டிரம்ப் தன் பிரத்யோக விமானத்தில் வந்து சிங்கப்பூரில் இறங்கிவிட்டார்

சீனாவினை தவிர தன் இரண்டாம் வெளிநாட்டு பயணமாக சிங்கப்பூர் வந்திருக்கின்றார் வடகொரிய அதிபர் கிம்

மிக கவனமாக தன் நாட்டு விமானத்தில் வராமல் சீனாவின் பிரத்யோக விமானத்தில் அவர் வந்திருப்பதே பலத்த சர்ச்சையினை ஏற்படுத்தியிருக்கின்றது , பாதுகாப்பு வாய்ந்தது என சீன விமானத்தில் தலைவர் வந்தார் என வடகொரிய தரப்பில் சொல்லபட்டாலும் உலகம் சீனாவின் அதிகாரமாகவே இதனை பார்க்கின்றது

டிரம்ப் தன் பிரத்யோக விமானத்தில் வந்து இறங்கிவிட்டார்

சிங்கப்பூரில் இந்த இரு மிக பெரிய வில்லன்களும் ஒரே நேரத்தில் இருப்பதால் விழிப்பின் உச்சத்தில் இருக்கின்றது சிங்கப்பூர்

சந்தோஷா தீவு எனப்படும் உல்லாச தீவு பகுதியில் இருவரும் சந்திக்க ஏற்பாடாகி இருப்பதால் கடல் வான் செயற்கைகோள் என கடும் பாதுகாப்புகள்

வடகொரிய அமெரிக்க சர்ச்சை கிட்டதட்ட 60 வருடம் நீண்டவை. கென்னடி எல்லாம் அன்று மகா தீர்க்கமாக சீறிகொண்டிருந்தார்

எந்த அமெரிக்க அதிபரின் பேச்சுகளுக்கும் இந்த கிம்மின் தந்தையும், தாத்தாவும் செவிசாய்க்கவே இல்லை, அவர்கள் காலத்திலே வடகொரியாவிடம் அணுகுண்டு இருந்தது என செவிவழி செய்திகள் உண்டு

நானே வடகொரிய அதிபரை பேச்சுவார்த்தைக்கு இழுத்து முழங்காலில் இட்ட மாபெரும் பராகிரமசாலியான அமெரிக்க அதிபர் என முழங்கிகொண்டே சிங்கப்பூர் வந்திருக்கின்றார் டிரம்ப்

நாளை மறுநாள் சந்திப்பு.

நாளை முழுக்க இருவரும் தங்கள் அறையில் ஒத்திகை பார்த்துகொண்டே இருப்பார்கள்

நிச்சயம் வரலாற்றின் மிகபெரும் முக்கியமான சந்திப்புகளில் இதுவும் ஒன்று, போரின் விளிம்பிற்கு சென்றுவிட்ட தேசங்கள் இப்பொழுது பேச போகின்றன‌

பார்க்கலாம், எல்லாம் நலமாய் முடிந்தால் யாவருக்கும் மகிழ்ச்சி

 

கால்பந்து உலக கோப்பை ரஷ்யா 2018

Image may contain: 2 people, people playing sport and text

உலககோப்பை கால்பந்து ஜுரம் உச்சகட்டத்தில் அடிக்க ஆரம்பித்தாயிற்று, நிகழ்வினை மிக பாதுகாப்பாக நடத்த வேண்டும் என புட்டீனின் ரஷ்யா கடும் விழிப்பில் இருக்கின்றது

வழக்கமாக உலக கோப்பை கால்பந்து போட்டியில் சில கணிப்புகள் இருக்கும், இப்பொழுது இந்த அணிதான் கோப்பையினை வெல்லும் அணி என யாராலும் கணிக்க முடியவில்லை

இத்தாலி எனும் பலம்வாய்ந்த அணி, முன்னாள் சாம்பியன் ஆன அந்த அணி இம்முறை தகுதியே பெறவில்லை என்பது இத்தாலியர் சோகம்

பிரேசில் கடந்தமுறை மகா கேவலமாக தோற்றது பெரும் அதிர்ச்சி அதற்கு பழிதீர்க்க களமிறங்குகின்றது, நெய்மர் என்பவர் நல்ல ஆட்டக்காரர் என்றாலும் இன்னும் முழு உடல்நலம் பெறவில்லை

சாம்பியன் ஜெர்மனி நிலையும் சொல்லிகொள்வது போல் இல்லை

மெஸ்ஸிக்கும், கிறிஸ்டியானோ ரொனால்டாவிற்கும் இது கடைசி உலககோப்பை என்பதால் அர்ஜென்டினாவும் போர்ச்சுகல்லும் கடும் எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றன‌

மெஸ்ஸி நல்ல வீரர் சந்தேகமில்லை, ஆனால் விவேகமாக ஆடுகின்றாரே தவிர ஆக்ரோஷமில்லை என சொல்லபடுகின்றது, இன்னொன்று எதிர் அணி கால்பந்தை தட்டி பறிப்பதை விட மெஸ்ஸியினையே முற்றுகையிட்டு நெருக்கடி கொடுக்கின்றது

ரொனால்டோவின் ஆட்டம் சுவாரஸ்யமானது

இது போக சில அணிகள் அதிர்ச்சி கொடுக்கும், சில மொக்கை அணிகளின் சில வீரர்கள் கவனிக்கபடுவார்கள் எகிப்தின் சாலா போல‌

பலத்த எதிர்பார்ப்புடன் உலககோப்பை கால்பந்து தொடங்க போகின்றது

ஒவ்வொரு உலககோப்பை கால்பந்து போட்டியும் ஒரு அபார கால்பந்து ஆட்டக்காரனை அடையாளம் காட்டும்

பீலே, மாரடோனா, ரொனால்டோ, ரொனால்டினோ, ஜிடேன், பாகியோ, குளோஸ் என அது காட்டிகொண்டே இருக்கும்

எத்தனை பேர் வந்தாலும் 1986ல் அர்ஜென்டினாவின் மாரடோனாவின் ஆட்டம் எந்நாளும் சுவாரஸ்யமானது

முதல் கோலை கையால் போட சர்ச்சையானது , ஏமாற்றி கோல் அடித்தார் எனும் பழி விழுந்தது

அடுத்த நொடியே தான் யார் என காட்டினார் மாரடோனா கிட்டதட்ட 8 ஆட்டகாரர்களை மின்னல் வேகத்தில் தாண்டி பந்தை கொண்டுவந்து அவர் அடித்த கோல் இந்த நூற்றாண்டின் மிக சிறந்த கோல்

பீலேவின் ஆட்டங்களும் அவ்வளவு புகழ்வாய்ந்தவை, அவர் தன் புகழ்பெற்ற சிசர் கட் ஸ்டைலை அப்பொழுது கொடுத்தது மறக்க முடியாது

இந்த உலககோப்பை யாரை காட்டபோகின்றது என உலகம் எதிர்ப்பார்த்துகொண்டிருக்கின்றது

உண்மையில் உலககோப்பை கால்பந்து என்பது லத்தீன் அமெரிக்க நாடுகளும் ஐரொப்பிய நாடுகளும் மோதிகொள்ளும் கால்பந்து போர்

இதில் அமெரிக்கா , சீனா போன்ற ஒலிம்பிக் சாம்பியன்கள் எல்லாம் உள்ளே வராது, காரணம் அவர்கள் கவனம் எல்லாம் ஒலிம்பிக் ஒன்றே, தடகளம் மட்டுமே

இந்தியா இப்பக்கமே வராது, ஆனால் இப்பொழுது இந்திய கால்பந்து அணி கொஞ்சம் வலுபெற்றிருக்கின்றது. உலக தரம் அடைய இன்னும் நெடுங்காலம் ஆகலாம்

உலகம் ரஷ்யாவில் கால்பந்து களம் காண இந்தியா கென்யாவோடு கால்பந்தில் மல்லுகட்ட தயாராகின்றது

மொத்தத்தில் தென் அமெரிக்காவும் ஐரோப்பாவும் விளையாட போகின்றன மற்ற கண்டங்கள் பார்த்துகொண்டே இருக்க போகின்றன‌

 

ராவணன் பூமியிலே காலாவிற்கு எதிர்ப்பா?

இலங்கையில் ரஞ்சன் ராமநாயக்க என்றொரு அமைச்சர் உண்டு, அவர் ஒரே நாளில் உலக தமிழரால் உற்று நோக்கபடுகின்றார்

அப்படி என்ன செய்தார்? ஈழசிக்கலுக்கு தீர்வுகண்டாரா இல்லை பரபரப்பு அறிக்கை ஏதும் விட்டாரா என்றால் இல்லை, மாறாக ரஜினிக்கு கோரிக்கை வைத்துவிட்டார்

என்ன கோரிக்கை என்றால் இதுதான்

“அய்யா ரஜினி நான் உங்களின் தீவிர ரசிகன், தயவு செய்து இனி இந்த ரஞ்சித் இயக்கத்திலும் உங்கள் மருமகன் தயாரிபிலும் நடிக்கவே வேண்டாம்

ரஞ்சித் என்பவர் உங்களை வீணடித்தது தவறு, உங்கள் மருமகன் அதை பார்த்துகொண்டிருந்தது அதைவிட பெரும் தவறு

இப்படி உங்கள் படத்தை காண சகிக்கவே இல்லை, மிக மிக வெறுப்பாய் உணர்ந்தோம்

உங்கள் படமும் அதனால் உங்கள் பெயரும் ரஞ்சித்தால் நாசமாய் போனதில் மிக்க துயரம், இனி இப்படியான காரியங்கள் வேண்டாம்

இப்படிக்கு
ரஞ்சன் ராமநாயக்கே”

ராவணன் பூமியிலே காலாவிற்கு எதிர்ப்பா?

ஒரு புத்தமத சிங்களனுக்கே காலா படம் பெரும் வெறுப்பினை ஏற்படுத்திற்கு என்றால் தமிழகத்திற்கு எப்படி இருந்திருக்கும்

ஆனால் இதில் எதிர்விளைவுகளும் உண்டு

அது எப்படி தமிழ் இன விரோதி சிங்களன் ரஜிக்கு வக்கலாத்து வாங்கலாம்? அப்படி இருவருக்கு என்ன ரகசிய உறவு என பலர் கிளம்பலாம்

எனினும் சிங்களையே அலற வைத்திருக்கின்றார் ரஜினி என்பதுதான் ஆச்சரியம்

 
 

மோடி மறுபடி பிரதமர் ஆவார் என இயேசு சொன்னதாக பால் தினகரன்

மோடி மறுபடி பிரதமர் ஆவார் என இயேசு சொன்னதாக பால் தினகரன் சொல்லிகொண்டிருக்கின்றாராம்

இயேசு எங்களை பொறியியல் கல்லூரி கட்டி சம்பாதிக்க சொன்னார் என பகிரங்கமாக சொன்ன குடும்பம் அது, அவர்களிடம் இயேசு மோடி பிரதமர் ஆவார் என சொல்வதில் என்ன ஆச்சரியம்

இயேசு என்னவோ அவர்கள் குடும்ப சொத்து என்பது போலவே பேசிகொண்டிருக்கின்றார்கள்

சொத்துக்களை காப்பாற்ற இந்த வீரமணி என்ன நாடகம் ஆடுவாரோ அதனை தினகரன் குடும்பமும் செய்யும்

இவரிடம் இயேசு வந்து பேசியிருக்க முடியாது, வந்திருந்தால் அது இயேசுவாக இருக்கவும் முடியாது

காலா : திரை விமர்சனம்

Image may contain: one or more people, beard and text

குடிசைவாசிகளை ஒரு வில்லன் காலி செய்ய சொல்வது “பாவமன்னிப்பு” எம்.ஆர் ராதா காலத்திலே தொடங்கிவிட்ட கதை, கிட்டதட்ட 50 ஆண்டுகளாக பலர் நடித்த கதையில் ரஜினியும் வந்து நடித்துவிட்டார்

ஆனால் எப்படி எடுத்திருக்கின்றார்கள் என்றால், 20 பொருள் சேர்த்து செய்யவேண்டிய பிரியாணியினை கையில் கிடைத்தது என்பதற்காக மட்டன் , சிக்கன், மீன், இறால், கருவாடு, பாகற்காய் ,கையில் சிக்கிய காய்கறிகள், புளி,தேங்காய், ஆமைகறி எல்லாம் போட்டு சமைத்தால் பிரியாணி வருமா?

கருப்பாக படு பயங்கர சுவையோடு ஒரு வஸ்து வரும்

அதுதான் காலா

தொடக்கத்திலே நிலம் அதிகார குறியீடு என உளறுகின்றார்கள்? என்று நிலம் அதிகார குறியீடாக இருந்தடு

வளமான ஆற்றங்கரைக்கு அக்காலத்தில் சண்டை நடந்தது, கங்கை, காவேரி, சிந்துநதிகரை, நைல்நதிகரை என மோதினார்களே தவிர வறண்ட பாலை நிலத்தில் எவன் மோதினான்?

இன்று நிலம் என்பது செல்வம், பணம். அதனால் மோதிகொள்கின்றார்களே தவிர அதிகாரம் எல்லாம் அல்லவே அல்ல‌

இதெல்லாம் கடும் சொதப்பல். இருக்கும் இடத்தை பொறுத்துத்தான் நிலத்திற்கு மதிப்பு, இது சொத்து எனும் பண வகையில் வருமே தவிர, அதிகாரம் எனும் வகையில் வரவே வராது

அவர்கள் விருப்பத்திற்கு திரிகின்றார்கள்

என்ன நடந்திருக்கின்றது?

ரஜினிக்கு பாபநாசம் கமலஹாசன் போல நெல்லை தமிழ் பேச ஆசை வந்திருக்கின்றது, அப்படியே இன்னொரு விபரீத ஆசையும் வந்திருக்கின்றது

அதாவது முன்பெல்லாம் சினிமா அரசியலை ஆட்டி வைத்திருந்தது, இப்பொழுது சினிமாதுறை இல்லாத அரசு தமிழகத்தில் வந்திருக்கின்றது, சினிமாக்காரர்களை அந்த‌
அரசு எப்படி நடத்துகின்றது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை,

மெர்சலில் கூட கண் கூடாக கண்டது

சினிமா அரசியலின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் ரஜினிக்கு, தமிழக அரசினை நடத்தும் பிஜேபி மேல் சினிமா நட்சத்திரமக கோபம் இருந்திருக்கின்றது

அப்படியே துக்ளக் குருமூர்த்தியோடு பேசும்பொழுது ராமசந்திரன் எப்படி விவசாயி, மாட்டுகார வேலன், படகோட்டி, ரிக்ஷாக்காரன் என பல தரப்பை கவர்ந்தாரோ அப்படி பல சாதியினை கவரும் அவசியம் ரஜினிக்கு இருப்பதும் புரிய வந்திருக்கின்றது

(விரைவில் ரஜினி வேல்.ராமமூர்த்தியுடன் ஒரு படத்தில் இணைந்து மஞ்சள் வேட்டி விரைவில் கட்டுவார்..)

இப்படி ரஜினி ஒரு பக்கம் சுற்ற, கபாலியில் சிக்கிய ரஜினியினை முழுவதுமாக சோலி முடிக்காமல் விட்டுவிட்டோமோ என்ற குற்ற உணர்வுடன் ரஞ்சித் இருந்திருக்கின்றார்

லோ பட்ஜெட்டில் மாமனாரை போட்டு அள்ளும் திட்டம் தனுஷுக்கு இருந்திருகின்றது, ரஜினிக்கு தார் பூசியது தவிர படத்தில் செலவே இல்லை

இவர்கள் மூவரும் சந்தித்த புள்ளி காலா

அதிலும் வகையாக குழம்பி இருக்கின்றார்கள்

முதலில் பெரியார் கருப்பு சட்டைக்கும் டெல்லிக்கும் நடந்த அரசியல் சமூக போராட்டம் போல யோசித்து, பின் தலித்தியம் கலந்து அப்படியே ராமயாணம் கதையினை கலந்து அள்ளிகட்டி அடித்துவிட்டார்கள்

மறக்காமல் நாயகன் படத்து காட்சிகளை தங்கள் பாணியில் சுட்டு நம்மை எல்லாம் எரிச்சபடுத்தி இருக்கின்றார்கள்

படம் முழுக்க சாவு வீட்டில் இருப்பது போன்ற பிரம்மை, அப்படி ஒரு இறுக்கம், ஒரு இருட்டு

சம்பந்தமே இல்லாமல் சில விஷயங்களை பார்க்கும்பொழுது பிரஷர் ஏறுகின்றது

முதலில் கதைபடி காலா குடும்பம் சுடலைமாடனை கும்பிடும் வம்சம் என தெரிகின்றது , அப்படி செய்தால் நாடார் முத்திரை விழும் என்பதால் காலா என்றொரு கற்பனை சாமியினை அவர்களே உருவாக்கிவிட்டார்கள்

நானா படேகர் விட்டில் ராமர் சிலை கக்கூஸ் வரை இருக்கின்றது, மராட்டியர்கள் கணபதி, அன்னை பவானி என வணங்குவார்களே தவிர ராமர் அவர்கள் விருப்ப தெய்வம் அல்ல, அதெல்லாம் உபி ஏரியா

ரஜினி வீட்டிலும் வெளியிலும் புத்தர் இருக்கின்றார், எந்த நெல்லை குடும்பம் தாராவியில் புத்தரை வணங்குகின்றார்கள் என்றும் தெரியவில்லை

ஈழ அழிவு முதல் ரொகிங்கியா அழிவு வரை இந்த புத்தமதமே ஏற்படுத்திற்று. ஈழதமிழரை அழித்த புத்த மதம் தாராவியில் எப்படி வந்தது என நாம் கேட்க கூடாது

படம் முழுக்க சொதப்பல்கள், ராம்ரை வலிந்து திணிக்கின்றார்கள். வில்லன் காலினை வணங்க சொல்லி செருப்பினை காட்டுகின்றார்கள்.

ராமனின் செருப்பு அரசாண்டதை சாடுகின்றார்களாம்

இப்படி எல்லாமா அபத்தம்? கதைக்கு சம்பந்தமே இல்லா காட்சிகள்

ராமாயணம் தமிழ் திரையுலகில் சம்பூர்ன ராமயாணமாக எடுக்கபட்டது, பின் அதே சாயலில் மணிரத்னம் ராவணா வரை எடுத்தார், ஆனால் ரஞ்சித் சொதப்பியது போல் யாரும் சொதப்பவில்லை

காலா கதை ராமாயண கதைதான், ஈஸ்வரி ராவும் மூத்த மகனும் சாகும்பொழுது மண்டோதரியும் இந்திரஜித்தனும் கண்ணுக்குள் வந்து போகின்றார்கள்

ஓங்கிய வாளை இறக்கும் படேகர் “இன்று போய் நாளை வா” என்ற வசனத்தை சொல்லாமல் சொல்கின்றார்

ஆனால் அதற்கு மேல் தெரியாமல் கருப்பு உழைக்கும் வண்ணம் என வசனம் என கடும் எரிச்சல், கீழ்வீட்டு சீனர் 80 வயதிலும் கடுமையாக உழைக்கின்றார் ஆனால் கருப்பரில்லை, உழைப்பில் ஜப்பானியரை மிஞ்சமுடியாது அவர்களும் கருப்பரில்லை

ராமயண கதை என உணர்த்திவிட்டு ராவணனுக்கு கருப்பு உடையும் ராமனுக்கு வெள்ள்ளை நிரமும் கொடுத்து கடும் குழப்பம்

ராமன் கருப்பு நிறத்தவன் என்றுதான் புராணம் சொல்கின்றது

இன்னும் கொடுமையாக‌ வில்லன் கீதையினை ஒரு மாதிரி உதாசீனமாக சொல்லும்பொழுது அப்படியே கோபம் வருகின்றது, கீதை எப்படி ஒரு ஞானநூல், அதன் மாபெரும் தத்துவம் என்ன‌?

இயேசு தன் சீடரிடம் கடைசியாக உலகெல்லாம் நமது அரசு வரவேண்டும் என்றால், அவர் என்ன அரசாள சொன்னாரா? அதன் அர்த்தம் எல்லோர் நிலங்களையும் அபகரியுங்கள் என்பதா?

ஞானநூல்களுக்கு இருக்கும் அர்த்தம் வேறு, மடையனே இப்படி நேரடி பொருள் எடுத்து வம்பு வளர்ப்பான்

புரியாவிட்டால் விட்டுவிடலாம் மாறாக கீதையே நிலத்தை அபகரிக்க சொல்லபட்டது என்பது போன்ற வசனங்கள் கண்டிக்கபட வேண்டியவை, இவை சரியான விஷயம் அல்ல‌

நில அபகரிப்பு அதிகாரம் என சொல்பவர்கள் இஸ்ரேலை கண்டிக்கலாம், சீனாவினை கண்டிக்கலாம் ஏன் சிங்களன கூட கண்டிக்கலாம்

ஆனால் சிங்களன் வணங்கும் புத்தனை வணங்கிகொண்டே தமிழர் உரிமை பேசுகின்றார்களாம், உருப்படுமா?

இதனிடையே இந்த இசை இம்சை வேறு, படம் முழுக்க என் மண், என் கலாச்சாரம், என் கள் என்கின்றார்கள், ஆனால் பாடல் முழுக்க ராப் இசை

அதை கூட பொறுக்கலாம், காலா நடந்தாலும் 4 இம்சைகள் வந்து “ஹே காலா வா வெட்டு குத்து கொல்ல்லு” என ஆடிகொண்டே பாடுகின்றன,

ஆனால் ஒருவன் செத்துகிடக்கும் போதும் “ஹேய் காலா என்ன செய்ய போறே..” என ஆடிகொண்டே வரும்பொழுது செருப்பை எடுக்க தோன்றுகின்றது

அந்த ஹீமா குரேஷியினை ஷெரினா என காணும்பொழுது மறைந்த நடராஜனை நினைவுபடுத்துகின்றார்களாம், அப்பெண் வேறு அந்த செரீனா போலவே இருகின்றது

(நடராஜன் கொஞ்சநாள் கழித்து செத்திருக்கலாம்)

படத்தில் மகா எரிச்சல் இந்த மேல்நாட்டு ஆட்ட கோஷ்டிகள், தலை வெட்டிய ஆடுபொல் எதற்கெடுத்தாலும் தரையில் கிடந்து உருளுகின்றன‌

படம் முழுக்க செத்த வீட்டில் இருந்த பிரம்மை என்றால் படத்தின் கிளைமேக்ஸில் சுடுகாட்டுக்கே அழைத்து செல்கின்றார்கள், பல இடங்களில் கும்பலாக பேய் போல் ஆட்டம், அப்பொழுது கருப்பு நீலமாகின்றது

அதாவது பெரியாரின் கருப்பு வேண்டாம், அம்பேத்கரின் நீலம் பூசி பேயாட்டம் ஆடுவோம் என குறிப்பால் அழைக்கின்றார்களாம்

நெல்லை மாவட்டம் சுடலை சாமி சுடுகாட்ட்ல் ஆடுவது போல, அல்லது உவரி, ராஜாவூர் பக்கம் பேய் ஆடுவது போல கடும் ஆட்டம்

அதில் செத்த ரஜினி வருகின்றார், மகா குழப்பம்

இடையே அங்கிள் சீமானை கலாய்பதாக எண்ணி பிரபாகரன் முடிவிற்கே ரஜினி செத்ததையும் மறைக்கின்றார்களாம்

படத்தை நினைத்தாலே பகீர் என்கின்றது, கபாலி தோல்வி படம் என்பதை காலா எனும் குப்பையினை எடுத்து கபாலி சூப்பர் என சொல்லவைத்ததை தவிர வேறு ஒரு மண்ணாங்கட்டியுமில்லை

தஞ்சை கோவிலை பார்த்துவிட்டு எவனாவது பிளாஸ்டிக்கிலும் தெர்மாக்கோலிலும் கோவில் கட்டி இதோ சாதனை என்றால் எப்படி இருக்கும்? அதேதான் நாயகன் படத்தை நெல்லை தமிழில் ரஜினிக்கு எடுக்கின்றோம் என சொல்லி சொதப்பிவிட்டார்கள்

படத்தின் பெரும் ஆறுதல் சில விஷயங்கள். காதல் டூயட் பாடாமல் தன் வயதுகேற்ற வேடத்தில் ரஜினி நடித்திருப்பது வாழ்த்துகுரியது, ஆனால் இந்த பொற்காலத்தை ரஞ்சித் சிதைத்திருப்பதுதான் வருத்தம்

நிச்சயம் ரஜினி மாபெரும் அற்புதமான நடிகர், காலாவில் அவரின் நடிப்பு மகா அற்புதம். அமிதாப்பச்சன் போல அவர் ஹீரோய்சத்தை விட்டு இயல்பு நடிப்புற்கு திரும்பும் நேரமிது, ஆனால் ரஞ்சித் அந்த அழகிய கோலத்தின் மீது சாணியடித்து விட்டார்

ஈஸ்வரி ராவ் என்பவரின் திறமை அட்டகாசமாக பளிச்சிட்ட படமிது, நெல்லை பெண்களுக்குரிய வெகுளி மற்றும் தைரியத்தை அப்படியே முகத்தில் கொண்டுவந்திருக்கின்றார், இயல்பான நடிப்பு தமிழ்திரையுலகம் அவரை பயன்படுத்தலாம்

படத்தை உண்மையிலே தாங்கி நிற்பவர் நானா படேகர். நடிப்பு ராட்சசன். வசனம் அதிகம் பேசாமல் முகபாவனையிலே வில்லத்தனம் காட்டும் அற்புதமான நடிப்பு

உண்மையில் இப்படம் நானா படேகர் என்பவரின் நடிப்பு ஒன்றை உயர்த்திகாட்டிய படம், விருதுகுரிய நடிப்பு

இந்த கதையில் இமாம் அண்ணாச்சி , இனிகோ பிரபாகரர் என இருவர் மிஸ்ஸிங். நிச்சயம் இனிகோ பொருந்தியிருப்பார, ஆனால் அவரை போட்டால் தலித் படமாக வராது அல்லவா? அதனால் தவிர்த்திருக்கலாம்

மற்றபடி படம் சொல்லவருது ரஜினிக்கு சுத்தமாக நேரம் சரியில்லை, இந்த ரஞ்சித் என்பவர் மாபெரும் குழப்பவாதி

இயல்பான கதையில் வலிய திணிக்கபடும் வசனமும், காட்சிகளும் மாபெரும் அபத்தத்தையும் எரிச்சலையும் கொடுக்கும், காலா அதனைத்தான் செய்கின்றது

படத்தின் முதல்பகுதி மோசம், இரண்டாம் பகுதி மகா மோசம், அந்த புளூபிலிம் காட்சி அதாவது நீலவண்ண ஆட்டம் மாபெரும் எரிச்சல்

இந்த வருடத்தின் முதல் 10 குப்பை படம் என்றால் நிச்சயம் காலா இருக்கும், ரஜினி சினிமா வாழ்வின் மாபெரும் கருப்பு புள்ளி என்றால் இப்படம் முதலிடத்தில் இருக்கும்

நிச்சயம் ரஜினி புத்திசாலி, இல்லாவிட்டால் 35 வருடமாக நம்பர் 1 நடிகனாக இருப்பது சாத்தியமல்ல, திரையுலக சதியினை தாண்டி ராமசந்திரன், கலைஞர், ஜெயா, மூப்பனார், சோ என பலரையும் சமாளித்து அந்த இடத்தில் இருப்பது சாத்தியம் அல்ல, பின் ஏன் இப்பொழுது இப்படி ஆனார்?

ரஞ்சித் என்பவருக்கு ரஜினி எனும் வாழைபழத்தில் நஞ்சு வைத்து கொடுத்தால் தமிழகம் ஏற்றுகொள்ளும் என்ற திட்டமா?

இவர்கள் என்ன திட்டத்தில் இருக்கின்றார்கள் என்றே தெரியவில்லை, ஆனால் நம்மை எல்லாம் பைத்தியங்கள் என நினைத்துவிட்டது மட்டும் புரிகின்றது

வலுகட்டாயமாக ராமர், புத்தர், ராவண காவியம் எல்லாம் புகுத்தபட்டது மாபெரும் உள்நோக்கம் கொண்டது, காதை திருகி கண்டிக்க வேண்டிய விஷயம்

படம் முடிந்து வரும்பொழுது நமது சிந்தனையில் வந்தது இதுதான், ரஜினிக்கு என்ன அடுத்த படத்திலே எழும்பிவிடுவார். இந்த ரஞ்சித் ரஜினிபடம் தவிர வேறுபடத்தில் அட்டை கத்தி கூட வீசமாட்டார்

நஷ்டம் யாருக்கு என்றால் சாட்சாத் நமக்குத்தான்

டிக்கெட்டுக்கு கொடுத்த பணத்திற்கு 2 கிலோ மீன் வாங்கி இருக்கலாம் எனும் ஏக்கத்தோடு கண்களை துடைத்துகொண்டு வந்தாயிற்று

(படத்தில் ஒரே வருத்தம் அந்த ஹீமா குரேஷி வேடத்தில் எங்கள் தங்க தலைவி குஷ்புவினை அமர்த்தி இருக்கலாம், அட்டகாசமாக பொருந்தி இருப்பார்

ஆனால் நாசமாய் போகவேண்டும் என விதி இருப்பவர்களுக்கு அந்த நல்ல புத்தி எல்லாம் எப்படி வரும்)

%d bloggers like this: