கால்பந்து உலக கோப்பை ரஷ்யா 2018

Image may contain: 2 people, people playing sport and text

உலககோப்பை கால்பந்து ஜுரம் உச்சகட்டத்தில் அடிக்க ஆரம்பித்தாயிற்று, நிகழ்வினை மிக பாதுகாப்பாக நடத்த வேண்டும் என புட்டீனின் ரஷ்யா கடும் விழிப்பில் இருக்கின்றது

வழக்கமாக உலக கோப்பை கால்பந்து போட்டியில் சில கணிப்புகள் இருக்கும், இப்பொழுது இந்த அணிதான் கோப்பையினை வெல்லும் அணி என யாராலும் கணிக்க முடியவில்லை

இத்தாலி எனும் பலம்வாய்ந்த அணி, முன்னாள் சாம்பியன் ஆன அந்த அணி இம்முறை தகுதியே பெறவில்லை என்பது இத்தாலியர் சோகம்

பிரேசில் கடந்தமுறை மகா கேவலமாக தோற்றது பெரும் அதிர்ச்சி அதற்கு பழிதீர்க்க களமிறங்குகின்றது, நெய்மர் என்பவர் நல்ல ஆட்டக்காரர் என்றாலும் இன்னும் முழு உடல்நலம் பெறவில்லை

சாம்பியன் ஜெர்மனி நிலையும் சொல்லிகொள்வது போல் இல்லை

மெஸ்ஸிக்கும், கிறிஸ்டியானோ ரொனால்டாவிற்கும் இது கடைசி உலககோப்பை என்பதால் அர்ஜென்டினாவும் போர்ச்சுகல்லும் கடும் எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றன‌

மெஸ்ஸி நல்ல வீரர் சந்தேகமில்லை, ஆனால் விவேகமாக ஆடுகின்றாரே தவிர ஆக்ரோஷமில்லை என சொல்லபடுகின்றது, இன்னொன்று எதிர் அணி கால்பந்தை தட்டி பறிப்பதை விட மெஸ்ஸியினையே முற்றுகையிட்டு நெருக்கடி கொடுக்கின்றது

ரொனால்டோவின் ஆட்டம் சுவாரஸ்யமானது

இது போக சில அணிகள் அதிர்ச்சி கொடுக்கும், சில மொக்கை அணிகளின் சில வீரர்கள் கவனிக்கபடுவார்கள் எகிப்தின் சாலா போல‌

பலத்த எதிர்பார்ப்புடன் உலககோப்பை கால்பந்து தொடங்க போகின்றது

ஒவ்வொரு உலககோப்பை கால்பந்து போட்டியும் ஒரு அபார கால்பந்து ஆட்டக்காரனை அடையாளம் காட்டும்

பீலே, மாரடோனா, ரொனால்டோ, ரொனால்டினோ, ஜிடேன், பாகியோ, குளோஸ் என அது காட்டிகொண்டே இருக்கும்

எத்தனை பேர் வந்தாலும் 1986ல் அர்ஜென்டினாவின் மாரடோனாவின் ஆட்டம் எந்நாளும் சுவாரஸ்யமானது

முதல் கோலை கையால் போட சர்ச்சையானது , ஏமாற்றி கோல் அடித்தார் எனும் பழி விழுந்தது

அடுத்த நொடியே தான் யார் என காட்டினார் மாரடோனா கிட்டதட்ட 8 ஆட்டகாரர்களை மின்னல் வேகத்தில் தாண்டி பந்தை கொண்டுவந்து அவர் அடித்த கோல் இந்த நூற்றாண்டின் மிக சிறந்த கோல்

பீலேவின் ஆட்டங்களும் அவ்வளவு புகழ்வாய்ந்தவை, அவர் தன் புகழ்பெற்ற சிசர் கட் ஸ்டைலை அப்பொழுது கொடுத்தது மறக்க முடியாது

இந்த உலககோப்பை யாரை காட்டபோகின்றது என உலகம் எதிர்ப்பார்த்துகொண்டிருக்கின்றது

உண்மையில் உலககோப்பை கால்பந்து என்பது லத்தீன் அமெரிக்க நாடுகளும் ஐரொப்பிய நாடுகளும் மோதிகொள்ளும் கால்பந்து போர்

இதில் அமெரிக்கா , சீனா போன்ற ஒலிம்பிக் சாம்பியன்கள் எல்லாம் உள்ளே வராது, காரணம் அவர்கள் கவனம் எல்லாம் ஒலிம்பிக் ஒன்றே, தடகளம் மட்டுமே

இந்தியா இப்பக்கமே வராது, ஆனால் இப்பொழுது இந்திய கால்பந்து அணி கொஞ்சம் வலுபெற்றிருக்கின்றது. உலக தரம் அடைய இன்னும் நெடுங்காலம் ஆகலாம்

உலகம் ரஷ்யாவில் கால்பந்து களம் காண இந்தியா கென்யாவோடு கால்பந்தில் மல்லுகட்ட தயாராகின்றது

மொத்தத்தில் தென் அமெரிக்காவும் ஐரோப்பாவும் விளையாட போகின்றன மற்ற கண்டங்கள் பார்த்துகொண்டே இருக்க போகின்றன‌

 

பின்னூட்டமொன்றை இடுக