிரட்டலை சாதாரணமாக எடுத்துகொள்ளாமல் மோடிக்கு பலத்த காவலை ஏற்படுத்த வேண்டும்

மனிதர் வேறு அடிக்கடி விமான பயணங்களை மேற்கொள்வதால் இஸ்ரேல் பிரதமருக்குரிய பாதுகாப்புடன் கூடிய விமானங்களை கொடுப்பது நல்லது

மோடி என்பவர் மேல் சர்ச்சை இருக்கலாம், ஆனால் அவர் தேசத்தின் அடையாளம் அவரை காக்க ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு

அந்த மனிதனுக்கு காவல்கள் மிக இறுக்கமாக அதிகரிக்கபடட்டும், சிறு துரும்பும் அவரை நெருங்க அனுமதியோம்

 


சரி ரஞ்சித் என்ன சொல்ல வாராரு?

Image may contain: one or more people, people standing, mountain, outdoor and nature

“அண்ணே, உங்க உறவே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன், நீங்க சாதிவெறி பிடிச்சவரு, உங்க மனசெல்லாம் வஞ்சகம்

அப்படி என்னடா பண்ணிட்டேன்

ரஞ்சித் ஒரு தலித்னு அவர ஒருமாதிரி எழுதுறீங்க, அதுனாலதான் அவர் படம் உங்களுக்கு பிடிக்கல்ல, தலித் எது செஞ்சாலும் உங்களுக்கு பிடிக்காது

டேய் இளையராஜா தாழ்த்தபட்டவர் அவர் பாட்டு யாருக்கு பிடிக்காது? நடிகர் பார்த்திபன் மாதிரி கலைஞர்களை ஏதாவது யாராவது சொல்றாங்களா? இதெல்லாம் அவங்க அவங்க கொடுக்குற பில்டப்பில வாங்கி கட்டிக்கிறது

அண்ணே இல்லண்ணே, தலித் மக்கள் ஒடுக்கபடுறாங்க, அவங்க உயரணும் வாழணும் அதுக்கு ரஞ்சித் போராடுறாறு

டேய் இந்த நாட்டு சட்டம் தலித்துக்கு எதிரா இருக்கா?

இல்ல‌

இட ஒதுக்கீடு இருக்கா இல்லியா?

நிறைய இருக்கு

தலித் தொழில் தொடங்கினா யாரும் தடுக்குறாங்ளா?

இல்ல‌

அரசியல், சினிமா, அரசுதுறைன்னு எல்லா இடத்துக்கும் வந்துட்டாங்க யாரும் தடுக்குறாங்களா?

பின்ன என்னடா ஒடுக்குறாங்க, மிதிக்கிறாங்கண்ணு

அப்படித்தாண்ணே சொல்லிகிட்டாங்க, அத விடுங்கண்ணே காலா படம் புரட்சி படம்ணே, மக்கள் போராடிட்டே இருக்கணும்னு சொல்ற படம்னே

அதில உங்க ரஞ்சித்தர் என்னடா சொல்ல வந்தார்?

அதிகார உலகம் உன் நிலத்தை பிடுங்க வரும், அத போராடாம தடுக்க முடியாதுண்ணு சொன்னாருண்ணே

அடேய் மும்பை அந்தேரியினை எவனாவது வாங்க போவானா?

அண்ணே முடியாதுண்ணே பணக்கார ஏரியா

இந்த நாவி மும்பை?

அண்ணே அங்கெல்லாம் ஏகபட்ட விலை

பின்ன ஏன் இங்க வாரானுக‌

இதெல்லாம் குடிசை வீடுண்ணே, ஒருமாதிரி ஏரியா அதனால ஏழ்மை ஒழிக்க வாரோம்ணு ஒரு மாதிரி வருவாங்க விட கூடாதுண்ணே

ஏழையா யார் வச்சிருக்கா?

தெரியலண்ணே

சரி ரஞ்சித் என்ன சொல்ல வாராரு?

அதாவது நம்ம குடிசைய காப்பாத்த நாம போராடணும்

சரி அந்த குடிசைய மாளிகையாக்க வழி சொன்னாரா?

இல்லண்ணே

மக்கள் என்ன செஞ்சா முன்னேறலாம்னு வழி சொன்னாரா

அதுவும் இல்லண்ணே

பின்ன இதுக்கு என்னதாண்டா முடிவு?

அண்ணே எல்லாத்திலியும் உரிமை வேணும் அப்படி இருந்தா நாங்க முன்னேறிருவோம்

எல்லாத்தையும்தான் சுதந்திர இந்தியாவில திறந்து விட்டுருக்கேடா உங்களுக்கு, படிப்பு, வேலை அது இதுன்னு அள்ளி கொடுத்தாச்சி இப்பவும் முடியலண்ணா இனி தனிநாடுதான் கொடுக்கணும் வாங்குறியா?

அப்படியாண்ணே எவ்வளவு பெருசா தருவாங்க?

செவிட்டில தருவாங்க, சொல்லுடா எல்லாம் திறந்து, வாய்ப்பெல்லாம் கொடுத்தும் இன்ன்னும் அழுதுட்டே இருந்தா யார் தப்புடா?

தெரியலண்ணே?

ஒரு சமூகம் எப்படா உருப்படும்

நல்லா படிக்கணும், ஒழுங்கா உழைக்கணும் நல்லா சிந்திக்கணும்

தெரியுதுல்ல அதை செய்ங்கடா, இவனுக தலித் ஏழை குடிசை, புரட்சின்னு அழுவானுகளே தவிர உருப்பட சொல்லிகொடுக்கவே மாட்டானுக‌

ஆமா, அது ஏண்ணே

தலித் காலம்வரை கஷ்டபட்ட தலித்தா இருந்தாதான் அவனுக பொழப்பு ஓடும், இல்லண்ணா கஷ்டம்

புரியுதுண்ணே

அதனால அம்பேத்கர் சொன்னபடி இந்த நாடு எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடுத்தாச்சி இன்னும் அது சரியில்ல இது சரியில்லண்ணு அவர் படம் பிடிச்சிட்டு வந்தா என்னடா அர்த்தம்?

குழப்பமா இருக்குண்ணே

அதாண்டா சாதி பெயரை சொல்லி கட்சி அரசியல் செய்து நல்லா செட்டில் ஆனவனுகள பார்த்துட்டு இந்த ரஞ்சித் பயலும் புரட்சி அது இதுன்னு சொல்லிட்டு இருக்கான், இவனுகளுக்கு தூண்டிவிட தெரியுமே தவிர ஒரு நாளும் தீர்வு தெரியாது

அப்படியாண்ணே

சரி அந்த ரஞ்சித்கிட்ட போய் இதுக்கு என்ன முடிவுண்ணு கேட்டுபாரு தெரியும்

அட அவருக்கு எங்கண்ணே தெரியுது, அவர் படத்தையே குழப்பமா முடிக்கிறாறு

அததானடா நாங்களும் சொல்றோம், தீர்வே தெரியாதவன் நான் புரட்சியாளன்னா எப்படிடா?

ஆமாண்ணே, அந்த ஆளுகிட்ட கேட்டுட்டு வாரேன்

கேட்டுட்டு இங்க வராதா, காலா போஸ்டர் எங்காவது இருந்தா கிழிச்சி போட்டுட்டு போ”


Image may contain: 7 people, people smilingஉண்மையான தமிழின விரோதி இந்த போஸ்டர் அடித்த கும்பல்தான்..

இந்த நிபா, எபோலா மாதிரி வைரஸ்களை பரப்பி இந்த போஸ்டர் அடித்த‌ கும்பலை அழித்துவிடுவது நல்லது

நள்ளிரவில் பின்லேடனை சுட்டது போல் இவர்களை சுட்டுகொன்றாலும் தப்பே இல்லை

(எஸ்.ஏ சந்திரசேகர் யார்? தெய்வத்தின் தெய்வமோ?? )


 

மேட்டூர் அணையினை ஜூன் 12ல் திறக்க வாய்ப்பில்லை : செய்தி

 Image may contain: 1 person, text

ஆளையும் காணோம், கையினையும் காணோம் , முழக்கத்தையும் காணோம்..

தமிழகத்தில் இவரை யாராவது கண்டீர்களா?

ரகசியமாக ஆமைகறிக்கும், 5 வகை இறாலுக்கும் ஈழம் சென்றுவிட்டாரோ?


மேட்டூர் அணையினை ஜூன் 12ல் திறக்க வாய்ப்பில்லை : செய்தி

இதுபற்றி இதுவரை எந்த அரசியலாதியும் பேசவில்லை

கன்னட அணைகள் கன மழையில் நிரம்பிகொண்டிருக்கின்றது, கோர்ட் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக இருக்கின்றது

ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக சட்டமன்றம் துரைமுருகன் எப்படி இளமையாய் இருக்கின்றார் என பட்டிமன்றம் நடத்துகின்றதாம்

கன்னடத்திடம் நீர் வாங்க வேண்டிய நேரத்தில் தமிழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றது


காந்திஜியை ரயிலில் இருந்து தள்ளிய நிகழ்வு

Image may contain: 2 people

காந்தியின் வரலாற்றை மாற்றிய சம்பவம் தென்னாப்ரிக்காவில் நடந்த , ரயிலில் இருந்து அவரை வெள்ளையன் தென்னாப்ரிக்காவில் இறக்கிவிட்டது

இல்லை மிதித்து தள்ளியது, ஆம் வெள்ளையர் இருக்கையில் அவர் அமர்ந்திருக்க அங்கு வந்த வெள்ளையன் அவரை அடித்து கீழே தள்ளினான்

அதுவரை சமத்து வக்கீலாக ஒழுங்காக சம்பாதித்துகொண்டிருந்த காந்தி இந்த சம்பவத்திற்கு பின்பே போராட வந்தார், அது அங்கு வெற்றிபெற்றபின் அந்த தைரியத்தில் இந்தியாவிற்கும் போராட வந்தார்

இச்சம்பவம் நடந்து 125 ஆண்டுகள் ஆகிவிட்டன, சம்பவம் நடந்த ரயில் நிலையம் பீட்டர்மரிட்ஸ்பர்க் நகரில் உள்ளது

125 ஆண்டு நினைவினையொட்டி காந்தி விழுந்த இடத்தில் அவருக்கு சிலை வைத்திருக்கின்றார்கள், இந்தியா சார்பில் சுஷ்மா சென்று கலந்திருக்கின்றார்

மோடி ஏன் செல்லவில்லை என கேட்க கூடாது

அங்கு சென்ற சுஷ்மா காந்தியின் அருமை பெருமை எல்லாம் பேசி உருகியிருக்கின்றார்

இந்த பிஜேபியினருக்கு ஒரு விசித்திர வியாதி உள்ளது, இந்தியா தாண்டி அயல்நாடு சென்றுவிட்டால் காந்தியினை என விழுந்து விழுந்து வணங்குகின்றனர்

ஆனால் இந்தியா திரும்பிவிட்டால் “காந்தியா? அவர் சும்மா , தேசத்தை பிரித்த துரோகி”,
” பட்டேல் வாழ்க”,”சாவர்கர் வாழ்க” என கிளம்பிவிடுவார்கள்

மிக வினோதமான நோய் இது

 
%d bloggers like this: