ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்தில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வருவோம் : செங்கோட்டையன்

தமிழக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆங்கில பயிற்சி அளிக்க ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்தில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வருவோம் : செங்கோட்டையன்

அப்படியானால் இங்கிருக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என அன்னார் ஒப்புகொள்கின்றாரா?

இங்கிலாந்தில் இருந்து சரி, பிரான்ஸ் ஜெர்மனில் இருந்து எப்படி ஆங்கில ஆசிரியர் வருவார்கள்? நல்ல வேளையாக சைனா, ஜப்பான் என சொல்லவில்லை

ஆங்கிலத்தை இங்கு சுத்தமாக ஆக்க போகின்றார்களாம் நல்லது

இதெல்லாம் இருக்கட்டும், இப்படியே டாஸ்மாக்கிலும் பிரெஞ்ச் ஒயின், ஜெர்மன் சரக்கு,ஸ்பானிஷ் விஸ்கி எல்லாம் ஒரிஜினல் சரக்காக கிடைக்க இந்த அரசு ஏற்பாடு செய்யுமா என யாரிடம் கேட்பது

ஆங்கிலத்தை திருத்தும்பொழுது ஆங்கிலேயென் சரக்கையும் சீர்படுத்தினால்தான் சரி

 
 

கிரண் பேடி : பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Image may contain: 1 person, smiling, glasses and text

வீரமிகு பஞ்சாபியர் நமக்கு தெரியும். ராணுவத்திலும் விளையாட்டிலும் அவர்கள் சாதனை நமக்கு தெரியும், ஆனால் பஞ்சாபி பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என உலகிற்கு சொன்னவர்கள் சிலர். அவர்களில் ஒருவர் கிரண் பேடி

அவர் பெயர் கிரண், கணவர் பெயர் பிரிஜி பேடி. அதனால் கிரண் பேடி ஆனார். கணவரும் தந்தையும் தொழிலதிபர்கள்

நிச்சயம் அவர் தொழிலதிபராக வந்திருக்கலாம், ஆனால் விளையாட்டும் அவரின் தைரியமான குணமும் பாதையினை மாற்றின‌

கிரண்பேடி இந்திய பெண்களின் தைரியத்தின் முகம். முதலில் அவர் டென்னிஸ் வீரர், ஆசிய சாம்பியன் ஆன சாகசம் எல்லாம் உண்டு

பின்னர் அவர் ஐபிர்ஸ் ஆகி காவல்துறைக்கு வந்தபின் அவரின் தைரியமான நடவடிக்கை அவரை ஆச்சரியமாக நோக்க வைத்தது

இந்திரா காந்தியின் கார் நொ பார்க்கிங்கில் நிறுத்தபட்டபொழுது சட்டபடி அதை தூக்கி சென்றவர் கிரண் பேடி, நாடே அப்பொழுது அவரை வித்தியாசமாக நோக்கியது

திகார் ஜெயில்லை ஒரு பெண் சிங்கமாக அவர் புரட்டி எடுத்து சீர்படுத்தியபொழுது அது மாபெரும் துணிச்சலான நடவடிக்கையாக பார்க்கபட்டது

தன் ஒரே மகள் சுகவீனமாயிருந்தபொழுது மனரீதியாகவும், பணி ரீதியாகவும் அவர் சந்தித்த சவால்கள் ஏராளம், அவர் அதை துணிச்சலாக கடந்தார்

தன் நடவடிக்கை முலம் இந்திய பெண்களின் துணிச்சலாக அவர் உலகெல்லாம் அறியபட்டார்

ஐ.நா விருதும், புகழ்பெற்ற ராமன் மகசேச விருதும் அவரை தேடி வந்தன‌

கணவன் இறந்தபின்பு பொதுவாழ்விற்கு வந்தார், அர்விந்த் கெஜ்ரிவாலின் இயக்கத்தில் இருந்தார், 2015ல் பாஜகவிற்கு வந்தார்

இப்பொழுது பாண்டிச்சேரி கவர்னராக இருந்து நாராயணசாமி குடுமியினை பிடித்து ஆட்டிகொண்டிருக்கின்றார்

இந்திய பெண்களின் மகா துணிச்சலான முகமான அந்த கிரண்பேடி ஏராளமான இந்திய பெண்களுக்கு வழிகாட்டியாக இருப்பவர்

அவருக்கு இன்று பிறந்தநாள் , அந்த அசாத்திய பெண்மணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Image may contain: 1 person, smiling, glasses and text
 
 
 
 

ரஜினியின் பலம் இதுதான், கதைக்காக அவர் படத்திற்கு யார் சென்றார்கள்?

கோடி கொடுத்தாலும் இந்த காலா படத்தை பார்க்க கூடாது என முடிவெடுத்திருந்தால் பாகம்பிரியாளுக்கோ பெரும் எதிர்பார்ப்பு

அது கதை சரியில்லை, இயக்கம் சரியில்லையாம் என சொன்னால். ரஜினி படத்தில் என்று கதை இருந்தது? கதைக்காக என்று ரஜினிபடம் பார்த்தோம் என படாரென பதில் வருகின்றது

ரஜினியின் பலம் இதுதான், என்று கதைக்காக அவர் படத்திற்கு சென்றார்கள்?

எவ்வளவோ சொன்னாலும், தேர் எப்படி இருந்தால் என்ன சாமிதான் முக்கியம், அது ஊர்வலம் வரும்பொழுது சாமியினைத்தான் பார்க்க வேண்டும். மாலை சரியில்லை, மேளம் சரியில்லை, விளக்கு சரிய்ல்லை என்றெல்லாம் சொல்லகூடாது என பலத்த வாதம்

நாமோ அசைவதாக இல்லை, ரஞ்சித்தை விட அந்த சந்தோஷ் நாராயணனின் இசை நினைத்தாலே பயமுறுத்துகின்றது

அவரோ திருவிழாவினை பார், சாமிக்கு மல்லிகை மாலை சூட்டபட்டால் என்ன? நித்திய கல்யாணி மாலை சூட்டபட்டால் என்ன? சாமி சாமிதான் என்ற நிலைபாட்டிலே இருந்தார்

ரஜினி எனும் நடிகர்சிங்கத்து பால், அதை தங்கதட்டில் வைக்காவிட்டால் கெட்டுவிடும். காலா அப்படி ஆயிற்று என்றால், ரஜினிதான் தங்கதட்டு அதன் மீது வைக்கபடும் எதுவும் அதற்கு ஈடாகாது, தட்டுதான் முக்கியம் என்ற பதில் பறந்து வருகின்றது

கடைசியில் பாகம்பிரியாள் தன் மிரட்டலை தொடங்கிவிட்டார, “காலா படம் பார்க்காவிட்டால் வீட்டில் குஷ்பு படம் ஓடாது சரியா?”

இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? அங்குசத்திற்கு கட்டுபட்ட யானையாக தலையாட்டியாயிற்று.

விதி வலியது என்பதை சில இடங்களில் இப்படித்தான் உணர வேண்டி இருக்கின்றது

இந்த ஜூராசிக் பார்க் போன்ற டைனோசர் படங்கள், இன்னும் சில ஹாலிவுட் பேய் படங்களை பார்க்கும் போது ஏற்படும் ஒருவித திகில் உணர்வோடு காலாவிற்கு செல்லும் முடிவிற்கு சங்கம் தள்ளபட்டாயிற்று

 
 

ஜூன் 12ஐ உலகம் எதிர்பார்த்துகொண்டே இருக்கின்றது

இன்னும் இரு நாட்கள்தான் இருக்கின்றது, உலகை மிரட்டும் இருவர் வருவதால் சிங்கப்பூர் கடும் பாதுகாப்பில் இருக்கின்றது

நேற்று வெள்ளையாக குண்டாக வெள்ளை குடைமிளகாய் போல ஒருவர் சிங்கப்பூர் வந்திருக்கின்றார், பிடித்து வைத்து கடும் பரபரப்பினை ஏற்படுத்திவிட்டார்கள். வடகொரிய தரப்பு எங்கள் தலைவர் வடகொரியாவில் இருக்கின்றார் என உறுதிபடுத்தியபின்புதான் பரபரப்பு தீர்ந்தது

இப்பொழுது வடகொரிய அதிபருக்கு புதிய பயம் வந்திருக்கின்றது, அதாவது தனக்கு உயிர் ஆபத்து என அவர் நினைத்துவிட்டார்

வரலாறும் அதைத்தான் சொல்கின்றது, சோவியத் அதிபர்கள் தவிர அமெரிக்காவினை எதிர்த்தவர்களை கொல்ல அவ்வளவு முயற்சிகள் நடந்திருக்கின்றன‌

காஸ்ட்ரோ மேல் கிட்டதட்ட 300 கொலை முயற்சிகள் நடந்தன, இறுதிய்ல் காஸ்ட்ரோவின் காதலியே உளவு சிக்கலில் மாட்டியபொழுது நீயே என்னை கொல் என கதறி நின்றார் காஸ்ட்ரோ

அமெரிக்காவினை பகிரங்கமாக எதிர்த்த வெனிசுலாவின் சாவேஸ் புற்றுநோயில் இறந்தார்

யாசர் அராபத் வீட்டுகாவலில் வைக்கபட்டபின் நோயுற்று இறந்தது இன்றும் சர்ச்சையே

இந்திரா, ராஜிவ், பிரேமதாசா போல கொல்வதெல்லாம் அக்காலம், இப்பொழுதெல்லாம் மெல்ல கொல்லும் விஷத்தை காற்றிலோ, நீரிலோ கலந்து எதிராளியினை விட்டு பிடித்து கொல்லும் காலம்

இதனால் வடகொரிய அதிபருக்கும் அந்த பயம் வந்துவிட்டதால் கடும் பதற்றத்திலும் பாதுகாப்பிலும் வருகின்றார்

அணுகுண்டையும் ராக்கெட்டையும் தவிர பலத்த பாதுப்போடு வருகின்றாராம்

ஜூன் 12ஐ உலகம் எதிர்பார்த்துகொண்டே இருக்கின்றது

தங்க தலைவியும் ஜூன் 12ல்தான் தமிழகம் வருவதால் சங்கமும் அந்நாளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றது

 
 

முஷாரப்பிற்கு பாஸ்போர்ட் முடக்கம் : செய்தி

முஷாரப்பிற்கு பாஸ்போர்ட் முடக்கம் : செய்தி

கொஞ்ச நாளைக்கு முன்புதான் நாவாஸ் ஷெரிப்பினை மண்டையில் தட்டி வைத்திருக்கின்றார்கள்.

ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் பாகிஸ்தானில் சில விஷயங்கள் ஆச்சரியமானது, எந்த ஆட்சியாளரும் ஊழல் என வந்துவிட்டால் நிலைக்க முடியாது, கடாசி விடுவார்கள்

அருமை இந்தியாவில் அதெல்லாம் சாத்தியமே இல்லை

சுருக்கமாக சொன்னால் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் ஜெய காலத்து அதிமுகவினர் அல்லது அமைச்சர்கள் போல, யார்? எப்பொழுது? எங்கு அடிவாங்குகின்றார்கள் என்பதே தெரியாது

ஆனால் இந்திய அரசியல்வாதிகள் திமுக தலைவர்கள் , மாவட்ட உறுப்பினர்கள் போல, என்ன நடந்தாலும் அவர்களுக்கோ அவர்கள் பதவிக்கோ ஆபத்தே இல்லை

 
 
LikeShow More Reactions

எஸ்.வீ சேகரை கட்சியிலிருந்து விலக்கிவிட்டோம் : தமிழிசை

எஸ்.வீ சேகரை கட்சியிலிருந்து விலக்கிவிட்டோம் : தமிழிசை

அக்கோவ், விஷயம் அவர் காணாமல் போனது பற்றியது. ஒரு ஹேவியஸ் மனுபோட்டு அவரை நேரில் கொண்டுவர கூடாதா?

கட்சிக்காரன் காணாமல் போனால் இப்படித்தான் பதவி விட்டு விலக்கி கணக்கை முடிப்பீர்களா?

பின் யார் கட்சிக்கு வருவார்? எப்படி தாமரை மலரும்?

பின் எங்கிருந்து தமிழகத்திற்கு விடியும்?

தான் கொட்டிய காப்பியினை தானே துடைத்தார் நெதர்லாந்து பிரதமர் என செய்திகள் வருகின்றன, பலர் அவரல்லவோ மனிதர் என உருகிகொண்டிருக்கின்றனர்

இங்கும் அப்படியான நபர்கள் இருந்தார்கள், மாமனிதர் மகாத்மா காந்தி தனக்கான வேலைகளை தானே செய்தார்

ஜீவா எனும் பொதுவுடமை போராளி தனக்கு இருந்த ஒரே உடையினை தானே துவைத்தும் கொண்டான்

காஷ்மீருக்கு போய் நிலமையினை பாருங்கள் என நேரு சொன்னவுடன் தன்னிடம் குளிர் ஆடை இல்லை என்பதை சொல்லமுடியாமல் நின்றார் சாஸ்திரி

காமராஜரின் எளிமை உலகறிந்தது, ஏதும் இடங்களுக்கு முன் கூட்டியே சென்றாலோ இல்லை ஏதும் தடங்கல் என்றாலோ நள்ளிரவிலும் கட்டாந்தரையில் உறங்கியவர் அவர்

தன் சம்பளத்தை எல்லாம் நாட்டு மக்களுக்கே கொடுத்தவர் கலாம்

இந்நாட்டில் இருந்த நல்லவர்களை எல்லாம் மறந்துவிட்டு எஙகோ எவனோ தரை துடைத்தான் என சொல்லிகொண்டே இருங்கள்

பின் எங்கிருந்து தமிழகத்திற்கு விடியும்?

 
 
%d bloggers like this: