பழனிச்சாமி அரசு குறிவைத்திருப்பது ஜெயா டிவியினை

பழனிச்சாமி அரசு குறிவைத்திருப்பது ஜெயா டிவியினை . அதுதான் புல்டோசர் கணக்கில் பழனிச்சாமி அரசு மீது மண் வாரி தூற்றுகின்றது

அதற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் புதியதலைமுறை டிவியினை மிரட்டுகின்றார்கள். இங்கு அடித்தால் அங்கு அடங்கும் என்ற கணக்காக இருக்கலாம்

நிச்சயம் இம்மாதிரி நடவடிக்கைகள் பிரபாகரனுக்கு ஆதரவாக தந்தி டிவியில் சைமன் பேசும் பொழுதும் இன்னும் பல டிவிக்கள் அப்பட்ட தேசவிரோத நிகழ்ச்சி நடத்தும்பொழுதும் செய்திருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை

காரணம் ஜெயாவிற்கு அரசியல் கணக்கு இருந்தது, இன்னும் பலருக்கு இருந்தது

கொஞ்சமும் வருங்கால அரசியல் கணக்கே இல்லாத அரசு பழனிச்சாமியுடையது, அடுத்து நிச்சயம் வாய்ப்பே இல்லை நமக்கு ஏது வோட்டு வங்கி? நமக்கு ஏது எதிர்காலம் என மனம் போன போக்கில் இருக்கும் அரசு இது

அதனால் பல நடவடிக்கைக்கைகளை அது யாருக்காகவோ எடுக்கின்றது, அசால்ட்டாக எடுக்கின்றது

சுட வேண்டுமா சுடு? வழக்கு போட வேண்டுமா போடு, யாரையும் ஓட வைக்க வேண்டுமா வை, என்ன வந்துவிடும்? இல்லை இனி நமக்கு என்னதான் ஆபத்து ? என்ன வாக்கு எதிர்காலம்? ஒன்றுமே இல்லை என ஒருவித முக்தி நிலையில் இருக்கும் அரசு இது

விரைவில் பாருங்கள், காமராஜர் முதல் ஜெயா வரை பலர் எடுக்க தயங்கிய பெரும் முடிவுகளை பழனிச்சாமி அரசு அசால்ட்டாக எடுக்கும், அதிரடியாக எடுக்கும்

எந்த விளைவுகள் அவர்களை பாதிக்கும்? என்ன ஆகிவிடும்? ஒன்றும் ஆகாது

அதனால் வரலாறு காணாத இரும்பு முதல்வர் என்ற பட்டமும் பழனிச்சாமிக்கு கிடைக்கும், அவர் விதி அப்படி இருந்திருகின்றது

 
 

அண்ணே தமிழ்நாட்டு அரசியல் எங்கே போகுது?

அண்ணே தமிழ்நாட்டு அரசியல் எங்கே போகுது?

1960களில் இருந்து இந்திய தேசியத்தில் இருந்து விலகி ஒருமாதிரி சென்ற தமிழகம் இப்பொழுது தேசியத்திற்கு திரும்ப முடியாமலும் அதே நேரம் சரியான திராவிட தலமை இல்லாததாலும் மகா குழப்பத்தில் இருக்கின்றது

அதனால் தேசிய பாதையில் இணையவும் முடியவில்லை, திராவிட தலைவர்களும் சரியில்லை, திராவிட வழியும் தெரியவில்லை தனிநாடு கோரவும் முடியாது

இப்படி ஏக சிக்கலில் என்ன செய்வதென்றே தெரியாமல் மகா குழப்பத்தில் நிற்கின்றது


வன்முறையை தூண்டும் வகையில் பேசும் வைகோ-சீமானை கைது செய்ய வேண்டும்- எச்.ராஜா

அய்யா முதலில் எஸ்.வீ சேகரை கண்டுபிடிக்க வேண்டும், அதை ஏன் மறைக்கின்றீர்கள்??


Image may contain: 1 person, textமேற்கு தொடர்ச்சி மலையினை இடிக்க வேண்டும், பூமி தட்டையானது இல்லாவிட்டால் கடல் எப்படி கொட்டாமல் இருக்கும் இது போன்ற அரிய தத்துவங்களை தும்பிகள் சொல்ல தொடங்கியாயிற்று

அவர் ஏதோ முப்பாட்டன், தமிழ் உணவு, ஆடுமாடு மேய்ப்பது அரசு வேலை, 5 தலைநகரம் அது இது என அள்ளிவிட்டால் தும்பிகள் எங்கோ பாய்கின்றன‌

பின் அங்கிள் சைமன் என்ன செய்வார்?

வைகோ வாழ்க, ரஜினி பரவாயில்லை என தலை தெறிக்க ஓடமாட்டாரா?

அதனைத்தான் செய்கின்றார் சைமன்…

(விகடன் இப்பொழுதெல்லாம் பைத்தியங்களை பேட்டி எடுத்து ஒரு மாதிரியான கலாய்ப்பில் இறங்கிவிட்டது, நுட்பமாக சீண்டி விளையாடுகின்றார்கள்

காலா விவகாரத்தில் கூட கிரேட் ரஞ்சித் என கலாய்த்திருக்கின்றது, அது புரியாமல் எம்மிடம் ஏய்ய்ய் விகடன் சொன்னதை பார் என பலர் வம்புக்கு வருகின்றார்கள்)

 

அண்ணே சைமனை கவனிதீர்களா, ரஜினியினை ஆதரிப்பது போல பேசியிருக்கின்றார்

இதிலென்ன ஆச்சரியம்?, இன்னும் கொஞ்சநாளில் பிரபாகரன் பெரும் கொலையாளி, அவரின் தம்பி என சொன்னதற்கு நான் வெட்கபடுகின்றேன், அவர் எனக்கு ஓனான் கறி கூட தரவில்லை என சொல்லி கடும அதிர்ச்சி கொடுப்பார் பாருங்கள்

மரக்கிளையின் நுனிக்கு செல்லும் குரங்கு அடுத்துஎங்காவது தாவத்தான் செய்யும், அதன் இயல்பு அது

அடுத்த தாவல் கோபாலபுரத்து வீட்டு மொட்டைமாடியாக இருக்கலாம்


திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்க ரஜினி பயன்பட வேண்டும் : தமிழருவிமணியன்

அதெல்லாம் இருக்கட்டும் மணிசார், காலாவில் ரஜினியினை சுற்றிவரும் நாயின் பெயர் மணி, அது உங்களை குறிக்கும் குறீயீடு என பல செய்திகள் வருகின்றன‌

அதுபற்றி ஏதும் கருத்து உண்டா?


 

வந்த பறவைகள் எல்லாம் திரும்பி சென்றுவிட்டன போதிய நீர் இல்லை ,வேடந்தாங்கல் சரணாலயம் மூடப்பட்டது : செய்தி

தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள்தான் வெளிமாநிலங்களுக்கு செல்கின்றன என்றால், பறவைகளும் செல்ல தொடங்கியாயிற்று

ஒருவேளை அந்த பறவைகளுக்கும் நம்மையும் சுட்டு கொன்றுவிடுவார்கள் எனும் அச்சமோ என்னமோ?

இன்னும் எதெல்லாம் கிளம்புமோ தெரியவில்லை


சல்மான்கானை சொல்ல சதி : பரபரப்பு செய்தி

சல்மான்கானை சொல்ல சதி : பரபரப்பு செய்தி

இரு நாட்களுக்கு முன்புதான் மோடியினை கொல்ல சதி என செய்திகள் வந்தன, இப்பொழுது சல்மான் கானுக்கு மிரட்டலாம்

ஆக கொஞ்ச நாட்களாக இந்தியாவில் கலவரமில்லை, பெரும் வன்முறை இல்லை என்ற குறையினை களைய பெரும் திட்டத்தை யாரோ தீட்டிகொண்டிருக்கின்றார்கள்

தேசம் சவாலான நேரத்தை கடந்துகொண்டிருக்கின்றது, எதற்கும் எல்லோரும் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.

 

இந்த மகா அற்புத அழகு யாருக்கு சாத்தியம்?

Image may contain: 1 person, close-up

பட்டை தீட்டபடாத வைரம் என்பது இதுதான், ஆம் தலைவி மேக் அப் இல்லாமல் இருக்கும் அற்புதமான தருணம்

இந்த மகா அற்புத அழகு யாருக்கு சாத்தியம்?

நமக்கு எழும் கேள்வி எல்லாம், தலைவியே இவ்வளவு அழகு என்றால் அவரை படைத்த கடவுள் எவ்வளவு அழகாக இருப்பார்?

ஆக கடவுளை தேடும் ஆன்மீக ஞானத்திற்கும் தலைவியே வழிகாட்டி என்பதில் சங்கம் பெருமை கொள்கின்றது

 

இந்திய கால்பந்து ஆட்டக்காரர் சுனில் சேத்ரி நன்றாக ஆடுகின்றார்

இந்த சுனில் சேத்ரி நன்றாக ஆடுகின்றார், பாட்டியா விஜயன் வரிசையில் இந்திய ஆட்டக்காரர்

அதற்காக மெஸ்ஸி, ரொனால்டோ அளவு ஒப்பிடுவதெல்லாம் அபத்தம்

அவர்கள் கோல் அடித்தது எல்லாம் மாபெரும் ஜாம்பவான்கள் நிரம்பிய அணிகள், அவர்களிடம் ஒரு கோல் அடிப்பதே பெரும் பாடு

ரொனால்டோ, மெஸ்ஸி எல்லாம் அந்த வகை

சுனில் சவுத்திரி மோதிய அணிகளுடன் அவர்கள் மோதியிருந்தால் இந்நேரம் அவர்கள் கோல் கணக்கு பல ஆயிரங்களை தாண்டி இருக்கும்

ஆனால் சவுத்திரி தலை சிறந்த இந்திய ஆட்டக்காரர் என்பதை ஏற்றுகொள்ளலாம்

மெஸ்ஸியினை நெருங்குகின்றார் என்பதெல்லாம் சரி அல்ல‌

கபில்தேவ் வெஸ்ட் இண்டீஸை வென்றதற்கும், சேவாக் கனடா அணியுடன் 300 ரன்கள் அடித்தற்கும் வித்தியாசம் உண்டு

 

எழுத்தாளர் சவுபா என்பவருக்கு மாபெரும் துயர முடிவு ஏற்பட்டிருகின்றது

எழுத்தாளர் சவுபா என்பவருக்கு மாபெரும் துயர முடிவு ஏற்பட்டிருகின்றது

குடிகார மகனை கொன்ற வழக்கில் அவர் சிறையில் இருந்தவர், செத்தும் விட்டார். பெரும் சோகம் இது

நிச்சயம் நல்ல எழுத்தாளன் என்பவன் இளகிய மனமுள்ளவன், அந்த மனமே அவனை மிக சிறந்த படைப்புகளை உருவாக்க வைக்கும், வரலாறு கண்ட உண்மை இது

ஆனால் அந்த மனம் பெரும் நெருக்கடிகளை சிந்தனையில் வாழ்வில் சந்திக்கும், சாதரண நெருக்கடிகளை விட எழுத்தாளன் சந்திக்கும் நெருக்கடி மிக அதிகம்

பணம், அந்தஸ்து என ஓடும் உலகில் அவனால் ஒட்டமுடியாது

எல்லா கலைஞனுக்கும் ஒரு வடிகால் தேவையாயிருக்கின்றது, அதுவே அவனை சகல துக்கங்களிலிருந்தும் மீண்டெழ செய்யும்

பாரதியும், ஜெயகாந்தனும் கஞ்சாவில் ஆறுதல் அடைந்தார்கள்

நா.முத்துகுமார் போன்றவர்கள் மதுவிலே சோகத்தை மறந்தார்கள்

கண்ணதாசன் மதுவிலும் மாதுவிலும் தேடிவிட்டு பின் பகவானின் பாதங்களில் விழுந்தார், உடல் ஒத்துழைக்கவில்லை

(கலைஞர் போன்றவர்கள் விதிவிலக்கு பல களங்களில் சுற்றிவந்ததால் தனக்கான ஆறுதலை அவரே தேடிகொண்டார்..)

தமிழுலகின் மிகபெரிய சாபக்கேடு நல்ல திறமையானவர்களை சினிமாவும் அரசியலும் வீணடித்துவிடும்

ஏராளமான சிறந்த எழுத்தாளர் சினிமா கனவிலும், வலம்புரி ஜாண் போன்றவர்கள் அரசியலிலும் திறமையினை தொலைத்தனர்

எந்த எழுத்தாளனுக்கும் ஒரு நம்பிக்கை , ஒரு ஆறுதல் கட்டாயம் தேவை

அது பக்தியோ, குடும்பமோ இல்லை ஏதோ ஒரு ஆறுதலோ அரவணைப்போ கட்டாயம் தேவை

உமறுபுலவருக்கு சீதக்காதியும், கம்பனுக்கு சடையப்ப வள்ளலும் அப்படி இருந்தார்கள்

அப்படி அமையாத கலைஞன் துரதிருஷ்டம் பிடித்தவன்

சௌபா என்பவருக்கும் அந்த துரதிருஷ்டம் வாய்த்துவிட்டது சோகம், ஆழ்ந்த அஞ்சலிகண்ணீர் வடிப்பதை விட நாம் என்ன செய்யமுடியும்?

 
 

கிறிஸ்துவத்திற்கே மாபெரும் அவமானம் டிஜிஎஸ் தினகரன் குடும்பம்

Image may contain: 1 person, sitting

கோவணம் கூட இன்றி அந்தரத்தில் உயிர்விட்டார் இயேசு, அவர் 4 காசு சம்பாதித்ததாக செய்தி இல்லை

அவரின் சீடர்கள் சொந்தமாக தொழில் செய்துகொண்டே சபையினை கால்நடையாக நடந்து வளர்த்தனர், நல்ல உடை கூட இல்லை

அடிபட்டு உயிர்விட்டு அவர்கள் வளர்த்தது கிறிஸ்தவம்

இங்கே ஏதோ வெள்ளைக்காரன் பரம்பரை போல கோர்ட் சூட் போட்டுகொண்டு , பெரும் பணக்காரர் போல பல்கலைகழகம் நடத்திகொண்டு இருக்கும் இவர்கள் கிறிஸ்தவ போதகர்களாம்

நம்பிகொள்ளுங்கள்

அதிலும் டி.ஜி.எஸ் தினகரன் இறந்த அன்று அவரை அடக்கம் செய்ய பணமில்லை என அழுத இவரின் மாபெரும் மோசடியினை மறக்க முடியுமா?

அப்பொழுதெல்லாம் வந்து இவர் முதுகில் மிதிக்காத இயேசு, இவர் பணம் சேர்க்கும்பொழுதும் பல்கலைகழகம் நடத்தும்பொழுதும் வராத இயேசு

மோடி பிரதமர் ஆவார் என சொல்ல மட்டும் ஓடோடி வந்தாராம்

எத்தனையோ நோய்களை குணமாக்கிய இயேசு, சில சீடர்கள் அதை காணிக்கை வாங்கி செய்யலாமே என சொன்னபொழுது சொன்னார்

“இலவசமாக பெற்றீர்கள், இலவசமாகவே கொடுங்கள்”

அதெல்லாம் மறந்து முழுக்க பணம் குவிப்பதிலே இறங்கி, ஏதோ கார்பரேட் கம்பெனி ஓணர் போல கோட் சூட் போடும் இவரா கிறிஸ்தவ போதகர்?

எங்கிருந்தோ வந்து இந்திய தொழுநோயாளிகள் புண்களை துடைத்த தெரசா, தன் சொந்த சொத்துக்களை விற்று முல்லைபெரியாறு அணைகட்டிய பென்னிகுயிக், வேலூர் மக்களுக்காக வாழ்ந்த ஐடா ஸ்கேடர், நெல்லை பெண்களுக்காக தன் வாழ்வினை கொடுத்த டக்கர அம்மாள் போன்ற கிறிஸ்தவர் வரிசை இருக்க..

கிறிஸ்துவத்திற்கே மாபெரும் அவமானம் இந்த தினகரன் குடும்பம்

இது ஒரு கிறிஸ்தவ ஆர்.எஸ்.எஸ். அதனால் ஒரு டிங்கி ஒரு சங்கிக்கு ஆதவு தெரிவிப்பதில் ஆச்சரியமே இல்லை

(ஒரு சாதாரண வங்கி அதிகாரி எப்படி அரசியலுக்கும் வராமல் நிகர்நிலை பல்கலை கழகம் தொடங்க முடிந்தது என்றால் , அதுதான் கிறிஸ்தவ மோசடி)

 

ஆனந்த கண்ணீருடன் மாஸ்கோ கோப்பை தொடங்குகின்றது    

Image may contain: 9 people, people smiling, suit

கிரிக்கெட்டில் பிராட்மேன், கபில், டெண்டுல்கர், லாரா என்றொரு வரிசை உண்டென்றால் கால்பந்தில் பீலே, மரோடோனா என்றொரு வரிசை உண்டு

கால்பந்து கடவுள் பீலே, கருப்பு முத்து என கொண்டாடபட்டவர், அவர் ஆடிய காலத்தில்தான் பிரேசில் மாபெரும் வெற்றிகளை பெற்றது, அவரை ஹீரோவாக கொண்டுதான் இன்றுவரை பிரேசில் கால்பந்தில் அரக்கனாய் நிற்கின்றது

Image may contain: 1 person, playing a sport, child and outdoorஅந்த பீலே இப்பொழுது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ரஷ்ய உலக கோப்பையினை காணவரும்பொழுது மனம் கலங்கிற்று

எத்தனை கோல்கள் அடித்த கால்கள் அவை, அதுவும் கோல்போஸ்ட் அருகே பந்தை எகிற வைத்து அவர் அடித்த சிசர் கட் இன்றுவரை கொண்டாடபடும் நொடி

காலம் எந்த மாவீரனையும் ஒடுக்கி அமர வைக்கும், அது கலைஞரானாலும் சரி , பீலேவானாலும் சரி.

(பீலேவின் வாழ்க்கை சினிமாவிற்கு இசை அமைத்த வகையில் ஏ.ஆர் ரகுமானும் பீலே கால்பந்து வாழ்வில் இடம்பிடித்துவிட்டார்)

அந்த கருப்பு முத்தை முத்தமிட்டு வரவேற்கின்றார் மாரடோனா, கால்பந்து வீரனுக்கு இன்னொரு வீரன் கொடுக்கும் மரியாதை அது

கால்பந்தோடு கால்பந்து போல கரடிகுட்டியாய் உருண்டு ஓடி சென்று கோல் அடிக்கும் அந்த மாரடோனா

இருவரையும் நேரில் சென்று அழைக்கின்றார் புட்டீன்

ஒருவித ஆனந்த கண்ணீருடன் மாஸ்கோ கோப்பை தொடங்குகின்றது

 

சீனா உலகினை ஆண்டே தீருவது என முடிவெடுத்து விட்டது

No automatic alt text available.

சீனா உலகினை ஆண்டே தீருவது என முடிவெடுத்து பல காரியங்களை செய்துகொண்டிருப்பது ஒன்றும் ரகசியமல்ல, செங்கிஸ்கான், குப்ளே கான் காலங்கள் போல சீனா உலகின் மிகபெரும் சக்தியாக மாறவேண்டும், அதில் நிலைக்க வேண்டும் என மாபெரும் திட்டம் தீட்டுகின்றார்கள்

அவர்களுக்கென்ன தேர்தலா? கட்சியா? வாக்கு வங்கி அரசியலா? மதமா? சாதியா? ஒரு சிக்கலும் இல்லை, நினைத்ததை செய்யும் நிலையான அரசு அது

வல்லரசு ஆகவேண்டும் என்றால் ராணுவ ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாக வியாபார வசதிகளும் வேண்டும்

அமெரிக்கா உலகெங்கும் 200க்கு மேற்பட்ட ராணுவ முகாம்களை வைத்திருக்கின்றது என்றால் எதற்காக? எல்லாம் தங்கள் வியாபார வழிதடங்களை பாதுகாப்பதற்காக‌

சோவியத் யூனியன் இதை செய்ய தவறித்தான் தங்கள் இடத்தை இழந்தது, சீனா அதில் கவனமாக இருக்கின்றது

கடல் வழியாக உலகை இணைக்கும் முத்து மாலை திட்டம் அவர்களிடம் இருப்பது போல, நிலம் வழியாக மேற்குலகை இணைக்கும் திட்டமும் உண்டு

ரோமர் காலத்தில் எல்லா சாலையும் ரோமை நோக்கி என்றொரு பழமொழி உண்டல்லாவா, அப்படி இப்பொழுது ஆசியாவின் எல்லா சாலையும் ஷாங்காய் நோக்கி என கிளம்பி இருக்கின்றார்கள்

ஆசியாவின் எல்லா நாடுகளையும் அதன் துறைமுகங்களையும் சீனாவோடு இணைக்கும் நுட்பமான சாலை அது

One belt one road என சொல்லி அந்த மாபெரும் திட்டத்தை முன்னெடுக்கின்றார்கள், பழைய பட்டுசாலையின் நீட்சி அது

என்ன பட்டுசாலை என்றால்? செங்கிஸ்கான் காலத்திற்கு முன்பே சீனாவிலிருந்து இந்தியாவின் வடக்காக வந்து துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு செல்லும் வியாபார சாலை அது

யுவான் சுவாங், பாகியான் எல்லாம் அப்படித்தான் வந்தார்கள்

கிழக்கையும் மேற்கையும் இணைத்த சாலை அது, அலெக்ஸாண்டர் அதைத்தான் குறிவைத்து அடித்தான், கைபற்றினான்

எல்லா வல்லரசுக்களுக்கும் அன்று அதில் கண் இருந்தது, அரேபிய வியாபாரம் அதை நம்பித்தான் ஒரு காலத்தில் இருந்தது

இன்று மாறிவிட்ட காலத்தில் அதனை மீட்டெடுக்க சைனா விரும்பி காயினை நகர்த்துகின்றது, ஏற்கனவே ரஷ்யா வழியாக ஐரோப்பாவிற்கு ரயில் விட்டாயிற்று

இப்பொழுது கிர்கிஸ்தான், ஆர்மீனியா, பாகிஸ்தான் வழியாக செல்லும் சாலைகளை அமைக்க நேற்றைய ஷாங்காய் மாநாட்டில் கோரியிருக்கின்றார்கள்

எல்லா நாடுகளும் ஒப்புகொண்டிருக்கின்றன, ரஷ்யாவிற்கு சீனா முக்கிய எண்ணெய் பங்காளி என்பதால் அதை தவிர்க்க முடியவில்லை ஒப்புகொண்டாயிற்று

மற்ற நாடுகள் எல்லாம் ஆகட்டும் என ஒப்புகொள்ள, மோடி மட்டும் நாகரீகமாக எதிர்த்திருக்கின்றார், இந்திய நிலைப்பாடு அது இந்த சாலை நாளை யுத்தம் என வரும் பட்சத்தில் சீனாவிற்கு பெரும் அனுகூலமாக இருக்கும் என்பது இந்திய கணக்கு

ஏன்? யுத்தம் என வந்தால் அதே சாலையினை இந்தியா கைபற்றினால் அதே ஆபத்து சீனாவிற்கும் உண்டல்லவா என மாற்றி யோசித்தாலும், சீன பலத்தின் முன்னால் இந்தியாவிற்கு அந்த வாய்ப்பு இல்லை என இந்தியா உணர்ந்திருக்கின்றது

காஷ்மீர் வழியாக செல்லும் பாதையினை நாங்கள் எதிர்க்கின்றோம், நீங்கள் ஆப்கன் வட பகுதி வழியாக பாகிஸ்தானுக்கு சென்றால் ஆட்சேபனை இல்லை என சொல்ல்விட்டு வந்துவிட்டார் மோடி

பாகிஸ்தானின் கணக்கே இந்த சாலை வந்தால் இந்தியாவிற்கு செக் வைத்தது போல் இருக்கும் என்பதுதான், சீனாவின் வியாபார கணக்கில் ராணுவ கணக்கும் உண்டு

இந்தியா எதிர்ப்பு தெரிவித்தாகிவிட்டது, இனி என்னாகும் என்பது அடுத்தால்தான் தெரியும்

ஆயினும் செங்கிஸ்கான் காலத்திற்கு பின் உலகாள கிளம்பிவிட்டது அந்த இனம் என்பது மட்டும் உலகிற்கு தெரிய ஆரம்பித்தாயிற்று

 

சாதி வெறி பிடிச்சது நானா? இல்ல… இந்த பயலுகளா?

Image may contain: 3 people, sunglasses and close-up

நாம் தலித்திற்கோ அல்லது அதன் இயக்கங்களுக்கோ இந்த ரஞ்சித் என்பவருக்கோ எதிரி அல்ல, அதற்கு அவசியமும் அல்ல‌

அவர் எடுத்த அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை பற்றி ஏதாவது சொன்னோமா? சொல்ல அவசியம் அல்ல‌

ஆனால் ரஜினி என்பவர் கோடம்பாக்க சாமி, கிட்டதட்ட 30 வருடங்களாக அவர் படம் வருகின்றது என்றால் அது திருவிழா, மறுக்க முடியுமா?

அவரின் அரசியல் குட்டிகரணங்களும் , சர்ச்சையான கருத்துக்கள் மகா மோசம் என்றாலும் ஒரு நடிகனாக அவரையும் ஜனரஞ்சகமான படங்களை கொடுப்பவர் என்ற முறையிலும் அவரை ஒப்புகொண்டே ஆகவேண்டும்

ஒரு வித்தியாசமான சக்தி அவரிடம் இருக்கின்றது, அதுதான் உலகம் முழுக்க அவரை ரசிக்க வைக்கின்றது

மூன்றுமுகம், நெற்றிக்கண், மூன்றுமுடிச்சி என தூள்பறத்திய அந்த வில்லன் ரஜினியினை எந்திரன் சிட்டியாக மீட்டெடுத்தவர் சங்கர்,

அப்படத்தின் வெற்றிக்கு சிட்டி பாத்திரமே காரணம்

“மை நேம் இஸ் பில்லா..” என ரஜினி மாடிபடியில் இருந்து இறங்கும் காட்சி இன்றும் கண்களில் நிற்கின்றது, இடையில் அஜித் வந்து ஐம் பில்லா எனும் பொழுது “ச்ச்சீ போ..” என்றுதான் தோன்றியது

அப்படிபட்ட ஸ்டைலான, கெத்தான ரஜினிதான் தமிழகம் விரும்புவது

அந்த ரஜினியினை புரட்சியாளனாக, தத்துவம் பேசுபவனாக ஒருநாளும் தமிழகம் விரும்பியதில்லை, “நாட்டுகொரு நல்லவன்” எனும் தோல்விபடம் அதை அன்றே சொல்லிற்று

இப்பொழுது ரஜினிக்கு வயதாயிற்று சிகிச்சை அது இது என பறக்கின்றார், அவரின் உண்மையான ரசிகனுக்கு அது ஒரு அச்சத்தை கொடுக்கின்றது

அப்படிபட்ட ரஜினியினை பெரும் எதிர்ப்பார்ப்புடன் காண திரைக்கு சென்றால், மகா கொடுமையான கோலத்தில் ஆவணபட ரேஞ்சில் வைத்தால் யாருக்கு கோபம் வராது

படம் பார்க்க செல்பவர்கள் ரஜினிக்காக சென்றார்களே அன்றி, ரஞ்சித்தின் புரட்சி கதையினை கேட்கவா சென்றார்கள்?

அதை ஏன் நாங்கள் காசுகொடுத்து பார்க்க வேண்டும்

ரஜினி எனும் அற்புத நடிகனின் படத்தை கொன்றுவிட்டார்களே என்ற ஆதங்கத்தில் சொன்னோமே அன்றி, ரஞ்சித் மேல் எமக்கு என்ன கோபம்?

புரட்சி, புண்ணாக்கு , தலித்தியம் பேச ஆயிரம் இடங்கள் உண்டு, இன்னும் ஏகபட்ட நடிகர்கள் கோடம்பாக்கத்தில் சுற்றுகின்றார்கள், அவர்களை வைத்து எத்தனை படமும் எடுக்கட்டும் எவன் பார்க்க போகின்றான்

உண்மையான திரை ரசிகனுக்கு ரஜினி எனும் வசீகரமிக்க நடிகரின் படத்தை நாசபடுத்தினால் கோபம் வரத்தான் செய்யும்

எமக்கு வந்தது, சொல்லிவிட்டோம்

வாயில் எதையோ வைத்து பொத்திகொண்டிருக்க நாம் என்ன தமிழக பாஜகவினரா? இல்லை இந்து முண்ணணியா இல்லை சிவசேனாவா

இல்லை ஆளாளுக்கு தாராவி என் கோட்டை என சொல்வதை கேட்டுகொண்டிருக்க மும்பை தாராவிக்காரனா?

ரஜினி எனும் மாயக்காரனின் படத்தை பார்க்கசென்று ஏமாந்த ஒரு சராசரி ரசிகன் அவ்வளவுதான்., அதில் கோபம் வரவில்லை என்றால்தான் ஆச்சரியம்

போங்கடா டேய்

ரஜினிக்கு அரசியல் தேவையே இல்லை என்பதை ஆரம்பத்திலே சொல்லிக்கொண்டிருக்கின்றோம், சுயநலவாதிகள் அவர் அரசியலுக்கு வந்தால் 4 காசு தேற்றலாம் என்பவர்கள் அவரை தூண்டிவிடலாம்

ஆனால் நல்ல ரசிகன் அவருக்கு அரசியல் வேண்டாம் என்பான், அவரை நல்ல நடிகனாக திரையில் எதிர்ப்பார்ப்பான், அதுவும் அந்த இமேஜுக்குரிய ரஜினியினை எதிர்ப்பார்ப்பான், நாங்கள் அப்படித்தான் பார்த்துகொண்டிருக்கின்றோம்

அந்த அற்புத நடிகன் ரஜினியினை விட்டுகொடுக்கவே முடியாது

வைரக்கல்லை கீரிடத்தில் வைக்க வேண்டுமே தவிர காகத்தையும் நாயினையும் விரட்ட எறிய கூடாது

ரஜினி சிலை வடிக்க வேண்டிய அற்புத கல், அதில் அழகிய சிலை வடிக்கலாம், அற்புத கட்டங்களை செய்யலாம், தாஜ்மகால் போல மின்ன வைக்கலாம்

அதில் ஒருவன் அம்மி செய்வேன் என வந்தால் விடமுடியுமா? ரஞ்சித் என்பவர் அதனைத்தான் செய்தான் , அதை எந்த நல்ல ரசிகன் திட்டாமல் இருக்க முடியும்???

உண்மையான ரஜினி அனுதாபிக்கு கோபம் வரும், எனக்கு வந்தது அவ்வளவுதான்.

 

இன்று காலாவிற்காக ரஞ்சித்தை நாம் சாடியதும் நம்மை கரித்துகொட்டி நீ சாதிவெறியன், நீ வஞ்சகம் பிடித்தவன் என சாபமிட்டுகொண்டிருப்பவன் யாரென்றால்

பூரா பயலும் முன்பு முத்துராமலிங்க தேவரின் சில நடவடிக்கை பற்றி சர்ச்சையாக சொன்னபொழுது ஓடிவந்த பயதான், அண்ணே நீங்க தைரியசாலி, நியாஸ்தன்னு ன்னு கண்ணீர் விட்டபயலுகதான்

அம்பேத்கரை பற்றி எழுதியபொழுது ஓடிவந்து சூப்பர்னு சொன்னபயலுகதான்

இன்று ரஞ்சித் என சொன்னவுடன் உனக்கு சாதிவெறி என சொல்லிகொண்டே திட்டிகொண்டே இருக்கின்றான்

சாதி வெறி பிடிச்சது நானா? இல்ல, இந்த பயலுகளா?


%d bloggers like this: