தினகரனின் மகனான பால் தினகரனே

No automatic alt text available.

“தினகரனின் மகனான பால் தினகரனே, நீ மோடியினை ஆதரித்தால் நான் என் அடியவனான தினகரனுக்கு வாக்கு கொடுத்தது போல இந்த பல்கலைகழகத்தை பல நூறுமடங்கு ஆசீர்வதிப்பேன்.

நீயும் உன் வீட்டாரும் அதில் அகமகிழ்ந்து இருப்பீர்கள், பூமியின் ஜனங்களில் நீ ஆசீயோடிருப்பாய்

சுரண்டை எனும் ஊரில் ஒன்றுமில்லாமல் இருந்த உன் தந்தையினை நாமே அழைத்து அவனை பலநூறு கோடி சொத்துக்கு அதிபராக்கினோம், அவன்பொருட்டு உன்னையும் ஆசீர்வதிப்போம்

அரசன் மோடி உனக்கு நலம் அருளும்படி நாமே அவன் மனதை கனியவைப்போம், அவன் பார்வையில் நீ இரக்கம் மிகுந்தவனாய் இருப்பாய்”


மிஸ்டர் எரிச்சல் கவிஞர் மனுஷ்

Image may contain: 1 person, smiling, textImage may contain: textமிஸ்டர் எரிச்சல் கவிஞர் மனுஷ்,

சாரு காலா படம் பார்த்த கடுப்பில், அந்த படத்திற்கு உமது மொக்கை போஸ்டே பரவாயில்லை என உம்மை அன்பிளாக் செய்திருக்கின்றார்

அது புரியாமல் நீர் ஏதோ மகிழ்ந்துகொண்டிருக்கின்றீர், இப்படி ஒரு அப்பாவி ஜென்மமா நீர்?

காலா இம்சைக்கு உமது இம்சை பரவாயில்லை என மனிதர் குறீயீட்டால் சொல்ல்கின்றார் அய்யா

புரிந்ததா? மானம் இருந்தால் முகநூல் விட்டு ஓடியே போய்விடும்..

 
 

நெல்லைக்கு அள்ளி கொட்டுகின்றார்கள்

நெல்லை மாவட்டத்திற்கான அறிவிப்புகள் இப்பொழுதெல்லாம் ஏராளம் வருகின்றன‌

அணுவுலை, ராக்கெட் நிலையம், கடறபடை தளம் எல்லாம் மத்திய அரசு கொடுத்தது பல வகை

இப்பொழுது மாநில அரசு கொடுப்பது வேறுவகை

பல ஆலயங்களை சுற்றுலா தளமாக்கிவிட்டார்களாம், அதில் கள்ளிகுளம் பனிமயமாதா ஆலயமும் ஒன்றாம் அதற்கு பல கோடி ஒதுக்கீடாம்

(ஆலயங்கள் என்றால் மக்கள் தானாய் தேடிவருவார்கள், இதற்கு எதற்கு விளம்பரம் என எல்லாம் நாம் கேட்க கூடாது)

உவரி பக்கம் மீணவருக்கான துறைமுகம் அமைக்கபட சில நூறு கோடி ஒதுக்கீடாம்

இப்பொழுது சமூகரங்கபுரத்தில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் புதிய துணை மின்நிலையம் அமைக்க போகின்றார்களாம்

இப்படி நெல்லைக்கு அள்ளி கொட்டுகின்றார்கள்

சரி இவ்வளவு செய்கின்றார்களே? நல்ல நீர் ஆதாரம் உண்டா? மழை பொய்த்த காலங்களில் குடிநீருக்கு விவசாயத்திற்கு என்ன வழி என்றெல்லாம் நாம் கேட்க கூடாது

ராதாபுரம் பகுதிக்கு தேவை மிக பெரிய நீர் ஆதாரம் அதனை மேற்கு நோக்கி பாயும் ஓடைகளில் சிலவற்றை திருப்பி கிழக்கே அனுப்பாமல் தீர்வே இல்லை

அதை செய்வார்களா என்றால் அது பற்றி எல்லாம் நாம் பேசகூடாது….

 
 

தாஜ்மஹாலின் பெயரை ‘ராம் மஹால்’ என மாற்ற வேண்டும் : உபி பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங்

Image may contain: 1 person, close-up

உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலின் பெயரை ‘ராம் மஹால்’ என மாற்ற வேண்டும் : உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங்

பாஜகவின் உபி பிரிவினை “மெண்டல் கட்சி” என மாற்றிவிடலாம் போலிருக்கின்றது, பூரா பயலும் அப்படித்தான் அங்கு இருக்கின்றான்

இப்படி சொல்லியிருப்பது படத்தில் இருப்பவர்தான், உற்று பார்த்தால் பொன்னாரின் உருவ ஒற்றுமை தோன்றுகின்றது, நியாண்டர்தால் மனித பிரிவு போல இவர்கள் எல்லாம் தனி ஒரு பிரிவு போலிருக்கின்றது

குலகல்வின்னா என்னடா?

Image may contain: 2 people, drink

அண்ணே திமுக இல்லண்ணா ராஜாஜி குலகல்வின்னு கொண்டுவந்து நம்ம எல்லாரையும் அழிச்சிருப்பார்னே

குலகல்வின்னா என்னடா?

கொஞ்சநேரம் படிக்கிறது, அப்புறம் அப்பன் தொழிலை மகன் கத்துகிறது.இது சமூக அநீதின்னே

எப்படி??

அண்ணே உங்களுக்கு அறிவே இல்ல, அது தொடர்ந்திருந்தா இந்நேரம் விவசாயி புள்ள விவசாயியா இருக்கும், சலவை தொழிலாளி புள்ள துணிவெளுக்கும், திமுகதான் இதனை மாற்றிற்று

ஒஹோ, குலகல்வின்னா இதுதானா?,

ஆமாண்ணே அது கொடுமையான விஷயம்

அதாவது அப்படி இருந்தா அப்பன் வேலையே மகன் செய்வான் அது சமூக ஆபத்து அப்படித்தானே?

பின்ன, அடுத்தவங்களுக்கு எப்படின்னே வாய்ப்பு கிடைக்கும், ராஜாஜி விஷம்ணே

சரி கலைஞருக்கு பின் அவர் மகன் திமுக தலைவரா வந்துட்டார், அடுத்தால பேரன் வந்துருவார்னு சொல்றாங்க, இதெல்லாம் எப்படி? குலவாரிசு கட்சிக்கு மட்டும் சரியா?

அண்ணே நீங்க பிராமண பயலுககிட்ட ஏமாந்துட்டீங்க, உங்கள நல்லா ஏமாத்திட்டானுக, பார்ப்பான் சகவாசம் வேண்டாம்னு சொல்றது இதுக்குத்தான்

சொல்லிட்டு போடா, பெரியாருக்கு பின்னால அவர் சொத்துக்கு வீரமணி வந்ததெல்லாம் என்ன வகைடா?

நீங்க சமூக நீதிக்கு ஆபத்தான ஆளுண்ணே, உங்ககிட்ட எல்லாம் பேசவே கூடாது”

நிர்மலா சீதாராமன் : ஒரு தமிழச்சி பெரும் உயரம் தொட்டிருகின்றார்

Image may contain: 2 people

பெண் உரிமை என்பார்கள், பெண் முன்னேற்றம் விடுதலை என சொல்லிகொண்டே இருப்பார்கள்

பெரியார் அதை சொன்னார், அம்பேத்கார் இதை சொன்னார் பெண் முன்னேற்றம் என்றால் இக்காலம்தான், எல்லா துறையிலும் பெண்கள் பாரீர் என கடும் பெண் உரிமை குரல்கள் கேட்கும் காலமிது

தமிழகத்தில் ஒரு பெண் இந்திய வரலாற்றில் முதன் முறையாக பாதுகாப்பு துறை அமைச்சராகி இருக்கின்றார். அவர் உலகம் முழுக்க பெரும் பயணங்களை மேற்கொள்கின்றார்

சில மாதங்களுக்கு முன்பு ராணுவ உடை அணிந்து சுகோய் ரக விமானத்தில் அவர் பயணித்த விதம் வாழ்த்துகுரியது, ராணுவ வீரரில் ஒருவராக பறந்தார்

எஸ் 4000 ஏவுகனை தடுப்பு சாதனம் பற்றி அவர் விவாதித்த வகையில் ரஷ்யர்களின் பெரும் பாராட்டை பெற்றிருக்கின்றார்

இந்திய ராணுவம் குறித்தும், அதன் மேம்பாடு குறித்தும் அவர் செய்யும் பணியும், ஆற்றிவரும் பங்கும் மகத்தானவை

சீனாவிற்கு ஈடாக இந்திய ராணுவம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என அவர் சமீபத்தில் சொன்னபொழுது உலகம் முழுக்க ஒரு அதிர்வலை ஏற்பட்டது.

அரசியல் சர்ச்சைகளை கடந்து அப்பணி வாழ்த்துகுரியது, ஆனால் யாராவது மூச்விடுவார்கள் என்றால் இல்லை, கடும் நிசப்தம்

முன்னேறினால் திராவிடபெண், மாற்றுகட்சி பெண்தான் முன்னேற வேண்டும், பிராமண தமிழச்சி என்றால் அது அவர்களுக்கு சரியே இல்லை…

ஏன் என்றால் இங்கு உருவாக்கபட்ட பிம்பம் அப்படி

பெண்கள் எல்லா சாதியிலும் மதத்திலும் அடக்கித்தான் வைக்கபட்டிருந்தார்கள், பிராமண சமூகத்தில் மட்டும் பெண்ணுரிமை கொட்டி கொடுக்கபடவில்லை,

உண்மையில் அங்குதான் கட்டுபாடுகள் அதிகம்

ஒரு மாற்று கட்சி பெண் பெரும் பதவி பெற்றால் தமிழகத்தில் பெரியார் சாதனை, திமுக சாதனை , திராவிட மண் என குதிப்பதும்…..

மகத்தான காரியங்களை ஆற்றினால் ஆமை போல தலையினை ஓட்டுக்குள் இழுத்துகொண்டு அவரை வேறுவகையில் பழிப்பதும் இங்குள்ள “பெண் விடுதலை”.

ஒரு தமிழக பெண் பாரதத்தின் பாதுகாப்புதுறை அமைச்சராக மிக சிறந்த முறையில் கடமையாற்றுகின்றார், உலக நாடுகளின் கவனத்தை பெற்றிருக்கின்றார்

ஒரு இந்தியனாக அதை வாழ்த்தவேண்டும், வாழ்த்துவோம்

இது பெரியார் மண் என்பது உண்மை என்றால் அப்பெண்மணியினை கண்டிப்பாக வாழ்த்தியே தீரவேண்டும்

(ஒரு தமிழச்சி பெரும் உயரம் தொட்டிருகின்றார், இங்குள்ள மகளிர் கல்லூரியோ இல்லை மகளிர் அமைப்புகளோ பெண் உரிமை போராளிகளோ காவலர்களோ அவரை ஒரு கூட்டத்திற்கு அழைப்பார்கள் என கருதுகின்றீர்கள்??

நிச்சயம் இல்லை, ஏன் என்றால் இதுதான் அரசியல்.)

 

கமலஹாசனின் விஸ்வரூபம் டெரெய்லர் வந்தாயிற்று

கமலஹாசனின் விஸ்வரூபம் டெரெய்லர் வந்தாயிற்று

அவருக்கு அக்காலம் முதலே இது ஒரு சிக்கல், ஏதாவது ஒரு கும்பல் கமலஹாசன் சிக்கமாட்டானா என அலைந்துகொண்டே இருக்கும்

அவர் படத்தை நடன கலைஞர்கள் ஒரு காலத்தில் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்த்து குற்றம் கண்டுபிடித்தார்கள்

பின் கலாச்சார காவலர்கள் அலசி ஆராய்ந்தார்கள்

அதன் பின்பு டாக்டர் கிருஷ்ண்சாமி அந்த பொறுப்பினை குத்தகைக்கு எடுத்திருந்தார்

இப்பொழுது இஸ்லாமிய அமைப்புகள் எடுத்திருக்கின்றன‌

அநேகமாக டிரெய்லரை இப்பொழுது அக்கு வேறு ஆணிவேராக பிரித்து எந்த இடத்தை சர்ச்சை ஆக்கலாம் என இப்பொழுதே புள்ளி வைத்திருப்பார்கள்

(ஆனால் சும்மா சொல்ல கூடாது, அந்த ஆப்கன் சண்டை சூழலை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கின்றார். சில கசமுசா காட்சிகளும் சூப்பர்

இவருக்கு எதற்கு மய்யம் மண்ணாங்கட்டி? இப்படி பல படங்கள் எடுத்தால்தான் என்ன?)

 

Image may contain: 1 person, standing, sunglasses and text

இந்த விஸ்வரூபம் 2 டிரெய்லரை பார்க்கும் பொழுதுதான் ஒரு விஷயம் புரிந்தது

நல்ல வேளையாக தங்க தலைவிக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுக்கபடவில்லை.

அதுவரைக்கும் கோட்டான கோடி நன்றி ஆண்டவரே.

%d bloggers like this: